எழுத்தாளர் ரங்கராஜன்(ஏ)சுஜாதா, திருமதி சுஜாதா.


கடந்தவாரத்துக்கு முந்தைய ஞாயிறு
தினகரன் இணைப்பு நாளிதழில் திருமதி சுஜாதா அவர்கள் ஒரு பேட்டி கொடுத்து இருந்தார்... அது கீழே...


பொதுவா கலை உலகைச் சேர்ந்தவர்கள் வேற உலகத்துல வாழ்வாங்கன்னு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடாப் பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப, எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது. தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர் யாரையும் அனுமதித்ததில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார். மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது. பசங்களாப் படிச்சாங்க…. அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்கஅவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்கமத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை.

இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா….தூங்கினேனாஎனக்கு என்ன வேணும்எதையும் அவர் கேட்டதில்லசெஞ்சதில்ல. அவர் எழுதினதை நான் படிச்சா அவருக்குப் பிடிக்காது.

குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம், அவர் வளர்ந்த விதம்.

அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்துல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அஹ்ரகாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அஹ்ரகாரப் பையனாத்தான் இருந்தார்.

ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் ப்ரைவேட்டா நியமிச்சு படிக்க வச்சார்.

என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான். இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.

இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்ததும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன்.

பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறியிருக்கேன். ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ் பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்

அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்! உறவுங்கிற சக்கரம் சுழல அன்புதானே அவசியம். அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும் போக முடியாது. துணையா நான் இருந்தேன்.

எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான். சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள் தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை. பெரியவன் பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.. என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க..

இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பதான் எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன், விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது.

இந்த பேட்டியை படித்த உடன் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு வக்காலத்து  வாங்க இந்த பதிவை நான் எழுதப்போவதில்லை... இந்த பேட்டியை கொடுத்த திருமதி சுஜாதா அவர்களின் மீதும் எனக்கு கிஞ்சித்தும் வருத்தம் இல்லை... அவர் கணவனேடு வாழ்ந்த கணங்களை அசைபோட்டு இருக்கின்றார் அவ்வளவே. அது அவர் உரிமையும் கூட.
ஆனால் எழுத்தாளர்  சுஜாதா அவர்கள் தமிழ் எழுத்துலகில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியவர் என்பதை மறுப்பதற்கு இல்லை ...சிலர் அவர் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை என்றும் கூறுவார்கள்..... அவர்களின் தனிப்பட்ட கருத்து குறித்து எனக்கு கவலை இல்லை...


ஆனால் இன்றும் நான் எழுதும் ஒரு  வாக்கியமாக இருந்தாலும் சுஜாதா,பாலகுமாரன்,ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,தமிழ்வாணன் என  இவர்களின் இன்ஸ்பிரேஷன் இல்லாமல் என்னால் எழுத முடியாது என்பதுதான்  உண்மை... அதே போல இங்கே யாரும் புனிதர் இல்லை... எழுத்தாளரை புனிதராக, இந்த உலகில் அவரே சிறந்த மனிதர் என்றும் இந்த உலகை காக்க வந்த ரட்சகன் என்று யாராவது கருதுவரேயின் அவர்களுக்கு அந்த பேட்டி படித்த அந்த  கணத்தில்  சுஜாதா  மீது வெறுப்பு தோன்றும்... நான் அப்படி எல்லாம் அவரை புனிதபிம்பமாக நினைக்கவில்லை 
ஒருவர் இறந்து போன பின் ஏசினால் என்ன? பழித்தால் என்ன?

என் தாத்தா முனுசாமி பண்ரூட்டி எல்எக் புரத்தில் ஒரு கிரவுண்ட்  இடம் வைத்து இருந்தார்....அவர் உயிரோடு இருக்கும் போது அவரிடம் பெரியவர்கள் சொன்னார்கள்.. முனுசாமி இரண்டு பிள்ளைகள் உனக்கு இருக்காங்க... பங்காளிங்களும் இருக்காங்க... நீ உயிரோடு இருக்கும் போதே அந்த இடத்தை உன் பிள்ளைங்க பேருல எழுதிட வேண்டியதுதானே...

நான் செத்த பிறகு எந்த சுன்னியாவது அடிச்சிக்கிட்டு மங்கம் மாஞ்சி போறான்... சுடுகாட்டுக்கு போனபிறகு இதெல்லாம் நான் பார்த்தக்கிட்டா இருக்க  போறேன்...???  எந்த சுன்னி என்ன பத்தி பேசினா எனக்கு என்ன??என்று சொன்ன மகாத்மா அவர்... அதனால் இறந்து போன சுஜாதாவுக்கு   இந்த பட்டி பெரிய வலியை உருவாக்கிவிடப்போவதில்லை... அதே போல உயிரோடு இருந்து இந்த பேட்டி வந்து இருக்குமேயானால் அவர் வருத்தப்பட்டு இருக்கக்கூடும்.

சரி இனி பொதுவாக பேசுவோம்...

160 வருடங்களுக்கு முன் கணவன் இறந்தஉடன் மனைவியை உடன்கட்டை ஏறவைத்து அழகு பார்த்த சமுகம்தான் நம்முடையது... என் தாத்தா என்  பாட்டியை போட்டு பெண்டு நிமிர்தி இருக்கின்றார்.

 என் அப்பா  என் படித்த அம்மாவின் பேச்சை ஒரு நயா பைசா அளவுக்கு கூட கேட்டது இல்லை. அம்மா இட்லிக்கு மல்லாட்டை சட்னி அரைத்து வைத்து இருந்தால்.... பிள்ளைகளுக்கோ கட்டிய மனைவிக்கோ இருக்கா? இல்லையா என்பதை கூட யோசிக்காமல் தின்று தீர்த்து விட்டு செல்லும் ரகம்...


என் அப்பா மட்டும் அல்ல... போன தலைமுறையில் இருந்த நிறைய அப்பாக்கள் அதாவது 95 சதவிகித அப்பாக்கள் இப்படித்தான் வாழ்ந்து இருக்கின்றார்கள்.., சுஜாதா உட்பட...
என்ன? சுஜாதா பிரபலமானவர் என்பதால் அவரின் கடந்த காலம் குறித்த  விஷயங்கள் இம்மி அளவுக்கு வெளி வந்து இருக்கின்றன...

இன்றும் குடித்து  விட்டு மாவா வாயோடும், பான்பராக், குட்கா வாயோடும் மனைவியின் ரசனை தெரியாமல் புணர காலை தூக்கி போடுபவர்கள் ஏராளம்...

ஆனாலும் என் அம்மா அவருக்கு கிடைத்த வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்... சின்ன சின்ன மனஸ்தாபங்கள் இருந்தாலும் அப்படித்தான்...

என் அப்பாவுக்கு 30 வருடம் ஜவுளிகடை குமாஸ்த்தா உத்யோகம்.. எழு மணிக்கு கடை திறந்து பத்து மணிக்கு கடை மூடி விட்டு வீட்டில் வந்து படிக்கும் ரகம்.. ஐந்த பிள்ளைகள்... யார் என்ன படிக்கின்றார்கள்..? எப்படி படிக்கின்றார்கள்.. என்ன வகுப்பில் படிக்கின்றார்கள். என்று  அவருக்கு தெரியவே தெரியாது.

 அம்மாவிடம் இது பற்றி கேட்ட போது..
உங்க அப்பா கோபக்காரர்... என் பேச்சை கேட்கமாட்டார்...ஆனால் உழைக்காமல் சோம்பி திரிந்தது இல்லை,  வெற்றிலை புகையிலை பழக்கம் , குடி அறவே இல்லை... ஏன் காபி கூடகுடிக்கமாட்டார்...ஒரு நாளும் உன் அப்பா வீட்டுக்கு போய் பணம் வாங்கி வா, அது  வாங்கி வா, இது வாங்கி வா என்று மிரட்டியதில்லை... தினமும் குடித்து விட்டு இழுத்து போட்டு அடித்தது இல்லை...

ஆனால்  என் வருத்தங்களை நீ அறிவாய்.. அது உன்னை நம்பி வரும் பெண்ணுக்கு நேராமல் பார்த்துக்கொள் என்றார்...

ஆனால் கலைஞன் என்பன் வேறு உலகத்தில் வாழ்பவன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்... எந்த நேரத்திலும் எரிந்த விழலாம்.. ஏன் கை கூட நீட்டி இருக்கலாம்.நிறைய கலைஞர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்தது கிடையாது...  எல்லா வண்டியிலும் ஏறி ஒருவனால் வெற்றிகரமாக பயணிக்க முடியாது...அணுவில் இருந்து கம்யூட்டர் அறிவியல் வரை.... தமிழ் அகநானுறு  புறநானுவரை கலந்து கட்டி வெற்றிக்கொடி  நாட்டியவர் சுஜாதா  இதற்கு அவர் எவ்வளவு வாசித்து இருக்க வேண்டும்..?  நிறைய புதினங்கள், குறுநாவல்கள், கட்டுரை என்று எழுத அவர் எத்தனை மணி நேரங்கள் செலவிட்டு இருக்க வேண்டும்...?? ஆனாலும் அவர் கட்டி  பெட்டிதனமாக  வாழ்ந்தார் என்பதையும் அவர் வாழ்ந்த சூழல் அப்படி என்பதையும் அவர் மனைவி குறிப்பிட்டு  இருக்கின்றார்.


 ஆனால் எத்தனை   வெற்றிக்கொடி நாட்டினாலும் வீட்டில் உள்ள பெண்மணியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற வில்லை என்பதுதான் அவர் மீதான குற்றசாட்டு..  ஆனால் அது  கலைஞனுக்கு சாத்தியமேயில்லை....  ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற முடியும்...

அதே போல    அக்மார்க் சுத்தமாக ஒருவன்   என்னதான் உண்மையாகவும் உளப்பூர்வமாக நடந்து கொண்டாலும் பெண்கள் ஒரு போதும் மன நிறைவை அடையவே மாட்டார்கள்.... அவர்களின் தேவை, கற்பனை மிகப்பெரியது... இது எனது சொந்த அனுபவம்.. இதில் தாய், தங்கை, மகள், மனைவி யாரும் விதிவிலக்கில்லை... ஆறும்  அது ஆழம் இல்லை... அது சேரும் கடலும் ஆழம் இல்லை.... ஆழம் எது ஐயா...??? அந்த பொம்பளை மனசுதான்யா என்று பாடிய பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

அதே போல ஏன் இவ்வளவு வளர்ந்த பிறகும்  படித்தவர்கள் கூட மனைவிக்கு சரிக்கு சமமான உரிமையை வழங்கவதில்லை...??? அப்படி ஒரு நண்பர்  வழங்கினார்.... மனைவி டைவேர்ஸ் செய்தார்... வீட்டுக்கு வந்து போன நண்பருடன் பைக்கில் ஏறி டாட்டா காட்டினார்...  அது அவள் விருப்பம்.. ஆனால் சமுகம் டைவெர்சியை மதிப்பதில்லை... அவன்  பொட்டை   என்று காது பட பேசுவார்கள்... திரும்ப அவனுக்கு பெண் கிடைப்பது கஷ்டம் என்பதால் மனைவியை கட்டிப்பெட்டிதனமாகவே நடத்துக்கின்றார்கள்.... 

காரணம் பயம்.... சமுகத்தில் தன் பெயருக்கு கலங்கம் வந்து விடுமே என்ற பயம்.. பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டடாலும்...  

பெண் உரிமை கொண்டாடும்  மேற்கத்திய நாடுகளில் விவாகரத்து சகஜம்... பிடிக்கவில்லை என்றால் யார் யாரை வேண்டுமானாலும திருமணம் செய்து கொள்ளலாம்... ஆனால் இங்கே அது சத்தியம் இல்லை என்பதால் ஆண்கள் பெண்களுக்கு அளவற்ற சுதந்திரம் கொடுக்க யோசிக்கின்றார்கள்... அதுக்காக சுதந்திரம் கொடுத்த பெண்கள் எல்லோரும் தவறு செய்து விட்டதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது... நான் இங்கு  நிலவும்  பொது புத்தியை  சொல்லுகின்றேன்.

 சாப்பிட்டியா ? தூங்கினியா-? என்று மனைவியை பார்த்துக்கொண்டு மனைவியின் தேவையை நிறைவேற்றி.... புள்ளைங்களை பார்த்துக்கிட்டு குடும்பமே  கதி என்று வாழ்ந்த நிறைய தகப்பன்களை பெண்கள் எப்படி அழைத்தார்கள்  தெரியுமா?

அது அம்மாஞ்சி.... ஒரு  சூட்டிகையே இல்லை....வீடே கதின்னு கிடைக்குது... குமார் அப்பா பாரு... வெளியில சுத்தி சுத்தி ,ரியல் ஏஸ்டேட் பிசினஸ் கத்துக்கிட்டு, என்ன திறமையா சென்னையில் நட்ட நநடு சென்டர்ல 5 கிரவுண்டு  நிலம், ஸ்கார்ப்பியோ காரு பங்களான்னு.... ஆம்பளையா லட்சனமா வெளித்தெருவுக்கு போனாதானே?  என்று சொல்லி இருக்கின்றது....




100 ரூபாய் விலையுள்ள பொருளை 50க்கு கேட்டு .... ஓகே என்று கடைகாரர் சொன்ன பிறகும்.. இன்னும் 25 ரூபாய்க்கு கேட்டு இருக்கலாமோ? என்று நினைக்கும் மனது பெண்கள் மனது...  அவர்கள்  அப்படி இருக்க தலைமுறை தலைமுறையாக  அடக்கி ஆளப்பட்ட வாழ்க்கை  சூழல் இதற்கு முக்கியகாரணமாக இருந்து இருக்கலாம்..

எத்தனை சம்பளம் வாங்கி வந்தாலும் அடுத்தவரோடு வாழ்க்கையை கம்பேர் செய்து குடும்பத்தலைவனை நிம்மதி இல்லாமல் செய்யும் பெண்கள் ஏராளம்...

எவ்வளவுதான் அன்னியோன்யமான  தம்பதியாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இல்லாத தம்பதிகள் இருக்க வாய்ப்பே இல்லை. விட்டுக்கொடுத்தலும் பரஸ்பரம்புரிதலுமே வாழ்க்கை... சுஜாதா உயிரோடு இருந்த  போது விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர் .. தற்போது  அவரது மனைவி அவருக்கான வாழ்க்கையை மிக சுதந்திரமாக வாழும் போது நான் என்னவெல்லாம் விட்டுக்கொடுத்து இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்....

காரணம் சுஜாதா உயரோடு இருந்த போதும் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்து இருப்பார்... ஆனால் இப்போது சதந்திரமாக முடிவுகளை அவரே எடுக்கின்றார்...... சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லாத போது... முக்கியமாக முடிவுகளை தானே எடுக்கும் சுதந்திரம் கிடைக்கும் போது.... ச்சே என்ன வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றோம்... நாம் எவ்வளவு விட்டுக்கொடுத்து இருக்கின்றோம் என்று நினைத்து, பேட்டியாளர் வந்ததும் கொட்டி தீர்த்து விட்டார்..


இந்தகட்டுரையை நான் எழுத மிக முக்கிய காரணம் எனது பால்ய நண்பன் சங்கர் இரண்டு நாட்களுக்கு  முன் போன் செய்தான்.... தினகரன் வசந்தம் புக்குல சுஜாதா மனைவியோடு பேட்டி கட்டுரை படிச்சியா? ச்சே என்ன கொடுமைடா இது என்றான்... அந்த ஆளையெல்லாம் பெரிய ஆள்ன்னு நினைச்சேன்  பாரு என்னை சொல்லனும்.... எனக்கு சட்டென  தோன்றியது.. உன் மனைவியிடம் உன்னை பற்றி கேட்டால் ஒரு நாவல் அளவுக்கு  பிராது சொல்லுவளே என்று  நினைத்துக்கொண்டேன்... என் மனைவியிடம் கேட்டால் 5 தொகுதி சர்வ நிச்சயம்.


உலகில் உள்ள அன்னியோன்யமாக வாழ்க்கை வாழ்ந்த தம்பதியிரிடமும் கணவன்,மனைவியிடம் பேட்டி எடுத்து பாருங்கள்... எல்லோரும் கதை கதையாக சொல்லுவார்கள்...5 பர்சென்ட் பேர்  யோக்கியமாக ஒழுக்க சீலர்களாக இருக்கின்றார்கள் என்று இருப்பார்களாயின்... அவர்கள் மனைவிகள் பொழச்சி போ... எதுக்கு  என் வாயலை  உன்னை காலி பண்ணணும் என்ற பெருந்தன்மையாக  இருக்கலாம்... அதே போல கணவன் நினைத்து இருக்கலாம்.


இரண்டு தனித்தன்மை உள்ள உயிர்கள் விட்டுக்கொடுத்து வாழ்ந்துதான்  ஆக வேண்டும்...அதுதானே வாழ்க்கை. குடும்பம் கலை இரண்டிலும் இரட்டை சவாரி செய்து வெற்றிகரமாக   வாழ்ந்த கலைஞன் யாருமே உலகத்தில் இல்லை...  இதில் சுஜாதாவும் விதிவிலக்கல்ல.....


 சுஜாதா மனைவியிடம் மட்டும் அல்ல இறந்து போன அத்தனை பிரபலங்களின் மனைவியிடமும். கணவனிடமும் கேட்டுப்பாருங்கள்....வசந்தம் இதழ் 50 வாரத்துக்கு 5 பக்கத்துக்கு மிகாமல்  தன் கணவன் பற்றி  அல்லது மனைவி பற்றி கதை கதையாக சொல்லி சுவாரஸ்யப்படுத்துவார்கள் அல்லது படுத்தாமலும் போகலாம்... இருப்பினும்  வாய்ப்பு கிடைத்ததும் மிக நேர்மையாக தன் உள்ளகிடங்கை  பாசாங்கு இல்லாமல் வெளிப்படுத்திய திருமதி ரங்கராஜன் சுஜாதா அவர்களுக்கு நன்றி.

 எழுத்தளார் சுஜாதா அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றி எனக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை...காரணம் மகாத்மா என்று போற்றும் காந்தியில் இருந்து பாரதி வரை அவர்கள் மனைவிகளிடம் கேட்டால் விமர்சனங்கள்  அதிகமாகவே இருக்கும்....சுஜாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல

ஆனால்  இந்த  பிளாக் தொடங்கிய போது 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய என் முதல் பதிவை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்க இருக்கின்றேன்.

==========


கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றூ கொடுத்த துரோணர்,
கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எத்ற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் 

ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர் 



============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

27 comments:

  1. //வாய்ப்பு கிடைத்ததும் மிக நேர்மையாக தன் உள்ளகிடங்கை பாசாங்கு இல்லாமல் வெளிப்படுத்திய திருமதி ரங்கராஜன் சுஜாதா அவர்களுக்கு நன்றி.//

    அருமை ஜாக்கி.

    ReplyDelete
  2. ஊரெல்லாம் மகாத்மா என போற்றினாலும் அவர் மகனுக்கு அவர் சாதரணமான ஆத்மாதான்

    ReplyDelete
  3. Fantastic.. this is what is need of the hour.
    I am sure, this reflects (including mine) the mind of most of the people who read about this controversy.
    _surya

    ReplyDelete
  4. jackie anna,


    i had experienced so many horrible things of what you have explained in this post.women do not understand true love.never they will.

    ReplyDelete
  5. nice post Jackie! "அக்மார்க் சுத்தமாக ஒருவன் என்னதான் உண்மையாகவும் உளப்பூர்வமாக நடந்து கொண்டாலும் பெண்கள் ஒரு போதும் மன நிறைவை அடையவே மாட்டார்கள்" hahahaha! :) I may not agree with all your thoughts, but I do see a very clear thought process in this post. Supera ezhuthi irukeenga ! :)

    ReplyDelete
  6. " No husband is perfect for their wife "; இதற்க்கு நானும் விதி விலக்கு அல்ல "என்று சுஜாதாவே ஒரு முறை சொல்லி இருக்கிறார். தான் திருமதி சுஜாதாவுக்கு ஒரு முழுமையான கணவன் கிடையாது என்பது அவருக்கு தெரிந்தே இருந்தது . பல்வேறு கட்டுரைகளிலும் ,பேட்டிகளிலும் இலை மறை காய் போல ,தான் ஒரு கணவனாக குடும்பத்தை கவனிக்கவில்லை என்று பல முறை கூறி உள்ளார். இதை மாற்ற முடியாது என்பது தெரிந்து இருந்ததால் தான் அதை பற்றி அவர் அதிகம் கவலை கொள்ள வில்லை. இது எப்படி திருமதி சுஜாதாவுக்கு தெரியாமல் போனதோ ...? அவரை போல அனைத்து விசயங்களையும் தொடக்கூடிய ஒரு அப்படக்கர் இன்னும் வரவில்லை என்பது எனது சொந்த கருது.

    ReplyDelete
  7. Excellent article Jackie. One of your best. You could be Mahatma, Nehru, or MGR or Clinton. Ask their wife the other side of every human being is painful to read. You should like/worrship Sujatha's writing and/or Mahatma's preachings and you should never introspect their personal life

    ReplyDelete
  8. வரவேக்க தக்க பதிவு ஜாக்கி சார்,

    ReplyDelete
  9. வரவேக்க தக்க பதிவு ஜாக்கி சார்,

    ReplyDelete
  10. //பிள்ளைகளுக்கோ கட்டிய மனைவிக்கோ இருக்கா? இல்லையா என்பதை கூட யோசிக்காமல் தின்று தீர்த்து விட்டு செல்லும் ரகம்...
    என் அப்பா மட்டும் அல்ல... போன தலைமுறையில் இருந்த நிறைய அப்பாக்கள் அதாவது 95 சதவிகித அப்பாக்கள் இப்படித்தான்
    வாழ்ந்து இருக்கின்றார்கள்// 100% true

    ReplyDelete
  11. மிகவும் சரியான பதிவு



    ReplyDelete
  12. ஜாக்கி நீங்கள் சொல்ல வருவது ஆண்கள் நாங்க இப்படித் தான் இருப்போம் பெண்கள் தான் அனுசரித்துப் போக வேண்டும் என்பது போல் தான் உள்ளது. ஒரு பெரிய எழுத்தாளரின் மனைவி பொதுவில் இவ்வளவு தூரம் வெளிப்படையாகக் கூறியதின் நோக்கமே இந்த நவீன யுகத்தில் வேறு யாரும் தங்கள் மனைவியை இதைப் போன்று கட்டுப்பட்டி தனமாக வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  13. ஜாக்கி நீங்கள் சொல்ல வருவது ஆண்கள் நாங்க இப்படித் தான் இருப்போம் பெண்கள் தான் அனுசரித்துப் போக வேண்டும் என்பது போல் தான் உள்ளது. ஒரு பெரிய எழுத்தாளரின் மனைவி பொதுவில் இவ்வளவு தூரம் வெளிப்படையாகக் கூறியதின் நோக்கமே இந்த நவீன யுகத்தில் வேறு யாரும் தங்கள் மனைவியை இதைப் போன்று கட்டுப்பட்டி தனமாக வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  14. எனது 30 வருட அரசு அலுவலர் வாழ்க்கையில், லஞ்சம் வாங்கும் நண்பர்கள் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் அனைவரையும் லஞ்சத்துக்குத் தூண்டுவது அவர்களது மனைகளே! தப்பித் தவறி வாங்காதவரின் மனைவி தனது கணவனை, ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்று சாடுவதும் எனக்குத் தெரியும்.

    ReplyDelete
  15. Sujatha was an excellent writer no doubt , at the same time he doomed his partner's life & pentafour group also.Some people might be aware of Pentafour group failure , the contribution was Writer Sujatha

    ReplyDelete
  16. // “நான் செத்த பிறகு எந்த சுன்னியாவது அடிச்சிக்கிட்டு மங்கம் மாஞ்சி போறான்... சுடுகாட்டுக்கு போனபிறகு இதெல்லாம் நான் பார்த்தக்கிட்டா இருக்க போறேன்”...??? எந்த சுன்னி என்ன பத்தி பேசினா எனக்கு என்ன??என்று சொன்ன மகாத்மா அவர்... //

    பொம்பளை புள்ளைங்க எல்லாம் படிக்குற மாதிரியா எழுதுறீங்க??

    கேட்டா என்னோட ப்ளாக் எப்படி வேண்டும் என்றாலும் எழுதுவேன் - என்று தற்பெருமை வேறு

    பெருமாளே.. நல்லவன் என்று சொல்லி கெட்ட வார்த்தை பேசும் இவர்க்கு நல்ல புத்திய கொடுபபா

    - இந்து மதி

    ReplyDelete
  17. மிக சரியாக சொன்னீங்க... There is no perfect person in this world... But we will take which is perfect.

    ReplyDelete
  18. இன்னொரு ரங்கராஜன் பிறக்கும்போது நாம் இருக்க போவதில்லை .எழுத்துக்கு ஒரு மிக பெரிய அடையாளம் அவர் அந்த பேட்டி வாழும் எழுத்தாளனுக்கு அவன் மனைவி பற்றிய ஒரு எச்சரிக்கை அவ்வளவே . அதை விட்டுவிட்டு அவரின் எழுத்து என்ற மகுடத்தை பற்றி பேச நம் தகுதியை கொஞ்சம் யோசித்தால் நல்லது .

    ReplyDelete
  19. நம்மை பொறுத்த வரை எதிராளி 100% perfect ஆக இருக்க வேண்டும்..நாம் 10% இல்லாட்டி கூட...

    சுஜாதா "சுஜாதா" - வா இருந்ததினால தான் இன்னைக்கு திருமதி. சுஜாதா பேட்டி வெளிவந்து இருக்கு ...

    நம்மில் எவ்வளவு பேர் perfect husband - ஆ இருக்கிறோம் ? அல்லது இருக்க முடியும்? அப்படி இருந்தாலும் எவ்வளவு பேர் "சுஜாதா"-ஆக முடியும்?

    நல்ல பதிவு..

    ReplyDelete
  20. கருத்திட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.

    இந்த கட்டுரையின் நோக்கம் சஜாதா மகாத்மா என்று சொல்ல வருவதல்ல...ஆனால் மேலே நண்பர் அருன் சரியாகபுரிந்துக்கொண்டு பதில் சொல்லி இருக்கின்றார்... செங்கதிரோன் உங்களுக்கான பதில் அருன் சொல்லி இருக்கின்றார்.

    ReplyDelete
  21. யதார்த்த சூழலை துள்ளியமாக ஆய்வு செய்து எழுத்தாக்கி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. You wrote this article from every angle. very good.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner