எட்டாம் வகுப்பு படிக்கும் போது
லைக் என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியாமல் வளர்ந்தவன்… ஆனால் இன்று ஆங்கில படங்கள் மற்றும் உலக படங்கள் பார்த்து விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்…
யாழினி ஒரு வயதில் இருந்து பேசிக்கொண்டு இருந்தாலும் தற்போது நிறைய பேசுகின்றாள்.. என்னால்தான் பதில் சொல்லத்தான் முடிவதில்லை…
சில வாரங்களுக்கு முன் அம்மா…. நான் intention ஆ பண்ணலை என்று அவள் சொன்ன போது இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
அது மட்டும் இல்லமா…
.
பிரச்சனை இல்லைம்மா….
போன்ற வார்த்தைகளை சேர்த்து பெரியவங்க போல பேசுகின்றாள்.
================
தினமும் இரவில் கதை கேட்கும் போது அவர் ராஜா கதைதான் அதிகம் கேட்பாள்… பட் சிங்க கதை எப்போதாவது கேட்டாலும் ….அப்புறம் என்ன ஆச்சி ? என்று கதையை தொடரும் போது சிங்கம் பசியில கத்திச்சி என்று அவள் ஒரு கதையை ஆரம்பிப்பாள்…
அவள் அதிகம் வைக்கும் விண்ணப்பம்….
அப்பா பேன்டா வாங்கிதரயா?
வாங்கி கொடுக்கறேன் செல்லம்.
அப்பா அப்புறம் எனக்கு ஐஸ்கிரிமும் வாங்கி கொடுங்க…
‘கண்டிப்பா செல்லம்.
ஆனால் மற்ற குழந்தைகள் போல வாங்கி கொடுத்தால் தான் ஆச்சி என்று அடம்பிடிப்பதில்லை.
=================
ஆபிஸ் சீரியல் பார்த்து விட்டு மறுநாள் திடிர் என்று கிட்டே வந்து , அப்பா ராஜி இல்லை அப்படியே தரையில விழந்துட்டா என்று பார்த்த சீனை என்னிடம் எனக்கு தெரியாது என்பது போல விவரிப்பாள்...
======================
மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் கமல் போல ஆடுறா ராமா ஆடுறா ராமா என்று கெஞ்சி கூத்தாடி தலைமைசெயலகத்தில் , பர்மிஷன் வாங்கி வீக் என்டில் சரக்கை அடிக்கும் போது … அப்பா மருந்து குடிக்கிறியா என்பாள்… ஆமாம்டா அப்பாவுக்கு ஜலதோஷம் அதனால மருந்து சாப்பிடறேன் என்று சொல்லி வைத்தேன்….
நேற்று ஷாப்பிங் காம்ளக்ஸ் செல்லும் போது.. அப்பா மருந்து என்று கத்தினால் , என்னடாவென்று விளம்பர பிளக்சை பார்த்தால்..…. பெப்சி விளம்பரம் சரக்கு கலரில் இருந்த காரணத்தால் அது அப்பாவின் மருந்தாகிவிட்டது.
========================
எல்லா பாடலும் அத்துப்படி... முக்கிய எந்த மொழியாக இருந்தாலும் ஒரு முறை கேட்ட உடன் திடிர் என்று தனிமையில் வரிக்கு வரி மாறாமல் அதே ராகத்தோடு பாடுவாள்... தற்போது மகேஷ்பாபு தெலுங்கு பாட்டு சித்தாம்மா வாகிட்டலோ சிரிமல்லி சிட்டி......
ஏதாவது ஒரு பாடலை பாடி முடிந்த உடன் நல்லா பாடற என்று நாம் சொன்னால் நல்லா பாடினாத்தான் கிப்ட் கெடைக்கும் என்று சொல்லுவாள்.. விஜய்டிவி பார்த்து கெட்டு போயிட்ட யாழினி என்று சொல்லுவேன்.
============
நைட்டு ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம்... சரி ஏதாவது படம் பார்க்கலாம்ன்னு எழுந்து போனா...
அப்பா எங்க போறிங்க?
வாங்க...
வந்து சமத்தா என் கூட படுங்க... என்னை கட்டிக்கோங்க.. என்று மிரட்டலாய் சொல்லுவாள்...
====================
டிவி விளம்பரத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரகம்.... பாடல்களை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கூடவே பாடிக்கொண்டு இருப்பாள்.
====================
பெண்குழந்தைகளிடம்மும் யாழினியிடமும் நான் கவனித்தவை என்னவென்றால்... குழந்தைகளை அப்படியே தன் குழந்தைகளை போல பார்த்து ரசிக்கின்றார்கள்..
அதே போல கரடி பொம்மைகளை தங்கள் பிள்ளைகள் போல பேணி காக்கின்றனர்.. அதற்க சோறு ஊட்டி விடுவதில் இருந்து போர்வை போர்த்தி தூக்கும் வரை எல்லாம்பணி விடைகளையும் தன் தாய் செய்வது போல கரடி பொம்மைகளுக்கு செய்கின்றார்கள்.... என் வீட்டில் இருக்கும் நிறைய கரடி பொம்மைகளுக்கு வாயில் தயிர் சாதம் சாம்பார் சாதம் ஊட்டுகின்றேன்... என்று யாழினி ஊட்ட டிரை செய்து.. அதன் வாய்புறங்கள் கருப்பு கலருக்கு மாறி வாரத்துக்கு ஒரு முறை குளியலை மேற்கொள்ளுகின்றன.
அதே போல டீச்சராக சட்டென்று உருமாறி விடுகின்றார்கள்.. ஸ்கேல் வைத்துக்கொண்டு டீச்சர் போல பெற்றோரை மிரட்டுகின்றார்கள்...
========================
எல்லா நேரமும் அவளோடு விளையாட வேண்டும் பாராட்ட வேண்டும் என்று விருப்புகின்றாள்... ஆபிசில் நடந்த விஷயத்தை தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் இவள் அம்மா என்னிடம் பேசி விட்டாள்... போதும் யாழினி டென்ஷன் ஆகி... அம்மா அவன்கிட்ட பேசாதே... என்கிட்ட பேசுங்க என்று எனக்கு கலவரத்தை ஏற்ப்படுத்துகின்றாள். எனக்கு வில்லி வெளியே இல்லை வீட்டுலேயே வளறது.
=================
அவள் அம்மாவை லைட்டாக திட்டினாலோ அல்லது அவள் மீது லைட்டாக கை வைத்தாலோ?
அப்பா அம்மாவை ஏன் திட்டிறிங்க...,,,??
நான் கேட்கறேனில்லை ---???
பதில் சொல்லுங்க... என்று டே கேர் டீச்சர் போல அதட்டுகின்றாள்.
==============
பைக்கில் அவள் அம்மாவை அழைத்து வர அவளை வண்டி முன் அமர்த்தி அழைத்து சென்றேன்….
அப்பா உன் சாலரி எவ்வளவு ?( என் மனைவியே என்னிடம் இந்தக்கேள்வியை கேட்டதில்லை.)
எதுக்கும்மா கேட்கறே…
அப்பா எனக்கே எனக்கு சொந்தமா ஒரு கார் வாங்கி தரியா? என்கின்றாள்… அது
கூட பரவாயில்லை… அம்மா எனக்கு மொபைல் வாங்கிதாங்க...
அப்பா எனக்கே எனக்கு பஸ் வாங்கி தரியா? என்றால் எனக்கு சமீபகாலமாக தலை கிறு கிறு என்று வருகின்றது... அதனாலே மீனம்பாக்கம் பக்கமோ அல்லது ஹார்பர் பக்கமோ அழைத்து செல்வதில்லை.. அட பஸ்சை கடனுக்கு ஐந்து நாள் வாடகை எடுத்தாவது வந்து விடலாம்
ஏரோப்ளேனுக்கும் கப்பலுக்கும் நான் எங்கே போறது..????
==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...

பொறாமையா இருக்கு சார்...எனக்கு 25 வயசு ஆகுது..திருமணம் பத்தி நெனச்சுகூட பாத்ததில்ல..ஆனா யாழினிய பத்தி நீங்க எழுதி இருக்குறத பாத்து..சீக்ரம் அப்பனாகனும்னு தோணுது..அதும் பெண் குழந்தைக்கு.
ReplyDeleteயாழினி தேவதை கேட்டுவிட்டாள் என்று பஸ்ஸை வாடகைக்கு எடுக்கும் யோசனை வைத்திருக்கும் அப்பா...யாழினி அப்பா மட்டுமல்ல யாழினிப்பாப்பாவும் கொடுத்துவைத்தவள்தான்.
ReplyDeleteஉண்மைதான்! பெண்குழந்தைகள் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கிறார்கள்! என் மகள் வேத ஜனனி கூட நீங்கள் கூறியது போல பல விசயங்களில் ஒற்றுமை படுகிறாள்! யாழினிக்கு பேண்டா! ஜனனிக்கு மாஸா!
ReplyDeleteகியுட் யாழினி....மை ஹார்ட்லி விஷேஸ்....
ReplyDeleteஹாய் ஜாக்கி அண்ணே, வணக்கம் எப்படி இருக்கீங்க ? நான் சந்திரா சேகரன்,
ReplyDeleteயாழினி பத்தி நீங்க எழுதுறது சந்தோசமா இருக்கு. யாழினி மட்டும் இல்ல இப்போ எல்லா குழந்தைகளுமே அப்படி தான் இருக்காங்க அண்ணே.
ஹாய் ஜாக்கி அண்ணே, வணக்கம் எப்படி இருக்கீங்க ? நான் சந்திரா சேகரன்,
ReplyDeleteயாழினி பத்தி நீங்க எழுதுறது சந்தோசமா இருக்கு. யாழினி மட்டும் இல்ல இப்போ எல்லா குழந்தைகளுமே அப்படி தான் இருக்காங்க அண்ணே.
nice na...hope you are enjoying the fatherhood atmost...
ReplyDeleteMe too become father to a female baby.. Also teach her good touch and bad touch na..Hope for the best but so many so maringa irukanunga...