சாண்ட் விச் அண்டு நான்வெஜ் (07/06/2013)


ஆல்பம்.


சென்னையில் நேற்று ஒருமணிநேரம்தான்மழை பெய்தது...
நகரம் ஸ்தம்பித்து விட்டது.... எல்லா இடத்திலேயும் டிராபிக் விழி பிதுங்கி நின்றது சென்னை.. நேற்றைக்கு அவசரமாக ஒரு இடத்தில் இருந்து மறு இடத்துக்கு செல்ல தரை வழியை பயப்டுத்தினால் ஒருவர் மட்டுமே இலக்கை அடைய முடியும்... அவர் யார் என்றால் தமிழக முதல்வர்தான்... அவர் சென்றால் அரைமணி நேரத்துக்கு முன்னேயே டிராபிக் கியர் பண்ணி ரோடு வெறிச்சோடி வைத்து விட்டுத்தான் மறுவேளை பார்ப்பார்கள்  போக்குவரத்து காவலர்கள். சென்னையில் வாழ்தற்கு  நொந்துக்கொள்வதை தவிர்த்து வேற என்ன  செய்து  விட முடியும்.
===========

 நேற்றைய செய்தி ஊடகங்களில் டாப் மோஸ்ட் நியூஸ் எதுவென்றால் தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடிகள் பிரிந்தார்கள் என்பதுதான். பிரிந்தார்கள் என்பதை விட பிரித்து வைக்கப்பட்டார்கள் என்பதே சரியாக இருக்கும்... இரண்டு பேர் சேர்ந்து வாழும் வாழ்க்கையை பொறுத்துக்கொள்ளாத இந்த சமுகம் எப்படி  நம் அடிப்படை பிரிச்சனையாக காவிரி பிரச்சனையில் இருந்து முல்லைபெரியாறு, கூடங்குளம், கச்சதீவு போன்றவற்றில் குரல்  கொடுக்கப்போகின்றது... போங்கடே........ பத்திக்கிட்டு வருது.
==================

வழக்கம் போல கர்நாடகா நடிக்க துவங்கி விட்டது...134 டிஎம்சி தண்ணி கொடுப்பதற்கு பதிலாக 98 திறந்து விடுகின்றேன் என்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டி நல்ல பிள்ளையாக அறிவித்து விட்டது.. ஆனால் இங்கே  அனைத்து கட்சிகூட்டம் என்றால்  கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில்தான் இருக்கின்றோம்.... வறட்சி காலத்தில்  வேண்டிய பங்கு நீரை கொடுக்காமல் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை பெய்ய தொடங்கியதும் நீரைதருகின்றேன்..  சாரி பாதி பிச்சை போடுகின்றேன் என்று சொல்லி இருக்கின்றது.. வழக்கம் போல ஆங்கில ஊடகங்கள்  இதுக்கு சப்பைக்கட்டு கட்ட போகின்றன.

===================
திரும்ப 49 மீனவர்கள் மீன் பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படை  கைது செய்து இருக்கின்றது... வராத காவேரிக்கு பாராட்டு  விழா எடுத்து 50 கோடி செலவு செய்தார்கள்... இப்போது 49 மீனவர்களை விடுவித்து விட்டு பாராட்டுவிழா எடுக்க வேண்டியதுதான்...செலவு செய்ய ஏதாவது காரணம் வேண்டும் இல்லையா?

==========
கிரிக்கெட் பைத்தியமாகத்தான் இருந்தேன்.... என்னைக்கு அசாரும் ஜடோஜாவும் சூதாட்டத்தில் மாட்டினார்களோ அப்போதே அதன் மீது  ஆர்வம் குறைந்து விட்டது. ஐபில் சூதில் ஷில்பா கணவர் மாட்டிக்கொண்டார்.. அதனால் ஷில்பா கைதாக வாய்ப்பு இருக்கின்றது.

========================================================================
மிக்சர்.

 அம்மா கொண்டு வந்த திட்டதில் நான் பாராட்டும் திட்டம் அம்மா உணவகம்தான்... அதிலும் நம்ம ஆட்கள் தன் டேலன்டுகளை காட்டுகின்றார்கள்.. ஆம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு  சாப்பிட்ட தட்டை அப்படியே அபிட் விடுகின்றார்கள்.. ஏதோ ஏழை பாழை மகளீர் சுயஉதவிகுழுக்கள் வாயை  கட்டி வயித்தை  கட்டி ஏதோ வேலை செஞ்க்கிட்டு இருக்குங்க... அதுங்க அடி மடியில கை வைக்காதிங்கடே... நல்லா இருக்க மாட்டிங்க.

===============
 அப்படி இப்படி என சோலார் ஸ்டார் ராஜகுமாரன் இயக்கிய திரைப்படம்.... திருமதிதமிழ் இன்றுடன் 50வது நாளை கொண்டாடுகின்றது... என்படத்தை விமர்சிக்க சினிமா அறிவு   நிச்சயம் இருக்க வேண்டும் என்று பதிரிக்கையாளர் சந்திப்பில் சொன்னதாக தகவல்...


===============
முதலில் ஜெயமோகன், அப்புறம் சுஜாதா , நடுவில் சாரு,  பிறகு மனுஷ்புத்திரன் என்று பேஸ்புக் இலக்கியவாதிகளால் பரபரப்பாய் காணப்படுகின்றது.
========================================================================

 நம்ம பேஸ்புக்  அப்டேட்ஸ்.

அம்மாவை அருகில் பார்த்ததும் அதிமுக அமைச்சர்கள் எந்த பக்கம் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கறதுன்னு யோசிச்சி குழம்பி ஒரு மாதிரி படபடப்பு வந்தது போலஒரு மாதிரி தவிப்பாங்களே... அது போல, உங்க வாகனத்துக்கு முன்ன ஒரு கார் எந்த பக்கம் போகறதுன்னு தெரியாம படபடப்பா அலைஞ்சிக்கிட்டு இருந்தா அந்த கார் ஓட்டற பொறம்போக்கு அல்லது பொறாம் போக்கி (பெண்பால்)கையில் செல்போன் வச்சி பேசிக்கிட்டே கார் ஓட்டிக்கிட்டு இருக்குன்னு அர்த்தம்....#ஜாக்கிசேகர் அவதானிப்பு.
====================

முதல்நாள் மழை… மறுநாள் ஒரு பேருந்து பின்னே அல்லது ஒரு தண்ணி லாரி பின்னே செல்லும் போது மண்புழுதி உங்கள் முகம் மற்றும் கண்களில் அப்பி, காசி விக்ரம் போல நீங்கள் தடவி தடவி, இரு சக்ர வாகனத்தை ஓட்டினால் நீங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு நகரத்தின் தெருக்களில் வாகனத்தில் சென்று கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்…#ஜாக்கி சேகர் அவதானிப்பு.

================
ஆட்டோவின் முன் சக்கரம் நுழைந்துவிட்டால் முழு ஆட்டோவும் நுழைந்து விடும் என்று மனக்கணக்கு போடுபவனே உண்மையான தமிழ்நாட்டு ஆட்டோக்காரன். #ஜாக்கிசேகர் அவதானிப்பு.
============

ஸ்டாலின் பொண்டாட்டி, துர்கா ஸ்டாலின் பழனி மலைக்கோவிலுக்கு போனதை செய்தியா போட்டு காடு வித்தை காட்டுறானுங்க...

ஸ்டாலின் அவுங்க மனைவி துர்காவை கோவிலுக்கு போக விட்டது நல்லது... இல்லைன்னா... ?

''அவரு கொள்கை அவரோடு இருக்கனும் அதை விட்டு விட்டு என்னையும் பாலோ பண்ண சொன்னார்... "
எனக்கு அவரை விட்டு பிரிஞ்சிடலாம்ன்னு கூட அப்ப அப்பமனசு தவிக்கும்.... கடைக்கன்னிக்குதான் என்னை வெளியே அனுப்பலை.... அட்லிஸ்ட் கோவில் குளத்துத்துக்கு கூட என்னை போகவிடலைன்னு பிற்காலத்துல பத்திரிக்கையில பேட்டிக்கொடுக்கறதுக்கா..?

அப்பயும் வந்து அதிமுக கொண்டைங்க... கொண்டையை மறைக்க முடியாமா.... தன் மனைவியின் சின்ன ஆசையான கோவிலுக்கு போவதை கூட அனுமதிக்காதவன் என்ன தலைவன் என்று ஸ்டேட்டஸ் போட்டாலும் போடுவாங்க...#ஜாக்கிசேகர் அவதானிப்பு.
=========================

இந்த வார விகடனில் விகடன் மேடையில்....

இயக்குனர் பாரதிராஜா ஒரு கேள்விக்கு நச்ன்னு பதில் சொல்லி இருக்கின்றார்...

உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

''விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டா, நான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!''

========
(பாரதிராஜா வாய்சில் படிக்கவும்) ஐ லைக் இட்.
=============


கார் வைத்து இருக்கின்றார்கள்... பைக் வைத்து இருக்கின்றார்கள்.. சொந்த வீடும் இருக்கின்றது.... கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் செல்கின்றார்கள்... ஆனால் கஷ்டப்படுகின்றேன் என்று அவர்கள் இருவரில் யாராவது சொல்லும் போது கேலி பேசியிருக்கின்றேன்...

அதே போல கஷ்டப்படுகின்றேன் என்று சொல்லுபவர்கள் கிழிந்த சட்டையோடு எண்ணெய் காணாத தலையோடு இருக்க வேண்டும் என்று பொது புத்தியில் நம் எல்லோருடைய மனதிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது...

ஆனால் அனுபவத்தில் உணரும் போது அப்படி அவர்கள் சொன்னது உண்மைதான் என்பது இப்போது புரிகின்றது,...

உங்களை வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? என்று அப்பா சொன்ன வார்த்தைகள் சிறுவயதில் உரைக்காமல் தகப்பன் ஸ்தானத்துக்கு நாம் வந்ததும் நச் என்று நடு மண்டையில்உரைப்பது போல...............  ஜாக்கிசேகர் அவதானிப்பு


=================
ஒரு வாரத்துக்கு முன்ன சென்னை காசினோ தியேட்டரில் தடாகா தெலுங்கு திரைப்படம் பார்த்தேன். பால்கனி டிக்கெட் 50 ரூபாய் ,பைக் டோக்கன் பதினைஞ்சு ரூபாய், (பத்திலிருச்து பதினைஞ்சி ஆயிடுச்சி)இடைவேளையில் மெஷின் டீ 10 ரூபாய் என்று படம் பார்த்து முடித்தேன்...ஆனால் விஷயம் அதுவல்ல...

பால்கனி ஏ ரோவில் சென்டர் சீட்டில் உட்கார்ந்து இருந்தேன்... அங்கே உட்கார்ந்தால் நடந்து போகும் வழி என்பதால்.... யார் தலையும் மறைக்காது என்பதால் அந்த சீட்டினை தேர்ந்து எடுத்தேன்...
என் ரெண்டு சீட்டுக்கு தள்ளி ஒரு பேமானி வந்து உட்கார்ந்தான்... மாவா போட்டு இருந்தான்... சீட்டுக்கு பின்னாடி எச்சியை ஒன்னுக்கடிக்கறது போல துப்பிக்கிட்டு இருந்தான்... நான் டென்ஷன் ஆயிக்கிட்டு இருந்தேன்....

காவியமா ஓவியாமான்னு ஆர்எம்கேவி விளம்பரம் ஓடிக்கிட்டு இருந்துச்சி... அந்த பக்கம் கோட்டா முடிஞ்சி என் பக்கம் இருந்த சீட்டுக்கு பக்கத்துல இருந்த சீட்டுக்கு பின்னாடி எச்சி துப்பினான்... என்னால பொறுக்க முடியலை... யோவ் உன் வீட்டுல இப்படித்தான் துப்பிக்கினு டிவி பார்ப்பியான்னு சத்தம்  போட்ட்டேன்... சாரிபாஸ்ன்னு சொல்லி அந்த இடத்தை விட்டு எழுந்து போயிட்டான்.... என்னால அதுக்கு மேல அந்த ரோவுல உட்கார பிடிக்கலை.. சீ ரோவுல போய் உட்கார்ந்துக்கிட்டேன்.

அப்படியே சாயங்காலம் கல்யாணத்துக்கு போனேன்.... அங்க சாப்பிடற இடத்துல எனக்கு எதிர்ல ஒருத்தர் சாப்பிடற இன்ரஸ்ட்ல ,மூக்கு போடி போட்டு கருப்பு சளி மூக்குல வழிஞ்சிக்கினு இருக்கு அதை தொடைக்காம வெறித்தனமா சப்பிட்டார்... அவர்கிட்ட சைகையில சொன்னேன்அது காதுலேயே வாங்கிக்கலை.. நான் டென்ஷன் ஆகி இலையபார்த்து சாப்பிட்டேன்.... சோறு போடறவன் சொல்லி தொடச்சான் போல....

டேய் ஏன்டா ?எனக்குன்னே கிளம்பி வருவிங்களாடா? சோ சேட்


=======================
ராமகிருஷ்ணா பள்ளியில் படித்த போது கடலூர் அக்கிள்நாயிடு தெருவில் இருக்கும் கிளை நூலகத்தில், கல்கண்டு பத்திரிக்கையை விரும்பி படிப்பதுண்டு... லேணாவின் ஒரு பக்க கட்டுரையை தீவிரமாக வாசித்த காலம். நேற்று பத்திரிக்கை நண்பர் கீதப்பிரியன் மகன் திருமணத்துக்கு லேனா தமிழ்வாணன் வந்து இருந்தார். அப்படியேதான் இருக்கின்றார்... கருப்புக்கண்ணாடி அணிந்து...ஆனால் எந்நேரமும் கருப்புக்காண்டி அணிந்து அதை பாலோ செய்வது எவ்வளவு பெரிய விஷயம்... சாப்பிடும் போது ,கை கழுவும் போது ,கருப்பு கண்ணாடியில்...ஆனால் மனிதர் இன்று வரை அந்த பிம்பத்தை உடைக்காமல் காப்பாற்றி வருகின்றார்... அதுக்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் லேணா சார்......அவருக்கு பின் மிஷ்கின் கருப்பு கண்ணாடி பிம்பத்தோடு திரிகின்றார்....

கருப்பு கண்ணாடி அணிவதில் ஒரு உபகாரம் இருக்கின்றது. கருப்பு கண்ணாடி அணிந்தவர் எதிரில் இருப்பவரை நன்றாக பார்க்கலாம்... பிடிக்காதவர் என்றால் கவனிக்கவில்லை என்று சொல்லி டபாய்க்கலாம்...ஆனால் கண்ணாடி அணியாதவர்... பார்த்தாரா இல்லையா என்று புரியாமல் விழிப்பார்கள்... அப்படி கருப்பு கண்ணாடி அணிந்த ஒரு பிரபலத்துக்கு இரண்டு முறை வணக்கம் வைத்து ஏமாந்து இருக்கின்றேன்....

=========================================================================
படித்ததில் பிடித்த்து...

சான்சே இல்லை... சிரிச்சி மாளலை... பலர் படிச்சி இருக்கலாம் படிக்காதாவங்க படிச்சி சிரிங்க...


=========
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம நல்லதம்பி ..

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம நல்லதம்பிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
நல்லதம்பி – “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.
சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.
அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், நல்லதம்பி

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” – செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.
இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள்.

அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம நல்லதம்பி

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்டிக் டிக்டிக் டிக்

ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் நல்லதம்பி

இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.

நல்லதம்பி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

நல்லதம்பி ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.

நாகப்பட்டினம் பக்கம். நீங்க?”
—–
தமிழன்டா !!!!!

=======================================================================
வாழ்த்துகள்....

நான் நண்பராக பாவித்தேன்ஆனால் அவர் அப்படி நடந்துக்கொள்ளவில்லை..அதனால் அவரோடு நட்பாய் நான் இருக்க விரும்பவில்லைஅதன் பிறகு அவர் எனக்கு நட்பாய் வாழ்த்துகளை தெரிவித்தாலும் பிரிந்த நெல்லின் உமி ஒரு போதும் பழைய நிலையை அடையாது என்பதால் அதற்கு பிறகு அவரோடு நான் நட்புபாராட்டவில்லை

ஆனால் இன்று தினகரன் வெள்ளிமலரில் திரைக்கதை பற்றிய தொடரை வாசிக்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லைவெகு ஜன மக்களிடம் சென்று சேரும் பத்திரிக்கையில் திரைக்கதை பற்றிய நுனுக்கங்கைளை உள்ளடக்கிய தொடர் தமிழில் வருவது மெச்சதக்கது...

இனி தினகரன் வெள்ளிமலரின் சில பக்கங்களை தமிழ்நாட்டில் உள்ள உதவி இயக்குனர்கள் சேமித்து பத்திரபடுத்துவார்கள்….திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். ஆங்கிலம் படிக்க தெரியாத உதவி இயக்குனருக்கும் பயண் அளிக்கும் வகையில் திரைக்கதை தொடர் எழுதுவதற்க்காக

நண்பராக இல்லாவிட்டாலும் நல்ல விஷயத்தை செய்யும் போது மனப்பூர்வமாய் வாழ்த்துவது என் இயல்புமீண்டும் வாழ்த்துகள் ராஜேஷ் உங்கள் பணி சிறக்கட்டும்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

================
தத்துவம்.




=======================================================================
நான்வெஜ்

Q: What is the similarity between men and rats?

A: Both keep searching for new holes.

===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

9 comments:

  1. "ஜாக்கிசேகர் அவதானிப்பு" அருமை..

    ReplyDelete
  2. பில் கேட்ஸ் கதை சூப்பர்!!!

    ReplyDelete
  3. பில் கேட்ஸ் கதை சூப்பர்!!!

    ReplyDelete
  4. இன்றைய பொழுதின் சிரிக்க வைத்த எழுத்துக்கள். நன்றி.

    ReplyDelete
  5. பில் கேட்ஸ் கதை சூப்பர்!!!

    ReplyDelete
  6. பல்சுவைகளுடன் சான்விச்.

    குறைந்த செலவில் சாப்பிட்டதும் போதாமல் தட்டை சுட்டவங்களை நினைத்தால் :(

    ReplyDelete
  7. பில் கேட்ஸ் கதை அருமை !!!!!!

    ReplyDelete
  8. //கார் வைத்து இருக்கின்றார்கள்... பைக் வைத்து இருக்கின்றார்கள்.. சொந்த வீடும் இருக்கின்றது.... கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் செல்கின்றார்கள்... ஆனால் கஷ்டப்படுகின்றேன் என்று அவர்கள் இருவரில் யாராவது சொல்லும் போது கேலி பேசியிருக்கின்றேன்...//

    நீங்கள் சரியாகத்தான் பேசி இருக்கிறீர்கள்!

    கஷ்டபடுகிறோம் என்பதை விட "Life Sytle " - ஐ "maintain " பண்ண முடியாமல் கஷ்டபடுகிறோம் என்பது சரியாக இருக்கும்!

    இது கஷ்டம் என்றால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களை என்னவென்று சொல்லுவது?

    மற்றபடி "SW அண்ட் and NV " வழக்கம் போல் அருமை!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner