ஆல்பம்...
தேர்தல் முடிந்து விட்டது.. ஆட்சி பொறுப்பை கையில் கொடுத்து விட்டார்கள்.. உள்ளாட்சி தேர்தல் வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்து இருந்தார்..
இனி நாலு வருசத்துக்கு யாருக்கு அவர் தலைவணங்கபோவத்தில்லை... இதோ இனிப்பான செய்தியை முதல்வர் ஜெ சொல்லி இருக்கின்றார்..ஆசியாவிலேயே பெரிய நூலகமான கோட்டுர்புரம் நூலகத்தை மருத்துவமணையாக மாற்றப்போவதாக அறிவித்து இருக்கின்றார்.. இது காக்கை கூட்டில் போய் குயில் முட்டை இடுவது போல இருக்கின்றது...ஒரு மரத்தை வெட்டி இன்னோரு மரத்தை நடுவதுதான் உங்கள் நிலைப்பாடா??
இனி நாலு வருசத்துக்கு யாருக்கு அவர் தலைவணங்கபோவத்தில்லை... இதோ இனிப்பான செய்தியை முதல்வர் ஜெ சொல்லி இருக்கின்றார்..ஆசியாவிலேயே பெரிய நூலகமான கோட்டுர்புரம் நூலகத்தை மருத்துவமணையாக மாற்றப்போவதாக அறிவித்து இருக்கின்றார்.. இது காக்கை கூட்டில் போய் குயில் முட்டை இடுவது போல இருக்கின்றது...ஒரு மரத்தை வெட்டி இன்னோரு மரத்தை நடுவதுதான் உங்கள் நிலைப்பாடா??
டேய் ஆறு மாசத்துக்கு முன்ன பொங்கனவனுங்க எல்லாம் எங்கடா போனிங்க...???கலைஞர் எழுதின புத்தகம் மட்டும்தான் கோட்டூர்புர நூலகத்தில் இருக்குதுன்னு சொன்னாலும் சொல்லுவானுங்க.. லூசுப்பயலுங்க..ஏற்கனவே பழைய தலைமைசெயலகத்தில் இருந்து செம்மொழி நூலகம் எங்கே செயல்படுகின்றது என்று யாருக்குமே தெரியவில்லை..?? யாருக்காவது தெரியுமா??
======================
ஒரு இனத்தையும் அதன் பண்பாட்டு கலாச்சாரங்களை அழிக்க முதலில் நூலகத்தின் மீதுதான்.. கை வைக்க வேண்டும்.. அதனால்தான் இலங்கையில் யாழ் நூலகத்தை எரித்தார்கள்..தமிழ்நாட்டில் எரிக்க முடியாது..இட மாற்றம் செய்து நினைத்ததை சாதிக்கலாம்.. வாழ்க உங்கள் பணி...வளர்க உங்கள் தொண்டு... முதலில் சமச்சீர் கல்வி, செம்மொழி பூங்கா, செம்மொழிநூலகம், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகம்...ஓரளவுக்கு புரியுது..
=================
தலைமை செயலகம்,நூலகம் ரெண்டையும் மருத்துவமணையா மாற்றுவதை கண்மூடி ஆதரிக்கறவங்களுக்கு ஒரு கேள்வி ?உங்க வீட்டு கிச்சனை பெட்ரூமா மாத்தமுடியுமா?? முடியாதுஇல்லை அப்புறம் ஏன்??
================
இந்த வயதில் இப்படி ஒரு இடியாப்ப சிக்கலை கலைஞர் சந்தித்து இருக்கமாட்டார்.. மகள் ஜெயிலில், பெரியதாரத்து பெண் சின்னதாரத்து மகளுக்கு கொடுத்து இருக்கும் முக்கியத்துவத்தை பார்த்து கொதிக்கின்றார்.. பரிதியின் திடிர் விலகலால் ஏற்ப்பட்ட உட்கட்சி பூசல், என்று சகட்டுமேனிக்கு தவித்து போய் இருக்கின்றார்..ஆனால் வேறு யாராவது அவரது நிலையில் இருந்து இருந்தால்??? அப்படி யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. அந்த இடத்தை பில் செய்ய மறுக்கின்றார்கள்.
=========================
தலைநகர் சென்னையிலேயே ரோட்டில் ஒன்றரை அடி பள்ளங்கள் இருக்கின்றன..இங்கேயே இப்படி என்றால் தென்மாவட்டங்கள் நிலமை???சென்னையில் மழையால் ஏற்ப்பட்ட சாலைகளில் ஏற்ப்பட்ட பள்ளங்களில், பலர் சாலைவிபத்தில் பலி ஆகி இருக்கின்றார்கள்..மழை தீபாவளிக்கு முன்பு இருந்தே பெய்து கொண்டு இருக்கின்றது.. நேற்றுதான் முதல்வர் ஜெ அமைச்சர்களுக்கு ஏரியா பிரித்து, உத்தி பிரித்து விட்டு இருக்கின்றார்..ஓ இதுக்கு பேர்தான் போர்க்கால நடவடிக்கையோ????
=======================
பெட்ரோல் விலை மீண்டும் ஏற்றுகின்றார்கள்.. எங்கள் கையில் எதுவும் இல்லை எல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் கையில் இருக்கின்றது என்று ஆளும் காங்கிரஸ்அரசு சொல்லுகின்றது..இதுவரை மத்தியில் ஆட்சி செய்த யாரும் இப்படி சொல்லி நான் பார்த்தது இல்லை......
======================
திரும்பவும் சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜராக மாட்டேன் என்று திரும்ப உச்சநீதிமன்றத்தை அனுகி இருக்கின்றார்..உச்சநீதிமன்றம் கடுப்பாக போவது என்பது மட்டும் உறுதி..
மிக்சர்...
சென்னையில் விதிமுறை மீறி கட்டிய கட்டங்களுக்கு சீல் வைத்து ரங்கநாதன் தெருவையே மிரளவைத்து இருக்கின்றார்கள்...இதுக்கு மிகப்பெரிய காரணகர்த்தா டிராபிக் ராமசாமிதான்..நிறைய பொதுநல வழக்குகள் போட்டு இந்த நிலைமைக்கு எடுத்து வந்தவர்.. அவருக்கு அவர் முயற்சிக்கும் வாழ்த்துகள்...
==================================
போரூரில் பாலம் கட்டுகின்றேன் என்று ரோட்டை நாஸ்த்தி பண்ணி ரெண்டு பில்லர் போட்டதோடு சரி... அதுக்கு பிறகு ஒருதுரும்பையும் கிள்ளி போடவில்லை...டிராபிக்கில் தினறிக்கொண்டு இருக்கின்றார்கள்...யாருய்யா பாலம் உங்களை கேட்டது என்று புலம்பும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்..
=================
ஓசீயன் 11 அப்புறம் 12 அப்புறம் 13.. இப்ப 14 வந்துடுச்சே.. என்சாய் மக்கள்ஸ்..
இந்தவராகடிதம்.
அன்புள்ள அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ,
நான் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் வலை பக்கத்தை கடந்த ஆறு மாதமாக படித்துக்கொண்டிருக்கிறேன் , எங்களை போன்ற பாமர மக்களின் அன்றாட செயல்கலை எங்கள் வீட்டுப்பிள்ளை மாதிரி நம் தமிழ் மொழியில் நமக்கு தெரிந்த வரியில் எழுதி கொண்டு இருக்கின்றீர்கள்.கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள் என்ற வலை பக்கம் என்னை அதிகமாக பாதித்து விட்டது , ராந்தல் விளக்கு , கல்லு சிலட்டு ,பல்பம் ,கிராம போன், மாயாவி காமிக்ஸ் போன்றவை என்னை மிகவும் பதித்தவை . பார்த்தே தீர வேண்டிய ஆங்கில படங்கள் ரொம்ப பிளஸ் பக்கங்கள் . சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் வலை பக்க செய்தி விமர்சனங்கள் நன்றாக உள்ளன .
இரா.கதிரேசன்
ஆக்ஸ்போர்ட்
ஐக்கிய ராஜ்ஜியம்
======================
படித்ததில் பிடித்தது...
பேஸ்புக்கில் நண்ப்ர் அதிஷா எழுதியதை படித்து ரசித்தேன்..
அதிகார மமதையில் ஆடும் முதல்வரே , உங்களால் கலைஞர் கட்டிய எதை வேண்டுமானாலும் மருத்துவமனையாக மாற்ற முடியும், ஆனால் ராஜாத்தி அம்மாளையும் தயாளு அம்மாளையும் மருத்துவமனையாக மாற்றமுடியுமா.. அட்லீஸ்ட் ஒரு டாக்டராக மாற்ற முடியுமா!
=====================
பிலாசபி பாண்டி..
ஒட்டக்குச்சி ஓய்வெடுத்துக்கொண்டால், சிலந்தி பூச்சி சிம்மாசனம் ஏறுமாம்...மக்களுக்கு புரிஞ்சா சரி..
=======================
நான்வெஜ் 18+
A beautiful girl goes to Professor cabin
and
say
that i will do anything to pass in the exams
and professor says
NOW OPEN YOUR
.
.
.
.
.
.
Books And Study
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
//.ஆனால் வேறு யாராவது அவரது நிலையில் இருந்து இருந்தால்??? அப்படி யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. அந்த இடத்தை பில் செய்ய மறுக்கின்றார்கள்.//
ReplyDeleteஅந்த பிரச்சினைகளுக்கு மூல காரணமே அவர்தான். அவர்தான் பிரச்சினையை handle செய்ய வேண்டும்.
அப்புறம்,
அவருக்கு முன்னாடியும் திமுக இருந்துச்சு அவருக்கு அப்புறமும் இருக்கும். :-)
குமரியிலே திருவள்ளுவர் பாறையிலே ஆஸ்பத்திரி கட்ட முடியுமா? :-)
ReplyDeleteOcean 14 ட்ரைலர் பொய்.. அந்த மாதிரி படமே இப்போதைக்கு வராது :)
ReplyDeleteபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் மூன்று கல்வியாளர்கள், ஒரு ஆ தி மு க மருத்துவரணி தலைவர் நேரடி ஒலிபரப்பு மூலம் மக்களிடம் பேசினார்கள் ...
ReplyDeleteஒரே ஒரு கேள்விக்கு கூட அந்த ஆளால் பதில் கூற முடியவில்லை ..... அப்போது தாம்பரத்திலிருந்து ஒரு பெரியவர் தொடர்பு கொண்டு பேசினார்... அவர் பல ஆண்டுகளாக ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்க பல நூலகங்களுக்கும், புத்தக கண்காட்சிகளுக்கும் அலைந்தும் கிடைக்காத அந்த புத்தகத்தை 21 ஜி பேருந்தில் ஏறி அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று அங்கே அந்த புத்தகம் இருப்பதைக்கண்டு பூரித்துப்போனேன்.... ஆனால் அதற்கு இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறு தனது வருத்தத்தை பதிவு செய்தார்.... அம்மா எது செய்தாலும் நல்லது என்று கூப்பாடு போடுபவர்களே இதற்க்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்.... கூவுங்கள் கூவுங்கள்....
Supperb---------------
ReplyDeleteஒரு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு எவ்வளவு உள்கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும்... மேலும் எத்தனை கோடிகள் செலவாகும்.... அது ஒருபக்கம் இருக்கட்டும்.... முதலில் அங்கே மருத்துவமனை வரப்போவதே இல்லை...... கலைஞர் கட்டிய நூலகத்தை மூடியே ஆகவேண்டும் அதற்கு இது ஒரு பொய் காரணம்..... இதற்கு முன்பு சட்டசபையை மருத்துவமனையாக மாற்றப்போறேன் என்று கூறினார்... அதற்கு உண்டான எந்த செயல்பாடுகளும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.... ஏற்கனவே 108 சத்தம் ஓய்ந்துக்கொண்டிருக்கிறது .... இது தொடர்கதை...
ReplyDeleteTrailer donesnt seem to be a genuine one..
ReplyDeleteIts a Mix of Oceans 11 and Martin scorssese's Casino
Good post. Keep it up.
ReplyDeleteபாஸ் ... oceans 14 trailer வந்து ஒரிஜினல் இல்ல. யாரோ oceans fans சும்மா ஜாலிக்கு 3 படங்கள்ல இருந்தும் scenes சுட்டு ஒரு மினி trailer செஞ்சு இருக்காங்க.
ReplyDeletePlease check :)
தி மு க வுல கொ. பா. செ. வுக்கு முயற்சி பன்னுங்க நல்ல எதிர்காலம் இருக்கு தயவு செய்து பிளாக் எழுதி டைம வேஸ்ட் பண்ணாதீங்கா
ReplyDeleteJackie... Steven Soderbergh says it's not possible to proceed the Ocean series since the actor Bernie Mac died.
ReplyDeletegood post
ReplyDeleteகலைஞரின் பெயர் தாங்கி ஏதும் இருக்க கூடாது என்ற echo மனப்பான்மை ஜெ க்கு நிறைய உண்டு .அதன் விளைவே இது .
ReplyDeleteஜாக்கி, இந்தம்மா செய்றது தப்புத்தான். அதுக்காக நீங்க அவருக்கு வக்காலத்து வாங்குறது எப்படி சரி? அவரு ஒழுங்கா ஆண்டிருந்தா இந்தம்மா எப்படி தலையெடுத்து இருப்பார்கள்? அவரு சினிமாவுக்கு செலவழித்த நேரத்தில் பாதி நேரம்கூட மக்களுக்கு செலவழிக்கவில்லை. ஒரு பிரச்சனையில், ஷகீலா கூட உடனடியாக அவரை சந்திக்க முடிந்தது. ஆனால் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் பல வருடங்களாக முயற்சி செய்தும், அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார், உங்கள் தலைவர். அந்த மாவட்டத்தில் மட்டும் அல்ல, மாநிலம் முழுவதற்குமே, சரியான ஆப்பு, தலைவருக்கு கிடைத்தது. என்னமோ அவரு ஏதோ நல்லது செய்ஞ்சா மாதிரியும், இந்தம்மா மட்டும் என்னவோ கேட்டது செய்றது மாதிரியும் எழுதுறீங்களே... இந்தம்மா செய்யும் மோசமான செயல்களையும் கண்டித்துதான் எழுதுறாங்க. அப்புறம், சென்னை ரோடெல்லாம் பள்ளமா இருக்குறதா சொல்லி இருக்கீங்க... ஏங்க, அந்த ரோட்டை எந்த ஆட்சியில் போட்டாங்க? ஏன் அதை எல்லாம் எழுத மாட்டேங்குறீங்க? இந்தம்மாவின் ஆட்சியில், ரோடு வசதி எல்லாம் எப்பவுமே மோசமாகத்தான் இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த தடவை அய்யா வந்து இருந்தால் ரோடு முதற்கொண்டு, அவர்கள் குடும்பத்திற்கு பட்டா போட்டிருப்பார்கள்.... இதை நீங்கள்தான் உணர மறுத்து எழுதி வருகிறீர்கள்.
ReplyDeleteஎதுவாக இருந்தாலும், இந்தம்மா செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. கண்டனத்துக்குரிய ஒன்று.
//சென்னையில் விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு சீல்//
ReplyDeleteஒன்று தெரியுமா? உங்க அய்யா ஆட்சியில, ஒரு அரசாங்க உத்தரவே போட்டு இந்தக் கடைகளை நடத்த விட்டிருந்தார்... ஆனா இந்தம்மா உடனடியா சீல் வச்சிட்டாங்க. அதுக்காக இவங்க சட்டத்த மதிக்கிறவுங்கன்னு சொல்ல மாட்டேன். டீல் ஓகே ஆகலையோ என்னவோ.... சட்டம் எல்லாம் இந்தம்மாவுக்கு இல்லை, அது மத்தவுங்கள்ளுக்குதான். பெங்களூர் கோர்ட் விவகாரம் ஒண்ணு போதாதா? இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே தீர்வு.... பெங்களூர் கோர்ட் நீதிபதி அவர்கள்தான். அவருகிட்டயும்.... டீல் ஓகே ஆகாம இருக்கணும்... கடவுளை வேண்டுவோம். வேற வழி?
jackie anna kanimozhi bail pathi ethum eluthalaya neenga ? sathame kanam ?
ReplyDeleteஜெயலலிதா செஞ்சா அது அப்படித்தான் செய்யும்ன்றது தெரிஞ்ச கதையாம்...ஆனா கலைஞர் செஞ்சா கேள்வி கேட்பானுங்களாம்... அது எப்படிடா?? ஒரு ஆளை மட்டும் கேள்வி கேட்ப்பிங்க..???இந்த நடுநிலையாளர் வேஷத்துக்கு நட்டுக்குனு சாவலாம்...
ReplyDeleteபாஸ் ... oceans 14 trailer வந்து ஒரிஜினல் இல்ல. யாரோ oceans fans சும்மா ஜாலிக்கு 3 படங்கள்ல இருந்தும் scenes சுட்டு ஒரு மினி trailer செஞ்சு இருக்காங்க.--•///
ReplyDeleteஅடப்பாவிங்களா இது வேறையா.. நான் வேற ரொம்ப ஆசையா இருந்தேனே??
கருத்தை நியாயமாக சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteWell Said.......Jayalalitha never ever change her real character
ReplyDelete"So much of what we do is ephemeral and quickly forgotten, even by ourselves, so it's gratifying to have something you have done linger in people's memories."
ReplyDeleteDear Jackie,
ReplyDeleteThere is no Oceans 14. There is no official release of Oceans 14 trailer. The video you've uploaded is a fan made trailer. Pls let me know if there are any sources for the official trailer for Oceans 14 (Im big fan of Oceans series)
ஒட்டு போட்ட ஜனங்கள திட்டாதிங்க. வேணும்னா நாங்க கலைஞர் வீட்டுக்கு அனுப்பிச்சோம். நாங்களா 2G பணத்த குடும்பத்துக்கு தார வாக்க சொன்னோம். அது மக்களோட பணம். என்னோட/உங்களோட பணம். ஒரு நல்ல தலைவன் எல்லாத்தையும் proper control பண்ணனும். அத இத படிக்க வேணாம், காமராஜர் administration technique படிச்சு பாத்தா போதும் எப்படி ஒருத்தர் ஆட்சி பண்றதுன்னு தெரியும் eventhough i dont like present congress.
ReplyDelete