சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்

ஆல்பம்..

14 வருட வனவாசத்துக்கு பிறகு மீதியுள்ள 817 கேள்விகளுக்கு பதில் சொல்ல தனி விமானத்தில் நமது முதல்வர் ஜெ நேற்று பெங்களூர் சென்று உள்ளார்..
சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும்...கர்நாடக மக்கள் அவதிக்குள்ளவாவர்கள் என்று பல காரணம் சொல்லி பார்த்தும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு விட்டது.... நமது முதல்வர்...இன்றும் 200க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிமுடித்து விட்டார்...கொடுமை என்னவென்றால் கோர்டுக்கு ஆஜராக போவதற்கு கூட கட் அவுட் வைத்த ரத்தத்தின் ரத்தங்களின்  பாசத்தை என்னவென்று  சொல்வது..

==============
பால் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் இடையே பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கின்றது..ஒவ்வோருமுறை ஆட்சிக்கு வரும் போதும் கஜானா காலி என்று பழைய பல்லவியை சொல்வதும், விலையேற்றுவதும் வழக்கமாகவே இருக்கின்றது..சரி இவ்வளவூ ஏத்தியாச்சி...இன்னும் 5 வருஷம் கழிச்சி நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போவதை பார்க்கத்தானே போகின்றோம்...
=====================
பத்தாண்டு காலம் பஸ் கட்டணஉயர்வு இல்லை அதனால் எப்படியும் ஏற்றிவிடுவார்கள் என்று தெரியும்.. அதை டபுள் மடங்கு ஏற்றியது மட்டும் அல்லாமல் ஓவர் நைட்டுல அமுல் படுத்தியது கொடுமை ...இதனால் சாமான்ய மக்கள் அதிகம் பாதிக்கப்டடாங்கன்னு சொன்னா..அப்படி ஏத்தினது தப்பேயில்லைன்னு சொன்னானுங்க... சரிடா யருடா இதையெல்லாம் சொல்லறானுங்க்ன்னு பார்த்தா  சொல்லற பயலுக எல்லாம் வெளிநாட்டுல இருக்கானுங்க...பல பேர் ஐடி ல கை நிறைய மாச சம்பளம் வாங்கறவனுங்க.. அட நீ எவ்வவளவு வேணா கை நிறைய வாங்கு... நீ உழைக்குறே வாங்குறே..ஆனா தினக்கூலி வாங்குறவன் குடும்பத்தோடு 100ரூபாய் எடுத்துக்கினு பஸ் ஏறினா திடிர்னு 300 ரூபாய் கேட்டா அவன் என்ன செய்வான்..??? வரடி புள்ள பெறடின்னு சொன்ன முடியுமா?? அதனாலதான் டிராபிக் ராமசாமி சென்னையில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்... அதையும் நேற்று விசாரனைக்கு உயர்நீதிமன்றம் எடுத்துகொண்டுஇருக்கின்றது...மூன்று வாரத்துக்குள் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது...
=========================
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆறுமாசத்துல மின் தடையை சரி செஞ்சிடுவாங்க குஜராத்துல  பேசி மின்சாரம் வாங்கி தமிழகத்தை  ஜொலிக்க வச்சிடுவாங்கன்னு குதிச்சிகிட்டுகடந்தானுங்க...கடந்த ஆட்சி காலத்துல இரண்டு மணி நேரத்துக்கு கட் பண்ணாங்க.. இப்ப இரண்டு மணிநேரத்துக்கு பதில் அஞ்சு மணிநேரம் தென்மாவட்டத்துல மின்சாரம் இல்லை....அனுபவிங்கடே..
============
உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ இல்லைன்னா இன்னும் நாலு வருசத்துக்கு தமிழ்நாடு நிலையை நினைச்சி பார்ககவே பயமா இருக்கு..எனக்கு தெரிஞ்சி தமிழ்நாட்டை  வழி நடத்துவது.. அல்லது ஆட்சியை நடத்துவது உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமுதான் என்று நினைக்கின்றேன்..
=====================
தமிழில் வெற்றிவாகை சூடிய ஜெஸ்சி கேரக்டரில் எமிஜாக்சன்...அப்படியே மாற்றி இருக்கின்றார்கள்... பார்போம் இந்த படம்  எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்போம்..




=============
மிக்சர்...
வெள்ளிக்கிழமையில் இருந்து மனைவிக்கு விஷ ஜுரம் நேற்று வரை தொடர்ந்தது இன்று பராவாயில்லை... வேலைக்கு லீவ்போட்டு விட்டார்....குழந்தையோடு அவரையும்  பார்த்துக்கொண்டதால் எங்கேயும் நகர முடியவில்லை...அதனால் இணையம் பக்கம் சில நாட்களாக வர முடியவில்லை...போன் செய்து ஏன் எழுதவில்லை? என்ன காரணம்? என்று போனில் உரிமையோடு விசாரித்துக்கொண்டு இருந்த, வாசக நண்பர்களுக்கு எனது நன்றிகள்.. என்ன எழுதி கிழிச்சோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.. நிறைய நலம் நாடும் நண்பர்கள் கிடைத்து இருக்கின்றார்கள் அது போதும்.
‘=================
வீட்டில் உடம்பு சரியில்லாத போது குட்டிடின் மற்றும் வசக நண்பர் குறும்பழகன் போன்றவர்கள் ஒரே நேரத்தில் வீட்டிற்க்கு வந்தார்கள்..மனைவிக்கு ஜுரம் என்பதால்  ஒரு நல்ல காப்பி போட்டு கூட கொடுக்க முடியவில்லை... இருக்கும் பாலில் தண்ணீர் விளாவி காப்பி போட்டு கொடுத்தேன்.. டேஸ்ட் சகிக்க்லை.. நண்பர்களே மன்னிச்சு...
====================


நிறைய ஆராய்ச்சி மாணவர்கள்.. மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.. இந்த தளத்தை வாசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. மின்சாரம் தயாரிக்க அணு மின்சாரம், நீர் மின் உற்பத்தி, காற்றலை மின்சாரம்,அனல்மின் உற்பத்தி என்ற இந்த நான்கு வகைகளில் மட்டுமே நாம் மின்சாரத்தை தயாரித்து பெருகின்றோம்..எனது நண்பர் சுபாஷ்...இதே பூமியில் இருக்கும் வேறு ஒரு ஆற்றலை பயண்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று எனக்கு விளக்கினார்.. இது பத்து வருடங்களாக அவர் ஆராய்ச்சி செய்து உருவாக்கியது.. அந்த ஆராய்ச்சி பற்றி  சாதகபாதகங்களை  பற்றி விவாதித்து மேலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போகவும் அதுக்கு மினியேச்சர் செய்ய 5 லட்ச்சத்துக்கு மேல் பொருட் செலவும், பொருட்களும் தேவை .அது ஒரு புறம் என்றால் அப்துல்கலாம் போன்ற ஒரு பெரிய ஆராய்ச்சியாளரை முதலில் சந்தித்து அதனை பற்றி விளக்கி அந்த ஆராய்சியை அடுத்தகட்டத்துக்கு  எடுத்து போக விரும்புகின்றார். அது மட்டும் அல்லாது அதன் சாதக பாதகங்களை விவாதித்து அடுத்த கட்டத்துக்கு தனது ஆராய்சியை எடுத்து போகவேண்டும் என்று நினைக்கின்றார்...999 முறை பல்பு கண்டு பிடிக்க எடிசன் தோற்று போனது போல போகலாம் அல்லது ஜெயிக்கலாம்...அப்படி ஜெயித்தால் மின்சாரத்தில் நாம் தன்னிறைவு அடைய முடியும்...யாரை அனுகுவது, எப்படி பேட்டன் வாங்குவது? போன்ற விஷயங்கள் அவருக்கும் தெரியவில்லை... வழிகாட்ட விருப்பம் இருக்கும் மாற்று மின்சக்தியில் நம்பிக்கை உள்ள ஆராயச்சியாளர்கள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்..இது பற்றி விரைவில் தனி பதிவு எழுதுகின்றேன்.
====================
இந்தவாரகடிதம்.
அண்ணாவுக்கு வணக்கம்,

பெயர்: சதீஷ் முருகன்
தொழில்: மென்பொருள் கட்டுமானம்
வயது: 25
இது என் முதல் மடல் உங்களுக்கு (சற்றே சுயநலத்தோடு). உங்களின் தேவதை நலம் என்று நம்புகிறேன்.

நான் சில இடங்களில் சிறுவர்கள் பட்டம் விடுவதையும் அதில் சில நூல் அறுந்து வெட்ட வெளியில் நரம்பு நூல்களோடு தொங்குவதையும் கண்டேன். தயவுசெய்து பட்டம் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டால் மக்களுக்கு உதவும். இதை காவல்துறைக்கு எடுத்து செல்வதும் நலம் பயக்கும். தயவு செய்து இதில் கவனம் செலுத்தி மக்களின் உயிரை காக்குமாறு வேண்டுகிறேன். நமக்கு பட்டம் பற்றிய படிப்பினை ஏற்கனவே உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.



இதை புதியதலைமுறை செய்திக்கும் அனுப்பியுள்ளேன்.

நன்றி,
சதீஷ் முருகன்
=============
அன்பின் சதிஷ் ஏற்கனவே இதுபற்றி ஒரு பதிவு எழுதி இருக்கின்றேன்..மெரினாவில் ஒரு காத்தாடியின் மாஞ்சா கயிறு என்னையும் பதம் பார்த்தது.. மயிரிழையில் தப்பித்தேன்.  நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
=====================
மை கிளிக்ஸ்

கடந்து போன ஒரு மழைநாளில் இருள் மேகங்கள் போரூர் சிக்னல் அருகே வெகுவேகமாய் கடந்து போய்க்கொண்டு இருந்த போது சூரியபகவான் கிடைத்த கேப்பில் ஆசி வழங்கிய போது சட்டென என் கேமரா மொபைலில் கிளிக்கினேன்...
==============
பிலாசபி பாண்டி...
உ‌ண்மையாந‌ட்பஆரோ‌க்‌கிய‌மபோ‌ன்றது. அதஇழ‌‌க்கு‌மவரஅத‌னம‌தி‌ப்ப நமக்கு தெ‌ரிவ‌தி‌ல்லை.
 =========
 நான்வெஜ்18+

எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று இருக்கின்றது.. காரணம் எந்த நிமிடத்திலும் அவைகள் தேவைபடலாம்..


1,ரெஸ்யூம்
2,பாஸ்போர்ட்
3,காண்டம்

===========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

19 comments:

  1. உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ இல்லைன்னா இன்னும் நாலு வருசத்துக்கு தமிழ்நாடு நிலையை நினைச்சி பார்ககவே பயமா இருக்கு..எனக்கு தெரிஞ்சி தமிழ்நாட்டை வழி நடத்துவது.. அல்லது ஆட்சியை நடத்துவது உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமுதான் என்று நினைக்கின்றேன்.. //////?????????

    ReplyDelete
  2. //இப்ப இரண்டு மணிநேரத்துக்கு பதில் அஞ்சு மணிநேரம் தென்மாவட்டத்துல மின்சாரம் இல்லை....அனுபவிங்கடே..//திருச்சில ஏழு மணி நேரம் பாஸ்

    ReplyDelete
  3. புகைப்படம் நன்றாக இருந்தது

    ReplyDelete
  4. Hope your wife is in good health now. My Clicks is awesome

    ReplyDelete
  5. The one-man army, Traffic Ramaswamy is to be applauded for his efforts in taking up people's daily problems in the city. All NGOs and civil society should support him. Blog writers should also encourage him. While Subramaniam Swamy is fighting corruption legally at the centre, Traffic Ramaswami is doing yeoman service to city populace.

    ReplyDelete
  6. எதிர்பார்க்கவில்லை அண்ணா என் மடல் வெளியிடப்படும் என்று. (நம்பிக்கையில்லை என கொள்ள வேண்டாம்). நன்றி...
    என்றும் அன்புடன்
    சதீஷ் முருகன்
    நம் ஈழம்

    ReplyDelete
  7. அண்ணி விரைவில் நலம் பெற கடவுளை நாடுகிறேன். உங்களுக்கு சமையல் நன்றாக வருமோ? வந்தால் ஒரு புடி புடிக்கலாம் என்று தான் (காபி வேண்டாம் அண்ணா) :):):)

    ReplyDelete
  8. அன்புடன் நண்பருக்கு வணக்கம்
    தங்களின் நண்பர் சுபாஷ் ..ஐ சென்னை L.RAMP,IC&SR Complex,.I.I.T.,Adayar, chennai.
    தொடர்பு கொள்ள சொல்லுங்கள் அங்கு இது போன்ற கண்டிபிடிப்பளர்களை உக்குவிக்கவும் பண உதவியும்
    உண்டு .. கோடி கணக்கில் பணம் சும்மா தூங்குகிறது..

    ReplyDelete
  9. //ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆறுமாசத்துல மின் தடையை சரி செஞ்சிடுவாங்க குஜராத்துல பேசி மின்சாரம் வாங்கி தமிழகத்தை ஜொலிக்க வச்சிடுவாங்கன்னு குதிச்சிகிட்டுகடந்தானுங்க...கடந்த ஆட்சி காலத்துல இரண்டு மணி நேரத்துக்கு கட் பண்ணாங்க.. இப்ப இரண்டு மணிநேரத்துக்கு பதில் அஞ்சு மணிநேரம் தென்மாவட்டத்துல மின்சாரம் இல்லை....அனுபவிங்கடே..//

    U correctly said...

    when J took charge she told after 6month power will not go because power will buy from Gujarat, but she not did this and she increased MLA salary and gave LAPTOP to all MLA.MLA are poor peoples?? Funny...THINK!!!
    In this 6month can u say any good news she(JAYALALITHA) did??
    I agree DMK did wrong but they not play with poor peoples.
    So better any other new good person will lead us!!!(???)

    ReplyDelete
  10. //ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆறுமாசத்துல மின் தடையை சரி செஞ்சிடுவாங்க குஜராத்துல பேசி மின்சாரம் வாங்கி தமிழகத்தை ஜொலிக்க வச்சிடுவாங்கன்னு குதிச்சிகிட்டுகடந்தானுங்க...கடந்த ஆட்சி காலத்துல இரண்டு மணி நேரத்துக்கு கட் பண்ணாங்க.. இப்ப இரண்டு மணிநேரத்துக்கு பதில் அஞ்சு மணிநேரம் தென்மாவட்டத்துல மின்சாரம் இல்லை....அனுபவிங்கடே..//

    U correctly said...

    when J took charge she told after 6month power will not go because power will buy from Gujarat, but she not did this and she increased MLA salary and gave LAPTOP to all MLA.MLA are poor peoples?? Funny...THINK!!!
    In this 6month can u say any good news she(JAYALALITHA) did??
    I agree DMK did wrong but they not play with poor peoples.
    So better any other new good person will lead us!!!(???)

    ReplyDelete
  11. news about mancha kathadi is much needed so many people had been affected

    ReplyDelete
  12. அண்ணி விரைவில் நலம் பெற கடவுளை நாடுகிறேன்.

    ReplyDelete
  13. http://en.wikipedia.org/wiki/Earth_battery

    Neengal kurippiduvathu ithuvaa?

    ReplyDelete
  14. அன்புடன் நண்பருக்கு வணக்கம்
    தங்களின் நண்பர் சுபாஷ் ..ஐ சென்னை L.RAMP,IC&SR Complex,.I.I.T.,Adayar, chennai.
    தொடர்பு கொள்ள சொல்லுங்கள் அங்கு இது போன்ற கண்டிபிடிப்பளர்களை உக்குவிக்கவும் பண உதவியும்
    உண்டு .. கோடி கணக்கில் பணம் சும்மா தூங்குகிறது.. // ஹமரகானா சார் தகவலுக்கு மிக்க நன்றி.... சார்...

    ReplyDelete
  15. கருத்துக்களை பகிர்நதுகொண்ட அத்தனை நணபர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner