The River Murders/2011 ஆற்றங்கரை கொலைகள்..அந்த காலத்துல புள்ள பெத்துக்கனதுக்கு யாரும் அஞ்சவேயில்லை... வத வதன்னு பெத்துக்குவாங்க.. இந்த அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அப்ப இல்லை..
அதனால இயற்கை உத்துதலை அவர்களால் எதுவும் செய்ய முடியலை...அதனால  அதிகபடியான பிள்ளைகளை  பிறப்பதை தவிர்க்க முடியலை....


பெரிய உயர் பதவியில் இருக்கும்  பெரிய மனுசன் அவர்....... பழக்காலத்து ஆளு... அவருகிட்ட பேசிகிட்டு இருந்தப்ப சொன்னாரு.. எப்ப காண்டம்னு ஒன்னு கண்டுபிடிச்சானுங்களோ? அப்பதான் ஆம்பளைங்களும், பொம்பளைங்களும் அதிகமா பாதை மாறினாங்கன்னு... சொன்னார்...

கர்ப தடுப்பு முறை வந்த பிறகு.. குடும்பம் மற்றும் சமுகத்தின் மீது பயம் இருந்த காரணத்தால்  ஒழுக்கமா இருந்தாங்க.. ஆனா காண்டம் கண்டுபிடிச்சி பொதுமக்கள் பயண்பாட்டுக்கு வந்த பிறகு... அவுங்களுக்கு ஒரு சேப்ட்டி கொடுத்த காரணத்தால் அவுங்க யாரோடவும் தைரியமா தொடர்பு வச்சிகிட்டாங்கன்னு சொன்னாரு..  அதே போல  தெனமும் பெண்களை நுகரும் ஆண்களுக்கு பர்சில் காண்டம் வச்சிகிட்டு அவுங்களும் கட்டுக்கடங்காம களத்துல இருங்கனாங்கன்ன்னு சொன்னார்...அவர் சொன்ன அந்த லாஜிக்கான கூற்றில் உண்மை இல்லாம இல்லை...

===============
படத்தோட ஒன் லைன்...

நெற்றிக்கண் ரஜினி கேரக்டர்  எப்படின்னு எல்லாருக்கும் தெரியும்.. அப்படி ஒரு அப்பா.... எதை பத்தியும் கவலை படாம எல்லாபொண்ணுங்க கூடவும் தொடுப்பு வச்சிகிட்டா என்ன ஆகும்?? அவனால்  பாதிக்கபட்ட அவன் குடும்பத்தாரோட நிலைமை என்னாகும்  என்பதே படத்தோட அவுட் லைன்..

==============

The River Murdersபடத்தின் கதை என்ன ??

ஜாக் (Ray Liotta ) ஒரு டிடெக்டிவ் அவன்  வசிக்கும் ஆற்றங்கரை ஓரமா?  பெண்கள் கொடுரமா கொலை செய்யப்படுகின்றார்கள்..இரண்டாவது கொலையில் இருந்து நடக்கும் பல கொலைகள் எல்லாம் ஜாக் எந்த பெண்களிடம் எல்லாம் தொடர்பு வச்சிகிட்டு இருந்தானோ..அந்த பெண்கள் எல்லாம் கொலை செய்யப்படறாங்க..


இந்த  தொடர் கொலைகள் ஏன் நடக்குதுன்னு ??கண்டுபிடிக்க எப்பிஜ ஏஜென்ட் கிரிஸ்டன் ஸ்லேட்டர் வருகின்றார்... அவரால் அந்த கொலைக்காரனை கண்டு பிடிக்க முடிந்ததா? ஏன் கொலைகள் நடக்கின்றன? என்று அறிய வெண்திரையில் இந்த படத்தை பாருங்க..


படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


நல்ல கான்செப்ட்.... அது படம் முடியும் போதுதான் தெரிகின்றது...தொடர் கொலைக்கான காரணம் கொஞ்சம் வித்யாசம்தான்.


பல கொடுர கொலைகள் நடந்தாலும் படத்தில் பரபரபப்பு ஏனோ மிஸ்சிங்..

ஆனா  அந்த கொலைகள் நடக்கும் ஆற்றினை மிக அழகாக பல கோணங்களில் பதிவு செய்து இருக்கின்றார்கள்.

கிளைமாக்ஸ் சற்று உருக்கம் தான்..

எப்பிஐ எல்லாம் வந்த பிறகும்  கூட படம் கொஞ்சம் ஸ்லோதான்..

கொலை செய்யப்பட்டு கிடக்கும் பெண்களுக்கு போட்டு இருக்கும் மேக்கப் அருமை..

===============
படத்தின் டிரைலர்..


======================
படக்குழுவினிர் விபரம்.

Directed by     Rich Cowan
Produced by     Rich Cowan
Richard Salvatore
Daniel Toll
Steve Anderson
Written by     Steve Anderson
Starring     Ray Liotta
Ving Rhames
Gisele Fraga
with Melora Walters
and Christian Slater
Music by     Pnar Toprak
Cinematography     Dan Heigh
Editing by     Jason A. Payne
Distributed by     Sony Pictures Entertainment
Release date(s)     July 1, 2011
Country     United States
Language     English

==================
பைனல் கிக்..


ச்சே ஒரு கடுப்பு மயிரா இருக்க என்ன செய்யறதுன்னே தெரியலை..ஏதாவது படம் பார்ககலாமான்னு நினைக்கும் போதோ? அல்லது இரண்டு  லார்ஜ் ஏறியும் ஒரு சுரத்தையும் இல்லைன்னு நினைக்கும் போது சும்மா உறுகாய் போல தொட்டுக்க, இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா பருங்க... இந்த படம் டைம்பாஸ் படம்...சென்னை மூவீஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது.


==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

 1. விமர்சனம் ரொம்ப அருமை சார்..விதவிதமா படங்களை அறிந்துக்கொள்வதற்கும் பார்ப்பதற்கும் பல நாட்களாகவே நீங்கள் எனக்கு ஒரு இன்ஸ்பிரஷன்னு சொல்லலாம்..மிக்க நன்றி.

  ReplyDelete
 2. netrikkan apdinnu sollitinga...paiyyan appan kooda padukkara ponnungala pottu thallaran correcta-a thala

  ReplyDelete
 3. வணக்கம் சார்.. ரொம்ப மிஸ் பண்னேன் சார் உங்களையும் உங்க பதிவையும். இப்ப நா எங்க விட்டனோ அங்க இருந்து படிச்சிட்டு வரேன்.. மறுபடியும் இங்க வந்து உங்க பதிவுகளை படிக்கறதுல ரொம்ப சந்தோஷம்...

  ReplyDelete
 4. நன்றி குமரன்
  நன்றி புல்லுருவி... எப்படிய்யா கண்டுபிடிக்கறிங்க...
  சதிஷ்மாஸ் எப்படி இருக்கிங்க??, நலமா?, எங்க ஆளையே கானோம்..??

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner