இரண்டாம் போரை மையமாக வைத்து பல படங்கள் வந்து விட்டது.. இந்த படம் ஜெர்மனிய ராணுவவீரனின் காதலை சொல்லுகின்றது..
கவிஞன் என்பவன் மென்மையானவன் என்பதையும் போர் சூழலில் அவன் நிலைப்பாடு என்ன என்பதையும் படத்தில் பதிவு செய்து இருக்கின்றார்கள்..
===============
The Poet-2007 படத்தின் ஒன் லைன்...
இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனிய ராணுவ வீரனுக்கும் யூத பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் இந்த படத்தின் ஒன்லைன்.
============
The Poet-2007படத்தின் கதை என்ன??
கதை 1939ல் இரண்டாம் உலக போரின் போது போலந்தில் நடக்கின்றது.. ஜெர்மானிய படைகள் யூதர்களை தேடித்தேடி சூட்டு கொள்கின்றது...ஆஸ்கார் (Jonathan Scarfe ) ஜெர்மானிய படைதளபதியின் மகன்.. அவனும் ஒரு போர் வீரன்... என்ன ஓய்வு நேரங்களில் கவிதை எல்லாம் எழுதுவான்..ஒரு பனிப்புயலில் யூதப்பெண் (Nina Dobrev)ரீச்சலை காப்பாற்றுகின்றான்..
இருவருக்கு காதல் மலர்கின்றது.. ஆனால் ரீச்சலுக்கு (Zachary Bennett) பெர்னெட் என்பவனுக்கு நிச்சயம் ஆகி விடுகின்றது..ஆனால் ரீச்சல் ஆஸ்காரைதான் காதலிக்கின்றாள்..ஜெர்மனிய ராணுவம் யூதர்களை கொல்லுகின்றது.. ஆஸ்கார் ரீச்சலை காப்பாற்றி, பெர்னெட் உடன் அனுப்பி வைக்கின்றான்...ரீச்சல் கர்பமாகின்றாள்..
இது பெர்னெட்டுக்கு தெரியவருகின்றது இருப்பினும் ரீச்சல் மேல் உள்ள காதல் காரணமாக திருமணம் செய்து கொள்கின்றான்..ஆனால் ஒரு கட்டத்தில் ஆஸ்கார் அவளை தேடி வருகின்றான்..யாரிடம் அவள் வாழ்க்கை தொடருகின்றது என்பதை வெண்திரையில் பாருங்கள்.
=======================
படத்தின் சுவாரஸ்யங்கள்..
போரின் சோகங்களையும் இடப்பெயர்வையும் மிக அழகாக பதிவு செய்யும் அதே வேளையில் இந்த படத்தை விமர்சகர்கள் குத்தி கிழித்து நாற அடித்து இருக்கின்றார்கள்..
தனக்கு நிச்சயதார்த்தமான பெண் கர்பமாக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்வதும் அந்த குழந்தைக்கு தானே தகப்பனாக இருப்பதாக சொல்வதில் பெர்னெட் கேரக்டர் உயர்ந்து நிற்கின்றது-..
ஆனால் பெர்னெட் போல பல கேரக்டர்களை நான் பார்த்து இருக்கின்றேன்..ஒரு அழகான பெண்ணுக்காக எதையும் செய்வார்கள்..கடைசிவரை ஒரு சின்ன உதட்டு முத்தம் கொடுக்காமல் கூட கடைசி வரை பூஜித்து உயிரையும் தருவார்கள்..
ஆஸ்கார் அம்மா கேரக்டர் மிக அழகாக சித்தரிக்க பட்டு இருக்கின்றது..
மென்மையான ஆளான ஆஸ்கார் வெறித்தனமாக பாக்சிங்கில் மோதி கையால் அடித்தே நக்கல் விட்ட ஒரு படை வீரனை சாகடிக்கின்றான்..
செஸ் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கும் போது, குழந்தை அழுவதால் டிஸ்டர்ப்பாக இருப்பதால் ஜெர்மனிய வீரர் அதனை கொல்லும காட்சி நெஞ்சை பதை பதைக்க வைக்கும் காட்சி....
படத்தில் Nina Dobrev வரும் காட்சிகள்.. ரசிக்கலாம் அந்த அளவுக்கு கொள்ளை அழகு...
இந்த படம் அமெரிக்காவில் ஹார்ட்ஸ் ஆப் வார் என்ற பெயரில் வெளியாகியது....
=====================
படத்தின் டிரைலர்...
================
படக்குழுவினர் விபரம்...
Directed by Damian Lee
Produced by Lowell Conn
Damian Lee
Written by Jack Crystal
Starring Nina Dobrev
Colm Feore
Roy Scheider
Kim Coates
Daryl Hannah
Music by Zion Lee
Steve Raiman
Produced by Lowell Conn
Damian Lee
Written by Jack Crystal
Starring Nina Dobrev
Colm Feore
Roy Scheider
Kim Coates
Daryl Hannah
Music by Zion Lee
Steve Raiman
Cinematography David Pelletier
Editing by Joseph Weadick
Studio Alchemist Entertainment
Noble House Film & Television
Distributed by Image Entertainment (USA)
American World Pictures (AWP) (non-USA)
Running time 100 min.
Country Canada
Language English
Budget $CAD11,000,000 (estimated)
=======================
பைனல்கிக்..
இந்த படத்தை டைம்பாஸ் படம் லிஸ்ட்டில் சிலபேர் வைக்கலாம்.. ஆனால் எனக்கு இஇந்த படத்தை பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் வைக்கலாம் என்று கருதுகின்றேன்.. ரசனை வேறுபாடு இருக்கலாம்.. எனக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது.. சென்னை மூவிஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது.
=====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
thanks friend
ReplyDeleteபார்க்க ஆசை...
ReplyDeleteவிமர்சனமும் ஈர்த்திருக்கிறது...நன்றி!
கருத்துக்கு நன்றி அருள் மற்றும் திலுக்ஷனா..
ReplyDelete