முதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.




அன்புள்ள முதல்வர் ஜெயலலிதா  அவர்களுக்கு,

வணக்கம் வாழிய நலம்...


தமிழகத்தை  நீங்கள் மூன்றாவது முறையாக ஆள்கின்றீர்கள்.. வாழ்த்துகள்..


நான் கடலூர்காரன்....


இப்போதைக்கு சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனை காரணமாக  ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. 1982ல் எங்கள் ஊர் கடலூரில் எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலராக உங்களை நியமித்து, உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தார்... 

அன்றைய தின்ம் நீங்கள் ஊர்வலமாக சென்று மாநாடு நடந்த மஞ்சை நகர் மைதானத்தை அடைந்தீர்கள்... எங்கள் ஊர் கூத்தப்பாக்கத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் இருந்துதான் உங்கள் ஊர்வலம்  தொடங்கியது...




அப்போதும் சசிக்கலாவுடன்தான் நீங்கள் அந்த பயணத்தை தொடங்கினீர்கள்..நான் சிறுவன் என்பதாலும் அந்த தொண்டர்படை கூட்டம் போன்றவற்றாலும்.எங்கள் ஊருக்கு திடிர் என்று ஒரு ஸ்டார் அஸ்தஸ்த்து கிடைத்து விட்ட காரணத்தாலும், எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி உற்சாகம்... உங்கள் அரசியல் பயணம் அந்த புள்ளியில் இருந்துதான் தொடங்கியது...அந்த இடத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்..அப்போது உற்சாகமாக கையசைத்து நான் உட்பட எங்கள் ஊரே உங்களை வழி அனுப்பி வைத்தது...


அதே மாநாட்டுக்கு என் ஆயா அழைத்து கொண்டு போனதால் நான் அதில் கலந்து கொண்டேன்..கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் எல்லாம் ஆடினார்கள்..நீங்களும்  முதல்நாள் நிகழ்ச்சியில் ஆடினீர்கள் என்று நினைக்கின்றேன்..


அதன் பிறகு நீங்கள் பல எற்ற இறக்கங்களையும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்து முதல்வராக வெற்றிவாகை சூடினீர்கள்..

இதோ மூன்றாவது முறையாக தமிழகத்தில்  முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள்..

உங்களை பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்... நீங்கள்  முதலைமைச்சராக இருந்த போது இதே சென்னையில் உங்களால் ஏற்படுத்தப்பட்ட டிராபிக்கில் மூச்சு திணறிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்..

பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு  வாரத்துக்கு ஒரு நாள் உங்களிடம்  உரையயாடுகின்றேன் என்று சொன்ன போது.. நெகிழ்ந்து போய் நீங்கள் மாறிவிட்டதாக சொன்னார்கள்..ஆனால் நீங்கள் மாற வாய்ப்பே இல்லை என்பதை நிரூபித்து விருகின்றீர்கள்.



நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும், தைரியமான முடிவுகள் என்று பலர் சொல்லக்கேட்டு இருக்கின்றேன்.. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை..


அப்படி உண்மையில் உங்களுக்கு பெரிய கட்ஸ் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம் கடைசி வரை சமச்சீர் கல்வியை அமுல்படுத்தாமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளலாம்...


ஆட்சியும் ,அதிகாரமும் ஆமாம் சாமி அமைச்சர்களும் இருக்கும் போது எந்த முடிவையும் நீங்கள் தடலடியாகவே எடுக்கலாம்..ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் நீங்கள்.. இதை தைரியமான முடிவு என்று சொன்னால் நகைப்பாக இருக்கின்றது..அதிகாரம்  என் கையில் இருந்தாலோ அல்லது சுப்பன் குப்பன் யார் கையில் அதிகாரம் இருந்து இருந்தாலோ..மனசாட்சியை கொஞ்சம் இழந்து இருந்தால் போதும், அப்படி ஒரு முடிவுகளை திடும் என்று யார் வேண்டுமானலும் எடுக்கலாம்..


ஆனால் அதே அரசு ஊழியர்கள் வாரிக்கொடுத்த கலைஞரை இந்த தேர்தலில் தூக்கி தூர எரிந்தார்கள்..காரணம் கலைஞரின் வயதை மனதில் வைத்து திமுகவின், வட்டம் மாவட்டம் என்று பலர் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார்கள்.. வாரிசு அரசியல், எல்லாம் பொதுமக்களின் எரிச்சலை ஏற்ப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அதை மனதில் வைத்து, உங்களுக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச்செய்தார்கள்..


உங்களை வெற்றிபெறச்செய்தது நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கைதான் ஆனால் நீங்கள் செய்து கொண்டு இருப்பது மக்கள் முகம்சுளிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றது..





மூன்றாவது முறையாக தமிழகத்தை  நீங்கள் ஆளும் ஆட்சியில் உங்கள் மீதான விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல...

ஆனால் மூன்றாவவது முறையாக பதவி ஏற்றதில் இருந்து நீங்கள் பொது மக்களின் வருத்தங்களை அதிகம் சம்பாதித்து கொள்ளுகின்றீர்கள்..


ஹரி ஓம் என்று சம்ச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாதகாலம் பிள்ளைகளை முடக்கினீர்கள்...திரும்ப திரும்ப உச்சநீதிமன்றம் விடாமல் சென்றீர்கள்..உச்சநீதி மன்றத்தின் கதவை அதிகம் முறை தட்டியது உங்கள் ஆட்சியில்தான் என்று நினைக்கின்றேன்...ஆனால் உச்சநீதிமன்றம் உங்களுக்கு குட்டு வைத்தபின்தான் நீதிக்கு தலைவணங்குவதாக சொன்னீர்கள்...ஆனால் இன்னும் சரியான படி சமச்சீர்கல்வி பிள்ளைகளுக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்பதே உண்மை..


அடுத்ததாக வரி உயர்வு 12 பர்சென்ட் வாட் வரி விதிப்பை 14 சதவீதமாக மாற்றி உத்தரவிட்டீர்கள்.. இதில் கொடுமை 4 பர்சென்ட் வரி விதிப்பில் இருந்த பொருட்களை எல்லாம் 14 பர்சென்ட்க்கு உயர்த்தினீர்கள்..

புது தலைமைசெயலகம் வேண்டும் இடம் போறவில்லை என்று முதல் முதலாக கோரிக்கை எழுப்பியது நீங்கள்தான்.. ஆனால் என்னவென்றே தெரியவில்லை இருக்கும் கட்டிடத்தை இடித்து நாஸ்த்தி பண்ணுவதில் அப்படி உங்களுக்கு என்ன  சந்தோஷமோ? ..அல்லது உங்களுக்கு ஐடியா கொடுக்கும் அல்லக்கைகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது..


நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் போய்ஸ் தோட்டத்து வீட்டில் வேறு ஒருவர் குடி புக அனுமதிப்பீர்களா? அது போலத்தான் ராணிமேரி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். நீங்கள் பின் வாங்கினீர்கள்.. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்...???





இந்த முறை ஆட்சிக்கு வந்தஉடன் வழக்கம் போல உங்கள் காழ்புணர்ச்சி அரசியலை கையில் எடுத்துக்கொண்டீர்கள்..



1200 கோடி செலவில் கட்டப்பட்ட புது தலைமைசெயலகத்தை மருத்தவமைனையாக மாற்ற போகின்றேன் என்று ஆணை பிரப்பித்தீர்கள்..அந்த கட்டிடத்தின் மேல் உங்களுக்கு காழ்புணர்ச்சி வரக்காரணம் ..சிம்பிள் கலைஞர் கட்டியது என்பது மட்டுமே காரணம்.. இதில் ஒரு விஷயம் நீங்க கவனிக்க வேண்டும்.. அவர் கட்டிய பாலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை..

கலைஞர் திறந்து வைத்த பாலங்கள்  சென்னை முழுவதும் நிறையவே இருக்கின்றன..ஏன் இப்போது ஆட்சிக்கு வந்ததும் நிறைய பாலங்கள் நீங்கள் திறந்து வைத்தீர்கள்.கோயம் பேடு பேருந்து நிலையத்தை திறந்து விட்டு நான் திறந்தேன் என்ற பெரிய போர்டு வைத்துக்கொண்டீர்களே  அது போலத்தான்...ஆனால் கோயம் பேடு பேருந்து நிலையம் யாரால் உருவாக்கப்ட்டது என்று எல்லோருக்கும் தெரியும்...அது உங்களுக்கு தெரியும்... முடிந்தால் அதையும் மாற்றுங்கள்..



இப்போது 180 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவின் பெரிய நூலகம் மருத்துமனையாக மாற்றப்போவதாக அறிவித்து  இருக்கின்றீர்கள்..


உங்கள் வீட்டை நீங்கள் வாழ யோசித்து யோசித்து கட்டி இருப்பீர்கள்..திடிர் என்று அதில் சர்வதேச தரத்தில் ஓட்டல் அமைக்க முடியுமா?? கிச்சனில் எப்படி பெட்ரூம் அமைக்க முடியாதோ அது போலத்தான்  தலைமைசெயலகம், மற்றும் அண்ணா நூற்றாண்டு நுலகத்தை மருத்துவமணையாக மாற்ற முடியாது... 


நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் முதல்வர்  நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் இதனை கண்டிப்பாக வலுக்கட்டாயமாக மாற்றலாம்.. ஆனால் அந்த நிறைவு வராது என்பதே உண்மை...பல கோடி மக்கள் வரிப்பணம் விரயம் செய்து நீங்கள் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்...வாழ்த்துகள்.. இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது...



 குழப்பில் உப்பு அதிகம் போய்விட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடும் கதை போல பேசுகின்றீர்கள்.. 

மீறி திமிரி தாரளமாக வீம்புக்கு செய்யலாம்... அதை ஆதரிக்க சில அல்லக்கைக்ள் இருக்கின்றார்கள்.. 

வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு  உங்களின் துதி பாடிகள் வேண்டுமானால் நடுநிலை போர்வையில் புதிய தலைமைசெயலக கட்டிடத்தை எண்ணெய் சட்டி கட்டிடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம்.. எங்களுக்கு அது பெரிய விஷயம்..

சென்னையில் தலைநகரில் நீங்கள் இருந்து கொண்டு  பல கோடி செலவு செய்த எந்த கட்டிடத்தையும் நேரில் போய் பார்க்காமல், அதில் எந்த அளவுக்கு உள்கட்டுமானபணி நடந்து இருக்கின்றது.. என்று அறிந்துக்கொள்ளாமல் திடும் என்று மாற்றுவது சாத்தியமா? என்று நீங்கள் நேரில் ஒரு முறை பார்த்து விட்டு இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது...

ஆனால் கலைஞர் கட்டினார் அது மட்டும்தான் உங்கள் கண்களை உறுத்துகின்றது அல்லவா??


இப்போதும் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை.. நேரில் போய் பாருங்கள் தலைமைசெயலகத்தை, நூற்றண்டு விழா நூலகத்தையும்...கலைஞர் எந்த கட்டடி வாசலிலும் காவல் காத்துக்கொண்டு இருக்க போவதில்லை...





உங்கள் ஈகோவுக்கு மக்களின்  வரிப்பணத்தை காலி செய்ய போகின்றீர்கள்..மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய அவ்வளவு பேராசையா?

ஸ்பெக்ட்ரமில் அரசுக்கு வருமான இழப்பு என்றுதான் ராஜாவும் கனிமொழியும் சிறையில் இருக்கின்றார்கள்..

நீங்களும் அதைத்தான் செய்கின்றீர்கள்..

200கோடிக்கு வீம்புக்கு சமச்சீர்கல்வியை எதிர்க்க பழைய புத்தகங்களை அச்சடித்தீர்கள்..


1200கோடி தலைமைசெயலகத்தை வீணாக்கி இருக்கினறீர்கள்..

180 கோடி  செலவில் கட்டப்பட்ட அண்ணா நுற்றாண்டு நூலகம்..

உங்கள் ஈகோவுக்காக எல்லாம் வீணாக்கபடுகின்றது..

இதை மாற்ற ஆகும் செலவு எத்தனை கோடி?? அதில் இருக்கும் பொருட்கள் விரயம் என்று கணக்கு போட்டால் தலை சுற்றுகின்றது...


நீங்கள் ஆட்சின்னு வந்து ஒரு வருடம் கூட ஆகிவில்லை...1500 கோடி ருபாய் வரிப்பணம் பாழ் செய்யது இருக்கின்றீர்கள்.

கட்டங்களை மாற்றுக்கின்றேன் இடிக்கவில்லை என்று நீங்கள் சொல்லலாம்..நீங்கள் அதையும் செய்வீர்கள்..அதனால்தான் இப்போதே சொல்லுகின்றோம்...


நம் நாடு செல்வம் கொழிக்கும் நாடு அல்ல...மக்களும் அப்படித்தான்...

முதல்வர் அவர்களே...பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் வெங்காயம் கடித்து பழைய சோற்றை  நீங்கள் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை பார்ன் இன் சில்வர் ஸ்பூன் நீங்கள்..ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல இன்னும் பல குடும்பங்கள் அப்படித்தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி பட்ட ஊரில் 1500கோடி பணத்தை விரியமாக்குவது எந்த வகையில் நியாயம்.??

கோடி கோடியாக கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்றால் நிருப்பித்து உள்ளே தள்ளுங்கள்..ஒரு கையெழுத்தில் ஒரு கட்டிடத்தையே மாற்றும் அதிகார சக்தி இருக்கும் உங்களுக்கு கலைஞர் அவர் ஆட்சியில் தவறு செய்து இருந்தால் இந்நேரம் அவர் மீது வழக்கு பதிந்து இருக்கலாமே...??? ஒரு வேளை  சட்டியில் எதுவும் இல்லையோ???





கலைஞர் கருணாநிதி மேல் வன்மம் என்றால் அவர் கடந்த ஆட்சியில் அடித்த தில்லுமுல்லுகளை வெளியே எடுத்து வாருங்கள் வழக்கு பதியுங்கள்... அதை விட்டு விட்டு பல பேர் இரவு பகல்  பாராமல் அரும்பாடு பட்டு மக்கள் வரிப்பணத்தில் கட்டிய அரசு கட்டடிடங்களை அதிகாரம் இருப்பதால் ஒரு கையெழுத்தில் மாற்றலாம் என்று  நினைக்கின்றீர்கள்..


போன ஆட்சியில் நிறைய  நல்லதிட்டங்கள் செய்தார்கள்.. மக்கள் வெறுப்பினை அமோகமாக சாகுபடி செய்தார்கள்.. வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்..அதனால்தான் சென்னை திமுகவின் கோட்டையாக இத்தனைநாளா இருந்தும், இந்த முறை பல நகராட்சிகளை அதிமுக கைபற்ற காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்..

ஆனால் நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ளாமல் நீங்களும் அதே தவறைத்தான் செய்கீன்றீர்கள்..

ஒரு அரசு ஊழியன் 60 வருடம் அவன் வகித்த பதவியில் நிலைத்து இருக்கலாம்..நீங்கள் 5 வருடம்தான்..அதை ஒரு முறை திரும்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..


நீங்கள் மிகபெரிய வல்லரசு நாட்டின் பிரதமரோ அல்லது அதிபரோ அல்ல.. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர்...அவ்வளவே..


மனிதனாக பார்த்தால் பிளாக் ஹோல்,மிகப்பெரிய அண்டவெளி,அதில் இருக்கும் துகளான சூரிய குடும்பம்,அந்த சூரிய குடும்ப துகளில் நாம் வாழும் பூமி, அந்த பூமியில் மூன்று பங்கு நீர், ஒரு பகுதி நிலப்பரப்பில்,இந்தியாவில்,தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கும் மிகச்சிறிய மைக்ரோ துகள்தான் நீங்களும் நானும் என்பதை மட்டும் மறந்து வீடாதீர்கள்..


ஆனால் இவ்வளவு சொன்னாலும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு விஷயத்தில் உங்களுக்கு காலம் எல்லாம் நன்றி சொல்ல நான் கடமைபட்டு இருக்கின்றேன்..இந்த விஷயத்தில் யார் எது சொன்னாலும் நான் உங்களை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்...அது சென்னையின் தாகத்தை போக்கியவர் நீங்கள்..

மழை நீர் சேகரிப்பின் மூலம் மெட்ரோ வாட்டர் லாரிகளின் இரைச்சல் சத்தத்தை சென்னையில் ஒடுக்கியவர் நீங்கள்தான்..இன்று தண்ணீர் பிரச்சனையில் சென்னை ஒரளவு தன்னிறவு அடைய உங்கள் அந்த அரசானை வாழ்நாள் முழுவதும் உங்கள் பேர்  சொல்லும்...விராணம் திட்டம் சாத்தியமே இல்லை என்று உதடுபிதுக்கினார்கள். ஆனால் நீங்கள் வசப்படுதினீர்கள்..திறமை இல்லாதவர் அல்ல நீங்கள்.. உங்கள் திறமை ஈகோவினால் வீணடிக்கபடுகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மை...


இது போல மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிறுபித்துகாட்டுங்கள்..தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள் அமைப்பேன் என்று சூளுரையுங்கள்..

ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுங்கள் .. அதைவிட்டு விட்டு பலர் வியர்வை சிந்தி இரவு பகலாய் உழைத்து உருவாக்கியதை உதாசினப்படுத்தி உருகுலைக்காதீர்கள்.. காரணம் ஒவ்வோரு கட்டிடத்திலும் உழைத்தவனின் வலிகள் இருக்கின்றது என்பதையும் உயிர்தியாகங்கள் இருப்பதையும் மறந்து வீடாதீர்கள்..


சென்னையில் அண்ணா சாலையில் அந்த பக்கம் போகும் போது எல்லாம் பொலிவிழந்து இருட்டில் 1200கோடியில் உருவாக்கப்பட்ட தலைமைசெயலகம் இருளில் மூழ்கி இருப்பதை நேரில் பார்க்கும் போது எல்லாம் நெஞ்சம் விம்முகின்றது..



கலைஞர் பெயரை இது போன்ற கட்டிடங்களை மாற்றி விடுவதால் அழித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.



இல்லை நான் கலைஞர் பெயரை வராலாற்றில் இருந்து அழித்து விட்டுதான் மறுவேலை என்று நீங்கள் விரும்பினால்...

கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தி விடுங்கள்..காரணம் கலைஞரின் சித்தப்பாதானே திருவள்ளுவர்...சமச்சீர் கல்வி புத்தகத்தில் அய்யன் வள்ளுவரின் புகைபடத்தை சலப்பன் டேப்பு போட்டு ஓட்டச்சொன்னவர்தானே நீங்கள்..இதை தமிழ்நாட்டில் மட்டுமே மிக தைரியமாக செய்ய முடியும்...நீங்கள் பிறந்து வளர்ந்த கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு இணையான  கவிஞர் சர்வஞர் மீது இப்படி எல்லாம் லேபிள் ஒட்டமுடியாது....கர்நாடகம் ஸ்தம்பித்து போகும்...


குமரியில் வள்ளுவர் சிலை இருக்கும் வரை கொள்ளை அடித்தரோ? குடும்ப அரசியல் செய்தாரோ?? அந்த சிலை இருக்கும் வரை கலைஞர் புகழ் காலமெல்லம் நிலைத்து நிற்கும்.. அதுக்கு என்ன செய்ய போகின்றீர்கள்..??


செய்தால் எதையும் சுத்தமாக செய்யுங்கள்.. பாரபடசம் கட்டிடங்களுக்கு மட்டும் வேண்டாம்..சென்னை பாலங்கள், வள்ளுவர் கோட்டம், என்று நிறைய கலைஞர் பெயர் சொல்ல நிறைய இருக்கின்றது...இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது.. உங்களை அசைக்க ஆளே இல்லை... 


இதுவரை உங்கள் பெயர்   சொல்லுவது போல ஏதாவது கட்டிட்ங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றதா? என்றால் எதுவும் எனக்கு தெரிந்து இல்லை...நான் சொல்லுவது பிரமாண்டமான கட்டிடங்கள், பாலங்கள்....இல்லை...நேரு விளையாட்டு அரங்கம்.. அதுகூட மத்திய அரசின் நிதியால் தெற்காசிய விளையாட்டு போட்டி நடக்கும் போது கொடுக்கபட்டு கட்டப்பட்டது....இடத்தை மட்டும் ஒதுக்கி கொடுத்தீர்கள்.. மாநில அரசு பணத்தில் உதாரணத்துக்கு புதியதலைமைசெயலகம்..,கிண்டி,கோயம்பேடு,பாடி போன்ற பெரிய மேம்பாலங்கள்.. மெட்ரோ ரயில்,தலைமைசெயலகம்,வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு மேம்பாலம் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள்.. சரி.. நேரு விளையாட்டு மைதானத்தை இரண்டு வருடத்தில் கட்டி முடித்தீர்களாமே?200 கோடி செலவில்  சென்னை அரசு பொது மருத்தவமணை  கட்டினீர்கள்..அதே போல 10 வருடத்தில் வேறு எதாவது பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டி இருக்கின்றீர்களா??

மேலே இருக்கும் படங்கள் புதியதலைமைசெயலவம் எப்படி உங்களால் இரவில் உதாசனபடுத்தபட்டு இருப்பதை தெரிவிக்கவே நான் புகைபடங்கள் எடுத்தேன்..பல பேர் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய கட்டிடத்தையும் பெரிய வளாகத்தையும் மனசாட்சி இருப்பவர் யாரும் இப்படி செய்யவே மாட்டார்கள்.. சாரி நான்  உங்களிடம் மனசாட்சி பற்றி பேசிவிட்டேன்.. மன்னிக்கவும்...



எங்கள்  ஊர் கூத்தப்பாக்கத்தில் உங்கள் அரசியல் பயண ஊர்வலம் தொடங்கிய போது உங்கள் வாகனத்தை கை அசைத்துக்கொண்டு துரத்திய படி ஓடி வந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்...நீங்கள் சர்ச் பார்க்கில் மெத்த படித்தவர்..நான் அப்படி அல்ல.. எனக்கு தெரிந்து இருப்பதை எழுதி இருக்கின்றேன்..



சடுதியில் மாறும் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இதில் எதுக்கு இவ்வளவு ஈகோ உங்களுக்கு என்று தெரியவில்லை...?? நான் நான் என்று நீங்கள் பேசுவதை தமிழகம் அறியும்...


கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன்.... எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டு...ஆனால் நீங்கள் வணங்கும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார் என்பதை மட்டும் மறவாதீர்கள்.



உங்கள் அமைச்சரவை சகா மரியம் பிச்சை,நீங்கள் நடத்திய எம்எல்ஏ பதவி ஏற்ப்பு விழாவில் கலந்து கொள்ள, திருச்சியில் இருந்து காலையில் சென்னைக்கு கார் எறும் போது, தான் இன்னும் ஐந்து வருடத்துக்கு  அமைச்சர் என்று நினைவில்தான் பயணப்பட்டு இருப்பார். ஒரு நொடியில் அவர் வாழ்க்கை மாறிப்போனதை நீங்கள் அறியாதவர் அல்ல...



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்...





நினைப்பது அல்ல நீ 

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

83 comments:

  1. Jaya, Mundravathu murai thaan aatchiyil irukkirar, thiruthi kollavum.

    ReplyDelete
  2. Well said Mr.Jockey
    You are reflected each and every one's thought

    ReplyDelete
  3. கலைஞர் அனுதாபியான என்னைப் போன்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான கடிதம்

    ReplyDelete
  4. // உங்கள் ஊருக்கு திடிர் என்று ஒரு ஸ்டார் ///
    // எற்ற இறக்கங்களையும் //
    // உங்களிடம் உரையயாடுகின்றேன் //
    // என்பதை நிரூபித்து விருகின்றீர்கள். //
    // அப்படி ஒரு முடிவுகளை திடும் என்று யார் //

    ReplyDelete
  5. தமிழகத்தை நீங்கள் மூன்றாவது முறையாக ஆள்கின்றீர்கள்..
    ---
    இதோ நான்காவது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள்..
    ---
    i think it is 3rd time ..

    ReplyDelete
  6. padikum podhu kashtama iruku. nalla nakka pudungikira mathiri soli irukinga. but aatha itha padikumaa nu therialie? oru 5 varushathuku eb connection kudukala nu ninaichuka vendiyathu thaan.

    ReplyDelete
  7. பிழை திருத்தம் செய்து விட்டேன் நண்பர்களே.

    ReplyDelete
  8. wonderful post. what i wanted you have written. Hope this reaches her and hope she will change and do the best to the people.
    karthik+amma

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Jakie,

    Its a pleasure to read this article. Unbiased and beautifully written. congratulations.

    ReplyDelete
  11. மிக உருக்கமாக முதல்வருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம். வெல் டன் ஜாக்கி!

    ReplyDelete
  12. மிக நன்றாக சொன்னிங்க ஜக்கி.

    ReplyDelete
  13. இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் சேர்க்க பாடுபட்டவர்களது உழைப்பும்,புத்தகம் வழங்கியவர்களின் நோக்கமும் கேள்விக்குரியாகப்போகிறதா அம்மா?

    ReplyDelete
  14. நன்றி ஆசானே திருத்திடேன்..நன்றி லக்கி..

    A Sivakumar,nandhavanam,K.P.RAJ,மதுரை அழகு,தமிழ் செல்வி,Devaraj, Maya ,maadhu , மிக்க நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  15. Sema sir... Nachunnu solli irukkinga..... Thanks...

    ReplyDelete
  16. வெல்டன் சேகர்... மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்ற தங்களின் குமுறலும், திறமை அற்றவர் அல்ல ஜெ, ஈகோதான் அவரை வீணடிக்கிறது என்பதும்... காய்தல் உவத்தல் இன்றி நடுநிலைமையுடன் எழுதியிருக்கிறீர்கள் என்பதற்கு நிரூபணம். இக்கட்டுரையை என் குரலாகவும் கருதுகிறேன். நன்றி.

    ReplyDelete
  17. Super Jackie. U r reflected each & every one's thought...

    ReplyDelete
  18. Super Jackie. U r reflected each & every one's thought...

    ReplyDelete
  19. ஜாக்கி! உங்கள் எழுத்து அபாராம்.. ஒரு சாமானியனாக ஆர்ப்பாட்டம் இல்லாத அப்பளுக்கற்ற பல விஷங்கள் உங்கள் எழுத்தில் அரங்கேறி இருக்கிறது... அனைத்து மக்கள் சார்பிலும் உங்கள் எழுத்துக்களை கச்சிதமாக சமர்பித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. அண்ணே! படிக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு. இன்னும் 4 வருஷத்துல என்னலாம் நடக்குமோன்னு நினைச்சாலே பயமா தான் இருக்கு. எங்க வீட்ல தினம் இதே டாபிக் தான். அண்ணா நூலகம் பத்தி நினைச்சாலே வயிதெரிச்சலா இருக்கு. எவ்ளோ அழகான கட்டிடம். அவ்ளோ தான். எல்லாம் நாசமா போச்சு.

    ReplyDelete
  21. இன்னொரு பாமரனோ? தெளிவான தெளிவு.

    ReplyDelete
  22. இந்த பதிவை முதல்வர் அவர்கள் படித்துவிட்டு என்ன reaction வரும் என முன்பே கணிதுவிடீங்க போல ...
    பார்க்க முதல் போட்டோ ...

    அருமையான பதிவு ....
    நன்றிகள் ..

    ReplyDelete
  23. வந்தாரை வாழ்வைத்தோம்
    வந்தேறி நம்மை அழிக்கிறது
    பகுத்தறிவைக் கிழிக்கும்
    கொடுஞ்செயலைக் கண்டும்
    கண் மூடி வாய்பேசா
    மூடர்களா நாம்.....?????
    கொதித்தெழுவோம் ...........
    காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களையும் ,
    ஒத்தூதும் துரோகிகளையும்
    வீழ்த்த சரியான தருணம் இது.....
    தமிழன் வீரனென உலகிற்கு காட்டும்
    நேரம் இது......
    புறப்படு தமிழா......'
    திராவிட உணர்வோடு......

    ReplyDelete
  24. கலைஞர் செய்ததை எல்லாம் கலைத்து போடுவது மட்டும் தான் ஜெயலலிதாவின் நோக்கம் என்று நாம் நம்ப ஆரம்பித்தால் ஏமாளிகளாகவே இருப்போம்.மாறாக ஜெயலலிதாவின் நோக்கம் தமிழ்,தமிழர்கள் அடையாள அழிப்பை தான் உள்நோக்கமாக கொண்டு இருக்கிறது.மாநில உள்கட்டமைப்பிற்கு என்று ஜெயலலிதா செய்துள்ள எதையாவது யாராவது நினைவு கூற முடியுமா?
    தமிழ்,தமிழர்கள் பெருமிதப்படும் எதையும் அவரும்,அவரை சுற்றி உள்ளவர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்,அவர்களால் முடியாது.நூற்றாண்டுகளாக தொடரும் ஒரு போர் இது.தற்கால தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் கல்வி வளர்ச்சியே என்பது மறுக்க முடியாத உண்மை.தமிழர்களின் முன்னேற்றத்தை தடுக்க அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அணை கட்டினால் தான் முடியும் என்ற முடிவில் தான் சமச்சீர் கல்வி,அண்ணா நூலகம் என்று கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்த பார்கிறார்கள்.மக்கள் எழுச்சியை தவிர வேறு எதற்கும் இந்த கும்பல் அஞ்சாது.மூவர் தூக்கு விவகாரத்திலும் மக்கள் எழுச்சியை எப்படி தமக்கு சாதகமாக பயன்படுத்தி தேவை முடிந்ததும் கழுத்தை அறுத்தனர் என்பது மிக சமீப உதாரணம்.

    ReplyDelete
  25. ஜெயலலிதா மேடத்துக்கு இவ்வளவு சீக்கிரம் மறுபடியும் “பேய்” புடிக்கும்-ன்னு நினைக்கலை... கஷ்டப் படப்போவது ஜனங்கள்தான்...

    ReplyDelete
  26. அண்ணாச்சி நீங்கள் இன்னும் பல கடிதம் எழுத வேண்டி வரப் போகுது ஏனென்றால் இது ஆரம்பமல்லவா...

    ReplyDelete
  27. //இது போல மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிறுபித்துகாட்டுங்கள்..தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள் அமைப்பேன் என்று சூளுரையுங்கள்..

    ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுங்கள் .. // This is what we expect... as ordinary citizen.. Hope this letter reaches the right place.

    ReplyDelete
  28. Jackie.. I can see Balakumaran in the first line, occasional Sujatha in between, Gnani, Jeyamohan, Cho, Kalki, Bakkiyam Ramasamy, in few parts. This letter shows your capability and improvement in writing to the standards.. You no longer the old Dhanasekar..as you mention

    ReplyDelete
  29. நெற்றியடி...எல்லா அரசியல்வாதிகளுக்கும் (வியாதிகளுக்கும்) இந்தப்பதிவு சமர்ப்பணம்.....ஒவ்வொருவரது மனதையும் எதிரொலிக்கும் பதிவு....

    ReplyDelete
  30. Excellent Jackie but be careful police/kundas may come to your home if she read this :)

    ReplyDelete
  31. அருமையான கடிதம் ஜாக்கி அண்ணா... எழுதியிருக்கும் அத்தனையும் நிதர்சனமான உண்மைகள்... முதலமைச்சர் இதை எல்லாம் உணர்ந்து நடந்து கொள்வது சந்தேகம் தான்....

    ReplyDelete
  32. கடைசி பத்தில வச்சீங்க செக்கு :)

    ReplyDelete
  33. மனசில் பட்டதை எழுதுகிறேன் , முடிஞ்சா வாசிச்சுட்டு போ என்ற ரீதியில் (கிட்ட தட்ட ஜெ மாதிரி) நீங்க எழுதுவதால் மட்டுமல்ல சில சமயங்களில் எனக்கு உடன்பாடில்லாத காரியங்களை எழுதுவதாலும் நான் கருத்து சொல்ல விரும்புவதில்லை , ஆனால் இன்று நீங்கள் எழுதியிருக்கும் கடிதம் என்னவோ செய்கிறது.

    திமுகவின் அனுதாபி என்றோ, கலைஞர் பேரில் மதிப்புள்ளவன் என்பதாலோ அல்ல இக்கருத்து ,

    கொஞ்சமாத்தான் எழுதி இருக்கீங்க, இன்னும் எழுதணுமே . . . நீங்கள் எழுதிய எந்த ஒரு வார்த்தையும் தவறாக தெரியவில்லை. உங்களால் மட்டுமே இப்படி எழுதவும் முடியும். . .

    அதிலும் மரியம் பிச்சை பற்றிய விசயம் ஜெவுக்கான நெத்தியடி . . மக்களுக்கான மக்களாட்சியில் மக்களுக்காக ஆட்சி நடத்தாத ஒரு அரசியல்வாதிக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தரும் *** கள் நிறைந்த தமிழகம் இனியும் நாசமாக போகட்டும் . . . வேறு என்ன சொல்லிவிட முடியும் என்னால் . .

    தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகள் இன்னும் உண்டு
    கூடன்குளம் , சமச்சீர் கல்வி , சுற்றுலாதுறை வளர்ச்சி, சாலைகளின் சீர்திருத்தம் , அரசு எந்திரங்களின் லஞ்சம் , வேலைவாய்ப்புகள் என காத்திருக்கும் பல விடயங்களுக்கு மத்தியில் இதையெல்லாம் மறந்துவிட்டு தான் ஏன் இப்படி என்பதை உணர்த்த வேண்டி முதல் கல் எறிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    சொல்லமுடியாது , உங்களுக்கு ஒரு மடல் வர வாய்ப்புள்ளது , “உங்கள் பதிவை படிக்க விருப்பம் தயவுசெய்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பதியவும்” என்று . . .

    இல்லாத இடம் என்றபோதிலும் அதிலும் இல்லாத விசயத்தை இருக்க வைக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

    ரெஜோலன்

    ReplyDelete
  34. சடுதியில் மாறும் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இதில் எதுக்கு இவ்வளவு ஈகோ உங்களுக்கு என்று தெரியவில்லை...?? - antha amma ithai unarvathu eppothu entra aekkam...thaan enkalukku...

    ReplyDelete
  35. இவங்களுக்கு ஓட்டு போட்ட நம்முடைய நிலைமையை நினச்சா இந்த பழமொழி தான் ஞாபகம் வருது அண்ணே
    சனியன் சனியன்னு கோவிலுக்கு அங்க ஒரு சனியன் ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்..

    ReplyDelete
  36. அருமை கடிதத்திற்கு நன்றி..

    ReplyDelete
  37. நன்றி ஜாக்கி அவர்களே! இதைத்தான் என்னைப்போன்றோரும் நினைக்கிறோம்!

    ReplyDelete
  38. இதை மாற்ற ஆகும் செலவு எத்தனை கோடி?? அதில் இருக்கும் பொருட்கள் விரயம் என்று கணக்கு போட்டால் தலை சுற்றுகின்றது...
    //யாருக்கு உங்களுக்கா இல்லை அவுங்களுக்கா உங்களுக்கு வேண்டுமென்றால் சுற்றலாம், அவுங்களுக்கு சுற்றாது

    ReplyDelete
  39. இப்பல்லாம் இது ஒரு Fashion ஆக போய்டிச்சி. யாராவது பெரிய ஆட்களுக்கு உருக்கமா கடிதம் எழுதுறது.. ஆரம்பத்துல பாராட்டுற மாதிரி எழுதி கடைசில அவங்களையே திட்டியும் எழுதி என்னம்மோ நீங்க நடுநிலையாளர் போல காமிச்சிகிட்றது... நீங்க நேரடியவே அவர்களை விமர்சிக்கலாமே.. இத நான் வார இதழ்களிலும் பல பார்த்திருக்கிறேன்,, விஜய் மீது, கலைஞர் மீது, அம்மா மீது. அட போங்கப்பா போரடிக்குது....

    ReplyDelete
  40. கடிதம் பலவிடயங்களை சிறப்பாக விருப்பு வெறுப்பின்றி அலசியுள்ளது.
    ஆனால் இந்த அம்மாவைப் பொறுத்தமட்டில் இவை விளலுக்கிறைத்ததே!

    // பார்ன் இன் சில்வர் ஸ்பூன் நீங்கள்//
    ஜக்கி இது நிசமா?
    இவரைக் குடும்பக் கஸ்ரத்தால் தொடர்ந்து படிக்க வைக்கமுடியாமல், இவர் தாயார் வலுகட்டாயமாக இவர் விரும்பமின்றி, இவராலாவது குடும்பத்துக்கு வருமானம் வரட்டுமே என்பதால் நடிக்க வந்ததாகப் படித்துள்ளேன்.

    ReplyDelete
  41. வணக்கம்!

    //இதுவரை உங்கள் பெயர் சொல்லுவது போல ஏதாவது கட்டிட்ங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றதா? என்றால் எதுவும் எனக்கு தெரிந்து இல்லை...//

    உண்மையான வரிகள். பொறுத்தது போதும் என்று பொங்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  42. நல்ல விஷயங்களை உரைக்கும்படி எழுதியுள்ளீர்கள் அண்ணா, இது கண்டிப்ப உரியவங்க கண்ணுல படணும்; ஒரு நல்ல முடிவு ஏற்படணும் வேண்டிகொள்கிறேன்..

    ReplyDelete
  43. உணர்வுள்ள மனிதர் நீங்கள் என்று உணர்த்துகிறீர்கள். ஜெயலலிதாவின் நல்ல சுவடுகளையும் காணக் குனிந்திருக்கிறீர்கள் பாருங்கள், ரெம்ப ரெம்ப நல்லவராத்தேன் இருப்பீக போல இருக்கு!

    'மழைநீர் சேமிப்பு' 'வீராணம் கால்வாய்' எல்லாம் அந்த நேரத்துக் கடிக்க வர்ற நாய்க்கு எலும்பு என்றாலும், நிரந்தரமான 'தெலுங்கு கங்கா'வைப் பழிப்புக் காட்டச் செய்த காரியங்களே என்றாலும், கொஞ்சூண்டு நன்மை இருந்தாலும் பாராட்டுவதில் தப்பில்லை.

    தூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலை கூட அம்மையார் கொண்டுவந்ததுதான். அது நன்மையா தீமையா?

    அவர் மெத்தப் படித்தவர் ஒன்றும் இல்லை. அதனால் என்ன? புத்தகங்கள் மீது மரியாதை கூட வேண்டாம், ஒரு பிரியம் வரவேண்டாமோ?

    அவருக்கு, உணமையிலேயே ஒரு ஷெட் போடவாவது ஒரு சுடுகாட்டை விட்டு வைத்திருக்கலாமே? அதுதான் கடுப்பு.

    ஜனநாயகத்தில் ஊழல் இல்லாமல் இருக்காது. அண்ணா ஹசாரே பேரில் கூடச் சொல்லுகிறார்கள். ஆனால் நாம், "90-ஐ அடித்துவிட்டுப் 10-ஐயாவது செய்தானே" என்று பார்க்கிறதில்லை. "ஆத்தாடி, நமக்கு ஒருஜோடி செருப்புக் கூட உருப்படியா இல்ல; இந்த அம்மாவுக்கு இம்புட்டா!" என்றும், "ஐயோ, கமலாத் தியேட்டர் பார்க்கிங் டிக்கெட்டே நமக்குக் கடுப்பாவுது, இந்த உதயநிதி, தயாநிதி எல்லாம் ப்ரொட்யூஸரா ஆகிப் போயிட்டானுவளே!" என்றும்தான் வயிறெரிகிறோம்.

    அப்படி, வயிறெரிச்சலில் முடிவான தேர்தல்களில் ஒன்றுதான் இப்போது முடிந்ததும். ஆனால், இதை அறச்சீற்றம்போல் இட்டுக்கட்டுகிறோம், வெட்கங்கெட்டு!

    உங்களைப் பாராட்டுகிறேன்: மேன்மேலும் எழுதுங்கள்! ஆனால் நமக்கு எது தகுதியோ அதுதான் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  44. ஒரு முதல்வர் என்பவர் மக்களுக்கு சேவை செய்யும் சேவகன்....வேலைக்காரன்..
    இவர்கள் மக்களுக்கும் கொடுக்கும் ஒவ்வொரு வசதிக்கும் தங்கள் பெயரிலேயே விளம்பரம் செய்கின்றனர்...
    அரிசியில் இருந்து ஆம்புலன்ஸ் வரை முதல்வரின் படம்...பேருந்தில் கூட அவர்களுக்கு பிடித்த நிறம்...
    இவர்கள் சுய விளம்பர பைத்தியங்கள்....ஒருவர் செய்ததை மற்றொருவர் வந்து சுலபமாக அழிக்கிறார்...
    என்னமோ அவர்கள் சொந்த காசில் வங்கியதை போல அவர்கள் பெயரில் வைப்பதும், கட்டிடங்களை மாற்றுவதும் ....

    நம்மை போன்ற நடுத்தர மக்கள் ...தவறாமல் வரிகட்டுபவர்கள்... ஒவ்வொருமுறையும்இந்த முறையாவதுமுதல்வருக்கு நல்ல புத்தி வந்து கொஞ்சமாக பணத்தை சுருட்டிக்கொண்டு எதாவது உருப்படியான திட்டங்களை கொண்டுவர மாட்டார்களா என ஏமாந்து போகின்றனர்..( வடிவேலு ஒரு படத்தில் கதை சொல்லுவர்...ஒரு ஊருல இழவு காத்த கிளி இழவு காத்த கிளின்னு ஒன்னு இருந்துச்சாம்...அந்த கிளிபயபுள்ள இந்த காய் பழுத்து பழமான பிறகு சாப்பிடலாம்னு ....ஆனா அந்த பழம் ஒரு நாள்
    பழுத்து பஞ்சா பறந்துடுச்சாம்... இப்போ என்ன சொல்ல வர்றேன்னா நம்ம எல்லோரும் அந்த கிளிப்பயபுள்ள மாதிரி ஏமாந்து போயிட்டோம்...)

    உழைக்காத காசு பிச்சை எடுப்பதை விட மிக கேவலமானது...மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவன் மிக கேவலமான பிறவி...ஒவ்வொரு கவுன்சிலரும் பல லட்ச ரூபாய் முதலீட்டில் பதவியை கைப்பற்ற யார் காரணம்...?

    தலைமை சரி இல்லை என்பதை தவிர எது காரணமாக இருக்க முடியும் ?

    கொஞ்சமாவது மானம் ரோஷம் ...மனிதாபிமானம் இருந்தால் முதல்வன் படத்தில் வருவது போல ஒரு நல்லாட்சியை கொடுக்கலாம்...மக்கள் ஆதரவை தவிர வேறு எது வேண்டும் ? சாகும் போது ஒரு பைசா கூட வராது என்பதை உணர்ந்தால்
    இவர்கள் தமிழகத்தை சிங்கபூர் ஆக்கி இருப்பார்கள்...

    அது இந்த ஜென்மத்தில் நடக்காது....

    ரெண்டு கட்சியின் தலைவர்களுக்கும் மன நிலை பாதிப்பில் இருகிறார்கள் என்பதே உண்மை...அவர்களாக மூப்படைந்து சாகும் வரை தமிழகத்துக்கு விடிவுகாலம் இல்லை...

    உங்களது கட்டுரை மனதில் அடக்கி வைத்த கோபத்தை வெளிக்கொண்டு வருகிறது ...

    ReplyDelete
  45. இதைவிட அருமையாக எவராலும் எழுதமுடியாது. மாற்றம் வேண்டி வாக்களித்த மூடர்களே இந்த மாற்றம் போதுமா இன்னும் மாற்றம் வேண்டுமா....

    ReplyDelete
  46. இதையெல்லாம் உணர்ந்துவிட்டால் இந்திய அரசியலே மாறிவிடும்

    சொன்னாலும், பட்டாலும் திருந்துவதில்லை இவர்கள்

    தெரிந்தும் மீண்டும் மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உக்கார வைப்பது நமது முட்டாள் தனம்

    நல்ல பதிவு

    பாராட்டுகள்

    ReplyDelete
  47. இதை அவர் தெரியாமல் செய்யவில்லை. அனைத்தும் தெரிந்து கொண்டு இருப்பவருக்கு என்ன சொன்னாலும் புரியாது ஜாக்கி அண்ணாச்சி.

    தூங்குபவனை எழுப்பிடலாம்,.. நடிப்பவனை முடியவே முடியாது,..

    ReplyDelete
  48. ஜாக்கி அண்ணே.. போட்டோஸ் super...
    நீ....ளமான சம்மட்டியில ஓங்கி அடிச்சிருக்கீங்க.. வலிக்குதான்னு பாப்போம்...

    ReplyDelete
  49. anna library costs 230 crores and not 180 crores

    ReplyDelete
  50. மிக நீண்.......ட பதிவு!

    உங்கள் கருத்துகள் ’நச்’. அம்மாவின் காதுக்கு சென்று நல்லது நடந்தால் நல்லது.

    /இதோ நான்காவது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள்../

    சரி தான்.. ஒ. பன்னீர் செல்வம் ஆறு மாத காலம் பதவியில் இருந்தாரே. அப்புறம் தானே இவங்க பதவி ஏத்துகிட்டாங்க..?!?!

    ReplyDelete
  51. பின்னுட்டத்தில் கருத்துக்களை தெரிவித்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  52. மிக அருமை. இதை எப்படியாவது தமிழக முதல்வர் படித்து பார்த்தால் கூட போதும்.மாற்றம் சிறு தேனும் அமையம் நம்பிக்கை எனக்கு .

    ReplyDelete
  53. மிக நன்றாக உள்ளது ! பயனுள்ளது !பாரட்டப்படவேண்டியது !

    ReplyDelete
  54. Dear Sir

    I just want to ask a question why you people are not advising MK when he was in power. What J is doing is wrong I accept. But In TN There are people still living in roads. These MLAs have already secreteriate, hostel etc., why Mr.MK Is building a new secreteriate at an abnormal cost.

    ReplyDelete
  55. நல்ல கட்டுரை. நடுநிலையான ஒன்று.
    தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பு பற்றிய குறை எனக்கும் உண்டு. விதான் சவுதாவை பார்த்துவிட்டு இதைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை.

    ReplyDelete
  56. தமிழக தலைமைச்செயலகம் வாடகை கட்டடத்தில் இருப்பது வெட்ககேடான விஷயம்..... இதற்கும் நீங்கள் பல உதாரணங்கள் எடுத்துக்காட்டலாம்.... அது எல்லாம் வெறும் வாயால் முழம் போடுவது போல் ஆகும்.

    ReplyDelete
  57. nalla padhivu,innum silar idhu pol edhvadhal mattume unmai nilai velipadum nandri

    ReplyDelete
  58. the comments are more poweful than the letter on which they are so made
    sam

    ReplyDelete
  59. excellent letter and hoe this message will reach the concerned authorities

    ReplyDelete
  60. அண்ணே.. பதிவு, இத பதிவுன்னு சொல்ல மாட்டேன்,தமிழக மக்களின் மனசாட்சியின் குரல். செஞ்ச தப்புக்கு வருந்துவோம், அப்படி தான் நான் இப்போ இவங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு வருந்துறேன்.

    உங்க கோபத்தை படிக்கும்போது என் மனசுக்குள்ளேயும் ஒரு வெறி, நம் மக்களுக்கும் ஒரு கையெழுத்துல இவங்க ஆட்சியை மாத்துற சக்தி இருக்கணும்னு.

    "இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போவட்டும்" P.S. வீரப்பா dialogue.
    இப்பல்லாம் இதுதான் மனசுல தோணுது.

    ஒரு நல்ல குடிமகனா, நம் கடமைய நாம செய்வோம், அவுங்க நல்ல ஆட்சியாளரனு பொறுத்திருந்து பார்போம்.

    உங்க மனசாட்சியின் குரலுக்கு நன்றிங்க அண்ணா!!!

    ReplyDelete
  61. //சடுதியில் மாறும் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இதில் எதுக்கு இவ்வளவு ஈகோ உங்களுக்கு என்று தெரியவில்லை...?? நான் நான் என்று நீங்கள் பேசுவதை தமிழகம் அறியும்...//

    அப்பா சாமி முடியலடா... சாதாரண அனானிகளுக்கே கொதிச்சு கெட்ட வார்த்த எழுதுற நீங்கெல்லாம் அட்வைஸ் கொடுக்குறீங்க? மனசாட்சியே இல்லையா? சும்மா வேலைய பார்த்துட்டு போங்க .. அதான் நூலகத்துக்கு கேஸ் போட்டு இடைக்கால தடை வாங்கிட்டாங்களே எல்லாம் நல்லபடியா நடக்கும்.. உங்க அட்வைச கொண்டு தூர எறிங்க.. வர வர நாட்ல எவன் எவன் அட்வைஸ் பண்றது வெவஸ்தை இல்லாம போச்சு ...

    எப்படியும் இந்த கமண்ட்ட பப்ளிஷ் பண்ண மாட்டீங்கன்னு தெரியும் .. அப்புறம் கெட்ட வார்த்தையில திட்டி ஒரு ரிப்ளை எனக்கும் போடுவீங்க.. வெல்கம்

    ReplyDelete
  62. ஜாக்கி .... தமிழ் மக்களின் எண்ணத்தை நறுக் என்று அழகாக பொறுமையுடன் பதிவு செய்துள்ளிர்கள் , அனைத்து மக்களின் எண்ணம் இந்த பதிவு மிகப்பெரிய உண்மை -நன்றி -கதிர் -ஆக்ஸ்போர்ட்

    ReplyDelete
  63. Really good Article.. Wish that CM reads it herself..

    ReplyDelete
  64. Nice article......Even if CM read, she will change her attitude???? Jaskie ji, Nice one....Thank u

    ReplyDelete
  65. //சர்ச் பார்க்கில் மெத்த படித்தவர்..//

    அப்படியா????? !!!!!!!!!

    ReplyDelete
  66. Oru satharana manithanin manthil thondrum ennangal ivai...! Mattrangal avarai mattrum endru nambuvom.

    ReplyDelete
  67. உங்கள் கட்டுரையில் இருக்கும் ஜெ.. வின் புகைப்படம்...,

    உங்களை பார்த்து நக்கலாய் சிரிப்பது போல் உள்ளது.

    " என்னைய பத்தி இவ்வளவும் தெரிஞ்ச பிறகும் , லெட்டர் எழுதுறியே தம்பி! ..."

    ReplyDelete
  68. மறுபடியும் சொல்றேன்....

    விக்கல் நிற்க, விஷம் குடித்த, வாக்காள பெருமக்களே .....!

    ReplyDelete
  69. நல்ல தொகுப்பு.. உங்களின் அணைத்து எடுத்துகட்டுகளும்
    நியாயமானதாக இருக்கிறது. வாழ்த்துகள் !!

    ReplyDelete
  70. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

    எவ்வளவோ பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி வாயிலாக மக்கள் தங்கள் உள்ளக்குமுறளை கொட்டி விட்டார்கள்..

    ஒரு காமன் மேனாக என் ஆதங்கத்தை சொல்லி இருக்கின்றேன். அவ்வளவே...

    ReplyDelete
  71. // மனிதனாக பார்த்தால் பிளாக் ஹோல்,மிகப்பெரிய அண்டவெளி,அதில் இருக்கும் துகளான சூரிய குடும்பம்,அந்த சூரிய குடும்ப துகளில் நாம் வாழும் பூமி, அந்த பூமியில் மூன்று பங்கு நீர், ஒரு பகுதி நிலப்பரப்பில்,இந்தியாவில்,தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கும் மிகச்சிறிய மைக்ரோ துகள்தான் நீங்களும் நானும் என்பதை மட்டும் மறந்து வீடாதீர்கள்.. //... //ஒரு நொடியில் அவர் வாழ்க்கை மாறிப்போனதை நீங்கள் அறியாதவர் அல்ல...// அருமை. யோசிக்க வைத்த வரிகள். நம்ம யோசிச்சு என்ன பண்ண? யோசிக்க வேண்டியவர் யோசிச்சா மக்களுக்கு நல்லது.

    ReplyDelete
  72. DEAR JACKIE SEKAR,

    YOU HAVE REFLECTED THE INNER FEELINGS OF AN AVERAGE VOTER WHO IS NOT BELONGING TO ANY PARTY.. KUDOS. ALSO INCLUDE THE PROPOSAL OF AMMA TO WASTE MORE MONEY ON MONO RAIL WHICH IS FAILED ALL OVER THE WORLD ...PLEAD WITH HER ON OUR BEHALF TO EXTEND THE PHASE 2 OF METRO RAIL................MURALI64@YAHOO.COM

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner