அன்புள்ள அம்மாவுக்கு, 16-11-2011






அன்புள்ள அம்மாவுக்கு, நீ நலமா?


நாங்கள் நலமே....



அப்பாவுக்கு சுகர் அதிகமாகி காலில் காயம்.. செக் செய்த போது 400 இருக்கின்றது.. நீ உயிரோடு இருக்கும் போதே உன் பேச்சையோ? யார் பேச்சையும் கேட்காதவர் அவர்... நடக்கமுடியாது பேராலிஸ் அட்டாக் வந்த நிலையில் சுகர் மாத்திரை சாப்பிடாத காரணத்தால் காலில் காயம்.. காலையே எடுத்து விடுவார்கள் என்ற பயம் முறுத்தி மாத்திரை சாப்பிட சொல்லி இருக்கின்றார்கள்...இருந்தாலும் வாய் கட்ட முடியாமல் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார் வாயை கட்டமாட்டேன் என்கின்றார். சாப்பிட கொடுக்க மறுத்தால் திட்டுகின்றாராம்..68 வயதில் நடக்க முடியாமல் இருக்கும் போது கொஞ்சமாவது புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.. என்ன செய்ய..??


இங்கே சென்னைக்கு வந்து விடு என்றால், நீ வாழ்ந்த வீட்டை விட்டு நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு இருக்கின்றார்...


கடைசி தங்கைக்கு தீவிரமாக வரன் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.. இன்னும்  ஒரு வருடம் கழிந்தால் அவளுக்கு 30 வயது....வரும் வரன்கள் தட்டிக்கொண்டே போகின்றது.. அல்லது அதிகம்  எதிர்ப்பார்க்கின்றார்கள்.. எனக்கு அதை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன் என்கின்றது..



இதுதான் ஊர் நிலைமை....


வழக்கம் போல பேத்தி எப்படி இருக்கின்றாள்?  என்று கேட்கின்றாய்...


நலமாக இருக்கின்றாள்...


வால்தனம் ரொம்பவே ஜாஸ்த்தியாக இருக்கின்றது.. நேற்றில் இருந்து ஒன்பதாவது மாதம் யாழினிக்கு  ஸ்டார்ட் ஆகிவிட்டது.....கார்டூன் சேனலில் வரும் டோராவிடம் ஏதேதோ பேசிகின்றாள்.. 

வாக்கர் வாங்கி அதில் அவளை விட்டேன்.. வீட்டையே உற்சாகமாக ரவுண்ட் அடிக்கின்றாள்... 

மனைவி  வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாள்....நான்தான் குழந்தையை பார்த்துக்கொள்கின்றேன்..வேறு யாரும் குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்கவில்லை...சென்னையில் வீட்டில் தங்கி அல்லது நைன்டூ பைவ் குழந்தையை பார்த்துக்கொள்ள கேட்கும் தொகையை நீ கேட்டால், ஏசுபிரான் போல நீயே உயிர்பெற்று வந்து குழந்தையை பார்த்துக்கொள்ள வந்து விடுவாய்..அந்த அளவுக்கு பணம் கேட்கின்றார்கள்... அதனால் நானே பார்த்துக்கொள்கின்றேன்.. மனைவிக்கு ஞாயிறு அன்றுதான் விடுமுறை... எனக்கும் அன்றுதான் விடுமுறை..


அம்மா குழந்தையை பார்த்துக்கொள்வது அவ்வளவு சாதாரணமாக இல்லை.. முக்கியமாக நகர ஆரம்பித்ததும்.. ஹாலில் குழந்தையை விட்டு விட்டு, பாத்ரூம்  போய்  ஒன்னுக்கு நிம்மதியாக போய் நாள் ஆகிவிட்டது.. 

என்ன செய்வாள்? எதை இழுத்து போட்டு இருப்பாள்?  எதில் இடித்துக்கொண்டு அழுவாள் என்ற கவலைதான் மேல்ஓங்கி இருக்கின்றது... 

காலையில் தினமும் ஆறரை மணிக்கு எல்லாம்  சென்னையில் இருக்கும் நம்  வீடு பரபரப்பாகிவிடுகின்றது...



காலையில் எழு மணிக்கு வீட்டை பூட்டிக்கொண்டு  அப்பார்ட்மெண்ட்டில் எந்த வீட்டில் சீக்கிரமாக கண் விழிந்து வெளியேவருகின்றார்களோ அவர்களிடம் குழந்தையை  அரைமணிநேரம் பார்த்துக்கொள்ள சொல்லி கொடுத்து விட்டு, நான் மனைவியை அழைத்து போய் போரூரில் கம்பெனி பஸ்சில் ஏற்றி விட்டு, வீட்டுக்கு வந்து குழந்தையை பார்த்துக்கொண்ட பக்கத்துவீட்டுக்காரர்களிடம் நன்றி தெரிவித்து  குழந்தையை வாங்கி...காலைகடன்களை சுத்தபடுத்தி , மிச்ச தூக்க கலக்கத்தை முகத்தை பார்த்து அறிந்து, அவளை தூங்க வைக்கின்றேன்.. 

அப்படியும் இல்லை என்றால் பசியில் அழுதால் ஒரு கப் சத்துமாவு கஞ்சி கொடுத்தால் கண் சொருகி தூங்கிவிடுவாள்....முதலில் எனக்கு எதன் பொருட்டு குழந்தை அழுகின்றாள் என்று எனக்கு இனம் கண்டு பிடிப்பதில் பெரிய சிக்கல் இருந்தது.. இப்போது அப்படி இல்லை...அழுகையை இனம் கண்டுக்கொள்கின்றேன்.


திரும்ப பதினோரு மணிக்கு  அவள் கண் விழிக்கும் போது உடம்பை முறுக்கிக்கொண்டு ஒரு அழுகையைஆரம்பிப்பாள்..... இந்த அழுகையின் போது நிச்சயம் தூக்கி அவளை கொஞ்சியே ஆக  வேண்டும்.. அப்பா நான் இருக்கின்றேன் என்று அவள் முதுகை தடவி உணர வைக்க வேண்டும்.. அப்படி அதை செய்யவில்லை என்றால் இன்னும் ஒரு மூன்று நிமிட அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது...



திரும்ப அடுத்த சலம்பலோடு அழுகையை ஆரம்பிக்கும் வரை அவளோடு விளையாட்டு, 12 மணிக்கு கேழ்வரகு கூழை ஸ்பூனில் கொடுப்பேன்... நடு நடுவில்  இரண்டு டிஸ்பூன் தண்ணீர்... கொடுப்பேன்..தொடர்ந்து பசி போகும் வரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்... நடுவில் ஒரு சின்ன கேப் விட்டாலும் அழுகையின் மூலம் ஒரு மிரட்டு மிரட்டுகின்றாள்.. அதுக்கு பயந்து கொண்டு இடைவிடாது கொடுத்துக்கொண்டு இருப்பேன்...

உணவு போதும் என்றால் மவுன சாமியார் போல வாயை இறுக்க மூடிக்கொண்டு திருட்டு பார்வை பார்ப்பாள்... அதுதான் சிக்னல் ஓகே தலைவருக்கு வயிறு நிரம்பிடுச்சின்னு அர்த்தம்... அதுக்கு பிறகு தண்ணீர் கொடுக்கும் போது நாலாவது டீஸ்பூன் தண்ணியை குடிக்காமல் வாயிலே வைத்துக்கொண்டு கர் புர் என்று சத்தம் எழுப்பி, அதை துப்புவாள்.. ஓகே தடிப்பு அதிகம் ஆயிடுச்சின்னு சாப்பாடு கடையை ஏரைக்கட்டி விட்டு, ஒரு இரண்டு மணி  நேர எனர்ஜி குறையும் வரை விளையாடிவிட்டு ஒரு மதிய தூக்கத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டுவிடுவாள்.. 

இதுக்கு நடுவில் சூசு துணியை எப்படியும் ஒரு  பத்து துணிக்கு மேல் ஈரமாக்கி இருப்பாள்... 

சரி பாத்ரூம் போய் விட்டு வரலாம் என்று போய் விட்டு திரும்ப வந்து பார்க்கும் போது அந்த ஈரத்தில் மார்டன் ஆர்ட் வரைந்து அதில் இரண்டு கையால் தப்புக்கொட்டி இசைஎழுப்புவது போல தரையில் அடித்துக்கொண்டு இருப்பாள்.. அப்படியே குண்டுக்கட்டாக  தூக்கி கொண்டு போய் பாத்ரூமில்  உடம்பை அலசி...அவள் துண்டை எடுத்து தடைத்து லைட்டாக பவுடர்  அப்ளே செய்து, திரும்ப உடை மாற்றி விடுவேன்..


மதிய தூக்கத்தின் போதுதான் நான் சாப்பிடுவது துணியை டிரையரில் போடுவது, பத்து பாத்திரங்களை கழுவி வைப்பது,போன்ற  வேலைகளை செய்ய வேண்டும்.. அதையும் வெகு சுதந்திரமாக செய்ய முடியாது... ரகசிய உளவாளி போல  நடந்து வேலைகள் செய்ய வேண்டும்..குழந்தைக்கு அந்த மதிய தூக்கம் இரண்டு  மணிநேரத்துக்கு மேல் அவள் தூங்கினால் வரும் சந்தோஷம் இருக்கும் பாரும்மா அப்படி  ஒரு சந்தோஷம் எனக்கு வரும்...


இதுக்கு நடுவில் வாசிங் மெஷினில் மூன்று முறை அவள் உடைகளை மட்டும் அலசி கடைசி அலசலுக்கு மூன்று மூடி டெட்டால் விட்டு , துணிகளை அலசி, டிரையிரில் போட்டு துணியை காய வைக்க  வெளியில் போகும் போது குழந்தை எழுந்து இருக்க கரெக்டாக இருக்கும்...


சின்ன சினுங்கல் அவளிடம் இருந்து வரும் போதே ஓடிப்போய் அவள்முதுகில் லைட்டாக தட்டினால் அயர்ந்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவாள்... அந்த நேரத்தில் இன்னும் கொஞ்சம் வேலைகளை முடிக்கலாம் அவ்வளவுதான்..


நாலு  மணிக்கு எழுந்து அரைமணி நேர விளையாட்டு டிவியை அப்படி பார்க்கின்றாள்.. முக்கியமா விளம்பரங்களை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு காலையும் கையையும் ஆட்டிக்கொண்டு உற்சாகமாக  பார்ப்பாள்...டீவியில் வரும் பாத்திரங்களோடு பேசுகின்றாள்..


நாலரை மணிக்கு மேல குழந்தை பசிக்கு, காலையில் சமைக்கும் போதே வேக வைத்த... ஆப்பிள், உருளை, பீன்ஸ்,பீட்ரூட், கொஞ்சம் பால், மற்றும் இரண்டு தேக்கரண்டி சர்க்கரையை போட்டு மிக்சியில் அடித்து பேஸ்ட் போல ஆக்கி அதனை அவளுக்கு கொடுப்பேன்.. உற்சாகமாக அதனை சாப்பிடுவாள்...


அதன் பிறகு கொஞ்சமாக சுடத்தண்ணி வைத்து உடம்பில் நீர் ஊற்றி அவளை துடைத்து பவுடர் போட்டு உடைகளை அணிவித்து விட்டால் திரும்ப என்னோடு ஒரு மணிநேரம் விளையாட்டு... ஆறு மணிக்கு திரும்ப குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு மனைவியை அழைத்து வரக்கிளம்புவேன்...


காலையில் இருந்து அம்மாவை பிரிந்து இருக்கும் யாழினி சாயந்திரம் அவள் அம்மாவை பார்த்த உடன் கொடுக்கும் பாடிலாங்வேஜ், மற்றும் உற்சாகத்தை ரசிக்க தனி ரசனை வேண்டும்..

அம்மா.... 

முதல் நாள் ரொம்பவே சிரமபட்டேன்..இப்போது குழந்தையை பார்த்துக்கொள்வதை ரசித்து செய்கின்றேன்.. சின்ன சின்ன போட்டோ ஆர்டர்களை மட்டும் எடுத்து செய்கின்றேன்..நினைத்த நேரத்தில் வெளியே கிளம்புவேன்..சடார் என்று முடிவெடுத்து ஏதாவது படத்துக்கு போய் விடுவேன்.. எங்கே அழைத்தாலும் அடுத்த நிமிடம் அங்கே இருப்பேன்.. ஆனால் இப்போது அப்படி இல்லை..ஞாயிறு விடுமுறை நாளின் போது மட்டும்தான் எனக்கும் விடுமுறை..


எங்களுக்கு ஒரு குழந்தைதான்..


ஆனால் கேஸ் அடுப்பு...


பருப்பு வேகவைக்க ஓவன்...


சுடுநீர் போட வாட்டர் ஹீட்டர்..


துணிகளை துவைத்து  டிரை பண்ண வாஷிங் மெஷின்... மழை வந்தால் ஒழுகும் என்ற கவலை இல்லாத அப்பார்ட்மென்ட் வீடு....



இவ்வளவு சவுகர்யம் இருந்தும்...நான் செய்யும் வேலைகள் வேலையே அல்ல...



ஆனால் உனக்கோ  என்னையும்  சேர்த்து ஐந்து பிள்ளைகள்..


கருப்பஞ்சோலை வேய்ந்த கீற்று வீடு


மழைக்கு வீட்டை சுற்றி நிற்கும் மழை நீர்...


மரவட்டை ,தவளை ஜஸ்ட் லைக்காக கடந்து போகும்...


உனக்கும் உதவிக்கு யாருமே இல்லை.. அப்பா வேலைக்கு போய் விடுவார்...இருந்தாலும் குழந்தையை தூக்கி கொஞ்சியது மிகக்குறைவு..


விறகு அடுப்புதான்...மழைகாலங்களில் ஊதாங்குழலோடு நனைத்து போன விறகோடு, நீ மல்லுக்கட்டிக்கொண்டு இருப்பதும், ஊதி ஊதி உன் கண்களில் புகை காரணமாக வழியும் கண்ணீரையும் நான் பார்த்து இருக்கின்றேன்...


பைப்பை திறந்தால் இன்று என் வீட்டில் நீர் கொட்டுகின்றது..ஆனால் அடி பைப்பில் தண்ணி கை வலிக்க அடித்து, பீத்துணிகள் அலசி, ஆட்டுகல்லில் முதுகு நோக மாவு அரைத்து,

பத்து பாத்திரங்களை கழுவி, காய்ந்த துணிகளை மடித்து வைத்து, அம்மா நீ எவ்வளவு பெரிய உழைப்பாளி......
அம்மா ஐ லவ்யூ..
ஐ மிஸ் யூ சோ மச்.


அம்மா நீ ரொம்பவே கிரேட் .


===========


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

66 comments:

  1. அண்ணே என்ன சொல்லுறதுன்னு தெரியல ... யு ஆர் கிரேட்

    ReplyDelete
  2. க்ரேட். உலகில் எத்தனை ஆண்களுக்கு இப்படித் தாயுமானவனாக முடியும்? குழந்தையே உன் அம்மாதானே ஜாக்கி!:)

    ReplyDelete
  3. Great Post. Really you made me to think about my mom.

    ReplyDelete
  4. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நண்பரே....
    எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அவஸ்த்தைபடும் பொது அம்மா ஞாபகம் வருவது சகஜம் அண்ணே. உங்களை போல தான் நானும் உதவிக்கு ஆள் இல்லாமல் நிறைய நாட்கள் திண்டாடி இருக்கிறேன்.. குழந்தை பிறந்து முதல் இரண்டு வருடங்கள் மிகவும் அவஸ்த்தை தான் அண்ணே.. என் பையன் பகல் எல்லாம் தூங்குவான் இரவு சிவராத்திரி, நானும் என் மனைவியும் ஷிப்ட் முறையில் இரவு விழித்து இருப்போம். அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்ததது..

    ReplyDelete
  6. அருமையான பதிவு. இவ்வளவு வேலை செய்தும் வீட்டின் ஆண்மகன் அவளிடம் 'நீ எவ்வளவு வேலை செய்கிறாய்?' என்று பரிவோடு ஒரு வார்த்தை கேட்காத தலைமுறை அது. கண்டிப்பாக உள்ளே அதை எதிர்பார்த்து எதிர்பார்த்து பின்னர் கைவிட்டிருப்பார்கள். இப்போதாவது அது நடக்க வேண்டும். சென்ற தலைமுறை பெண்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவர்கள்.

    ReplyDelete
  7. ஜாக்கியின் இந்த முகம் எனக்குப் புதிது.நன்றாக இருங்கள் ஜாக்கி.
    குழந்தை சீக்கிரம் வளர்ந்து விடுவாள்.
    அதுவரை அவளுடைய அருகாமையை அனுபவிக்கக் கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.அம்மாவுக்க்கு செய்ய முடியாததைக் குழந்தைக்குச் செய்யுங்கள்.மன்நிறைவாக இருக்கிறது.

    ReplyDelete
  8. கிரேட் ஜாக்கி ... நீண்ட நாட்களுக்கு பிறகு ..நல்ல பதிவு .
    நெக்ருகி நிற்கின்றேன் ..

    ReplyDelete
  9. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து, இயக்கிய ‘நியூ’ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி உண்டு.

    தனது மனைவி கர்ப்பமான பிறகு.. அவளது அவஸ்தைகளை, மகிழ்ச்சிகளை உற்றுநோக்கி, தான் கர்ப்பத்தில் இருந்தபோது இதே உணர்வுகளைதானே தன் தாயும் அடைந்திருப்பாள் என்று சிந்திக்கிறான் நாயகன்.

    இதை மிகச்சிறப்பான பாடல் காட்சியாக ‘காலையில் தினமும் கண்விழித்தாள் நான் கைதொழும் தேவதை அம்மா’ என்று படமாக்கியிருப்பார் சூர்யா. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, குறிப்பாக இந்தப் பாடல் காட்சியின் போதும் எனக்கு பெரிய ஈர்ப்பு எதுவும் வரவில்லை. ஆனால் சில ஆண்டுகள் கழித்து இளம் கணவனாக இதே உணர்வுகளை நானடைந்தபோது, எஸ்.ஜே.சூர்யாவை பெரியதாக கொண்டாடினேன்.

    தாயையும், தாரத்தையும் ஒப்பிட்டு ஒரு ஆண்மகன் சிந்திப்பது என்பது நம் கலாச்சாரச் சூழலில் அனைவருக்குமே ஏற்படக்கூடிய ஒரு இயல்பான விஷயம். ஆயினும் இவ்வளவு நாட்களாக அதை யாரும் கலைப்படைப்பாக அணுகவில்லை. நானறிந்த வகையில் முதன்முறையாக எஸ்.ஜே.சூர்யா திரையில் காட்சியாக விரித்தார்.

    இப்பதிவு எனக்கு ‘நியூ’ திரைப்படத்தின் அப்பாடல் காட்சியை நினைவுபடுத்துகிறது.

    ’குழந்தை வளர்ப்பு’ என்கிற விஷயம் தமிழ் பண்பாட்டில் இன்றுவரை ஆண்களுக்கு புரியாத புதிர். சிரிக்கும் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதும், அழும் குழந்தையை நாலு சாத்து சாத்துவதும்தான் ஆண்களின் இயல்பு/திமிர். மாறாக தாயாகவும் மாறி, ஒரு குழந்தையை வளர்க்கும் தகப்பனின் இயல்பான, தெளிவான உரையாடலாக இப்பதிவு வெளிப்படுகிறது. தன் குழந்தையை வளர்க்கும்போது, தன்னையும் தன் சகோதர சகோதரிகளையும் வளர்க்க, தன்னுடைய தாய் எவ்வளவு பாடுபட்டிருப்பாள் என்கிற வருத்தத்தை போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ஆண்கள், பெண்களின் சிரமங்களையும், வாழ்வியல் நடைமுறைகளையும் உணரும் காலம் இது. ஆணாதிக்கம் குறைகிறது, சமத்துவம் மலருகிறது என்கிற அடிப்படையில் இது வரவேற்கத்தக்க ஒரு சூழல்தான்.

    இந்தப் போக்கினை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. பதிவை படித்து முடித்ததும் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர்......

    ReplyDelete
  11. அம்மையப்பன் ஜாக்கி:). அருமை.

    ReplyDelete
  12. குழந்தையின் அருகிலிருந்து அதன் வளர்ச்சியைக் கவனிப்பதற்கு உங்களுக்குக் கொடுத்து வைக்கிறது. பூ மலர்வது போன்றது குழந்தை வளர்ந்து ஆளாகிற விஷயம். உங்கள் உணர்வுகளை எங்களுக்கும் கடத்தி இருக்கிறிர்கள் ஜாக்கி. உங்களுக்கும் யாழினிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை சேகர்...

    ReplyDelete
  13. இப்படி ஒரு முகத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை சார்.
    சும்மாவே பெண் குழந்தைகளுக்கு அப்பான்னா உயிர்..உங்க பொண்ணுக்கு இன்னும் நிறையவே இருக்கப்போகுது...
    லக்கி யாழினி குட்டி!நிஜமாவே சூப்பர் பதிவு..
    என்னைக் கவர்ந்தது உங்களின் வெளிப்படையான எழுத்து நடையே..உண்மைய சொல்ல ரொம்ப ரொம்ப தைரியம் வேணும்.
    ஹட்ஸ் ஆப் டு யூ!!!

    ReplyDelete
  14. குழந்தையும் தெய்வமும் ஒன்று...
    நீங்க ரொம்ப யோகம் பண்ணிருக்கீங்க...
    அதான் இப்படி ஒரு வாய்பு...

    ReplyDelete
  15. Beautiful and 'Saralamana Nadai'. First about your dear mother, your father, your daughter and your wife - and then your daily chores mostly tending to your daughter, which, of course, you enjoy performing - are all top class writing. In a way, it is your SPRING TIME now. Usually, it is the mother who enjoys the company of small kids during the day, but in your case, you are indeed lucky to be with the daughter. When we become old, what remains will be just the loving memories like these moments.

    ReplyDelete
  16. வாழ்க்கை ஜாக்கி போல் அமைய வேண்டும் என்று பல தடவை யோசித்ததுண்டு, எதையும் ஒரு நெகிழ்ச்சியுடம் சந்தோஷமாக அணுகிறீர்கள், கொண்டாடுகீறீர்கள்

    ReplyDelete
  17. சொல்வதற்கு வார்த்தை இல்லை.....ரசித்து செய்கிறீர்கள்....மிக சிலருக்கு மட்டுமே கிடைக்கும்...குழந்தையின் அருகாமை....உங்களுக்கு கிடைத்து இருக்கிறது!!....தந்தை ஆகிய நாம்...என்ன செய்தாலும்.....குழந்தைகளுக்கு...அம்மா...அம்மா.தான்..!! ...அப்புறம்...தங்கைக்கு திருமணம்....விரைவில் நடைபெறும்....கவலை படாதீர்கள்...:))

    ReplyDelete
  18. முதல்முறையாக உங்கள் வலைப்பூ அறிமுகம். அருமையான பதிவு. யதார்த்தம்.அக்கம்பக்கம் இப்படிப் பலரையும் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். மெளனகீதங்கள் இசைக்கும் மனிதர்கள். வாழ்த்துகள். குழந்தைக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசிகள்.

    ReplyDelete
  19. மறந்துட்டேனே, உங்கள் தந்தையின் உடல் நலனுக்கும், சகோதரியின் திருமணம் நடைபெறவும் பிரார்த்தனைகள். அவங்க இங்கே இருந்தால் உங்களுக்கும் கொஞ்சம் வசதி. அவர்களுக்கும் நன்மை. முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  20. சூப்பர் பதிவு.... நானும் எனது மகனை கைக்குழந்தையாக இருக்கும் போது சுமார் இரண்டு மாதங்கள் நீங்கள் செய்த வேலைகள் அனைத்தையும் செய்திருக்கிறேன். பிள்ளைகள் வளர்ந்து பெரியவள் ஒன்பதாம் வகுப்பு, மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மனைவி வெளியூரில் வேலைக்கு சென்றதால் மறுபடி அனைத்து வேலைகளையும் ஒரு வருடம் செய்திருக்கிறேன். பெண்கள் படும் கஷ்டம் அப்போதுதான் புரியும்

    ReplyDelete
  21. கட்டுரையை படித்தவுடன் ஒரு வலி இருக்கிறது ஜாக்கி ஆனால் அது சுகமாயிருக்கிறது...!

    கிரேட்....!!!!

    ReplyDelete
  22. நன்றி சங்கர் மச்சி...நீ சொல்வது உண்மைதான்.,.

    நன்றி தம்பி ரோமியோ..

    நன்றி பிரசன்னா..உங்கள் அம்மாவை நினைத்தால் எனக்கு சந்தோஷமே..

    நன்றி பிடி செந்தில் குமார்..

    ReplyDelete
  23. படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

    யாழினியுடன் இனிதாகப் பொழுதுகள் செல்லட்டும்.

    ReplyDelete
  24. உங்களை போல தான் நானும் உதவிக்கு ஆள் இல்லாமல் நிறைய நாட்கள் திண்டாடி இருக்கிறேன்.. குழந்தை பிறந்து முதல் இரண்டு வருடங்கள் மிகவும் அவஸ்த்தை தான் அண்ணே.//
    உண்மைதான் ரமேஷ்.

    ReplyDelete
  25. நெகிழ்ச்சியான பதிவு.

    ReplyDelete
  26. டேய் யாழினி அப்பா ...................................................................................................................
    ........
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  27. Very touching post.
    When you have kids, the days are long and years are short.

    ReplyDelete
  28. Touching post.
    When you have kids, the days are long and years are short.

    ReplyDelete
  29. யாழினிக்கான நல்ல அப்பா :)
    தலைமுறை மாறிடும் போது பெண்களுக்கான வலிகள் தோள் மாற்றப்படும்... அதுவே நல்லது
    வாழ்த்துகள் ஜாக்கி :)

    ReplyDelete
  30. பதிவு நெகிழ்ச்சியாக இருந்தது .அப்பா சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள் .
    கடைசி மூன்று பத்திகளும் கண்ணீர் வர வைத்தன .

    ReplyDelete
  31. இதற்குக் கொடுப்பனவு வேண்டும். அனுபவியுங்கள்.
    மகளுக்கு கட்டாயம் தமிழ் கற்பிக்கவும். அவள் காலத்தில் இவற்றை அவள் அனுபவித்து வாசிக்கவேண்டும்.அப்பாவைக் கொண்டாட வேண்டும்.

    ReplyDelete
  32. வார்த்தை வரவில்லை ஆனால் மிகவும் விரும்புகிறேன்

    ReplyDelete
  33. > பதிவை படித்து முடித்ததும் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர்......

    same-pinch!
    touching Jackie..

    ReplyDelete
  34. ennanu solla ponga.......ipadi sentimentaa eluthi eluthi kalakareenga... its good to knw hw u feel sir..really awesome. thanks for sharing with us

    ReplyDelete
  35. இதைவிட இயல்பா யாராலும் சொல்ல முடியாது. அருமை.

    ReplyDelete
  36. உங்கள் பதிவைப் படிக்கும் ஆண்கள் கூட மாட பெண்களுக்கு உதவாமல் இருந்தற்காக வெட்க்கப்படுவாங்க, படனும்.

    ReplyDelete
  37. உங்களின் பல பதிவுகள் கமெண்ட் போட முடியாத அளவிற்கு நெக்குருக செய்கின்றன... இரவில் தூக்கத்தில் அழும் என் மகனுக்கு பால் கலக்கி கொண்டு வரும்போது தூக்கம் கண்ணை சொக்கினாலும் ஒரு சுகம் வரும் பாருங்கள்... அதையே பெரிதாக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது ஒரு சாட்டையடி...

    ReplyDelete
  38. chance illa anna ... ungala polla oru thanthai kidaika Yazhlini romba kuduthu vachi irukanum.. ethana kanavargal inaikum manaviya oru poga porula pakuranga ...

    simply ur great na

    ReplyDelete
  39. கொடுத்துவெச்ச யாழினி..
    கொடுத்துவெச்ச ஜாக்கி..
    கொடுத்துவெச்ச மிசஸ் ஜாக்கி...

    ReplyDelete
  40. காலமும் குழந்தையும் நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.(அனுபவம் தான்!) . தாங்கள் அதை உறுதிப் படுத்தி இருக்கிறீர்கள்! மேலும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்கிறீர்கள்!படிக்கவும் நினைக்கவும் மிக சந்தோஷமாக இருக்கிறது.
    பெண்கள் வலி உணர்த்தும் அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள்!நன்றி!

    ReplyDelete
  41. அருமையான பதிவு. இவ்வளவு வேலை செய்தும் வீட்டின் ஆண்மகன் அவளிடம் 'நீ எவ்வளவு வேலை செய்கிறாய்?' என்று பரிவோடு ஒரு வார்த்தை கேட்காத தலைமுறை அது. கண்டிப்பாக உள்ளே அதை எதிர்பார்த்து எதிர்பார்த்து பின்னர் கைவிட்டிருப்பார்கள். இப்போதாவது அது நடக்க வேண்டும். சென்ற தலைமுறை பெண்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவர்கள். //

    உண்மைதான் மாயன் தான் பெற்ற குழந்தையின் ஆய் கழுவுவது பெண்களின் வேலை என்று இன்னமும் பல தந்தைகள் இருக்கின்றார்கள்..அவர்களுக்கு இது புரிந்தால் போதும்.,...
    உண்மைதான் என் அம்மா அது போலான பாராட்டை ஒரு போதும் என் அப்பாவிடம் இருந்து வாங்கியது இல்லை...அதனால்தான் நான் இப்படி....

    ReplyDelete
  42. ஜாக்கியின் இந்த முகம் எனக்குப் புதிது.நன்றாக இருங்கள் ஜாக்கி.
    குழந்தை சீக்கிரம் வளர்ந்து விடுவாள்.
    அதுவரை அவளுடைய அருகாமையை அனுபவிக்கக் கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.அம்மாவுக்க்கு செய்ய முடியாததைக் குழந்தைக்குச் செய்யுங்கள்.மன்நிறைவாக இருக்கிறது. //

    வல்லி மேடம் நீங்கள் என் தளத்திற்கு வந்து பின்னுட்டத்தில் வெளிபடுத்திக்கொண்டதுக்கும் உங்கள் ஆசிக்கும் மிக்க நன்றி..

    யாழினியோடு நான் செலவிடும் நேரங்கள் கோடி பணம் கொடுத்தாலும் திரும்ப வராது...

    நன்றி உங்கள் ஆசிக்கு....

    ReplyDelete
  43. ’குழந்தை வளர்ப்பு’ என்கிற விஷயம் தமிழ் பண்பாட்டில் இன்றுவரை ஆண்களுக்கு புரியாத புதிர். சிரிக்கும் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதும், அழும் குழந்தையை நாலு சாத்து சாத்துவதும்தான் ஆண்களின் இயல்பு/திமிர். மாறாக தாயாகவும் மாறி, ஒரு குழந்தையை வளர்க்கும் தகப்பனின் இயல்பான, தெளிவான உரையாடலாக இப்பதிவு வெளிப்படுகிறது. //

    நன்றி லக்கி உங்கள் நெகிழ்ச்சியான பின்னுட்டத்துக்கும் போன் காலுக்கும்....

    ReplyDelete
  44. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ponsiva,தமிழ் அமுதன்,சங்கவி,வானம்பாடிகள்,கணேஷ் போன்றவர்களுக்கு எனது நன்றிகள்

    ReplyDelete
  45. Beautiful and 'Saralamana Nadai'. First about your dear mother, your father, your daughter and your wife - and then your daily chores mostly tending to your daughter, which, of course, you enjoy performing - are all top class writing. In a way, it is your SPRING TIME now. Usually, it is the mother who enjoys the company of small kids during the day, but in your case, you are indeed lucky to be with the daughter. When we become old, what remains will be just the loving memories like these moments. ///

    நன்றி சந்திர மவுலி...
    பொருளாதார பிரச்சனைகள் இருந்தாலும் அதை மறக்க வைப்பது அவளோடு இருக்கும் நிமிடங்கள்தான்.....உங்கள் பின்னுட்டம் நெகிழ்ச்சியாக இருந்தது.. நன்றி..

    ReplyDelete
  46. இப்படி ஒரு முகத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை சார்.
    சும்மாவே பெண் குழந்தைகளுக்கு அப்பான்னா உயிர்..உங்க பொண்ணுக்கு இன்னும் நிறையவே இருக்கப்போகுது...
    லக்கி யாழினி குட்டி!நிஜமாவே சூப்பர் பதிவு..
    என்னைக் கவர்ந்தது உங்களின் வெளிப்படையான எழுத்து நடையே..உண்மைய சொல்ல ரொம்ப ரொம்ப தைரியம் வேணும்.
    ஹட்ஸ் ஆப் டு யூ!!! //

    திலுக்ஷனா... நான் ஒரு ஆர்டினரி மேன்.. காமன் மேன்.. என்னை பற்றிய பிம்பங்கள் பலரிடம் பலவாறாக இருக்கின்றன..மேலே வல்லி மேடம் மற்றும் நீங்கள் என இரண்டு பேரும் என் புதிய முகத்தை பற்றி குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.. கோபக்காரன் என்பதால் மென்மையான உணர்வுகள் இல்லாதவன் இல்லை நான் ஒரு காமன் மேன்..மற்றவர்கள் போல அதிகம் நடிக்க மாட்டேன்..
    மிக்க நன்றி.. உங்கள் பின்னுட்டத்துக்கும் உங்கள் ஆசிக்கும்...

    ReplyDelete
  47. முதல்முறையாக உங்கள் வலைப்பூ அறிமுகம். அருமையான பதிவு. யதார்த்தம்.அக்கம்பக்கம் இப்படிப் பலரையும் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். மெளனகீதங்கள் இசைக்கும் மனிதர்கள். வாழ்த்துகள். குழந்தைக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசிகள். //

    கீதா சாம்பசிவம்.. வாழ்த்துக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  48. நானும் எனது மகனை கைக்குழந்தையாக இருக்கும் போது சுமார் இரண்டு மாதங்கள் நீங்கள் செய்த வேலைகள் அனைத்தையும் செய்திருக்கிறேன். பிள்ளைகள் வளர்ந்து பெரியவள் ஒன்பதாம் வகுப்பு, மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மனைவி வெளியூரில் வேலைக்கு சென்றதால் மறுபடி அனைத்து வேலைகளையும் ஒரு வருடம் செய்திருக்கிறேன். பெண்கள் படும் கஷ்டம் அப்போதுதான் புரியும் //

    உண்மைதான் பொன்சந்தர்.

    ReplyDelete
  49. சொல்வதற்கு வார்த்தை இல்லை.....ரசித்து செய்கிறீர்கள்....மிக சிலருக்கு மட்டுமே கிடைக்கும்...குழந்தையின் அருகாமை....உங்களுக்கு கிடைத்து இருக்கிறது!!....தந்தை ஆகிய நாம்...என்ன செய்தாலும்.....குழந்தைகளுக்கு...அம்மா...அம்மா.தான்..!! ...அப்புறம்...தங்கைக்கு திருமணம்....விரைவில் நடைபெறும்....கவலை படாதீர்கள்...:))///

    நன்றி கடலூர்காரரே...

    ReplyDelete
  50. நெகிழ்ச்சியாக தங்க்ள் மன உணர்வுகளை வெளிபடுத்தியதோடு மட்டும் அல்லாமல் ஆசிகளும் வழங்கிய

    மு. முத்து குமார்,dheva ,மாதேவி,KSGOA,சரவணகுமரன்,Balaganesan Swaminathan,நாடோடிப் பையன்,Caricaturist Sugumarj,eangelin,மேரிஜோசப் ,Butter_cutter,மாதேஸ்வரன்,kakakapo,handru2110, கோவி.கண்ணன்,akthi,பத்மா,வெண் புரவி,sriram அத்தனை நெஞ்சங்களுக்கும் என் அன்பான நெகிழ்ச்சியான நன்றிகள்.

    ReplyDelete
  51. வாழ்க்கை ஜாக்கி போல் அமைய வேண்டும் என்று பல தடவை யோசித்ததுண்டு, எதையும் ஒரு நெகிழ்ச்சியுடம் சந்தோஷமாக அணுகிறீர்கள், கொண்டாடுகீறீர்கள் //

    நன்றி தர்ஷன்...ஆனால் வருத்தப்பட ,சொல்லி அழ நிறைய விஷயம் இருக்கின்றது.. ஆனால் என்னை உற்சாகமானவனாக மாற்றிக்கொள்கின்றேன்..எது பற்றியும் கவலை கொள்ளாமல்....

    ReplyDelete
  52. இதற்குக் கொடுப்பனவு வேண்டும். அனுபவியுங்கள்.
    மகளுக்கு கட்டாயம் தமிழ் கற்பிக்கவும். அவள் காலத்தில் இவற்றை அவள் அனுபவித்து வாசிக்கவேண்டும்.அப்பாவைக் கொண்டாட வேண்டும். // யோகன் மிக்க நன்றி..
    தமிழ் கற்றுக்கொடுக்காமல் எங்கே போக போகின்றேன்.. என் பிள்ளைக்கு என்னை விட தமிழ் சிறப்பாக கற்றுக்கொடுப்பேன்..

    ReplyDelete
  53. உங்களின் பல பதிவுகள் கமெண்ட் போட முடியாத அளவிற்கு நெக்குருக செய்கின்றன... இரவில் தூக்கத்தில் அழும் என் மகனுக்கு பால் கலக்கி கொண்டு வரும்போது தூக்கம் கண்ணை சொக்கினாலும் ஒரு சுகம் வரும் பாருங்கள்... அதையே பெரிதாக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது ஒரு சாட்டையடி... //

    ஒரு நாள் என் மனைவிக்கு பத்து பாத்திரங்கள் கழுவி கொடுத்து உதவி செய்தேன்.. அதையே பெருமையாக நினைத்தேன்.. ஆனால் சாப்பிடும் போது குழந்தை ஆய் போய் விடுவாள்.. அதை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுவது இருக்கின்றேதே அது ரொம்ப கொடுமை.. என் அம்மா இப்படித்தானே செய்து இருப்பாள்? என் மனைவி இப்படித்தானே செய்து இருப்பாள் என்று அன்று எனக்கு விழுந்த சாட்டையடி இன்னும் வின் வின் என்று தெரிக்கின்றது என்ன செய்ய??

    ReplyDelete
  54. டேய் யாழினி அப்பா ...................................................................................................................
    ........
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம் //

    மச்சி சொல்ல வார்த்தை இல்லையா??

    ReplyDelete
  55. //மனைவிக்கு ஞாயிறு அன்றுதான் விடுமுறை... எனக்கும் அன்றுதான் விடுமுறை..//
    நான் ரசித்த வரி.

    //கார்டூன் சேனலில் வரும் டோராவிடம் ஏதேதோ பேசிகின்றாள்..//
    இந்த வரியை படிக்கும்போது யாழினி குட்டிக்கு பக்கத்தில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு...

    '' ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் கூடவே ஒரு தந்தையும் பிறக்கிறான் ''
    அபியும் நானும் திரைப்படத்தில் எழுதப்பட்ட வரிகள் இந்த பதிவை படிக்கும்போது நினைவுக்கு வந்தது தவிர்க்கமுடியாததே...

    யாழினி வந்த பிறகு உங்களுக்கே தெரியாமல் உங்கள் எழுத்துகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    வரவேற்க்கத்தக்க மாற்றம்.
    எல்லாப் புகழும் யாழினி குட்டிக்கே!

    ReplyDelete
  56. //மனைவிக்கு ஞாயிறு அன்றுதான் விடுமுறை... எனக்கும் அன்றுதான் விடுமுறை..//
    நான் ரசித்த வரி.

    //கார்டூன் சேனலில் வரும் டோராவிடம் ஏதேதோ பேசிகின்றாள்..//
    இந்த வரியை படிக்கும்போது யாழினி குட்டிக்கு பக்கத்தில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு...

    '' ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் கூடவே ஒரு தந்தையும் பிறக்கிறான் ''
    அபியும் நானும் திரைப்படத்தில் எழுதப்பட்ட வரிகள் இந்த பதிவை படிக்கும்போது நினைவுக்கு வந்தது தவிர்க்கமுடியாததே...

    யாழினி வந்த பிறகு உங்களுக்கே தெரியாமல் உங்கள் எழுத்துகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    வரவேற்க்கத்தக்க மாற்றம்.
    எல்லாப் புகழும் யாழினி குட்டிக்கே!

    ReplyDelete
  57. ஜாக்கி
    நீண்ட நாட்களுக்கு பின் பின்னூட்டமிடுகிறேன் இல்லை இட வைத்துள்ளீர்கள்.
    உண்மையில் உங்கள் தாய்க்கு பணிவிடை நீங்கள் செய்வதைபோலவே உணர்கிறேன்.
    ஆனால் இதையெல்லாம் நானும் என் மனைவிக்கு குழந்தைகள் விஷயத்தில் செய்திருக்கிறேன் அவ்வப்போது செய்தும் வருகிறேன். சுகமான விஷயங்கள்.தந்தை நலம் பெற மற்றும் நம் தங்கைக்கும் நல்ல வரன் அமைய வேண்டுகிறேன்.
    யாழினுது குழலினிது என்பார் தன்மக்கள்
    மழலை சொல் கேளாதோர்
    யாழினிக்கு அன்பான முத்தங்கள் நூறு.

    ReplyDelete
  58. அன்புள்ள ஜாக்கி சார், நான் சரியாக ஒரு வருடம் முன்பு உங்களின் அன்புள்ள அம்மா பதிவை படித்துவிட்டு ரெகுலராக உங்கள் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன், இப்போதும் நான் ஜாக்கியின் வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  59. Hi Jachie,

    We have 2 similarities.
    1. Yazhini is 1+ month elder than my sweet daughter.
    2. We also stay near Porur.

    Where do u stay exactly?

    -Mohan

    ReplyDelete
  60. Sir , you are really great... - Ravikumar

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner