கடந்த பதினைந்து நாட்களாக கொட்டிதீர்த்த அடைமழை நேற்றில் இருந்து அது தனது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள தயார் ஆகி இருக்கின்றது..
இதுவரை தமிழ்நாட்டில் மழைக்கு 34 பேருக்கு மேல் பலியாகி இருக்கின்றார்கள்..
சில வருடங்களுக்கு முன் சென்னையில் அந்த காட்சியை மழைக்காலங்களில் கவனித்து இருக்கலாம்..சென்னை சாலை ஓரங்களில் கடை வைத்து இருக்கும் வியாபாரிகள், தங்கள் கடை முன் சாலையில் இருக்கும் பெரிய சாக்கடை குழிகளான மேன் ஹோல்களிலும், நடைபாதை ஓரத்தில் இருக்கும் கழிவு நீர்க்கால்வாய்களில் சிமெண்ட் சிலாப்பு பெயர்ந்து, அதை மழை நீர் சூழ்ந்து இருந்தாலோ? அல்லது சாலையில் மிகப்பெரிய பள்ளம் இருந்தாலோ? வாகன ஓட்டிக்கும் பாதசாரிக்கும் அதனை எச்சரிக்கை அறிவிப்பு செய்யும் விதமாக மரக்கிளை ஒடித்து அந்த மழை நீர் பள்ளத்தில் சொருகி பொதுமக்களுக்கும் எச்சரிக்கை செய்வார்கள்.. ஆனால் இப்போது அப்படி எச்சரிக்கை செய்வது குறைந்து போய் இருக்கின்றது.. யார் எப்படி போன எனக்கென்ன அப்படின்ற அலட்சிய மனோபாவம்..
முக்கியமாக டீக்கடை வைத்து இருப்பவர்கள் இதனை செய்வார்கள். சென்னையின் பரபரப்பான உஸ்மான் சாலையின் ஓரத்தில் இருக்கும் கழிவு நீர் கால்வாயில் சரளா என்ற 22 வயது மதிக்க தக்க இளம் ஆசிரியை தவறி விழுந்து இறந்து போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன... அட பொறம் போக்கு மூதேவிங்களா? அந்த பொண்ணு என்ன குழந்தையாடா ? தவறி விழறதுக்கு???
ஊரே தண்ணியில் மெதக்குது.. எங்க பள்ளம் இருக்குன்னு அறிவிக்கறது நகராட்சி ஊழியர்களோட வேலை... அதை செய்ய துப்பில்லை.. அந்த பொண்ணு தவறி விழந்துடுச்சாம்...ஆனால் அந்த பெண் இறந்த பிறகு அதே பள்ளத்தை சுற்றி பேரிகாட் மற்றும் எச்சரிக்கை பட்டைகளை நீட்டி முழக்கி கட்டி இருக்கின்றார்கள்...இப்பவாவது செஞ்சிங்கலே....
சாலை ஓரங்களில் இருக்கும் மழை நீர் கால்வாய்களில் பல இடங்களில் சிமெண்ட் சிலாப்பு இருக்கவே இருக்காது... நல்லா வெயில் அடிக்கும் நாளிலேயே பலர் விழந்து எழுந்து போவாங்க... அதே தெருவை அடிக்கடி யூஸ் செய்யறவனுக்கு வேனா தெரியும்... எங்க பள்ளம் இருக்கும் எங்க மோடு இருக்கும்னு...
கேகேநகர் பக்கத்துல இருக்கின்ற எம்ஜிஆர் நகரில் இருந்து வடக்கு உஸ்மான் ரோட்டுக்கு போறவனுக்கு எந்த இடத்துல பள்ளம் இருக்கு? எந்த இடத்தில் மோடு இருக்குன்னு எவனுக்கு தெரியும்????
சாலைகளில் பள்ளம் இருக்கும் இடத்தில் குடியிருக்கும் யாராவது அந்த எச்சரிக்கையை செய்து இருக்கலாம்.. ஆனால் அந்த இளம் பெண் இறந்து போன குழிக்கு நேராய் எதிரில், ஜாய் அலுக்காஸ் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள் இருக்கும் இடம்... அங்கு போய் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது ஈனச்செயல்.....அது மட்டும் அல்ல அது போல எச்சரிக்கை செய்யும் மரக்கிளைகள் சாலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதாபிமானத்தோடு இப்போதும் இருக்கத்தான் செய்கின்றது.. ..
ஒரு சில இடங்களில் ஆட்டோ டிரைவர்கள்.. டிராபிக்கை ஒழுங்கு படுத்துகின்றார்கள்..மழை நீரில் மறைந்து இருக்கும் பள்ளங்களை இனம் கண்டுக்கொள்ள, கார் டயர் மற்றும் ஆட்டோ டயரை போட்டு எச்சரிக்கை செய்கின்றார்கள்..
டிவியில் இரவு நேரங்களில் ஜஸ்ட் பார் பன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள்... பொதுமக்கள் சிக்கலில் மாட்ட வைத்து சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி அது... அது போல பெரும் பள்ளங்களில் விழுந்து எழுந்து செல்பவரை இப்போதெல்லாம் பார்த்து நகைக்கின்றார்கள்.. போரூர் சிக்னலில் நடிகர் விஜய்யின் சங்கீதா கல்யாண மண்டபத்துக்கு எதிரில் இது போன்ற காட்சிகளை ஏராளமாய் பார்க்கலாம்.
அப்ப அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள்..?? இந்தியாவில் அதிகாரியும், அரசு ஊழியரும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையையும் செய்வது இல்லை..இவர்கள் மக்கள் பணியை எப்படி செய்ய போகின்றார்கள்..??
அப்ப கவர்மெண்ட் என்ன செய்யுது----??போன ஆட்சியில கொள்ளை அடிச்சிட்டாங்க.. நாங்க இப்பதான் ஆட்சிக்கு வந்து இருக்கோம்... அதிகாரிகளின் மெத்தன போக்கினால் ஏற்ப்பட்ட விபத்து இது...
எது எப்படியோ ஏகப்பட்ட பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்து இருந்த, ஒரு இளம் பெண் 22 வயதில் மரித்து போய் இருக்கின்றார்..
பள்ளி முடிந்ததும் தனது ஆங்கில மொழியை வளப்படுத்த கோச்சிங் கிளாசுக்கு போனவர் வீட்டுக்கு திரும்பவேயில்லை...
தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம்.. அதிகாரிகளின் அலட்சியம் ஒரு உயிர் போய் விட்டது...சாரி தப்பா சொல்லிட்டேன். சிறுமி சரளா தவிறி விழுந்து இறந்து விட்டார்...
ஆசிரியர் சராளாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..பரபரப்பான சென்னை உஸ்மான் சாலையில் இருந்த மழை நீர் கால்வாயில் விழுந்ததை யாரும் கவனிக்காமல் போனது துரதிஷ்ட்டம்தான்.
அப்ப இதுக்கு தீர்வு..அதான் ஒன்னுக்கு ரெண்டு லட்சமா பணம் நிவாரணமா கொடுத்தாச்சில்லை... அப்புறம் என்ன பீலிங்???
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஜாக்கியின் எழுத்துக்கள் ஜாக்கிரதை செய்கிறது..!!
ReplyDeleteநிதர்சனத்தை நெத்தியடியாய் சொல்கிறது உங்கள் எழுத்துக்கள்..!!
ReplyDeleteம்ம்..!! ம்ம்..!!மீசையை முறுக்கிவிட்டுக்கொள்ளலாம்..!!
மழையினால் மட்டுமே சென்னைப்போன்ற பெருநகரங்களின் அவலங்கள் படம்பிடித்து காட்டப்படுகிறது... முன்கூட்டியே எந்த ஏற்பாடுகள் கவனிக்காமல் விடுவதின் விளைவு இது...
ReplyDeleteமூடாமல் இருக்கும் சாக்கடையை யாரும் கண்டுக்கொள்ளாமல் அப்படியே போய் வருவோம்.. மழைக்கு முன்பாகவே அதை சரி செய்தால் மழைக்காலத்தில் உயிர் இழப்பை சரி செய்யலாம்..
மழை என்பதின் விளைவில் இருந்து யாரும் தப்ப முடியாது அடைமழைக்கு ஏற்படும் பிரச்சனைகளை யாரும் எதும்செய்ய முடியாது இருந்தாலும் உயிர் இழப்புகளை சரிசெய்ய முன் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளை கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்..
ReplyDeleteஇனி உயிர் இழப்பு இல்லாத மழையை சந்திப்போம்...
பகிர்வுக்கு நன்றி ஜாக்கி...
இந்த உலகத்திலே மனித உயிரை மிகவும் மலிவானதாக மதிக்கும் நாடு இந்தியா..அதிலும் தமிழ்நாட்டு உயிர் ரொம்ப மலிவு...இதே மனநிலையில்தான் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களிலும் செயல்படுகிறார்கள்...இவன் ஒருத்தன் செத்தா அந்த இழப்பை இந்தியா தாங்காதா என்ன? இருந்து என்னத்தை பெருசா கிழிக்கப்போறான்..ஜனத்தொகையில ஒண்ணு குறையட்டும்.. அப்படீன்னு ஒரு உயர் அதிகாரியே பேசுவதை நான் கேட்டிருக்கேன்.. என்ன ஒரு மெத்தனம்...அலட்சியம்...அன்றைய தேதியில் அவன் பிள்ளையோட கழுத்தில கத்தி இருந்தா இதைச்சொல்லுவானா...
ReplyDeleteசர்க்கார் வேலை வாங்கும்வரை நாய் மாதிரி லோ..லோ..லோன்னு அலையா அலையிரது..ஒரு பதிவியில உக்காந்துட்டா எல்லாத்தையும் நாய் மாதிரி நடத்துறது...
இவனுங்களுக்கெல்லாம்.....
இந்த உலகத்திலே மனித உயிரை மிகவும் மலிவானதாக மதிக்கும் நாடு இந்தியா..அதிலும் தமிழ்நாட்டு உயிர் ரொம்ப மலிவு...இதே மனநிலையில்தான் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களிலும் செயல்படுகிறார்கள்...இவன் ஒருத்தன் செத்தா அந்த இழப்பை இந்தியா தாங்காதா என்ன? இருந்து என்னத்தை பெருசா கிழிக்கப்போறான்..ஜனத்தொகையில ஒண்ணு குறையட்டும்.. அப்படீன்னு ஒரு உயர் அதிகாரியே பேசுவதை நான் கேட்டிருக்கேன்.. என்ன ஒரு மெத்தனம்...அலட்சியம்...அன்றைய தேதியில் அவன் பிள்ளையோட கழுத்தில கத்தி இருந்தா இதைச்சொல்லுவானா...
ReplyDeleteசர்க்கார் வேலை வாங்கும்வரை நாய் மாதிரி லோ..லோ..லோன்னு அலையா அலையிரது..ஒரு பதிவியில உக்காந்துட்டா எல்லாத்தையும் நாய் மாதிரி நடத்துறது...
இவனுங்களுக்கெல்லாம்.....
///தாதாயிசம் போல என் மனதில் தோன்றுவதை அப்படியே இந்த இடத்தில் எழுதுகின்றேன்....நான் ரசிப்பதை, அது அபத்தமாகவே இருந்தாலும், என் மனதில் தோன்றியதை எழுதவே எனக்கு விருப்பம்..////
ReplyDeleteவெல்டன்...!
கீப்பிட் அப்...!
உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...!
நண்பரே...!
மாநகரத்தில்
மனிதம் மரித்து.....!
மனிதன் மனிதாபிமானத்தை மறந்து...!
ஓர் யுகம் ஆகிறது...!
அசடாய்... இருக்கீகளே...!
இதுக்கே இப்படி வருத்தப்பட்டா...!
ஒவ்வொரு வினாடியும் வருத்தப்படவேண்டியிருக்கும்...!
நான்... (நான் என்பது நானும்... என் மாநகரத்து மாக்களையும் சேர்த்து)
வரும் வழியில்...
நடைபாதையில்...
ஓர் மனிதன் இறந்துகிடந்தால்...
திரும்பிக்கூட பார்க்கமாட்டேன்...!
காரணம்
அவசரம் அவசரமாய்...! நான் அலுவலகம் நேரத்திற்கு செல்லவேண்டாமா...?
அவசரம் அவசரமாய்...! சம்பாதிக்க வேண்டாமா...?
......................வேண்டாமா...? ......................வேண்டாமா...? ......................வேண்டாமா...?
சம்பாதித்தபின்... ஓய்வெடுக்க ஊட்டி.. கொடைக்கானல்... சிம்லா போய் ஜாலியா அனுபவிக்க வேண்டாமா...!
அவசரம்...!
அவசரமாய்...!
சம்பாதித்து முடித்தபின்....
அவசரம் அவசரமாய்...
எல்லாம் முடிச்சிட்டு....
என் பிள்ளை....
அவசரம் அவசரமாய்
என்னக் கொண்டு போய் "முதியர் இல்லத்தில்" ...
சேர்த்துவிடுவான்...!
அப்போ
எனக்கு தெரியும்...! புரியும்...!
"மனிதம்...! மனிதாபிமானம்...!" என்றால் என்னவென்று...!
நல்ல பதிவு...!
வாழ்த்துக்கள்...!
பாரிமுனையிலும் இதே கதி தான்! ரத்தன் பஜார், பூக்கடை, மண்ணடி பகுதிகள் பலவற்றில் முட்டளவு தண்ணீர். அண்ணா நகரிலேயே கூட இதே அவலத்தைக் காண முடிகிறது. சென்னை மழையால் மாநரகமாகி விட்டது.
ReplyDelete///அப்ப இதுக்கு தீர்வு..அதான் ஒன்னுக்கு ரெண்டு லட்சமா பணம் நிவாரணமா கொடுத்தாச்சில்லை... அப்புறம் என்ன பீலிங்???///
ReplyDeleteஆட்சி அதிகாரம் மாறினாலும் மக்களின் துன்பத்திற்க்கு விடிவுகாலம் வருவதில்லை. எனக்கு தெரிந்து இன்றை தேதியில் ஒர் உயிருக்கு விலை நிற்னையம் செய்துள்ள நாடு இந்தியா மட்டும்தான். உயிர் இழப்பின் முறையை பொருத்து ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை. என்றைக்கு இந்த அவலம் ஒழியுமோ தெரியவில்லை.
காசு காசு... எல்லேமே காசு. சுடுகாட்டில் காசு, சாக்கடையில் காசு, மரணத்தில் காசு! மனிதா நீ எங்கே போனாய், என்ன ஆனாய்?
ReplyDeleteஇதில் கொடுமை என்னவென்றால் 10 மணி நேரமாய் யாருமே பிணத்தை பார்க்கவில்லையாம் மிதக்கும்போதும்.
ReplyDeleteungaloda
ReplyDeleteஇறந்து போன ஆத்மாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஉங்களோட "கால ஓட்டத்தில் காணாமல் போனவை - இல்" மனிதாபிமானத்தையும் சேர்க்கணும்!
கருத்துகளை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி காஞ்சி முரளி, சேட்டை, கலைராஜ், தங்கம்..மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
எப்போதுமே மனித உயிர்களை துச்சமாக மதிப்பதால்தான் இந்த பதிவு நண்பர்களே.
தலையிடியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரிகிறது..
ReplyDeleteமனிதாபிமானம்னா?? கேட்கும் காலம் எம்மை நெருங்குகிறது..
no value for the humban being ???
ReplyDelete