கொரிய ஆக்ஷன் படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படுபவை என்றாலும் கொரிய படங்களுக்கு உரிதான சென்டிமென்ட் காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது...
பொதுவாய் தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இருக்கும் பங்காளி சண்டை உலகம் அறிந்த ஒன்று..... அதுதான் இந்த படத்தின் அடி நாதம்...
=======================
Shiri-1999-தென் கொரியா படத்தின் ஒன் லைன்...
தென் கொரியா முழுவதும் நார்த் கொரியா ராணுவத்தினர் நன்கு பயிற்சி பெற்றவர்கள் நாடு முழுவதும் நுழைந்தால்..???? என்னவாகும்..
===================
Shiri-1999-தென் கொரியா படத்தின் கதை என்ன???
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு வடகொரியா தென் கொரியா என்ற இரண்டு நாடுகள் உருவாகின்றன... அந்த நாளில் இருந்து பங்காளி சண்டைக்கு குறைவில்லை..
நார்த் கொரியா பழி, பாவம். கொலை, போன்ற சென்டிமென்ட்டுக்கு அஞ்சாத பெரிய டீமை ரெடி பண்ணி தென் கொரியா உள்ளே ஊடுருவ விடுது...அதில் பல பேர் பல வருஷமா பல கொலைகள் செய்யறாங்க..
அதில முக்கியமானவ ஒரு பெண்...அவ பேர் பாங் லீ.. அவ தென் கொரியவுல இருக்கற பல பெரிய ஆட்களை ஸ்னைப்பர் துப்பாக்கி மூலமா கொலை செய்யறா.. அவ துப்பாக்கியை தூக்கினா சாவு உறுதி.
கடைசியா தென் கொரியா தயாரிச்ச சீடிஎக்ஸ் பாமை..., ஊடுருவிய நார்த் கொரிய டீம் அந்த பாமை கடத்தி அதனை சியோலில் நடக்கும் கால் பந்து போட்டி மைதானத்தில் வைத்து விடுகின்றார்கள்..
அதனை தென் கொரிய ஏஜென்டுங்க... Yu Jong-won (Han Suk-kyu) Lee Jang-gil (Song Kang-ho) இரண்டு பேரும் அந்த ஈரக்கமற்ற கொலைகாரியையும், புட்பால் ஸ்டேடியத்தில் இருக்கும் லட்சக்கனக்கான பொதுமக்களையும் அந்த பாமில் இருந்து எப்படி காப்பாத்தினாங்க? என்பதுதான் மீதிக்கதை...
==========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
படத்தின் முதல்காட்சியில் நார்த் கொரிய மிலிட்ரி டிரேயினிங்னை பார்க்கும் போது மனது டரியல் ஆகின்றது..
நாய்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு அதனை கத்தியால் குத்தி பிராக்ட்டிஸ் செய்வது என டரியல் காட்சிகள் ஏராளம்..
அதே போல அந்த கொலைக்காரி துப்பாக்கியோடு கிளம்பினால் கொலை உறுதி என்பதை காட்டும் காட்சிகள் நல்ல விறு விறுப்பு.. அந்த காட்சிகள் சில கிழே...
அவ்வளவு பெரிய அழிக்கும் ஆயுதத்தை எடுத்து போகும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மொக்கையாகவா ஒரு அரசு செய்யும் என்பதை காட்சியாக பார்க்கும் போது சிரிப்பு வருகின்றது..
இந்த படம் தென்கொரியாவில் பெரிய பட்ஜெட் படம்..
தென் கொரியாவில் டைட்டானிக் படத்தை 4,3 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்தார்கள்..ஆனால் இந்த படத்தை 6,5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்தார்கள்..
கிளைமாக்ஸ் நல்ல விறு விறுப்புதான்..
=============
படத்தின் டிரைலர்..
=========
படக்குழுவினர் விபரம்
Directed by Kang Je-gyu
Produced by Byeon Moo-Rim,
Lee Kwan-Hak
Written by Kang Je-gyu
Starring Han Suk-kyu,
Choi Min-sik,
Kim Yoon-jin,
Song Kang-ho
Music by Lee Dong-Joon
Cinematography Kim Seong-Bok
Editing by Park Gok-ji
Distributed by United States:
Samuel Goldwyn Films (theatrical)
Destination Films (all media)
Release date(s) February 13, 1999 (Kr)
2002 (North America)
Running time 125 minutes
Country South Korea
Language Korean
Budget US$ 8,500,000
Produced by Byeon Moo-Rim,
Lee Kwan-Hak
Written by Kang Je-gyu
Starring Han Suk-kyu,
Choi Min-sik,
Kim Yoon-jin,
Song Kang-ho
Music by Lee Dong-Joon
Cinematography Kim Seong-Bok
Editing by Park Gok-ji
Distributed by United States:
Samuel Goldwyn Films (theatrical)
Destination Films (all media)
Release date(s) February 13, 1999 (Kr)
2002 (North America)
Running time 125 minutes
Country South Korea
Language Korean
Budget US$ 8,500,000
=====================
பைனல் கிக்...
இந்த படம் பார்க்கவேண்டிய ஆக்ஷன் பிலிம்...ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்....சென்னை மூவிஸ் நவ் ==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
jackiesekar
தென்கொரியா வரை போய் விமர்சனம் எழுதும் தாங்கள் தற்போது தமிழ் படைப்புகளை விமர்சிப்பதில்லையே காரணம் என்ன? குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம்தான் விஞ்சும். ஆனால் மயக்கம் என்ன பற்றி ஒரு வரிகூட எழுதாதற்க்கு காரணம்?? உங்களை தொடர்ந்து வாசிப்பவன் என்ற வகையில் கேட்கிறேன்.பதில் கிடைக்கும் என்ற நப்பாசையுடன்...
ReplyDeleteநினைச்ச உடனே பேண்ட் சட்டை மாட்டிக்கிட்டு கிளம்பறவன்தான் நான் இன்னைக்கு கைலி கட்டிகிட்டு குழந்தையா பார்த்துகிட்டு இருக்கேன்.. இன்னும் நேரம் கிடைக்கலை மயக்கம் என்ன படம் பார்க்க... அதான் காரணம்...நேரம் கிடைச்சா பார்த்துட்டு கண்டிப்பா நான் எழுதுவேன் நண்பரே...குறுக்கால போவறவன்.
ReplyDelete// அவ்வளவு பெரிய அழிக்கும் ஆயுதத்தை எடுத்து போகும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மொக்கையாகவா ஒரு அரசு செய்யும் என்பதை காட்சியாக பார்க்கும் போது சிரிப்பு வருகின்றது...//
ReplyDeleteஇந்த விஷயத்தை நானும் கவனிச்சு இருக்கேன். ஏறக்குறைய எல்லா ஊர் படங்களிலும் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கத்தான் செய்கிறது.
thanks for the review
ReplyDelete