சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்

ஆல்பம்...

கூடங்குளம் அணு உலை தொடர்பாக அப்துல் கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்...
அணு உலை ஆபத்து குறித்தும் அதன்  எதிர்ப்புகள நியாமாக இருந்தாலும் கலாமின் கருத்துக்கு பிறகு மக்களிடம் மாற்றம் ஏற்ப்பட்டு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது..
ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டிய கல்லனை மற்றும் தஞ்சை பெரிய கோவில் எல்லாம் இன்னும் அப்படியே இருக்கின்றது.. அதனால் பூகம்பம் ஏற்படும் பகுதிகள் வரிசையில் கூடங்குளம் இரண்டாம் இடத்தில்தான் இருக்கின்றது..அதானால் தேவையில்லாமல் பயம் கொள்ள தேவையில்லை  என்று கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.. 

பூகம்பத்தால் கல்லனை உடைந்தால் பாதிப்புதான்..பல்லாயிரக்கனக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள்.. பெரிய கோவில் இடிந்தால் யாருக்கும் அதிக பாதிப்பு ஏற்ப்பட போவதில்லை..ஆனால் அணு உலை அப்படி அல்ல..

காலம் சொன்னது...பூகம்பம் வரும் வாய்ப்பு குறைவு அப்படி வந்தாலும் சேப்டி மெஷர் திருப்தியாக இருக்கின்றது  என்று சொல்லி இருக்கின்றார்..அப்படி பார்த்தால் பூகம்பம் அடிக்கடி வரும் ஜப்பானில் எந்த வளர்ச்சி பணியையும் செய்து இருக்க போவதில்லை...

சென்னைக்கு பக்கத்தில் கல்பாக்கத்தில் அணு மின்சாரம் தயாரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்..ஆனால் வெடித்தாலோ விபத்து ஏற்ப்பட்லோ பாதிக்கும் போது எந்த அரசியல்வாதியோ, விஞ்ஞானியோ  யாரும் கை கட்டி பதில்  சொல்லப்போவதில்லை என்பதால் போராட்டக்குழுவினர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கவலை படுகின்றார்கள்.. 

அது நியாயமே..ஆனால்  சாலையில் பயணிக்கும் போது பல விபத்துக்களை பார்க்கின்றோம் அதுக்காக வாகனத்தில் யாரும் செல்லாமல் இல்லை என்று யார் வேண்டுமானாலும் கருத்து  சொல்லலாம்...
பிரச்சனைக்கு பக்கத்தில் இருப்பவனுக்குதான் பிரச்சனையின் ஆழம் தெரியும்...பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி மத்திய அரசை கவனிக்க வைக்கின்றார்கள்  என்றால் அவர்கள் பயத்தை குறை சொல்ல முடியாது..?? கலாமின் கருத்தை விமர்சிக்கலாம்...ஆனால் அதுக்காக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கலாமின் நேர்மையான வாழ்க்கையை விமர்சிப்பதும், அவரை வில்லனாக சித்தரிப்பதும் ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.



===============

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு முன்தினம் ஆரம்பித்த பெருமழை இரண்டு நாளைக்கு முன் தான் ஆடிதீர்த்தது அமைதியானது.....சென்னை தவித்தே  போய் விட்டது..  வாகனத்தில் பத்து நிமிடத்தில் அடைந்து விடும் இடங்களை எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கடக்க வைத்தது.. சென்னை டிராபிக்.. 

வாகனம் வைத்து இருந்தவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தார்கள்.  துடைத்து துடைத்து பூ போல பார்த்துக்கொண்ட வாகனங்கள் படும் பாட்டை பாத்து வெறுத்து போனார்கள்..

====================

டிராபிக் சிக்னல் அருகே வாகனங்கள் வேகமாக கடந்தால்தான் பின்னால்  வரும் வாகனங்கள், இன்னும் சில வாகனங்கள் அந்த சிக்னலை சீக்கிரம் கடக்க முடியும்...ஆனால் டிராபிக் சிக்னல் நிறுத்துக்கோட்டு அருகே ஸ்பிட் பிரேக் இருந்தால் என்ன செய்ய முடியும்--?? 

வாகனங்கள் மெதுவாகத்தானே கடக்க முடியும்..அதே தான் சென்னையில் எல்லாம் சிக்னல் நிறுத்துக்கோட்டு அருகேயும் பெரிய பெரிய பள்ளங்கள் இருக்கின்றன.. அதனால்  வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லுகின்றன...இதனாலலே டிராபிக் அதிகம் ஏற்படுகின்றது..

போரூர் சிக்னல் அருகே  பெரிய பெரிய பள்ளங்கள்.. முக்கியமாக நடிகர் விஜய் கல்யாண மண்டபம் எதிரில் மரண பள்ளதாக்கு போல பெரிய பெரிய பள்ளங்கள்  காட்சி அளிக்கின்றன...அதில் நீர் தேங்கி இருக்கும் போது டூவிலர் வாசிகள் தினமும் விழுந்து செல்வது வாடிக்கையாகின்றது...

==========================



திரும்பவும் அதிக வேகம் காரணமாக ஒரு ஆம்னி பேருந்து விபத்து நடந்து இருக்கின்றது...பெங்களுரில் இருந்து கோவைக்கு சென்ற பேருந்து அது... வேலூர் அருகே நடந்தது போல இந்த ஆம்னி பேருந்தும் படுக்கை வசதி கொண்டது...இதுவரை எட்டு பேர் கரிக்கட்டையாக இறந்து போய் இருக்கின்றார்கள்..

இதே பேருந்து  கவிழ்ந்து போய்  அப்படியே எரிய ஆரம்பித்து இருந்தால் இன்னும் விபத்து எண்ணிக்கை அதிகமாக இருக்கும்...பேருந்து நின்ற  படியே முன்பக்கம் எரிய ஆரம்பித்த காரணத்தால் பின்பக்கமாக 22 பேருக்கு மேல் தப்பித்து இருக்கின்றார்கள்..
ஆனால்  பேருந்து கவிழ்ந்து போய் எரிய ஆரம்பித்து இருந்தால் திடும் என தூக்க கலக்கத்தில் எழும் பயணிக்கு என்ன செய்வது?? எந்த பக்கம் வழி என்றே தெரியாமல் திகைத்து போய் இருந்து இருப்பான்..அந்த பொன்னான நிமிடத்தை தீ தனதாக்கிகொண்டு கேரதாண்டவம் நடத்தும்...அந்த வகையில் கடவுளுக்கு நன்றி..

முன்பக்கம் பெண்களுக்கு எப்போதும் சீட் ஒதுக்குவார்கள்..ஆனாலும் முன்பக்க கதவை திறந்து கொஞ்சமாய் எரிந்த படி தப்பித்து ஓடிய பெண்கள் தரையில்  விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் சிக்கி சாலையோரம் விழுந்து  எரிந்து போனார்கள்.. 

இந்த வேதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா??


=============================

மிக்சர்.

சென்னை நகரத்தின் சில இடங்களில்  தேங்கி இருக்கும் நீரில் நாற்றம் பிடுங்குகின்றது... காரணம் சிக்கன் கடைகளில்  தேவையற்ற கோழியின் கொழுப்பு, தலை ,கால்கள் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி கோழிக்கழிவுகளை ஒரு சாக்கு பையில் போட்டு, குப்பையில் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விட்டு செல்லுகின்றார்கள்.. அதனாலே இப்படி குடலை பிடுங்கும் நாற்றம்.. 

இதனால் நோய் தொற்று  எளிதில் ஏற்படும்.. முக்கியமாக இரவு நேரங்களில் பதினோரு மணிக்கு மேல் ஊர் உறங்க ஆரம்பிக்கும் போது இப்படி எடுத்து வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றார்கள்.இதை முன்பு போரூர்த ஏரியில் வீசிவிட்டு செல்வார்கள்.. இப்போது அதற்கு வேலிகள் அமைத்து விட்ட காரணத்தால் ஓரத்தில் வீசி விட்டு செல்லுகின்றார்கள்.
===================

பகட்டாய் விளம்பரங்கள் பார்த்து பழக்கப்பட்டு விட்ட நம் கண்களுக்கு,ஆரோக்கியாபால் விளம்பரம் ஆச்சர்யமாகவும் அருமையாகவும் இருக்கின்றது..அந்த வெள்ளந்தி மனிதர்களின் முகங்களை திரையில் கொண்டு வந்த விளம்பரக்குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... விளம்பரபட இயக்கனர் மணிஜி   சொன்ன தகவல் இது... இந்த விளம்பர படத்தை இயக்கியது ஜெடி ஜெர்ரி.. இதில் இவர்கள் கடலூர்காரர்கள் என்பது மணிஜி சொன்ன தகவல் அதே போல  நான் படித்த கடலூர் செயின்ட் ஜோசப் பிராஞ் பள்ளியில் ஆசிரியராக இருந்த வாத்தியார் ஜெயராஜ் அவர்களின் மகளை இரண்டு பேரில் ஒருவர் கரம் பிடித்தவர் என்பதை மட்டும் நான் அறிவேன்...

==============
அடுத்து இந்த படத்துக்காக வெயிட்டிங்க..டிரைலர் பார்த்து சத்தியத்தில் செமை கிளாப்ஸ்...


=============
படித்ததில் படித்தது..


இப்படி ஒரு நடிகனை பற்றிய செய்தியை நான் வாழ்நாளில் பார்த்தே இல்லை...இந்த செய்தி வளரும் நடிகனாக இருக்கட்டும் நடிகையாக இருக்கட்டும் இதனை மனதில் வைக்க வேண்டும்..

பணம் காசு எல்லாம் அப்புறம்...முதலில் உதவி இயக்குனர்களை மனிதனாக மதித்தாலே போதும்...எந்த அளவுக்கு ஒரு நடிகன் உதவி இயக்குனர்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்து இருந்தால் இப்படி உதவி செய்ய முடியும்..??? ஐ லவ்யூ நாகர்ஜுனா... மேலும் ஏன் சிலாகித்தேன் என்பதைபற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்..

===================
இணையத்தில் ரசித்தவை..


=================
வாழ்த்துகள்..

புதியதலைமுறை தொலைகாட்சிக்கு...

பல வருடங்கள் முதலிடத்தில் தன்னை நிலைநிறுத்தி இருந்த சன்னுக்கு இது பின்னடைவுதான்..

சன்,ஜெயா,கலைஞர் போன்ற தொலைகாட்சிகள்.. ஒரு போதும் சாலை வசதிகள் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுத்து பேசியதே இல்லை...அப்படி பேசினாலும் மழுப்பலாக பேசிவிட்டு போய் விடுவார்கள்.. 

ஆனால் புதியதலைமுறை நடுநிலையாக இதுவரை செய்திகளை அளிப்பது மட்டும் அல்ல ஆங்கி செய்தி சேனல்களை போல நேரடி செய்தியாளர்களை கொண்டு செய்திகளை  அளிக்கின்றார்கள்.. இது போன்ற செய்திகள் கொடுக்கும் வாய்ப்பு இருந்து , மற்ற சேனல்கள் வேறும் வாசிப்பை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்..

இப்போது அனைத்து தமிழ் செய்தி சேனல்களும் தான் செய்தி வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்து இருக்கின்றது.. அது புதியதலைமுறை செய்திகள் போல இருப்பது புதியதலைமுறை செய்திகளுக்கும் கிடைத்த வெற்றி...

கடந்த சினதினங்களாக மழையில் தமிழகத்தில் சாலைகள் மோசமாக இருப்பதை பற்றி புதியதலைமுறைதான் அதிகம் பேசியது....
செய்திகளில் மாற்றத்தை தமிழ் மீடியா உலகில் மாற்றம் கொண்டு வந்து இருப்பது பெரிய விஷயம்.. வாழ்த்துகள் புதியதலைமுறை. 

புதிய தலைமுறையில் எனக்கு பிடித்த விஷயம்.. நம்மாழ்வார் பேசும் கிளிப்பிங்ஸ்....



பிலாசபி பாண்டி

உலகம் ஒரு புரிந்து கொள்ள முடியாத காலேஜ். இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது
========================================
நான்வெஜ் 18+


Boy:what is that u keep in ur mouth
which is 6? long
and move it in and out
and wait for a white substance to come out?

Girl: y do u ask such question to me.
i cant tell such words

Boy:dont worry its tooth brush


பிரிய்ங்களுடன்
ஜாக்கிசேகர்.
==================================
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

17 comments:

  1. கலாம் இந்த விஷயத்தில் ஒரு கூலண்ட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் இதை செய்து இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

    நிச்சயமாக நம்மை விட தொழில்நுட்பத்தில முன்னேறிய ஜப்பான் பட்ட பாட்டை பார்த்தீர்களா? ஒரு சாலை விபத்து நடந்தால், அது அந்த கனத்தில் முடிந்து விடும். மேலும் பாதிப்பு மிகக் குறைவான பேருக்கே ஏற்படும். ஆனால் அணு விபத்து பல தலைமுறைகளை பாதிக்க கூடியது. உதா’ரணம்’ : அதே ஜப்பான்.

    பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் அணு உலைகளை மூட ஆரம்பித்து விட்டன. ஏன் நாம் மட்டும் அதை பிடித்து தொங்க வேண்டும்.. போபால் விஷ வாயு விபத்துக்கே இன்னும் விடிவு இல்லை..

    இந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த நாட்டில் அணு உலை தேவையில்லாத தலைவலி. விபத்து நடந்தால் அவன் அவன் கைகழுவி விட்டுப் போய் விடுவான். பாவப்பட்டவர்கள் அங்கு அருகில் வசிக்கும் மக்களே!!

    பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடலாம். ஊழலால் பொக்கையாய் போன நமது சமூகத்திற்க்கு இது தேவை இல்லாத ஆடம்பரம்.

    திரு. ஞாநி அவர்களின் கருத்தை இந்த விஷயத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. //விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் //
    லாரியில் ஒயிட் பெட்ரோல் பயன்படுத்துகிறார்களா.?

    ReplyDelete
  3. -கலாமை வில்லன் போல் சித்தரிப்பது மட்டுமல்ல, அணு விஞ்ஞானி என்றும் தவறாகச் சொல்கிறார்கள். அவர் ஏரோநாட்டிக்ஸில் கில்லாடி. அவ்வளவு தான். விஞ்ஞானி என்று சொல்லலாம். அவரது கருத்தை புறம் தள்ளுவதற்கில்லை.

    -டிராபிக் அவஸ்தையை அன்றாடம் அனுபவிக்கும் பலருக்காக ஜாக்கி என்னதான் தொண்டைத் தண்ணி வரளக் கத்தினாலும் ஆட்சியாளர்கள் கவனிக்கப் போவதில்லை. ஹூம்...

    -நாகார்ஜூனா பற்றிப் படித்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நல்ல முன்னுதாரணத்தைத் துவக்கி இருக்கிறார்.

    -மொத்தத்தில் சாண்ட்விச் அபாரம். நான்வெஜ்... எங்கேப்பா இதைல்லாம் புடிக்கிறே..?

    ReplyDelete
  4. கலாமை யாரும் தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பது குறைவு...
    அவரது கருத்துக்களையே விமர்சிக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

    நேரம் இருப்பின் எனது பழைய பதிவொன்றைப் பாருங்கள்.

    http://unmayapoyya.blogspot.com/2011/10/blog-post_19.html

    ReplyDelete
  5. Anyhow if this agitation has happened before spending this much amount it could have been acceptable. Now it is like standing on Railway track and trying to stop a speeding train.An accident will occur if a sudden brake is applied, and if not the agitators will be run over. It is better for the agitators to move away to where they think safer places.Those who are working in the plant have more risks than those who are agitating.

    ReplyDelete
  6. aravindan, lorry was carrying white petrol for Coimbatore Airport

    ReplyDelete
  7. இந்தக் கோழிக் கழிவுகளை முதலைப் பண்ணைகளுக்கு கொடுக்கக் கூடாதா? பல நாடுகளில் இவை மிருக உணவாகின்றன?
    இங்கும் ஏன் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

    ReplyDelete
  8. @அரவிந்த் .. அது white petrol எடுத்து சென்ற லாரி

    ReplyDelete
  9. //பணம் காசு எல்லாம் அப்புறம்...முதலில் உதவி இயக்குனர்களை மனிதனாக மதித்தாலே போதும்// பத்திரியின் பதிவு படித்தீர்களா.. அஜித் பற்றி

    ReplyDelete
  10. // அதுக்காக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கலாமின் நேர்மையான வாழ்க்கையை விமர்சிப்பதும், அவரை வில்லனாக சித்தரிப்பதும் ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.//

    சரியாகச் சொன்னீங்க ஜாக்கி!

    // வாகனம் வைத்து இருந்தவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தார்கள்.//

    சென்னை மாநரகத்தில் வாகனங்களும் தப்பவில்லை!

    வழமைபோல, படுசுவாரசியம்! :- )

    ReplyDelete
  11. கருத்தை பகிர்ந்த நண்ப்ர்களுக்கு என் நன்றிகள்.

    யோகன் குறைவான மக்கள் தொகைக்கு நீங்கள் சொல்லும் ஐடியா சரி.. இங்கே வளசராவாக்கத்தில் மட்டும் பதினைந்துக்கு மேற்பட்ட சிக்கன் கடைகள் இருக்கின்றன..சென்னை நகரம் முழுவதும் யோசித்து பாருங்கள்..

    ReplyDelete
  12. Kalam Effect : Govt. has played its trump card nicely , noone is questioning Kalams honesty and integrity , we are questioning his blind support to nuclear power . For those who say why are they opposing now , huge amount has been spent etc. protests has been happening from 89 - 90 's by makkal kalai ilakkiya kazhagam and CPI(ML) . Noone has highlighted the protest and now only it is coming in media .
    I would like to add a point , temperature of sea water near kalpakkam rises more than 140 degrees when both plants are in operation which affects the livelihood of fishermen in that area and their health , same will happen in koodankulam .
    Jackie as you said if you live near that area then only you will know its effect and seriousness.

    ReplyDelete
  13. பிரச்சனைக்கு பக்கத்தில் இருப்பவனுக்குதான் பிரச்சனையின் ஆழம் தெரியும்//

    இது உண்மை...

    மெத்தப்படித்த மேதாவிகள் எழு கடல் தாண்டியும் 700 KM தாண்டியும் இருந்துகொண்டு 'உலகமே தலைதெறிக்க எதிர்திசையில் ஓடிக்கொண்டிருக்கையில்...' இதை ஆதரிப்பது முட்டாள்தனத்தின் உச்சம்...

    இதை எதிப்பவர்களை தேச துரோகிகள் ரேஞ்சுக்கு பேசுவது அறியாமையின் உச்சம்...

    ReplyDelete
  14. kalamirku makkal yenna nenaikirarkal endru theariyathu, avar ouru govt adimai ennbathi nerupithirukirar.

    ReplyDelete
  15. //அரவிந்தன் said...
    //விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் //
    லாரியில் ஒயிட் பெட்ரோல் பயன்படுத்துகிறார்களா.?//

    அது ஒயிட் பெட்ரோல் எடுத்துச் சென்ற லாரியாக இருக்கும்.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner