எங்கள் ஊர் கடலூரில் எஸ்விஎம்எஸ் என்ற பேருந்து இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது..
நான் சிறுவயது காலம் தொட்டு அந்த பேருந்து ஓடிக்கொண்டு இருக்கின்றது..இரண்டே பேருந்துகள்தான்.. ஒன்று 3ஆம் நம்பர் என்று அழைக்கபடும் எஸ்விஎம்எஸ், மற்றது எஸ்எல்டி என்று அழைக்கபடும் எட்டாம் நம்பர் பஸ் இரண்டும்தான் எங்கள் சிறுவயது பயணவாகனங்கள்..அதன் பிறகு அரசு பேருந்துகள் 16 ஆம் எண் பேருந்து கடலூர்,திருவந்திரம்.பாலூர்,திருவதிகை வழியாக ப்ண்ருட்டி செல்லும் பேருந்துகள் அறிமுகபடுத்தபட்டன... நடுவீரப்பட்டு செல்ல பிஎல்ஏ என்ற தனியார் பேருந்து மதிய சிங்கலில் ஓடும்.. இப்போது அது பிரபு என்ற பெயிரில் ஓடுகின்றது.... அந்த பேருந்துதான் இரவு நேரத்தில் அதாவது இரவு ஒருமணிக்கு செல்லும் பேருந்து..
இயக்குனர் தங்கர்பச்சான் எல்லாம் கடலூரில் இரவு நேரம் இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு அந்த பேருந்தை பிடித்து சொந்த ஊருக்கு போவார்கள்..
அந்த பேருந்து இரவு ஒரு மணிக்கு கிளம்புவதால் மக்களால் நிரம்பி வழியும்.. பேருந்து மேல் எல்லாம் உட்கார்ந்து பயணிப்பார்கள்... அந்த அளவுக்கு கூட்டம் அப்பும்..அதே போல கடலூர் டூ பாண்டிக்கு செல்ல நிறைய தனியார் பேருந்துகள் இருக்கின்றன.,..
..
தனியார் பேருநதுகள் அத்தனையிலும் இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்கள்.. ஒரு செக்கர் இருப்பார் என்பதால் படிக்கட்டில் ஒரு பயலையும் நிற்க்கவே விடமாட்டார்கள்.. உள்ளே போக சொல்லிக்கொண்டே இருப்பார்கள்... வெற்றிலை கவுலி அடுக்குவது போல மனிதர்களை அடுக்கிக்கொண்டே செல்வார்கள்... அதனால் நிரம்ப கூட்டம் இருந்தால் ஒழிய படிக்கட்டு பயணம் எங்கள் ஊரிலும் சுற்று வாட்டாரங்களில் ஒடும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் சாத்தியம் இல்லை...
ஆனால் அரசு பேருந்துகளில் அப்படி இல்லை.... படிக்கட்டு பயணம் செய்யலாம்...ஆனால் சென்னையில் வந்த பிறகு கூட்ட நெரிசலுக்கு பயந்து படிக்கட்டில்தான் நான் முன்பு எல்லாம் பல்லவன் பேருந்தில் பயணம் செய்து இருக்கின்றேன். முக்கியமாக பின்புற படிக்கட்டில்தான் புட்போர்டு பயணம் நிறைய செய்து இருக்கின்றேன். அது கொஞ்சம் சேப்ட்டியும் கூட..
பல்லவனில் இருந்து மாநகர பேருந்தாக மாறியதும்... நான் சைக்கிள் வாங்கி விட்டபடியால் அதில் பயணம் செய்வது எப்போதாவதுதான்.. இப்போது அத்தி பூத்த போல மாநகர பேருந்தில் பயணம் செய்கின்றேன்..
சென்னையில் புட் போர்டு பயணங்கள் செய்ய மிக முக்கிய காரணம் பாலியல் வறட்சி காரணமாக. பெண்களை கவர அது ஒரு வித்தையாகவே பல வயது பையன்கள் நினைக்கின்றார்கள்...முக்கியமாக பச்சையப்பன் மற்றும் மாநிலகல்லூரி மாணவர்கள்.. அப்படி நினைத்துதான் பல சேட்டைகளை,பேருந்தின் டாப்பில் ஏறியும், ஜன்னலில் தொங்கியும் பயணம் செய்வார்கள்.
இதன் காரணமாக பல சண்டைகள் வெட்டுக்குத்துவரை போய் இருக்கின்றது... கண்டக்டருக்கும், கல்லூரி மாணவர்களுக்கு எப்போதும் எதிரும் புதிருமாகவே இருப்பார்கள்..பேருந்து
சக்கரத்தில் சிக்கி இறந்த கல்லூரி மாணவர்கள் லிஸ்ட் மிகப்பெரிது...அந்த லிஸ்ட்டில் இப்போது எட்டாம் வகுப்பு பசங்கள் கூட சேர்ந்து விட்டடதுதான் கொடுமை....
பட்ரோடு அருகே ஸ்கூல் பசங்க எப்படி எல்லாம் புட்போர்ட் அடிக்கறாங்க.. என்று போட்டோவுடன் இதே தளத்தில் பிரசுரித்து சிலமாதங்களுக்கு முன் எழுதிஇருந்தேன்...நேற்று மாங்காடு அருகே ஸ்கூல் பசங்க என்ன செஞ்சானுங்க தெரியுமா-?
பஸ் போகும் போது ஒரு காலை சின்ன கேப்பில் படியில் வைத்துக்கொண்டு ஜன்னலை பிடித்து தொங்கி, பயணிப்பது ஒரு வகை... ஆனால் இப்போது பரிணாம வளர்சியில் வண்டியை போக விட்டு பேய் ஓட்டமாக ஓடி, கடைசி ஜன்னலை பற்றி அப்படியே தொங்கி, அதன் பிறகு காலுக்கு இடம் தேடுவது நடக்கின்றது....
இதனை நானே செய்து இருக்கின்றேன்... கல்லூரி மாணவர்கள் செய்து இருக்கின்றார்கள்.. ஆனால் இப்போது ஸ்கூல் பசங்க எல்லாம் இப்படித்தான் ஓடி பேருந்து பிடிக்கின்றார்கள்..
மாங்காடு அருகே பேருந்து நகர்ந்த பிறகு பேய் ஓட்டம் ஓடி பேருந்தை பிடிக்க முயற்சித்து, செருப்பு அறுந்து பப்பரக்கே என்று தரையில் ஸ்கைட்டிங் போய், கை கால் என எல்லா இடத்திலும் சில்லரை வாங்கி, பேன்ட் முட்டி அருகே கிழிந்து, பெருத்த அவமானம் பிடிங்கி தின்ன அந்த இடத்தை விட்டு அகன்றான் ஒரு பையன்.
இதுவே முன்பக்க படிக்கட்டுக்கு அவன் அது போல ஓடி முயற்சி செய்து இருந்தால் நிச்சயம் பேருந்தின் பின் சக்கரம் அவன் மீது ஏறி இருக்கும்... நினைக்கவே கொடுமையாக இருக்கின்றது....
கூட்ட நெரிசலுக்கு பயந்து மட்டுமே நான் புட்போர்டு பயணங்கள் சென்னையில் செய்து இருக்கின்றேன்.. ஆனால் இப்போதெல்லாம் ஒரு அளவுக்கு பேருந்தின் உள்ளே செல்ல இடம் இருந்தும், பேருந்தை ஓடவிட்டு பிடித்து தொங்கி செல்வது பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து இருக்கின்றது... இதனை சென்னையில் பல பேருந்து நிறுத்தங்களில் காணலாம்...
இப்படி ஓடி பேருந்தை பிடிப்பதை அந்த பையனின் பெற்றோர் பார்த்தால் ரத்த கண்ணீர் வடிப்பார்கள்... நேரில் நாம் பார்க்கும் போதே ஒரு பரபரப்பு இருக்கும்...எந்த பையன் சக்கரத்தில் தவறி விழுந்து விடுவானோ? என்ற பதைபதைப்பு ஏற்படுவதை மறுக்க முடியாது...நேரில் போய் இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தலாம் போல இருக்கும்..
சார் இப்படி எல்லாம் சொல்லாதிங்க... பசங்க வேளையோடு வீட்டுக்கு போக வேணாமா? அதனால அப்படி பஸ்ல பயணம் செய்கின்றார்கள் என்று மட்டும் சப்பை கட்டு கட்டவேண்டாம்..இரண்டு பேருந்து விட்டு விட்டு அடுத்த பேருந்தில் பயணித்தால் குடி முழுகி விடப்போவதில்லை...
அடிக்கடி போலிசார் லட்டியை சுழற்றி சூத்தில் சூடு பறக்க இரண்டு கொடுத்தால்தான் வணக்கத்துக்கு வருவார்கள் போலும்....பள்ளி படிக்கும் போதே இப்படி என்றால் கல்லூரிக்கு போகும் போது என்ன செய்வார்கள் என்று நினைக்கும் போது...
அயற்சியாக இருக்கின்றது....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
சமூக அக்கறையுடன் கூடிய நல்ல பதிவு. நானும் இந்த விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. இப்படி அழகாகச் சொல்லியிருப்பேனா என்பதும் சந்தேகமே. பெற்றோர் சிலராவது இதைப் படித்து விழிப்புணர்வு பெற்றால் எழுதிய சேகருக்கு அது வெற்றி. அது நடக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஒரு காலத்தில் பஸ்ஸை ஓடவிட்டு ஓடி போய் ஏறியதும் நிற்பதற்கு முன்பே குதிப்பதும் என, சில நேரங்களில் மிக அதிக ரிஸ்க் எடுத்து கம்பியை பிடித்து தொங்கியும் பயணம் செய்துள்ளேன். அந்த நாட்களில் என் அதிர்ஸ்டம் பல முறை தப்பிவிட்டேன். ஆனால் இப்ப நினைத்தாலே கஸ்டமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteநம்ம ஃபேவரைட் பஸ்கள்: 23சி, 27டி, 29ஏ, 22,16
சமூக அக்கறை கொண்ட பதிவு...!
ReplyDeleteஇவிங்க எங்க கேட்கிரானுங்க...!
அவிங்க அப்பனும்... ஆத்தாளும்...!
பாவம்... காலையிலிருந்து இரவுவரை உழைத்து
இவங்களுக்கு சோத்தப்போட்டு... யுனிபார்ம், ஷூ.. தை..பெல்டு.. அப்படீன்னு வாங்கிகொடுத்து... புள்ளைய படிக்க பள்ளிகூடத்துக்கு அனுப்புனா...
கிரகம் புடிச்சதுங்க...
பஸ்ல ரவுசு பண்ணுதுங்க...
சரி...!
இப்படி தொத்திக்கிட்டு போறவனுங்க...
கீழ விழுந்து செத்துட்டா... அவ அப்பனும்.. ஆத்தாளும் என்ன பாடு படுவாங்க...!
சரி....!
செத்து தொலைச்சா...
ஒரு ஆறு மாசமோ... ஒரு வருஷமோ... துக்கமிருக்கும்...!
ஆனா...!
கைகாலு ஒடைஞ்சி... நொண்டியா... ஊனமா... கண்ணெதிரே திரிஞ்சா...!
அவனோட அப்ப.. ஆத்தாள்.. மனசு என்ன பாடுபடும்..!
காலத்துக்கும் அவன் கஷ்ட்டத்தவிட..
அவனோட அப்பனும்..ஆத்தாளும் படுற கஷ்டத்த... வேதனைய நினச்சா... எனக்கு மனசு வலிக்கும் ...!
அதோட...!
பிளாஷ் நியூஸ்...!
தமிழ்நாட்ல பஸ் கட்டணம் டபுள் சூப்பரா உயர்த்தி இருக்காக...!
அசோக் பில்லர் சந்திப்பில் காலை வேளைகளில் 17D பேருந்தில் சிறு மாணவர்கள் கூட ஜன்னலை பிடித்து தொங்கிக் கொண்டு போவதைக் காணலாம். தினம் அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் ஒரு விதமான படபடப்பு வரும். முன் வாசல் பின் வாசல் என்றில்லாமல் கிடைத்த ஜன்னலில் தொங்கும் மாணவர்களையும் காண நேரும்.
ReplyDeleteசாலை சந்திப்பில் இருக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள்.
நீங்கள் சொல்வது போல நாலு சாத்து சாத்தலாம்... இல்லை பள்ளி நேரத்தில் மாணவர்களை மனதில் கொண்டு நாலு பேருந்து சேர்த்து விடலாம். ரெண்டும் நடக்கப் போவது இல்லை. ஆசைக்கும் ஆதங்கத்திற்கும் அளவேது. :(
ஓடும் பேருந்தில் முன்பின் பழக்கமில்லாமல் ஏறும்போது கீழே விழத் தெரிந்தேன். பெருநகரங்களில் பேருந்து பயணம் கொடுமையான ஒன்று.
ReplyDeleteநான் வலையுலகத்துக்கு புதுசு. இப்போதான் பதிவுகள் எழுத ஆரம்பித்தவன். சில தளங்களை பார்த்து விட்டு (இலங்கை தொடர்பானது..நான் பின்னூட்டம் இட, அப்புறம் கொஞ்சம் கோபமா வேற பின்னூட்டம் இட வேண்டியதா போச்சு...அவர்கள் தமிழகமக்கள் ஒன்றும் செய்யலை செய்யலை என்று குற்றம் சொல்லும்போது. நான் சொன்னது; இந்தியதமிழர்களுக்கு பிரபாகரன் கடந்த காலத்தில் தேவைப்படவேயில்லை...அவரது field work களப்பணி தமிழகத்தில் இல்லவே இல்லை.பிறகு எப்படி பொங்கி எழுவார்கள்...உங்கள் தளத்தில் பழைய பதிவுகளையெல்லாம் தேடி படித்துக் கொண்டிருக்கிறேன். 2009 ல் நீங்கள் அழகாக அதையே சொல்லி இருக்கிறீர்கள். நிறைய பேர் என்னிடம் இந்தக் கருத்தை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இணையபதிவுகளில் உங்கள் வலையில்தான் இதைப் படிக்க முடிகிறது.
ReplyDeleteஜெயமோகன் வலையில் உங்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். அதன்மூலமாகவே வந்தேன். இப்போது புரிகிறது ஏன் உங்கள் தளம் அதிகம் படிக்கப்படுகிற தளம் என்று. நீங்கள் ஒளிப்பதிவாளராவதை விட இயக்குநராக முயற்சி செய்யுங்கள்...மக்களின் நாடி பிடித்துப் பார்ப்பதில் கெட்டி. அதற்காக நீங்கள் எதுவும் முயற்சி எதுவும் செய்கிற மாதிரி தெரியவில்லை இயல்பாகவே வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் போல வருவீர்கள்.
உங்கள் 2009 பதிவில்
//நான் இலங்கையை வரைபடத்தில் மட்டுமே பார்த்து இருக்கிறேன்,நேரில் அதன் நிலப்பரப்பை பார்த்தது கூட இல்லை ஆனாலும் நம் இன மக்கள் வெளிச்சிறையில் படும் அவஸ்த்தை பார்த்து மனது அழுகின்றது... நிறைய தவறுகள் புலிகள் அமைப்பிடம் இருக்கின்றது, எல்லாவற்றையும் விட பெரிய தவறு தமிழக உறவுகளிடம் விலகி இருந்ததே.
இன்று தமிழகத்தில் இருக்கும் அகதிகள் புலிப்பெருமை பேசுகின்றனர், அவர்கள் அரசு கட்டுப்பாடானது. அவர்கள் பக்கத்தில் இருந்தால் பெண்பிள்ளைகள் இரவு ரெண்டு மணிக்கு கூட தனியாக பயம் இல்லாமல் போய் வருவாள்,சுனாமியில் அவர்கள் மறுவாழ்வுக்கு எடுத்த வேகம் உலகம் பராட்டியது. அவர்கள் நீதமின்றம் மக்களால் போற்றப்பட்டது, என்று எவ்வளவோ சொல்லுகின்றார்கள்...
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களிடம் ராஜீவ் காந்தி கொலைதவிர புலிகளை பற்றி என்ன தெரியும்???
புலிகள் கடைசி வரை தன் நிலை விளக்காதது ஏன்?//
சமூக அக்கறையோடு எழுதப்பட்டசமுதாய விழிப்புணர்வுக்கான பதிவு!
ReplyDeleteகாலேஜ் பசங்களின் ஹீரோயிசம் முடிந்து பள்ளி மாணவர்கள் தங்கள் ஹீரோயிசத்தை பஸ்களில் தொடங்கிவிட்டார்களா?
எங்கே செல்கிறது இந்த இளைய சமுதாயம்?
எங்கள் நாட்டில் இந்த விஷயம் பரவாயில்லை.ட்ராபிக் போலீசார் இதில் தீவிர வேட்டை..
பானா காத்தாடி பசங்க சார் இவங்க. எங்கே திருந்த போறாங்க
ReplyDeleteகருத்துக்களை பகிர்ந்து கொண்ட கணேஷ்,manjoorraja,பாலா,ந.ர.செ. ராஜ்குமார்,S.Deluckshana,Tech Shankar போன்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்.
ReplyDeleteகைகாலு ஒடைஞ்சி... நொண்டியா... ஊனமா... கண்ணெதிரே திரிஞ்சா...!
ReplyDeleteஅவனோட அப்ப.. ஆத்தாள்.. மனசு என்ன பாடுபடும்..!
காலத்துக்கும் அவன் கஷ்ட்டத்தவிட..
அவனோட அப்பனும்..ஆத்தாளும் படுற கஷ்டத்த... வேதனைய நினச்சா... எனக்கு மனசு வலிக்கும் ...//
இதே உணர்வில்தான் இந்த கட்டுரை எழுதினேன் நீங்கள் எழுதியதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.. யாழினி அழுகையில் மறந்து விட்டேன்..
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு காஞ்சி முரளி...
உங்கள் 2009 பதிவில்
ReplyDelete//நான் இலங்கையை வரைபடத்தில் மட்டுமே பார்த்து இருக்கிறேன்,நேரில் அதன் நிலப்பரப்பை பார்த்தது கூட இல்லை ஆனாலும் நம் இன மக்கள் வெளிச்சிறையில் படும் அவஸ்த்தை பார்த்து மனது அழுகின்றது... நிறைய தவறுகள் புலிகள் அமைப்பிடம் இருக்கின்றது, எல்லாவற்றையும் விட பெரிய தவறு தமிழக உறவுகளிடம் விலகி இருந்ததே.
இன்று தமிழகத்தில் இருக்கும் அகதிகள் புலிப்பெருமை பேசுகின்றனர், அவர்கள் அரசு கட்டுப்பாடானது. அவர்கள் பக்கத்தில் இருந்தால் பெண்பிள்ளைகள் இரவு ரெண்டு மணிக்கு கூட தனியாக பயம் இல்லாமல் போய் வருவாள்,சுனாமியில் அவர்கள் மறுவாழ்வுக்கு எடுத்த வேகம் உலகம் பராட்டியது. அவர்கள் நீதமின்றம் மக்களால் போற்றப்பட்டது, என்று எவ்வளவோ சொல்லுகின்றார்கள்...
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களிடம் ராஜீவ் காந்தி கொலைதவிர புலிகளை பற்றி என்ன தெரியும்???
புலிகள் கடைசி வரை தன் நிலை விளக்காதது ஏன்?//
நன்றி மாயன் நான் தான் அதை பதிவு செய்தேன்.. ஒரு விஷயத்தை உணர்ச்சிகரமான விஷயமாக அனுகாமல் ஏன் தமிழக மக்கள் பொங்கவில்லை என்ற கேள்வியே அந்த பதிவு...
புலிகள்.. தங்கள் வீரத்தை மட்டுமே கடைசி வரை நம்பினார்கள்..எங்கே தாழ்ந்து போகனுமோஅங்கே தாழ்ந்தும் எங்கே வீரத்தை காட்ட வேண்டுமோ? அங்கே வீரத்தையும் காட்ட அவர்கள் முயலவில்லை.. முக்கியமாக வீரத்தோடு புத்திசாலித்தனமும் சேர்ந்து இருந்தால் அந்த அமைப்பு நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும்.. எது எப்படி இருந்தாலும் 13 வருடம் சிறப்பான ஆட்சி புரிந்தவர்கள்.. அவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது..
அள்ள அள்ள குறையாததாய் இருக்கிறது உங்களின் எழுத்து திறமை. நல்ல பதிவு. இந்த முறை என் சொந்த ஊரை (நடுவீரப்பட்டு) நினைவுபடுத்திவிட்டீர்கள்.
ReplyDeleteசமூக அக்கறை கொண்ட பதிவு...!
ReplyDeleteThanks
நல்ல பதிவு..
ReplyDeleteபூட்போர்ட் பயணத்துக்குக் காரணம் பாலியல் வளர்ச்சியா? கூட்டம் தான் காரணமென்று தோன்றுகிறது.
ReplyDeletewell said na. நானும் இத பத்தி ரொம்ப நாலு யோசிச்சிருக்கேன்.. நீங்க சொல்லிடிங்க... கண்டிப்பா இதுக்கு எதாவது பண்ணி ஆகணும்...
ReplyDeletegood post . .
ReplyDelete