Ocean's Twelve-2004/ ஓசியன்-12/கொள்ளைகாரர்கள் 12 பேர்...



ஓசியன் 11 படத்தை பற்றி  எழுதிய பதிவை படித்த வாசகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்பரைஸ் சந்தோஷத்தை கலைஞர் டிவி கொடுத்தது...
சில வாரங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஓசியன் 11  ஒளிபரப்பினார்கள்.. சிலர் நீங்கள்  சிலாகித்து எழுதிய போல படம் இல்லை என்று  உதடு பிதுக்கினார்கள்.. பார்க்கலாம் என்று  சலித்துக்கொண்டார்கள்..

நண்பர்களே...1961ல் இதே பெயரில் வந்த  படம் தான் ஓசியன் 11 அது பழைய படம்...அதே கான்சப்ட் அப்படியே 2001ல்  அதே பெயரில் காரம், மசாலா தூள் எல்லாம் போட்டு ரீமேக்கினார் நம்ம டைரக்டர்...... Steven Soderbergh அந்த படம்தான் ஓசியன்11

அந்த படத்தை பற்றிதான் நான் சிலாகித்து எழுதி இருந்தேன்..அந்த பதிவை வாசிக்க இங்கேகிளிக்கவும்.


இந்த படம் அந்த ஓசியன் 11வனோட ரெண்டாவது பாகம்...ஓசியன் 12... ஒரு திருட்டுபய எக்ஸ்ட்ரா சேர்ந்து இருக்கான்... ஆனா கதை அப்படியே வேற...

போன பார்ட்டுல.. மூன்று காசினோவில் வரும் 160 மில்லியன் டாலரை 11 பேர்  கொள்ளை அடித்தார்கள்... காசினோ ஓனர் பெனடிக்ட் சும்மா இருப்பானா? நீங்களே  சொல்லுங்க?? அட அவன் எப்படி சும்மா இருப்பான்.. ?? ஒன்னா ரெண்டா 160 மில்லியன் டாலர்..

போன  பார்ட்டுல அவன் கண் எதிரில் கொள்ளை அடிக்கும் போது?? அவன் பிராட் பிட் கிட்ட  போன்ல சொல்லுவான்.. எம் பணத்தை கொள்ளை அடிக்கிறிங்க.. அடிங்க.. ஆனா ஒன்னு...ஒம்மால என் கண்ணுல மட்டும் சிக்கிடதிங்க... பருப்பை எறைய விட்டு எறைய விட்டு ஓட விடுவேன் என்று கோபத்தில் பெனட்டிக்ட்  சொன்னது உங்களுக்கு வேண்டுமானல் மறந்து போய் இருக்கலாம்...

உங்களுக்கு என்ன ?? பணம் விட்டது அவன்தானே..?? 

அப்ப பெனட்டிக்ட் எத்தனை நாள் தூக்கம் வராம தவிச்சி இருப்பான்...???

ஓத்தா எத்தனை பேரு  சேர்ந்துடா? இந்த கொள்ளைய அடிச்சிங்க...?? எப்படி கோட்டை விட்டேன்.?? யார் யாரெல்லாம் இதுக்கு உடந்தை? இவ்வளவு பாதுகாப்பு வச்சியும் பயலுங்க எப்படி உள்ள வந்து அவ்வளவு பணத்தை  அபிட் விட்டானுங்க?

நம்ம சைடுல ஒரு ரத்த காயம்? ஒரு கொலை? ஒரு எதிர்ப்பு? எதுவுமே இல்லையே? அதெல்லாம் விட்டுத்தள்ளு...
 
நாம எப்படி கோட்டை விட்டோம்னு எத்தனை நைட்டு தூங்கம பெக் பெக்கா எத்தனை புல்லை காலி பண்ணி இருப்பான்...
எப்படி பணம் போச்சின்னு எத்தனை பேர்கிட்ட விசாரிச்சி இருப்பான்...?? எப்படி எல்லாம் ஸ்மெல் பண்ணி இருப்பான்..?

எஸ் கரெக்ட்... பெனிட்டிக்ட் மூன்றரை வருஷம் கழிச்சி எவன் எவன்லாம் பணத்தை அடிச்சானோ? அவன் எல்லாரையும் கண்டு பிடிக்கறான்... பணத்தை திரும்ப கேட்கின்றான்... மூன்று வருசத்துல  எல்லாரும் பணத்தை வச்சிகிட்டு பூஜை போட்டுகிட்டா இருக்க போறானுங்க..  பாதி பணம் செலவழிச்சிட்டானுங்க... அப்ப அந்த பதினோரு பேரும் என்னத்தை செய்வானுங்க...?? பார்ப்போம்..
============
Ocean's Twelve-2004 படத்தின் ஒன் லைன் என்ன??

கொள்ளையடிச்ச பதினோருபேர்கிட்டயும் வட்டியும் முதலுமா பணம் பறிகொடுத்தவன் கேட்கறான்.. அதுக்கு கொள்ளையடிச்சவங்க என்ன செஞ்சாங்க என்பதுதான் ஒன்  லைன்.,.
====================
Ocean's Twelve-2004/ படத்தின் கதை என்ன??
 

பெனட்டிக்ட் மூன்றரை வருஷம் கழிச்சி பதினோரு பேரையும் கண்டு பிடிக்கறான்.... எல்லாரும் உலகத்தின் பல பகுதிகளில் செட்டிலாயி இருக்காங்க... அவன்க அத்தனை பேரையும் தேடிப்பிடிச்சி என் பணத்தை வட்டியோட திருப்பிக்கொடுத்துட்டா நான் எதுவும் செய்யமாட்டேன்னு சொல்லறான்.. சோ அவன் பணத்தை  வட்டியோட திருப்பிக்கொடுக்கனும் அதுக்கு( Danny Ocean) குலூனி தலைமையில் பதினோரு பேரும் ஆளுக்கு 19 மில்லியன் பணத்தை கொள்ளையடிச்சாதான் பெனட்டிக் பணத்தை செட்டில் பண்ணி அதுக்கு அப்பறம் இருக்கும் குறை காலத்தையும் ஓட்டலாம்...

ஒரு ஆளக்கு 19 மில்லியன் கொள்ளை அடிக்க எந்நத இடத்தை தேர்ந்து எடுப்பது? அப்படி எந்த பொருளை தேர்ந்து எடுத்தா கடனை அடிக்கலாம்?? என்பதும் அந்த திட்டத்தில் வெற்றி பெற்றார்களா? என்பதுதான் ஓசியன் 12 படத்தோட கதை? அதை எப்டின்னு  வழக்கம் போல வெண்திரையில் பாருங்கள்..

===============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

பெனட்டிக்ட் முதலில் (டேனி)குலூனி (டெஸ்)ஜுலியாராபர்ட் தம்பதிங்க கிட்டதான் போறான்..கல்யாண நாளுக்கு பர்சேஸ் பண்ண போறவன் மனைவிக்கு, போன் செய்ய அந்த உரையாடலில் காதல் வழிகின்றது... அப்ப பெனட்டிக்ட் வர போனில் குலூனியிடம் கிரவுட் புளோரில் வெள்ளம் வந்து விட்டது என்று சொல்லி அதை  குலூனி புரிந்து கொள்ளும் காட்சி சிறப்பு..


பெனட்டிக் எல்லரையும போய் நேரில் சந்திக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதம்-.. எதுக்கு அந்த ஷாட் வைத்து இருப்பார்கள் என்றால்? ஓசியன் லெவன் கேரக்டர் சினிமா ரசிகர்கள் மனதில் பதிந்து போன கேரக்டர்.. மூன்று வருடம் கழிந்து அதே கேரக்டர்கள்.. திரையில் வரப்போகின்றது என்பதால் அந்த பில்டப்பை அந்த காட்சிகளுக்கு வைத்து இருப்பார்கள்.. நிறைய ஷாட்  டிராலி ஷாட்.. அதில் பெனட்டிக்  வந்து தடுக்கும் என்கேஜ்மென்ட் சீன் ஒரே ஷாட்..


கிழவர் சோல் இந்த படத்தில்  எனக்கு வயசாயிடுச்சி நான் வரலை.. என்று கிளம்ப அந்த பணத்தை நாம் ஷேர் பண்ணிப்போம் என்று சொல்வதும்... சோல் ஓட்டலில் இருக்கும் போது பெனட்டிக் பற்றி ஓ அந்த காமெடியான என்று கமென்ட் அடிப்பது நல்ல நகைச்சுவை

 விலைஉயர்ந்த ஓவியத்தை கொள்ளை அடிப்பதும்..பெரிய தங்க முட்டையை கொள்ளை அடிப்பதும் அது பெயிலியர் ஆவது என்று திரைக்கதையில் பபல டுவிஸ்ட்டுக்ள்... ஜுலியா ராபார்ட் வேடம் போட்டு வரும் ஜுலியா ராபர்ட்.. ஹோட்டலில் ஏதெச்சையாக பார்த்து பேச வரும் புரூஸ் வில்லிஸ் என்று காமெடிக்கு பஞ்சம் இல்லாத  காட்சிகள்..


திருடன் கூட பழகினால்தான் திருட்டை கண்டு பிடிக்க முடியும் என்று வலம் வரும் கேத்ரீனா ஜீட்டா ஜோன்ஸ்
போன பார்ட்டில் யாருக்கும் பிளான் தெரியாது பதினோரு பேரை தவிர... ஆனால் இந்த பார்ட்டில் போலிசுக்கு தெரியும்..குலூனி குருப்பிப்பிடம்.. சவால் விடுபவனுக்கு தெரியும்... சோ இதையும் மீறி கொள்ளை அடிப்படி எப்படி என்பதை படம் ரொம்பவே சுவாரஸ்யமாக விளக்குகின்றது...


ஜுலியா குலூனி லவ்  ரோமான்ட்டிக் சீன் இந்த படத்தில் அடிச்சி தூள் பரத்தும்..

ரியாக்ஷன் இல்லாத ஜுலியா முகத்தில் முத்தம் இட்ட படி..
முதல் முத்தம் கொடுத்து விட்டு உன்னை இருட்டில் விட்டதற்கு என்று குலூனி சொல்வதும் இரண்டாவது முத்தம் கொடுத்து விட்டு உன்னை திருடி ஆக்கியதற்கு என்பதும் உடனே ஜுலியா மாஸ்டர் தீப் என்று திருத்துவதும்... முன்றாவது முத்தம் கொடுத்து விட்டு அனிவர்சரிக்கு வராமல் போனதுக்கு என்று பேசி  முத்தம் இட்டு விட்டு புருஸ் வில்லிஸ் பற்றி கேட்கும் போது ஜுலியா பொய்  கோபத்தில்  குலூனியை எந்த இடத்தில் கிள்ளுகின்றார் என்பதை காட்டமாட்டேன் என்கின்றார்கள்.


அதே போல யார் பெஸ்ட் திருடன் என்று பிரான்சிஸ் கேரக்டர் குலூனியிடம் சவால் விட அதே பிரான்சிஸ் வீட்டில் ஜுலியா குலூனியிடம் நீதான் பெஸ்ட்  பட் இருந்தாலும் அவனை பெஸ்ட் என்று சொல்ல  சொல்லி அந்த தங்க முட்டையை  எப்படி அடித்தான் என்று சொல்ல  சொல் என்பது தன் திருட்டு கணவனின் திறமை மீது வைத்து இருக்கும் பெருமையான மனைவியின் எதிர்பபார்ப்பு..
அதே போல இரண்டு பேரும் அமைதியா அவன் எப்படி முட்டை அடித்தான் என்று பொறுமையாக கேட்டு விட்டு சரி நீ சொன்ன படி பெனட்டிக்க்கு பணத்தை கொடுத்து விடு என்று எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சொல்லுவது சிறப்பான கைதட்டும் காட்சி
அப்பா மகள் பேசிக்கொள்கின்றார்கள்..

 

50 வருடமாக தன் முகத்தை யாரிடமும் காண்டிப்பாத அப்பாவும் மகளும் முதல் முறையாக சந்திக்கின்றார்கள். நேருக்கு நோ மகள் கேட்கின்றாள்....
இத்தனை நாள் எங்கிருந்தாய்..??

காத்திருந்தேன்...

எதுக்காக??

இந்த தருணத்துக்காக என்று சொல்லி விட்டு தன் மகளை கட்டி பிடிக்கும் காட்சி அருமை....

கிளைமாக்ஸ் அருமை...
===========================
படத்தின் டிரைலர்...

======================
படக்குழுவினர் விபரம்.

Directed by     Steven Soderbergh
Produced by     Jerry Weintraub
Written by     George Nolfi

Starring     George Clooney
Brad Pitt
Matt Damon
Catherine Zeta-Jones
Andy García
Don Cheadle
Bernie Mac
Julia Roberts
Casey Affleck
Scott Caan
Vincent Cassel
Eddie Jemison
Shaobo Qin
Carl Reiner
Elliott Gould
Music by     David Holmes
Editing by     Stephen Mirrione
Studio     Village Roadshow Pictures
Distributed by     Warner Bros. Pictures
Release date(s)     December 10, 2004
Running time     125 minutes
Country     United States
Language     English
Budget     $110 million
Box office     $362,744,280

======================
 பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்... அவசியம் யாத்தே தீரவேண்டிய திரைப்படம்...காமெடிக்கு குறைவில்லை திரைப்படம்.. திருட்டில் ஒரு லாஜிக் இருக்கும்...இந்த படம் சென்னை முவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது.

============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

6 comments:

  1. //ஜுலியா ராபார்ட் வேடம் போட்டு வரும் ஜுலியா ராபர்ட்..//
    புரியல பாஸ்!

    ReplyDelete
  2. @ ஜீ... said...
    //ஜுலியா ராபார்ட் வேடம் போட்டு வரும் ஜுலியா ராபர்ட்..//
    புரியல பாஸ்!

    at some point , ஜுலியா ராபார்ட் will act as Real movie star ஜுலியா ராபார்ட் alongwith bruce willis in a Cameo Role .

    ReplyDelete
  3. Ocean 13-ம் பார்த்து விட்டேன். பழிவாங்கும் கதை அது. கிடைத்தால் பார்த்துவிட்டு உங்கள் பாணியில் விமர்சனம் எழுதவும்

    ReplyDelete
  4. Ocean's thirteen 13 um vanthirukkirathu parththu vittu eluthavum

    ReplyDelete
  5. நேரம் கடைக்கும் போது ஓசியன் 13 பற்றி எழுதுகின்றேன்.. மிக்க நன்றி கருத்தை பகிர்ந்தமைக்கு..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner