ஆல்பம்...
தாயுள்ளத்தோடு, கருனையுள்ளத்தோடு அம்மா அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள்.
தொலைக்காட்சி பேட்டிகளில் இன்னும் ஐந்து வருடத்துக்கு சொல்லிகொண்டு இருக்க போகின்றார்கள் என்பது மட்டும் தெள்ள தெளிவாக தெரிகின்றது...======================
மகிழ்ச்சியான செய்தி...எலைட் பார் என்ற பாரின் சரக்கு விற்க்கும் கடைகள் மாவட்ட தலைநகரங்ளில் திறக்க இருக்கின்றார்கள்..குடி மகன்களின் தாகம் தீர்த்த அம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. என்ன ஒரே சந்தோஷம் என்றால் மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் மாவட்டட மைய நூலகங்களில், தினமும் நூலக வருகை பதிவேட்டில் 100 பேருக்கு குறைவாக வந்து வாசிக்கும் வாசகர்கள் வரும் மாவட்ட மைய நூலகங்களை , பாரின் சரக்கு விற்கும் பாராக மாற்றவில்லையே என்று சந்தோஷபட்டே ஆக வேண்டும்...
================
எப்படியும் கூடங்குளம் அணு மின்சாரம் தொடங்கப்பட்டு விடும் என்பதை நான் முன்பே சொல்லி இருந்தேன்.. எப்படி எலக்ஷனுக்கு முன் மூன்று பேர் தூக்குக்கு அதரவு தருவது போல சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிவிட்டு பின்பு, எலக்ஷன் முடிந்த உடன் மாறியது போல கூடங்குளமும் அப்படித்தான்....
======
இந்தவார சலனபடம்...
அப்பாடக்கர்...
அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் நடப்பது போல காட்ட முயற்சித்து இருக்கின்றது இக்குறும்படம்..முழுக்க முழுக்க செல்போன் கேமராவில் எடுத்து இக்குறும்பபடகுழுவினருக்கு இது முதல் முயற்சி...நண்பர் இளா இயக்கிய இந்த படத்தில் எனது நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் நடித்து இருக்கின்றான்... கேமராவுக்கு முன் அவனின் முதல் முயற்சி இது.. பார்த்து விட்டு சொல்லுங்கள்...
===============
மிக்சர்....
இப்போதைக்கு தொலைகாட்சியில் என்னை வசிகரிக்கும் பாடல் வெடி படத்தில் இடம் பெற்ற இச் இச்சுன்னு இச்சு கொடு என்ற பாடல்..சமீரா ரெட்டிக்கு ரசிகனாகவிட்டேன்... கண்டாங்கி சேலை காஸ்ட்யூமில் பின்புறம் ஒரு இழையில் நூல் போன்று ஒட்டிக்கொண்டு இருக்கும் ஜாக்கெட்... எந்த நேரத்திலும் அவர் போடும் ஆட்டத்தில் பிச்சிக்கொள்ளுமோ என்று பயத்தை கொடுக்கின்றது.. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை...
================
நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் செஷாங் ரிடெம்ஷன் ஆங்கில படத்தினை ஒளிபரப்பினார்கள். வாழ்வில் பார்த்தே தீரவேண்டிய படம் அது... தமிழில் டப் செய்து ஒளிபரப்பினார்கள்.... மார்கன் பிரிமேனுக்கு எம் எஸ்பாஸ்கர் குரல் கொடுத்து இருக்கின்றார்... எம் எஸ் பாஸ்கரை ஒரு காமெடியனாக அவர் குரலை கேட்டு இருக்கின்றேன்.. குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராக அவரை பார்த்து இருக்கின்றேன்.ஆனால் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு பின்னனி குரல் மூலம் மார்கன் பிரிமேன் நடித்த ரெட் பாத்திரத்தை, வாழ வைத்த எம் எஸ் பாஸ்கருக்கு எனது நன்றியும் வாழத்தும்...வெல்டன் மிஸ்டர் எம் எஸ்பாஸ்கர் கீப் இட் அப்...
====================
வாழ்த்துகள்..
இன்று பிறந்தநாள் காணும் பதிவர்... அபி அப்பாவுக்கு எனது வாழ்த்துகள்..
==========
வாழ்த்துகள்..
இன்று பிறந்தநாள் காணும் பதிவர்... அபி அப்பாவுக்கு எனது வாழ்த்துகள்..
==========
இந்தவார கடிதம்.
அன்புள்ள ஜாக்கிசேகர் இல்லத்தினருக்கு
வாழ்க வளமுடன்.
நலம். நலம் அறிந்து மகிழ்ச்சி.
அண்ணா நூலகம் மாற்றம் குறித்து நீங்கள் எழுதியிருக்கும் இடுகையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இது பார்க்கவேண்டியவர்கள் பார்ப்பார்களா என்று தெரியவில்லை. இராணி மேரி கல்லூரிபோல பழையபடி முடிவில் மாற்றம் ஏற்பட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
பாலராஜன்கீதா
நன்றி பாலராஜன்.. உங்கள் பகிர்வுக்கு. ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும் என்பதை விட ஒரு சாதாரண குடிமகனாக என் ஆதங்கத்தை பதிவு செய்து இருக்கின்றேன்.
================
பிலாசபி பாண்டி....
வாழ்க்கை இரண்டே இரண்டு விஷயங்களை முன் வைக்கின்றது... ஒன்று எப்படி வாழவேண்டும் என்று... மற்றது எப்படி சாகவேண்டும் என்று... எதை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம்..
(நேற்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பான செஷாங் ரிடெம்ஷன் படத்தில் இருந்த வசனம் அது..)
=================
நான்வெஜ்18+
சொத்துக்கு ஆசைப்பட்டு 72 வயது கிழவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண், முதல் இரவு அறையில் இருந்து வெளியே வரும் போது ரொம்ப டயர்டாக இருந்தாள். தோழி கேட்டாள்.. ஏன் இவ்வளவு டயர்ட் என்று?? கிழம் 50 வருஷமா அணு அணுவா சேர்த்து வச்சி இருக்கேன் சொன்னது சொத்துன்னு நினைச்சிட்டேன் படுபாவி.... என்று வாயில் கையை வைத்துக்கொண்டு அலறினாள்..
============================
பிரியங்களுடன் ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ரசிக்கும்படியான, ஒளிவு மறைவில்லாத எழுத்துக்கள்..!!அருமை.. பகிர்வுக்கு நன்றி..!!
ReplyDeleteBlack Hawk Down படத்தின் தமிழ் மொழிமாற்றில் கூட பாஸ்கரின் குரல் கவனிக்க தக்கதாக இருக்கும்.
ReplyDeleteகடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை !!!
ReplyDelete‘அப்பா டக்கர்’, டாப் டக்கர்! நல்ல, இரசிக்கும்படியான ஒரு குறும்படத்தைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகுறும்படத்தை இதற்கு முன் உடான்ஸ் டிவியில் பார்த்தேன். ஸ்ரீராம் மற்றும் இளா நடிப்பு யதார்த்தம். கிராமத்து லொக்கேஷன் அமெரிக்காவில் எடுத்தது போல் இல்லை. சூப்பர். ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கி வந்து இளாவை உடனே படிக்க சொல்வதும், Fake Resume போட்டு ஸ்ரீராம் மேனேஜர் ஆனதும் லேசாக நெருடுகிறது. "ஜாலியான சப்ஜெக்டுக்கு எதுக்கு லாஜிக் பாக்கற?" என்று கேபிள் என்னை ஆப் செய்து விட்டார். அவ்வ்..!!
ReplyDeleteஇன்னொரு கேரக்டரில்(வேலை தேடி நகருக்கு வருபவர்)நடித்தது இளாவா?
ReplyDeletenalla pathivu
ReplyDelete//! சிவகுமார் ! said...
ReplyDeleteஇன்னொரு கேரக்டரில்(வேலை தேடி நகருக்கு வருபவர்)நடித்தது இளாவா?//
இல்லைங்க. அவர் பேரு ஜெயவேலன்.
குறும்பட பின்னூட்டங்களுக்கு நன்றி!
Very nice...
ReplyDeleteM.S.Basker.. He is basically from that field only. He gave voice to Kamarajar character in 'Kamaraj' film. That's best one. Try to see that mvi
நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் செஷாங் ரிடெம்ஷன் ஆங்கில படத்தினை ஒளிபரப்பினார்கள். வாழ்வில் பார்த்தே தீரவேண்டிய படம் அது... தமிழில் டப் செய்து ஒளிபரப்பினார்கள்.... மார்கன் பிரிமேனுக்கு எம் எஸ்பாஸ்கர் குரல் கொடுத்து இருக்கின்றார்... எம் எஸ் பாஸ்கரை ஒரு காமெடியனாக அவர் குரலை கேட்டு இருக்கின்றேன்.. குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராக அவரை பார்த்து இருக்கின்றேன்.ஆனால் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு பின்னனி குரல் மூலம் மார்கன் பிரிமேன் நடித்த ரெட் பாத்திரத்தை, வாழ வைத்த எம் எஸ் பாஸ்கருக்கு எனது நன்றியும் வாழத்தும்...வெல்டன் மிஸ்டர் எம் எஸ்பாஸ்கர் கீப் இட் அப்...////
ReplyDeleteNaanum paarthen thala ... MS bhaskar voice romba arumai . athuvum antha old librarian character super. Etho nenja urukkara mathiri BGM. arumai yana padam.
nane ungalukku phone panni sollanum ninachen . But , my internet got disconnected
Thanks
kalil
செஷாங் ரிடெம்ஷன் pathi neenga thani pathiva potta nalla irukkum nu ninaikaren
ReplyDeleteநன்றி தங்கம் பழனி..
ReplyDeleteதகவலுக்கு நன்றி கே கே.. கண்டிப்பா பார்க்கின்றேன்.
கலீல் கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது எழுதிகின்றேன்.. ஏற்கனவே எழுதினேன் அந்த பதிவை காக்கா தூக்கிட்டு போயிடுச்சி..
சசிபானு உண்மைதான்..
நன்றி சீனிவாஸ்,நடனசபாபதி
சிவா இந்த படத்தை இயக்கியது மட்டும் இளா நடிக்கவில்லை..