இந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது.. பொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க உகந்தது அல்ல...
==
உலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விஷயம் ஒருவனுக்கு ஒருத்திதான்..
ஆனால் எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலும் விபச்சாரம் கொடிகட்டி பறக்கின்றது.. ==
உலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விஷயம் ஒருவனுக்கு ஒருத்திதான்..
அது ஒரு பழைமையான தொழில்..விபச்சாரத்துக்கு வரும் பெண்கள் வேண்டி விரும்பி இந்த வாழ்வை ஏற்றுக்கொள்வதில்லை.. ஆனால் சிலர் சொல்லலாம் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றது,.. அதை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று.... ஒன்ஸ் அந்த சாக்கடையில் கால் வைத்து விட்டால் சுற்றி சுற்றி அந்த இடத்தையே வட்டமடிக்க வைத்து விடும்.
17 வயது ஷை என்ற பெண்ணுக்கு நேரும் அனுபவங்கள்தான் இந்த எக்ஸ் படத்தின் கதை..
============
எக்ஸ் படத்தின் திரி லைன்...
நடுத்தெருவில் இருக்கும் 17 வயது பெண் அடுத்த வேளை உணவுக்கும்,தங்குமிடத்துக்கும் விபச்சாரத்தில் இறங்கினால் அவள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை..
===========
X படத்தின் கதை என்ன?,
ஷை பருவபெண்..ஆனால் யாருமற்ற அனாதை..போதை பழக்கத்ததால் அவளின் அம்மா இறந்து விடுகின்றாள்......அடுத்த வேளை சாப்பாட்டுக்காக விப்ச்சாரத்தில் இறங்குகின்றாள் ஷை..
ஹோலி பல காலம் தொழிலில் இருக்கும் பெண்.. அவளுக்கு நிறைய கஸ்டமர்...பாரிஸ் நகரில் புது வாழ்க்கை கிடைக்கும் என்று நினைத்து போகும் நம்பிக்கையில் மண் விழுகின்றது. திரும்ப அதே தொழில்..... நிறைய பணம் கொடுக்கும் கஸ்டமர் ஹோலியையும் சேர்த்து இரண்டு பேர் வேண்டும் என்கின்றான்...
ஹோலி தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணை புக் செய்கின்றாள்.. ஆனால் விபத்தில் அவன் சிக்கிவிடுவதாள் ஆள் கிடைக்காமல் தவிக்கும் போது ஷை அவள் கண்ணில் படுகின்றாள்..
அந்த கஸ்டமர் இருக்கும் ஓட்டல் அறையில் இருக்கும் போது அவனுக்கு பழக்கமானவன் அந்த அறைக்கு வருகின்றான்..அதனால் ஹோலி மற்றும் ஷை இரண்டு பேரையும் பாத்ரூமில் மறைய வைக்கின்றான்... வந்தவன் அவனை கொன்று விடுகின்றான்...
கொலையை பார்த்தவர்கள் இரண்டு பேர்... அவர்களை துரத்துகின்றான் முடிவு என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்..
==============
படத்தின் சுவாரஸ்யங்கள்..
முதல் காட்சியில் பணக்கார பெண்கள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஜீன் அடித்துக்கொண்டு இருக்க,அவர்கள் எதிரில் ஹோலியும் ஒரு ஆளும் லைவ் செக்சில் இருக்க அதைகாட்சி படுத்திய விதமும் அந்த பணக்கார பெண்களின் ரியாக்ஷன்கள் அருமை.
ஷை விபச்சார தொழிலுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள தனது உடைகளை சிறியதாக்குவதும்... தொழிலுக்கு புதிது என்பதால் என்ன ஏது? என்று திகைமாறுவதும் நல்ல காட்சிபடுத்தல்...
ஆடி காரில் வரும் பெரிசு.. காண்டம் இல்லாமல் ,ஹேண்ட் ஜாப் செய்வதென்றால் 50 டாலர் தருகின்றேன் என்பதும்.. செக்சியாக பேசவேண்டும் என்று கட்டளையோடு ஷையை காரில் ஏற்றுவதும்..சந்தை நிலவரத்தை தெரிவிக்கும் காட்சி..
ஷையை பார்த்து ஒரு சின்ன வேலை.. பணம் 300 டாலர் தரேன்.. இரண்டு மணிநேரம்தான்.. மேல மட்டும் காமிச்சா போதும்.. நான் மட்டும்தான் அவனோடு செக்ஸ் வச்சிக்குவேன் என்று ஹோலி ஷையோடு பேசும் காட்சிகள்..தமிழ்சினிமா ரசிகனுக்கு வியப்பு..அந்த காட்சி கீழே...
தங்கள் எல்லையில் தொழில் செய்யும் ஷையை பார்த்து விபச்சார பெண் ஒருவர் இரக்கமில்லாமல் புரட்டி எடுக்கும் காட்சி.. அவர்களில் சிலர் கருனையற்றவர்கள் என்பதை காட்டும் காட்சி...
அவய்லபிள் லைட்டிங்கில் கொஞ்சமே கொஞ்சம் லைட்டிங் பூஸ்ட் செய்து எல்லா இரவுகாட்சிகளும் எடுத்து இருக்கின்றார்கள்..
கொலை நடந்ததும் எனக்கு உனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஹோலி சொன்னாலும், ஷை கொலைகாரனிடன் மட்டும் காட்சியில் மனது கேட்காமல் உதவி செய்வது அழகு...
படத்தில் சின்ன சின்ன எதிர்பாராத டுவீஸ்ட்டுகள் இருக்கின்றன..
கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி.
====================
படத்தின் டிரைலர்.
===============
படக்குழுவினர் விபரம்
Director:
Jon Hewitt
Writers:
Jon Hewitt, Belinda McClory
Stars:
Viva Bianca, Hanna Mangan Lawrence and Peter Docker
Country:
Australia
Language:
English
Release Date:
2011 (Australia)
Runtime:
90 min
Color:
Color
Aspect Ratio:
2.35 : 1
=============
பைனல் கிக்..
இந்த படம் பார்க்க வேண்டிய படம்.. திரில்லருக்கான விறு விறுப்பு சற்றும் குறைவில்லாமல் இருக்கின்றது..விக்கென்டுக்கு ஏற்ற படம்..
============
படத்தின் மேக்கிங்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
''தாய்லாந்து அரசு விபச்சாரத்தை சட்டபூர்வ தொழிலாக அங்கீகரித்துள்ளது'' அது இந்தவாரம் வலையில் நான் படித்த செய்தி ...
ReplyDeleteவிமர்சனம் வழமை போல் நன்று.
செல்வாவின் மயக்கம் என்ன திரைப்படத்தினை தங்கள் கண்களால் பார்க்க காத்திருக்கிறேன்.
It is very difficult to eradicate the prostitution from the world. But one help could be done by the common people i.e. rehabilitation to the prostitutes. Government and the common people must give hands them, one who escapes from such hell.
ReplyDeleteநான் இந்த மாதிரியான படங்களை பார்ப்பதில்லை. கண்களில் நீர் வரவழைத்துவிடும்.
ReplyDeleteவழக்கப்போல விமர்சன்ம் அருமை சார்..படம்தான் எப்ப பார்ப்பது என்று தெரியவில்லை.நன்றி.
ReplyDelete