Vithagan-2011 வித்தகன் திரைவிமர்சனம்




 இயக்குனர் பார்த்திபனின் 50 வது படம்...இரண்டு வருடகாலம் தயாரிப்பில் இருந்து தடைகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்த படம்..
நிறைய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம்...தமிழ் திரையுலகில் நான் அதிகாரபூர்வமாக ஒளிப்பதிவு உதவியாளராக வேலை செய்த முதல் படம்.... ஒரு சின்ன கேரக்டரில் தலைகாட்டிய படம்...

கோயம் பேடு மார்கெட்டில் பல்வேறு இடங்களில் விளைந்த பூக்களை கொண்டு, மிக அழகாக கதம்ப மாலை தொடுப்பார்கள்.. அது போல பல்வேறு காலகட்டங்களில் ஒரு ஒரு ஷாட்டுக்கும் காட்சிகைளுக்கு உழைத்தவைகளை, ஒன்று சேர்த்து கோர்வையாக ஒரு திரைப்படம் போல கானும் போது அது கொடுக்கும் சந்தோஷம் மிக அலாதியான விஷயம்..

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரைஉலகில் அடிஎடுத்து வைத்து, புதியபாதையில் தானே நடித்து இயக்கி  தேசிய விருது பெற்று, பொறாமை கொண்ட தமிழ் திரைஉலகில் 50வது படம் வரை வருவது தமிழ்சினிமாவில் பெரிய சாதனை என்பேன்.
=========================
வித்தகன் படத்தின்  ஒன்லைன்...

நேர்மையான போலிஸ் பொறுக்கி வேஷம் போட்டா?? அதுதான் வித்த.........கன்

வித்தகன் படத்தின் கதை என்ன??

பார்த்திபன்(ரௌத்திரன்) ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி.. சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை நம்பாமல், ரவுடி என்று தெரிந்து விட்டால், அவர்களை போட்டுதள்ளுவதுதான் முதல் வேலை.சந்தோகம் வராதவாறு என்கவுண்டர், கொலை செய்து அலிபி ரெடி செய்பவர். அப்படி ஒரு கொலை செய்யும் போது அனாதை பெண் பூர்ணா பார்த்து விடுகின்றார்.. பார்திபனின் நல்ல மனதை பார்த்து காதல் வயப்படுகின்றார்... ரவுடிகளை அநியாயமாக இழக்கும் அதிகாரவர்கம் போலிஸ் வேலையில் இருக்கும் பார்த்திபனை சிக்கலில் சிக்க வைத்து வேலையை விட்டு தூக்குகின்றது.. இருந்தாலும் ரவுடிகளை கொல்வதை வேர் நிறுத்தவில்லை.. காரணம் என்ன?, போலிஸ் வேலை திரும்ப கிடைச்சுதா? போன்ற ஆர்வமுள்ள  கேள்விகைளை வெண்திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
==========================
படத்தின் சுவாரஸ்யங்கள்..

ரஜினி படங்களில் அது அப்படித்தான்... இது இப்படித்தான்  என்பது போல லாஜிக் கொஞ்சமாக வைத்துக்கொண்டு  கதை பண்ணுவார்களே அது போல லாஜிக் லைட்டாக கையில் குழைத்துக்கொண்டு கதை பண்ணி இருக்கின்றார்...

படத்தில் வில்லன்களை சகட்டு மேனிக்கு சாகடிக்கவேண்டி இருப்பதால் பெருத்த வில்லன் பட்டாளம்.
வேட்டையாடு விளையாடு கமலுக்கு எப்படி ஒரு கற்க்க கற்க்க சாங்கோ அதே போல தன் படத்திலும் இருக்கவேண்டும் என்று டிரை செய்து இருக்கின்றார்..

இந்த வயதுக்கு மேல் காதலை இவரே போய் சொல்லாமல் இவரை பூர்ணா சுற்றி சுற்றி காதலிக்க வைத்து இருப்பதில் லாஜிக்.

வழக்கமாக பார்த்திபனின் நக்கல் நிறைந்த வசனங்கள் இந்த படத்தில் குறைவுதான். சில சில இடங்களில் ரசிக்கவும் செய்கின்றன..

படத்தின் பாடல்களில் ஓசோனிலே ஓட்டையை போடு பாடல் எனக்கு ரொம்ப  பிடித்த ஒன்று..நான் வேலை செய்த முதல் பாடலும் அதுவே... அதே போல இக்குதே பாடல் நல்ல மெலடி...கெட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கின்றது..

படத்தின் பிரமாண்டம் 18 வது மாடியில்  வில்லனின் மாளிகை இருப்பது போல செட் போட்டதுதான்..

80 பர்சென்ட் காட்சிகளுக்கு,  கேமரா பின்னால் இருந்து நான் உழைத்து இருக்கின்றேன்..

படப்பிடிப்பில் பூர்ணாவை நேரில் பார்க்கும் போது அசின்  வந்து விட்டது போல ஒரு பிரமை...சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ்களில் அசத்துகின்றார்..

ஒர்க் பண்ண படம் என்பதால் நான் நிறைய எழுதவிரும்பவில்லை..

நன்றி எம் எஸ் பிரபுசார்...நன்றி பார்த்திபன் சார்...
==========
படத்தின் டிரைலர்.
=========
படக்குழுவினர் விபரம்

Directed by     R. Parthiban
Produced by     Manickam Narayanan
Written by     R. Parthiban
Starring     R. Parthiban
Poorna
Music by     Joshua Sridhar
Cinematography     M. S. Prabhu
Editing by     Anthony
Studio     Seventh Channel Entertainment
Release date(s)     November 18, 2011
Country     India
Language     Tamil
 
==========
பைனல்கிக்.

ஒரு சாதாரண ரசிகனாய் இந்த படத்தை பார்த்தால்  போரடிக்காமல் விறு விறுப்பாய் செல்கின்றது.. படத்தை ஒருமுறை பார்க்கலாம்..நான் ஒர்க் செய்த படம் என்பதால்  சொல்லவில்லை... சாலிகிராமத்தில் இருக்கும் எஸ்எஸ்ஆர் பங்கஜம் தியேட்டரில் படத்தைபார்த்து தொலையாதீர்கள்.அந்த அளவுக்கு கேவலமா புரஜெக்ஷன்  இருக்காம்...

=============
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

10 comments:

  1. ஒரு சின்ன கேரக்டரில் தலைகாட்டிய படம்... andha scene post panna mudiyumaa please

    ReplyDelete
  2. தன் உழைப்பைத் திரையில் பார்ப்பது தனி சுகம்தான். நீங்கள் இன்னும் பல சிகரங்களைத் தொடுவீர்கள் சேகர்! என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. all the best Anna.... hope... u will get more film soon... adv wishes!!!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஜாக்கி,படத்தில காதல் காட்சிகள் வைத்தது, பார்திபன் நடித்தது,பார்திபனின் விளையாட்டை படத்தில் வைத்தது,இதை தவிர்த்திருந்தாள் இந்த ஆண்டின் வெற்றிப் படம் இது.

    ReplyDelete
  5. உங்களுக்காகவே அந்த படம் பார்ப்பேன்.. மேலும் மேலும் வளர என் நல்வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. Hard work never fails....Neenga nallaa varuveenga sekar...kalakkunga....

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே.,.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner