1994 சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சினிமா ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது..எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு ஷுட்டிங் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தார்கள்..
அப்போது நான் தினக்கூலியா கம்பி பிட்டர் வேலையை, சேப்பாக்கம் பறக்கும் ரயில்வே ஸ்டேஷனில் செய்து கொண்டு இருந்தேன். அந்த காண்ட்ராக்ட்டை எடுத்தவர்கள்.. அல்சமால் கண்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தினர்.அரசிடம் இருந்து பணம் வந்தால் வேலை இல்லையென்றால் சும்மா இருக்கவேண்டியதுதான்...
மாநிலக்கல்லூரியின் பின்பக்க மதில் சுவரில் தற்க்காலிக குடிசை அமைத்து அதில்தான் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் தங்கி இருந்தோம். காலையிலேயே ஷுட்டிங் பரபரப்பு எங்கள் காதில் கேட்க ஆரம்பித்து விட்டது...அந்த பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது ..
மதில் சுவர் அருகே நின்று கொண்டு அந்த படப்பிடிப்பு காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தோம்.
அது ஒரு பாடல் காட்சி நிறைய டான்சர் நடனஒத்திகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.....கேமரா, கிரேன், ரிப்ளைக்டர் என்று களைகட்டியது...
நாகாராவில் அந்த பாடல் சூழல ஆரம்பித்தது..காலேஜு திறந்துடுச்சி தில்லாலே லேலோ.. கலர் கலர் பிகர் வருது தில்லா லே லேலோ...லோ லோன்னு ஜொள்ளு விட்டு ... என்று அந்த பாடலை படமாக்கி கொண்டு இருந்தார்கள்.. படத்தின் நாயகன் பார்த்திபனை நேரில் பார்த்ததும் வேடிக்கை பார்க்க வந்த மக்களின் பெரிய விசில் சத்தம் காதை பிளந்தது..
இயக்குனர் பார்த்திபன் நடன ஒத்திகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்..டேக்கில் தாளத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டு இருந்தார்.. அன்று முழுவதும் அந்த பாடலை ஓட விட்டு, மாநிலக்கல்லூரியின் இன்டு இடுக்கு விடாமல் படமாக்கி கொண்டு இருந்தார்கள்.
நிறைய ஷுட்டிங் இதற்கு முன் பார்த்து இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் நின்று பார்த்து, ரசித்தது அந்த பாடலைதான்.முழுக்க முழுக்க கேமரா நகர்வுகள், லைட்டிங், போன்றவற்றின் மீதுதான் என் முழு கவனமும் இருந்தது..
அன்று மாலை ஷுட்டிங் பேக்கப் ஆகியது..இயக்குனர் பார்த்திபனிடம் அடித்து பிடித்து ஆட்டோகிராப் வாங்கினார்கள்..
காலங்கள் மாறின...காலேஜ் வேலையை விட்டதும் எழுத்தாளர் சுபா(பாலா) சாரிடம் போய் நின்றேன்.. என்னை ஒளிப்பதிவாளர் எம்எஸ்பிரபு சாரை மீட் செய்ய சொன்னார்...
நான் பிரபுசாரை பார்த்தேன்... நாளைக்கு வித்தகன் ஷுட்டிங் இருக்கு வந்துடுங்க என்றார்..
நான் தமிழ் சினிமாவில் வேலை பார்த்த முதல் படம்... இயக்குனர் பார்த்திபனின் 50வது படம் வித்தகன்..
வித்தகன் படத்தின் என்ட் டைட்டிலில் உதவி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் எனது இயற்பெயர் தனசேகர் என்று மூன்றாவது பெயராக பெரிய திரையில் முதல் முறையாக பார்த்த போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை..
இரவு பகலாய் நிறைய உழைப்பு.. அந்த உழைப்பை திரையில் பார்த்த போது நான் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை....
வாய்ப்பை உருவாக்கி கொடுத்த எழுத்தாளர் சுபா (பாலா) சாருக்கும் எனது குருநாதர் பிரபுசாருக்கும் எனது நன்றிகள்.
ஒரு நாள் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமணையில் படப்பிடிப்பு... பார்த்திபன் சார் என்னை பார்த்து தனசேகர்...ஒரு ஹாஸ்டல் வார்டன் கேரக்டரை நீங்க பண்ணறிங்களா என்றார்...
நான் பிரபுசாரை பார்த்தேன்..அவர் ஓகே என்றார்..நானும் இயக்குனரிடம் சரி என்றேன்..
வேறு சட்டையை மாட்டினார்கள்.. கண்ணாடி அணிவித்தார்கள்..ஹாஸ்டலில் சேர வரும் சின்ன வயது பார்த்திபன்...ஹாஸ்டல் வாசலில் அப்பாவின் பிரிவை நினைத்து சோகமாக நிற்க்க.. நான் அவனை சமாதானப்படுத்தி ஹாஸ்டல் உள்ளே அழைத்து செல்ல வேண்டும் இதுதான் ஷாட்....
கடந்த வெள்ளி அன்று பிரசாத் பிரிவியூ தியேட்டரில் படத்தை பார்த்தேன்..போலிஸ் பார்த்தீபன் நான் ஹாஸ்டலில் சேர்ந்தேன் என்று சொல்லும் காட்சியில்,நான் சின்ன வயது பார்த்தீபன் பக்கத்தில் நிற்கும் காட்சி வருகின்றது...
அட அது நாம தானே என்று நான் நினைக்கும் முன்பே நாலு செகன்ட்டில் காணமால் போய் விடுகின்றது...
பிரபு சாருக்கும் பார்த்திபன் சாருக்கும் எனது நன்றிகள்.
கடந்த மூன்று வருடகாலங்களில் சினிமா எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துது..
1994ல் இதே பார்த்திபன் சார் சரிகமபதநி படத்தை வேடிக்கை பார்த்த ஆள் இன்று அவரின் 50வது படத்தில் உதவி ஒளிப்பதிவாளராய் பணிபுரிந்தேன்.....கன நேரக்காட்சியிலும், டைட்டிலிலும் பெயர் வந்தது என்னை பொருத்தவரை பெரிய விஷயம்...எனது பொருளாதார சூழல் காரணமாக நான் சினிமாவில் இருந்து இப்போது விலகி இருக்கின்றேன்..
1994ல் சென்னையில் எனக்கு பிரதான விஷயமாக இருந்தது....அடுத்தவேலை உணவும், வேலையும்தான் அப்போது எனக்கு பெரிதாய் தோன்றியது...சினிமாவை பற்றி கிஞ்சித்தும் நினைத்து இல்லை. ஆனால் காலஓட்டத்தில் விடாமுயற்சிகாரணமாக அது சாத்தியம் ஆனாது...
விளையாட்டாய் ஒரு பழமொழி கோடம்பாக்கத்தில் சொல்லுவார்கள்..ஒரு வாட்டி ஷுட்டிங் பொங்கல் சாப்பிடு விட்டால் திரும்ப திரும்ப கோடம்பாக்கத்தையேதான் சுற்ற வைக்கும் என்று...
பார்ப்போம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உங்கள் பெயர் தியேட்டரில் பார்க்கையில் என்ன உணர்ச்சியில் இருந்தீரோ, அதே உணர்வில் இப்பொழுது நான். எழுத்து மூலம் உங்கள் சுக, துக்கங்களை அடுத்தவரிடம் ஏற்றி விடுகிறீர்கள்.
ReplyDeleteஇரண்டு வருடத்திற்க்கு மேல் உங்கள் பதிவுகளை படித்து வந்தாலும் இதுவே எனது முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன். கூச்சம் தான் காரணம்.
நீவீர் நலமுடன் வாழ வேண்டும். வாழ்த்தும் அளவு நான் பெரியவனில்லை, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
சூப்பர் ஜாக்கி. மென்மேலும் வளர்வீர்கள்.
ReplyDeleteஜாக்கி..திரையில் பெயரை காணும் சந்தோஷம் அளப்பரியது..நானும் அதை உணர்ந்திருக்கிறேன்.. விரைவில் முதன்மை பெய்ராக வரும்..வாழ்த்துக்கள்..(ஆனால் இன்னும் கொஞ்சம் கடின முயற்சி வேண்டும்.இது என் அன்பான அறிவுரை)
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர் ...
ReplyDeleteமென்மேலும் வளர்வீர்கள் ஜாக்கி..:)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா
ReplyDeleteSir neenga yenna veela pakuringa ... i am confused of your profession ...ippadiku ungalin rasigan
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி, மிக விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள்
ReplyDeleteஅன்புடன் காந்தி, ஷர்ஜா
வாழ்த்துகள் ஜாக்கி, மிக விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள்
ReplyDeleteஅன்புடன் காந்தி, ஷர்ஜா
இன்னும் மிகப்பெரிய உயரத்தை எட்டுவீர்கள். நிச்சயம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பர்களே...
ReplyDeleteநன்றி மணிஜி... உங்களுக்கே என் சிட்சுவேஷன் தெரியும் இல்லை... என்ன செய்யறது.. சினிமாவை பொறுத்தவரைக்கு வெற்றி பெறனும்னா அதிலேயே பழியா கிடைக்கனும்...
எங்கள் பெயர் திரையில் தோன்றும் பெருமை ஏற்படுகிறது. உயரங்கள் எல்லாம் நீங்கள் ஏறுவதற்கே உயரமாய் இருக்கின்றன. வலித்தாலும் அண்ணாந்து கை தட்டுவோம் .. வாழ்த்துக்கள்!
ReplyDeleteசினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆக வாழ்த்துகள்.
ReplyDeleteதொடர் முயற்சியால் கிடைத்த வெற்றியின் மகிழ்வே அலாதியானது தான்.
ReplyDeleteதங்கள் மகள்(அம்மா) ராசியோ; ஆசியோ?
நினைத்தது கைகூடுகிறது.
வளருங்கள்!
எட்டாக்கனி என்று எதுவுமில்லை முயற்சி குதிரை சவாரியில். அன்று நாங்கள் உங்களின் சூட்டிங்கிற்கு வந்து வேடிக்கை பார்ப்போமாக... வாழ்த்துக்கள் அண்ணா... விரைவில் பார்த்து விடுகிறேன் வித்தகனை....
ReplyDeleteசந்தோஷமும், வாழ்த்துக்களும் ஜாக்கி‘ண்ணா...
ReplyDeletesuper
ReplyDeleteவாழ்த்துக்கள் தனுசு அண்ணா. நிறைய வாய்ப்புகள் பெற்று உங்கள் திறமையை நிரூபிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் நண்பரே! கடந்த மூன்று வருடங்களாக உங்களின் பதிவை வாசித்து வரும் அன்பர்களில் நானும் ஒருவன். ஒரு மாதமாக முன்பு தான் என் ப்ளாக்கையே ஆரம்பித்துள்ளேன். (இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்) தாங்கள் மேன் மேலும் வளர எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteNalla padivu.
ReplyDeleteமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்வாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துகள் , முயற்சி முன்னேற்றம் தரும்
ReplyDeleteமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி!!!
ReplyDeleteமென் மேலும் .. பல உயரங்கள் தொட வாழ்த்துகள்!!!!!!
congrats jackie anna hope u will get more chances
ReplyDeleteவாழ்த்துகள்!!!!!!!!!!!
ReplyDeleteவாழ்த்துகள் Sir , உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் தோன்றும் காட்சிக்காக மறுமுறை படத்தை பார்தேன்.வாழ்த்துகள் ! ! உங்கள் முயற்சி உங்களுக்கு நல்லதொரு முன்னேற்றத்தை தரும் ! !
ReplyDeleteபோன்ல சொன்ன மாதிரி மனசு ஆறுதலா இருந்துச்சு எனக்கு. காரணத்தை சொன்னேனே ...ம்ம் ஜாக்கி அண்ணே யூ ராக் அஸ் யூஷ்வல்
ReplyDeleteமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteமகிழ்ச்சியாக உள்ளது ஜாக்கி. வாழ்த்துகள். நீங்கள் மீண்டும் திரை துறையில் நுழைந்து அசத்துவீர்கள் என நம்புகிறேன்
ReplyDeleteஇப்போது தான் பதிவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்
ReplyDeleteVallthukal anna.
ReplyDeleteVallthukal anna.
ReplyDelete