Departures (Okuribito) 2008/உலகசினிமா/ஜப்பான்/ மனிதர்களின் கடைசி புறப்பாடு...



அம்மாவாசையை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை... அமைதிபடை அம்மாவசை போல போர்ஜரி கேரக்டர் அல்ல...

எங்கள் ஊரில் யார் இறந்து போனாலும் முதல் தகவல் அம்மாவாசையின் காதுக்குத்தான் போய் சேரும்...

அம்மாவாசை இறந்த வீட்டுக்கு வரும் போது பறை மேளக்காரர்களை கையோடு அழைத்து வருவார்..வந்த உடன் அவர்களுக்கு சாராயத்துக்கு காசு வாங்கி கொடுத்து விடுவார்..

உயிர் போனதுமே கை கட்டை விரல், கால் கட்டை விரல் இரண்டையும் சின்ன கயிற்றால் கட்டி விடுவார்கள்..
ஆண் என்றால், நாமம் என்றால் நாமம்... பூசை என்றால் பூசையை போட்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்து விடுவார்கள்..கிராமங்களில் கண்களின்மேல் காசு வைப்பார்கள்..

பெண்கள் என்றால் முகத்தில் மஞ்சள் பூசி பெரிய பொட்டு வைத்துவிடுவார்கள்..

வெளியே பந்தல் போடும் வேலை நடக்கும்.. அதற்குள் பக்கத்து அக்கத்து வீடுகளில் இருக்கும் பெரிய பெஞ்சு எடுத்து வந்து வீட்டுக்கு வெளியே போட்டு அதன்  மேல் இறந்தவர் உடலை  கிடத்தி ,சுற்றிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பார்கள்..

அதற்குள் அம்மாவாசை  சொல்லி அனுப்பிய சங்கு ஊதுபவர் வந்து வீட்டில் வெளியே இருக்கும் பந்தக்கழியில் சாய்நது கொண்டு குத்துக்கால் போட்டு, சாரயம் குடிப்பது போல உட்கார்ந்து  சங்கு ஊதிக்கொண்டு அப்படியே பெரிய ரவுண்டான இரும்பில் டங் டங் என்று அடிப்பார்...

சாரயத்துக்கு காசு வாங்கி போன பறை அடிப்பவர்கள் டைட்டாக ஏற்றிக்கொண்டு, வீட்டில் இருக்கு எருமட்டை (வரட்டி) நாலு வாங்கி கொஞ்சம் கிருஷ்ணாயில் ஊற்றி பற்ற வைத்து, அதில் பக்கத்தில் இருக்கும் சரவுகைளை போட்டு எரிய விட்டு, அதில் பறை மேளத்தை இளஞ்சூடாக காட்டி அடிக்க துவங்கினால் ஊருக்கே சாவு விழுந்து விட்ட சேதி ஊருக்கே தெரிவிக்கப்படும்...

மறுநாள் மாலையில் உடலை குளிப்பாட்டி புது  துணி சுற்றி ஜோடித்து வைத்த பல்லக்கில் உடலை வைத்து, இறுதி புறப்பாடு நடக்கும்...கடைசியாக முகத்தை பார்க்கறவங்க பார்க்கலாம் என்று அம்மாவசை கத்துவார்...இது போல பெரும்பாலான தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கும் நடைமுறை.. 

இதுவே ஜப்பான் என்றால்????? அதுக்கு இந்த படத்தை பார்க்கவும்..

எங்கள் ஊரில் அந்த பெரியவர் வாழ்ந்தார்.. யாரும் இல்லாதவர்.. அவருக்கு வந்த பென்ஷன் பணத்தில் காலத்தை ஓட்டி வந்தார்..மூன்று நாட்களாக அவர் இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவேயில்லை.. 

ஆனால் அவர் வீட்டில் இருந்து நாற்றம் அடித்துக்கொண்டு இருக்க.. கதவை உடைத்து பார்த்தால் அந்த பெரியவர் கட்டிலில் இருந்து இறங்கி அப்படியே முட்டிக்கால் போட்டு குப்புற விழுந்த படி இறந்து போய் இருக்கின்றார்...

நான் பக்கத்து ஊரான பாண்டிக்கு போய்  இருந்தேன்.. என் மாமா பையன் தாமோதரன் மற்றும் இன்னும் சில ஊர் இளவட்டங்கள்.. அவரின் உடலை எடுக்க போனால்உடல் கருமையாக மாறி  சதைகள் இத்து இத்து விழுந்து கொண்டு இருந்தன..நீர் அவ்ர் உடலை சுற்றி வழிந்து கொண்டு இருந்தது.. பக்கத்தில் இருந்த பெரிய பிளாஸ்டிக்  ஷீட்டை விரித்து அப்படியே அந்த உடலை புரட்டி எடுத்து போய் தகனம் செய்து விட்டு வந்தோம். 

சென்ட்ரல் ,எழும்பூர், சென்னை துறைமுகம், மற்றும் மீனம்பாக்க போன்ற புறப்பாடுகள்.. பயணங்கள்...திரும்ப வீட்டுக்கு வரும் நம்பிக்கை கொண்டவை.. ஆனால் இந்த புறப்பாடு திரும்ப வராதா புறப்பாடு..அதனால்தான் இந்த படத்துக்கு புறப்பாடு என்று பெயர் வைத்து இருக்கின்றார் இயக்குனர்Yōjirō Takita..
=========
Departures (Okuribito) 2008 படத்தின் இரண்டு லைன்..

குடும்பஸ்தனுக்கு திடிர் என்று   வேலை போய்விட்டால்.?.  குடும்பத்தை காப்பாற்ற இறந்து போன உடலை சுத்தப்படுத்தும் வேலை செய்பவனின் கதை... 

========================
Departures (Okuribito) 2008 படத்தின் கதை என்ன?,

Daigo Kobayashi (Masahiro Motoki) ஒரு செல்லோ இசைக்கலைஞன்... செல்லோன்னா.. அதாம்பா வயலின் போலவே இருக்கும் ஆனா ஆள் உயரத்துக்கு இருக்குமே அதை கூட காலை விரிச்சிக்கினு அதுக்கு நடுவுல வச்சிகிட்டு வாசிப்பாங்களே...ஓகே செல்லோ இசைப்பவன் டயாகோ, அதன் மூலம் கிடைக்கும் பைசாவில் குடும்பம் நடத்துகின்றான்.. திடிர்னு  வேலை இல்லை ஆர்கெஸ்ட்ராவை கலைச்சிட்டோம்னு சொல்லறாங்க... வேலை இல்லை.. என்ன செய்வான்... நியூஸ் பேப்பர்ல வரும் ஆள்தேவை விளம்பரம் பார்த்துட்டு அந்த இடத்துக்கு போறான்...அங்க அவனுக்கு வேலை கொடுக்ககறாங்க.. பணம் கிடைக்குது ...ஆனா வெளியே சொல்ல முடியாத வேலை.. இறந்த உடலுக்கு மேக்கப் செய்யும் வேலை....வெளியே சொல்ல முடியுமா? நண்பர்கள் வெறுக்கின்றார்கள்.. 

மனைவி வெறுக்கின்றாள்..டயாகோ அப்ப அவன் சின்ன வயதாக இருக்கும் போதே.. அவரோடு வேலை பார்த்த பெண்ணோடு அப்பா ஓடி விடுகின்றார்..டயகோ அம்மாதான் அவனை கஷ்டப்பட்டு வளர்கின்றாள்....அதனால் அப்பா மீது அருவருப்பான  வெறுப்பு..ஊரெல்லாம் இறந்த உடலை சுத்தம் செய்பவனுக்கு அவன் அப்பா அனாதையாக இறந்து கிடக்கும் செய்தி கிடைக்கின்றது அவன் அப்பாவின் இறுதி யாத்திரைக்கு சென்றானா? அங்கே நடக்கும் நெகிழ்ச்சியை உணர நீங்கள் வெண்திரையில் இந்த படத்தை பார்க்க வேண்டும்..
==============

 
====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

டயாகோவுக்கு முதலில் இந்த வேலையில்  விருப்பம் இல்லையென்றாலும் பணத்துக்காக இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கின்றான் பிறகு ஆத்மார்த்தமாக எப்படி மாறுகின்றான் என்பது அழகான காட்சியியல் மூலம் சொல்லுகின்றார்கள்..

எங்கள் ஊரில் மூன்றுநாள்  இறந்து போன பெரியவரின் உடலே அப்படி நாறுகின்றது என்றால் இரண்டு வாரம் இறந்து போன உடல் எப்படி இருக்கும்?? அதுதான் டயாகோவுக்கு முதல் வேலை...
ஆனாலும் சகித்து கொண்டு செய்து விட்டு அழுக்கு போக குளித்தும், மனது கேட்காமல் மனைவியோடு உடலுறவு வைத்துக் கொள்கின்றான்.

இறந்த உடலுக்கு முதலில் ஒரு வணக்கம் வைத்து விட்டு பழையை உடையை எடுத்து விட்டு, உடலை ஈரத்துணியில் துடைத்த பிறகு புது உடை மாற்றி, ஆசனவாயில் ஒழுகும் நீரை  பஞ்சு வைத்து அடைத்து , முகத்தில் பழைய ஷேப்புக்கு எடுத்து வர வாய் மூக்கு போன்ற இடங்களில் உள்ளே பஞ்சு வைப்பது வரை எல்லா வேலைகளும் குடும்பத்தினர் முன்னிலையில் செய்தாலும் ஒரு  சின்ன அளவு கூட உடலின் பாகங்கள் வெளியே தெரியாமல் உடை மாற்றுவது சான்சே இல்லை... அதை தவம் போல செய்வதும் இறந்த உடலுக்கு மதிப்பு அளிப்பதும் நெகிழவைக்கும் காட்சிகள்.
 
தனது இறந்து போன மனைவிக்கு மேக்கப் செய்ய அழைத்ததும் 5நிமிடம் தாமதமாக வந்ததற்க்கு திட்டிவிட்டு, அவர்கள் மெல்ல  மெல்ல இறந்த உடலை மிக அழகாக மாற்றுவ்தை நேரில் பார்த்து விட்டு நெகிழ்ந்து போய் அவர்களிடம் சாரி கேட்பதும் உண்ண தின்பணடம் கொடுப்பதும் டச்சிங்...என் மனைவியை இவ்வளவு அழகாக நான் பார்த்து இல்லை என்று சொல்லும் அந்த டயலாக்  நெகிழ்சியின் உச்சம்...

முதலில் டயாகோ நண்பன் அவன் செய்யும் வேலையை கேலி செய்தாலும் அவன் அன்னைக்கு அவன் கடைசி வழியனுப்பலுக்கு தயார் செய்வதை பார்த்து விட்டு கண்ணீர் வடிப்பது நெகிழ்ச்சியான காட்சி.

டயாகோ மனைவிக்கு முதலில் பிடிக்கவில்லை.. ஆனால் தன் கணவன்  அவனின் நண்பனின் தாயின் இறந்த உடலை தயார் செய்யும் போது ,நேரில் பார்க்கையில் கணவன் ஆத்மார்த்தமாக  வேலை செய்வதை பார்த்து பெருமைகொள்கின்றாள்.

மின்சார மயானத்தில் கேட் கீப்பராக இருக்கும் கிழவர் பேசுவது வாழ்க்கை தத்துவம்.. இறப்பு என்பது முடிவல்ல அது ஒரு தொடக்கம் என்று பேசும் வாழ்க்கை தத்துவம் அற்புதம்.

பண்டைய காலத்தில் தங்கள் உணர்வுகளை எப்படி கூழாங்கல் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்கள் என்பதை தன் மனைவிக்கு சொல்வதும், ஒரு கூழாங்கல் மூலம் தன் அன்பை சொல்வதும் அதனை அவள் புரிந்துக்கொள்வதும் அழகு...

காமசுகத்துக்கு குடும்பத்தை விட்டு ஓடிப்போனவர்கள் நிலையை கதையின் ஊடே  வலிகளோடு இந்த படம் போகின்ற போக்கில் சொல்லுகின்றது..

30 வருடம் கழித்து அப்பா முகத்தை பார்ப்பது கொடுமைதான்..

எனக்கு இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் டயாகோ பாஸ் கேரக்டர்தான்...

மெலிதாய் வருடும் செல்லோ இசை  மனதை நடுங்கவைக்கும்..
நிறைய சோக காட்சிகள்... எல்லா இறப்புகளையும் அதன் காரணங்களையும் டீடெய்லாக   சொல்லி இருப்பார்...உதாரணத்துக்கு பைக் விபத்து, சின்ன பையன், இரண்டு பெண்டாட்டி கணவன்.

கிளைமாக்சில் இறந்த தந்தையின்  மூடி இருக்கும் கையில் இருந்து கண்டு எடுக்கும் பொருளும் ,அதன்பின் அழுதுக்கொண்டே சவரம் செய்வதும் கண்ணீர் வரவைத்து விடும்..

உங்கள் அப்பா இற்நது போய் விட்டார் என்றால் கிளைமாக்ஸ் பார்த்து இன்னும் நெகிழ்ச்சியாக உணர்வீர்கள். 

இந்த படம் எடுக்க பத்து வருடம் ஆனது..

இயக்குனர் Yōjirō Takita எல்லா சாவு வீட்டிற்கும் போய் அவர்கள் இன்ப துன்பங்களையும் பிரச்சனைகளை கவனித்தே இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்...

இந்த படம் சிறந்த வெளிநாட்டுபட வரிசையில்  81வது வருடத்திய  ஆஸ்கார் விழாவில் விருது வாங்கியது.
====================
படம் வாங்கி தள்ளிய விருதுகள்.

81st Academy Awards: Best Foreign Language Film
    3rd Asian Film Awards: Best Actor (Masahiro Motoki)
    3rd Asia Pacific Screen Awards: Best Performance by an Actor (Masahiro Motoki)
    17th Golden Rooster Award :Best Picture, Best Director and Best Actor (Masahiro Motoki)
    28th Hawaii International Film Festival: Audience Choice Award
    32nd Montreal World Film Festival: Grand Prix des Amériques
    20th Palm Springs International Film Festival: Mercedes-Benz Audience Award for Best Narrative Feature
    29th Hong Kong Film Awards: Best Asian Film
    51st Blue Ribbon Awards: Best Actor (Masahiro Motoki)
    33rd Hochi Film Awards: Best Film
    32nd Japan Academy Prize Best Film, Best Director (Yojiro Takita), Best writing (Kundo Koyama), Best Actor (Masahiro Motoki), Best Supporting Actor (Tsutomu Yamazaki), Best Supporting Actress (Kimiko Yo), Best Cinematography, Best Film Editing, Best Sound Mixing, Best Lightings
    82nd Kinema Junpo Awards: Best Film, Best Director, Best Screenplay, and Best Actor (Masahiro Motoki)
    63rd Mainichi Film Award: Best Japanese Film, Best Sound Mixing
    21st Nikkan Sports Film Award: Best Film and Best Director
    2008 Trailer ZEN Festival: Grand Prix
    30th Yokohama Film Festival: Best Film, Best Director, and Best Supporting Actress (Kimiko Yo, Ryōko Hirosue)
    2010 Vits Awards: 2nd Place in "Top 3 Movies", "Best Adapted Script", "Jury's Movie", and "Best Short Performance" (Tastuo Yamada).
 
==================
படத்தின் டிரைலர். 


==========

படக்குழுவினர் விபரம்..

Directed by     Yōjirō Takita
Produced by     Yasuhiro Mase
Written by     Kundo Koyama
Starring     Masahiro Motoki
Ryōko Hirosue
Tsutomu Yamazaki
Kimiko Yo
Kazuko Yoshiyuki
Takashi Sasano
Music by     Joe Hisaishi
Cinematography     Takeshi Hamada
Editing by     Akimasa Kawashima
Distributed by     Shochiku
Release date(s)     September 13, 2008
Running time     131 minutes
Country     Japan
Language     Japanese
 
====================
பைனல்கிக்
இந்த படத்தை நண்பர் சுந்தர் எனக்கு நான்கு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி பார்த்தும் விட்டேன்.. ஆனால் இப்போதுதான் விரிவாய் எழுத  நேரம் கிடைத்தது .

இந்த படம் பீல் குட் மூவி.. மென் சோக படங்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்காது..ஆனால் ஒரு சில படங்கள் நெகிழ்ச்சிஅடைய வைத்து விடும்..இந்த படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து விட்டு உங்கள்  கண்களில் கண்டிப்பாக நீர் வந்தே தீரும்.. இந்த படம் பார்த்தே பார்த்தே தீரவேண்டியபடம்.. இந்த படம் சென்னை மூவிஸ்நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது.

=======================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


==================


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

5 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner