Ocean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா????





சமீபத்தில் ஆனந்த விகடனில் ஜெயலலிதா பயலலிதா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் ஆரம்ப வரிகள்  நன்றாக இருந்தது...



இன்றைய தேதிக்கு வேண்டுமானால் நமக்கு 66 கோடி சாதரணமாக இருக்கலாம் ஆனால் 15 வருடத்துக்கு முன் 66 கோடி என்பது பெரும் பணம்... அது போலத்தான்..ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி என்று எல்லாம் கேள்விபட்டு விட்டு, 160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றார்கள் என்று  சொன்னால் சற்று அயற்சியாகத்தான் இருக்கும்  என்ன செய்வது?? கால ஓட்டம் அப்படி படுத்தி எடுத்து விட்டது...



ஆனால் நிதர்சனம் என்பது என்ன தெரியுமா?- இன்னமும் நண்பரிடம் 500ரூபாய் கடன் வாங்குவது என்பது சாமான்ய மனிதர்களை பொறுத்தவரை குதிரைக் கொம்பாக இருக்கின்றது.. அதனால்  நீங்கள் ஒரு சாமானிய மனிதனாக 160மில்லியன் டாலரை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.... அது எவ்வளவு பெரிய பெரும் பண்ம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.. இப்ப  சப்ஜெக்குடுக்கு போகலாமா??



இந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்....காரணம் ஜார்ஜ்குலூனி அவருடைய மேன்லி நஸ்  அவர் நடித்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பீஸ் மேக்கர் படத்தைதை குறிப்பிட்டு சொல்லுவேன்..


பொதுவாக கொள்ளை அடிக்ககும் படங்கள் என்றால் ரத்தம் அதிகம் தெரிக்கும்...

கழுத்தில் கத்தி வைத்து  அறுத்து விடுவார்கள்.. மார்பில் துப்பாக்கியால் சூட்டு ரத்தம் பீறிட வைப்பார்கள்..

காதலியை கடத்தி கற்பை பரிசோதிப்பார்கள்..

பிள்ளைகளை கடத்தி ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று விடுவார்கள்... 

வீட்டில் வளர்க்கும்  செல்ல பிராணியை நடு மண்டையில் சுடுவார்கள்...,

கொள்ளை அடிப்பதை பார்த்த ஐவிட்னஸ் வீட்டில் புகுந்து கேஸ்கனெக்ஷனை அறுத்து வீட்டையே சொக்க பானையாக மாற்றி எரிய விடுவார்கள்..


துப்பாக்கியும் கையுமாகத்தான் அலைவார்கள்.. 

பிரேமுக்கு பிரேம் துப்பாக்கியை எடுத்து லோட் செய்வதும் அன்லோட் செய்வதுமாக செய்து செய்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள்...


கொள்ளை அடிப்பவர்கள் கொடுர மிருகத்துக்கு இணையாக சித்தரிக்க படுவார்கள்..


தீபாவளிக்கு சின்ன பசங்க ரோல் கேப்பு போட்டு துப்பாக்கியால் அடிக்கடி சுட்டு விளையாடுவது  போல, சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டே இருப்பார்கள்..


கொள்ளையன் தலைவனின் அல்லக்கையாக இரண்டு பெருத்த மார்பு பெண்கள் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.. மார்பகத்தை முக்கால்வாசியை சென்னை தீவுத் தீடல் பொருட்காட்சி போல கடை விரித்து காட்டிக்கொண்டு இருப்பார்கள்..


முக்கியமான விஷயம் கொள்ளை அடிக்கும் தலைவனோடு இருக்கும் பெண்கள் பிராவை அணியவேமாட்டர்கள்.. மார்பு காம்பு அவர்கள் போட்டு இருக்கும் சட்டையை விட்டு வெளியே தெரிவது போல உடை அணிவார்கள்.. 


கொள்ளக் கூட்ட பாசுக்கு காதலியாக வரும் பெண்கள் பின்பக்கத்தை பெரிதாக அரக்கி அரக்கி நடப்பார்கள்..

அவர்கள் இந்திய பெண்கள் பயண்பபடுத்துவது போல மை கண்களில் தீட்டி இருப்பார்கள்... 

வில்லன் கூட்டத்தில் இருக்கும் வில்லி பெண்கள்..எந்த டயலாக் பேசினாலும் ஐஸ்கிரீம் நக்குவதுக்கு ரெடியாக இருப்பது போல வாயை வைத்துக்கொண்டு பேசிவார்கள்..

குறிப்பாக சின்ன மார்பகத்தோடு இருந்தால் மட்டுமே கொள்ள்ளை கூட்ட பாசின் காதலியாக இருக்க தகுதி படைத்தவர்கள்..


எதிர்பாராத நேரத்தில் ஒரு கொலையவது கொள்ளையனின் காதலி செய்வது வழக்கம்.. கொலை செய்த பிணத்தை ஜடஸ்ட் லைக்தட்டாக  எட்டி உதைத்து விட்டு வருவார்...

அதே போல அந்த பெண்களின் காம போதை ரியாக்ஷனை இயல்பு வாழ்க்கையில் யாருமே  பார்த்து இருக்க மாட்டீர்கள்.. அப்படி ஒரு ரியாக்ஷனை பார்க்கலாம்..



வில்லன் சளிபிடித்தாலும் மயிரா போச்சி என்பது போல இரண்டு பிகினி போட்ட குட்டிக்களோடு நீச்சல் குளத்துல மிதந்துகிட்டு, தண்ணி அடிப்பது போல ஒரு காட்சியாவ இருக்கும்.. அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு.........க்கோ துப்பாக்கி குண்டு உறுதி...



கொள்ளை கூட்ட ஆட்டகள் எப்போதும் ஊர் பக்கம் உமா மூக்கு பொடிய அடிக்கடி போடுவது போல ஸ்டப்பை கண்ணாடி டீபாய் மேல் இழுத்துக்கொண்டே இருப்பார்கள்..அந்த இடத்தில் ஒரு லோ ஆங்கி ள் ஷாட் நிச்சயம்.. அப்படி அவர்கள் முக்கால் உறிஞ்சி விட்டு தலையையும், உடலையும் உலுக்கும் போது நமக்கே தும்மல் வந்து தொலைப்பது போல இருக்கும்.


கொள்ளை அடிப்பவர்கள் மோஸ்ட்லி செயின் ஸ்மோக்கராக இருப்பார்கள்.. அந்த கூட்டத்தில் ஒருவன் வளையம் வளையமாக புகை விடுவான்..


காரை காட்டுதனமாக ஓட்டுவார்கள்.. அடிப்பது பெரிய கொள்ளை என்பதை காட்ட மிக பரபரப்பாக இருப்பார்க்ள்.

காரை நியூயார்க் வீதிகளில்  கண்டமேனிக்கு ஓட்டுவார்கள்.. நிறைய  கார் மோதல்கள் நிகழும்.. ஹெலிகாப்டரில் இருந்து போலிஸ் சர்வ நிச்சயமாக துரத்துவார்கள்..


வில்லன் குழுவில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்பவார்... அதனால் அவர் கண்டு பிடிக்கபட்டு கொடுரமாக கை விரல்கள் அல்லது அவரு மெட்டர் பாயிண்ட்டில் சுட்டு வில்லன் சாகடிப்பார்...



நியூயார்க்  மக்கள் அச்சப்பட்டதை டிவியில் காட்டிக்கொண்டே இருப்பார்கள்... துடிப்பான ஒரு போலிஸ் ஆபிசர் தன் உயிரை பணயம் வைத்து காரில் கண்டிப்பாக துரத்துவார்.. அவரோடு இருக்கும் ஒரு நல்ல அசிஸ்டென்ட்டை ஒரு சுபயோக தினத்தில் வில்லன் சுட்டுக்கொன்று விடுவார்....


வில்லனுக்கு என்று ஒரு தனி பாடி லாக்வேஜ் இருக்கும்.. கொள்ளை  அடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது வில்லன் காதலியின் உதட்டை வெறித்தனமாக பதம் பார்ப்பார்... காதலி வெறியின் உச்சத்தில் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் உடை அவிழ்த்து  மேட்டருக்கு ரேடியாகும் போது,  சனியன் புடிச்ச  போலிஸ் மூக்கில் வேர்த்து போல வந்து தொலைக்கும்.....



மேலே சொன்னது எல்லாம்... ராப்பரி செய்யும் ஹாலிவுட் படங்களில் காலம் காலமாக சொல்லப்பட்டவை...


ஆனால் ஓசீயன் லெவன் திரைப்படத்தில் மேலே நான் குறிப்பிட்ட எந்த விஷயமும் இருக்காது.. இந்த படம் ஒரு பிரேக் த ரூல்ஸ் மூவி.. எதையெல்லாம் கொள்ளை அடிக்கும் படங்களில் ஹாலிவுட்காரர்கள் அரைத்த மாவையே அரைத்தார்களோ... அதையெல்லாம் இந்த படத்தில் இருக்கவே இருக்காது..


11 கொள்ளையார்கள்.. யாருமே எதுக்குமே அலட்டிக்கொள்ளமாட்டார்கள்..160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றோம் என்ற பதட்டம் எவரிடமும் கொஞ்சமும் இருக்காது.. 

மறந்தும் எவரும் ஒரு சேப்டிக்கு கூட துப்பாக்கி எடுத்து யாரையும் சுட்டது இல்லை... கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை, பரபரபப்பு இல்லை, பக்கவான திட்ட அமைப்பு நடிகைச்சுவையோடு ஒரு கார்பரேட்  கபெனியில் வேலை செய்வது போன்ற ஒழுங்கோடு ஆனால்  மில்லியன் டாலர் கொள்ளை  அடிக்கபடுவது சான்சே இல்லாத ரகம்..

  எல்லாத்தை விட மிக முக்கியமான விஷயம் 11 பேரில் யாருமே நம்பிக்கை துரோகம் செய்யவேமாட்டார்கள்..  


ஓ நிறைய சொல்லிட்டனோ..??? ரைட் இப்ப கதைக்கு வரேன்...


===================

Ocean's Eleven -2001 படத்தின் கதை என்ன???


ஒரு  சேர் அதில்  வந்து (George Clooney ) Danny Ocean உட்காருகின்றான்... அது சிறைச்சாலை... சிறையில் இருந்து வெளியே அனுப்பும் முன் சில கேள்விகள் கேட்கின்றார்கள்.. பதில் சொல்கின்றான்.. சிறையில் இருந்து வெளியே போனதும் என்ன செய்ய போகின்றாய்.. என்று சொன்னதும் ஒரு தீர்க்கமான பார்வையோடு சின்ன புன்னகை மட்டுமே குலூனியிடம் இருந்து வரும்... என்ன செய்ய போகின்றான்??? காசினோக்களில் எப்படி விளையாடுவது என்று டிப்ஸ் சொல்லிக்கொடுக்கும் நண்பன்... (Brad Pitt )Rusty Ryan சந்திக்கின்றான்...


இதுவரை யாரும் செய்யாததை நாம் செய்ய போறோம்


நல்ல திட்டமிடல்


பெரிய குழு


துப்பாக்கி இல்லை


பெரிய பாதுகாப்பு ஏற்ப்பாடுகள்.


ஆனா செமையான பணம்.. என்ற பிராட் பிட் இடம் குலூனி சொல்ல... எங்க  கொள்ளை அடிக்க போறோம்? என்று விடாமல் கேடகின்றான்..போன மாசம் லாஸ்வேகாசில் என்ன செய்தாய்? யூ மீன் கேசினோ என்று பிராட்பிட் கேட்க?? 

ஒன்று இல்லை இரண்டு இல்லை... மூன்று..காசினோ பணத்தை கொள்ளை அடிக்க போகின்றோம் என்று சொல்லுகின்றான்...

அதுக்கு ஆள்பலமாக பதினோரு பேரை சேர்த்துக்குகொண்டு திட்டம் வகுத்து 160 மில்லியள் டாலரை கத்தி இன்றி ரத்தம் இன்று ஜஸ்ட் லைக்தட்டாக எப்படி தட்டிக்கொண்டு வருகின்றார்கள் என்பதுதான் கதை.. அது எப்படி என்பதை மட்டும் வெண்திரையில்  பார்த்து தெரிதுக்கொள்ளுங்கள்.

 =========================
பட்த்தின் சுவாரஸ்யங்களில் சில


படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இந்த படம் கொடுத்த சந்தோஷத்தை எனக்கு வெறு எந்த படமும் இதுவரை கொடுத்து இல்லை... அதற்க்காக ஓசீயன் லெவன் இயக்குனர் Steven Soderberghக்கு ஸ்பெஷல் நன்றி..


Steven Soderbergh ஹாலிவுட்டில் மிகப்பெரிய அளுமை கொண்ட டைரக்டர்.. ஸ்கிரிப்ட் ரைட்டர், சினிமோட்டோகிராபர்,.எடிட்டர் இயக்குனர் புரொட்யூசர் என்று இவருக்கு பல முகங்கள்..அது மட்டும் இல்லை இவர் இயக்கிய டிராபிக் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கிய  டைரக்டர்... இச்த படத்துக்கு கேமராமேன் இயக்குனர் இவரே..


ஒரு ஒரு தமிழ் நடிகனை கேரவேனில் இருந்து கூட்டி வந்து  நடிக்க வைப்பதற்க்குள் நம்ம தமிழ் டைரக்டர் பெண்டு நிமிந்திடும். ஆனா பெரிய பெரிய ஸ்டார்காஸ்ட் ஆட்களை  வச்சிகிட்டு இப்படி  ஒரு படம் பண்ண பெரிய தில் வேண்டும்...


ஒரே ஒரு படம் இந்த ஆள் எடுத்த, இந்த படம் போல நான் எடுத்துட்டா போதும் ஜென்மசாபல்யம் அடைஞ்சிடுவேன்..




உலகின் 500 சிறந்த படங்கள்  பட்டியலில் இந்த படத்துக்கும் ஒரு இடம் இருக்கு...


படத்துக்கு 85 மில்லியன் செலவு... ஆனா சம்பாதித்து கொடுத்தது 450 மில்லியன் டாலர்... அப்ப படம் எந்த அளவுக்கு சக்கை  போடு போட்டு இருக்குன்னு பார்த்துக்கோங்க..




படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடி பின்னி பெடல் எடுக்கும்.. நமக்கும் இது போல ஒரு குழு கிடைத்தால், கொள்ளை அடிப்பதை பற்றி யோசிக்கலாமே எனும் படியாக நீங்கள் நினைப்பதே இந்த படத்தின்  வெற்றி...


படத்தின் பெரிய ஆர்ட்டிஸ்ட் தவிர்த்து எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்.. (Carl Reiner )Saul Bloom கேரக்டர்... இந்த கிழம் அடிக்கும் குத்து செமையானது... இதுவும் இந்த கொள்ளை கூட்டடத்தில் ஒன்னு...



பதினோரு பேரை செலக்ட் செய்வதையும் அவர்கள் திறமைகளை தெளிவாக விளக்கி அவர்கள் செய்ய வேண்டிய ரோலை தெளிவாக குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும், திரைக்கதைக்கு எழுதியTed Griffinக்கு ஒரு பெரிய பராட்டு...



(Elliott Gould )Reuben Tishkoff காசினோவை இதுவரை மூன்று பேர்தான் கொள்ளை அடிக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள்.. அவர்கள் எப்படி தோற்று போனார்கள் என்பதை சொல்வதும் அதனை பிளாக் அண்டு ஒயிட்டில் நகைச்சுவையாக காட்டுவதும்.. சரி ஒரு கியூரியா சிட்டியில் கேட்கின்றேன்.. எதை  கொள்ளை அடிக்க போகின்றீர்கள் என்று  கேட்கும் போது மூன்று கேசினோ பேர் சொல்லும் போது சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஸ்பூனை அப்படியே போட்டு அதிர்ச்சியாவது செமை காமெடி.


குலூனி ஒய்ப் ஜுலியா ராபர்ட் வில்லனோட இருக்கா என்றதும்...எல்லோரும் அதிர்ச்சியாக இந்த கிழம்  வில்லனை விட ஜுலியா ராபர்ட்  உயரம் அதிகமாச்சே? எப்படி  செட் ஆகும் என்பது போல புலம்புவது ஹைலைட்..


அந்த குழுவில் வயதில் முதியவ்ர் என்பதால் சொதப்பி விடக்கூடாது என்பதற்க்காக நாளைக்கு  ரெடியாகனும் ரெடியா  என்று குலூனி கேட்கும் போது, நான் ரெடி, நான் ரெடி அடுத்து வாட்டி கேள்வி கேட்டா நீ நாளை விடியலை பார்க்க முடியாது என்று சொன்னதும் குலூனி ஓகே அந்த ஆள் ரெடியாயிட்டாரு என்று பிராட்டிடம் சொல்லுவது சிறப்பு..


குலூனி எக்ஸ் ஒய்ப்பான ஜுலியாவிடம்..அவன் உன்னை சிரிக்க வைக்கின்றானா? என்று கேட்கும்  போது  அவன் என்னை அழவைப்பதில்லை  என்று சொல்லும் வசனங்கள் நருக்..


மேட்டேம் ரயில் சீன் செமையான நருக். காட்சி.. அதே போல குழுவில் ஒவ்வோருவரையும் சேர்க்கும் காட்சி அவர்கள் திறமைகள் ரசிக்கவைப்பவை..


அதே போல வில்லனும் சாதாரணமான ஆள் இல்லை... (Andy García)Terry Benedict சுருட்டு பிடித்துக்கொண்டு வாத்து போல நடப்பது ஒரு வகையான ஸ்டைல்...


திட்டம் போட்டு பணத்தை அடிக்கும் காட்சிகளில் செமை டுவிஸ்டுகள்..


பணத்தை அடித்து விட்டு பதினோரு பேரும் கேசினோ வாசலில் இருக்கும் நீர் ஊற்று எதிரில் இருப்பதும், சில் ஆவுட்டில் ஒருவர் ஒருவராக கலைந்து செல்வதும் அழகான  காட்சி...


விஷயம் சொல்லப்பட்டு விட்டது  சொன்ன இடத்துக்கு எல்லோரும் வந்து விட்டார்கள்.. குலூனி விருப்பமும் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் எங்க்ளோடு இணையுங்கள்.. இல்லேயேல் இரவு உணவை முடித்து விட்டு கிளம்புங்ககள் என்று சொல்வதும்.,. மேட்டேமன் மட்டும் யோசனையோடு இருக்க முன்னாள்  காசினோ ஓனர் அருகில் வந்து இந்த வீடு நன்றாக இருக்கின்றதா?  வாங்க வேண்டும் என்றால் இந்த குழுவில் இணைந்துக்கொள் என்று சொல்வதும் அதனை ஏற்பதும் செமை..

அந்த சர்க்கஸ் கேரக்டர் பையன் மனதில் இருக்கின்றான்..
இந்த படத்தின் இசை படத்துக்கு பெரிய பலம் என்றால் அது மிகையாகது..

================
படத்தின் டிரைலர்..



 =======================
படக்குழுவினர் விபரம்
 Directed by     Steven Soderbergh
Produced by     Jerry Weintraub
Screenplay by     Ted Griffin
1960 Screenplay:
Harry Brown
Charles Lederer
Story by     George C. Johnson
Jack Golden Russell
Starring     George Clooney
Brad Pitt
Matt Damon
Andy García
Julia Roberts
Bernie Mac
Don Cheadle
Casey Affleck
Scott Caan
Elliott Gould
Eddie Jemison
Shaobo Qin
Carl Reiner
Music by     David Holmes
Cinematography     Steven Soderbergh
Editing by     Stephen Mirrione
Studio     Village Roadshow Pictures
JW Productions
Distributed by     Warner Bros.
Release date(s)     December 7, 2001
Running time     117 minutes
Country     United States
Language     English
Budget     $85 million
Box office     $450,728,529

=======================

 பைனல்கிக்.

இந்த படத்தை கண்டிப்பா பார்த்தே பார்த்தே பார்த்தே தீரவேண்டிய படம்..2003ல் இந்த படத்தை பார்த்த போது ஆங்கிலம் அந்த அளவுக்கு பரிட்சயம்  இல்லை .. நிறைய விஷயங்கள் முக்கியமாக டயலாக் எல்லாம் புரியாமல் பாத்தேன்...இப்போது இன்னும் புரிந்து  பார்க்கும் போது அசத்தலோ அசத்தல்...கேகேநகர் பாரில் நண்பர் கார்த்க் நாகராஜனுடன் சரக்கில் இந்த படத்தை பற்றி சிலாகித்து  பேசியதாலும் ரொம்தப நாளாக இந்த படத்தை எழுத வேண்டும் என்று இருந்த போது அந்த பேச்சு இன்னும் உற்சாகபடுத்திய காரணத்தால் இந்த பதிவு...




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...

9 comments:

  1. உடனே அலிபாயைத் தேடிப் போகணும்கற எண்ணத்தை உண்டாக்கிட்டீங்க. ஆனா இந்தத் தடவை விஷயத்துக்கு வரவே ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டீங்களே சேகர்... விளைவு... பதிவு நீளமாய்டுச்சு. ஆனாலும் வழக்கம்போல் சூப்பரா விவரிச்சிருக்கீங்க...

    ReplyDelete
  2. AS you said one of the best movie to be watched, Assembling those stars itself is big task
    Nice write up
    Ravikumar R

    ReplyDelete
  3. ''அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு.........க்கோ துப்பாக்கி குண்டு உறுதி...''
    சொல்றதுக்கு இல்ல...... சம கலக்கல். நான் பாட்டுக்கு சிரிச்சின்னு இருக்க., என்னை கடந்து போறவர்கள் என்ன லூஸ் மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு போனாங்க.

    ReplyDelete
  4. dear jackie
    steven soderbergh is one of my favourites. his way of telling cinema revolutionized the story telling ie., a full lengthy flashback was made into parts ie., coming to the present and back and again on and on which made his film " Sex Lies and Video tape ", himself and the actress Andi Mcdowell world wide popular. this idea was followed by many. to clarify mani ratnam adopted this style screen play in " ALAIPAYUTHE ". may be paved the way for non-linear style of screen play. oceans 11 is another gem from the great director. if it is not inspiring you then only it is a news. yes thats the greatness. ( naan oru padam ithu maathiri pannakooda pothum en janmathukku --- jackie )
    athey pol ivallavu periya starkalai vaithukkondu screenplayla athakalam pannavum ( chellamaga nadigargalai katti meykkavum ) ellorukkum equal weightage kodukkum alavukku screenplay & direction avarukku therinthathaal thaan film super super hit and one of the best 500. (ie., classic + box office + top 500 ) ingey bala athupol vikram + suriya (equal weightage that is the main point to maintain in screenplay & direction ) vaithu pithamagan eduthar. guts. nice review
    anbudan
    sundar g ( rasanai )

    ReplyDelete
  5. நீங்கள் பரிந்துரைக்கும் படங்களை, online-இல் கிட்டினால், பார்த்துவிடுகிறேன். இந்தப் படத்தையும் iwannawatch.net வழியாக இன்றைக்குப் பார்த்தேன். நமக்குப் புரிகிற ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய? Action காட்சிகள் புரிந்தது - ரசித்தேன். நகைச்சுவையை உங்கள் எழுத்தின் முன்னுரையில் ரசித்தேன்.

    ReplyDelete
  6. Just now watched this Film in kalaingar TV started @ 11pm, ended by 1 AM.. OK movie only.

    ReplyDelete
  7. சூப்பர் படம் இது...இதோட 2 sequels பாத்து இருக்கீங்களா..1st பார்ட் தான் பெஸ்ட்

    ReplyDelete
  8. Torrent - மூலம் இறக்கி பார்த்துட்டேன். பார்த்தா டி.வியிலயும் தமிழ்-ல அதே படம் இரவு 11 ம்ணிக்கு. தமிழ் டயலாக் எப்படியிருக்குன்னு அதையும் பார்த்தாச்சு.. கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் தான்... அடுத்த OCEAN 12- Torrent -ஐ பதிவிறக்கிக் கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  9. அட்டகாசமான படம்... எப்பவும் என் பேவரிட் லிஸ்ட்ல இருக்கிற படம்...

    அதுக்கு உங்க விமர்சனம் சூப்பர்...

    இந்த படத்தோட 'மியூசியம்கேமரா' சவுண்ட் ட்ராக் கேட்டிருக்கீங்களா... படத்துல இருக்காது... ஆனா பர்பெக்ட் தீம்... :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner