மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•09•2010)

ஆல்பம்...

எந்திரனின் டிரைலர் நேற்று வெளியிடபட்டது...நிறைய பேரிடம் என்னிடம் இருந்த மகிழ்ச்சி அப்படியே காண முடிந்தது... இந்த படத்தை பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றது....மன்னன் படம் வரையில் ரஜினி நடித்த முதல் காட்சி பார்த்து விட்டு விசில் அடிக்கும் ரகம் நான்... இப்போது அப்படி இல்லை..  நேரம்கிடைக்கும் போது பார்க்கின்றேன்.... பள்ளி படிக்கும் போது ரஜினிக்காக சண்டை போட்டு உதடு கிழித்துக்கொண்ட அக்மார்க் தமிழன்நான்...இரண்டு மூன்று காட்சிகள் எனக்கு வில்ஸ்மித் நடித்த ஐரோபோட் படத்தையும் சில காட்சிகள் அதாவது ரஜினி வைத்து இருக்கும் துப்பாக்கி பல துப்பாக்கியாக கிராபிக்சில் மாறுவது ஜிம்கேரி நடித்த மாஸ்க் படத்தில் இருந்து சூட்டது என்றும், படத்தில் ஐ ரோபார்ட் படத்தின் சாயல் இருந்தாலும்..அதன் டைரக்டர் பேர் தேங்ஸ் கார்டில்போட வேண்டும் என்றும்.....ரஜினியா இப்படி உருவிய சீன்களில் நடித்தார்? என்றும் யாரும் கேள்வி குறி போட்டு பதிவு எழுத மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்....


 என்னை பொறுத்தவரை இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் பிராந்திய மொழியில் பெரும் பொருட்செலவில் எடுக்கபட்டு இருக்கும் படம் இது... இதன் வெற்றி இது போலான மாற்று முயற்சியை வரவேற்க்கும்.. இவ்வளவு பொருள் செலவை சன்பிக்சர்ஸ்தவிர்த்து வேறு யாராலும் செய்ய முடியாது.....நமது கலைஞர்கள் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷனில் படம் எடுத்து இருந்ததாலும்... எங்களாலும் இது போல் படம் பண்ண முடியும் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்..... அந்த நிலையில்தான் நமது பிசினஸ் இருக்கின்றது என்பது சிலருக்கு புரிவதே இல்லை.....

 இப்போதே சொல்கின்றேன் எனக்கு எந்திரன் படத்தின் 4 டிக்கெட்டுகள் வேண்டும்... யாரிடமாவது எக்ஸ்ட்ரா இருந்தால் கொடுக்கவும்.. நானும் டிரை செய்கின்றேன்... இதுக்கு பேருதான் அட்வான்ஸ் புக்கிங்... என் பேவரைட் சாங்.. காதல் அனுக்கள் சாங் அதுக்கு வெயிட்டிங்.....
=================
கடவுள் முரளி வாழ்க் என்று சென்னை மற்றும் பல ஊர்களில் அந்த வசனம் படித்த ஞாபகம்... கடவுளாக போய் விட்டார்....காலையில் எழுப்பும் போது தூக்கத்தில் உயிர் பிரிவதை நல்ல சாவு என்று சொல்லுவார்கள்... ஆனால் முரளி குடும்பம் மீண்டு வர வெகு நாட்கள் அகும்... உடல்நிலைசரியல்லாமல் இற்நது போனால் அந்த பாதிப்பு குறைவு... இரவு படுத்து காலை எழுந்திருக்க வில்லை என்றால் அந்த பாதிப்பு மிக அதிகம்......அதிமுகாவில் இருந்த முரளிக்கு ஸ்டாலின் இறுதி மரியாதை செய்து இருக்கின்றார்... அனால் செல்வி  ஜெயலலிதா வரவில்லையாம்..அரசியல் நாகரீகம்.....

======================
மிக்சர்...

பொதுவாக பாரினில் தங்கும் குடும்பங்கள் சொல்லும்...... இங்க வேலைக்காரர்கள் எல்லாம் காரில் வருவார்கள்,பிளெம்பிங் ஒர்க்,டாய்லட் கிளினிங் என எந்த ரிப்பேர் என்றாலும் காரில் வந்து செய்வார்கள் என்று சொல்லுவார்கள்....மாம்பலத்தில் அது போலதான் ஒரு பெண் ஸ் கூட்டியில்  வந்தார்.. வண்டி ஸ்டேன்ட் போட்டு நிறுத்தி அப்பார்ட்மேன்ட் போர்ட்டிகோவை பெருக்க ஆரம்பித்தார்... அவர் வீட்டு வேலை செய்பவராம்... இன்னும் மூன்று வீட்டு வேலை பாக்கி இருக்கின்தாம்....சென்னையில் நான் இப்பதான் முதல்தடவையா நான் இப்படி பார்க்கின்றேன்...இதேல்லாம் எப்பையோ ஹாலிவுட்படத்துல வந்த சீன்னு சொல்லிடதிங்க அப்பு... நான் இப்பதான் இப்படி பாக்குறேன்....
======================
பத்து லட்சம் ஹிட்சுக்கு வாழ்த்திய பலருக்கும்.... 3 பேர்வரை இடிந்துரைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.........
பத்துலட்சம் ஹிட்சுக்கு என்ன சாதித்து விட்டாய்.... என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார்...அண்ணே ஒன்னும் சாதிக்கலைன்னே..... வடபழனி டெப்போவுல 12பி பேருந்தை படிக்க முடியுமான்னு நினைச்சவன் நானு.... ஆனா கஷ்டபட்டு ஓடி பேருந்தை புடிச்சி கண்டக்டர்கிட்ட 5ரூபா தாளை நீட்டிட்டு வியர்வையோட மனசுக்குள்ள நானும் பஸ்சை புடிச்சிட்டேன் என்று எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்ப்போமே அது போலதான் அது....அண்ணே இந்த ஞானசூனியம் பேருந்தை புடிச்சாலும் யாருக்கும் கவலை இல்லை புடிக்காட்டாலும் யாருக்கும் கவலை இல்லை... ஆனா எனக்கு அது சந்தோஷம் அவ்வளவுதான்....
======================
நல்ல பொண்ணு ஏதொ பெரிய எடத்துல வேலை பார்க்க வேண்டும்... உடுப்பும் ஸ்டைலும் அப்படித்தான் சொல்கின்றது...அந்த பொண்ணு சர்வ நிச்சயமாய் என்னைதான் பார்த்தால் அது எனக்கு நன்றாக தெரியும்.... இருந்தாலும் இரண்டு இன்னோரு முறை கன்பார்ம் பண்ண திரும்ப பார்க்க முயற்ச்சிக்கும் போது... ஒருஏழரை என் எதிரில் வந்து அய்யோத்தியா மண்டபத்துக்கு எப்படி போவனும் னு கேட்டுச்சி... சரி பேமிலியோட வந்து இருக்கேன்னு மனசு கருவிக்குனு வழி சொல்லிட்டு திரும்பின ஆட்டோ புடிச்சி அந்த தேவதை பறந்து போயிடுச்சு.. அட தேவுடா????
===============
பதிவர் தம்பி கேஆர்பி செந்தில் ஊர் நண்பர்....மணிகண்டன்.... தற்போது துபாயில் இருக்கின்றார் என்னை பார்க்க பிரியபட செந்தில் அழைத்து வந்தார்... வந்ததும் கை குலுக்கி உங்கள் அம்மாவை பற்றிய பதிவை நான் வசித்தேன் ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது... என்றும் பல பதிவுகளை பற்றயும் பேசிக்கொண்டு இருந்தார்... நன்றி செந்தில் நல்ல நண்பரை அறிமுகபடுத்தியமைக்கு...
============
மவுன்ட் ரோட்டில் விழுந்து வைத்தேன்... போன ஞாயிறு....கயம் தெலுங்கு படம் பார்த்து விட்டு மவுண்ட் ரோட்டில் வர மழை பிடித்துக்கொண்டது...நான் எல்ஜசியில் இருந்து போகின்றேன்...தவுசன்ட் லைட்டஸ் சின்கனலுக்கு முன்னால் சத்தியம் தியேட்டர் வலைவில் ஒரு பெண் கீராஸ் பண்ண மழையில் எனக்கு முன் சென்ற வாகனங்கள் கீரிச்சிட்ன... நான் பிரேக் அடிக்க வண்டி வலப்பக்கம் ஸ்கிட் ஆக அதை பெலன்ஸ் செய்தேன்... இருந்தும் எதிரில் பிரேக் போட்டு நின்ற சான்ட்ரோவில் ஆங்கில பட முத்தம் கொடுக்கும் வெறியில் என் சிடி100 வழுக்கியபடி செல்ல அந்த வாகனம் சட்டென  நகர்ந்துவிட்டது... நான் ரோட்டில் ஜெமினி சர்கஸ் நடத்த பின் வந்த வாகனங்கள் பிரேக் அடித்து கதறின.... நான் தரையில் தேய்த்து போகாமல்...  பேருந்துல் இருந்து இறங்குவது போல் ஒடினேன்.. ஆத எப்படி நடந்தது என்று எனக்கு இப்போதும் ஆச்சர்யம்தான் என் பேன்ட் புட்ரெஸ்ட் அல்லது பிரேக்கில் மாட்டி இருந்தால் நிறைய சில்லரை தேறி இருக்கும்....நமக்கு வேண்டபட்ட சில பதிவுல நண்பர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்கள்...நான் அப்படியே ஓடியபடி திரும்பி பார்த்தேன் மிக பெரிய விபத்தை எதிர்பார்த்த பின் வந்த சான்ட்ரோ பெண்கள் நான் நடந்து வருவதை வியப்பாக பார்த்தார்கள்...குவாலிசில் இருந்த இருவர் சமாளிச்சிட்ட என்று கட்டை விரல் உயர்த்தி சிரித்தார்கள்..... நான்நடந்து எனக்கா பிரேக் போட்டு நிறுத்திய வாகனங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு கடவுளுக்கு ஒரு நன்றி வானத்தை பாத்து தெரிவித்து விட்டு என் வாகன்த்தை எடுத்து வீடு வந்தேன்....
=========================
மாஸ்கோவின் காவேரி படத்தின் பாடலில் கோரே கோரே என்ற பாடல்தான் இப்போது என் பேவரைட்.... கார்திக் மற்றும் சுஜீத்ரா குரலில் கொஞ்சி இருக்கின்றார்... ரொம்ப நாளைக்கு பிறகு வைரமுத்துவின் வரிகளை ரசித்தேன்... மதனா மதனா நான் மஞ்சம் வந்த தங்க தேரு என பாடும் சுஜியின் குரலுக்கு இந்த ஜாக்கியின் பாண்டிய நாடு அடிமை...
============================
நண்பருக்கு கடிதம்...

அன்பின் பாஸ்டன் ஸ்ரீராம் சம்பவம் நடந்த இரவே உன்னிடம் இது பற்றி கூறி இருந்தேன்... இப்போதுதான் எழுதுகின்றேன்...இது தன்டோரா அல்ல...எனக்கு இப்படித்தான் எழுத வருகின்றது...மற்றவர்கள் இது எல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்கலாம் பகிர மறுக்கலாம்.... மற்றவர்கள் நினைப்புக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை இருப்பினும் அந்த இடிந்துரைத்த கடிதம் எனக்கு பிடித்து இருந்தது... அது பலருக்கு நிறைவை தந்து இருக்கலாம்....நன்றி... அந்த கடித்தத்துக்கு.....

==================

இந்த வார புகைபடம்...
இந்தவார சலனபடம்...

ஏதுக்கு வேண்டுமானாலும் எதையும் முடிச்சி போடலாம் போல இருக்கு....பாருங்க இந்த விளம்பரத்தை............
============

நான் எடுத்த புகைபடம்
நம்ம சென்னை நேப்பியர் பிரிட்ஜ்... இதுக்கு பக்கத்துல புது தலைமை செயலம் வந்த காரணத்தால் இதுக்கு வந்த பவுசு...
==========

இந்த வரா கடிதம்...

அன்பின் ஜாக்கிசேகர்

நலம்தானே? நான் யாருக்கும் தனியாக மடல் எழுதுவதில்லை
குறிப்பாக பதிவர்களுக்கு :-)

உங்கள் பதிவை இன்று வாசித்தேன்
நிறைவாகவும் நெகிழ்வாகவும் உணர்ந்தேன்
உடனே எழுத வேண்டும்போலத் தோன்றியது

ஒன்றரை வருடங்களுக்குள் 300 பதிவுகளென்பதும் அதைத்தொடர்ந்து
வாசிக்க ஏராளமான வாசகர்களைப் பெறுவதென்பதும் சாதாரண விசயமில்லை
ஐந்தாண்டுகளாகப் பதிவெழுதியும் 500ஐத் தொடமுடியாமல் நான் படும் பாடு
எனக்குத்தான் தெரியும் :-)
 என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!

உங்கள் பதிவுகளைத் தவறாமல் வாசிக்கிறேன் சமயங்களில் தாமதமாக சமய்ங்களில்
உடனே - கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து. பெரும்பாலும் பின்னுட்டமிடுவதில்லை
என்றாலும் நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர்

சொல்வதைச் சுவாரஸ்யமாகவும் நேர்மையாகவும் வளைத்துக்கட்டாமலும் சொல்லும்
உங்களது பாணி எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது அதுதான் உங்களது பலமென்று
நான் கருதுகிறேன். தொடர்ந்தும் இதே உற்சாகத்தோடு இயங்குங்கள்

உங்களது இன்னுமொரு பெரும்பலம் கூட்டு சேர்ந்து ஜல்லியடிக்காமல் உங்களை
மட்டும் நீங்கள் நம்பியிருப்பது. அது மிகப் பெரும் விசயம் அதற்காகவே உங்களை வெகுவாகப்
பாராட்டத் தோன்றுகிறது

ஓரிருமுறை சந்தித்திருக்கிறோம் அதிம பேசியது கூட இல்லையென்ற நிலையிலும் என்னையும்
உங்கள் நெருங்கிய நண்பராகச் சுட்டியிருப்பது நெகிழ்வாக இருக்கிறது. நன்றி சொல்லி உங்கள்
அன்பின் அளவை நான் குறைத்துக் கொள்ளப் போவதில்லை மாறாக இன்னமும் உங்களுக்கு உகந்த
நண்பனாக மாற முய்ற்சிக்கிறேன்

எல்லா வளங்களும் சூழட்டும்
வாழ்க வளமுடன் உஙக்ள் எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று!!

தோழ்மையுடன்
ஆசிப் மீரான்
================
எனக்கு வந்த கடிதங்களில் அண்ணாச்சி கடிதத்துக்கு எப்போதும் மவுஸ்....

அன்டன் ஜாக்கி
======================

/==============================================================

இந்த வார பதிவர்கள்...

கணினி மென்பொருட்களின் கூடம் வடிவேல்...

நான் எப்போது சந்தோஷமாக பதி/வு போட வந்தாலும் எதையாவது செய்து விட்டு எனது கம்யூட்டர் தேமேன்னு முழிக்கம்...  கோவத்துல எடுத்து போட்டு அடிச்சி சுக்கல் சுக்கலா உடைச்சி போட்டு விடலாம் என்று தோன்றினாலும்.. அதே அவ்வப்போது காப்பாற்றி உங்களோடு எனக்கான தொடர்பை நிறை நிறுத்தி தருபவர்...இந்த வலைபதிவு எனக்கு கொடுத்த நண்பர்... வடிவேலன் அவர்கள்... எவ்வளவு வேலையாக இருந்தாலம் இந்த ஞான சூனியத்துக்கு பொறுமையாக சொல்லி தருபவர்...வீட்டில் வந்து உரிமையோடு வந்து டெஸ்க்டாப்பை சரி செய்து கொடுப்பவர்...மென்பொருள்கள் பற்றி அதன் தகிடு தத்தங்களை வாசிக்க இங்கேகிளிக்கவும்..

அதே போல் நண்பர் பிரபு இவர் தற்போதுதான் அறிமுகம்....சுதந்திர இலவச மென்பொருள் என்ற தளத்தில் எழுதி வருகின்றார்....இவரை லினிக்ஸ் பிரபு என்று அழைப்பது ஏற்புடையது.. அந்த அளவுக்கு லினிக்ஸ்மேல் காதலாக இருக்கின்றார்....மிக நேர்மையாக இருக்கு தான் லினிக்ஸ்க்கு மாறியதாக சொன்னார்...இரண்டு மணிநேரத்தில் ஆயிரம் வார்த்தைகள் பற்றி பேசி இருப்பார்...இவரும் மென்பொருள்கள் பற்றி எழுதி வருகின்றார்... அதை வாசிக்க இங்கே கிளிக்கவும்...

பிலாசபி பாண்டி...

ஓருவரையும் காதலிக்காத பையன் வேண்டுமானல் இருக்கலாம்... ஆனால் ஒருவரை மட்டும காதலித்த பெண் இந்த உலகத்தில் இருக்க முடியாது... இது கீதையில சொல்லலை....இந்த பாண்டி நேத்து போதையில் சொன்னது....
==========
வினாயகரும் முருகனும் கம்யுட்டர் கோர்ஸ் போனாங்க..வினாயகர் கோர்ஸ் கம்ப்ளிட் பண்ணிட்டார். முருகனால முடியலை... காரணம் அவருகிட்ட மவுஸ் இல்லை..
============
ஒரு பொண்ணு துப்பட்டா போட்டு முகத்தை மறச்சிகிட்டு பஸ்ஸ்டான்டுல. நின்னா.. ஒருத்தன் பல்சர்ல வேகமா வந்து....
 ஹாய் பேபி யூவான்ட் ரெய்டுன்னு ???கேட்க
 துப்பட்டாவை எடுத்துட்டு டேய் அண்ணா நர்ன் உன் தங்கச்சி ஆர்த்தின்னு சொன்னாளாம்....
============

நான்வெஜ்18+

ஜோக்..1
ஏன் எல்லா பொண்ணுங்களும் கிளாஸ் ஒழுங்கா அட்டேன் பண்றாங்கன்னு தெரியுமா?... ஒரு பிரியட் மிஸ் பண்ணிட்டாலும்.. அது பிரகனன்சியோட சிம்பிள் இல்லையாஅதான்....
=============
ஜோக் 2...
இரண்டு லவ்வர் பார்க்ல பேசிகிட்டு இருந்தாங்க... கொஞ்ச நேரத்துல யாரும் அந்த இடத்துல இல்லை.. சரி ஒரு பிட்டை போட்டு வைப்போம்னு காதலன் காதலிகிட்ட நான் உன் பிரேஸ்ட்டை பிரஸ் பண்ணிட்டு ஓடிட்டா என்ன செய்வ? என்று பயத்தோட கேள்வி கேட்டு வைக்க.... அதுக்கு காதலி சொன்னா? கார் ஓட்ட தெரியாத நாய் ஹாரனை மட்டும் அடிச்சிட்டு ஓடிடுச்சின்னு நினைச்சிக்குவேன்.....
===========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

27 comments:

 1. //ரஜினியா இப்படி உருவிய சீன்களில் நடித்தார்? என்றும் யாரும் கேள்வி குறி போட்டு பதிவு எழுத மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்

  என்னங்க இன்னும் பயங்கர கோவத்துல இருக்கீங்க போல :). யாரும் அப்படி பதிவு எழுத மாட்டாங்க விடுங்க :).

  ReplyDelete
 2. பார்த்து வண்டி ஓட்டுங்க.... ஹெல்மெட் போடுறீங்க இல்லை.. கேர்ஃபுல்.

  ReplyDelete
 3. வழமை போல் கலக்கல்.
  வண்டி ஓட்டும் போது கவனமா இருங்க.

  ReplyDelete
 4. (நேப்பியர்) புகைப்படம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. //இந்த வரா கடிதம்...//

  இது அண்ணாச்சியே எழுதாத கடிதமா?

  ReplyDelete
 6. //எனக்கு வந்த கடிதங்களில் அண்ணாச்சி கடிதத்துக்கு எப்போதும் மவுஸ்....
  //

  கடிதத்துக்கு கொடுக்கிறதுதான் கொடுக்குறீங்க ஏன் மவுஸை கொடுக்குறீங்க,,,கீ போர்ட்ட் மானிட்டர் எல்லாம் கொடுங்க:))

  ReplyDelete
 7. ஜாக்கி ... தயவு செஞ்சு ஹெல்மெட் போடாம என்னைக்கும் டிரைவ் பண்ணாதீங்க ... சில வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பைக் ஆக்ஸிடென்ட் ... ஹெல்மெட் போட்டிருந்ததால தப்பிச்சேன் 29 நாள் கோமாவுக்கு பின்னர் ... தயவு செஞ்சு ஹெல்மெட் போடாம என்னைக்கும் டிரைவ் பண்ணாதீங்க ... உங்களுக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் தான் சொல்றேன் தோழர் ..

  ReplyDelete
 8. //ஏழரை என் எதிரில் வந்து அய்யோத்தியா மண்டபத்துக்கு எப்படி போவனும் னு கேட்டுச்சி... //

  வேண்டாம் ஜாக்கி...... ஜாக்கிரதை..... அவரு வினவரதுக்கெல்லாம் பதில் சொன்னீங்க அப்புறம் அவ்வளவுதான்......

  ஹா....ஹா.....ச்சும்மா....

  ReplyDelete
 9. ரொம்ப நன்றி அண்ணே ....

  ReplyDelete
 10. Dear MR. Jackie,

  Please take care while driving.... We should be careful.. On 29th I met with an accident in my car, nothing happened to me.... Ennoda Nalla Neram chillarai kuda vangala, vandiku than setharam...

  Namba Olunga ootinalum mathavanga olunga varanum la...

  Take Care,
  Regards,
  Vijay.
  Muscat

  ReplyDelete
 11. Hi Jackie take care while you driving because your service is need for us and i will pray the god to give you all the health and wealth.

  ReplyDelete
 12. அந்த கேமரால நிறைய போட்டோ எடுத்து போடவும்.. முடியவில்லையென்றால் அந்த கேமராவை எனக்கு கொடுத்து விடவும்..

  ReplyDelete
 13. ஹெல்மெட் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
  என் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 14. //நன்றி... அந்த கடித்தத்துக்கு.....//

  நன்றிக்கு நன்றி..

  //மற்றவர்கள் நினைப்புக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை இருப்பினும் அந்த இடிந்துரைத்த கடிதம் எனக்கு பிடித்து இருந்தது//

  நான் சொல்ல வந்தது புரிஞ்சுதான்னு தெரியல.

  //அது பலருக்கு நிறைவை தந்து இருக்கலாம்//
  அது அவங்களுக்காக எழுதினது இல்ல.. வேறென்ன சொல்ல???

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 15. helmet இல்லா வாழ்க்கை டோட்டல் டேமேஜ் ஆயிடும். உஷாரு.

  ReplyDelete
 16. //எனக்கு வந்த கடிதங்களில் அண்ணாச்சி கடிதத்துக்கு எப்போதும் மவுஸ்//
  //முருகனால முடியலை... காரணம் அவருகிட்ட மவுஸ் இல்லை//

  அண்ணாச்சி கிட்ட சொல்லிட்டு முருகனுக்கு கொடுத்துடுங்க..

  ReplyDelete
 17. அன்று காலை மணிகண்டன் என்னை சந்தித்ததும், மீண்டும் இரவு நீ மட்டும் என்னை விட்டு விட்டு சரக்கு அடித்து விட்டு சாப்பிட கூப்பிட்டதும்.. கடையில் இருக்கும் லெக்பீஸை எல்லாம் காலி செய்ததையும் ஏன் எழுதவில்லை. என் கண்டனங்களை இங்கே சொல்லிக் கொள்கிறேன். (எங்க உடனே கோபப்படு பாக்கலாம்..:)))

  ReplyDelete
 18. //இந்த வரா கடிதம்..//

  அவர் அனுப்பாத கடிதத்தைப் போட்டீங்களோ??

  ReplyDelete
 19. //வடபழனி டெப்போவுல 12பி பேருந்தை படிக்க முடியுமான்னு நினைச்சவன் நானு.... ஆனா கஷ்டபட்டு ஓடி பேருந்தை புடிச்சி கண்டக்டர்கிட்ட 5ரூபா தாளை நீட்டிட்டு வியர்வையோட மனசுக்குள்ள நானும் பஸ்சை புடிச்சிட்டேன் என்று எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்ப்போமே அது போலதான் அது//
  அதெல்லாம் அனுபவிச்சா தாங்க தெரியும்
  சும்மா போய் பாத்துட்டு வந்த ஒன்னும் தெரியாது

  ReplyDelete
 20. இரண்டாவது அசைவ நகைச்சுவை மிக அருமை, நான் விழுந்து விழுந்து சிரித்தேன், ரசித்தேன்... தமிழ் மனம் இண்ட்லி இரண்டிலும் வாக்களித்தாகி விட்டது...

  ReplyDelete
 21. thalaiva,

  neenga karundhel ketta kelvikku answer pannave illayae....

  unga blog la irunthu copy pannathukku, vaanathukkum, naragathukkum kudhichiingale,,,,\\

  ReplyDelete
 22. அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு நன் உங்களது தீவிர ரசிகன் ஜோக் மிகவும் அருமை இரு சக்ர வாகனத்தில் பிரயாணம செய்யும்போது கவனம் மிகவும் தேவை ஏன் என்றால் உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ள்ளது

  அன்புடன்
  தி.ரா.மணிகண்டன்

  ReplyDelete
 23. அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு நன் உங்களது தீவிர ரசிகன் ஜோக் மிகவும் அருமை இரு சக்ர வாகனத்தில் பிரயாணம செய்யும்போது கவனம் மிகவும் தேவை ஏன் என்றால் உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ள்ளது

  அன்புடன்
  தி.ரா.மணிகண்டன்

  ReplyDelete
 24. //ரஜினியா இப்படி உருவிய சீன்களில் நடித்தார்? என்றும் யாரும் கேள்வி குறி போட்டு பதிவு எழுத மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்
  //////

  HA HA

  ReplyDelete
 25. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் மேல் கரிசனபடும் நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்...

  இந்த தளத்தில்வெயியிடபடும் கடிதங்கள் அனைத்தும் என் மேல் நட்பு கொண்டு எழுதிய, ரத்தமும் சதையுமான மனிதர்களின் பாச வரிகள்...

  மண்டபத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே வெளியிடும் நபரும் நான் அல்ல....

  அன்புடன்
  ஜாக்கி..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner