சென்னை ஆட்டோ கட்டண கொள்ளை... சென்னையில் (தமிழ்நாட்டில்) வாழ பழக...(பாகம்/9)

 சாரு விகடனில் எழுதிய கட்டுரையில்... ஒரு கணவன் மனைவி தனது குழந்தையுடன் இரு சக்கரவாகனத்தில் செல்லும் போது குடி போதையில் கார் ஓட்டிய ஒருவன் அவர்கள் மீது மோதினான்....அந்த விபத்து பற்றிய செய்தி கூட பலர் அறிந்ததுதான்...அந்த குடும்பம் பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றது...அதற்கு சாரு அவர்கள் இருவரும்  இரு சக்ரவாகனத்தில் குழந்தையுடன் போனது மிகப்பெரிய தவறு... அவர்கள் ஹெல்மெட் போட்டு இருக்க வேண்டும்... என்று எழுதி இருந்தார்... ஹெல்மெட் போடுவது நல்லவிசயம்தான்... ஆனால் இரு சக்கரவாகனத்தில் குழந்தைகளை அழைத்து சென்றது தவறு.. என்று சொல்லி இருக்கின்றார்... உண்மைதான் அதுவும் தப்புதான்....ஆனால் நாம் தமிழகத்தில்  வாழ்கின்றோம் என்பதை மறந்து விட்டார்.....

இருக்கபட்டவன் குடும்பத்தோடு  காரில் போகின்றான்... இல்லாத பட்டவன் என்ன செய்வான்...????? இருசக்கரவாகனம்தான் ஒரே வழி... இப்போதும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல  பகுதிகளில்  அந்த காட்சியை பார்த்து இருப்பீர்கள்...

அம்மா பெரிய இடுப்போடு டூவிலர் சீட்டின் கடைசிசிசியில் உட்கார்ந்து இருப்பார்கள்...பெண் எப்படியும் வயதுக்கு வந்து இருக்கும்... இரட்டை சடை போட்டு, இரு பக்கமும் கால் போட்டு அப்பாவின் முதுகை  அணைத்தபடி உட்கார்ந்து இருக்கும்..., முன்பக்க  பெட்ரோல் டேங்கில் பையன்  கூலிங்கிளாஸ் போட்டுஉட்கார்ந்து இருப்பான்...

அப்பா மட்டும் ஹெல்மெட்  போட்டு வண்டி ஓட்டுவார்..இப்படித்தான் தமிழகத்தின் பல இடங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்...சில நேரங்களில் இந்த எண்ணிக்கை  அதே இரு சக்கர வாகனத்தில் காமபசி காரணமாக அதிகரித்தும் இருக்கும்.... இப்படித்தான் தமிழக குடும்பங்கள் பல இருக்கின்றன...

எல்லா இடத்துக்கும்  சென்னையில் பேருந்து வசதி இல்லை...அவர்கள் முதலில் நாடுவது ஆட்டோதான்....  ஆனால் அவர்கள் வசூலிக்கும் தொகை மிக நியாயமானது என்றால்.... ஏன்??? பெரும்பாலான குடும்பங்கள் இரு சக்கர வாகனத்தில் இப்படி அபாயகரமானதாக பயணித்து செல்ல வேண்டும்....???

அந்த குடும்பங்கள் எல்லாம் ஆட்டோவில் போய் வரலாமே....காரணம் ஆட்டோ கட்டணம் என்பது தமிழகத்தில் இதுவரை  முறைபடுத்தபடாததுதான்.. மிக முக்கிய காரணம்...அப்படியே முறைபடுத்தபட்டாலும் அதனை எந்த ஆட்டோ ஓட்டுனர்களும் செய்ல்படுத்துவது இல்லை....ஆளும் அரசும் கண்டு கொள்வதில்லை...அதனால்தான் தமிழகத்தில் எல்லா குடும்பங்களும் டூவிலரில் பயணிக்கின்றன..

தமிழ்நாட்டுல  இருக்கும் யாருக்காவது மினிமம் ஆட்டோ பேர் எவ்வளவுன்னு தெரியுமா? அதே போல் ஒரு இடத்துல இருந்து இன்னோரு இடத்துக்கு எவ்வளவு  கட்டணம்னு பொதுவா எந்த பேமலிக்காவது தெரியுமா?... தெரியாது...  காரணம் சென்னையில் மீட்டர் எல்லாம் போட மாட்டார்கள்... அவர்கள் மனதில் என்ன தோனுகின்றதோ அதுதான் ரேட்...

சென்னையில், தமிழகத்தில் யாருக்கும் ஆட்டோ கட்டணம் தெரிந்து எதுவும் ஆகபோவதில்லை... காரணம் ஆரம்பத்தில் இருந்தே... ஆட்டோகாரன் கொள்ளை அடிப்பது போல் ரேட் கேட்பார்கள் என்பது  தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஆழமாக மனதில் பதிந்து விட்ட ஒன்று....அதே போல் அந்த விஷயத்துக்கு ஏற்றது போல் நாமும் வாழ பழகிவிட்டோம்.......

ஒரு கிலோ  மீட்டருக்கு இப்போது அரசு நிர்னியித்து இருக்கும் தொகை..9ரூபாய்... சென்ரலில் இருந்து வெஸ்ட் மாம்பலத்துக்கு பதினோரு கிலோமீட்டர்...102 ரூபாய்... ஆனால் இதே கட்டணத்தை கொடுத்து சென்னையில் எந்த இடத்திலும் உங்களால் ஆட்டோவில் பயணிக்கமுடியாது....இதே பதினோரு கிலோமீட்டருக்கு...175,250,300 என்று அழ வேண்டி இருக்கின்றது...

வெஸ்ட் கேகேநகரில் இருந்து  கேசவர்தினி பஸ்ஸ்டாப் போக 75 ரூபாய் ஒரு ஆட்டோ டிரைவர் கேட்கின்றார்... மீட்டர் போட்டு ஓட்டினால்25 ரூபாய் வருவதே பெரிய விஷயம்... எவ்வளவு அநியாயம் பாருங்கள்...

ஆனால் அதே கேசவர்தினியில் இருந்து மாம்பலத்துக்கு 75ரூபாய்க்கு ஒரு டிரைவர் வந்தார்...மீட்டர் போட்டு ஓட்டினால்60 ரூபாய் வரும்... இது போல ஒரளவுக்கு நியாயமான ஆட்டோ ஓட்டிகளும் சென்னையில் இருக்கின்றார்கள்...ஆனால் பெரும்பாலான ஆட்டோ ஓட்டிகள் கேட்கும் தொகை உங்கள் பாதி சொத்தை கேட்பதாக இருக்கும்.....

மிக முக்கியமாக வேளச்சேரி பக்கம் அவசரத்துக்கு நெஞ்சுவலிக்கு அட்டோ பிடிக்க, ஆட்டோ கூப்பிட்டால், அவர்கள் கேட்கும் தொகை கேட்டு, அங்கேயே அடைத்துகொண்டு சாக  வேண்டியதுதான்....ஆட்டோ ஓட்டி கேட்ட தொகைக்கு, நெஞ்சுவலியே ரொம்ப இதமாக இருக்கும்...

தகவல் தொழில்நுட்ப சாலையில்  ஓட்டும் ஆட்டோ ஓட்டிகள்... 3 கிலோமீட்டர் துரத்துக்கு  100ரூபாய்க்குமேல்தான் சொல்கின்றார்கள்....  ஒரு 30, 40க்கு ரேட் பேசினால் நம்மை ஒரு மாதிரி பார்க்கின்றார்கள்...மிக முக்கியமா ஸ்டேன்டில் போட்டு ஆட்டோ ஓட்டுபவர்கள்.....

எனக்கு தெரிந்து வழியில் போகும் காலி ஆட்டோக்கள் ஒரளவுக்கு நியாயமாய் கேட்கின்றார்கள்...

சென்னையில் மிக நேர்மையாக மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ ஓட்டிகள் மிக குறைவு...எப்ப பார்த்தாலும் பர்மிட் வாங்குவதில் பிரச்சனை , டிராபிக் போலிஸ் லஞ்சம் பிரச்சனை என கட்டணகொள்ளைக்கு  தமிழக ஆட்டோ ஓட்டிகள் சப்பை  கட்டு கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்...

நான் ஆட்டோ ஓட்டும் போது... எந்த ஸ்டேன்டிலும் வண்டி போட்டு ஓட்டியது இல்லை... அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது...போகும் வழியில் வரும் கஸ்டமர்கள்தான் எனக்கு அதிகம்...கடலுர் பேருந்து நிலையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் போக 20 ரூபாய்தான் வாங்குவேன் இரவு நேரத்தில் 25 இதுதான் ரேட் இதுக்குமேல் அவர்களும் அதிகம் ஒரு பைசா அதிகம் கொடுக்கமாட்டார்கள்...

எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் அதே ரேட்தான் வாங்குவார்கள்  இத்தனைக்கும் நடுராத்திரியில் ரிட்டன் சவாரி ஏதும் கிடைக்காது.. அப்படி இருந்தும்...ஆட்டோ வாடகை பெட்ரோல் எல்லாம் போக ஒரு நாளைக்கு 300ரூபாய் சாலிடாக கடலூரில் 1998களில் சம்பாதித்து இருக்கின்றேன்....ஆனால் சென்னையில் இன்னும் அதிகமாகவே சம்பாதிக்கலாம் என்பது என் கருத்து...

நண்பர் வீட்டுக்கு செல்ல நானும் என் மனைவியும் கிளம்பினோம்....நான் போய் ஆட்டோ பிடித்தேன்.. நாங்கள் போகும் இடத்துக்கு 100ரூபாய்க்கு குறைவாக வரவேமாட்டேன் என்று சொல்ல... 3வது ஆட்டோவாக வந்த ஆட்டோவை ஒழிகின்றது என்று பிடித்தேன்...

சில நாட்கள் கழித்து அதே இடம்  போக வேண்டும் இப்போது என் மனைவி  முதலில் போய் ஆட்டோ   பிடித்தால்
நான் கதவை சாத்திக்கொண்டு வர லேட் ஆனது...அதே இடம் அதே தொலைவு.. 60 ரூபாய்க்கு இந்த ஆட்டோ டிரைவர் வர... என் மனைவி என்னிடம்... வாய்தான் வழுதாவூர் வரைக்கு இருக்கு... ஒரு ஆட்டோ  பிடிக்க அடிச்சி பேச திறமை இருக்கா? என்று  என்னை திட்டிவைத்தாள்....என் கேள்வி எதுக்கு ஆட்டோவை பிடிக்க, அடிச்சி பேசனும் என்பதுதான்???

ஆனால் பெங்களுர் அப்படியில்லை... பெங்களுரில் ஆட்டோ அடிச்சி எல்லாம் பேசவேண்டியதில்லை...அங்கே ஆட்டோ  பிடிக்க பிஎச்டி எல்லாம் முடிக்க வேண்டாம்.... ஏறியதும் மீட்டர் போடுகின்றார்கள்....நால்வர் என்றால் ஒன்தேர்ட் எக்ஸ்ட்ரா கட்டணம் என்று சொல்கின்றோர்கள்...75ரூபாய் கட்டணத்துக்கு 80 ரூபாய் கொடுத்தால் மீதம் 5ரூபாய் திருப்பிக்கொடுக்கின்றார்கள்... கேரளாவிலும் அப்படியே....மற்றமாநிலங்களிலும் அப்படித்தான்  என்று நினைக்கின்றேன்....ஆனால் நம்மதமிழ்நாட்டில்.........????
இது எல்லாம்  கொடுமை இல்லை இரவு நேரத்தில் அவசரத்துக்கு ஆட்டோ பிடித்தால்... மனசாட்சி இல்லாமல் அவர்கள் சொல்லும் ஆட்டோ கட்டணம் தலையை சுற்றவைக்கும்...

இதுவரை  எந்த அரசும் இந்த விஷயத்தில்  எந்த முறையான சட்டத்தையும்  பின்பற்றவில்லை...பெட்ரோல் விலைஉயர்வு ஒரு காரணம் என்று ஆட்டோ டிரைவர் சொன்னால்... ஓகே ... அதுக்கு எத்தது போல் நியாயமான  கட்டணத்தை  நிர்ணயித்து.. அதனை கடுமையாக செயல்படுத்த வேண்டும்....

எல்லா ஆட்டோக்களும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி, கம்பல் சரியாக மீட்டர் போட்டு ஓட்ட வேண்டும்... என்று அரசு கடுமையானசட்டம் போட வேண்டும்...ஒரு பாராட்டுவிழாவில் கல்ந்து கொள்ளும் நேரத்தில்...அரசு நினைத்தால் இதனை ஒரே நாளில் முறைபடுத்தலாம்...ஆனால் செய்ய வேண்டுமே??? சென்னையில் ஆட்டோ பிடிக்க அடித்து பேசிதான் ஆட்டோ பிடிக்க வேண்டுமா? ஏறியதும் மீட்டர் போட்டு பெங்களுர் போல மீதம் 5 ரூபாய் திருப்பிக்கொடுக்கும்  நாள் என்றைக்கு தமிழகத்தில் வரும்... எக்கத்துடனும்.... அடித்து பேசி ஆட்டோ பிடிக்கத்தெரியாத வக்கற்றவனின் கோபங்களுடன்.....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

குறிப்பு....ஆங்.. தூக்ககலக்கத்துல எழுத மறந்துட்டேன்... நண்பர் கண்ணன் சொன்னது போல்... ஆட்டோ கொள்ளைக்கு சரியான மாற்று கால் டாக்சிதான்..இருபது ரூபாய்தான் அதிகம்....ஜம்முன்னு போலாம்

42 comments:

 1. நீங்கள் ஆட்டோ வேறு ஓட்டியிருக்கிறீர்களா...

  ReplyDelete
 2. திருவனந்தபுரம், கொச்சின், லக்னௌ போன்ற நகரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள்/கட்டணம் மிகவும் நியாயம்.

  இன்றும் திருவனந்தபுரத்தில் பன்னிரண்டு ரூபாய்க்கு எட்டு முதல் பத்து கிலோ மீட்டர் போகலாம். லக்னௌ விலும் கட்டணம் இதே போன்றே.

  ReplyDelete
 3. ஆட்டோ ஒட்டிகளின் அட்டகாசத்தை சரியாக சொன்னீர்கள். அதனால் தான் எல்லோரும் Share ஆட்டோவிற்கு மாறிட்டாங்க! பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ------------------------------------------------

  நண்பர்களே! ஆரோகியம் மட்டுமே தந்து பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

  என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

  நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
  ------------------------------------------------
  ஜாக்கி அண்ணா! நீங்களும் வரணும்னு கேட்டுகொள்கிறேன்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு..ஒவ்வொரு முறையும் சென்னை வரும் பொழுதும் அனுபவிக்கும் அவஸ்தை இது...ஒரு ஆட்டோ டிரைவர் நான் USன்னு தெரிந்தவுடன் டாலர்ல கேட்டார் :(..கால் டாக்சி நல்ல மாற்று இல்லையா?

  கண்ணன்

  ReplyDelete
 5. வணக்கம் நண்பரே,

  மிகச் சரியான பதிவு, நான் பூனேயில் இருக்கிறேன் இங்கேயும் சென்னை போலதான் அவர்கள் நினைத்ததை கேட்பார்கள்.

  ReplyDelete
 6. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.கேரளாவில், கோட்டயத்தில் பணியாற்றும்போது நான் ஒருதடவை கூட ஆட்டோ ஓட்டுனரிடம் பேரம் பேசியதில்லை. ஆனால் சென்னையில் ஒவ்வொருதடவையும் பேரம்பெசிவிட்டே ஏற வேண்டியிருக்கிறது. மக்களாக பார்த்து நிராகரித்தால் மட்டுமே இந்த ஆட்டோ ஓட்டுனர்களின் கொட்டத்தை அடக்கமுடியும்.

  ReplyDelete
 7. One Auto driver in chennai asked me to give $50 (50 dollor!!!!) to go to Hotel Hilton from US Embassy(near Airport).

  ReplyDelete
 8. ஆட்டோக்கள் பெருத்து விட்டன, ட்ரிப்பும் அதிகம் கிடைப்பதில்லை என்று காரணம் சொல்கின்றார்கள்.

  கால் டாக்ஸி கொள்ளை என்று ஒன்று இருக்கிறதே அதை விட ஆட்டோக்கள் எவ்வளவோ மேல் ஜாக்கி

  ReplyDelete
 9. நகரில் ஓடும் ஆட்டோக்களில் பாதிக்கு மேல் போலீஸ்காரர்களுக்குச் சொந்தமாம்.

  தினப்படி வாடகை தருவதற்கே கஷ்டமா இருக்காம். இதுலே பெட்ரோல் விலை வேற பொழுதன்னிக்கும் கூடுது.

  உங்ககிட்டே பத்துரூபா எக்ஸ்ட்ரா வாங்கி பங்களவா கட்டப்போறொம்?

  ஒரு நாள் கொஞ்சம் நல்லா சாப்புடுவோம்( எதை?)
  இப்படிச் சொல்லும்போது நாம் 'அடிச்சு' பேசாம சரி தொலையட்டுமுன்னுதான் விடவேண்டி இருக்கு.

  ReplyDelete
 10. நடுத்தர மக்களின் பாடுதான் திண்டாட்டம்! மும்பை, ஹைதராபாத்தில் எல்லாம் கண்டிப்பாக மீட்டர் தான். ஒரு முறை மும்பையில் 9 ரூபா கட்டணம் போக 1 ரூபா மிச்சம் கொடுத்தார் ஒரு ஆட்டோ டிரைவர் அப்படியே அவர் காலில் சாஷ்டாங்கமாக விழலாம் என தோன்றியது... சென்னையும் எப்போ இப்படி ஆக போகுதோ! எனக்கு அந்த பிரம்ம தேவனின் கதைதான் நியாபகம் வருது!!!

  ReplyDelete
 11. Very good post Mr.Jackie.

  But unfortunately in TN most of the autos are owned by police COPS and politicians. So they dont want to make the rules and burn their back.

  ReplyDelete
 12. சென்னைக்கு கெட்ட பெயர் வாங்கி தருவதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கே முதலிடம்.

  ReplyDelete
 13. தல பெங்களுர்ல கதை வேரமதிரி. உங்கள் என்னத்தை மாற்றிகொள்ளுவம். எதோ ஒன்னு ரெண்டு ஆட்டோ சொல்லலாம். திங்கள் அன்று காலை வேளைகளில் சில்க் போர்டு மற்றும் மடிவளவில் வந்து இறங்கும் நபர்களை கேட்டு பாருங்கள். ரூ 120 குறைவாக வந்தால் பெரியவிஷியம். நேரம் இருந்தால் இந்த லிங்க் படிக்கவும்.. பெங்களூர் ஆட்டோ பற்றிய பதிவு.
  http://dearbalaji.blogspot.com/2010/07/blog-post.html

  நன்றி
  softengrin

  ReplyDelete
 14. தமிழகத்தில் இருந்து இந்த பழக்கம் பெங்களூருவிற்கும் தொற்றிக்கொண்டு விட்டது... இங்கும் நிறைய தமிழர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள்... அதனால், இவர்கள் கேட்கும் தொகையும் அதிகம் தான்... உதாரணமாக, சில்க் போர்ட் நிறுத்தத்தில் இருந்து எனது வீடு 17 கி.மீ. இந்த தொலைவிற்கு ஆட்டோ ஓட்டினால் நிச்சயம் ரூ.150/- மீட்டரில் காண்பிக்கும்... ஆனால் யாரும் அதிகாலையில் ரூ.275/- க்கு குறைந்து வர மாட்டார்கள்... அவர்களது வாதம், என் வீடு இருக்கும் பகுதியில் இருந்து சவாரி கிடைக்காது என்பது தான்... ஆனால் இது உண்மை இல்லை... நிச்சயம் கிடைக்கும்... இன்றைக்கு ஆட்டோ எல்லாம் லிட்டருக்கு 24 கி.மீ. கொடுக்கிறது... அப்படியெனில், ஆட்டோ டிரைவருக்கு, என் வீடு வரை வர ஒரு லிட்டர் பெட்ரோல் கூட செலவாகாது... ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தனியார் பங்குகளிலும் கூட ரூ.59/- தான்... அப்படிப்பார்த்தால், ஒரு சவாரியில் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.90/- கையில் நிற்கும்... தொடர்ந்து ஆட்டோ ஓட்டுவதினால் வண்டியும் நல்ல கண்டிசனில் இருக்கும்... அதை விட்டு விட்டு, இவர்கள் ஒரே பயணியிடத்தில், மொத்தமாக ஒரு நாளைக்கான சவாரியில் கிடைக்கும் பணத்தை பார்த்து விட துடிப்பதினால் தான் இந்த பிரச்சினை... நான் எழுதிய ஆட்டோ பற்றிய பதிவினை இங்கே சென்று பார்க்கவும்... http://mightymaverick.blogspot.com/2010/04/blog-post.html

  ReplyDelete
 15. ஹெல்மெட் போட்டுத் திருடுபவர்களை, ஹெல்மெட் கொள்ளையர்கள் என்பார்கள். ஆனா ஹெல்மெட் போடாமல் வரும்போது ஃபைன் வாங்கும் டிராஃபிக் மாமாக்கள்தான் உண்மையான ஹெல்மெட் கொள்ளையர்கள். அரசாங்கம் ஏதோ நமது நலனில் அக்கறை போல ஹெல்மெட்டை கட்டாயமாக்கி இருக்கிறது. உண்மையான அக்கறை இருந்தால்,இதுபோல் ஆட்டோ கொள்ளைகளையும் திருத்த வேண்டியதுதானே.

  ReplyDelete
 16. ப‌ல‌ ஆட்டோக்க‌ளுக்கு போலீஸில் இருப்ப‌வ‌ர்க‌ளே சொந்த‌க்கார‌ர்க‌ளாமே!!
  சென்னையில் ஆட்டோ ரேட் கொடுமை தான்.
  அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌ங்க‌ள் தேர்த‌ல் வாக்குருதி கொடுப்ப‌து போல் த‌மிழ‌க‌ம‌க்க‌ளும் இதை இதை நிவ‌ர்த்தி செய்தால் தான் உங்க‌ளுக்கு எங்க‌ள் ஓட்டு என்று ப‌ட்டிய‌ல் போட்டு கொடுத்துவிட‌னும் அதில் இதையும் சேர்த்துக்க‌னும்.

  ReplyDelete
 17. மிக நன்றாக சொன்னீர் ஜாக்கி..

  > சில நேரங்களில் இந்த எண்ணிக்கை அதே இரு சக்கர வாகனத்தில் காமபசி காரணமாக அதிகரித்தும் இருக்கும்.

  இது அவசியமா? காம பசி யாருக்கு இல்லை?
  ஒழுங்கான தடுப்பு முறையை அவர்கள் உபயோகிக்க வில்லை.. அவ்வளவே..

  ReplyDelete
 18. நாம எல்லாம் சாப்பாட்டுல அதிகமா உப்பு போட்டு சாபுடர்தும் ஒரு காரணமாக இருக்கலாம்

  ReplyDelete
 19. பெங்களூரில் இரண்டுமாதிரியும் இருக்கிறது சேகர். நகரப்பகுதியில் நீங்கள் சொல்வது மாதிரியும்,புற நகர்களில் எல்லாம் அரை கிலோ மீட்டர் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கெல்லாம் முப்பது ரூபாய், நாற்பது ரூபாய் என்றெல்லாம் கொள்ளை அடிப்பதும் மிகப்பரவலாய் நடக்கிறது. தவிர நகர்ப்புறங்களில் எந்த ஆட்டோவும் கூப்பிட்ட இடத்துக்கு வருவதில்லை என்பது பெங்களூர்க்காரர்களின் மிகப்பெரிய பிரச்சினை. ஆட்டோக்காரர்களைக் கண்டித்து ஆன்லைன் மூலம் ஒரு இயக்கமே தொடங்கியிருக்கிறார்கள்.பல ஆயிரக்கணக்கான பேர் இதில் உறுப்பினர்கள். சென்ற மாதம் பெங்களூர்ப்பயணிகள் சார்பாக ஆட்டோ புறக்கணிப்பு தினம் ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டது. நிலவரம் ஒன்றும் சொல்லிக்கொள்கிறமாதிரி இல்லை. சென்னையை ஒப்பிடும்போது எவ்வளவோ பரவாயில்லை என்று சமாதானப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். பெங்களூர் மற்றும் சென்னை ஆட்டோக்கள் பற்றி நானும் பதிவொன்று எழுதலாமென்றிருக்கிறேன்.

  ReplyDelete
 20. Sir,

  I gone to pune many times they too good . from railwaystation to Maharpatta city gate 80 Rs only . Good post.

  ReplyDelete
 21. அண்ணே...கேரளாவுல மத்த இடங்கள் எப்படின்னு தெரியல...ஆனா கொச்சின்ல கொஞ்சம் அதிகம், (கண்டிப்பாக சென்னையை விட கம்மி என்பது உறுதி..), இந்த ஐ.டி பார்க்குகளின் வரவால் அந்த தடத்தில் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரேட்தான்...அதைவிட கொடுமை ஹர்த்தால் (பந்த்) அன்று மூன்று மடங்கு வரை கட்டணம் வசூலிப்பார்கள்...

  ReplyDelete
 22. சொன்னையில் ஆட்டோக்க‌ளின் ஓன‌ர்க‌ளில் பெரும்பாலோர் காவ‌ல‌திகாரிக‌ள் தான்.
  க‌ட்ட‌ண‌க் கொள்ளையை யார் கோட்ப‌து. வேலிக‌ள் தான் ப‌யிர்க‌ளை அதிக‌ம் மெய்கிற‌து,ஜாக்கி சேகர்

  ReplyDelete
 23. ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகமாக பணம் கேட்டு அடாவடி பண்ணுவதற்கு முழு முதற் காரணம் நமது ஆட்சியாளர்கள்தான். நம்மளாலேயே அவர்களிடம் பேரம் பேசி கட்டணத்தைக் குறைக்க முடியவில்லை என்றால்,வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

  ReplyDelete
 24. South indiala Hyd,Bangalore, Trivandrum Pontra Capital cityla Meteronly except Our Singara Chennai?!?!? Enn Eppadi?

  ReplyDelete
 25. South Indiala Matha Capital city(Hyd, Bangalore, Trivandrum)la Meter Use panthranga enn Namma Chennaila Mattum Use Pannala???

  ReplyDelete
 26. // என் மனைவி என்னிடம்... வாய்தான் வழுதாவூர் வரைக்கு இருக்கு... ஒரு ஆட்டோ பிடிக்க அடிச்சி பேச திறமை இருக்கா? என்று என்னை திட்டிவைத்தாள்...//

  உங்கள இந்த பதிவு எழுத தூண்டினது எதுன்னு இப்ப புரியுது
  :)

  ReplyDelete
 27. நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா தமிழ்நாட்டுல ஆட்டோ கட்டணத்தை சரி பண்ண முடியும்னு எனக்கு தோணலை. பெரும்பாலான ஆட்டோக்களின் உரிமையாளர்கள் RTO, trafic police, அரசியல் அடிப்பொடிகள்.இவங்கதான் ஆட்டோவை தின வாடகைக்கு விடுவது. இது அரசியல்

  ReplyDelete
 28. //நான் ஆட்டோ ஓட்டும் போது...//

  தலைவரே, என்னடா இப்டி அதிகப்பிரசிங்கித் தனமா சொல்றானேன்னு நினைக்காதீங்க. நீங்க ஃபியூச்சர்ல லைஃப்ல எங்கயோ போகப்போறீங்க. எழுதி (ஸேவ் பண்ணி) வச்சுக்கோங்க. ஆண்டவன் துணையிருப்பான். சூப்பர்...

  ReplyDelete
 29. You are correct Jocki.. Auto fare is not fair.

  ReplyDelete
 30. Your write up is correct and good. Middle class and lower middle class can not afford. Only in Tamilnadu i had this problem

  ReplyDelete
 31. பெங்களூர் மட்டும் இல்லை...மும்பையில் கூட மீட்டர் தான்...நாம தான் இளிச்சச்சவாயர்கள் ஆயிற்றே...ஒன்னும் பண்ண முடியாது...

  கட்டணம் வசூலிக்க ஆட்டோ ஓட்டிகளின் வழக்கமான வார்த்தைகள்:

  ராத்திரி நேரம் சார்....எதுனா போட்டு கொடுங்க சார்... (உன்னை வேணா போலீஸ் கிட்ட போட்டு கொடுக்கிறேன்..)

  போயிட்டு எம்ப்டி.யா தான் திரும்பி வரணும்....(வேணும்.நா நானே மறுபடியும் உன்கூட சும்மா வரவா)

  வெய்யில் சார்.....(குடை பிடிக்கவா)

  மழை சார்... (மறுபடியும் குடை பிடிக்கவா)

  ஆணியே பிடுங்க வேண்டாம்....வீட்ல உக்காந்து ப்ளாக் படி...

  ReplyDelete
 32. Good post Jackie. Government shoud take steps to stop this robbery.
  Last week my friend came from hyderabad. He took auto from Central to Mountroad LIC stop. They charged Rs.60. He know tamil and he bargained to 4 or 5 auto persons. He cursed the auto servce in Chennai. I was ashamed on that time.

  ReplyDelete
 33. பலரின் பின்னுட்டங்களில் இருந்து ஒன்று மட்டும் தெரிகின்றது..கேரளாவும் அப்படியே...மும்பை சூப்பர்... பெங்களுர் மாறிவிட்டது.. இதில் சென்னைதான் படு கேவலமாக இருக்கின்றது...வெளிநாட்டு பயணி என்றால் டாலரில் கேட்பதை நினைத்தால் சிரிப்பாய் வருகின்றது...


  மற்றபடி உங்கள் உணர்வுகளை அப்படியே பின்னுட்டங்களில் வடித்த.. அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

  நான் நிறைய வேலைகள் செய்து இருக்கின்றேன்... அதில் ஆட்டோவும் ஒன்று.... ஏதிர்காலத்துக்கு வாழ்த்திய யெஷ்காவுக்கு எனது நன்றிகள்..

  ReplyDelete
 34. இதை சொல்வதற்கு எனக்கு அசிங்கமாத்தான் இருக்கு வேற வழி இல்லை.

  தயவுசெய்து பெங்களுர் வரும்போது நல்லா தமிழ் பேசராரே என்று நம்பி ஆட்டோ வில் எறிடாதிங்க.அதிகம் எமாற்றுவது தமிழ் ஆட்டோ டிரைவர்களே. உடைந்த தமிழில் பேசும் கன்னட ஆட்டோ டிரைவர்கள் ஆயிரம் மடங்கு நம்பலாம்.

  குறிப்பாக சில்க்போர்ட் ஆட்டோ ஸ்டாண்ட்.
  தனியார் ஏசி பேருந்துவில் வந்து இறங்கினால் அவர்களுக்கென்று ஸ்பெஷல் ரேட் கேட்பார்கள்.சில்க்போர்ட் ஆட்டோ ஸ்டாண்ட் முழுக்கவும் தமிழர்களே என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரிந்திருக்குமே.

  என்னுடைய அலுவலகம் சில்க்போர்ட் பக்கத்தில் இருப்பதால் இந்த கொடுமையை தினமும் நேரில் பார்க்கிறேன்.

  ReplyDelete
 35. அட விடுங்க ஜாக்கி, சென்னையில ஓடற ஆட்டோல 90 % oweners போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகளாம்.
  திருடன பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

  ReplyDelete
 36. velachery to egmore auto drived asked me to pay 350 rupees finally came down to 300.

  gone in call taxi fare came down to 200. always call taxi better travel with bill....

  if my friends are planning to go by auto, i better ask them to put petrol for my car and i drop them.

  its cheaper than auto

  ReplyDelete
 37. வாய் உள்ள பிள்ளை மட்டுமே
  சென்னை ஆட்டோவில் போகலாம்.
  இல்லேன்னா டாலர் ல தான் துட்டு கொடுக்கனும்

  நம்ம ஆட்டோ டிரைவருங்க கில்லாடி மா

  http://malcom-x-farook.blogspot.com/

  ReplyDelete
 38. சார்!!! இந்த விசயத்தை எப்படி அரசாங்கம் காதிற்கு கொண்டு செல்வது??? வழி இருந்தால் சொல்லுங்கள்

  ReplyDelete
 39. பெங்களூரில் மட்டும் என்க சரியான காசு வாங்குறாங்க , சிட்டி மார்கெட் போய் அங்கு இருந்து ரயில்வே ஸ்டேஷன்
  போங்க குறைத்தது 100,80 வாங்கி விடுவார்கள் . சரியான கட்டணம் 25 ரூபாய் மட்டுமே . அதிலும் தமிழ்ல
  பேசிகேட்டிக்கான எல்லா இடத்திலும் கடை ,டாய்லேட்,வியாபாரதிலும் ஏமாத்த பார்கிறார்கள்.

  ReplyDelete
 40. பெங்களூரில் மட்டும் என்க சரியான காசு வாங்குறாங்க , சிட்டி மார்கெட் போய் அங்கு இருந்து ரயில்வே ஸ்டேஷன்
  போங்க குறைத்தது 100,80 வாங்கி விடுவார்கள் . சரியான கட்டணம் 25 ரூபாய் மட்டுமே . அதிலும் தமிழ்ல
  பேசிகேட்டிக்கான எல்லா இடத்திலும் கடை ,டாய்லேட்,வியாபாரதிலும் ஏமாத்த பார்கிறார்கள்.

  ReplyDelete
 41. The ratio for auto fare in Baroda and Chennai is as follows:-
  Double the Distance - Half the Fare in Baroda
  Half the Distance - Double the Fare in Chennai
  To reach my home at Madipakkam, I have to pay one full ticket railway fare of Baroda to Chennai.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner