கமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும், என் விளக்கமும்...

பெப்சி பாட்டிலை திறந்தால் வேகமாக பொங்குமே அது போல எல்லோரும் பொங்கி விட்டார்கள்... பக்கம் பக்கமாய் எல்லோரும் தங்கள் தரப்பை சொல்லிவிட்டார்கள்...அனைவருக்கும் தனிதனியாக பின்னுட்டத்துக்கு பதில் போட முடியாது என்ற காரணத்தால் இந்த தனிபதிவில் சில விளக்கமும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்....கமல் எனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா புள்ளளையோ அல்லது பெரிப்பா புள்ளையோ கிடையாது...கமல் காப்பி அடித்து படம் எடுத்தார் என்று நீங்கள் சொன்னால் அதனை எதிர்த்து எதிர்விவாதம் செய்ய போவதில்லை அது எங்களுக்கும் தெரியும்... சந்தோஷமா??? ஒரு நிமிஷம்....ஒரு சின்ன திருத்தம்... 

இன்ஸ்பிரேஷனுக்கு காபிக்கும் வித்யாசம் இருக்கும்.. அதைவிட ஈ அடிச்சான் காப்பிக்கு நிறைய வித்யாசம் இருக்கு.... அது புரியாமல் நிறைய கேள்விகள்.. சினிமாவின் ஒன்லைன் வைத்து கதை செய்வது என்பது கதை திருட்டு, அறிவு திருட்டு ஆகாது நண்பர்களே......

உதாரணத்துக்கு ஏர்ப்போர்ட்ல மொழி தெரியாதவன் விமான நிலையத்துல மாட்டிக்கினவன் கதி என்ன??? ஸ்பில்பெர்க் எடுத்த டெர்மினில் படம்..

கணவன் கடத்தபட்டு விட்டான்...மொழி தெரியாத ஊர் ஒரு தமிழ் பெண்ணின் கதி.. இது ரோஜா... இரண்டு பேருக்கும் மொழி தெரியாது,இரண்டும் உண்மைகதை அதனால் இது காப்பி என்று சொல்வது போல் இருக்கு... உங்கள் வாதம்...

நான் என்னவோ கமல் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு காப்பி அடிப்பதை என்கிரேஜ் பண்ணுவதை போலவும்... காப்பி அடிப்பதை ஊக்குவிப்பது போலவும் சிலர் புரியாமல் பேசி வருகின்றார்கள்.....ஈ அடிச்சான் காப்பிக்கு இன்ஸ்பிரேஷனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு... உதாரணத்துக்கு பிரபுதேவா தெலுங்குல சித்தார்த் திரிஷாவை வச்சி எடுத்தபடத்தை காப்பிரைட் வாங்கி, தனது தம்பி ஜெயம்ரவியை வச்சி சம்திங் சம்திங்னு ஒரு படத்தை எடுத்தார்.. இயக்குனர்ராஜா.... அந்த படத்தை ஈ அடிச்சான் காப்பிக்கு ஊதாரணமா சொல்லலாம்... கேமரா கோணம் ,காஸ்ட்யூம், சீன் பை சீன், ஆக்ஷன் எல்லாம் அப்படியே... ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்து படம் எடுப்பது கேம் ஆடும் விஷயம்...  அதனால் ராஜா ரிஸ்க் எடுக்காமல் அப்படியே எடுப்பது அவர் இஷ்டம்..

ஆனால் கமல் என்னைக்காவது சீன் பை சீன், டயலாக், ஸ்டோரிபோர்ட் எல்லாம் அப்படியே வரிக்கு வரி வைத்து எடுத்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளலாம்.....கமல் மகாநதியில் சுகன்யாவை அழுதுக்கினே கிஸ் பண்ணது மாதிரி அதே சீன் எத்தனை ஹாலிவுட்படத்தில் வந்து இருக்கின்றது தெரியுமா? என்று கேள்வி கேட்பவர்கள்தான் நீங்கள்...


முதல் விஷயம் பாக்கியாவில் உங்கள் கட்டுரை வந்த போது பொங்கினீர்கள்.. அதே காப்பியை ஆதரிக்கின்றீர்கள்... ஒரு ஓவியத்தை பார்த்து ஒருவன் அப்படியே பார்த்து விட்டு, மனதில் நிலை நிறுத்தி கற்பனை சேர்த்து வைத்து வரைந்து கொடுத்தால், நான் கோபபட்டு இருக்கமாட்டேன்.. அடஅந்த ஓவியத்தை அசிங்கமா வரைஞ்சாலும் நான் கோபபட்டு இருக்கமாட்டேன்... அது அவன் கற்பனை... ஆனால் அதனை அப்படியே பிழைகளோடு ஜெராக்ஸ் எடுத்து பாக்கியாவுக்கு அனுப்பியதுதான் வருத்தம்..திரும்பவும் புரிந்து கொள்ளுங்கள் 

ஈஅடிச்சான் காப்பி வேறு இன்ஸ்பிரேஷன் வேறு.... திரும்பவும் அதனை புரிந்து கொள்வது நலம்...

இரண்டாவது அப்படி கமல் ஈ அடிச்சான் காப்பி அடிச்சி இருந்தாருன்னா..படம் எடுத்த டைரக்டர் மற்றும் அதை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்.. அவர் மேல கேசு போடட்டும்....அதை எல்லாம் பதிவா போடுவதுக்கு பதில் இந்த இன்டர்நெட் யுகத்தில் சம்பந்த பட்ட படநிறுவனங்களுக்கு அனுப்பி வையுங்கள்...அவர்கள் அந்த படத்தின் திரைக்கதை பார்த்தாலே கேஸ் போடமாட்டார்கள் என்பது வேறு விஷயம்...

விஷயம் தெரியாதப்ப நானே இது அந்த படத்து காப்பி,இந்த படத்து காப்பின்னு சொன்னவன்தான்...நான் தெலுங்கில் ஒக்கடு பார்த்துட்டேன் அதனால் கில்லி எனக்கு பிடிக்காது என்பது உண்மைதான்... ஆனால் ஒக்கடுவை எத்தனை பேர் பார்த்து இருப்பார்கள்... நான் சென்னையில் இருப்பதால்.. ஏவிஎம் ராஜேஸ்வரியில் பார்த்தேன்.. தெலுங்கு போக்கிரியை ஜெயப்பிரதாவில் பார்த்துவைத்தேன்.. ஆனால் என் கடலூர் நண்பர்கள் எந்த தெலுங்கு படத்தையும் பார்க்காத காரணத்தால் அவர்களுக்கு கில்லியும் போக்கிரியும்... செம மாஸ்படம்...

அது போலதான் உலகபடம் பார்த்துட்ட சில பேருக்கும் படமே பார்க்காத பல பேருக்கும் ,அந்த படங்கள் சூப்பர்தான்... ஒரு சில படங்களை தவிர நிறைய படங்கள் வேறுவகையை சார்த்தது....அல்பாசினோ நடிப்பை காப்பி அடித்தது பற்றி சொல்லிகின்றீர்கள்...ஒக்கடுமற்றும் போக்கிரி தெலுங்கு இரண்டும் மகேஷ்பாபு என்ற தெலுங்கு நடிகரின் காப்பி,விஜய் நடிப்பு என்று சொல்லலாம்.. நடிகர் விஜய் வேறுமாதிரி செய்யலாம் என்று நினைத்து இருந்தாலும்... அது போல நடிப்பு வேண்டும் என்று இயக்குனர் விருப்பபட்டால் அதை செய்துதான் ஆக வேண்டும்....

கமல் ஒன்னும் மிசஸ்டபுட்பயர் படத்தை வசனம் முதற்கொண்டு மாற்றாமல் காட்சிமுதற்கொண்டு அப்படியே எடுத்து எபிலிம் பை கமல் என்று பொட்டுக்கொள்ளவில்லை...  ஒன்லைன் ஒன்றுதான்... ஆனால் அது வேறுபடம்....
// நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை... இப்போது தமிழ்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் சாத்தியம் இருக்கின்றது....அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்....
///

போன பதிவில் இந்த வரியை யாரும் படிக்காம திரும்ப திரும்ப கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்க.... மேலுள்ள ரைட்ஸ் பிரச்சனையை ரொம்ப விரிவா நமது பதிவர் நண்பர் செந்தில்வேலன் நண்பரது வலையில் பின்னுட்டத்தில் சொல்லி இருக்கின்றார்....

 எங்க மாமா தலைமை ஆசிரியர்.... ஒரே பையன்.... திண்டிவனத்துலதான் சின்னவயசுல இருந்து படிச்சான்... அவனுக்கு எதுவும் தெரியாது.... அப்பாதான் உலகம்... பிளஸ்டூவுக்கு பிறகு கிண்டி அண்ணா யுனிவர்சிட்டில சேர்த்தாங்க... இரண்டு வருஷம் ஆச்சி....வீட்டில் ஏதாவது தெரியவில்லை என்றால்.... உங்களுக்கு கேஎப்சி தெரியாதா? கனரா பேங்கடெபிட் கார்டை எஸ்பிஐ பேங்க் ஏடிஎம்ல எடுக்க தெரியாதா? என்று எல்லாத்துக்கும் நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றான்... இரண்டு வருஷத்துக்கு முன் அது ஒரு ஜீரோ... இப்ப என்னடான்னா நாலு விஷயம் தெரிஞ்சிக்கினு எங்க அத்தை, மாமா,எல்லாரையும் நக்கல் பண்ணிகிட்டு திரியுது????  உனக்கு அது தெரியுமா? இது தெரியுமா?ன்னு கேட்குறான்...  எங்க மாமா... நான் ஒரு ஹெட் மாஸ்டர் எனக்கும் அனுபவம் இருக்கு...என் அறிவுக்கு, ஏழை கிராமத்து பசங்களுக்கு சொன்னா புரிஞ்சிக்கற அளவுக்கு, பாடம் சொல்லி கொடுக்க, எனக்கு நாலேட்ஜ் இருக்கு.. புரியாத சப்ஜெக்ட்டை நெட்ல பார்த்து, நூலகத்துலபுத்தகம் படித்து அவுங்களுக்கு புரியறா போல பாடம் சொல்லிக்கொடுக்குறேன்டான்னு சொல்லிபார்த்தார்...

ம்ஹும் எங்க அந்தைபையன் கேட்க மாட்டேங்குறான்....உனக்கு எதுவும் தெரியலை... நீ ஒரு மக்கு....நெட்ல பார்த்துட்டு சொல்லி தரே என்று வானத்துக்கு பூமிக்குமா, குதிக்கின்றான்.....  எங்க அத்தை பையன் போலதான் பல பேர் புரியாம இருக்காங்க... கவுண்டமணி சொல்வது போல் சோ சேட்......

எங்க ஊர்ல என் செட் பசங்களில் எனக்கு மட்டும்தான் ஒரளவுக்கு கம்யூட்டர் தெரியும்... பாதி பேருக்கு உலகபடம்னா என்னன்னு தெரியாது...எந்த ஹாலிவுட் படத்தையும் பார்த்தது கிடையாது....பறந்து பறந்து ஏர்லேயே நடந்து அடிச்சத பார்த்துட்டு அன்பே சிவம்,மகாநதி போன்ற படங்களை பார்த்துட்டு, நல்லபடம் எது என்று யோசிக்க வைத்தவர் கமல்தான்...


பிப்பிளிலைவ் போல படம் கமல் எடுத்து இருக்கலாம் என்று சொல்லும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன்... நீ இன்னைக்கு வேட்டி கட்டனும்,நாளைக்கு பேன்ட் போடனும் என்று எப்படி ஒருவனிடம் சொல்ல முடியும்????? அந்த உரிமை உங்களில் யாருக்கு இருக்கின்றது... அது அவன் இஷ்டம்....

இன்னும் கமல் அடித்த காபி லிஸ்ட்டில்..... பேசும் படம் என்று அற்புதமான காவியத்தை எழுதும் போது அல்லது லிஸ்ட் போடும் போது மறந்து விட்டார்கள் போல் இருக்கின்றது...பேசும்படம் எல்லா சார்லி சாப்ளின் படத்தையும் பார்த்து காப்பி அடித்தது, என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.. உங்களுக்குதான் பழி போடுவது ஈசியாக வருமே....அதையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.....கமல் டைட்டில் கார்டில் பேர் போடனும் என்று ஆவேசமாக சொன்னார்கள்...கமல் எந்த படத்தில் இருந்து உருவினாரோ அந்த படத்தின் இயக்குனர் கேட்கட்டும்... கமல் கண்டிப்பாக போடுவார்.....நீங்க ரெண்டு ஹாலிவுட் படம் பார்த்துட்டு டைட்டிலில் கார்டு போட சொன்ன போட்டுவிடுவாங்களா??? அப்படி பார்த்தா இந்தியாவுல பாதி பேர் கதை என்ற இடத்தில் அவுங்க பேர் போடவே முடியாது...கமல் ஒன்னும் ஈ அடிச்சான் காப்பி அடிக்கலை என்பதை திரும்பவும் புரிந்து கொள்ளுங்கள்....

பிப்ளிலைவ் பிப்ளிலைவ்னு அமிர்கான் படத்தை தலையில தூக்கி வச்சிக்கினு ஆடறிங்களே... இதுக்கு முன்னடியே பலவருஷத்துக்கு முன்னையே வேலைக்கு போற பெண்கள் படும் கஷ்டத்தையும், வேலைபார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை, மகளிர் மட்டும்னு படம் எடுத்துட்டோம்...அது ரொம்ப சின்ன பட்ஜெட் படம் தான்.... அந்த படத்துல நாசர் கேரக்டர் செம வெயிட்.. கமல் அதை புடுங்கி நடிக்கலை.. ...நாகேஷ் கேரக்டர்  அதை விடவெயிட்டான ரோல் அதை கமல் புடுங்கி நடிக்கலை.......


அட கமலை விடுங்க... எல்லாத்துக்கு அவனையே போய் நோண்டிக்கிட்டு .....

ஒரு நல்லபடத்தை கமல் எடுத்தா என்ன?? வேற யாரு எடுத்தா என்ன???சசின்னு ஒரு டைரக்டர்.... காபியும் அடிக்கலை ஒரு மயிறும் அடிக்கலை...தொப்புளை காட்டலை... நம் மண்ணின் பிரச்சனையை, நம் மண்ணின் காதலை... அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை, தீப்பெட்டி தொழிலில் இருக்கும் பிரச்சனையை, எந்த சினிமா தனமும் இல்லாமல் பூ ன்னு ஒரு படத்துல ரொம்ப அருமையா சொன்னார்.... எத்தனை பேர் அந்த படத்தை பார்த்து தொலைச்சி இருப்பிங்க.....அந்த படம் எடுத்தவங்களுக்கு செம நஷ்டம்... நீங்கள் எல்லாம் நல்ல படத்தை பத்தி பேசும்
போது சிரிப்பு வருது.... அப்படியே நல்லபடத்தை எடுத்துட்டா கொண்டாடி கிழிச்சிடறா மாதிரி.....தமிழில் ஒரு கமர்சியல் படம் சம்பாதித்து கொடுக்கும் தொகையை... ஒரு நல்லபடம் எப்போதுமே கொடுத்தது இல்லை...அப்புறம் எப்படி நல்லபடம் வரும்...??????

ஹாலிவுட்ல டைட்டினிக்,ராம்போ,டிரான்ஸ்போர்டரும் ஓடும்....பர்சூட்ஆப் ஹேப்பினஸ்சும் ஓடும்.....இங்க அதுமாதிரி பர்சூட் ஆப் ஹேப்பினஸ்மாதிரி படம் எடுத்து பாருங்க....ஒரு அப்பன் ஒரு புள்ள அவங்களுக்கு உள்ளே இருக்கும் வாழ்வாதாற பிரச்சனையை கதையில் வச்சி அந்த படத்துல எடுத்து பாருங்க.... 

நம்ம ரசிகர்கள் பர்சூட் ஆப் ஹேப்பினஸ் போல படம் எடுத்தால் வேறமாதிரி சிரிப்பான்.. 

மச்சி, ஒரு பையனும் ஒரு பொட்டியும் வச்சிகிட்டு ஒரு அப்பன் நடந்து போயிகிட்டே இருக்கான்..... ங்கோத்தா நடந்துகிட்டே இருக்கான்....எவன்டா பாக்கறது மாமா??? என்று கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள்...அப்பா மகள் உறவை அடிப்படையா வச்சு எடுத்த அபியும் நானும் என்ன ஆச்சு???
அது வெற்றிபடம்னு சொன்னா எனக்கு சிரிப்புதான் வருது....சரி மொழின்னு ஒரு படம் பிரகாஷ்ராஜ் எடுத்தது.... புதுகளம்....படம் பார்டர் வெற்றிதான்... ஒரு படையப்பாவுக்கு, ஒரு அண்ணாமலைக்கு கொடுத்த வெற்றியை அந்த மாதிரி  நல்ல படத்துக்கு கொடுத்திங்களா? அப்புறம் எப்படி நல்லசினிமா வரும்...... அங்பபறம் எதுக்கு நல்ல சினிமா எடுக்கனும்..???


பசும்பொன் அப்படின்னு ஒரு படத்தை பாரதிராஜா எடுத்தார்... ஒரு கிராமத்து தாயுக்கும், ஒரு மகனுக்கு நடக்கும் பிரச்சனையை அழாக சொல்லி இருப்பார் என்ன சொன்னிங்க... மச்சான் ஒரே ஒப்பாரியா இருக்குன்னு அந்த படத்தை தூன்னு துப்பிட்டிங்க... அப்புறம் எப்படி நல்லபடம் வரும்......கமல் ஏன் கிராமத்து படம்எடுக்கனும்... பணம் என்ன மரத்துலயா காய்க்கிது.......

ஜிப்சி ஜீப்பை காலில் கட்டி நிறுத்தி ஒரு பெண்ணை காப்பாற்றி பறந்து பறந்து ஏர்லே அடித்தை ரசித்த கூட்டம்... நம்முடையது அது இன்னும் மாறலை...ஆனா அவுங்க சினிமா கண்டுபிடிச்சதில் இருந்து அவுங்க இப்படி பட்ட காட்சி வச்சதே இல்லை...  அதனால ஹாலிவுட் படத்தை தமிழ் படத்தோட கம்பேர் பண்ணறதே தப்பு... ஏதோ கமல் போல ஆட்கள் ஹாலிவுட் படம் பார்த்துட்டு இன்சிபிரேஷன் ஆயி அது போலான நல்ல படங்கள் கொடுத்து ஒரளவுக்கு ஒரு ரசனை மாற்றத்துக்கு வித்திட்டவர் கமல்... 

நம்ம நெட்ல உலகசினிமா பாத்துட்டோம் அப்படின்றதால தமிழ்நாடு முழுசும் நல்ல சினிமாவுக்கு வெறியோட காத்து இருக்குன்னு சொல்லறது சுத்த பைத்தியக்காரதனம்....நமக்கு ஆங்கிலமும் கணினியும் தெரிஞ்சிட்டா தமிழ்நாட்டுல இருக்கற எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சின்னு நினைக்கறது போல.................

மத்த எல்லாரும் ஜாதியை வச்சி படம்எடுக்கலாம்...கமல் தேவர்மகன் எடுத்துட்டா.. இப்படித்தான் எடுக்கத் தெரியும்னு சொல்ல வேண்டியது.....மற்றதில் எல்லா கலையும் தெரிஞ்சா மட்டும்தான் விமர்சனம் செய்ய முடியும் ஆனா சினிமாவை யாரு வேண்டுமானலும் விமர்சனம் செய்யலாம்.....

ஒரு கார்ல போறிங்க... டிரைவர்கிட்ட பின்னாடி உட்கார்ந்துக்கினு... நீ அப்படி கட் அடிச்சி இருக்க கூடாது.. நீ இப்படி கீர் போட்டு இருக்ககூடாதுன்னு சொல்லி பாருங்க.. யோவ் 20 வருஷமா வண்டி ஓட்டிக்கினு இருக்கேன்.. புச்சா சொல்ல வந்துட்டாருன்னு கோபபடுவான்....உலகத்தில் எந்த வேலையையும் செய்யும் யாரையும் குத்தம் சொன்ன கோபம் வரும்... உங்க துறையில உங்க மேனேஜர் வந்து நீ செய்யற வேலை சரியில்லைன்னு சொல்லி பாருங்க.. லபோ,திபோன்னு குதிச்சி...

ங்கோத்தா அவனுக்கு என்ன தெரியும்..????
வந்து நாலு வருசம் கூட ஆகலை... என்னை யோக்கியம் எடுக்கறான்....
ஒரு தம்மை பற்றவைத்து விட்டு,.....

 பீல்டு ஒர்க்னா என்னன்னு தெரியமா?
விஷயம் தெரியாத நாயி அது சொல்லுது ....நான் சரியா செய்யலையாம்...
எவ்வளவு நாள் ராக்கண்ணு பகல் கண்ணு முழுச்சி எத்தனை டிடெயில் கலெக்ட் பண்ணி இருக்கேன் தெரியுமா???
 எனக்கு 15 வருஷ அனுபவம் எனக்கு வேலைசெய்ய தெரியலைன்னு அவன் சொல்றான் என்று கோபபடுவோம்.... அதுதான் இயல்பு....

ஒரு டாட் நெட் பற்றியோ... அல்லது ஜாவா பற்றியோ நன்கு விஷயம் தெரிந்நதவன்தான் அது சரியில்லை என்று சொல்லுவான்... அதை எப்படி சொல்லுவான் என்றால் சரியாக நிருபித்து விட்டு சொல்லுவான்...ஒரு கணக்கு தப்புன்னா அந்த பிராப்ளத்தை சரி பண்ணிட்டு அந்த கணக்கு பத்தின நாலேட்ஜ இருந்தாதான் சொல்லுவான்...ஆனா சினிமா அப்படி கிடையாது... பத்து ரூபா கொடுத்து படம் பார்த்துட்டாலே அது நொட்டை இது நொல்லை, அதை அப்படி செஞ்சி இருக்கலாம்... அதை இப்படி முடிக்கி இருக்கலாம்னு சொல்லுவாங்க...


இப்பயும் என்னால வில்ஸ்மித் நடித்த ஐ ரோபார்ட் படம்தான் ரஜினி நடிக்கும் எந்திரன்னு சொல்ல முடியும்...நான் சொல்லமாட்டேன்... ஏன்னா நாம இன்டர்னேஷனல் கூட்டம் இல்லை... இந்தியாவுல இருக்கும் ஒரு பிராந்திய மொழி கூட்டம்... அதுக்கு என்ன சர்வதேச வியாபாரம்னு எனக்கு தெரியும்.....அப்படியே காப்பி அடிச்சாலும் சர்வதேசதரத்துக்கு ஒரு படம் செய்ய அந்த படத்துல இருந்து லைன் எடுத்து இருக்காங்கன்னு சொல்லுவேன்......


அதே போல கமலை ஒருத்தர் போலி அறிவிஜீவின்னு சொன்னார்.....ஓ அவர்  ரொம்ப நல்ல அறிவி ஜிவி போல இருக்கு... அதை எப்படி அளப்பது என்றுதான் எனக்கு தெரியவில்லை??? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்....


கமலால்....
அவனால் நன்றாக நடனம் ஆடமுடியும்....
பள்ளி படிப்பை முடிக்காமலே பல புத்தகங்கள் வாசித்து தேர்ந்தவன்..
அவன் ஒரு நல்ல பின்னனி பாடகன்....
மூன்று படங்களை இயக்கிய இயக்குனர்
நல்ல நடிகன்...
எந்த தொழில்நுட்பத்தையும் தன் படத்தில் பரிசோதிப்பவன்... அதுவிளக்காக இருந்தாலும் சரி...
அது கேமராவாக இருந்தாலும் சரி....
படத்துக்கு படம் கெட்டப் சேஞ்ச் செய்பவர்.. என்பனவற்றை இந்தியாவில் இருக்கும் எல்லா சினிமா.. மேதாவிகளும் ஒத்துக்கொண்ட உண்மை......

ஆங்கில படம் பார்த்து விட்டு அறைகூவல் வீடும் நண்பர்களுக்கு...ஒரு சினிமாக்காரன் கமல் காப்பி அடிச்சி நடிச்சிட்டாரு....காப்பி அடிச்சி கதை பண்ணிட்டாருன்னு ஒரே ஒருத்தர் சொல்லட்டும்...  ஆனா அப்படி சொல்லமாட்டாங்க.... காரணம் சினிமாக்காரனுக்குதான் சினிமாவை பத்தி தெரியும்..... அதனுடைய வலி தெரியும்...

இனி கமலுக்கு ஒரு கடிதம்....

ஏன் மிஸ்டர் கமல் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத காப்பியடிக்கும் வேலை....எதுக்கு இந்த கற்றுக்கொள்ளும் விழைவு...

உங்கள் நண்பர் ரஜினி சார் போல நீங்களும் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை...ரஜினிசார் போல பால்காரன் வேஷத்துக்கு கூட ரீபோக் ஷுமாட்டி ஆடலாம்...யாரும் எந்த கேள்வியும் கேட்க போவதில்லை...உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை....

நீங்களும் எதையும் காப்பி அடிக்காம...ரஐனிசார் மாதிரி ஒவ்வோரு படத்துலயும் எதாவது பஞ்ச் டயலாக் பேசி உதாரணத்துக்கு.... சிங்கம் சிங்கிளா வரும்.... பன்னிங்கதான் கூட்டமா வரும்னு கேமரா பார்த்து பேசி இருந்தால் எந்த விமர்சனத்துக்கும் உங்களை உட்படுத்தாமல்.... அடுத்து எப்ப நீங்க அரசியலுக்கு வருவிங்கன்னு கேள்வியாவது கேட்டுவைப்போம்......

ரஜினி ஏன் மாறலை?  அவர் அடிச்சா பத்து பேர் பறந்து போய் விழறாங்க... ஒரே பாட்டுல பணக்காரா மாறிவிடுகின்றார்....யாரும் எந்த கேள்வியும் ரஜினிசாரை கேட்கமாட்டாங்க...அவரு எப்பயும் மாஸ்...ஏன்னா அவரு டைரக்டர் சொல்லறதை நடிச்சிட்டு போயிடுறார்...ரெண்டாவது தமிழ் ரசிகனின் ரசனை அவருக்கு அத்துபடி... ஆனா நீங்க உங்க முந்திரிக்கொட்டை ஆர்வத்தை படத்துக்கு படம் காட்டுறிங்க.... அது ரொம்ப தப்புங்க... படத்துக்கு படம் கெட்டப் மாத்திக்கிறிங்க... மேக்கப் போட்டுக்குறிங்க... எதுக்கு????

மாற்றம் என்பதை எந்த தருனத்திலும் விரும்பாத எங்களிடம் எதுக்கு இந்த விஷபரிட்சை எல்லாம்... நீங்களே மகாநதி டயலாக்கை ஒருமுறை சத்தமா சொல்லிபாருங்கள்.... //

//ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கேட்டவனுக்கு கிடைக்குதே அது ஏன்????==//

 கமல் நீங்களே கேட்டு பார்த்துகிட்டிங்களா??? ஏன்னா உங்களுக்கு ஊருடன் ஒத்துவாழதெரியலை.......அதுதான் உங்க தப்பு.... உங்க கலையுலக நண்பர் ரஜினிகிட்ட நீங்க கத்துக்க ஏராளம் இருக்கு....

இன்னைக்கு உங்க மேல இவ்வளவு விமர்சனம் இருக்கு... ஆனாரஜினிமேல் இப்படி விமர்சனம் வைக்க முடியுமா? அவ்வளவுதான் எல்லாரும் புந்து காலிபண்ணிடுவாங்க...  ஏன்னா நானே ரஜினிசாரை பத்தி பேசினா சண்டைக்கு வருவேன்....

 பள்ளி படிக்கும் போது ஒரு பையன் ரஜினி பத்தி தப்பா பேசிய அந்த பையனுக்கு எனக்கும் நடு ரோட்டுல ஸ்கூல் முடிஞ்சி வரும் போது மணலில் உதிரிபூக்கள் படத்துல வரும், சத்தம் இல்லாத சண்டை போல, பயங்கர சண்டை போட்டவன்தான் நான்...
 அப்ப எல்லாம் சண்டை போடும் போது சத்தம் வரனும் அப்பதான் அது சண்டை... அதனால் பிஷ்யுங்,டிஷ்யுங்னு வாயால சவுண்ட் கொடுத்து தலைவர் ரஜினிக்கா சண்டை போட்டு உதடு கிழித்துக்கொண்ட அக்மார்க் தமிழ் ரசிகன்நான்....


அப்புறம் மிஸ்டர்கமல்... நீங்க கேமராபார்த்து பஞ்ச் டயலாக் பேசி இருக்கனும் நீங்க அதிகம் பேசலை... படத்துக்கு படம் நீங்க கேமரா பார்த்து பஞ்சு டயலாக் பேசி இருந்தா... உங்களை யாரும் தப்பு சொல்ல முடியாது...விகடன் கூட அடுத்த கமல் படத்துல, என்ன மாதிரி பஞ்சு டயலாக் பேச போறார்னு ஒரு போட்டி வச்சி இருக்கும்.. எல்லாரும் இது போல படங்களை பார்க்க ஆவலாக இருக்கும் போது ரசிகர் மன்றங்கள் விசிலடிச்சான் குஞ்சிகளாக இருக்க கூடாதுன்னு ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமா உங்களை யார் மாத்த சொன்னது.....

பேசும்படம் சார்லி சாப்ளின், லாரல்ஹார்டி எடுத்த படங்களின் காப்பின்னு சொன்னது போல....நல்லவேலை நீங்க மருதநாயகம் எடுக்கலை.. எடுத்து இருந்தா??? படம் வருவதற்கு முன்பே அது மெல்கிப்சன் உயிரை கொடுத்து எடுத்த பிரேவ் ஹார்ட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்லி இருப்பார்கள்... ஏன்னா நாங்க உலகபடம் பார்க்கறோம் ஒரு சீன் உருவினாலும் எங்களுக்கு தெரிஞ்சிடும் ஆமா சொல்லிபுட்டேன்....

ஒரு வேண்டுகோள் இனிமேலாவது உங்க ஆர்வத்தை குறைச்சிக்கினு நம் மண்ணின் மனம் சிறிதும் கெட்டு போகாத சகலகலாவல்லவன் படம் போல எடுத்து தள்ளுங்க....

மிஸ்டர் கமல்.......  நீங்கள் உதடு கடித்து நான் என்ன தப்பு செஞ்சேன் என்று ஓ ராமா என்று கதறி அழுவதும்....

வெயிட் நான் எப்ப அழுதேன்???
அப்படித்தாயான் சொல்றாங்க... ஆஸ்கார் கிடைக்கலைன்னு தலையில துண்டு பொட்டு அழுதுக்குனு இருக்கறதா நிறைய பேரு சொல்லறாங்க.....


 தமிழ் சினிமாவை அடுத்ததளத்துக்கு எடுத்து செல்வது தவறா? என்று கேட்டால் உங்களுக்கு ஒரு கதை சொல்லுவேன்... தமிழ் நண்டு கதை தெரியுமா? தெரியலைன்னா.. ரிதம் படத்தை பாருங்க.. அப்ப உங்களுக்கே உண்மை தெரியும்...

நண்பர்களே கமலை பற்றி நிறைய விளக்கம் கொடுத்தாகிவிட்டது...இப்பயும் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால்... நீங்க என்ன சொல்வது... நானே சொல்கின்றேன்...

காப்பி அடித்த கமல் ஒழிக...
போலிஅறிவுஜீவி வேடம் போட்டு நம்மவர்களை ஏமாற்றும் கமல் ஒழிக....
அல்பாசினோவை காப்பி அடித்து நடித்த கமல் ஒழிக...திருப்தியா? இப்ப போய் புள்ளகூட்டிங்களை... காப்பி அடிக்காம படிக்க வைங்க....நீங்களும் உங்கள் சந்ததியும் காப்பி அடிக்காமல் வாழ்வாங்கு வாழ அந்த சமயபுரத்தாளை வேண்டிக்கொள்கின்றேன்... 

தமிழ் இயக்குனர்களுக்கு... பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் நாவலை படமா எடுத்தா...ஸ்பீல்பெர்க் எடுத்த டெர்மினல்னு சொல்லுவோம்.. ஏன்னா ரெண்டுத்துலயும் ஏர்போர்ட் வருதே....எங்களை யாரும்ஏமாத்த முடியாது.... 

ஏதோ என்னைமாதிரி ஞானசூன்யத்துக்கு எல்லாம் இவ்வளவுதான் எழுத வரும் இதுக்கு மேல எனக்கு நிறைய வேலை இருப்பதால் திரும்பவும் காப்பி அடிக்கும் கமல் ஒழிக என்று, திரும்பவும் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்.....

குறிப்பு .. 

இந்த பதிவில் நிறைய காப்பி என்ற வார்த்தை வரும்....தமிழ் பதிவுலகை பொறுத்தவரை இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கு வித்யாசம் தெரியாத காரணத்தால் அந்த வார்த்தை பிரயோகம்.....

கமல்ஹாசன் எதிர்வினை எழுதிய நண்பரின் பின்னுட்டத்தில் ஒரு அறிவானவர்... நான் கமலுக்கு பி ஆர் ஓ வேலைக்கு முயற்ச்சிப்பதாய் எழுதி இருந்தார்... மெரினாவில் காந்தி சிலைக்கு பின்னே, இப்போதும் இருக்கும் சாகர்விகார் ரெஸ்ட்டாரண்டில் நான் ஒரு காலத்தில் அடுத்த வேலை சோற்றுக்கு வேலை செய்த போது.... நொச்சிகுப்பம் பசங்க பொங்களுக்கு 3 நாட்கள் லீவ் போட்ட காரணத்தால், ஒரு மூன்று நாட்களுக்கு எச்சில் தட்டுக்களை கழுவியவன் நான்...கமலுக்கு பிஆர் ஒ வேலை எனக்கு கிடைத்தால் அதையும் செய்வேன்....கடலூரில் இருந்து பத்தாவது படித்து விட்டு சென்னை வந்தவனுக்கு அது மிகப்பெரிய விஷயம்...

அதே போல் கமலஹாசன் எதிர்வினை எழுதிய நண்பரை திட்டி நிறைய பின்னுட்டங்கள் வந்தது...நான் கமென்ட் மாடுரேஷன் வைத்து இருப்பதால் பப்ளிஷ் பண்ணவில்லை....ஏன்னா அவன் என் நண்பேன்டா.....

இதுக்கு பிறகும்.. கமல் பற்றி எதிர்வினை பின்னுட்டங்களுக்கு பதில் சொல்ல  போவதில்லை... ஏன்னா சம்மதபந்தபட்ட கமலே இது போன்றவிமர்சனங்களைபத்தி கவலை படாம, திரிஷா கூட ஆடிபாடி பொழப்பை பார்க்கும் போது, நாமலும் பொழப்பை பார்க்க போகவேண்டியகட்டாயத்தாலும் இத்துடன் கமல் பதிவுக்கு முற்றுபுள்ளி வைக்கின்றேன்...

போங்கப்பா போங்க.... பிப்பிளிலைவ்வுக்கு முன்னாலேயே ரொம்ப கம்மி பட்ஜெட்ல, தமிழ்ல பூ ன்னு ஒரு படம் வந்து பூட்டகேசு ஆன படத்தை முடிஞ்சா பார்த்து வையுங்க...எல்லாத்துலயும் தமிழன்தான் முன்னோடி ஏளனம் செய்வதிலும்,எட்டப்பன் வேஷம் கட்டுவதிலும்.........................

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..62 comments:

 1. ஏன் இவ்வளவு கோபம்???

  ReplyDelete
 2. ஜாக்கி அண்ணே,

  உங்கள் கருத்தை சூட்டுடன் சொல்லியிருக்கீங்க. நானும் பல பத்திகளை ரிப்பீட்டிக்கிறேன்.

  காப்பிரைட் பற்றி நிறைய பேசுகிறார்கள்.

  கேபிள் அண்ணன் காபிரைட்ஸில் உள்ள விவகாரங்கள் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

  இந்தப் பதிவில் காப்பிரைட்ஸ் பற்றி நான் சில கருத்துகளைக் கூறியுள்ளேன்.. விசயம் தெரிந்தவர்கள் விளக்கவும்..

  http://senthilinpakkangal.blogspot.com/2010/09/blog-post_11.html

  //

  இவர்கள் கேட்கும் கேள்வி "காப்பிரைட்டை ஏன் வாங்கவில்லை?" என்பது.

  ஹாலிவுட் மற்றும் உலகப்படங்களுள் முக்கியமாகக் கருதப்படுவவை திரைக்கதை மற்றும் ஸ்டோரிபோர்ட் தான். இதை நான் சொல்லத்தேவையில்லை.

  ஹாலிவுட் படங்கள் எடுக்கப்படும் பட்ஜட் என்ன? குறைந்தது ஒரு 1000 கோடி வரை பட்ஜட் செல்கிறது. அப்படி எடுக்கப்படும் படத்தின் காப்பிரைட்டை என்ன விலைக்குத் தருவார்கள்? ஒரு 5% என்று வைத்துக்கொண்டாலும் 50 கோடி. மசாலா இல்லாத தமிழ்ப்படங்களின் வர்த்தகம் எந்த அளவிற்குச் செல்லும்?

  படம் மிகப்பெரிய வெற்றியடையும் பட்சத்தில் 30 கோடி? மீறிப்போனால் 50 கோடி? நல்ல தரமான படங்கள் 20 கோடியை வசூல் செய்வதே கடினம். இதில் எப்படி 50 கோடிக்கு காப்பிரைட் வாங்குவீர்கள்?

  யோசித்துப்பாருங்கள். நடக்கற விசயத்தைக் கூறுங்கள்.

  இல்லையில்லை காட்பாதர் எல்லாம் வந்து பல வருடங்கள் ஆகின்றன. அதனால் கம்மியான விலைக்குக் கிடைக்கும் என்று கூறுவீர்கள். ஐயா, பிரபலமான கலைப்பொருட்களுக்கு நாளாக நாளாகத் தான் மதிப்பு அதிகம். அது கார்பாதருக்கும் பொருந்தும்.

  வேண்டுமானால் ஒன்று செய்யலாம் 50 கோடிக்கு காப்பிரைட் வாங்கி 5 சண்டைகள் வைத்து 3 குலுக்கல் நடனம் வைத்தால் நன்றாக விற்பனையாகும், அதுவும் ரஜினியை நடித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டால்.... அப்பொழுதும் உலகப்பட ரசிகர்கள் என்ன சொல்வார்கள்?

  "படமாடா எடுத்திருக்காங்க?"

  "சரி பரவாயில்லை. குறைந்தது படத்தின் கடைசியில் இப்படம் இந்தப்படத்தில் இருந்து "இந்தந்த காட்சிகளைக் காப்பியடித்தோம்... என்று பட்டியலிட்டால் என்ன?' " என்று கேட்பீர்கள்.

  காப்பிரைட் வாங்காமல் இப்படி போடுவதை விட காமெடி ஒன்றுமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

  //

  இது நிறைய பேருக்கு விளங்கவே மாட்டேங்குது ;)

  ReplyDelete
 3. ஹஹஹ...நச் நச்..நச் நச்..நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்நச் நச்..நச் நச்னு ஒரு பதிவு ஜாக்கி....

  தேவைக்கு அதிகமாகவே தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுக்கும்மேலயும் இந்த விவாதம் நீடிக்காதென நம்புகிறேன்... நன்றி ...

  மன்மதன் அம்பு எப்போ ரிலிஸ் ஆகுது ஜாக்கி ஜீ... :))

  ReplyDelete
 4. ஆங்கிலப்படங்களை அப்படியே தமிழில்மொழி பெயர்த்து புருஸ்வில்லிஸ் க்கு கமல் டப்பிங கொடுத்து
  கதை, திரைக்கதை பத்மஸ்ரீ கமல்ஹாசன்னு போட்டா கமலுக்கு முதல் எதிரி நான்தான்...

  வெள்ளைக்காரன்கிட்டருந்து ஸ்ரிப்டை சுட்டு டைட்டில்கார்டேலேருந்து சுபம் போடறவரைக்கும் அப்படியே வெட்டி ஒட்டிருந்ததா சுருக்கமா சொன்னா(சிபி.செந்தில்குமார் பண்ணாமாதிரி) அதுக்கும் முதல் எதிரி நான்தான்...

  மேலே சொன்னபடி செய்தாத்தான் அங்கு காப்பிரைட்ஸ் என்ற பேச்சக்கே இடம் வருது... இத எதையும் அவர்
  பண்ணவே இல்லையே...

  அப்பறம் அவர் அறிவுஜீவி மாதிரி பேட்டி கொடுக்கறாராம்... சாமிகளா... மொக்கை படத்தை எடுத்துட்டே அவனவன் பண்ணற அலம்பலை எந்த வகைல சேர்ப்பது... இவர்களின் புரிதலைக்கண்டு மெயிசிலிர்த்துப்போகிறேன்

  கமலின் படங்களை ரசிக்க முயன்று தோற்றுப்போய் ச்சீ...ச்சீ.. இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலைப்பாடுதான் இவர்களோடது.

  கமலுக்கு எழுதிய லெட்டர்தான் இதற்கு சரியான பதில்...

  ReplyDelete
 5. பதிவர் சுரேஷ் கண்ணனும் இதுகுறித்து நடுநிலையான தெளிவான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்

  http://pitchaipathiram.blogspot.com/2010/09/blog-post_13.html

  ReplyDelete
 6. .///கமல் மகாநதியில் சுகன்யாவை அழுதுக்கினே கிஸ் பண்ணது மாதிரி அதே சீன் எத்தனை ஹாலிவுட்படத்தில் வந்து இருக்கின்றது தெரியுமா? என்று கேள்வி கேட்பவர்கள்தான் நீங்கள்......///ரொம்ப PRELIMINARY ஆ யோசிக்கிறீங்க.. ஜாக்கி... எதிர்வினை ஆற்றிய கருத்துகளை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது..நீங்கள் சுவராஸியமாக எழுதுகிறீர்கள் என்பது,எவ்வளவு உண்மையோ.. அதே அளவு சிந்தனையே முன்னோக்கி செலுத்தவில்லை என்பது எண்ணம். தயவு செய்து கமலை எதிர்த்து எழுதிவிட்டால் சிந்தனை முன்னோக்கி செல்கிறதா ?என்று கேட்டுவிடாதீர்கள்.

  ReplyDelete
 7. மிகவும் உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்! மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் வைத்த் வாதங்கள்!

  ReplyDelete
 8. நெத்திய‌டி ஜாக்கி அண்ணே!!!

  ReplyDelete
 9. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

  ஆங்கிலப்படங்களை அப்படியே தமிழில்மொழி பெயர்த்து புருஸ்வில்லிஸ் க்கு கமல் டப்பிங கொடுத்து
  கதை, திரைக்கதை பத்மஸ்ரீ கமல்ஹாசன்னு போட்டா கமலுக்கு முதல் எதிரி நான்தான்...

  வெள்ளைக்காரன்கிட்டருந்து ஸ்ரிப்டை சுட்டு டைட்டில்கார்டேலேருந்து சுபம் போடறவரைக்கும் அப்படியே வெட்டி ஒட்டிருந்ததா சுருக்கமா சொன்னா(சிபி.செந்தில்குமார் பண்ணாமாதிரி) அதுக்கும் முதல் எதிரி நான்தான்...

  மேலே சொன்னபடி செய்தாத்தான் அங்கு காப்பிரைட்ஸ் என்ற பேச்சக்கே இடம் வருது... இத எதையும் அவர்
  பண்ணவே இல்லையே...

  நாஞ்சில் மேலுள்ள வரிகளை அப்படியே உடன்படுகின்றேன்...

  ReplyDelete
 10. ///
  அதே போல் கமலஹாசன் எதிர்வினை எழுதிய நண்பரை திட்டி நிறைய பின்னுட்டங்கள் வந்தது...நான் கமென்ட் மாடுரேஷன் வைத்து இருப்பதால் பப்ளிஷ் பண்ணவில்லை....ஏன்னா அவன் என் நண்பேன்டா.....
  ///

  மிகவும் டீடெயிலாக விவரிக்காமல் அவரின் நடத்தையை ஓடும் நதி போல் அழகாக தொட்டுக் காண்பித்திருப்பது உங்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 11. செந்தில் வேலன் நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை...

  ReplyDelete
 12. நன்றி ராஜா என்னை பற்றிய புரிதலுக்கு....

  ReplyDelete
 13. ///
  பள்ளி படிக்கும் போது ஒரு பையன் ரஜினி பத்தி தப்பா பேசிய அந்த பையனுக்கு எனக்கும் நடு ரோட்டுல ஸ்கூல் முடிஞ்சி வரும் போது மணலில் உதிரிபூக்கள் படத்துல வரும், சத்தம் இல்லாத சண்டை போல, பயங்கர சண்டை போட்டவன்தான் நான்...
  ///
  சத்தம் இல்லாத சண்டை என்ற உங்களின் உதாரணமே சொல்கிறது உங்களின் சினிமா குறித்த ஆர்வத்தையும் அந்த படம் குறித்த தெளிவையும்.

  உணர்ச்சிமிக்க இந்த கட்டுரை நிச்சயம் உங்களின் சிறந்த பதிவுகளில் இடம்பெறுகிறது.

  வாழ்க

  அன்பு நித்யன்

  ReplyDelete
 14. ஜாக்கி

  உங்களை பர்சனலாக விமர்சித்த சிலவற்றை நான் விரும்பவில்லை. ஏன் என்றால் அது இந்த விவாதத்துக்கு தேவையில்லாதது.

  மேலும், ரஜினி vs கமல் என்றோ அல்லது கமல் ரசிகர்கள் vs ரஜினி ரசிகர் என்றோ இந்த விவாதம் திசை திரும்புவதால், இதை இத்தோடு விடுவதே சரி. அதையே நீங்களும், கொஞ்சம் காட்டமாக சொல்லியிருக்கிறீர்கள்.

  நன்றி.

  ReplyDelete
 15. ஒரு உணர்வை மட்டும் எதிர்வினையாற்றும் அனைவரும் புரிந்துகொள்ளாதது வருத்தமே ஜாக்கி.

  கமலை விமர்சித்து எழுதிய அனைவருமே கமலின் தீவிர ரசிகர்கள் என்பது முற்றிலும் உண்மை. கமலா இப்படி என்ற ஒரே வருத்தம் தவிர மற்ற எவையும் இந்த பதிவுத் தொடருக்கு காரணம் இல்லை. மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், என்னுடைய வருத்தம் அது மட்டுமே.

  கற்க..கற்க.. என்ற பாட்டை பார்த்துவிட்ட.. தலைவர்..தலைவர்தான் என்று புளாங்கிதம் அடைந்தவன் நாள்.

  எல்லாரும் கிழித்து தொங்கப்போட்ட ஆளவந்தானில், அந்த மனபிறழ்வு கமல் நடிப்பை பார்த்து சிலாகித்தவன் நான்.

  குணாவில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்காக +2 படித்த அந்த கால கட்டத்தில் தியேட்டருக்குப் போய் 6 முறை அந்தப் படத்தைப் பார்த்தவன் நான்.

  தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்கும் ஒரு டொச்சுக் கதையை, அ.சகோ என்று படம் எடுத்து, ராஜா கையவெச்சான்னு வந்த பாடலில் கமலின் கெட்டப்பை பார்த்து புல்லரித்தவன் நான். இன்றும் சிறந்த திரைக்கதை என்றால் அந்தப் படத்தை தான் சொல்லுவேன்.

  இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.

  ஆனாலும், கமல் இன்னொரு படத்தைப் பார்த்து, அந்த நடிகரின் முகபாவனைகளை செய்திருக்கிறார் என்று அறிந்த அன்று என்ன ஒரு வருத்தம் வந்திருக்கும் ?. அது கண்டிப்பாக ஒரு கமல் ரசிகனுக்கு மட்டுமே வந்திருக்கும்.. எனக்கும் வந்தது.

  அவ்வளவே....

  ReplyDelete
 16. நன்றி மோகன்...

  நன்றி கரிசல்காரன்...

  ReplyDelete
 17. நன்றி நித்யா...
  மத்தவங்களை போல் நாம் இருக்க கூடாது அல்லவா?

  ஆம் நண்பரே அப்போது எல்லாம் சரியாக சொல்வது என்றால் பாயும் புலி வந்த சமயம்...அப்போது எனக்கு ரஜினியை பத்தி யார் சொன்னாலும் கோபம் வரும்...ஆனால் இப்போது இந்த வயதிலும் அதே ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கின்றார் என்றால் அது சதாரணவிஷயம் இல்லை...இத்தனைக்கு விக் எல்லாம் வைத்து தன்னை இளைமையாக காட்டிக்கொள்வது இல்லை... அந்த இயல்பு சிம்பிள் சிட்டி எனக்கு ரஜினிக்கு பிடித்தமானது...

  ReplyDelete
 18. நன்றி பினோக்கி...

  எனக்கு உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை..

  எனக்கும் கமல் மீது வருத்தம் உங்களை போல் இருந்தாலும் அது எல்லாம் பழைய கதை....ஆனால் திரும்ப திரும்ப கையை புடிச்சி இழுத்தியான்னு சொல்வதை என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை..

  ReplyDelete
 19. மிக மிக சிறந்த பதில் பதிவு...

  ReplyDelete
 20. கமலுக்கு எழுதுன கடிதம் சூப்பர் ....

  ReplyDelete
 21. ////....கமல் எனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா புள்ளளையோ அல்லது பெரிப்பா புள்ளையோ கிடையாது...கமல் காப்பி அடித்து படம் எடுத்தார் என்று நீங்கள் சொன்னால் அதனை எதிர்த்து எதிர்விவாதம் செய்ய....////இதெல்லாம் பழைய பகடி.. நாங்க கூட பேசலாம்.. சின்னவயசுல கமல் சின்னவயசில எங்களுக்கு பாதி மிட்டாய் தரலனு.. இது இப்படியே போய்க்கிட்டே இருக்கும்.. WE ARE NOT ENEMIES OF KAMALAHAASAN AND HIS OWN IDEA...WE ARE ALSO KAMALHAASAN AND OTHER ACTORS FANS.. DONT INTERPRET WE ARE AGAINST OF KAMALAHAASAN.. இம்மாதிரியான விவாதங்கள் கமல் எதிரி VS ஆதரவு என்ற நிலைப்பாட்டினை நாம் எடுக்கவேண்டிய அவசியமில்லை..கருத்துகளை மேல் நோக்கி இட்டுச்செல்லத்தான் இம்மாதிரியான விவாதங்கள் அவசியம்.. தமிழ்சினிமாக்காரர்கள் மட்டுமல்ல வாழ்க்கையில் பல தரத்திலும் உள்ளவர்கள் அவரவருக்கான புதிய உத்திகள்,அர்ப்பணிப்புகள், உழைப்போடுதான் தங்கள் பணியை எந்த புகழ் வெளிச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.. கமல் மட்டுமல்ல...

  ReplyDelete
 22. //திரும்ப திரும்ப கையை புடிச்சி இழுத்தியான்னு சொல்வதை என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை.

  ஹ..ஹ.. :).

  ReplyDelete
 23. அண்ணாத்தே பதிவு ரெம்ப நல்லாயிருக்கு ,அதுவும் கடைசியா ஒன்னு சொன்னீங்க பாரு.

  "சம்மதபந்தபட்ட கமலே இது போன்ற விமர்சனங்களைபத்தி கவலை படாம, திரிஷா கூட ஆடிபாடி பொழப்பை பார்க்கும் போது, நாமலும் பொழப்பை பார்க்க போக............."

  சும்ம்ம்ம்ம்மா....... எவ்வளவு நாள் தான் வடையை தட்டிக்கினி இருக்கிறது???.

  போங்கப்பா,போங்க போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையிங்க!!!!!1

  ReplyDelete
 24. உண்மை நண்பர் ஜாக்கி....
  நான் டவுட் பயர் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்
  அவ்வை சண்முகி பல முறைகள் (டிவி உபயம்) பார்த்திருக்கிறேன்..
  நிச்சயமாக இரண்டும் ஒன் லைன் ஸ்டோரி மட்டும்தான் காப்பி எனலாம்.. மாறாக
  கதை சொல்லப் பட்ட விதத்தில் முற்றிலும் வேறு பட்டது என்று அறுதியிட்டுச் சொல்லலாம்... கண்ணும் அறிவும் வேலை செய்யாதவர்கள் மட்டுமே தவறாகச் சொல்ல முடியும்
  ... உண்மையில் கமல் தமிழ் சினிமாவின் தாறுமாறான ஓட்டத்தை அந்த மசாலா நெடியை பெருமளவு குறைத்தவர் என்பது அவரின் எதிரிகளால் கூட ஒப்புக் கொள்ள கூடிய விசயம் தான்

  ReplyDelete
 25. //அப்படியே நல்லபடத்தை எடுத்துட்டா கொண்டாடி கிழிச்சிடறா மாதிரி.....தமிழில் ஒரு கமர்சியல் படம் சம்பாதித்து கொடுக்கும் தொகையை... ஒரு நல்லபடம் எப்போதுமே கொடுத்தது இல்லை...அப்புறம் எப்படி
  நல்லபடம் வரும்...//

  இதே வருத்தம் எனக்கும் உண்டு ஜாக்கி சார் ...பூ படம் மட்டும் அல்ல. நான் கடவுள் உட்பட ஏரளமான நல்ல படங்கள் தோல்வியையே தழுவி உள்ளது என்பது மிகவும் கவலையான விடயம்.

  ReplyDelete
 26. மக்கா அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை.. ஜாக்கி நீங்களும் வீட்டுக்கு கடன் வாங்கிருக்கீங்க.. நானும் வாங்கிருக்கேன்.. அத எப்படி அடைக்கிறதுன்னு யோசிப்போம்.. இந்த விசயம்லாம் நம்மளுக்கு தேவை இல்ல ஜாக்கி.. நாம ஜஸ்ட் ஒரு சினிமா ரசிகனுங்கதான்.. நாமளுக்கு ஆயிரம் வேலை கிடக்கு ஜாக்கி.. விட்டுதள்ளுங்க.. ரொம்ப டென்ஸனா இருக்கறப்ப மனச ரிலாக்ஸ் பன்னிகிடறதுக்குதான் சினிமா.. இனிமே இதெல்லாம் பேச வேணாம்.. ஏய் என்னா நீ இப்படி சொல்ற அவன் காப்பி அடிச்சா அத பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்க முடியுமான்னு .. நீயும் எப்படி சும்மா இருக்கலாம்னு கேக்கறவங்க.. பேசாம எங்களுக்கு ஒரு பத்து லட்சம் கொடுங்க சாமிகளா.. உங்க கூட சேர்ந்து நாங்களும் கோஷம் போடறோம்.. நீங்க யார தீட்ட சொல்றீங்களோ திட்டறோம்.. டீலா நோ டீலா சொல்லி அனுப்புங்க.. நாங்க வாரோம்... வாங்க ஜாக்கி நாம போய் எதுனாச்சும் படம் பாக்கலாம்...

  ReplyDelete
 27. //அல்பாசினோ நடிப்பை காப்பி அடித்தது பற்றி சொல்லிகின்றீர்கள்...ஒக்கடு மற்றும் போக்கிரி தெலுங்கு இரண்டும் மகேஷ்பாபு என்ற தெலுங்கு நடிகரின் காப்பி,விஜய் நடிப்பு என்று சொல்லலாம்.. நடிகர் விஜய் வேறுமாதிரி செய்யலாம் என்று நினைத்து இருந்தாலும்... அது போல நடிப்பு வேண்டும் என்று இயக்குனர் விருப்பபட்டால் அதை செய்துதான் ஆக வேண்டும்....//

  அப்படியா? இங்கயும் ரீ மேக்கா நடக்குது? அப்புறம்,இயக்குனரை தன் வழிக்கு கொண்டுவரும் அளவுக்கு செல்வாக்கு உள்ள ஆள் தான் கமல்.இல்ல,அவரு தலையிடவே மாட்டார்னு சொல்ல முடியுமா?

  //பிப்ளிலைவ் பிப்ளிலைவ்னு அமிர்கான் படத்தை தலையில தூக்கி வச்சிக்கினு ஆடறிங்களே... இதுக்கு முன்னடியே பலவருஷத்துக்கு முன்னையே வேலைக்கு போற பெண்கள் படும் கஷ்டத்தையும், வேலைபார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை, மகளிர் மட்டும்னு படம் எடுத்துட்டோம்...//

  அண்ணே,அதுவே 9 to 5 படத்தோட காபி னு கேள்விப்பட்டேன். அது தெரியுமா?சரி,உங்க வாதப்படி பெரிய budget படத்தை தான் ரிஸ்க் வேணாம் னு காபி அடிச்சு எடுக்காங்க. இது சின்ன பட்ஜெட் தான? ஒழுங்கா 'யோசிச்சு' கொடுத்து இருக்க வேண்டியது தான?

  //சசின்னு ஒரு டைரக்டர்.... காபியும் அடிக்கலை ஒரு மயிறும் அடிக்கலை...//

  அண்ணே,பூ படம் காபி தான்.ஆனா,கிரெடிட் கொடுக்குற தைரியம் அவருக்கு இருந்தது. அதுவே தெரியலை.படம் நீங்க பார்த்தீங்களா? அதுல கிரெடிட் கார்டு ஓடுறப்ப அதுல கிரெடிட் கொடுத்தார் இயக்குனர். கமல்க்கு இருக்கா அந்த நேர்மை ?

  //அப்படியே நல்லபடத்தை எடுத்துட்டா கொண்டாடி கிழிச்சிடறா மாதிரி.....//

  அங்காடித்தெரு, பசங்க, சுப்ரமணியபுரம்,பருத்திவீரன்... இதெல்லாம் என்னங்க ஆச்சு? இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்.நல்ல படங்களை கொடுத்தா வெற்றி பெறச்செய்ய மக்கள் ரெடி. ஏன் காபி அடிச்சிட்டு படம் கொடுத்துட்டு வெட்டியா சலம்பனும்னு தான் கேக்குறோம்...

  // நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை... இப்போது தமிழ்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் சாத்தியம் இருக்கின்றது....அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்....//

  ஆக,ஒரு படத்தை காபி அடிப்பீங்க, ரைட்ஸ் வாங்குறது பத்தி கூட யோசிப்பீங்க,ஆனா ஒரு சொந்த யோசனைல ஒரு நல்ல படம் பத்தி யோசிக்க மாட்டீங்க?

  இந்த ரைட்ஸ் பிரச்சினையே வேணாம்னே..முழுக்க யோசிச்சு ஒரு நல்ல படத்தை காபி இல்லாம கொடுக்க சொல்லுங்க.அப்ப கொண்டாடுறோம்....

  //இங்க அதுமாதிரி பர்சூட் ஆப் ஹேப்பினஸ்மாதிரி படம் எடுத்து பாருங்க....//

  அது தான் தவமாய் தவமிருந்து.படத்துக்கு என்ன மாதிரி பேர் இருக்கு? எனக்கு தெரிஞ்சு பலரும் அதை பாராட்ட தான் செய்றாங்க. எனக்கு தெரிஞ்சவங்க யாரும் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க மாதிரி கெட்ட வார்த்தைல எதுவும் சொல்லலயே..

  இந்த விவகாரம் எனக்கு அலுப்பூட்டுது. உங்க பதிவின் தொனி கடுப்பாக்குது. விவாதம் நடக்குறப்ப,அதை ஏன் பர்சனல் பைட் ஆக்க பிரியப்படுறீங்க?

  ஒரு சின்னப் பொண்ணு கைல இருந்த மிட்டாய், திடீர்னு சாக்கடைல விழுந்துருச்சு..
  அது மிட்டாய் தான்.ஆனா,அதுக்காக சாக்கடைல இருக்கிற அதை சாப்பிட முடியாது. இது தான் நாங்க சொல்றது.ஆனா, நீங்க இன்னும் ஒரு சின்னக் குழந்தயோட பிடிவாதத்தோட அடம் பிடிக்குறீங்க. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்.

  ReplyDelete
 28. காஞ்சிவரம் படத்தை விட்டு விட்டீர்களே,அதை யாரெல்லாம் பார்த்தீர்கள்?பாலு மகேந்திரா கூட சந்தியா ராகம்,வீடு போன்ற படங்களை எடுத்துள்ளார்.அதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்.அண்மையில் இணையத்தில் வாசித்த விடயம் வண்ண வண்ண பூக்கள் திரைப்படம் எடுக்கும் போது பாலு மகேந்திரா தன்னுடைய ஆபீஸ் வாடகையை ஆறு மாதம் கட்டாமல் பணமின்றி இருந்தாராம்.நல்ல படங்களை எடுப்பவர்களின் நிலை இது தான்.
  13 வருடங்களை கிடப்பில் கிடக்கும் மருதநாயகம் வெளி வரும்போது சிலர் புரிந்துகொள்வார்கள் கமலின் அருமையை.
  இந்த படத்தின் கதைக்கு பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

  "Veteran Tamil actor Kamal Haasan some years back started shooting the movie Maruthanayagam portraying this character in English, French, and Tamil languages. But the film was stopped for the time being or almost dropped mainly because of the protest from large section and scholars stating that Yusuf Khan has looted, plundered the villages in Palayams, Madurai and Thirunelveli and allowing his troops to unleash atrocities against the women in these villages, has not made him a folk hero like the film is trying to portray or he is neither a freedom fighter like Veerapandya Kattabomman, Oomaidurai or Pulithevan, whereas he fought with British due to his political reasons and enmity with the Arcot Nawab and his marginalisation within the Nawab's army by Mahfuz Khan."

  http://en.wikipedia.org/wiki/Muhammed_Yusuf_Khan

  ReplyDelete
 29. அன்புடன் நண்பருக்கு நான் ரெம்ப சாதரணமானவன் ஹாலிவூட் படம் எப்பவாச்சும் தான்!!!!அதுவும் ஒன்னு புரியாது ????
  ஆனா அந்த மனுஷன் கமல் நடிச்ச மகாநதில அந்த பொண்ணு பார்த்து கதறுவதும் அந்த பெண் வீட்டில் தூங்கும் போது கனவு கண்டு அலறுவது அதை உண்மைல ஒரு பெத்த தகப்பன் அனுபவித்து துன்பபடுவது நடிசிருக்காரு!!! எங்கே இந்த காபி அடிசிருகரு எழுதின நண்பர்களை ஒரு டைலாக் பேசி அது மாதிரி நடிக்க சொல்லுங்க பார்க்கலாம் ஹாலிவோட் என்ன கொம்பனா ?? அவனும் எத்தனியோ காபி அடிச்சிருப்பான் நமக்கு தெரியாது? என்னுடைய நண்பன் இந்த படம் பார்க்கா போகு முன் சொன்னான் ஏய் கைல துண்டு கொண்டு போ அழுது ஆர்பாட்டம் பண்ணாதே ??? ஆகா சரியான மனிதரை பற்றி நண்பரே நீங்க சரியாகத்தான் எழுதி உள்ளீர்கள் நன்றி...

  ReplyDelete
 30. அண்ணே,
  உங்க எழுத்த ரொம்ப நாளா படிச்சிகிட்டு இருக்கேன். நீங்களும் உண்மை தமிழனும் தான் என்னோட ஆதர்ச பதிவர்கள். வேற யாரவது இருந்த பின்னூட்டம் போட்டு இருக்க மாட்டேன்.

  கமல் பத்தி எழுத ஆரமிச்சு எங்கயோ போயிட்டீங்க. இதுல நான் கமல் பத்தி எழுத போறது இல்ல. ஒன்னே ஒன்னு தவிர, மகளிர் மட்டும் படம் 9 to 5 படத்தோட தழுவல்/காப்பி.

  நீங்க கமல முன்னாடி வெச்சு தமிழ் சினிமாவோட தப்பு காரியங்கள justify செய்யறீங்க.
  உங்க பதிவுல நெறைய விஷயம் இருக்கு.
  முதல்ல, என்கிட்டே rights வாங்க காசு இல்ல, அதனால தப்பு இல்லைங்கறீங்க. காசு இல்லனா ஏன் அந்த கதைய எடுக்கறீங்க? யாரைச்சும் கெஞ்சினான்களா? சொந்தமா படம் எடுக்க தெரியலைன படம் எடுக்காந்தீங்க, இல்ல தெரிஞ்சா, சொந்தமா முயற்சி பண்ணுங்க.
  ரெண்டாவது, உலக சினிமாவ அறிமுகபடுதறதா சொல்றீங்க. அந்த original கலைஞனும் வியர்வை சிந்தி தானே சம்பாதிக்கறான். இங்க சினிமா காரன் படர கஷ்டத்தைதானே அவனும் பட்டு மேல வந்து இருப்பான்? இல்ல, atleast thanks to, அப்படியாவது போடணும் இல்ல, நேர்மையா இருந்தா? அப்பறம் என் திருட்டு VCD க்கு
  குய்யோ முறையோநு கத்தனும்? அவனும் தமிழ் சினிமாவ எல்லாருக்கும் அறிமுக படுத்தறதா விட்டு இருக்கா வேண்டியதுதானே?
  மூணாவது, பத்து ரூபா குடுத்துட்டு பேசற பேச்சை பாருன்னு நீங்க எழுதறது உங்களுக்கே நியாயமா இருக்கா? பாத்து ரூபாயும் நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசுதானே? நீங்க எவ்வளவு வரி கட்டினாலும் கோடி ரூபா ரோட்ல போவும்போது பள்ளம் இருந்தா ரோடு போடறவன திட்றது இல்லையா? இல்ல நம்ம கோடி ரூபாயா கட்டினோம், வாய மூடிகிட்டு போவிங்கள?
  நாலாவது, நல்ல படம் எடுத்த ஓடாது. எல்லா நல்ல படமும் தோத்தது இல்ல. மோசமான படம் எல்லாம் ஜெயிச்சது இல்ல. எல்லா தொழில்ல இருக்கற பிரச்சனை இது. ஹோட்டல் வெச்ச கூட, நல்ல சாப்பாடு போட்ட கூட, இழுதி மூட வேண்டியதா இருக்கு. மக்கள் மேல குற்றம் இல்ல.
  அஞ்சாவது , தொழில் தெரிஞ்சாதான் விமர்சனம் பண்ணனும்னா ,அவங்க அவங்க தொழில பத்தி அவங்கதான் பேசணும். அரசியல பத்தி கூட பேச முடியாது.
  அஞ்சாவது, சினிமா உங்களுக்கு ஒஸ்தி. எல்லாருக்கும் இல்ல. producer/consumer relationship. அவ்வளவ்தான்.

  ReplyDelete
 31. Go Watch What about Bob.Its not an inspiration but a scene by scene copy.Lets call it Movie plagiarism.
  Al Pacino,Bill Murray,Tom Hanks are way better actors than Kamal Hasan and its unfair to compare them too.

  ReplyDelete
 32. காப்பி ரைட்ஸ பத்தி பேசற மக்களுக்கு சில கேள்விகள்
  --------------------------------------------------
  1. நீங்க படிக்கறப்ப எப்பவாது காப்பி அடிச்சுருக்கிங்களா ?

  இதுக்கு பதில் ஆமாம் அப்படின்னா மேல படிங்க.. இல்லிங்க நான்லாம் ரொம்ப நல்ல பையன் அப்படின்னா அப்படியே ஒடி போயிருங்க.. இதுக்கு மேல படிச்சா சாமி உங்க கண்ண குத்திரும்.

  2. உங்க பதில் ஆமாம்னா அடுத்த கேள்வி... பரிட்சைல காப்பி அடிச்சு முடிச்சு பேப்பர கட்டி கொடுக்கறப்ப பரிட்சை பேப்பருல இது நான் முன்னாடி இருக்கறவன பார்த்து எழுதினது (அ) நான் படிச்ச நோட்ஸ்ல இருந்த நான் அப்படியே எழுதிருக்கேன் எதுவுமே ஏன் சொந்த சரக்கு கிடையாது அப்படின்னு வாக்குமூலம் கொடுத்தீருக்கீங்களா ?

  இதுக்கு பதில் ஆமாம் அப்படின்னு சொல்றவங்க மட்டும் இனிமே காப்பி ரைட்ஸ பத்தி பேசனும்.. இல்லின்னு யாராவது சொன்னிங்கன்னாலோ இல்ல என்ன லாஜிக் இல்லாத கேள்வின்னு சொன்னிங்கனாலோ அப்புறம் அந்நியன் ஆயிருவேன்.. திரும்பி பார்க்காம் ஒடிருங்க....

  ReplyDelete
 33. சின்ன கதை சொல்றேன்.

  ஒரு ஊர்ல ஒரு அம்மா இருந்தாங்க...அவங்களுக்கு ரெண்டு பசங்க...மூத்தவனுக்கும் சின்னவனுக்கும் 15 வயசு வித்தியாசம். அம்மா ரெண்டு பேருக்கும் நிறைய விசயம் சொல்லிக்குடுக்கிறாங்க, சந்தோசப்படுத்துராங்க, அப்பபபோ சில அறிவுப் பூர்வமான விசயங்களும் சொல்லிக்குடுக்குறாங்க...தீடீர்ன்னு ஒரு நாள் அண்ணன் சொல்றான், தம்பி இது நம்ம உண்மையான அம்மா இல்ல, இது நம்மளோட வளர்ப்பு அம்மா, உண்மையான அம்மா வெளிநாட்டில் இருக்காங்கன்னு புள்ளி விவரத்தோட சொல்றான்.

  அண்ணன் சொன்ன மாதிரி இவங்க உண்மையான அம்மா இல்லைன்னாலும் நமக்கு எந்தக் குறையும் வைக்க்ல, நமக்கு எந்த கெடுதலும் பண்ணலை. நமக்கு புது புது விசயங்கள் சொல்லி குடுத்திருக்காங்க, நம்மை உணர்ச்சிவசப்பட, ஆச்ச்ர்யப்பட, ஆனந்தப்பட வச்சிருக்காங்க...

  இப்போ உண்மையான அம்மா யாருன்னு தெரிஞ்சாலும், இந்த அம்மாவ வெறுக்க முடியாது! ஏன்னா எங்களைப் பொறுத்த வரை இந்த அம்மா தான் எங்களுக்கு எல்லாம் சொல்லி குடுத்தவங்க. புது அம்மா மேல இனி பாசம் வச்சாலும், பழைய அம்மாவை வெறுத்து ஒதுக்க முடியாது...!

  ReplyDelete
 34. பொதுவாக சொல்கின்றேன்...

  நாலு படம் வேண்டுமானால் நல்லபடம் ஓடி இருக்கலாம்.. ஆனால் ஓடாத படங்கள் சொன்னால் அது பெரிய லிஸ்ட் அதனை பற்றி படித்து பின்னுட்டம் இடுபவர்களே.... சொல்லுவார்கள்...ஓடிய நல்ல படங்கள் கமர்சியல் படத்துக்கு கொடுத்த வசூல் தொகையை கொடுத்தனவா என்பது என் கேள்வி...???

  தவமாய் தவம் இருந்து பாராட்டினாங்க.. ஆனா பணம் வேனும்.. படம் எடுக்க டப்பு வேனும்... பாராட்டி மாலை போடுவது மட்டும் வெற்றி அல்ல.. மற்றபடி சொல்ல வேறென்ன...

  ReplyDelete
 35. பாந்தம் மோகன் உங்க கதை நல்லா இருந்துச்சு... ரொம்பவே ரசிச்சேன்..

  ReplyDelete
 36. நண்ப்ர் பூச்சான்டிக்கு... பத்துரூபாய் கொடுத்துட்டு பேசவேண்டாம் என்ற தொனியில் சொல்லவில்லை.. சினிமாவும் ஒரு தொழில்தான்...ஆனால் அதை இலகுவாக யார் கேள்வி கேட்கலாம் மற்ற தொழிலில் அப்படி இல்லை என்பதே என் கருத்து...

  ReplyDelete
 37. சினிமாவை யாரும் கேள்வி கேட்கலாம்.. ஆனால் மற்ற தொரிலகளில் அப்படி இல்லை என்பதே கருத்து....பத்து ரூபாய் உழைத்து சம்பாதிப்பது கஷ்டம் என்பதை அறியாதவன் அல்ல,...

  ReplyDelete
 38. ஜாக்கி அண்ணே.... ஒரே குஜால இருக்குதன்னே.... ரொம்ப டெண்ஜன் ஆய்யிடிங்க போல...... கமலே ஆனந்த கண்ணீர் விட்டு இருப்பார்.....!!!சரி.... காப்பி ரைட்ஸ வாங்க வேண்டாம்... இது எல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனு வச்சுக்குவோம்... அதை கூடவா போட முடியாது...
  இங்கிலீஷ் படத்தில் எல்லாம்.. "based on" அல்லது "inspiration on" என்று போடுவார்களே... அப்படி... காப்பி ரைட்ஸ வாங்குவது மிகவும் சுலபமே... "சோனி நிறுவனம் வளர்த்த கதை" tranlated from "Made in Japan" கண்ணதாசன் பதிப்பகம்.. .முன்னுரை படியுங்கள்.... இதில் வரிக்கு வரி ரஜினியிடம் பகடி வேறு.... புள்ள குட்டி படிக்கிறது இருக்கட்டும்... முதலில் நீங்க போய் படிங்கப்பா...!!! ஆனாலும்... உங்கள் கட்டுரை படித்தேன் ரசித்தேன்.... மென்மேலும் வளர வாழ இறைவன் அருளை வேண்டி கொள்கிறேன்.... வாழ்த்துக்கள்....!!!
  அன்புடன் அமல்

  ReplyDelete
 39. //Phantom Mohan said...
  சின்ன கதை சொல்றேன்.

  ஒரு ஊர்ல ஒரு அம்மா இருந்தாங்க...அவங்களுக்கு ரெண்டு பசங்க...மூத்தவனுக்கும் சின்னவனுக்கும் 15 வயசு வித்தியாசம். அம்மா ரெண்டு பேருக்கும் நிறைய விசயம் சொல்லிக்குடுக்கிறாங்க, சந்தோசப்படுத்துராங்க, அப்பபபோ சில அறிவுப் பூர்வமான விசயங்களும் சொல்லிக்குடுக்குறாங்க...தீடீர்ன்னு ஒரு நாள் அண்ணன் சொல்றான், தம்பி இது நம்ம உண்மையான அம்மா இல்ல, இது நம்மளோட வளர்ப்பு அம்மா, உண்மையான அம்மா வெளிநாட்டில் இருக்காங்கன்னு புள்ளி விவரத்தோட சொல்றான்.

  அண்ணன் சொன்ன மாதிரி இவங்க உண்மையான அம்மா இல்லைன்னாலும் நமக்கு எந்தக் குறையும் வைக்க்ல, நமக்கு எந்த கெடுதலும் பண்ணலை. நமக்கு புது புது விசயங்கள் சொல்லி குடுத்திருக்காங்க, நம்மை உணர்ச்சிவசப்பட, ஆச்ச்ர்யப்பட, ஆனந்தப்பட வச்சிருக்காங்க...

  இப்போ உண்மையான அம்மா யாருன்னு தெரிஞ்சாலும், இந்த அம்மாவ வெறுக்க முடியாது! ஏன்னா எங்களைப் பொறுத்த வரை இந்த அம்மா தான் எங்களுக்கு எல்லாம் சொல்லி குடுத்தவங்க. புது அம்மா மேல இனி பாசம் வச்சாலும், பழைய அம்மாவை வெறுத்து ஒதுக்க முடியாது...!
  Monday, September 13, 2010 8:02:00 PM//


  Excellent, வழி மொழிகிறேன்

  ReplyDelete
 40. ஜாக்கி எல்லாரும் உலக படத்த நம்ம நாட்டுல அறிமுகப்படுத்துனா போதுமா நாம எப்ப நம்ம படங்களை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துறது?

  ReplyDelete
 41. என்னது எது சாருனிவேதிதா எப்படி பிரபலமானாரோ அந்த வழியில் ஜாக்கி

  ReplyDelete
 42. ஹாய் ஜாக்கி... இதோ எனது பதில்கள்.

  1. //இன்ஸ்பிரேஷனுக்கு காபிக்கும் வித்யாசம் இருக்கும்.. அதைவிட ஈ அடிச்சான் காப்பிக்கு நிறைய வித்யாசம் இருக்கு.... அது புரியாமல் நிறைய கேள்விகள்.. சினிமாவின் ஒன்லைன் வைத்து கதை செய்வது என்பது கதை திருட்டு,

  அறிவு திருட்டு ஆகாது நண்பர்களே......

  உதாரணத்துக்கு ஏர்ப்போர்ட்ல மொழி தெரியாதவன் விமான நிலையத்துல மாட்டிக்கினவன் கதி என்ன??? ஸ்பில்பெர்க் எடுத்த டெர்மினில் படம்..

  கணவன் கடத்தபட்டு விட்டான்...மொழி தெரியாத ஊர் ஒரு தமிழ் பெண்ணின் கதி.. இது ரோஜா... இரண்டு பேருக்கும் மொழி தெரியாது,இரண்டும் உண்மைகதை அதனால் இது காப்பி என்று சொல்வது போல் இருக்கு... உங்கள்

  வாதம்...//

  பதில் - அதான் என்னுடைய முதல் பதிவிலேயே சொல்லிவிட்டேனே.. தேவா, S.A ராஜ்குமார் செய்தால் அது காப்பி. கமல், மணிரத்னம் ஆகியவர்கள் செய்தால் அது இன்ஸ்பிரேஷன். சரி தானே :-)

  ஏங்க.. ஏர்போர்ட் & ரோஜா ரெண்டும் ஓண்ணுன்னா நான் சொன்னேன்? என்னுடைய பதிவை சரியாகப் படித்துப்பார்த்தால், ராஜபார்வை, குணா, சதி லீலாவதி, தெனாலி, மகளிர் மட்டும், அன்பே சிவம், இந்திரன் சந்திரன், எனக்குள் ஒருவன், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் இன்னும் சில படங்கள் ஆகிய இவ்வளவு படங்களையும் அவற்றின் ஆங்கில மூலப்படங்களுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன். அதனை எல்லாம் விட்டுவிட்டு, இதில் நான் கொடுக்கவே கொடுக்காத
  இரண்டு சம்மந்தமே இல்லாத படங்களை உதாரணம் கொடுத்தால் எப்படி?

  இந்த ஈயடிச்சாங்காப்பிகள் எல்லாமே ஒன் லைன் திருட்டு அல்லவே அல்ல. அப்பட்டமான காப்பிகள். இதை, இப்படங்களைப் பார்த்தாலே ஒப்புக்கொள்ள முடியும் (நடுநிலையான மக்கள் ஒப்புக்கொள்வார்கள். கமல் விசிறிகள் மாட்டார்கள். நீங்க எப்புடி?).

  2. //ஆனால் கமல் என்னைக்காவது சீன் பை சீன், டயலாக், ஸ்டோரிபோர்ட் எல்லாம் அப்படியே வரிக்கு வரி வைத்து எடுத்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளலாம்.....கமல் மகாநதியில் சுகன்யாவை அழுதுக்கினே கிஸ்
  பண்ணது மாதிரி அதே சீன் எத்தனை ஹாலிவுட்படத்தில் வந்து இருக்கின்றது தெரியுமா? என்று கேள்வி கேட்பவர்கள்தான் நீங்கள்...//

  :-). இதைத்தான் மேலே என்னுடைய பதில் நிர். ஒன்றில் கொடுத்திருக்கிறேன். அப்பட்டமான காப்பிகள் தான் இவை. இன்ஸ்பிரேஷன் இல்லவே இல்லை. வேண்டுமென்றால் ஒரு ஒலிபெருக்கி எடுத்து வந்து, உங்கள் காது பக்கத்தில் நின்று
  கத்தட்டுமா ? :-). ஏங்க.. அப்பட்டமான காப்பியை இன்ஸ்பிரேஷன் என்றுதான் உங்கள் அகராதியில் எழுதிவைத்திருக்கிறீர்களா? அது சரி.. காப்பியெல்லாம் தேவா செய்வது மட்டும்தானே ;-)

  3. //இரண்டாவது அப்படி கமல் ஈ அடிச்சான் காப்பி அடிச்சி இருந்தாருன்னா..படம் எடுத்த டைரக்டர் மற்றும் அதை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்.. அவர் மேல கேசு போடட்டும்....அதை எல்லாம் பதிவா போடுவதுக்கு பதில் இந்த இன்டர்நெட் யுகத்தில் சம்பந்த பட்ட படநிறுவனங்களுக்கு அனுப்பி வையுங்கள்...அவர்கள் அந்த படத்தின் திரைக்கதை பார்த்தாலே கேஸ் போடமாட்டார்கள் என்பது வேறு விஷயம்...//

  அவர்களுக்கு இது தெரிந்து, கேஸ் போட்டால், கமலின் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்பதே உண்மை ;-)

  4. //கமல் ஒன்னும் மிசஸ்டபுட்பயர் படத்தை வசனம் முதற்கொண்டு மாற்றாமல் காட்சிமுதற்கொண்டு அப்படியே எடுத்து எபிலிம் பை கமல் என்று பொட்டுக்கொள்ளவில்லை... ஒன்லைன் ஒன்றுதான்... ஆனால் அது வேறுபடம்....//

  இதை ஒப்புக்கொள்ளவே முடியாது. ஏனெனில், மிஸஸ். டவுட்ஃபயர் மற்றும் டூட்ஸி ஆகிய இரு படங்களின் காப்பி தான் அவ்வை சண்முகி. ஒன்லைன் என்றால், மேலே நீங்கள் கொடுத்தீர்களே ஒரு உதாரணம்.. ரோஜா மற்றும் டெர்மினல்
  ஆகிய சம்மந்தமே இல்லாத படங்கள் ஒன்று என்று.. அந்த மாதிரி சொல்கிறீர்களோ? :-)

  5. // நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை... இப்போது தமிழ்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு
  மட்டும் சாத்தியம் இருக்கின்றது....அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்....
  ///

  //போன பதிவில் இந்த வரியை யாரும் படிக்காம திரும்ப திரும்ப கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்க.... மேலுள்ள ரைட்ஸ் பிரச்சனையை ரொம்ப விரிவா நமது பதிவர் நண்பர் செந்தில்வேலன் நண்பரது வலையில் பின்னுட்டத்தில் சொல்லி
  இருக்கின்றார்....//

  அய்யா... நான் திரும்பத்திரும்ப எழுதிவருவது என்னன்னா, காப்பியே அடிக்கவேணாம்னுதான்.. க்ரெடிட் போடு க்ரெடிட் போடுன்னு சொல்லல. எதுக்கு காப்பியடிக்கணும், அப்பறம் எதுக்கு அது தன்னோட சொந்தப்படம் மாதிரி உதார்
  உடணும்னுதான் சொல்லிகினே இருக்கேன். ஏன்? கமல் தான் ‘ஒலகநாயகன்’ ஆயிற்றே? இன்ஸ்பிரேஷன் கூட இல்லாம, சொந்தமா அவரால படமே எடுக்க முடியாதா? :-)

  ReplyDelete
 43. 6.//உங்களுக்குதான் பழி போடுவது ஈசியாக வருமே....அதையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.....//

  ஹாஹ்ஹா.. ;-) என்னுடைய பதிவில் பழி போடுவது என்ற விஷயமே இல்லை. ஆதாரத்தோடு ஈயடிச்சாங்காப்பி லிஸ்டைக் கொடுத்துள்ளேன். நான் பழி போடுகிறேன் என்றால், நீங்கள் வெட்டி சால்ஜாப்புகளை (அர்த்தமே இல்லாத மொக்கை உதாரணங்களோடு) சொல்லிக்கொண்டே வருகிறீர்கள் என்று சொல்லலாமா? :-)

  7. //கமல் எந்த படத்தில் இருந்து உருவினாரோ அந்த படத்தின் இயக்குனர் கேட்கட்டும்... கமல் கண்டிப்பாக போடுவார்//

  எங்கபோயி? இயக்குநர் கேட்டால், அப்புறம் கமல் எங்காவது அப்ஸ்காண்ட் தான் ஆகவேண்டும். சொத்தே எழுதிவைக்க வேண்டி இருக்கும் அய்யா ;-) .. இதுவரை அவர் அடித்த காப்பிகளுக்கு ;-)

  8. //பிப்ளிலைவ் பிப்ளிலைவ்னு அமிர்கான் படத்தை தலையில தூக்கி வச்சிக்கினு ஆடறிங்களே... இதுக்கு முன்னடியே பலவருஷத்துக்கு முன்னையே வேலைக்கு போற பெண்கள் படும் கஷ்டத்தையும், வேலைபார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை, மகளிர் மட்டும்னு படம் எடுத்துட்டோம்...அது ரொம்ப சின்ன பட்ஜெட் படம் தான்.... அந்த படத்துல நாசர் கேரக்டர் செம வெயிட்.. கமல் அதை புடுங்கி நடிக்கலை.. ...நாகேஷ் கேரக்டர் அதை விடவெயிட்டான ரோல் அதை கமல் புடுங்கி நடிக்கலை.......//

  ஏன்னா, அந்த மகளிர் மட்டும் படமே ஒரு ஈயடிச்சாங்காப்பி. வரிக்கு வரி. முடிந்தால், அதன் மூலப்படத்தைப் பாருங்கள். அப்புறம் தெரியும் ;-)
  நீங்க என்னோட லிஸ்ட்டைப் படிக்கவே இல்லையா? :-). லிஸ்டே படிக்காம பதிவு எதுக்கு ? :-)


  9. இதுக்கு அப்புறம் நீங்க எழுதியிருக்குற எந்த விஷயமுமே, அதுக்குப் பதில் சொன்னா, பயங்கர காமெடியா தான் இருக்கும் ;-) .. அதுக்கு ஒரு பதிவு போடுறேன். அதுல விவரமா பேசப்படும் ;-)

  கடைசியா, கமல் அடிச்ச காப்பிகளைப் பத்தி சொன்னவுடனே வெகுண்டு போயி பதில் பதிவு போடுறீங்க இல்லையா? அந்த நேரத்துல உக்காந்து, காப்பியடிப்பதன் தீமைகள் பத்தி நீங்க ஏன் யோசிக்கக்கூடாது ? :-) ஏன் இந்த வெறித்தனமான சப்போர்ட்? நீங்க பாக்யா உதாரணத்துக்குக் கொடுத்த பதிலை, நீங்களே ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும் ;-) .. பதிவில் சந்திப்போம் ;-)

  பி.கு 1 - இது ஒரு ஆரோக்கியமான விவாதம் மட்டுமே. அது என்னோட பாலிஸி. ஆனா, உங்க பதிவைப் பார்த்தா, இதை பெர்சனலா எடுத்துக்கிட்டு, கோபப்பட்டிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது ஜாக்கி. முதல் கமெண்ட்டை மறுபடி போடுறேன் (இது காப்பியில்ல. இன்ஸ்பிரேஷன் மட்டுமே .. ஹாஹ்ஹா)..

  என் இவ்வளவு கோபம்? :-)

  பி.கு 2 - எனக்கு, ஈயடிச்சாங்காப்பி அடிச்சி, அத வெளில சொல்ல பயந்துக்கினு, பெர்ர்ர்ரிய நடிகன் மாதிரி உதார் உட்டுகினு திரியுற கமல் மாதிரி பெருச்சாளிகளைக் கிழிக்க நிறைய நேரம் இருக்கு.. ;-) ஸோ, விவரமா பதிவு போடரேன்.. நன்றி.

  ReplyDelete
 44. நெத்திய‌டி !!! சுப்பர்

  ReplyDelete
 45. //இந்த விவகாரம் எனக்கு அலுப்பூட்டுது. உங்க பதிவின் தொனி கடுப்பாக்குது. விவாதம் நடக்குறப்ப,அதை ஏன் பர்சனல் பைட் ஆக்க பிரியப்படுறீங்க?

  ஒரு சின்னப் பொண்ணு கைல இருந்த மிட்டாய், திடீர்னு சாக்கடைல விழுந்துருச்சு..
  அது மிட்டாய் தான்.ஆனா,அதுக்காக சாக்கடைல இருக்கிற அதை சாப்பிட முடியாது. இது தான் நாங்க சொல்றது.ஆனா, நீங்க இன்னும் ஒரு சின்னக் குழந்தயோட பிடிவாதத்தோட அடம் பிடிக்குறீங்க. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்//

  மேலே இலுமினாட்டி சொல்லியிருக்கும் இந்த விஷயங்களை வார்த்தைக்கு வார்த்தை ஆதரிக்கிறேன். நச் !

  ReplyDelete
 46. ஹாய் கருந்தேள்...

  முதலில் மேலே உள்ளது முழுக்க முழுக்க உங்க பதிவுக்கான எதிர்வினை அல்ல...முதலில் அதைபுரிந்து கொள்ள வேண்டும்...

  எப்போதோ எழுத வேண்டியபதிவு அது நீங்கள் போட்டதால் அதுக்கு நேரம் வந்து கமல் இயக்குனர்கள் காப்பி பதிவு போட்டேன்...

  இந்த பதிவு எனக்கு வந்த பின்னுட்டத்துக்கான எதிர்வினை...உங்கள்பதிவில் எனக்கு பதில் சொன்னவர்களுக்கான பதில் இது...

  நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டிர்கள்.. காப்பி அடிப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு கமல் உருவிய படங்களின் லிஸ்ட் கொடுத்துவிட்டிர்கள்... அதுக்கு பல இன்ஸ்பிரேஷன் என்று சொல்லியாகிவிட்டது...


  இன்ஸ்பிரேஷன் இல்லை காப்பிதான் அது.. என்று சொல்லிவிட்டீர்கள்...

  ஒரு சிலபடங்கள் நிங்க சொன்னது போல் காப்பியா இருக்கலாம்... ஆனா பல படங்கள் இன்ஸ்பிரேஷ்ன்னு சொன்னேன்...

  அப்படியும் இல்லைன்னு இப்ப சொல்லிட்டிங்க...வெல் கமல் காப்பியடித்து, போலி அறிவுஜீவி வேஷம் போட்டு விட்டு அதுக்கு நான் சப்பை கட்டு கட்டியதாக சொல்கின்றீர்கள்..

  அப்படியே ரஜினி,விஜய்,தேவா,ரகுமான்,இளையராஜா, சாரு,ஜெயமோகன், இந்தி பட நடிகர்கள்.. என் எல்லோரையும் நீங்கல் கிழித்து தொங்கவிடுவீர்கள் என்று நம்புகின்றேன்..

  அப்படியே உங்கள் பார்வையில் எந்திரன் என்ன கதை என்று நான் வெயிட்டிங்கில் இருக்கின்றேன்...

  உங்களின் நோக்கம் காப்பி யாரும் அடிக்க கூடாது இதுதான் உங்கள் வாதம்...அது எனக்கு நன்றாக தெரிகின்றது...
  நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்.... செய்வீர்களா?

  உதாரணத்துக்கு என்து மேட்டர் பாக்கியாவில் வந்தது நான் என்ன செய்தேன் பாக்கியாவுக்கு செய்தி அனுப்பினேன்... நண்பர்கள் செய்தி அனுப்பினார்கள்... அடுத்த பதிப்பில் பாக்யா தனது மறுப்பை தெரிவித்து விட்டது...

  அது போல இன்றைய நெட் யுகத்தில் கமல் காப்பி அடித்த படங்களின் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரியை உங்கள் ஆங்கில அறிவுக்கு ரொம்பவும் ஈசியாக கண்டுபிடித்துவிட முடியும்...
  ஆதாரத்தோடு அவர்களிடம் சமர்பித்து கமல் மாதிரி பெரிச்சாளியை கிழித்து தொங்கவிடுவதை பார்க்க ஆசை.... அதை நீங்கள் செய்யவேண்டும்...உங்களுக்கு அந்த தில் இருக்கின்றது.... உங்கள் நண்பர்களுக்கும் அந்த தில் இருக்கின்றது....

  ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிந்து கமலுக்கு ஆப்பு அடித்தால் நிச்சயம் இது போல் தவறு இந்தியாவில் நடப்பது குறையும்.. உங்கள் உண்மையான நோக்கமும் நிறைவேறும்.. அதைதானே நீங்கள் விரும்புவதும் அதுதான்...அதை செய்வீர்கள் என்று நம்புகின்றேன்... தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றும் அரசியல்வாதிகள் அல்ல....

  பக்கத்தில் வந்து காதில் புனல் வைத்து கத்தினாலும் கேட்காமல் போவதற்கு... நிச்சயம் நல்லபபதில் கிடைக்கும்...

  எப்படியும் ஒரு 20 படத்துக்கு மேல் லிஸ்ட் போட்டு இருக்கிங்க... அதுல ஒரு தயாரிப்பு நிறுவனம் கூடவா கேட்காமல் போய் விடும்..

  ஒரு விஷயம் கோபம் என்பது உங்கள் மீது என்று நினைத்து கொள்ளவேண்டாம்... அது எனக்கு பின்னுட்டமிட்டவர்களுக்கான பதில் அவ்வளவே... அதை கோபமாக எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பு இல்லை...

  உங்களை பற்றி கூட நிறைய திட்டி மெயில் வந்தது.. நான்டெலிட்டி விட்டேன்... கோபமாக இருந்து இருந்தால் அதனை வெளியிட்டு இருப்பேன்.. நண்பேன்டா என்று சொல்லி இருக்க மாட்டேன்...

  என் ‘பதிவு முழுக்க முழுக்க உங்கள் பதிவுக்கான எதிர்வினை என்று நீங்கள் எடுத்துக்கொள்ளகூடாது... அது பலருக்கான பதில்....

  இனி நீங்க எத்தனை பதிவு போட்டாலும் அதுக்கு பதில் எனது வாசிப்புமட்டும்தான்....

  ReplyDelete
 47. உங்கள் பார்வையில் கமலும் அவரை போல காப்பி அடித்த பலரின் டப்பா உங்கள் பதிவில் டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆர்வாமாய் இருக்கின்றேன்... அதுக்கு முன் நான் பாக்கியாவுக்கு தெரிவித்தது போல் நீங்கள் லிவுட் கம்பெனிகளுக்கு மெயில் தட்டிவிட காத்து இருக்கின்றேன்,...

  நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள்.... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தாங்கள் எல்லாதுறைகளிலும் கிழக்க வேண்டும்....

  நம்ம தலைவர் ரஜினி சொல்வது போல் கமலை கிழித்தது ஒரு டிரெய்லர்தான்... இன்னும் மெயின் பிக்சருக்காக வெயிட்டிங்...

  அதே போல் கருந்தேள்..கீழே இருப்பது.. உங்கள் பதிவில் நீங்கள் போட்ட பின்னுட்டம்.... நல்லா படிங்க....

  ///பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. பதில் பின்னூட்டம் போட்டு மாளவில்லை என்பதால், அதில் நண்பர்கள் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு என் பதில் இதோ:

  1. கமல் செய்வது தேசசேவை.. அயல்நாட்டுப் படங்களை அவர் காப்பியடிப்பது, எங்களுக்கு அந்த நல்ல படங்களைப் பற்றித் தெரியப்படுத்துவதற்காகத்தான்.

  பதில் - அப்படியென்றால், டைட்டிலில், நன்றி - என்று அந்தப் படத்தின் பெயரைப் போடலாமே? அப்புறம் ஏன் ஜீனியஸ்தனமாக, அந்தப் படத்தை என்னமோ தானே கனவுகண்டு எடுத்ததாக ஒரு வெட்டி பந்தா? கமலின் நோக்கம் மிகவும் சிம்பிள். ஒரு படம் நன்றாக இருக்கிறதா? அடி காப்பியை ! அவ்வளவே ;-)

  2. கமல், இந்தியப்படங்களை ரீமேக் செய்தார். அப்போது க்ரெடிட் கொடுக்கவே செய்தார்.. ஆனால் ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்தபோது, க்ரெடிட் கொடுக்காததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

  பதில் - கமல், இந்தியப்படங்களை ரீமேக்கியபோது, அவர் மட்டும் க்ரெடிட் கொடுக்காமல் விட்டிருந்தால், அடி பின்னியிருப்பார்கள் ;-). அதுதான் புத்திசாலித்தனமாக க்ரெடிட் கொடுத்துவிட்டார். அவரது குயுக்திக்கு இது ஒரு எக்ஸாம்பிள் ;-)////////

  மேல என்ன சொல்லி இருக்கிங்க இரண்டு நாளைக்கு முன்ன... காப்பியடிச்சாலும் பேர் போடுன்னு கமல்கிட்ட சொல்லி இருக்கிங்க...

  இன்னைக்கு எனக்கு போட்ட பின்னுட்டத்துல 5வது (பாயின்ட்)காலத்துல... கமல் மாதிரியே புரியாத பாஷையில வெல் நான் சொல்லறது என்னன்னா????

  /////அய்யா... நான் திரும்பத்திரும்ப எழுதிவருவது என்னன்னா, காப்பியே அடிக்கவேணாம்னுதான்.. க்ரெடிட் போடு க்ரெடிட் போடுன்னு சொல்லல. எதுக்கு காப்பியடிக்கணும், அப்பறம் எதுக்கு அது தன்னோட சொந்தப்படம் மாதிரி உதார்
  உடணும்னுதான் சொல்லிகினே இருக்கேன். ஏன்? கமல் தான் ‘ஒலகநாயகன்’ ஆயிற்றே? இன்ஸ்பிரேஷன் கூட இல்லாம, சொந்தமா அவரால படமே எடுக்க முடியாதா? :-) /////////

  அவரு சொந்தமா படம் எடுக்க முடியுமோ இல்லையோ... நீங்க தயாரிப்பு நிறுவனத்துக்கு மெயில் அனுப்பும் போது இப்படி சொதப்பலா வழ வழ கொழ கொழன்னு அனுப்ப வேண்டாம்... நாமத குழம்பலாம்...ஹாலிவுட்காரன் குழம்ப கூடாது...

  வரலாறு மிக முக்கியம் கருந்தேள்.....

  போங்க கருந்தேள் நீங்க நேத்து கிரேடிட் டைட்டிலில் கமல் காப்பியடிச்ச படத்தின் ரைட்டர் பேர் போடனும் என்று சொன்னதால் மாங்கு மாங்குன்னு நான் நிறைய நேரம் செலவழித்து விளக்கம் கொடுத்த பதிவு விணாகிவிட்டது...

  இப்ப பாருங்க அப்படியே மாத்தி சொல்லிட்டிங்க...

  உங்களை போல் வரிக்கு வரி என்னால் பதில் போட முடியாது.. எனக்கு படபிடிப்பு இருக்கும் காரணத்தால் இந்த பதிலை இத்துடன் முடித்து கொள்கின்றேன்...இனி இந்த விவாதத்தின் எனது கடைசி பதில்

  பிரியங்களுடன்
  உங்கள் நண்பேன்டா
  ஜாக்கிசேகர்...

  ReplyDelete
 48. ஓரே பின்னுட்டம் போட்னும்னு நினைச்சேன்... ஆனா கூகுள் ஒத்துக்கலை அதான் இரண்டா போட்டு இருக்கேன்...

  ஜாக்கி..

  ReplyDelete
 49. நல்ல பதிவு ஜாக்கி.

  ReplyDelete
 50. ஜாக்கி சாரு (சார் என்பதை பேச்சு வழக்கிலேயே குறிக்கிறேன். வேறெதும் இல்லை),

  நடுநிசி வரை உக்காந்து கமெண்ட் எழுதும் நேரத்தில் உருப்படியாக ஒரு படம் பார்த்து அறிமுகப் படுத்துனா நல்லா இருக்குமே...

  “நண்பேன்டா” நித்யன்.

  ReplyDelete
 51. கவுண்டமணி சொல்வது போல் சோ சேட்......

  ReplyDelete
 52. //அப்படியே ரஜினி,விஜய்,தேவா,ரகுமான்,இளையராஜா, சாரு,ஜெயமோகன், இந்தி பட நடிகர்கள்.. என் எல்லோரையும் நீங்கல் கிழித்து தொங்கவிடுவீர்கள் என்று நம்புகின்றேன்..//

  காப்பியடிப்பதே தப்பு என்று நான் சொல்லி வருகையில், அது யாராக இருந்தால் தான் என்ன? யார் செய்தாலும் அது தப்பு தான். இதுதான் என் வாதம் ஜாக்கி. அதில் எந்த மாற்றமும் இல்லை.

  //அது போல இன்றைய நெட் யுகத்தில் கமல் காப்பி அடித்த படங்களின் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரியை உங்கள் ஆங்கில அறிவுக்கு ரொம்பவும் ஈசியாக கண்டுபிடித்துவிட முடியும்...
  ஆதாரத்தோடு அவர்களிடம் சமர்பித்து கமல் மாதிரி பெரிச்சாளியை கிழித்து தொங்கவிடுவதை பார்க்க ஆசை.... அதை நீங்கள் செய்யவேண்டும்...உங்களுக்கு அந்த தில் இருக்கின்றது.... உங்கள் நண்பர்களுக்கும் அந்த தில்

  இருக்கின்றது....//

  இதைத்தான் நான் எதற்குச் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன். உங்கள் பதிவு காப்பியடிக்கப்பட்டதில், நீங்கள் அதைச் செய்தீர்கள் ;-).ரைட்டு. ஓகே.. ஆனால், கமல் அடிக்கும் ஈயடிச்சாங்காப்பிகளைப் பத்தி நான் எதற்கு

  ஹாலிவுட்டுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்று எழுதுகிறீர்கள்? :-) இது, கமலைப் பற்றி நன் எழுதியதற்கு, உங்களுக்குள் இருக்கும் கமல் வெறியனின் ரியாக்‌ஷன் என்று எடுத்துக்
  கொள்ளவா? :-). கமல் போன்ற ஒரு ஆள் இந்த ஈயடிச்சாங்காப்பி செய்துகொண்டிருப்பதை, நான் ஏன் ஹாலிவுட்டுக்கெல்லாம் தெரியப்படுத்தவேண்டும் என்று சொல்கிறீர்கள் ? :-) எதையோ ஒண்ணை லாஜிக்கே இல்லாமல் பேச வேண்டியது

  ;-) ..இதெல்லாம் லாஜிகலா ஒரு பாயிண்டுன்னே சொல்ல முடியாது ஜாக்கி ;-). எனது பதிவுகளில் போட்டுக் கிழித்ததே போதும். . அதை நம் மக்கள் படித்து, உண்மையைத் தெரிந்து கொண்டார்கள் இல்லையா? இனி அட்லீஸ்ட் இந்தாள்
  காப்பியடிக்கும்போது, பாராட்டாமல், அதை விமர்சனம் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனக்கு.

  //ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிந்து கமலுக்கு ஆப்பு அடித்தால் நிச்சயம் இது போல் தவறு இந்தியாவில் நடப்பது குறையும்.. உங்கள் உண்மையான நோக்கமும் நிறைவேறும்.. அதைதானே நீங்கள் விரும்புவதும் அதுதான்...அதை

  செய்வீர்கள் என்று நம்புகின்றேன்... தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றும் அரசியல்வாதிகள் அல்ல....//

  இதுதான் எனது நோக்கம். Plagiarism must be banned. அதனை எந்தத் தயாரிப்பு நிறுவனமாவது செய்தால், இனி இந்தக் குற்றங்கள் குறையும்.

  ReplyDelete
 53. //உங்கள் பார்வையில் கமலும் அவரை போல காப்பி அடித்த பலரின் டப்பா உங்கள் பதிவில் டான்ஸ் ஆடுவதை பார்க்க ஆர்வாமாய் இருக்கின்றேன்... அதுக்கு முன் நான் பாக்கியாவுக்கு தெரிவித்தது போல் நீங்கள் லிவுட் கம்பெனிகளுக்கு மெயில்

  தட்டிவிட காத்து இருக்கின்றேன்,...

  நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள்.... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தாங்கள் எல்லாதுறைகளிலும் கிழக்க வேண்டும்....

  நம்ம தலைவர் ரஜினி சொல்வது போல் கமலை கிழித்தது ஒரு டிரெய்லர்தான்... இன்னும் மெயின் பிக்சருக்காக வெயிட்டிங்...//

  இதப்பார்ரா :-) மறுபடியும், ஹாலிவுட்டுக்கு மெயில் தட்டுன்னு உங்களுக்குள்ள இருக்கும் கமல் வெறியன் எழுந்து ஆட ஆரம்பிச்சிட்டான் ;-)

  தமிழ்நாட்டில் ஈயடிச்சாங்காப்பி அடிப்பது ஒரு தொழில். அதில், ரஜினியில் இருந்து ஆரம்பித்து, கடைக்கோடியில் இருக்கும் ராமநாராயணன் வரை மூழ்கி எழுந்துகொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும்போது, கமலை மட்டும் டார்கெட் செய்து
  நான் ஏன் எழுதினேன் என்பது உங்கள் கேள்வி. ரைட். கமல், மணிரத்னம் ஆகிய இருவரைத் தவிர, பாக்கி இருக்கும் ஆட்கள் யாருமே, இவர்கள் இருவரும் விடும் உதார் அளவு அறிக்கைகளை வீசியதில்லை. ஆஸ்கர் ஆஸ்கர் என்று
  புலம்பிக்கொண்டிருந்த ஒரு பெருச்சாளி, ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியவுடன் வயிறெறிந்து விட்ட அறிக்கையை நீங்கள் படித்தீர்கள் அல்லவா? அதில் அவர் ஆஸ்கரைச் சாடியதுபோல், வேறு யாருமே இதுவரை சாடியதில்லை ;-)..

  மட்டுமல்லாது, ஆரம்பத்தில் இருந்தே கமல் கொடுத்து வரும் பேட்டிகள், அறிக்கைகள் ஆகிய அத்தனையிலுமே அவர் விடாமல் சொல்லிவருவது இதுதான். ‘நான் நல்ல படங்கள் கொடுக்கிறேன்.. என் படங்கள், தமிழ்ப்படங்களுக்கு ஒரு
  உதாரணம் (இது அந்தாளே உளறி, நான் விஜய் டிவியில் பல முறை கேட்டது), ஹா ஹூ’ என்பவை. இப்படி ஈயடிச்சாங்காப்பி அடிக்கும் ஒரு பெருச்சாளிக்கு, படங்கள் பற்றிப் பேசவே அருகதையில்லை என்பது என் கருத்து. இந்தாளும் மற்ற

  சாக்கடைகள் கூடவே சேர்ந்து வாயை மூடிக்கிட்டு உக்கார வேண்டியதுதானே ! அத்தனை பேரும் தான் காப்பியடிக்கிறாகள். எவனாவது இந்தப் பெருச்சாளி வாய் கிழியப் பேசுவது போல் பேசுகிறாரா? இல்லை என்பதே பதில்.

  ஒரு intellectual போர்வையைத் தன்னைச் சுற்றி மூடிக்கொண்டிருக்கும் கமலின் ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நான் பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதன் பலனாகத்தான் எனது கட்டுரை. மற்ற
  காப்பியடிப்பாளர்களைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். ஆனால் கமல் செய்துகொண்டிருக்கும் இந்த விஷயம், பலருக்குத் தெரியாது. அதனால் தான் எழுதினேன் ;-). மணிரத்னத்தை ஏற்கெனவே எனது ‘ராவணன்’ விமர்சனத்தில்

  கிழித்தாயிற்று. ஸோ, அதுதான் ட்ரெய்லர். மெயின் பிக்சர், கமலைக் கிழித்ததே ;-).

  ReplyDelete
 54. //அதே போல் கருந்தேள்..கீழே இருப்பது.. உங்கள் பதிவில் நீங்கள் போட்ட பின்னுட்டம்.... நல்லா படிங்க....//

  ///பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. பதில் பின்னூட்டம் போட்டு மாளவில்லை என்பதால், அதில் நண்பர்கள் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு என் பதில் இதோ:

  1. கமல் செய்வது தேசசேவை.. அயல்நாட்டுப் படங்களை அவர் காப்பியடிப்பது, எங்களுக்கு அந்த நல்ல படங்களைப் பற்றித் தெரியப்படுத்துவதற்காகத்தான்.

  பதில் - அப்படியென்றால், டைட்டிலில், நன்றி - என்று அந்தப் படத்தின் பெயரைப் போடலாமே? அப்புறம் ஏன் ஜீனியஸ்தனமாக, அந்தப் படத்தை என்னமோ தானே கனவுகண்டு எடுத்ததாக ஒரு வெட்டி பந்தா? கமலின் நோக்கம் மிகவும்

  சிம்பிள். ஒரு படம் நன்றாக இருக்கிறதா? அடி காப்பியை ! அவ்வளவே ;-)

  2. கமல், இந்தியப்படங்களை ரீமேக் செய்தார். அப்போது க்ரெடிட் கொடுக்கவே செய்தார்.. ஆனால் ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்தபோது, க்ரெடிட் கொடுக்காததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

  பதில் - கமல், இந்தியப்படங்களை ரீமேக்கியபோது, அவர் மட்டும் க்ரெடிட் கொடுக்காமல் விட்டிருந்தால், அடி பின்னியிருப்பார்கள் ;-). அதுதான் புத்திசாலித்தனமாக க்ரெடிட் கொடுத்துவிட்டார். அவரது குயுக்திக்கு இது ஒரு எக்ஸாம்பிள் ;

  -)////////

  ஏங்க.. நீங்க, நான் அதுல சொல்லியிருக்கும் கேள்வியை வழக்கப்படி படிக்காமலேயே உட்டுட்டீங்க ;-). கேள்வி நம்பர் 1, மற்றும் கேள்வி நம்பர் 2 ஆகியவைகளை நல்லா இன்னொரு வாட்டி படிங்க ;-). அது, நீங்களும் இன்னும் சிலரும்
  எழுதுனதுதான். அதுக்கான பதிலே என்னுடையது. நீங்க, அவர் ஃபாரின் மூவீஸ் காப்பியடிச்சது ஒரு சேவைன்னு எழுதினதுனாலதான், ‘அட மக்களே... காப்பியே அடிக்கக்கூடாதுன்னு தான் நான் சொல்றேன். இதுல, காப்பியடிச்சது ஒரு
  சேவைன்னு சொல்றீங்களே.. அப்ப, அட்லீஸ்ட் காப்பியடிச்சா க்ரெடிட்டாவது கொடுக்கலாமே’ன்னு எழுதினேன் ;-) ..

  எனக்கு பல்டியடிக்கத் தெரியாது ஜாக்கி ;-) . ஆரம்பம் முதல் நடுநிலையாகவே தான் இருந்துகொண்டிருக்கிறேன் ;-) . அந்தர் பல்டியெல்லாம் அடிக்குறதுக்கு வேறு சிலர் இருக்காங்க ;-).

  இதையெல்லாம் பதில் பதிவா எழுதலாம்னு இருந்தேன். அப்புறம், சரி பின்னூட்டமாவே போடலாம்னு தான் இங்க போட்ருக்கேன் ;-). நடுநிலையா இருந்தா, கமல் அடிச்ச ஈயடிச்சாங்காப்பிகளை நீங்க விமர்சனம் செய்வீங்க.. ஆனா, பாவம் நீங்க கமல் வெறியனா போயிட்டிங்க..நான் பதிவு போட்டதுமே , ஜங்குனு ஒரு பதில் பதிவு போட்டு, அதில் கொடுத்தீர்களே சில உதாரணங்கள் ;-).. ஒரே உப்புமாவை எல்லாரும் தான் கிண்டுறானுங்கன்னு ;-) .. அந்த ஒண்ணே போதும் தலைவா.. ;-) அதே போல், இந்தப் பதிவில், கமலுக்கு எழுதிய கடிதம் ;-) ... உங்களுக்குள்ள இருக்கும் கமல் வெறீயனை நான் தப்பே சொல்ல மாட்டேன்.. ஆனா, உண்மையைச் சொன்னதும், உடனே என் மேல பாயுறீங்க இல்லையா? ‘யாய்... எழுதுய்யா ஹாலிவுட்டுக்கு’ன்னு ;-) .. எதுக்கு இதெல்லாம்? :-).. ஃப்ரீயா உடுங்க ;-) .. அப்பப்ப என்னோட சைட்ல இந்தப் பெருச்சாளிகள் இன்னமும் கிழிக்கப்படுவார்கள். அங்கயும் மறக்காம வந்திருங்க ;-)..

  ReplyDelete
 55. கருந்தேள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார் போல் எனக்கு தோன்றுகிறது. நீங்கள் அவ்வளவு விரிவாக காபி அடிப்பதற்கும், இன்ஷ்பிறேஷனுக்கும் வித்தியாசம் சொல்லியும் அவர் பாடிய பாட்டையே திரும்ப பாடுகிறார். ஈ அடிசாம் காபி என்றால் இருப்பதை அப்படியே எடுப்பது. அவ்வை ஷண்முகி மிச்செஸ் டவுட்பயர் இன்ஷ்பிரேஷன். அனால் இதையும் கருந்தேள் காபி என்கிறார் என்றால் ஒன்று அவருக்கு ஆங்கிலம் அர்த்தம் புரியாமல் இருந்து இருக்கு வேண்டும். இல்லை அவர் நீண்ட மன அழுத்தத்தில் இருந்து இருக்க வேண்டும்.  கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே இதுவே ஒரு தமிழ் படத்தின் பெயர் தானே ஐயா. உமக்கு சொந்தமாக ஒரு பெயர் வைக்க தெரியாதா. அதையும் திருடி வைத்து கொண்டு நீங்கள் செய்யும் அலப்பறை தாங்களை.  கமல் நடித்த நீங்கள் குறிப்பிட்ட அணைத்து படங்களும் ஆங்கில படங்களின் இன்ஷ்பிரஷன் என்று நாங்கள் ஒற்றுக்கொல்கிறோம். ஆனால் ஈ அடிச்சான் காபி அல்ல. அதை நீங்கள் ஒற்றுக்கொல்லுங்கள்.  என்னமோ நோபல் பரிசுக்காக பெரிய கண்டுபிடிப்பு பண்ணிட்ட மாதிரி சீன் போட வேண்டாமா என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதை நிரூபிப்பதற்காக மண்டை பிதுக்கொள்ளவேண்டம். இந்த விஷயம் யாரோ எப்பவோ சொன்னது. எங்களுக்கும் தெரியும். நீர் கண்டுபிடித்தார் போல் சீன் போட வேண்டாம். .  கருந்தேள் அவர்களே உமக்கு திக்குவாய் இருக்கும் போல...அது உலக நாயகன்....ஒலக நாயகன் அல்ல...  தப்பை குறிப்பிடுங்கள்...விவாதம் செய்யுங்கள்...அனால் யாரையும் அவமான படுத்தாதீர் கருந்தேள்...

  ReplyDelete
 56. பில்கேட்சே ஆப்பிளை கடிச்சுட்டு ஜன்னலுக்கு வெளியே போட்டார்.அதையெல்லாம் யாருமே கேட்கல்.சினிமான்னு சொன்னதும் ரவுண்டு கட்டி அடிக்கிறதுக்கு ஆட்கள் நிறைய:)

  சினிமா பதிவா போடுற பதிவர்களின் வாதத்திலும் கொஞ்சம் அறிவுஜீவித்தனம் எட்டிப்பார்க்கிற மாதிரிதான் தெரியுது.ஆனால் ஆடியன்ஸ்,கைய சுட்டுக்காம (சமயத்தில சுட்டுகிட்டும்) படம் எடுக்கணும்ங்கிறத பேலன்ஸ் செய்துகிட்டு கமல் இப்ப செய்வதே பெரும் சாதனை.

  டைட்டிலில் கிரடிட் கொடுப்பதும் (சமீபத்து உதாரணம் சிந்து சமவெளி)இது கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல என்பதெல்லாம் பெரும்பாலும் டங்குவார் கிழியாம இருப்பதற்கான பாதுகாப்பு மட்டுமே.

  ReplyDelete
 57. http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4706

  http://www.yarl.com/forum3/index.php?showtopic=75286

  :(

  ReplyDelete
 58. நண்பர்களே...

  ஈ அடிச்சான் காப்பிக்கு சரியான உதாரணம் கீழே மாயா கொடுத்த இணைப்பை கிளிக்செய்து பாருங்கள்.. கமல் ஒரு போதும் அது போல் செய்தது இல்லை...இரண்டு தளங்களும் கண்ட்ரோல் சி அழுத்தி கண்ட்ரோல் வி அழுத்தி இருக்கின்றார்கள்... அவ்வளவுதான்... ஆனால் சினிமா அப்படியில்லை...

  ReplyDelete
 59. boss.......naan onnu matum solluren....rajini and kamal rendu perum nereya padangala hollywood la irunthu eduthu irukanga......but athu namma kalturla than iruku....vijai tv la podura jakichan padam mathiri edukkala... athe mathiri acting ingrathu orutha pathu avara mathiriye nadikirathuthan...english karan enna pirakum pothe nadika therunjukita piranthan.....athe mathiri avanga padatha namma culturuku mathalam! but namma padatha avanga cultaruku matha mudiyathu pa...mr.karunthel ungaluku piditha nadigara mathavangaluku pidikama irukalam...athe mathiri mathavangaluku piditha nadiggar ungaluku pidikama irukum...jaaki oru kamal rasigana ve irukatum appo neenga kamal ah ivlo thiti anupurathu kamal ah pidikatha thanalaiya illa avan ivlo pugal adanchutane nu poruka mudiyamaya nu theriyala...rajinikum ippadi oru nilama vanthahu..avaroda ella padamum ore story than...hero elaya iruparu aprom avanga appa periya panakararunu theriya varum..ivaru atha kandupidichu thrimba elaya ve iruparu..ithuku halywood copy adichu edukura padathaye pakalam...

  ReplyDelete
 60. Hi..
  romba interesting aa ungal pathivikalai padiththen.. aanal thevai illamal neenkal Rajini-i izhuppathu pidikkalai... so neenga JackieSeakar enkira peyarai maththi kamalsekar-nnu vachikkunga.

  ReplyDelete
 61. நியாயமான கோபம்! எதிர்மறை பின்னூட்டங்களை பார்த்தபோது எனக்கு என்னென்ன சொல்லவேண்டுமென்று தோன்றியதோ,அது அத்தனையும் இந்த பதிவில் எழுத்துக்களாக இருப்பதை கண்டு மலைத்துப் போனேன்.உண்மையாக என் ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன், நான் இதுவரை கமலின் தீவிர ரசிகனாக இருந்தேன் இன்றிலிருந்து இன்னொருவருக்கும் ரசிகன் நான்,அவர் பெயர்...ஜாக்கி சேகர்.

  இதற்க்கும் யாராவது எதிர்மறை பின்னூட்டங்களை அனுப்பலாம்.அதனால் இந்த வசனங்களை சொல்லி வைக்க விரும்புகிறேன். "ஜாக்கி சேகர் எனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா புள்ளளையோ அல்லது பெரிப்பா புள்ளையோ கிடையாது"(இதுவும் காப்பிதான்)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner