ஆல்பம்...
இன்று ஆசிரியர் தின விழா.... கல்லூரியில் பணியாற்றும் போது, மாணவர்கள் கேக் வாங்கி கட் செய்து, எங்களோடு சந்தோஷமாக கழித்த தினங்கள் நினைவுக்கு வருகின்றது...ரொம்ப நெருக்கமான மாணவ,மாணவிகள், பைவ்ஸ்டார், மற்றும் கேட்பரிஸ் கொடுத்து தனிப்பட்ட முறையில் வாழ்த்துவார்கள்...கடந்த பல வருடங்கள் செப்டம்பர் 5ல் கல்லூரி பேருந்தில் ஏறியதில் இருந்து வீடு வரும் வரை ...எதிர்படும்எல்லோரும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் சொல்வார்கள்...
நான் என்றால் அவர்களுக்கு அவ்வளவு கொண்டாட்டம்.. என் மாணவ செல்வங்களிடம் நான் எப்போதும் என் மேட்டிமை திமிரை காட்டியதில்லை...சக நண்பனாய் என்னை அவர்களிடம் வெளிபடுத்தி இருக்கின்றேன்.... எனக்கு தெரிந்து இப்போதும் இந்த சந்தோஷத்தை அனுபவிப்பது....பதிவர் கார்த்திகைபாண்டியன்தான்... அவருக்கு தெரியும் நான் சொல்வதின் மகிழ்ச்சி எத்தகையது என்று...............வாத்தியாரே உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
===========
கர்நாடகாவில் தொடர்ந்து மழை அதனால் இப்போது தண்ணீர் திறந்து விட்டு இருக்கின்றது... போன மாதத்தில் கேட்ட போது கை விரித்து விட்டது... இப்போது அதிக மழை பெய்த காரணத்ததால் அது பிச்சை போட்டு இருக்கின்றது....
=================
எந்த தமிழக அரசாக இருந்தாலும், பணக்காரர்கள் வாழும் இடத்தை மட்டும் மிக அழகாக பராமரிக்கின்றது....உதாரணமாக.. போட்கிளப்,பெசன்ட்நகர்,கோபாலபுரம், அண்ணாநகர்,போயஸ்கார்டன், போன்ற இடங்களில் தரமான ரோடுகள் போட்டு கொடுக்கின்றது, கழிவு நீர் குழாய் அடைப்புகள்எடுத்து நடு ரோட்டில் கொட்டி வைப்பதில்லை...தினமும் ரோட்டில் குப்பை எடுப்பது போன்ற, விஷயங்களை தவறாமல் தினமும் செய்கின்றது...ஆனால் குப்பங்களில்,நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் இடங்களில் இத்தைகைய பராமரிப்பு பணியை செய்வது இல்லை....அப்படியே கேட்டாலும் இலவசமாக ஒரு டிவி பொட்டி ,அல்லது வெள்ள நிவாரணத்துக்கு தலைக்கு2000ம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் போல...
============
மிக்சர்...
சென்னையில் நானோ கார்கள்... எல்போர்டு மாட்டிக்கொண்டு ஆங்காங்கே தென்பட ஆரம்பித்து இருக்கின்றது... அதை கார் என்று மனம் ஒப்புக்கொள்ள மறுக்கின்றது... இருப்பினும் சில டிராபிக்கில் சட்டென லெப்ட் ரைட் திருப்பி ஓடும் போது, ஏதோ எல்கேஜி குழந்தை டிராபிக்கில் ஓடுவது போல் இருக்கின்றது...எனக்கு தெரிந்து சென்னை ஆட்டோ கொள்ளைக்கு இந்த நானோ பெஸ்ட் சாய்ஸ் என்பேன்...என்ன? நானோ வேகத்தில் போகும் போது பின்பக்கம் வரும் சத்தம்....டீசல் ஷேர் ஆட்டோ போடும் சத்தத்தை ஞாபகபடுத்துகின்றது....
===============
விஜய் நடித்த அந்த நகைகடை விளம்பரம் அப்படி ஒன்றும் ஈர்ப்பாய் இல்லை என்பது என் கருத்து...விஜய், மணி ஆட்டும் விளம்பரமா? என்று இதையும் எஸ் எம் எஸ்சில்.. நக்கல் விடுகின்றார்கள்...அந்த பாண்டி முருகா தியேட்டர் கொக்ககோலா ஆட் எவ்வளவோ பராவாயில்லை....
============
காலையில் அந்த பெண்ணின் உடை கோலம் போடும் போது, அப்படி விலகி இருந்து இருக்க கூடாது...நானும் அப்படி சில கணங்கள் லஜ்ஜை இல்லாமல், சில கணங்கள் பார்த்து தொலைத்து இருக்க கூடாது....என்னமோ, நடப்பது போல் எனக்கு உள்ளுக்குள்ள ஏதோ சொல்லிச்சி....
நடு மண்டையில லென்சை ஒரே இடத்துல வச்சா... சுள்ளுன்னு ஒரு சூடு படுமே அப்படி படுவது போல் ஒரு எண்ணம் என் மனதில் தோன்ற.. சட்டென வீட்டு மாடியில் பார்த்தேன்... கோபமான கண்களுடன்...டைம்ஸ் அப் இந்தியா கையில் வைத்து கொண்டு எரித்து விடுவது போல் அந்த பெண்ணின் கணவன் பார்க்க... நான் அப்பிடியே ஆபிட் ஆயிட்டேன்....
ஒரே சிந்தனை... அந்த பெண் உள்ளே போனதும் என்ன சொல்லி இருப்பான்???
பெரிய ரவிவர்மா
ரோட்ல துணி நகறது கூட தெரியாம அப்படி என்ன கோலம்???இனிமே நைட்டியோட வெளிய போய் பாரு அப்படியே மிதிக்கிறேன் என்று சொல்லி இருப்பானோ....???
===================
நன்றிகள்..
ராயபேட்டையில் இருக்கும் சுல்தான்..துபாயில் இருக்கும் மச்சினனுக்கு , தான் பார்த்த ஹாரர் படங்களை டவுன்லோட் செய்து நன்றாக இருப்பதை காப்பி செய்து அனுப்புவாராம்... ஒரு மூன்று டிவிடியில்12 படங்கள் போல் ஹாரர்படங்கள் காப்பி செய்து நான் வேலை செய்யும் இடத்த்துக்கே எடுத்து வந்து தந்துவிட்டு...கொஞ்ச நேரம் நலம் விசாரித்து விட்டு சென்றார்...இந்த படங்களை நிச்சயம் நான் பார்த்து விட்டு எழுத வேண்டும் என்று சொன்னார்...நண்பா.. பார்க்கவேண்டிய படங்களே ஒரு 200 மேல் வாங்கி வைத்து இருக்கின்றேன்.. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பார்த்து எழுதுகின்றேன்..நன்றி...உங்கள் அன்புக்கு....
===========
இந்தவாரநிழற்படம்..
இந்தவார சலனபடம்....
மனைவியை சர்ப்பிரைஸ் செய்ய முயற்ச்சி செஞ்ச அது இப்படி கூட ஆகலாம்... எனக்கு என்னவென்றால் அந்த காபி கப் சரியாக அந்த சமாச்சாரத்தை மறைத்துக்கொண்டு இருப்பது போல ,காபி கப்பை பிரேமில் வைத்து இருக்கின்றார்கள்... அதற்கு எத்தனை ரிகர்சல் பார்த்து இருப்பார்கள்..... அல்லது எத்தனை டேக் போய் இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கின்றேன்,...
படித்ததில் பிடித்தது..
இந்த வார விகடனில்.. தொல் திருமாவளவன் சொன்னதை படித்த போது நெஞ்சில் வேதனை படர்ந்தது..18 வயது இளைஞன் அவரை சந்திக்க வந்தானாம் கைகுலுக்க திருமா கை நீட்டிய போது... அவனுக்கு இரண்டு கைகளும் இல்லையாம்....ஈழத்தில் இருந்து வந்து திருமாவை சந்திக்க வந்தானாம் அந்த இளைஞன்....பதறி உனக்கு எதாவது உதவி வேண்டுமா ? என்று திருமா கேட்க..?? உதவி வேண்டிய நேரம் கடந்து விட்டதாக அந்தஇளைஞன் சொல்லி இருக்கின்றான்... திருமாவின் நித்திரையை அந்த வார்த்தை குத்தி கிழிப்பதாக சொல்லி இருக்கின்றார்....
என் தாத்தா அடிக்கடி சொல்லுவார் தாகத்துக்கு உதவாத தண்ணீர்.. அரும்பசிக்கு உதவாத அன்னம்....இருந்தா என்ன? இல்லாம போனா என்ன? என்று வெறுப்பில் சொல்லுவார்...கண் எதிரில் மூன்று லட்சம் பேர் இறப்பதை பார்த்து கொண்டு மவுன சாட்சிகளாக இருந்த இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் சரி, இங்கு இருக்கும் தமிழர்களுக்கும் சரி,உலகில் இருக்கும் தமிழர்களுக்கும் சரி....அந்த 18வயத இளைஞன் சொன்ன வார்த்தை எல்லோருடைய நித்திரையையும் குத்தி கிழித்தபடிதான் இருக்கும்....
பார்த்ததில் பிடித்தது...
எனக்கும் இந்த ஜோடியை ரொம்ப பிடிக்கும்.. காரணம் பிரேம் அப்படியே தொபிர் என தரையில் விழுவதும் வில்லாக வளைவதும் அற்புதம்... அதே போல் அந்த பெண்.. அப்படி ஒரு ஆட்டம் எனக்கு பிரேமைவிட அந்த பெண்ணை எனக்கு நிரம்ப பிடிக்கும்... இந்த பாடலில் மிக முக்கியமாக குழந்தைக்கு அம்மா முத்தம் கொடுக்கும் அந்த காட்சியை நடனத்தில் மிக அழகாக கொண்ட வந்து இருப்பார்கள்... மற்றது எல்லாம் மனதை கல்லாக்குவது போலான நடனங்கள்...சாரு விகடனில் சொல்லி இருப்பது போல் ஏழு நுற்றாண்டுகளுக்குமுன் பல தீவுகளை ஆளுமை செய்த தமிழ் இனம்... அதே தீவுகளில் அடிமைகளாக போனது காலத்தின் கோலம்....வீடியோவில் இறுதி காட்சியில் வருவது போல மண்ணை ஆள்ளி தூற்றுவதை தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை...
எனக்கு பிடித்த நான் எடுத்த நிழற்படம்...
மனிதன்... காக்கைகள்.... விமானம்...
இந்தவாரகடிதம்...
Dear Mr. Jackie Sekar:
Greetings from NCL-Pune. In December 2009, I joined as scientist at National Chemical Laboratory-Pune. I was a research professor at University of Massachusetts-Amherst, USA. I regularly read your blog and occasionally post comments. I like the flow and the warmth in your articles. I pray the almighty for your long and pleasant life.
I am not a fan of dance programmes but I watched Jodi No 1 and I admired the performance by Premgopal and Premini (from Ealam). If you get a chance, please watch it, write a article about that. It is just a request. This couple has effectively used dance as a weapon to convey their sufferings, pains and sorrows. I cried, while I watched their dance.
You may get several such e-mails, hence I apologize for the inconvenience. I don’t have a webpage yet, hence I am attaching my interview in Financial Express for your reference.
With best regards
Krishnamoorthy
Dr. K. Krishnamoorthy
Scientist
Polymer Science and Engineering Division
National Chemical Laboratory-Pune
Pune 411008
அன்பின் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி....
வணக்கம்... எனக்கு தெரிந்து, எனக்கு பிரபலமாக இருந்தவர்களிடம் இருந்து வந்த கடிதம் என்றால் அது நமது குடியரசு தலைவர் அப்துல்காலாம் மற்றும் எழுத்தாள நண்பர்கள் சுபா அவர்களிடம் இருந்து மட்டும்தான்... ஆனால் பிரபலம் இல்லாத உங்களை போன்ற சயிண்டிஸ்ட்டுகளிடம் இருந்து வரும்... இது போன்ற கடிதங்களுக்கும்,பாராட்டுக்களுக்கு நான் தகுதியானவனா? என்பது மில்லியன் டாலர் கேள்வி... ஏதோ மண்டபத்தில் எழுதி கொடுத்ததோ, அல்லது தனக்கு தானே எழுதிக்கொண்டதோ என்று நான் நினைத்து விட கூடாது என்பதற்க்காக உங்கள் பேட்டி வெளியான பேப்ரையும் அதில் இணைத்து உங்கள் நம்பகதன்மையை பறைசாற்றி இருக்கின்றீர்கள்...மிக்க நன்றி...நீங்கள் சொன்ன வீடியோவை பார்த்தேன்...மனம் நெகிழ்த்தேன்...மேலே இனைத்து இருக்கின்றேன்...ரிசர்ச் புரபசரான உங்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... சென்னை வரும் போது அவசியம் சந்திக்கலாம்... ஒரு குவளை தேனீருடன் கடற்கரையோர காற்றோடும் காத்து இருக்கும் ..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
இந்தவார பிளாக்...
தமிழில் புகைபடகலை....
என்னை ரொம்ப பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு போட்டோ கிராபி பற்றி நிறைய சந்தேகம் கேட்கின்றார்கள்.. நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை... அது மட்டும் அல்ல தனியாக போட்டோகிராபி பற்றி தனியாக பதிவு எழுத சொல்கின்றார்கள்... தேவையில்லை... ஒரு குழ்ந்தைக்கு சொல்லி தருவது போல.. இந்த தளம் உங்கள் ச்நதேகங்களை நிவர்த்தி செய்கின்றது... மிக முக்கியமாக கருவாயன் என்பவர்... மிக அழகாக படங்களுடன் சொல்லி தருகின்றார்...நானே அவரிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்....இந்த தளத்தில் மாதா மாதம் புகைபட போட்டி வைக்கின்றார்கள்..... இந்த தளத்தை வாசிக்கும் போது... எப்படியாவது ஒரு டிஜிட்டல் கேமரா வாங்க வேண்டும் என்று நினைக்க வைப்பதுதான் இந்த தளத்தின் சிறப்பு... என்பேன்.. இந்த தளத்தை வாசிக்க இங்கு கிளிக்கவும்
குறிப்பு.... நண்பர்களே இது போலான சிறப்பான தளங்கள் உங்கள் கண்ணுக்கு தெரிந்தால் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்...
பிலாசபி பாண்டி....
எப்படி சொல்லற???
அவ வீட்டு குக்கர் விசில் அடிச்சதுக்கே அதை செருப்பால அடிச்சிட்டடான்னா பார்த்துக்கோயேன்....
============
விக்கல் வந்தா விக்கல் எடுக்கலாம்...நக்கல் வந்தா??????
==========
நான்வெஜ்...18+
ஜோக்..170 வயசு பெருசுங்க இரண்டு பேர்..தனது பால்யகாலத்துல செய்ய முடியாத ஸ்டைலில் செக்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன்... ஒரு மேட்டர் வீட்டுக்கு போனாங்க... அங்க இருக்கும் பெண்..இந்த பெருசுங்களுக்கு என்ன தெரிய போவுதுன்னு இரண்டு காத்தடிச்சா நிர்வாண பொம்மை பெண்களை கொடுத்து, தனி தனி ரூம்ல ரெண்டு பெருசையும் உள்ளே தள்ளிவிட்டுட்டாங்க....... 5 நிமிஷத்துலயே இரண்டும் வெளியே வந்துச்சிங்க...தங்கள் அனுபவங்களை ரெண்டு பேசிக்க ஆரம்பிச்சுச்சு...
நான் போய் லேசா தொட்டேன்... அது செத்து போயிடுச்சு.... என்று முதபெரிசு
உனக்கு என்ன ஆச்சு ? என இரண்டாவது பெருசு கிட்ட மொத பெரிசு கேட்க... என்னிது பக்கத்தல இருந்த ஜன்னல் வழியா? பயத்துல குசு உட்டுக்கினே பறந்து போச்சுன்னு சொல்லுச்சி...
மத பெரிசுக்கு செம ஆர்வம்.... வடிவேலு போல எப்படி??? எப்படி?? எப்படி?? மூனுவாட்டி கேட்டுச்சு...
ரொம்ப நாளா பின் சமாச்சாரம் செய்ய ஆசை...வெறியோட டிரை பண்ணினேன்.. அந்த பொண்ணுக்கு கேஸ் பிரப்பளம் போல அப்படியே புஸ்ன்னு சவுண்டு விட்டபடியே தலை தெரிக்க ஜன்னல் வழியா பற்நது போயிடிச்சு...
முத கிழம் இரண்டாவது கிட்ட சொல்லிச்சு....
மச்சி இந்த வயசுலயும் நீ நின்னு விளையாடுற??
(எல்லத்தைவிட பெரியஜோக் அதுதான்)...
அதுக்கு இரண்டாவது கிழம் இப்படி சொல்லுச்சு...
எந்த வயசா இருந்தாலும் நாம சிங்கம் போல நின்னு விளையாடுவோம்ல என்று தனது மீசையை முறுக்கியது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
நண்பா! எல்லாம் கலக்கிட்டீங்க சூப்பரு! அந்த A ஜோக் அருமை! எப்படியோ கிழ நண்பர்கள் சந்தோஷமா இருந்தா சரிதான்
ReplyDelete--------------------------------------------------
நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.
என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com
நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
------------------------------------------------
//காபி கப்பை பிரேமில் வைத்து இருக்கின்றார்கள்... அதற்கு எத்தனை ரிகர்சல் பார்த்து இருப்பார்கள்..... அல்லது எத்தனை டேக் போய் இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கின்றேன்,...//
ReplyDeleteநானும் அதையே தான் யோசிக்கின்றேன் நண்பா! நீங்களும் என் வலைபக்கம் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
நன்றி! வசந்த்
மினி, நிறைவாக இருக்கிறது.
ReplyDeleteதாகத்துக்கு உதவாத தண்ணீர்.. அரும்பசிக்கு உதவாத அன்னம்....இருந்தா என்ன? இல்லாம போனா என்ன?...............உண்மை அழமான வரிகள்.
ReplyDeletePLEASE CORRECT THIS.
ReplyDeleteVIKKAL VANTHAL VIKKALAAM. NAKKAL VANTHAL ?????
விஜய் டிவி நடன காட்சி நிரம்பவே டச்சிங். பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteThodarnthu kalakkunga jacki....
ReplyDeleteஅன்பின் ஜாக்கி சேகர்
ReplyDeleteஅருமை அருமை - சாண்ட் வெஜ்ஜும் நான் வெஜ்ஜும் - மிக மிக இரசித்தேன்.
பிடித்து இருந்ததனால் ஓட்டு போட்டேன்
மட்டனும் சிக்கனும் சூப்பர்
குக்கருக்கு செருப்படி - விக்கல் நக்கல் - ஹா ஹா ஹா
தமிழில் புகைப்படக் கலை - ஒரு அரிய பணியினை அழகாகச் செய்யும் தளம். நண்பர்கள் கலக்குகிறார்கள். பாராட்டுக்கும் நல்வாழ்த்திற்கும் உரியவர்கள்.
பிரபலங்களிடம் இருந்து கடிதம் பெறுவதற்கு பாராட்டுகள் - வாழ்த்துகள்
மனிதன் - காக்கைகள் - விமானம் - புகைப்படம் அருமை
விஜய் டிவி - காணொளி நெஞ்சம் நெகிழ வைக்கும் ஒன்று
விகடனில் திருமா - படித்தேன் - ம்ம்ம்ம்ம்
//தாகத்துக்கு உதவாத தண்ணீர்.. அரும்பசிக்கு உதவாத அன்னம்....இருந்தா என்ன? இல்லாம போனா என்ன? // சூபர்
துணைவியை எதிர்பாராத விதத்தில் சந்திக்க இப்படியும் செய்யலாமா ?
அட்டகாசமான நிழற்படம்
டிவிடி - அன்பினிற்கு நன்றி சொன்ன விதம் நன்று
மிக்சர் உண்மையிலேயே சூப்பர்
குனிந்து கோலம் போடும் பெண்கள் - ம்ம்ம்
ஆல்பம் அட்டகாசம் - ஆசிரியப் பணியே அரும்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற கொள்கையுடன் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். கா.பாவிற்கு சிறப்பு வாழ்த்துகள்
நல்வாழ்த்துகள் தனசேகரன்
நட்புடன் சீனா
/// அப்படியே கேட்டாலும் இலவசமாக ஒரு டிவி பொட்டி ,அல்லது வெள்ள நிவாரணத்துக்கு தலைக்கு2000ம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் போல... ///
ReplyDelete100% உண்மை
அண்ணே.. ஞாபகம் வச்சு வாழ்த்தியதுக்கு நன்றி.. உங்களுக்கும் என்னோட ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..:-)))
ReplyDeleteவழமை போல இந்த தொகுப்பும் நன்றாகவே இருகின்றது நன்றி
ReplyDelete//நடு மண்டையில லென்சை ஒரே இடத்துல வச்சா... சுள்ளுன்னு ஒரு சூடு படுமே அப்படி படுவது// ஐய்ய... ஒரு தடையும் இல்லையே நடுவிலே.... நேரா மண்டையிலே சுடுமே.... கொஞ்சம் கஷ்டம்தான் ஜாக்கி!
ReplyDeletegid
ReplyDeleteமிக்க நன்றி திரு. ஜாக்கி சேகர். ஃபெப்ரவரியில்
ReplyDeleteI. I. T-Madras யில் ஒரு சந்திப்பிற்கு வரவேண்டி இருக்கும். அச்சமயத்தில் உங்களை தொடர்புகொள்கிறேன். பிரேம் கோபால், பிரேமினி நடனம் பற்றி எழுதியதற்கு என் மனமார்ந்த நன்றி. என்னை பெயர் சொல்லியே நீங்கள் அழைக்கலாம், எனது வயது 34 தான்.
எந்த தமிழக அரசாக இருந்தாலும், பணக்காரர்கள் வாழும் இடத்தை மட்டும் மிக அழகாக பராமரிக்கின்றது....sambandhapatta anaivaraiyum seruppal adippathupol....virivaaga oru katturaiyai neengala ezhuthalam...
ReplyDeleteபோட் கிளப் ல தயாநிதி மாறன் .. கலாநிதி மாறன் இருக்காங்க...பெசன்ட் நகர்ல மத்தியஅரசின் சி.பி .ஐ. அலுவலகம் இருக்கிறது.. கோபாலபுரத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாத.. கருணாநிதி குடும்பம் இருக்கு... அண்ணா நகர்ல ஆற்காட்டார் இருக்காரு...போயஸ் கார்டன் ல ஒரு ரூபாய் வாங்குற ஜெயலலிதாவும்.. பரம ஏழை ரஜினியும் குடி இருக்காங்க.. ஏழை நாய்களே உங்களை நாங்க வாழவிட்டு இருக்கிறதே.. பெருசுன்னு அரசு நினைக்குது போல...
ReplyDeleteபோட் கிளப் ல தயாநிதி மாறன் .. கலாநிதி மாறன் இருக்காங்க...பெசன்ட் நகர்ல மத்தியஅரசின் சி.பி .ஐ. அலுவலகம் இருக்கிறது.. கோபாலபுரத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாத.. கருணாநிதி குடும்பம் இருக்கு... அண்ணா நகர்ல ஆற்காட்டார் இருக்காரு...போயஸ் கார்டன் ல ஒரு ரூபாய் வாங்குற ஜெயலலிதாவும்.. பரம ஏழை ரஜினியும் குடி இருக்காங்க.. ஏழை நாய்களே உங்களை நாங்க வாழவிட்டு இருக்கிறதே.. பெருசுன்னு அரசு நினைக்குது போல... ///
ReplyDeleterepeat
Nice posting
ReplyDeletejust want to know how to type in Tamil
i am writing a story for films i cant write in paper so i just want to type in system
but i am having trouble in with my tamil software
could u please share me the s.w u are using
எங்கிருந்து சார் உங்களுக்கு இந்த ஜோக்கெல்லாம் கிடைக்குது? ரொம்ப நல்லாயிருக்கு சார்!
ReplyDeleteகுழைத்து கொடுத்துள்ளீர்கள் நகைச்சுவையை...
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்... சீனா ஐயாவுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்...கிச்சாவுக்கும் என் நன்றிகள்...
ReplyDelete//உதவி வேண்டிய நேரம் கடந்து விட்டதாக அந்தஇளைஞன் சொல்லி இருக்கின்றான்... //
ReplyDeleteஇதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க... http://mightymaverick.blogspot.com/2010/08/blog-post.html
ஜோடி நம்பர் 1 பைனல் இப்போதான் பார்க்கிறேன்.....! உருகவைத்து விட்டது...
ReplyDeleteஜோக் சூப்பர்....
நண்பரே...இவ்வளவு நாள் உங்கள் ப்ளாக் தொடர்ந்து படித்து இருக்கிறேன்....ஆனா, கமெண்ட் தான் போட்டதே இல்லை..அப்படி ஒரு சுறுசுறுப்பு...
ReplyDeletefor latest review on cameras, visit www.dpreview.com
கருவாயன் சுரேஸ் அவர்களின் படங்கள்
ReplyDeletehttp://www.flickr.com/photos/30041161@N03/