போட்டோகிராபர் மோகன்... (சிறுகதை)

பொதுவாக சிறுகதை நிறைய எழுதவேண்டும் என்பது எனது ஆசை என்றாலும் நேரமின்மைதான் முதல் காரணமாக இருக்கின்றது...பல்வேறு இடங்களில் கிடைக்கபெற்ற கருக்களை அப்படியே எழுதாமல் சினிமா பின்னனியில் வைத்தும்,  ஒரளவுக்கு அதன் தொழில்நுட்பம் சார்ந்தும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்...ஒரு சின்ன பார்ட்டிலாவது இது போலான கதைகள் சினிமாவை சம்பந்தபடுத்தி இருக்கும்... இதற்கு லேபிள்... சினிமாகதைகள் என்று வைத்து இருக்கின்றேன்..தொடர்ந்து எழுத நேரமும் உங்கள் வரவேற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்கள்
ஜாக்கிசேகர்
=====================
மாம்பலத்தில் போட்டோகிராபர் மோகனை தெரியாத பழைய மாம்பல வாசிகள் யாரும் இருக்க வாய்பில்லை...எல்லோருடைய குடும்ப விழாக்களிலும் தவறாமல் இடம் பெறும்...சந்தனம், பன்னீர் செம்பு போல போட்டோகிராபர் மோகனும் இடம் பெறுவார்... இப்படி சொல்லும் போதே நீங்கள் இது கொஞ்சம் ஓவராக இல்லையா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரியாமல் இல்லை... காரணம் இல்லாமல்யாரை பற்றியும் மிக உயர்வாக சொல்ல போவதில்லை...

சரி உங்கள் வீட்டில் விசேஷம் வைத்து இருக்கின்றீர்கள்... 6 மணிக்கு விசேஷம் ஆரம்பிக்கின்றது என்றால்.. நீங்கள் போட்டோகிராபர் எத்தனை மணிக்கு உங்கள் வீட்டு விசேஷத்துக்கு வர வேண்டும் என்று சொல்லுவீர்கள்...ஒரு 5 மணிக்கு வரச்சொல்வீர்கள்... காரணம்  உங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருக்கும்...ஒரு மணி நேரத்துக்கு முன் எல்லோரும் வந்து விட்டால் அடுத்த வேலையை போய் பார்க்கலாம்... அதனால் ஒரு மணி நேரத்துக்கு முன் வர சொல்லிவிடுவார்கள்....ஆனால் மோகன் நீங்கள் சொன்ன ஒரு மணிநேரத்துக்கு முன் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்னாதாகவே வந்து உங்கள் டென்ஷனை குறைத்துவிடுவார்...20 வருட இந்த புகைபட தொழிலில் அவரை மாம்பலத்தில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை...

மாம்பலவாசிகளுக்கு மாப்பிள்ளை காரில் இருந்து இறங்குவதையும் அதை  பெண் வீட்டார் வரவேற்பதையும்... போட்டோ எடுக்க வேண்டும் அவர்களை பொறுத்தவரை அது முக்கியமான நிகழ்வு....யார் இந்த சமாச்சாரத்தை கண்டுபிடிச்சி பாலோ செஞ்சதுன்னு தெரியலை...  இந்த ஒரு நிகழ்வு மாலை 5 மணிக்கு நடக்கும்... இரண்டு போட்டோ அல்லது 5 போட்டோக்கள் வரை எடுத்து விட்டு, அடுத்த இரண்டு மணி நேரம் மண்டபத்தில் சும்மா உட்கார்ந்து இருக்க வேண்டும்.....மற்ற போட்டோகிராபர்கள் வெளியே தம் அடிக்க அல்லது, வேறு வேலை இருந்தால் பார்க்க போய் விட்டு இரவு ஏழு மணிக்கு வருவார்கள்.... சில போட்டோகிராபர்கள்.. தனது அசிஸ்டென்ட்டை அனுப்பி விட்டு பொறுமையாக ரிசப்ஷன் ஆரம்பிக்கும் போது வருவார்கள்...ஆனால் மோகன் 4 மணி அல்லது 5 மணிக்கு வந்து விட்டால் மண்டபத்தை விட்டு நகரமாட்டார்.....

வெங்கட் நாராயணா ரோட்டில் ஒரு திருமணம்....
பெண்ணோடு அப்பாதான் மோகனை போட்டோவுக்கு புக் செய்தார்... மாப்பிள்ளை  காரில் வந்து இறங்கியதை போட்டோ எடுத்து முடித்ததும்... இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு வேலை இல்லை ஏதாவது வேலை இருந்தா பார்த்துட்டு வாங்கோ... என்று பெண்ணின் அப்பா சொல்லிவிட்டு போய் விட்டார்...ஆனால் ஒரு அரை மணியில் மண்டபம் பரபரத்தது....மாப்பிள்ளையின் அப்பாவுக்கு தமிழகத்தின் உச்சநடிகர் ரஜினி பழக்கமாம்... அவசரமா நாளைக்கு அவுட்டோர் ஷுட்டிங் போவதால் முதல் நாளே கூட்டம் வருவதற்குள் மணமக்களை வாழ்த்திவிட்டு போக உச்சநடிகர் வந்து இருக்கும் செய்தியை கேள்வி பட்டதும் பெண்ணின் தகப்பனுக்கு அடிவயிறுகலங்கியது....
ஏனெனில் பெண்ணின் தகப்பன்தான் திருமண ஏற்பாட்டுக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்....

போடோகிராபரை வேறு அனுப்பிவிட்டோமே? என்ன செய்வது என்று பெண்ணின் தகப்பன்.... நெற்றியில் வியற்வை பூக்க டென்சனாக உச்சநடிகரை வரவேற்க்க வர.. அந்த இடத்தில் போட்டோகிராபர் மோகன் வேகமாக சுழன்று போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார்..... உச்ச நடிகர் சிரித்தார்.. கிளிக்..மணமகன் மணமகள் இருவருக்கும் நடுவில் நின்று சிரித்தார்... கிளிக்... மாப்பிள்ளை அப்பாவை கட்டி பிடித்தார்.. கிளிக் என்று மோகன் போடோ எடுத்துக்கொண்டு இருக்க... பெண்ணின் தகப்பன் நெகிழ்ந்து சொன்ன தொகைக்கு மேல் ஆயிரம் ரூபாய் மோகனின் தொழில் பக்திக்கு கொடுத்தார்.... தன் நண்பர்கள்,உறவினர் என்று போட்டோகிராபர் மோகன் பற்றி சொல்லி இப்படியாகதான் மோகன், மாம்பலத்தில் கால் ஊன்றினார். இப்போது போட்டோகிராபர் மோகன் இல்லாமல் மாம்பலம் தன் வீட்டு சுப நிகச்சிகளை நடத்துவது இல்லை... 

மோகன் முதலில் சினிமாவில் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தார்... அவர் போன நேரம் எல்லாம்  உப்புமா கம்பெனி வாய்பாக கிடைத்தது...இரவு பகல் என உழைத்து கடைசியில்மோகன் பேமண்டுக்கு நாயாய் பேயாய் அலைந்தார்....டெஸ்ட் ஷுட்டுகளில்  காதாநாயகியின் பிதுங்கிய மார்பு தெரிய படம் எடுப்பதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.... மாம்பலம் ஸ்டேசன் பக்கத்தில் வீடு...மனைவி ஹவுஸ் ஒய்ப்...ஒரு பையன்,ஒரு பெண்..
 
பையன் சீனு பழையமகாபலிபுரம் சாலையில் புருக் என பெயர் மாற்றம் செய்து கொண்டு பீபிஓவில் வேலை..மோகனின் பெண் காயத்ரி.... சென்னை இருதயத்தில் இருக்கும் ஒரு கல்லுரியில் கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள்.....மோகனுக்கு மாம்பலத்தில் வீடு இருந்த காரணத்தால், விசேஷகாரர்கள் சொன்ன நேரத்துக்கு போய் விடுவார்...அதுவே சென்னை புறநகர் என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்னையே போய்விடுவார்.... இதுவரை டிராபிக்ஜாம் அதான் லேட் என்று கல்யாணகாரர்களிடம் சொல்லி ஒரு போதும் தலை சொறிந்த மோகன் நின்றதில்லை....

மோகனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை... அதனால் மண்டபத்துக்கு உள்ளே வந்து விட்டால் நிகழ்ச்சி முடியும் வரை அவர் தலை அங்கு தெரிந்து கொண்டே இருக்கும்...மற்ற போட்டோகிராபர் போல... டென்ஷனாக இருக்கும் திருமணகாரர்களிடம் போய் பங்ஷன்  எப்ப முடியும் என்று நச்சரிக்கும் ரகம் அவர் அல்ல...ரொம்ப டீசன்ட்....எப்போது பங்ஷன் முடிக்கின்றதோ அதுவரை பொறுமை காப்பார்...வேலைன்னு வந்துட்ட பிறகு சம்மா  நச்சு பண்ண கூடாது....

சில நேரங்களில் முகூர்த்த நேரங்களில் மோகன் இரண்டு மூன்று ஆர்டர் எடுத்து விட்டால்...தன் வீட்டு திருமணத்துக்கு போட்டோ எடுக்க ஆள் அனுப்புவது போல்
ரொம்ப டீசன்டான ஆட்களை தேர்வு செய்து அனுப்புவார்...அவரிடம் வேலை செய்த போட்டோகிராபர்கள் அவர் ஒரு பங்சனுக்கு அனுப்பும் முன் என்ன சொல்லுவார் என்பது எல்லோருக்கும் அத்துபடி...

எந்த அழகான பொண்ணுக்கு ஸ்பெஷலா குளோஸ்அப் வைக்காதிங்க...
அப்படி அந்த பொண்ணை எடுக்கனும்னா அந்த பெண்ணோட நாலு பேர் இருப்பது போல் பிரேம் வைங்க...பொண்ணுங்க குனிஞ்சி எதாவது வெலை செய்தா? அதை எக்காரணம் கொண்டும் எடுக்க கூடாது... முக்கியமா ஒனக்கு எந்த பழக்கம் வேணா இருந்துட்டு போவட்டும்... இன்னைக்கு சாயக்கலாம் 5 மணியில் இருந்து நாளைக்கு காலைல10 மணி வரைக்கு எந்த கெட்டபழக்கத்தையும் வச்சிக்காதே என்று படித்து படித்து சொல்லி அனுப்புவார்...

ஒருமுறை ஒரு போட்டோகிராபர் நலங்கு வைக்கும் போது பெண்ணின் இடதுபுறம் நின்று படம் எடுத்து விட்டார்...இடதுபுறம் நின்று படம்எடுத்தால் நலங்கு வைக்கும் பெண்கள் குனிந்து சந்தனம் மற்றும் குங்குமம் எடுக்க குனியும் போது அவர்கள் ஒரு பக்க மார்பு தெரியும்.. அதனால் எப்போதும் போடோகிராபர்கள் வலதுபுறம் நின்றுதான் நலங்கு நிகழ்ச்சிகள் எடுப்பார்கள்.....ஆனால்அவன் இடது புறம் நின்று போட்டோ எடுத்து வந்தான்  எல்லா போட்டோவும் மிக கவர்ச்சியாக இருந்தது... மோகன் அந்த போட்டோகிராபரிடம் கேட்டார்....

இதை எப்படி ஆல்பத்துல வைக்கறது..???
சார் அவுங்க சட்டுன்னு நலுங்கு ஆரம்பிச்சிட்டாங்க...
நீ சொல்லி இருக்கனும்....இப்படி நின்னு நலுங்கு செஞ்சா இந்த மாதிரி போடோ வரும்னு  சொல்லி இருந்தா... நிச்சயம் மாத்தி நின்னு செஞ்சி இருப்பாங்க....
இந்த சின்ன அடிப்படை கூட தெரியலை நீ எல்லாம் எதுக்கு போட்டோகிராபர்னு சொல்லி திட்டி தீர்த்துட்டார்...

மோகன் அந்த அளவுக்கு பர்பெக்ஷன்....மோகன் போட்டோகிராபர் மட்டும் அல்ல... அவரை விசேஷகாரர்களின் வீட்டு பிள்ளை என்று சொல்லலாம்... அந்த அளவுக்கு மற்றவர்களிடம் மரியதையாகவும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்பவர்...மாம்பலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி....  போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார்...

தினமும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்த பிறகு தன் பெண்ணிடம் இருந்து போன் வரும் ஆனால் இன்று போன்வரவில்லை...
வேலையில் கவனம் சிதறியது, பெண்ணுக்கு போன் போட்டார்...

எழாவது ரிங்கில் அவரின் பெண் பேசினாள்....
காயத்ரி எங்க இருக்க????

அப்பா கீர்த்னா வீட்ல புராஜக்ட் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்..
அம்மாகிட்ட சொல்லிட்டேன்.. நைட்டு எட்டரைக்கு வந்துடுவேன்....

சரி என்று போனை கட் செய்து விட்டு மோகன் நலங்கு நிகழ்ச்சியை படம் எடுத்துக்கொண்டு இருந்தார்
ஒரு சின்ன  பெண் நலங்கின் போது சில பொருட்களை குனிந்து எடுத்து உதவி செய்தது.. அந்த பெண் குனியும்  போது மார்பு தெரிவதால்...மோகன் ஒரு கிளிக் கூட அடிக்கவில்லை.... அந்த சின்ன பெண்ணுக்கு தான் போட்டோக்களில் இருக்க வேண்டும் என்பதால் கேமராவுக்கு எதிர் திசையில் குனிந்து நிமிர்ந்து  வேலை செய்து கொண்டு இருந்தது...அந்த பெண்ணாலேயே சில முக்கிய ஷாட்டுகள் மோகனால் எடுக்க முடியவில்லை... ஒரு கட்டத்தில் அந்த  பெண்ணை மோகன் அழைத்தார்...குனிந்து எந்த பொருளை எடுக்கும் போதும் சுடிதாரை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோமா.... என்று சொல்ல... அந்த பெண்  கண்களில் நன்றியுடன் சாரி அங்கிள் என்று சொல்லி விட்டு அடுத்த முறை விலகும் உடையில் மிக கவனமாக இருந்தது.....

ஜெம்ஸ் மிட்டாயினால் சக்கரை தட்டில் பெண் மற்றும் மாப்பிள்ளை பெயர் எழுதி இருக்கும் தட்டில், பெண்ணின் ஜெம்ஸ் மிட்டாய்  பெயர் கலைந்து இருக்க, அதே பெண் இப்போது குனிந்து சரி செய்யும் போது அப்படியே குனியாமல்... முதலில் உட்கார்ந்து,அதன் பிறகு குனியும் போது சுடிதாரின் மார்பு பகுதியில் துணி விலகாமல் அழுத்திக்கொண்டது....அதை பார்த்த மோகன் கண்ணாலே வெரிகுட் என்று சொன்னார்....மோகனுக்கு அப்படியே தன் மகளை பார்ப்பது போல் இருந்தது...

காயத்ரி பிளீஸ் புரிஞ்சிக்கோ... நைட் உன் நினைப்பு வந்தா இதை எடுத்து பார்த்துப்பேன் பிளீஸ் காயு, பிளீஸ் காயு என அவன் கெஞ்ச....

பிளீஸ் பா இதுக்குமேல வேணாம் என்று சுடிதாரின் பின்னால் இருக்கும்  இரண்டு கொக்கிகளுக்கு விடுதலை கொடுத்து  சுடிதாரை முன்புறம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள...அந்த கே750ஜ கேமரா செல்போன் எந்த கூச்சமும் இன்றி காயத்திரியின் முன் பக்க திரட்சியான இடங்களை காம பசியோடு விழுங்கியது
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..28 comments:

 1. என்ன அண்ணே! கடைசில சோகம் ஆக்கீடிங்க.

  ReplyDelete
 2. கதை சூப்பர். முடிவு அதைவிட சூப்பர்

  ReplyDelete
 3. என்ன ஜாக்கி! நல்லதுதானே மோகன் பண்றார்... அவருக்கு ஏன் இப்படி கஷ்டத்தை கொடுக்கிறீங்க!

  ReplyDelete
 4. தப்பா நினைக்காதீங்க வளவளன்னு இருக்கு :(

  ReplyDelete
 5. சிறுகதைக்கு ஏற்ற முடிவு,ஆரம்பத்தில் கொஞ்சம் வள வளா டைப்,ஆனால் பினிஷிங் அருமை.இதனாலேயே சிறுகதை முழுதும் பிடித்துப்போகிறது.

  ReplyDelete
 6. படிக்கும்போது, கல்யாண மண்டபத்தில் நிற்பது போல இருக்கு.

  ReplyDelete
 7. This short story reminded one Balakumaran's. Nice flow. good luck jackie

  Lakshmi Ramkumar from Moscow, Russia

  ReplyDelete
 8. It is like reading Balakumaran's novel. The flow resembles his writing style.

  ReplyDelete
 9. கதையை இன்னும் சுருக்கினா நல்லாயிருக்கும் ......

  ReplyDelete
 10. the story remind me a cinema story. good fallow up. we expect more Thanasekar.
  lingam

  ReplyDelete
 11. Flow ரொம்ப நல்லா இருக்குங்க ஜாக்கி, இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 12. Appavin Manathum magalin vayathum. Some times kids are not understanding parent's views, caring ...
  Vivek

  ReplyDelete
 13. சிறு கதைன்னு சொன்னீங்க ..
  ரொம்ப பெருசா இருக்கே ?
  எனக்கு கதை பிடிச்சிருக்கு ..
  இருந்தாலும் எதோ குறையுது பாஸ்

  ReplyDelete
 14. என்னடா கதை வழவழன்னு போவுதேன்னு பார்த்தா, 3 வரியில எல்லாத்தையும் அடிச்சு நொரிக்கிருச்சு. ஜாக்கி, கலக்கல் சிறுகதை

  ReplyDelete
 15. very shocking at the end..
  Its happening..

  ReplyDelete
 16. இதில் உங்கள் தொழில்தான் தெரியுது... சிறுகதை தெரியலை...

  ReplyDelete
 17. கடைசி டுவிஸ்ட் அற்புதம்... ஆனாலும் முன்னாலேயே, என்னடா ரொம்ப நல்லவரா இருக்காரே, தப்பாச்சே என்று யூகிக்க முடிந்தது :)

  ReplyDelete
 18. கதை நன்றாக உள்ளது, நன்றி....

  http://try2get.blogspot.com/

  ReplyDelete
 19. //மோகன் போட்டோகிராபர் மட்டும் அல்ல... அவரை விசேஷகாரர்களின் வீட்டு பிள்ளை என்று சொல்லலாம்... அந்த அளவுக்கு மற்றவர்களிடம் மரியதையாகவும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்பவர்...மாம்பலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி.... போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார்...

  தினமும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்த பிறகு தன் பெண்ணிடம் இருந்து போன் வரும் ஆனால் இன்று போன்வரவில்லை...
  வேலையில் கவனம் சிதறியது, பெண்ணுக்கு போன் போட்டார்...

  எழாவது ரிங்கில் அவரின் பெண் பேசினாள்....
  காயத்ரி எங்க இருக்க????

  அப்பா கீர்த்னா வீட்ல புராஜக்ட் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்..
  அம்மாகிட்ட சொல்லிட்டேன்.. நைட்டு எட்டரைக்கு வந்துடுவேன்....

  சரி என்று போனை கட் செய்து விட்டு மோகன் நலங்கு நிகழ்ச்சியை படம் எடுத்துக்கொண்டு இருந்தார்
  ஒரு சின்ன பெண் நலங்கின் போது சில பொருட்களை குனிந்து எடுத்து உதவி செய்தது.. அந்த பெண் குனியும் போது மார்பு தெரிவதால்...மோகன் ஒரு கிளிக் கூட அடிக்கவில்லை.... அந்த சின்ன பெண்ணுக்கு தான் போட்டோக்களில் இருக்க வேண்டும் என்பதால் கேமராவுக்கு எதிர் திசையில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தது...அந்த பெண்ணாலேயே சில முக்கிய ஷாட்டுகள் மோகனால் எடுக்க முடியவில்லை... ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை மோகன் அழைத்தார்...குனிந்து எந்த பொருளை எடுக்கும் போதும் சுடிதாரை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோமா.... என்று சொல்ல... அந்த பெண் கண்களில் நன்றியுடன் சாரி அங்கிள் என்று சொல்லி விட்டு அடுத்த முறை விலகும் உடையில் மிக கவனமாக இருந்தது.....

  ஜெம்ஸ் மிட்டாயினால் சக்கரை தட்டில் பெண் மற்றும் மாப்பிள்ளை பெயர் எழுதி இருக்கும் தட்டில், பெண்ணின் ஜெம்ஸ் மிட்டாய் பெயர் கலைந்து இருக்க, அதே பெண் இப்போது குனிந்து சரி செய்யும் போது அப்படியே குனியாமல்... முதலில் உட்கார்ந்து,அதன் பிறகு குனியும் போது சுடிதாரின் மார்பு பகுதியில் துணி விலகாமல் அழுத்திக்கொண்டது....அதை பார்த்த மோகன் கண்ணாலே வெரிகுட் என்று சொன்னார்....மோகனுக்கு அப்படியே தன் மகளை பார்ப்பது போல் இருந்தது...

  காயத்ரி பிளீஸ் புரிஞ்சிக்கோ... நைட் உன் நினைப்பு வந்தா இதை எடுத்து பார்த்துப்பேன் பிளீஸ் காயு, பிளீஸ் காயு என அவன் கெஞ்ச....

  பிளீஸ் பா இதுக்குமேல வேணாம் என்று சுடிதாரின் பின்னால் இருக்கும் இரண்டு கொக்கிகளுக்கு விடுதலை கொடுத்து சுடிதாரை முன்புறம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள...அந்த கே750ஜ கேமரா செல்போன் எந்த கூச்சமும் இன்றி காயத்திரியின் முன் பக்க திரட்சியான இடங்களை காம பசியோடு விழுங்கியது//

  இவ்வளவுதாண்ணே கதை.. மோகனை நல்லவனாக்க அம்புட்டு விவரணை வேண்டாம்னு தோணுது.

  ReplyDelete
 20. கடவுள் தான் நல்லவங்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாருன்னா நீங்களுமா ?

  அது சரி, கஷ்டமே இல்லாம கதை போச்சுன்னா வானத்தைப் போல படம் மாதிரி ஆகிடும், சப்புன்னு...

  ReplyDelete
 21. The story was good with sad ending.. I believe the camera techniq which you have shared that might be your experience.. Anyway Keep writing.. I am expecting a comedy story from you..

  Ever your Fan

  ReplyDelete
 22. கதை சூப்பர் Boss.

  konjam kavithai padika

  http://www.alanselvampunchdialogues.blogspot.com/

  ReplyDelete
 23. கதை அல்ல பாடம்.
  ஒவ்வொரு ஒளிப்பட ஓவியனும்
  கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
  தம் தொழிலிலும், குடுமபத்திலும்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner