அவன் பசிக்கொடுமையில் தான் திருட வந்ததாக, அவன் எவவளவு சொல்லியும்...யாரும் கேட்கவில்லை... பூச்சி போல குனிந்த தலை நிமிராமல் நடக்கும், கலா அக்கா கூட, திருடனை அடிக்க துடப்பத்தை எடுத்து வந்து நாலு சாத்து சாத்தி விட்டு போனாள்... எல்லோருக்கும் வீரம் அன்று நின்று விளையாடியது.... இது ஒரு சாதாரண திருட்டு.... அப்புறம் போலிஸ் வந்து அழைத்து போனது அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை....
இதுவே நாடுகளின் கவுரவ சண்டையிலும், தன்மான சண்டையிலும் எதிரியிடம் மாட்டிக்கொள்ளும் போர்வீரர்கள் பலரின் நிலையை யோசித்து பாருங்கள்... அதற்கு மிக சமீபத்திய உதாரணம்... ஈழ போரின் போது வெள்ளைகொடி ஏந்தி, சரணடைய நடந்து வந்த நிராயுதபாணி புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றார்கள் ... உயிருடன் மாட்டிக்கொண்ட புலிகளை இரக்கம் இல்லாமல், உடைகளை கலைந்து, நிர்வாணமாக்கி சுட்டுக்கொன்றதை உலகம் அறியும்...இறந்து போன பெண் புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி, அதனுடன் புணர்ந்து, கெக்கே பிக்கே என சிரித்த, சிங்கள ராணுவ வீரர்களை யுடியூப் மூலம் பார்த்த பலர் அதை வெகு சீக்கரத்தில் மறக்க முடியாது....
பொதுவாக போர்களத்தில் உயிர் ஆசையில் எதிரிகளிடம் மாட்டி அனு அனுவாக சித்ரவதைபட்டு சாவதை விட, நொடியில் எதாவது ஒரு வழியில் இறப்பதே மேல்.....ஆனால் அப்படி எல்லாராலும் இறந்துவிட முடியாது... அப்படி முடியும் என்றால் சதாம் எப்போதோ இறந்து இருக்கலாம்....அனால் உயிர் மீதான ஆசை எல்லோருக்கும் பொதுவானது...
அமெரிக்காவீரர்கள், ஈராக் போரில் சிறைபிடித்த போர்கைதிகளை எப்படி எல்லாம் சித்திரவதை படுத்தினார்கள் என்பதை உலகம் அறியும்.... இருப்பினும்... இந்த படத்தில் அமெரிக்க விமானபடை வீரன் ஒருவன் எதிரிகளிடம் சிக்கி எப்படி தப்பித்தான் என்பதை மிக சுவாரஸ்யமாக சொன்னபடம் இது.. இதற்கு முன் நான் எழுதிய ரெஸ்க்யூ டவுன் என்ற திரைபடமும் இதே போல்தான் என்றாலும் இரண்டும் தனி தனி களம் என்பதை மறக்க முடியாது....
BEHIND ENEMY LINES-2001 படத்தின் கதை என்ன...???
போஸ்னியாவில் சண்டை முடிந்த நேரம்......அமெரிக்க போர்க்கப்பலில் இருக்கும் விமானிகள் இரண்டு பேருக்கு ஒரு அசெயின்மென்ட் தர படுகின்றது... அதாவது போஸ்னியாவில் போர் முடிந்ததும் வேவு பார்க்க இரண்டு விமானிகளுடன் ஒரு ஜெட் விமானம், அமெரிக்க போர்கப்பலில் இருந்து அனுப்பி வைக்கபடுகின்றது.... அந்த மிஷனுக்கு அட்மிரல் லெஸ்லி(Gene Hackman) இருக்கின்றார்.....போஸ்னியாவில் விமானங்கள் பறக்க தடை செய்ய பட்ட பகுதியில் விமானத்தை செலுத்தி தரையில் இருக்கும் இராணுவ நிலவரங்களையும், அவர்கள் புரிந்த குற்றங்களையும் புகைபடம் எடுப்பதுதான் மிஷனின் நோக்கம்....இதில் கிரிஸ்(Owen Wilson) மற்றும் அவரது நண்பரும் அந்த ஜெட் விமானத்தில் பறந்தபடி புகைபடம் எடுக்கின்றனர்... அனால் அவர்களுக்கு தெரியாது.. ஒரு முஸ்லீம் குழுவினரை ஈவு இரக்கம் இல்லாமல்,இன அழிப்பையும் புகைபடமாக எடுத்தது அவர்களுக்கே தெரியாது... அவர்கள் புகைபடம் எடுக்கும் போது போஸ்னியாவின் ஏவுகனை அவர்கள் பயணித்த ஜெட் விமானத்தை துளைக்க... உயிர் தப்பிக்க பராசூட்டில் இரண்டு விமானிகளும் குதிக்கின்றனர்... கிரிஸ் நண்பன் எதிரிகளிடம் சிக்க... ஒரு தோட்டாவை அவன் தலைக்கு கொடுத்து பரலோகத்தில் இருக்கும் பிதாவை தரிசிக்க அனுப்பி வைக்கின்றனர்... கிரிஸ் இந்த சம்பவத்தை பார்த்து விடுகின்றான்.. உயிர் தப்பிக்க வேண்டும்.... அமெரிக்கா உலக நாடுகளிடம் உதவி கோரமுடியாத நிலை...கிரிஸ் தான் எங்கு இருக்கின்றோம் என்ற தகவல் தெரிவித்தாலும் அந்த பகுதியில் வந்து மீட்பத சாத்தியம் இல்லாத நிலை.... புரியாத நிலபரப்பு??, எதிரி யார் நண்பன்யார்? எதுவும் தெரியாது... எந்த பக்கம் போக வேண்டும், அதுவும் தெரியாது? எப்படி உதவிக்கு வருவார்கள்? அதுவும் தெரியாது...இப்படி நிறைய யாதுக்கள் அடிக்கி கொண்டே போகும் போது... பக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் துரத்தில் கொல்ல துடிக்கும் எதிரி ராணுவம் இருக்க.....கிரிஸ் எப்படி தப்பிக்கின்றான்?
அவன் கடந்து வந்த பாதைகளை சீட்டின் நுனுக்கி வர வைத்து அந்த சம்பவங்களை விவிரித்து இருப்பார்கள்.... அந்த சுவாரஸ்யத்தை நீங்கள் நிச்சயம் இந்த விமர்சனத்துக்கு பிறகு ஒருமுறை பார்த்தே தீர வேண்டும்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
முதல் காட்சியில் கப்பலில் ஒரு பாலை வைத்து விளையாடும் ஆட்டத்தின் போது ,பின்னனியில் ஒலிக்கும் பாடலில் நம் மனமும் துள்ளும்....
வேலையை வீட்டு போக கிரிஸ் முடிவெடுக்கும் போது,அமெரிக்க ஆர்மி பற்றி சொல்லி ஜேன்ஹாக்மேன் அவனை மொடிவேட் செய்யும் இடம் தேர்ந்த வசனங்கள்...
பாராசூட்டில் பறந்து வரும் காட்சியில்ஒரு 180 டிகிரியில் வரும் ஷாட்டில் மாதா சிலையின் முகம் அழகாக இருப்பது போல காட்டிவிட்டு, கொஞ்சம் அடுத்தபக்கம் தெரிய வரும் போது அந்த பக்கம் மாதா முகம் சிதைந்து இருப்பதை காட்டும் போது... போரின் சிதிலங்களை இதைவிட சிறப்பான ஷாட்டில் காண்பித்து விட முடியாது.....
அதேபோல் கிரஸ் நண்பன் காலில் அடிபட்டு நகறமுடியாமல் கிடக்க.... சட்டென சத்தம் கேட்கும் போது லோ ஆங்கிலில் கேமரா வைத்து மலை உச்சியில் புள்ளி புள்ளியாக ஆட்கள் தோன்றி பெரிதாக நடந்து வரும் அந்த படைவீரர்கள் மற்றும் டாங் நகரும் அந்த ,ஒரு நிமிட காட்சி தேர்ந்த பிரேமிங் ரசனை....
கிரிஸ் தனியாக அணையில் இளைப்பாறும் போது பக்கத்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் காட்சி,நம்மை மிரளவைக்கும் காட்சி, அதே போல் கிரிஸ் சேற்றில் பிணங்களுடன் உயிர்தப்பும் காட்சியும் அருமை
கிரிஸ்பெர்னெட், பிளைட்டில் இருந்து விழுந்த பிறகு தனது நண்பனை கொல்வதை பார்த்து விட்டு உயிருக்கு பயந்து ஓடும் போதே... நாமும் கிரிஸ்பெர்னெட்டாக மாறிவிடுவதே இந்த படத்தின் வெற்றிக்கு அடிப்படைகாரணம் என்பேன்...
அந்த துரத்தும் வில்லனின் கண்கள் மற்றும் வெறியும் கவரும் விஷயங்கள்..
ஓவன் வில்சனின் கேரியரில் இந்த படம் குறித்து வைத்துக்கொள்ள வேண்டியபடம்....
எப்போதுமே உண்மை கதைகளுக்கு ஒரு மவுஸ் இருக்கும் இதுவும் உண்மைகதைதான்...
1995ல் ஒரு அமெரிக்க விமானபடை வீரர்... போஸ்னியாவில் அவர் சென்ற விமானத்தை சுட்டு விழ்த்தபட்டு, பாராசூட்டில் உயிர் பிழைத்து, 6 நாள் எதிரிகளிடம் போக்கு காட்டி, தப்பித்து பிறகு அமெரிக்க படையால் மீட்கபட்டு இருக்கின்றார்.... என்னை கேட்காமல் என்கதையை படமாக எடுத்து விட்டார்கள் என்று கோர்ட்டில் மானநஷ்ட்டஈடு வழக்கு போட்ட கதையும் நடந்தது....
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் அதற்குமுன் ஜேன் ஹெக்மேன் வீரர்களுடன் உரையாடும் காட்சியும்... கடைசிவரியாக நமது பையனை மீட்டு வரலாம் என்று சொல்லும் காட்சியிலும், அதன் பின் இராணுவ உடையில் 96 பிரேம்சில் ஸ்டைலாக நடக்கும் போது, தியேட்டரில் விசில் சத்தம் கதை துளைத்தது....
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்...
Directed by John Moore
Produced by John Davis
Written by Jim Thomas
(story)
John Thomas
David Veloz
Zak Penn (screenplay)
Starring Owen Wilson
Gene Hackman
Vladimir Mashkov
Joaquim de Almeida
David Keith
Olek Krupa
Music by Don Davis
Cinematography Brendan Galvin
Editing by Paul Martin Smith
Studio Davis Entertainment
Distributed by 20th Century Fox
Release date(s) November 17, 2001 (San Diego, California)
November 30, 2001
Running time 106 minutes
Country United States
இது பார்த்தே தீர வேண்டிய படம்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
நல்ல படம் ஜாக்கி.. அருமையா எழுதிரூகிங்க :)
ReplyDeletegood narration.
ReplyDeleteதலை!!!! கலக்கிட்டீங்க.... நான் சென்னைக்கு வந்த புதுசில் பார்த்து பிரமித்த படம்.... இந்த படத்தோட நெறைய பைட் சீன்கள் மகேஷ் நடிச்ச "சைனிகூடு"ங்கிற ஒரு பயங்கர மொக்கை தெலுகு படத்துல சுட்டிருப்பாங்க....
ReplyDeleteமுடிஞ்சா என்னோட வலைப்பக்கத்தை பார்க்கவும்...
ReplyDeletehttp://shiv-luck.blogspot.com/
எல்லாம் ஒரு விளம்பரம்தான் தலை...
Running for life க்கு இது ஒரு நல்ல படம்.
ReplyDeleteஉங்கள் நடையில் மீண்டும் ஒரு அற்புதமான விமர்சனம்.
ReplyDeleteஅண்ணே மிகவும் பிடித்த படம்,பிரம்மாண்ட படைப்பு,அருமையாக எழுதினீங்க
ReplyDelete//கிரிஸ் சேற்றில் பிணங்களுடன் உயிர்தப்பும் காட்சியும் அருமை// மதராஸபட்டினம்ல காமிச்சுட்டாங்க பாஸூ.
ReplyDeleteபோர் சம்பந்த படங்கள் சில நன்றாக விருவிருப்பாக இருக்கும். சில போரடித்துவிடும். இது நன்றாக இருக்கும் போலிருக்கிறதே. நன்றி.
ReplyDeleteஅன்புள்ள ஜாக்கி ,
ReplyDeleteவழக்கம் போல உங்கள் விமர்சனம் அருமை,படம் பார்த்த திருப்தியை அளிக்கின்றது.முடிந்தால் ஏதாவது நல்ல ஆங்கில நகைச்சுவை திரைபடத்தை அறிமுகபடுத்தவும்.
தோழமையுடன்
ஷிவா
அண்ணா உங்க விமர்சனமும் படத்தை போலவே super,Behind enemy lines இன் அடுத்தடுத்த பாகங்களும் பார்த்திங்களா??இப்பவும் இந்த படம் தியேட்டரில் போகுதா?
ReplyDeleteநேரம் இருந்தால் Guns of navarone and Das Boots பாருங்கள்
தலைவா,
ReplyDeleteஇந்த படத்துல ஓவென் வில்சென் பிணங்களோட கிடக்கும்போது satelite view ல gene hackman பாபாறு, but போட்டோ லம் satelite லே எடுதுருகலமே,எதுக்காக fighter ஜெட் அனுப்பனும் . பட் அதுக்கும் அவங்க ஒரு reson சொல்லி இருப்பாங்க ஆனா அது நம்பும் படியா இருக்காது. இத தவிர மத்தபடி படம் கலக்கல் action treat .
நான் எப்பவுமே படத்தோட கதைய விட ஒரு படத்தோட script & screenplay நல்ல இருந்தா படம் நல்ல இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவன்.
vote - done .
படம் சூப்பர் சார் , 100 இக்கு 150 % ரொம்ப கரெக்ட் விமர்சனம்,
ReplyDeleteHats off Jackie Sekar......
Excellent written.....
அருமையான விமர்சனம்.......... DVDக்கு இப்பவே ஆர்டர் பண்ணிவிடுகிறேன்..
ReplyDeleteஇரண்டு முறை பார்த்த படம்... தமிழில்கூட டப் செய்யப்பட்டு டிவியில் பார்த்தாக நினைவு... நம் தமிழ்ப் படங்கள் வீண் கூப்பாடு, மூளையற்ற சண்டைக் காட்சிகள் குத்துப் பாட்டுக் காட்சிகள் டுயட் காட்சிகள் என்று சகதியில் மாட்டிக் கொண்டு.... இது போன்ற படங்களை எந்த நாட்களில் எடுப்பார்களோ என்று ஏக்கம்தான் மிஞ்சுகிறது... ஒரு வேளை நீங்களும் நானும் சேர்ந்து அப்படி முயற்சி செய்வோம்...
ReplyDeleteபத்ரிநாத்
ஜாக்கி,
ReplyDeleteசமீபத்தில் கூட இந்த படத்தை பார்த்தேன். நாட்டுப் பற்று + உயிர் பயம் கலந்த நாயகனின் நடிப்பு பிரமாதம்.
Must see movie.
அன்பு நித்யன்.
பலமுறை பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம்!
ReplyDeleteநானும் இந்திய விமானப் படையில் 15 வருடம் பணிபுரிந்தேன். ரேடார்-ல் வேலை. எனக்கு மிகவும் பிடித்த படம். இப்பொழுதும் ஸ்டார் மூவிஸில் போட்டால் தவறாது பார்ப்பேன்
ReplyDeleteya it was a nice film
ReplyDelete