(KOMARAM PULI ---TELUGU/2010 )எஸ் ஜே சூர்யாவின் தெலுங்கு ஆக்ஷன்படம்...

தமிழ் இயக்குனர் எஸ்ஜேசூர்யாவின் இரண்டு வருட கால உழைப்பு... இந்த தெலுங்கு படத்தின் மீதான ஈடுபாட்டின் காரணத்துக்காக அவர் தமிழில் எந்த படமும் செய்யவில்லை...அவரின் முதல் ஆக்ஷன் பேக்... இந்த கொமரபுலி என்ற தெலுங்கு படம்


பவர் ஸ்டார் பவன் கல்யாண்.. இவர் நடிகர் சிரஞ்சிவியின் தம்பி... முன்கோபக்காரர்...கையில் துப்பாக்கி மட்டும் இவரிடம் கொடுத்து விட்டால் எத்தனை பேரை வேண்டுமானலும் சுட்டுவிடுவார் அந்த அளவுக்கு கோபக்காரர்... தெலுங்கில் மாஸ் ஆடியன்ஸ் வைத்து இருப்பவர்...நிஜத்திலும் அப்படித்தான்... சிரஞ்சிவிமகள் காதல் திருமணத்தின் போது இவரின் கோபத்தை நாடு அறியும்...

ஏ ஆர் ரகுமான்.... ஆஸ்காருக்கு பிறகு இசை அமைக்க ஒத்துக்கொண்டபடமா ?என்று தெரியவில்லை ஆனால் இது அவருக்கு முதல் நேரடி தெலுங்குபடமா? என்றும் எனக்கு தெரியவில்லை...

இப்படி மூன்று பெரிய ஜாம்பவான்கள் கமிட் ஆகிய படம் கொமரபுலி...

கொமரம்புலி தெலுங்கு  படத்தின் கதை என்ன???

கொமரம்புலி (பவன் கல்யாண்) ஒரு போலிஸ் ஆபிசர்... தாய்லாந்தில் நமது இந்திய மந்திரி கொல்ல நடிக்கும் சதியை முறியடிக்கின்றார்...இந்தியாவுக்கு வந்ததும் அவருக்கு மந்திரி பாராட்டு விழா நடத்துகின்றார்... அதில் கொமரம்புலி ஒரு ஐடியா சொல்கின்றார் என்னவென்றால்... ஊருக்கு ஒரு ரூபாய் காயின் போன் வைத்து, அதில் இன்பில்ட்கேமரா வைத்து யார் போன் செய்தாலும் கண்ரோல் ரூமில் தெரியும்... அவர்கள் சொல்லும் செய்தியின் உண்மைதன்மைக்கு ஏற்றது போல் உடனடி நடவடிக்கை இருக்கும்... அந்த பிரச்சனையை சரி செய்யும் ஆபிசர்கள் கருப்பு  சீருடை, அணிந்து இருப்பார்கள்...
இந்த குழுவுக்கு புலி டீம் என்று பெயர் வைத்து  இருக்கின்றார்கள்.. இதன் தலைவர் பவன்கல்யான்...  பிரச்சனை என பொது மக்கள் போன் செய்ததும் உடனே 4  பிளபக்கெட்ஸ்உடன் பஜிரா காரில் ஏறி பிரச்சனையை தீர்கக புறப்பட்டுவிடுகின்றார்....பவன்கல்யாண் அம்மா (சரன்யா) ஒரு உண்மையை போலிஸ் ஆபிசர் மகனிடம் சொல்லாமல் வளர்க்கின்றார்...புலி யொட அப்பாவும் ஒரு போலிஸ் அப்பாதான்.. அவரை வில்லன் சாகடிச்சிடறான்...இது நடக்கறது 1985... அந்த ரகசியத்தை அந்த அம்மா கிளைமாக்சில்  சொல்லுது...அப்புறம் பவன்கல்யான் காதலி நிக்கிலா பட்டேல்....ஐயோ வேனாம் சாமி....இதுக்குமேல என்னை எழுத சொல்லாதிங்க....இதுக்கு காப்பியோ அல்லது இன்ஸ்பிரேஷனோ எதாவது ஒரு நல்ல கதையை உருவி இருந்து இருக்கலாம்... கஜினி ஓடலை???

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படம்விட்டு வெளியே வரும் போதே  நிறைய பேர் தலையில் கை வைத்தபடி வந்ததும் சரி இந்த 120ரூபாய் டிக்கெட்டை, வித்துட்டு நல்ல சாப்பாடு வெளிய சாப்பிடலாம் என்று நினைத்தேன்...

சரி ரகுமான் மியூசிக் எப்படி இருக்கும்?, மத்த விசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்க  போனேன்....

ஒரு சீன் ஹெலிகாப்டர்ல பறந்துகிட்டே போய் மனித வெடிகுண்டா மந்திரி காரில் மோத வருபவனை பவன் கல்யாண்,.,. அப்படியே அலக்காக தூக்கி... வேண்டாம் சாமி எழுதும் போதே கை நடுங்குது...

எஸ்ஜே சூர்யா,பவன்கல்யாண் இரண்டு பேரின் மேனாரிசங்களும் எப்போதும் ஒத்து போகும் ரெண்டு பேரும் துரு துரு என்று இருப்பார்கள்...

இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று பவன் சொல்ல கடைசி ரிலிஸ்வரை சூர்யா தனது கொள்கையில் உறுதியாக இருக்க இந்த பஞ்சாயத்து படம் ரிலிஸ் ஆகும் வரை தொடர்ந்தது....

ரகுமான் ஒரு அம்மா பாடலை தெலுங்கில் பாடி இருக்கின்றார்... ஒரு பாடல் வழக்கம் போல ஹைபிட்சில் பாடி இருக்கின்றார்..எப்பத்தான் இப்படி ஹைபிட்சில் பாட வருகின்றதோ???


இந்த படம் இதுவரை 12 கோடியும் தெலுங்கு தேசத்துக்கு வெளியே 7 கோடியும் சம்பாதித்து இருப்பதாக சொல்கின்றது.. இணைய வட்டாரம்... அப்ப படம் ஹிட்தான்...

நிக்கிலா பட்டேல் ஏதோ ஒரு வட இந்திய மாடல் என்று நினைக்கின்றேன்... அவர் வரும் இடங்களில் எல்லாம் 120 ரூபாய் வீண் போகவில்லை என என் மனசாட்சி சொல்லிக்கொண்டு இருந்தது,,,

ஆனால் அந்த பெண் ஒரு ஆங்கிலில் அழகாகவும் சில ஆங்கிலில் வேறுமாதிரியும் தெரிகின்றார்...  சாதாரணமாகவே டிரஸ் இல்லாத சிக்கனை விரும்பும் சூர்யா இந்த படத்தில் உறித்து காய போட்டு இருக்கின்றார்....

மிக முக்கியமாக பவனை மயக்க புடவை கட்டி ஒரு ஜாக்கெட் போட்டு இருக்கின்றார் பாருங்கள்.. அந்த மாதிரி ஜாக்கெட்டை நான் எங்கும் பார்த்ததில்லை. அதை போட்டுக்கொண்டால் புழுக்கமே ஏற்பாடாது எல்லா பக்கமும் பிரி ஏர்....சர்குலேஷன்...

 பாடல்களில் அவர் போடும் ஆட்டங்கள்..நமக்கு பயத்தை தருகின்றது... அதைவிட வில்லனின் காதலியாக  இரண்டு மூன்று காட்சிகளில் வரும் ஸ்ரையோ போடும் ஆட்டம் இருக்கின்றதே.. அது தெலுங்கு சினிமா எப்போதும் மறக்கவே முடியாத ஆட்டம்...
கேமரா தொப்புளில் இருந்து கேமரா கீழே  இறங்குகின்றது சரி இதோ உடை வந்து விடும் என்று நானும்  பார்த்துக்கொண்டே இருந்தேன் வரவேஇல்லை... அப்புறம் கேமராவுக்கு இந்திய சென்சார் பயத்தில் உடையை காட்டிவிட்டது...ஸ்ரேயோ இடுப்பை நெளித்து போடும் அந்த ஆட்டத்தை சரக்கு அடித்து விட்டு பார்த்தால்    போதை உடனே தெளிவது நிச்சயம்....

ஒரு தமிழ் இயக்குனர் தெலுங்கு மக்களின் ரசனை அறிந்து பல இடங்களில் காட்சிகள் அமைத்து இருக்கின்றார்... அதே போல் ரகுமானை படத்துக்கு படம் எப்படி பிடிக்கின்றார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது...

இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்... நிறைய செலவு செய்து இருக்கின்றார்கள்..நம்ம ஊர் சரண்யா மற்றும் நாசர் படம் முழுவதும் வருகின்றார்கள்...


புலி இந்த டைட்டிலை தமிழ் படத்துக்கு வைத்து இருந்தால் அந்த படம் வெளிவருவதில் பல சிக்கல் எற்பட்டு இருக்கும்...

பவர் ஸ்டாராட நு வு என்று பவன் கல்யாண்  கைகளில் மின்சாரம் பாய்ச்சும் ரகம் நல்ல காமெடி...

பவன் காரில் பிரச்சனை தீர்க்க போகும் பல காட்சிகள் நமது சென்னை  ஈசி ஆரில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்...

படத்தின் டிரைலர்....


படக்குழுவினர் விபரம்

Directed by     S. J. Suryaah
Produced by     Singanamala Ramesh
Written by     S. J. Suryaah
Starring    

    * Pawan Kalyan
    * Nikeesha Patel
    * Manoj Bajpai
    * Nassar
    * Charan Raj
    * Ali
    * Shriya

Music by     A. R. Rahman
Cinematography     Binod Pradhan
Distributed by    

    * Geetha Arts
    * Ficus

Release date(s)     10 september 2010
Country     India
Language     Telugu
Budget     47 crores

மாயாஜல் ஸ்கிரின் 6 தியேட்டர் டிஸ்கி...

தெலுங்கு படத்துக்கு நிறைய சாப்ட்வேர் முகங்கள் தன் பாய்பிரண்ட் கேர்ள் பிரண்டோடு வந்து இருந்தார்கள்...

ஒரு பெண் படம் ஓடும் போது  சத்தமாக தெலுங்கில் பேசியபடி இருக்க ஒரு நண்பர் எழுந்து கத்த அந்த பெண் கைபேசியை  அனைத்தார்...

பவன் வரும் இடங்களில் கைதட்டல் காதை பிளந்தது...
==========


இந்த படம் வழக்கமான தெலுங்கு படம்.....

==============================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

29 comments:

 1. Enna Jackie sir romba sooda irunthathu unga pathivu. kittathatta oru varusathukku mela unga blogai daily basisla pakkauravan. Enna comments than poda mudialy. Any way ithukku melayavathu regulara poda muyarchikkiren.

  ReplyDelete
 2. Athe nakkal enna naanthan first pola irukku. Any way nalla nakkal vimarsanam. Onnu rendu shriya padattha potta koranja poidum. ARR already rendu moonu telugu padathukku music pottu irukkar

  ReplyDelete
 3. ஆரம்பத்திலே நல்லாதானே இருந்தாரு எஸ்.ஜே.சூர்யா! என்ன ஆச்சு அவருக்கு.... இதே படத்தை தமிழ்லே அவரே ஹீரோவா நடிக்கப் போவதாக கேள்வி.... நாடு தாங்குமா...

  ReplyDelete
 4. மனோஜ் பாஜ்பாய் கையில் கன் இருக்கும்.பவன் கல்யாண் நிராயுதபாணியாக இருப்பார்.பவன் கல்யாண் உடனே கோபமாக பார்க்கும் போது,மனோஜ் பாஜ்பாயிற்கு பவன் புலி போல் தெரிவதும்,உடனே அவர் கன்னை கீழே போடுவதும் உச்ச கட்ட காமெடி.

  ReplyDelete
 5. தலைவரே, பாக்குற மாதிரி இருக்குதா படம்?

  ReplyDelete
 6. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் போட்டோவை தினமும் மாற்றவும்...

  ReplyDelete
 7. மிக அருமை உங்களின் விமர்சனம்

  ReplyDelete
 8. என்ன சொல்ல வரீங்க தல ? பிகருங்களை தவிர படத்துல ஏதாச்சும் நல்லா இருக்கா இல்லியா ?

  ReplyDelete
 9. பின்னுட்ட்ம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

  உங்களுக்கு இந்த படத்தின் கதையை படித்தாலே தெரிந்து விடடுமே..

  ReplyDelete
 10. Enna "Padam" Sir Idhu- Oery varila sollanumna, Ilaya?

  ReplyDelete
 11. Hello sir eppadi irukinga. ungaloda ellam blogs padipen romba super.

  ReplyDelete
 12. நன்றிகள்... நான் தெலுங்குப் படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு... இப்படியான நல்ல தெலுங்குப் படங்கள் வந்தால் பார்ப்பதுண்டு......

  ReplyDelete
 13. தலைவா.. நிக்கிலா படேல் இல்ல. நிகீஷா படேல்.. எங்கயோ இங்கிலாந்து ல இருந்து கூட்டி வந்து இருகாங்க ... இந்த படம் ஆடியோ ரிலீஸ் கு அவங்க ஊரு முதல்வர் வந்தாரு .. பாவம் .. சூர்யா நிலைமை தான் மோசம்.. ஆந்திரா பக்கம் இனி போக முடியாது போல..படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை என்று ஒரு கருத்து. இந்த மாதிரி போலீசார் படங்களை அவர்கள் டாக்டர் ராஜசேகர் காலத்திலே பார்த்து பழகியவர்கள்.

  ReplyDelete
 14. ஜாக்... தங்கள் தளத்தை மிக சமீபத்தில் இருந்துதான் படித்து வருகிறேன்... சில பதிவுகளில் இம்ப்ரெஸ் ஆகி உங்களோடு போனில் தொடர்பு கொண்டு பேசினேன்....

  ஆனால் சமீபத்தில் கமல் பற்றிய பதிவில் தங்கள் கருத்தில் உடன்பாடு இல்லைஎன்றாலும் உங்களிடம் போனில் கூறிவிட்டு உங்கள் கருத்தை மதிக்கிறேன் என்று கூறினேன்....

  ஆனால் எதிர்வினை என்ற தலைப்பில் நீங்கள் ரஜினியை தேவையில்லாம் நக்கல் அடித்திருப்பது பிடிக்காததால் உங்கள் மேலிருந்த ஒரு மரியாதை நீங்கிவிட்டது.... இனி உங்கள் வலைக்கு வருவதை விரும்பவில்லை. இது என் கடைசி பின்னூட்டம்... பை... பை... பை

  ReplyDelete
 15. நன்றிகள்... நான் தெலுங்குப் படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு... நல்ல தெலுங்குப் படங்கள் பார்ப்பதுண்டு......

  ReplyDelete
 16. அண்ணே.. கடைசில நீங்க என்ன சொல்ல வர்ரீங்கண்ணே புரியல...நல்லாருக்குங்குரீங்களா? இல்ல நல்லாலன்னு சொல்ரீங்களா? ஒன்னுமே புரியல... ஒரு வேளை S.J.சூரியா மாதிரி நீங்களும் இருக்கு இல்லைன்னு ஆரம்பிச்சிட்டீங்களா? சரி விடுங்க

  ReplyDelete
 17. ஏன் முத்து சிவா அந்த கமென்ட்டை டெலிட் பண்ணனிங்க... சரிவிடுங்க.. அந்த படத்து கதையை எழுதியதிலேயே சொல்லிவிட்டேன்.. படம் எப்படி என்று ... நுனிபுல் மேஞ்சிட்டு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்....??
  படம் சரியில்லை என்று நான் எந்த படத்திலும் எழுதுவது என் பாலிசி அல்ல..

  சரிங்க தம்பி அடுத்தவாட்டி கேட்கும் போது நைல்ல படிச்சிட்டு கேளுங்க..??

  ReplyDelete
 18. நுனிப்புல் மேஞ்சிட்டு நா comment போடலண்ணே....முழுசும் படிச்சிட்டு தான் போட்டேன்.. அந்த comment oda கடைசி வரி உங்களை காயப்படுத்தும்னு எனக்கு தோனிச்சி... அதான் எடுத்துட்டேன்...மத்தபடி நா போட்டுருக்கது கரெக்ட்தாண்ணே!

  ReplyDelete
 19. படத்தோட கதைய சொல்றதுக்கு review தேவயில்லண்ணே... தரத்த சொல்றதுக்கு தான் review..

  ReplyDelete
 20. .இது நடக்கறது 1985... அந்த ரகசியத்தை அந்த அம்மா கிளைமாக்சில் சொல்லுது...அப்புறம் பவன்கல்யான் காதலி நிக்கிலா பட்டேல்....ஐயோ வேனாம் சாமி....இதுக்குமேல என்னை எழுத சொல்லாதிங்க....இதுக்கு காப்பியோ அல்லது இன்ஸ்பிரேஷனோ எதாவது ஒரு நல்ல கதையை உருவி இருந்து இருக்கலாம்... கஜினி ஓடலை???//

  அந்த படத்ததோட கதை சொல்லறபோதேதான் அந்த படத்தோட தரத்தையும் சேர்த்து சொல்லிட்டேனே...
  அதுவும் புரியலையா? போங்க தம்பி... அதுவும் இல்லாம என் விமர்சனம் இப்படிதான் தம்பி இருக்கும்....  மற்றபடி காயபடுத்தும்னு வரியை நீங்கி பின்னுட்டம் இட்டதுக்கு நன்றி,,

  ReplyDelete
 21. தல,
  //இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று பவன் சொல்ல கடைசி ரிலிஸ்வரை சூர்யா தனது கொள்கையில் உறுதியாக இருக்க இந்த பஞ்சாயத்து படம் ரிலிஸ் ஆகும் வரை தொடர்ந்தது....//

  மேட்டர் என்னன்னா புலி என்ற பேர்ல ஏற்கனவே ஒரு டைட்டில் இருக்கு. அதனால இவங்க கோமரம் புலி என்று பெயர் வைத்தார்கள். ஆனால் தெலுங்கானாவில் கோமரம் என்றொரு இடம் இருக்கிறது. அந்த மக்கள் பிரச்சினை செய்யவே இப்போது ரிலீஸ் ஆகும்போது வெறும் புலி என்றே பெயரிட்டுள்ளார்கள். இந்த பெயர் மாற்றம் மேட்டரால் அமெரிக்காவில் இந்த படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் (நம்ம ஹாலிபாலா பார்த்திருப்பாரு என்று நம்புறேன்).

  அதுவும் இல்லாம சென்னையில் மட்டும் ஒன்பது தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கும் தெலுங்கு படம் இது. முதல் நாள் அன்று ஐம்பது ருபாய் டிக்கெட் இருநூற்றி ஐந்ம்பது வரை பிளாக்கில் விற்றார்களாம் (என்னோட பிரண்டு அதையும் விடாம வாங்கி பார்த்துட்டு தான் வந்தாரு).

  //இந்த படம் இதுவரை 12 கோடியும் தெலுங்கு தேசத்துக்கு வெளியே 7 கோடியும் சம்பாதித்து இருப்பதாக சொல்கின்றது.. இணைய வட்டாரம்... அப்ப படம் ஹிட்தான்...// படம் எதிர்பார்த்த அளவுக்கு பிலாக்பஸ்தர் ஹிட் இல்லை என்றாலும்கூட மொக்கை இல்லை. இன்றுகூட பல தியட்டர்களில் படம் என்பது சதவீதம் நிரம்பியே இருக்கிறது.

  சிரஞ்சீவி தம்பி என்பதால் இவரை எதிர்க்கும் ஆன்லைன் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதானாலேயே இந்த படத்தை மொக்கை செய்து பல மெயில்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்போதுகூட ஒரு மின் அஞ்சலை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்.

  //நிக்கிலா பட்டேல் ஏதோ ஒரு வட இந்திய மாடல் என்று நினைக்கின்றேன்... அவர் வரும் இடங்களில் எல்லாம் 120 ரூபாய் வீண் போகவில்லை என என் மனசாட்சி சொல்லிக்கொண்டு இருந்தது,,// நிகிஷா படேல் லண்டன்ல பொறந்து வளர்ந்த ஒரு குஜராத்தி பொண்ணு. நாலு வருஷத்திற்கு முன்னாடி மிஸ் வேல்ஸ் போட்டியில் பைனலிஸ்ட். இதான் மொத படம்.

  //தமிழ் இயக்குனர் எஸ்ஜேசூர்யாவின் இரண்டு வருட கால உழைப்பு... இந்த தெலுங்கு படத்தின் மீதான ஈடுபாட்டின் காரணத்துக்காக அவர் தமிழில் எந்த படமும் செய்யவில்லை...அவரின் முதல் ஆக்ஷன் பேக்... இந்த கொமரபுலி என்ற தெலுங்கு படம்// இந்த கதையை தான் விஜய்க்கு சொல்லி வொர்க் அவுட் ஆகாம பின்னர் அக்ஷய் குமார், மகேஷ் பாபு என்று பலரிடமும் முயற்சி செய்து டேட்ஸ் கிடைக்காமல் பின்னர் பவன் கல்யாணிடம் வந்தார். இந்த படத்தை புக் செய்யும்போது அவருடன் ஓரளவுக்கு பழக்கமாகி இருந்தேன். அவர் முதலில் புக் செய்தது ஹன்சிகா மோத்வாணியை. ஆனால் படம் பயங்கரமாக லேட் ஆகவே (நடுவில அண்ணன் சிரஞ்சீவி அரசியலில் குதித்து, பவன் கல்யான் ஷூட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு பிரச்சாரம் செய்யப் போனது என்று) ஹன்சிகா விலகிக்கொண்டார். அதனால் தான் படம் லேட்.

  அந்த இன்ஸ்பெக்டர் ஹுசேன் என்று ஒரு பாத்திரம் வருகிறதே அது நம்ம சூர்யாதானுங்கோவ், நல்லா உத்து பாருங்க.

  ReplyDelete
 22. கந்தசாமி படக் கதைபோல இருக்கே

  ReplyDelete
 23. நன்றி விஸ்வா நீண்ட விளக்கத்துக்கு.. ஒரு காட்சியில் நமது சூர்யா நடித்து இருக்கின்றார் என்ற ஒரு வரி எழுத நினைத்து அவசரத்தில் மறந்து விட்டேன்....

  மிஸ் வேல்ஸ்ல பைனலிஸ்ட்டா... அதான் அவ்வளவு துணிச்சலா...???லண்டன் பொண்ணுன்னா அர்டித்தான் இருக்கும்..

  நன்றி விஸ்வா..

  ReplyDelete
 24. கோவி, அது போலான பேன்டசி மூவீ இது.. சில இடங்களில் இரண்டும் ஒத்து போகும்.....

  ReplyDelete
 25. கஜினி ஓடவில்லையா என்ற ஒரு வரி போதும் உஙகள் மேதமையை மெய்ப்பிக்க.... அசத்துரீஙக சார்...

  ReplyDelete
 26. tamil ku oru villu na... telungu ku oru puli

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner