(GAYAM-2 TELUGU) புதிய தெலுங்குபட திரைவிமர்சனம்...

தெலுங்கு படங்களை இப்போது தொடர்ந்து பார்த்து வருகின்றேன்....சப் டைட்டில் இல்லாமல் புரிந்து கொள்ளவும்..தியேட்டரில்பார்க்கின்றேன்... படங்கள் நன்றாகவும் புரிகின்றது....கஜபதிபாபுவை எனக்கு அனுக்க குண்டோ ஒக்க ரோஜு படத்தில், அந்த ஹீரோவை பிடித்தது.. ஏன் அந்த படமே எனக்கு ரொம்பவும் பிடித்தது...நல்ல திரில்லர்... அந்த படம் பார்த்தே  தீர வேண்டியபடம்... அந்த படம் பற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்



GAYAM-2 TELUGU படத்தின் கதை என்ன?

ஹிஸ்ட்ரி ஆப் வயலன்சுன்னு ஒரு படம் எழுதி இருந்தேன்...அந்த படத்தை பற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்.. சரி  வாசிச்சிட்டிங்களா... நல்லது... அந்த படத்துல நம்ம நேட்டிவிட்டிக்கு ஏத்தா போல டானுக்கு பதில் அரசியல்வாதி கேரக்டர் வச்சிக்கிங்க....ஏற்கனவே.. காயம் ஒன்னு படத்தோட கதை முடிவில் இருந்து இந்த கதை ஆரம்பிப்பது போல இந்த கதையை தேர்ந்து எடுத்து இருக்ன்றார்கள்...பிளாஷ்பேக் காட்சிகளுக்கு முதல்பாக, கதையை பயண்படுத்தி இருக்கின்றார்கள்.... அவ்வளவுதான்... நிறைய சீன் அப்படியே.....ஹைதராபாத்தில் இருந்து பேங்காக் போய் திரும்ப ஹைதராபாத் வருவது போலான கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படத்தின் முதல் பாகம் 1993ல் வ்ந்தது... 2010ல் ஹாலிவுட் படத்தை அப்படியே சீன்களை காப்பி அடித்து எடுக்கபட்டு இருக்கின்றது...

இசை இளையராஜா.. ரொம்ப நாளைக்கு அப்புறம் ராஜாவின் இசை... படடத்தின் முதல்  இரண்டு சீனக்ள் பார்க்கும் போதே...ஹிஸ்ட்டிரி ஆப் வயலன்ஸ் ஞாபகத்துக்கு வந்து விட்டது,.... அதன் பிறகு படத்தில் மனது ஒட்டவில்லை...

முதலில் பின்னனி இசை... கேமரா ஆங்கிள்ஸ், விமலாராமன் கவர்ச்சிகளில் மனது  செலுத்த ஆரம்பித்தேன்.. இடைவேளைக்கு பிறகு படத்தில்  நிறைய மாறுதல்கள் நம் நேட்டிவிட்டிக்கு ஏற்றது போல் செய்து கொஞ்சம் சுவாரஸ்யபடுத்தி இருந்தார்கள்...

மிக முக்கியமாக கோட்டா சீனிவாசராவ்... முதல் பாகத்தை போலவே... இந்த படத்திலும் புகுந்து விளையாடி இருக்கின்றார்... முக்கியமாக அவர் லாயர் நண்பன் இறக்கும் போதும்... அவரது மகன் இறக்கும் போதும் வெளிபடுத்தும் நடிப்பும் உடல்மொழியும் அற்புதம்.....தேர்ந்த நடிகன் என்றால் அப்படித்தான் இருக்க  வேண்டும்...

 ஆங்கில படத்தில் படிகட்டில் ஒரு வெறித்தனமான உடல்உறவுகாட்சி இருக்கும்... அந்த ஆங்கில படத்து கதாநாயகியின் முதுகுக்கு கூட நான் அப்பபோது கவலை பட்டதாக ஞாபகம்...

அது போலவே ஒரு படி சீன் படத்தில் வைத்து இருக்கின்றார்கள்.. விமலாராமன் உதடுகளுக்கு, கெஜபதிபாபு உதடுகள் அவ்வப்போது ஒத்தடம் கொடுக்கின்றன....

ஒரு பாடல் காட்சியில்  நைட் டிரஸ் உள்ளே பிராவில் இருப்பது போல விமலாராமன் வர பதறிபோய்விட்டேன்.. அந்தளவுக்கு தெலுங்கு சினிமா நாலுகால்பாய்சலில் பாய்கின்றதோ என்று... அது நைட் டிரஸ் மேல் அது போல டிசைன் செய்து இருக்கின்றார்கள்...
ஆங்கில படத்தில் அந்த படிக்ட்டு சீனுக்கு பதில் அந்த நைட் டிரஸ்சில்.... உறவை மட்டும்தான் காட்டவில்லை... மற்றது எல்லாத்தையும் இந்திய சென்சார்.. கைகட்டி கால் மேல்  கால் போட்டு அந்த பாடலை வெளியிட்டு இருக்கின்றது..நிச்சயம் அந்த பாடல் இரவு நேர மிட் நைட் மசாலாவை சில நிமிடங்கள் ஆக்கிரமிக்கும்...

விமலாவும் ரொம்ப கிறக்கமாகவும் கிக்காகவும் இருக்கின்றார்...தராளமாய், தராளமாய் நடிக்கிக்னறார்


படத்தின் டிரைலர்..



படக்குழுவினர் விபரம்....
Directed by    Praveen Sri
Produced by    Dr Dharmakartha C
Screenplay by    Rajendra Reddy
Starring   
Jagapathi Babu
Vimal Raman
Tanikella Bharani
Kota Prasad
Kota Srinivasa Rao
Jeeva
Harsha Vardhan
Music by    Ilayaraja
Cinematography    Anil Bandari
Editing by    Praveen Pudi
Release date(s)    September 3, 2010
Country    India
Language    Telugu
Preceded by    Gaayam

 சென்னை காசினோ தியேட்டர் டிஸ்கி....
தகிட தகிடன்னு ஒரு படம் 3 மணிஷோ பாத்தேன்.. அது அப்படி ஒன்னும் எழுத சிறந்தபடம்னு  எனக்கு ஒன்னும் தோனலை...அப்படியே அடுத்த ஷோ இந்த படம் 6 மணி ஷோ...

கெஜபதிபாபு பிளாஷ் பேக் காட்சிகள் காட்டும் போது எல்லாம்.. தியேட்டரில் செம கிளாப்ஸ்...


இளையராஜா பேர் போடும் போது நான் மட்டும் கைதட்டினேன்...

தியேட்டருக்கு போகும் போது கையில் ஒரு கொசுவத்தி எடுத்து போவது நல்லது...அவ்வளவு கொசு...

உட்கார்ந்து இருக்கும் போது கொசு கடித்தால் எந்த பிரச்சனையும் இல்லை...

நடந்து போகும் போதே கடித்துக்கொண்டு வர டிரெயினிங் எடுத்த கொசுக்கள் அங்குதான் இருக்கின்றன....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

7 comments:

  1. தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இன்னும் இளையராஜா ராஜாதான்! நம்ம இயக்குனர்களில் சிலர்தான் இன்னும் இளையராஜாவை நாடுகிறார்கள்... அல்லது ராஜாவே தவிர்க்கிறாரா... எதுவோ... நஷ்டம் என்னவோ நம் தமிழ் ரசிகர்களுக்குதான்!

    ReplyDelete
  2. படத்துக்கும் சேர்த்து தானே கொசு.

    ReplyDelete
  3. //உட்கார்ந்து இருக்கும் போது கொசு கடித்தால் எந்த பிரச்சனையும் இல்லை...

    நடந்து போகும் போதே கடித்துக்கொண்டு வர டிரெயினிங் எடுத்த கொசுக்கள் அங்குதான் இருக்கின்றன....//

    :)

    ReplyDelete
  4. Foreign:சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்வ‌ள‌வே, சின்ன‌ச் சின்ன‌ திரைய‌ர‌ங்குக‌ள்தான் அதுவும் கூட்ட‌மில்லா திரைய‌ர‌ங்குக‌ள். பார்வையாள‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ காலைக்காட்சி பாதி விலை. ந‌டிக‌ர்க‌ளை யாரும் க‌ண்டுகொள்வ‌தில்லை
    இங்கே(Tamil Nadu, Andhra, Karnataka): உல‌கின் மிக‌ப் பெரிய‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில், சினிமா, ந‌ம் உயிரோடு க‌ல‌ந்துவிட்ட‌ விஷய‌ம்.ஆங்கில‌ப்ப‌ட‌ங்க‌ளில் ப‌டுக்கைய‌றை காட்சிக‌ள் இருந்தால் கூட‌ ஏதோ அரை நிமிட‌த்தில் அரை இருட்டில் முடிந்துவிடும். ஆனால் ந‌ம் ப‌ட‌ங்க‌ளோ கொச்சையான ந‌ட‌ன‌ அசைவுக‌ள், தொப்புளில் ஆம்லேட் போட‌ ஆர‌ம்பித்து விருந்து சாப்பாடே த‌யார் செய்வார்க‌ள். Indian masala(spicies)என‌ netல் தேடினால் ந‌டிகையின் ம‌ஜா ப‌ட‌ங்க‌ள்தான் வ‌ருகிற‌து. வாழ்க்கையில் காத‌ல் ஒரு அங்க‌ம், காத‌லைத் த‌விர‌ ம‌னித‌ வாழ்க்கையில் வேறு எத்த‌னையோ நிலையிருக்கிற‌து ஆனால் வேறு எதைப்ப‌ற்றியும் சிந்திப்ப‌தில்லை. ந‌டிக‌ன்தான் உயிர் பொருள் ஆவி எல்லாம்.ந‌டிப்பையும் மீறி அவனுக்கு த‌னி ம‌னித‌ வழிபாடு,ஏதோ அவ‌ன் கூட‌வே இருந்த‌வ‌ர்க‌ள்போல‌ அவனுக்கு வ‌க்கால‌த்து வாங்குவ‌து, அவனும் இளைஞ‌ர்க‌ளை உசுப்பேற்றி அவ‌ன் மார்கெட்டை நிலை நிறுத்திக்கொள்கிறான். அவர்க‌ளின் ப‌ட்ட‌ப் பெய‌ர்க‌ளையும் அவர்க‌ளையும் நினைத்தால் வேத‌னையாய் இருக்கிற‌து.

    ReplyDelete
  5. //நடந்து போகும் போதே கடித்துக்கொண்டு வர டிரெயினிங் எடுத்த கொசுக்கள் அங்குதான் இருக்கின்றன....
    //

    செம நக்கல்.

    ReplyDelete
  6. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

    சாய் கோபாலகிருஷ்னன் உங்கள் கருத்தோடு ஒத்து போகின்றேன்..

    சிவராம்குமார் நீங்க சொன்னது போல் இழப்பு நமக்குதான்...

    நன்றி யாஷி

    நன்றி யாசவி...

    நன்றி அகோரி..

    ReplyDelete
  7. i think hero's name is Jegapathi Babu not Gajapathi Babu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner