கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா ?இந்த உண்மையை அப்படியே ஒத்துக்கொள்ளவா?? ஆம் அவர்கள் காப்பி அடிப்பவர்கள்தான்... முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் பதிவு அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு எனக்கே உடன்பாடு இல்லை...அதே போல் இந்த பதிவில் சாதி சாயத்தை நான் தொடபோவதில்லை.....எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்கின்றேன்...
வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்....
என்னை பொறுத்தவரை எல்லோரும் காப்பி அடிக்கும் போது கமலை மட்டும் குற்றாவளி கூண்டில் நிறுத்தி யூவர் ஆனர் என்று ஆரம்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... அப்படி ஆரம்பித்தால் இந்தியாவில் 90 சதம் பேர் குற்றாவரிளிக்கூண்டில் இருப்பார்கள்... உலகத்தில் கணக்கு எடுத்துக்கொண்டால்... அதன் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கும்...
ஒரு அழகிய கட்டிடம் சிங்கபூரில் ஒரு பில்டர் பார்த்து விட்டு வந்து இருப்பார்.. அதே போல் இங்கு கட்டிடம் கட்டினால் வாவ் சூப்பர் என்போம்...
ஒரு வீட்டின் இண்டீரியர் அல்லது எதாவது ஒட்டலின் இன்டீரியர் பார்த்து விட்டு அது போல நமது அலுவலகத்தில் செய்து வைத்தாள் வாவ் மார்வலஸ்.... என்போம்...
சரவணபவன் சாம்பார் போல வசந்தபவனில் இருந்தால் அற்புதம் என்போம்...
நமது கல்விமுறை என்பது காப்பி அடிக்கும் கல்விமுறைதான்... வரிக்கு வரி புத்தகத்தில் இருப்பது போல் எழுதி வைத்தால் மார்க்...
கர்னாடக சங்கீதத்தின் நெளிவு சுளவுகளை அப்படியே காப்பி அடித்து பாடினால்தான் அவர் நல்லபாடகன்பாடகி...
சரி இப்படி எல்லாம் இருக்கும் காப்பியை, சினிமாவில் அடிக்கும் போது அது பலருக்கும் பிடிக்கபடாமல் போகின்றது... காரணம் சினிமா மட்டும்தான் அனைவரையும் ஈர்க்கும் விஷயம்.. இதுவே ஒரு கட்டிடம் அமெரிக்கவில் இருக்கும் ஒரு அறையை பார்த்துவிட்டு அதை நம்ஊரில் கட்டினால்??? அதையும் ஒரு பதிவாக எழுதினால்.......
அமெரிக்காவின் எம்மபய்ர் கட்டிடத்தில் இருந்து அந்த 786 ஆவது அறை டிசைனிங் அப்படியே காப்பி அடிக்கபட்டு சென்னை பார்க் ஓட்டலில் இரண்டாவது மாடியில் இருக்கும் 208ஆவது அறையில் அப்படியே காப்பி அடித்து டிசைன் செய்து இருக்கின்றார்கள்... அதன் பாத்ருமில் இருக்கும் டாய்லட்டை மட்டும் இடப்பக்த்துக்கு பதில் வலபக்கம் வைத்து விட்டார்கள் என்று பதிவு எழுதினால் அதை யாரும் படிக்க போவதில்லை சீண்ட போவதில்லை...அதுக்கு மட்டும் காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேனும் இல்லையா என்று சொல்வார்கள்.....
உலகத்தில் எத்துறையில் இருக்கும் நண்பர்களும் விமர்சிக்கும் ஒரே துறை சினிமாதுறைதான்.. அதற்கு காரணம் அதன் மேல் உள்ள கவர்ச்சி மற்றும் புகழ்...உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை.... ஆனால்சார் நீங்க அங்காடி தெரு படத்துல டாய்லட் கழுவற சீன்ல நடிச்சவர்தானே??? அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க?? என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....
சரி கமல் படங்கள் காப்பி அடிக்கபட்டவைதான் மறுக்கவில்லை... ஆனால் கமல் மட்டுமே அல்லவே...தமிழ்நாட்டில் எத்தனை பிரபல எழுத்தாளர்கள் காப்பி அடித்து எழுதி இருக்கின்றார்கள்...எத்தனை இசையமைப்பாளர்கள் உலகின் பல இசைவடிவங்களை காப்பி அடித்து இருக்கின்றார்கள்..
இன்று சினிமாவில் இருக்கும் ஷாட்டுகள் மற்றும் கேமரா கோணங்க்ள் , லைட்டிங், எடிட்டிங் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் இருப்பதைதான் நாம் நம் மொழியில் செய்து பாக்கின்றோம்.....
சரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...
இந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா....??, அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா??? எல்லாம் காபிதான்... தினமும் எக்ஸ் பி சாப்ட்வேர் ஓப்பன் பண்ணும் போது தேங்ஸ் என்றா சொல்லி கொள்கின்றோம்....ஆனால் கமல் அப்படி எடுத்த கதைகளை வரிக்கு வரி காப்பி அடித்து இருக்கின்றார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...மிசஸ்டவுட்பயர் நாட் அவ்வை சண்முகி அவ்வளவுதான்.... ஆனால் கதை வேறு இதில் இருக்கும் கிளைகதைகள் வேறு வேறு....அப்படித்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லா படங்களும்....
நான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு என்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்....ஆனால் இப்போது அப்படியில்லை...இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா? சீனாவுல போக கூடாதா? என்று கேட்டேன்.. பதில் இல்லை.....
முதலில் நெருப்பை கண்டுபிடித்தவன் யாரோ ஒருவன் ஆனால் அதில் இருந்து நாம் வித விதமாக சமைத்து உண்ண ஆரம்பித்து விட்டோம்..... அது போலதான் திரைமொழியும்....கதைகளனும்...
சரி அப்படியே கதையை வாங்கி படம் எடுக்கலாமா? முடியாது காரணம் நம்ம படத்தோட வியாபாரம் அப்படி.. சார் மணிரத்னம்.. உங்க படம் இன்டியானா ஜோன்ஸ் படத்தில் இருந்து பல சீன்கள் சுட்டு திருடா திருடான்னு காப்பி அடித்து விட்டார்னு ஸ்பீல்பெர்க்கிட்ட சொல்லி பாருங்க...
வாட் லாங் வேஜ்?
சார் தமிழ்....
வேர் தே ஸ்பீக்???
இந்தியா....
அங்க எல்லாரும் காப்பி அடிப்பாங்களாம்....லுஸ்ல விடு என்று போய் விடுவார்கள்....
இதுவே பிரான்சில் அப்படி காப்பி அடித்து ஸ்பீல் பெர்க் படத்தை எடுத்து இருந்தால் கேஸ் போடுவார்கள்....கேஸ் நடந்து முடிஞ்சாலும் நல்ல அமவுன்ட் கிடைக்கும்.. ஆனா இங்க---??? நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை... இப்போது தமிர்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் சாத்தியம் இருக்கின்றது....அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்....
கமல் ரஜினி இருவருமே ஜிலு ஜிலு உடைகளில் ஆடியவர்கள்தான்... ஆனால் ஒரு கட்டத்தில் கமல் மாறி விட்டார்.....பால்காரன் ரீபோக் ஷு போட்டு இருக்கமாட்டான் என்று அடிப்படை லாஜிக்கை மீறி கமல் படம் எடுக்காமல் மாறிவிட்டார்......
கமல்மட்டும் பாரின் படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகவில்லை என்றால் உலகின் மிக சிறந்த படங்களை நம் நேட்டிவிட்டியில் பார்த்து ரசித்து இருக்கவே முடியாது....குணா, மகாநதி,அன்பேசிவம்...அப்படி புதிய முதல் முயற்சியை யாரும் தமிழில் பண்ண வாய்ப்பே இல்லை...நான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...
கமல் கர்வியா... எஸ் கமல் கர்விதான்.. காரணம் சினிமாவில் இருக்கும்24 கலைகள் தெரிந்த ஒரே கலைஞன் கமல்தான்....என் தொழில் நடிக்கறது மட்டும் இல்லை என்று நின்று விடுபவர் கமல் இல்லை...அதனால்தான் கமல் சகலகலாவல்லன்....மார்லன் பிராண்டோ கிட்ட இருந்துதான் சிவாஜி நிறைய கத்துகிட்டார்.... அல்பாசினோ ஸ்டைல் இல்லாம கமலால் நடிக்க முடியாது...ரஜினி சிகரேட்டை தூக்கி புடிச்சி வாயில கவ்வி ,சிகரேட் புடிச்ச ஸ்டைல பார்த்து சிகரேட் பிடிச்சவங்க லிஸ்ட் தமிழ்நாட்டுல கோடி கணக்குல இருக்கும்... அது இன்ஸ்பரேஷன்...அது போலதான் இதுவும்... அதே போல் கமலும் அதை ஒத்துகிட்டுதான் இருக்கார்...
மிக முக்கியமா கமல் தனது விசில் அடிச்சான் குஞ்சிகள் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தி ஒரு மரியாதையை சமுகத்தில் உருவாக்கி தந்தவர்...எயிட்ஸ் விளம்பரங்களில் தைரியமாக நடித்த கலைஞன்...
அவருடைய பர்சனல் வாழ்க்கை பல பேருக்கு புடிக்காது காரணம்... நம்மலுக்கு பல் இருந்தும் பக்கோடாவும், பட்டாணியும் சாப்பிட முடியலையேன்னு ஒரு வருத்தம் தான்.....அதை பத்தி கவலைபட அவர் வாழ்க்கையில் வந்து போன பெண்கள் கவலைபட வேண்டும்...நாம் கவலபைட்டு என்ன ஆக போகின்றது???அதெல்லாம் விடுங்க.....அவர் என்ன ஜட்டி போட்டு இருந்தா நமக்கு என்ன????
சாரு நிகழமறுக்கும் அற்புதம்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தார்...
அது ஏன் நிகழ மறுக்குதுன்னு நான் நினைச்சி... கமல்ன்னு சொல்லி குகுளில் அடித்தால் அது பாட்டுக்கு கீழ இருக்கற விசயங்களா கொட்டுது.....
4நான்கு தேசிய விருதுகள்..
* 1960 — Best Child Artist for Kalathur Kannamma
* 1982 — Best Actor Award for Moondram Pirai
* 1987 — Best Actor Award for Nayagan
* 1996 — Best Actor Award for Indian
* 1960 — Best Child Artist for Kalathur Kannamma
* 1982 — Best Actor Award for Moondram Pirai
* 1987 — Best Actor Award for Nayagan
* 1996 — Best Actor Award for Indi Filmfare Awards
* 1986 — Best Actor Award for Saagar
* 1998 — Best Story Award for Virasat
Filmfare Awards South Kannada
* 1988 — Best Actor Award for Pushpak
Malayalam
* 1974 — Best Actor Award for Kanyakumari
* 1978 — Best Actor Award for Yaetta
Tamil
* 1975 — Best Actor Award for Apoorva Raagangal
* 1976 — Best Actor Award for Oru Oodhappu Kan Simittugiradhu
* 1977 — Best Actor Award for 16 Vayadhinile
* 1978 — Best Actor Award for Sigappu Rojakal
* 1981 — Best Actor Award for Raja Paarvai
* 1982 — Best Actor Award for Moondram Pirai
* 1987 — Best Actor Award for Nayagan
* 1991 — Best Actor Award for Guna
* 1992 — Best Actor Award for Thevar Magan
* 1994 — Best Actor Award for Mahanadhi
* 1995 — Best Actor Award for Kuruthipunal
* 1996 — Best Actor Award for Indian
* 2000 — Best Actor Award for Hey Ram
Telugu
* 1981 — Best Actor Award for Aakali Rajyam
* 1983 — Best Actor Award for Sagara Sangamam
* 1986 — Best Actor Award for Swathi Muthyam
Tamil Nadu State Film Awards
* 1991 — Special Award for Guna
* 1992 — Best Actor Award for Devar Magan
* 1996 — Best Actor Award for Indian
* 2006 — Best Actor Award for Vettaiyaadu Vilaiyaadu
* 2008 — Best Actor Award for Dasavathaaram
Nandi Awards
* 1983 — Best Actor Award for Saagara Sangamam
* 1986 — Best Actor Award for Swathi Muthyam
* 1989 — Best Actor Award for Indrudu Chandrudu
Asianet Film Awards
* 2009 — Special Honour Jury Award 50 years Contribution to Indian Cinema
Puchon International Fantastic Film Festival
* 2004 — Best Film Award for Virumaandi [1]
Vijay Awards
* 2007 - Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema
* 2008 - Best Villain Award for Dasavatharam
* 2008 - Best Comedian Award for Dasavatharam
* 2008 - Best Story-Screenplay Writer Award for Dasavatharam
* 2008 - Most Popular Hero Of The Year Award for DasavatharamSpecial honours
* 1990 — Padma Shri[2]
* 2004 All the awards presented to him were for his artistic talent. He got the first Abraham Kovoor National Award for his Humanist Activities and Secular Life in 2004.
* 2005 — Honorary Doctorate
* 2009 — FICCI Living Legend[3]
* 2009 - CNN IBN Indian of the Year 2009 - Special Achievement Award
* Kalaimamani
இனிமே அது நிகழ்ந்தா என்ன??? நிகழாட்டா என்ன???
கமலின் 50ஜ பாராட்டி விழா எடுத்தது விஜய் டிவி...
மத்திய அரசு தற்போது விழா எடுத்தது...
கேரளமாநிலம் விழா எடுத்தது...
எல்லோருக்கும் தெரியும்.. கமல் எந்த வெளிநாட்டு படத்தில் இருந்து உருவியிருப்பார்.. எந்த ஆங்கில நடிகனின் நடிப்பில் இன்ஸ்பயர் ஆகி நடித்து இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் புன்னகை மன்னன் படத்தில் சாக போவதற்கு முன் ரேகா கமலை சிரிக்க சொல்லுவார்....அழுகையோடு கலந்து சிரிக்கவும் செய்ய வேண்டும்... எனக்கு தெரிந்து அது எந்த படத்திலும் காப்பி அடித்து இருக்க முடியாது என்ற எண்ணுகின்றேன்...
அப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்.....
ஆனால் ஒன்று முன்பே அந்த படத்தை நாம் பார்த்து விட்டு அது அப்படியே ஆங்கில படத்தின் காப்பி எனும் போது நமக்கு கோபம் வருவது இயல்பே.... ஆனால் பார்க்காதவனுக்கு அது அமிர்தம் அல்லவா.. அது போலதான்.... நமது படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் காபி அடிக்காமல் நிச்சயம் காசு கொடுத்து கதை வாங்கி பண்ணுவார்கள்...
கமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
சார்,தலைப்பைப் பார்த்தவுடனே ஏதோ ஈர்ப்பாக இருந்தது.நான் கமலின் நடிப்புக்கு ஒரு காதலன்.அப்படி இருந்தும் நீங்கள் சொல்வதற்கு உடன்படவே தோணுது.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
நன்று நண்பரே! எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் படைப்பு என்பது அவரவர் குழந்தை மாதிரி. அதை காப்பி அடிப்பது அபத்தம் தான். அதிலும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் சுட்டு எடுக்கப் படும் போது ... கேலி கூத்தாகி விடுகிறதே? அந்தகாலத்து "துள்ளுவதோ இளமை-பாய்ஸ்" முதல் இக்காலத்து "பாணா காத்தாடி-காதல் சொல்ல வந்தேன்" வரை. ஒரு சின்ன கார்டு போட்டால் போதும். இன்ஸ்ப்யரேசன் அல்லது தழுவல் இந்த படம் என்று. அவரது மதிப்பு எங்கோ போய்விடுமல்லவா? பி.கு. கமல் படம் மட்டும் தான் விமர்சனம் கேட்காமல் நான் பார்ப்பேன்
ReplyDeleteA much needed post :) well done. good one.
ReplyDeleteகண்டிப்பான உண்மை தலை! இப்போ கமல் ஒரு "சகலகலா வல்லவன்" டைப் படம் கொடுத்தா நாமளே என்ன சொல்வோம்... இந்த மாதிரி படம் எடுக்க கமல் எதுக்குனு சொல்லுவோம்... இந்த மாதிரி படம் கொடுத்தாலும் குறைதான் கண்டு பிடிக்கிறோம்... இது கமல் அப்படிங்கிறதுனால கொஞ்சம் அதிகமா விமர்சனம் வரும்.... விடுங்க விடுங்க... "காய்ச்ச மரம்தான் கல்லடி படும்.... காய்க்காத மரத்துலே யாரும் கல்லெறிய மாட்டாங்க"
ReplyDeleteஉங்கள் கருத்துக்கள் உண்மையே!!
ReplyDeleteஎல்லா படங்களும் காப்பி என்று சொல்லவும் முடியாது.
இன்று எழுதும் எல்லா காதல் கவிதைகளும் அகநானூறின் காப்பிதானே.
அப்படித்தான்.....
Thanks a Ton Jackie..hope next time all the so called " World movie" junkies won't bluntly point fingers on Kamal. Superb!!!
ReplyDeleteதல கலக்கீடீங்க நான் நேத்தே அங்க பின்னூட்டம் போடலாம்னு பாத்தேன் ஆனால் சா நி தொண்டர்களுக்கு அவர்கள் புடிச்ச முயலுக்கு மூணு கால் தான் யார் என்ன சொன்னாலும் ,கமல் தன்னை எங்குமே அறிவாளி என்று சொன்னதில்லை ,ஆஸ்கார் எனக்கு கிடைக்கவில்லை என்றும் அழவில்லை ,கடைசியாக ஒரு பேட்டியில் அவர் சொன்னது தமிழ் சினிமாவில் ஒரு கமல் தான் அனால் ஹாலிவுட் இல் பல நூறு கமல்கள் உண்டு அதனால் அவர்களை மிஞ்சி படம் எடுத்துவிட்டோம் என்று சொல்லாதீர்கள் அதேபோல் இங்கும் இளம் நடிகர்களும் இயக்குனர்களும் வர வேண்டும் .தமிழ் சினிமா இன்னும் பின்தங்கி தான் இருக்கிறது என்று .தமிழ் என் இந்திய சிநேமவில்லையே எவனாவது கோப்பி அடிக்காமல் ஒரு சீன் எடுத்திருகிறார்கள என்று பார்க்க வேண்டும் தொண்டர் அடி பொடிகளே.
ReplyDelete//அமெரிக்காவின் எம்மபய்ர் கட்டிடத்தில் இருந்து அந்த 786 ஆவது அறை டிசைனிங் அப்படியே காப்பி அடிக்கபட்டு சென்னை பார்க் ஓட்டலில் இரண்டாவது மாடியில் இருக்கும் 208ஆவது அறையில் அப்படியே காப்பி அடித்து டிசைன் செய்து இருக்கின்றார்கள்... அதன் பாத்ருமில் இருக்கும் டாய்லட்டை மட்டும் இடப்பக்த்துக்கு பதில் வலபக்கம் வைத்து விட்டார்கள் என்று பதிவு எழுதினால் அதை யாரும் படிக்க போவதில்லை சீண்ட போவதில்லை...அதுக்கு மட்டும் காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேனும் இல்லையா என்று சொல்வார்கள்.....//
ReplyDeleteஒரு கட்டிடக்கலை வல்லுனர்,அமெரிக்க கட்டிட அமைப்பு/பகுதி/உள்ளமைப்பை காப்பியடித்து இங்குள்ள கட்டிடத்தில் கட்டி,'நான் சகலகலா வல்லவன்' எப்படி இந்த டிசைன்னு கேட்டா, அந்த தொழில் சார்ந்த நபர் எப்படி இவரைப் பற்றி நினப்பாரோ அப்படித்தான் கமலின் சில/பல காப்பிகள்.
//உலகத்தில் எத்துறையில் இருக்கும் நண்பர்களும் விமர்சிக்கும் ஒரே துறை சினிமாதுறைதான்.. அதற்கு காரணம் அதன் மேல் உள்ள கவர்ச்சி மற்றும் புகழ்...உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை.... ஆனால்சார் நீங்க அங்காடி தெரு படத்துல டாய்லட் கழுவற சீன்ல நடிச்சவர்தானே??? அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க?? என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....//
நீங்கள் சினிமா சம்மந்தப்பட்டவர், அதனால் அங்காடிதெருவில் கக்கூஸ் கழுவுரவன் கண்ணில் படுகிறான், ஆனால் ஒரு மருத்துவத்துறை சார்ந்தவர் நிச்சயம் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்தவரைத் தான் பார்ப்பார். ஒவ்வொருவருக்கு ஒரு பார்வை, உங்களின் பார்வையில் தெரிவது, மற்றவர்க்கு தெரியாது, மற்றவர்களின் பார்வையில் தெரிவது, உங்களுக்கு தெரியாமலிருக்கலாம்.(An individual view through the prism of each varies.) என்னால் அப்படத்தின் கதாநாயகனைக் கூட அடையாளம் காணமுடியாமல் இருக்கலாம் தானே ஜாக்கி சேகர்.
நானும் சாதி சர்டிபிகேட்டுக்காய் நூறு ரூபாய் Rஈ க்கு லஞ்சம் கொடுத்திருப்பதால், ஸ்பெக்ட்ரம், போபர்ஸ் பற்றி பேச என்க்குத் தகுதியே இல்லை என்பது போலிருக்கிறது, நாமொல்லாம் கம்யூட்டரில் காப்பிகளைத்தானே உபயோகிக்கிறோமென சமாதனப்ப்டுவது. உங்களின் பதிவை குறிப்பாய் 'சாலை விபத்து' பற்றி படித்து ரசித்து வியந்தவன் என்கிற உரிமையில் இந்த பெரிய பின்னோட்டம். தங்களின் பால் கொண்ட அன்பால், பதிவில் கருத்துப் பிழை ஏற்பட்டுவிடக்கூடாதே
என்பதால்.... JUST for the sake of LIGHTER SIDE.
மிகவும் நேர்மையான பகிர்வு.. நன்றி ஜாக்கி..
ReplyDeleteJACKIE ANNA,
ReplyDeleteSUPERB ARTICLE...
I LOVE TOO KAMAL....
MANO
கருந்தேளின் பதிவுக்கு பதில் சொல்வது போல இருந்தது உங்கள் பதிவு...
ReplyDeleteநீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் நிஜம்....!!!
நன்றாக எழுதி உள்ளீர்கள்....!!
//இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா? சீனாவுல போக கூடாதா? என்று கேட்டேன்.. பதில் இல்லை.....//
ReplyDeleteகாதலா காதலா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ஹவுஸ்புல் என்று எடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்த அதன் தயாரிப்பாளர் தேனப்பன் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார். தேனப்பனிடம் சொல்லுங்கள் சென்னையில் மட்டும் தான் காதலிப்பார்களா.. ஏன் மும்பையில் காதலிக்க மாட்டார்களா என்று...
Boss..
ReplyDeleteI agree with you most of us came to know about the world movies through him, but still the point is, he should not speak as he has created all those movies out of his own creativity and for which he is not being awarded OSCAR...which is not fair at all. There is no point in we discussing all these, if he is able to answer his conscience (hope he has it) and able to sleep peacefully then everything will be fine.
And btw..congrats on achieving 10 Lakh hits.
Sorry to have typed in english, going forward will post my comments in tamil.
Cheers
Rmani
நான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...////
ReplyDeleteஹா ஹா ஹா
//நான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு என்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்....ஆனால் இப்போது அப்படியில்லை...இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா? சீனாவுல போக கூடாதா? என்று கேட்டேன்.. பதில் இல்லை.....
ReplyDelete//
திருடு போகலாம் ஜாக்கி சேகர். ஆனா ஒரே திருடன் எல்லா சைக்கிளையும் திருடக்கூடாது :)
Well balanced article. People living in latin American dreams think themselves different creatures!!!!!!
ReplyDeleteRavi
அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...
ReplyDeleteSuperb......Kamalukku Enadhu Nandrigalum.....
ஜாக்கி... இந்த காப்பி விஷயத்தை மற்ற யார் செய்தாலும், நாம் வருத்தப்படப்போவதில்லை.. ஆனால் கமலே இப்படியா என்று நினைக்கும் போது கண்டிப்பாக எனக்கு வருத்தமாக இருந்தது.
ReplyDeleteபன்முகத் திறமை வாய்ந்த, இப்பொழுது இருக்கும் நடிகர்களில் மிக அற்புதமான நடிகர் கமல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. அப்படி ஒரு இடம் தந்திருக்கும் போது, அவர் செய்யும் தவறுகள் பெரியதாக பார்க்கப்படுவது தவிர்க்க முடியாதது.
காப்பி அடிக்கும் மற்றவர்களைக் கேட்காமல் கமலைக் கேள்வி கேட்பது ஏன் என்ற வாதம் சரியாகப் படவில்லை. கமல் என்பதாலேயே கேள்வி எழுகிறது. அதிர்ச்சி எழுகிறது. மற்றவர்கள் செய்தால் அதைப்பற்றி எழுத பேச என்ன இருக்கிறது ?.
கமல் டைட்டில் கார்டு போட வேண்டாம். ஆனால், தான் தரும் பேட்டிகளில் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லையா ?.
எப்படி இருந்தாலும், கமலின் படம் வந்தால், விமர்சனத்திற்கு வெயிட் பண்ணாமல் போய் பார்த்து சிலாகிக்கும் அவரின் பெரிய ரசிகன் நான்.
ஜாக்கிசேகர்,
ReplyDeleteI dont agree with your views completely but some of your comments i agree .....
No one can deny that kamal has copied\inspired from other language movies...he himself admits that Nayagan is inspired from God Father....see below link.
http://www.youtube.com/watch?v=6rrYlJVMqqw&feature=fvst
But he should be putting "Thanks To" in the Title card or End card. If he can thanks ppl like "City Police commisioner"/"Tamil Nadu Tourism"/State Bank of India ...etc..etc who helped in making the movie why not the name of the Director or screenplay writer of the movie from which he is inspired or copied...
I agree with you that if kamal havent inspired\copied we wouldnt have got a chance to see any good movies at all..
http://www.youtube.com/watch?v=XRTFdAxGW6g&feature=related
Inspiration for Rajini's Smoking Style is from Hindi Actor Sathruhan Sinha(now a politician).
ReplyDeletei accept your view sir!
ReplyDelete//ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்..
ReplyDeleteஎன்னங்க ஜாக்கி ??... நடிக்கத் தெரிந்தால் தான் கமல் பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டும் என்ற பொருளில் இருக்கிறதே ?? :)
sir karunthol kannayiram pondra pathivalaruku nalla pathiladi koduthuvittirkal.valthukal.
ReplyDeletesir karunthol kannayiram pondra pathivalaruku nalla pathiladi koduthuvittirkal.valthukal.
ReplyDeleteநீங்கள் கமலுடன் பொத்தாம்பொதுவாக தமிழ்சினிமா இயக்குநர்களையும் சேர்த்துவிட்டீர்கள்.. தாக்கம் + பிரதி என்கிற இரு சொற்களுக்கு நிறையவேறுபாடுகள் இருக்கிறது. பாலுமேகந்திராவும்..மகேந்திரனும்..சத்யஜித் ரேயின் தாக்கத்திலும்...சத்யஜித்ரே...இத்தாலிய நியோ ரியலிச மற்றும் வில்லியம் வைலர் தாக்கத்திலும் உருவானவர்கள்....கமல் எடுப்பது ஒரு மேட்டிமையான பிரதி.. அதுவும் அறிவின் கவனத்தில் எடுக்கபட்ட கற்பனைச்சுரண்டல்...அவரால் ஒரு காலமும்.. காதல்..பசங்க..முந்தானைமுடிச்சு,அவள்அப்படித்தான்,
ReplyDeleteகிழக்குசீமையிலே,என் ராசவின் மனசிலே,போன்ற தமிழ் அடையாளம் சார்ந்த படங்களை ஒரு பொழுதும் எடுத்துவிடமுடியாது..நீங்கள் நிணைப்பது போல் அவருக்கு ஒருபொழுதும் தமிழ்சினிமாவில் நல்ல சினிமா என்கிற ஆர்வம் என்கின்ற மண்ணாங்கட்டிலாம் ஒண்ணும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் இன்னும் கோடிகளை வாங்கிபோட்டுக்கொண்டு,..கிரண்,ஜோதிகா,த்ரிஷா,போன்ற இளம் நடிகைகளோடு ஜோடிபோட்டுகஆடிகொண்டிருக்கமாட்டார். அவர் ஒரு அப்பட்டமான போலி அறிவுஜீவி. நிஜமாகவே நல்ல சினிமா அக்கறை இவரைவிட மிக சிறப்பாக நடிக்கும்..அமீர்கான்,மோகன் லால்,மம்முட்டி போன்ற நடிகர்கள்தான் (உ.ம்.பீப்ளி லைவ்,கேரளா கஃபே,தன்மந்தரா,விதேயன் ) மிக குறைந்த முதலீட்டில் நடிகனின் அரிப்புக்கு எடுக்கபட்ட படங்கள் அல்ல இந்த படங்கள். தமிழ்சினிமா இயக்குநர்கள்.. பாராதிராஜாவிலிருந்து.. இன்றைய பாண்டிராஜ் வரை எந்த உலக சினிமாக்களையும் தெரியாமல் சொந்த அனுபவங்களோடு பஸ் ஏறியவர்கள். இவருக்கு கிடைத்த எந்த நுழைவுச்சீட்டும் இல்லாமல், படாத பாடுபட்டு, ஈனப்பட்டு இவர்கள் குறைந்தபட்சம் ஒரு படங்களையாவது தங்கள் வாழ்க்கையிலிருந்து எடுத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நிணைக்கிறேன். கமலிடம் அப்படியாக ஒரு படத்தை கூறுங்கள் உங்கள் கவனத்திற்கு வராத அந்த வெளிநாட்டு படத்தின் பெயரை நான் கூறுகிறேன்.
நீங்கள் சொல்வதற்கு உடன்படவே தோணுது.நீங்கள் இங்கு கூறிய அனைத்தும் உங்கள் மனதில் இருந்து தான் எழுதி இருகின்றீர்கள்.ஆனால் உங்கள் பதிவை யாரோ ஆனந்த விகடனில் copy & paste செய்த பொழுது எங்கே போனது இந்த உரத்த சிந்தனை...
ReplyDeleteVery well written Jackie...great analysis and this is the truth!
ReplyDeleteகர்னாடக சங்கீதத்தின் நெளிவு சுளவுகளை அப்படியே காப்பி அடித்து பாடினால்தான் அவர் நல்லபாடகன்பாடகி...
ReplyDeleteGreat Sir....What i write is a copy ....tamil language we speak is a copy from our ancestors....( agathia munivar as they say)....Your writings speak the truth and fact...i like you....
Vijayakumr
எனக்குத் தெரிந்து,கமல் காப்பி அடித்த படங்களுக்கு கிரெடிட் கொடுக்காதது மட்டும்தான் அவரின் தவறு என்பேன்.அதற்கான காரணங்களை நீங்களே கூறியிருக்கிறீர்கள்.அதுவும் கூட அந்த படங்களின் தயாரிப்பாளரோ,இயக்குனரோ செய்ய வேண்டிய வேலையது;நடித்த நடிகனைக் குறை கூறி பிரயோஜனமில்லை.
ReplyDeleteஇந்தியா செயற்கைக்கோளை அனுப்பும்போதெல்லாம்,முக்கியமான சில பாகங்களை ரஷ்யாவிடமிருந்தோ அல்லது வேறு நாட்டிடமிருந்தோ வாங்கிதான் அனுப்புவார்கள்.அப்படி அனுப்பும் செயற்கைக் கோள் வெற்றி அடையும் பட்சத்தில் நாம் சந்தோஷமடைவதில்லை? அதற்காக இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது;இந்த முக்கியமான பாகம் இந்த நாட்டிடமிருந்து வாங்கி அனுப்பியதால்தான் வெற்றி அடைந்தது என்றா சொல்லிக்கொண்டிருக்கிறோம்?.அவ்வாறு வேறு நாட்டிடமிருந்து உதிரி பாகங்கள் பெற்று எல்லா நாடுகளாலும்தான் செயற்கைக் கோள்களை அனுப்ப முடிகிறதா?.ஆரம்பத்தில் கடன் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்த இந்தியா,இப்போதெல்லாம் சொந்தமாக நம்முடைய நாட்டிலேயே உருவாக்கிய உதிரி பாகங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லையா?அதேபோல் இந்திய சினிமாவிலும் மாற்றம் வரும்.அப்படி வருகையில் அதற்கான முக்கியமான காரணகர்த்தாக்களில் கமலும் ஒருவராக இருப்பார்(மருத நாயகம் ஒரு வேளை எடுக்கப்பட்டிருந்தால்,முன்னமே நமக்கு அது கிடைத்திருந்திருக்கலாம்.)
அருமையான பதிவு. கமலின் திறமைக்கு நிகரில்லை.
ReplyDeleteஇந்த பதிவை பார்த்திபன் பேசுவது போல நினைத்து படித்து பார்த்தேன். அப்படியே அவரின் ஸ்டைலை காப்பி அடித்தது போல் இருந்தது.
நன்றி ஜாக்கி
கமல் மேல ஒரு புதுப் பார்வையை உருவாக்கி விட்டீர்கள். ஒரு புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். கமல் ஒரு கலைஞன் என்பதை மீண்டும் ஒரு முறை ஆணி அடிப்பதைப்போல் நிரூபித்து விட்டீர்கள்
ReplyDelete// நான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது....//
ReplyDeleteதங்களை போல தான் நானும். முதலில் விஜய் ரசிகனாக இருந்து அவர் படங்களை விசில் அடித்து பார்த்தவன் தான்... ஆனால் அன்பேசிவம் படம் பார்த்த பிறகுதான் எனக்கு நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆர்வம எழுந்தது. அதற்கு பின்னர் இந்த விசில் அடித்து பார்த்த மசாலா படங்களை நினைத்தாலே வெருக்கின்றது. கமல் தான் இப்போது உள்ள இளம் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வித்தியாசமான புது முயற்சிகளை செய்வதற்க்கு தூண்டு கோலாக இருந்தவர் என்பதை மறுக்க இயலாது.
Rivalry is a main fact why kamal has been criticized for long periods. I agree & appreciate this post. In tamil, Kamal has been giving wonderful collections.. Think about Kamal as a good human being & his works for society.. No commercial ads..Donated his body.. changed his fans...there are many notable meaningful contributions to the society..don't just criticize for namesake or to state you as a person who identified his copy movie (this becomes a trend).. How many people can really understand/get a chance to see world movies.. very few compared to Millions... Cherish a good actor..we got very few only... U all will speak about Kamal after few yrs when you don't see variety actings/bored watching young actors doing circus & old actors still going to schools.. We need changes.. Kamal is a change.. Change the way you see the world..
ReplyDeleteஇப்பத்தான் இதே போல ஒரு பதிவைப் படித்து முடித்து விட்டு வந்தேன்..(உங்களுடைய முந்தைய பதிவுதான்..) நீங்கள் சொல்வது எல்லாம் சரி...சனங்களுக்கு தான் நல்ல நடிகன் என்று காட்டும் அதே நேரத்தில், அதன் உண்மை அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அந்த ரசிகன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது.. இத்துணை நாள் கழித்து இவை எல்லாம் இந்தப் படங்களைப் பார்த்து எடுக்கப் பட்டவை தான் என்று இப்போது தெரியும்போது மனது குச்சி முட்டாயைப் பிடுங்கிய பின் குழந்தைக்கு ஏற்படும் மனநிலைமைக்கு உட்படுகிறதே....
ReplyDeleteஅவர் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்ட நடிகர் தான் தவறில்லை.. ஆனால் நம் போன்ற ரசிகர்களினால் தான் ஒரு கலைஞன் வாழ்கிறான் என்பதை யாரும் மறக்கக் கூடாது மறுக்கவும் கூடாது... அதனால் ஒரு ரசிகனின் சந்தோசத்திற்கு மட்டுமே ஒரு நல்ல கலைஞன் காரணமாக இருக்க வேண்டும்.. இது என்னுடைய தாழ்மையான கருத்து.. மற்றபடி கமல் படங்க அனைத்தையும் வியப்புடன் தான் இதுவரை பார்த்து வந்திருக்கிறேன்.. ஆனால் இனிமேல் அடுத்த ஒரு படம் வரும்போது அது எந்தப் படத்தின் தழுவலோ என்று என் மனம் அலைபாய்வதை அவரால் தடுக்கவே முடியாது.. ஒரு சின்ன நன்றியை டைட்டிலில் தெரிவித்து விட்டால் சூப்பர் தலைவா... நீ எங்கேயோ போய்டுவ...
நன்றி..
அருமையான பதிவு ஜாக்கி..
ReplyDelete//கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்..//
சூப்பர்.. :)
நிறைய விஷயங்கள் சொல்ல ஆசைதான்.. ஆனால்...
’காப்பி’ என்கிற விஷயத்தைத் தாண்டி கமலுக்குள் இருக்கும் கலைஞனையே இத்தனை வருடமாக புரிந்துகொள்ளாதவர்கள், நாம் சொன்னாலும் புரிந்துகொள்ளப்போவதில்லை.. காமெடி, உளறல், ஜால்ரா, முட்டாள்தனம் என்கிற வசவுதான் மிச்சம்.. அதுனால ஃப்ரீயா விட்டுட்டேன்..
வெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. சீக்கிரம் விமர்சனம் போடுங்க.. :)
நம் தமிழ் சினிமா தளத்தில் கமல் நிச்சயமாக ஓர் அற்புதம். அவர் உலக எல்லைகளை தாண்டவில்லையென இங்கு வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள், நம் வணக்கத்திற்குரியவர்களே. அவர்களும் கமலை ரசிப்பதால்தான் அதைச் சொல்ல முடிகிறது.
ReplyDeleteகமலின் திரைப்படங்களை கழித்துவிட்டு தமிழ் சினிமா வரலாற்றை பாருங்கள். கமலோடு சேர்த்துப் பாருங்கள். அப்போதுதான் அந்த கலைஞனின் அருமை தெரியும்.
என்னைப் பொறுத்தவரை Kamal deserve more than this.
அன்பு நித்யன்
//நான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு என்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்....ஆனால் இப்போது அப்படியில்லை...இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா? சீனாவுல போக கூடாதா? என்று கேட்டேன்.. பதில் இல்லை.....
ReplyDelete//
Konjam Naal Munadi than Pathivu thirudiyathuku pathivu potinga nan kuda vartham therivichu thappu un comment pottaen, eppo nee solrathu enna na ... yen pathivu ungaluku mattum than thonuma from chennai tirpur la thona kudathanu nu kelambiduvanga boss :-)
Jsckie,
ReplyDeleteI have been a regular reader of your blog. This is the first time, i am commenting on your blog post(s).
Very nice article. Very well said.
Sorry for typing in English, i will have to learn to type in Tamil soon.
Thanks
Arul
//நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...//
ReplyDeleteஜாக்கி ஸார், பதிவு மொத்தமும் அருமை. அதிலும் இந்த வரிகள் 'நச்'
கமல் இது வரை நடித்த படங்களில் அனைத்தும் காப்பி அடித்தவையா
ReplyDeleteஇல்லையே
பாதிக்கு பாதி... இல்லையே
எதோ ஆறு ஏழு படங்கள் வேண்டுமானால் பிற மொழி படங்களில் தழுவலாக இருக்கலாம்
என்னைப்போன்ற மற்ற மொழி படம் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் பிரச்சனையே இல்லை
நாங்கள் தசாவதாரத்தையும் 3 தடவை பார்ப்போம், படையப்பாவையும் 3 த்டவை பார்ப்போம் !!
--
இதையே தேவாவின் பாடல்களுக்கும் பொருத்தி பாருங்கள் -> உண்மை புரியும் :) :) :)
--
அது சரி
யாரும் ஏன் பைபிளில் வரும் மோசஸ் கதை மகாபாரத்தை வைத்து எழுதப்பட்டது என்றோ அல்லது மகாபாரத்தில் வரும் கர்ணன் கதை பைபிளை பார்த்து எழுதப்பட்டது என்றோ சொல்வது கிடையாது :) :)
நீங்கள் கூறுவது போல் சினிமாக்காரன் என்றால் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணம் தான் காரணமா !!
சுப்பர் பதிவு !!!
ReplyDeleteநல்ல விளக்கம் ஜாக்கி அண்ணே..
ReplyDeleteஇத்தனை விமர்சனம் வந்தாலும் நான் ஏன் கமல் ரசிகனாகவே இருக்கிறேன்? என்று ஒரு பதிவு..
http://senthilinpakkangal.blogspot.com/2010/09/blog-post_11.html
Copy adichuthaan pannanumnnaa Appu maathiri kashtapadum padangalai yen copy adikka vendum..?
ReplyDeleteAppozhuthu yerpadum valiyum vethanaiyum avar anupavikka venumthaane..?
அன்பின் ஜாக்கி
ReplyDeleteஎப்பொழுதும் போல் உங்கள் பதிவை அனுபவித்து படித்தேன், ஆனால் இந்த முறை கேள்விகளுடன்.
கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் எப்பொழுதும் மற்று கருத்து இருக்கவே முடியாது, அவர் ஒரு born actor .ஆனால் சுயமாக சிந்தித்தோ அல்லது ஒரு நம்முடைய வாழ்கையில் இருந்து உருவப்பட்ட ஒரு கதையிலோ தன்னை முன்னிலை படுத்தாமல் கதாபாத்திரத்தை முன்னிலை படுத்தி எத்தனை படங்களில் நடிதுருகிறார் சொல்லுங்கள்(ஆங்கில மொழி தழுவல் திரைப்படங்களை தவிர்த்து).யோசித்து சொல்லுங்கள் தசவதாரம் எடுத்த காசில் எத்தனை அற்புதமா படங்களை அவரால் வழங்கியிருக்க முடியும்.ஏன் கமலையே குற்றம் சொல்லுகிறீர்கள் என்றால் எங்களுக்கு வேறு எந்த நடிகரும் தெரியவில்லை.என்னுடைய கவலை எல்லாம் கமலுடைய மிக சிறந்த படங்களை வெளி நாட்டவருக்கு அறிமுகபடுத்த முடிவதில் உள்ள கடினமே(நான் அனுபவிதிருகிறேன்)
நல்ல திரைபடத்தை சுவாரஸ்யமான (மசாலா அல்ல !) கொடுத்தால் கண்டிப்பாக நம் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
(மற்றபடி "நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்.." என்ற வாசகத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்)
அன்புடன்
ஷிவா
வெல்.. ஜாக்கி.. நான் இப்போ கொடைக்கானல்ல இருக்கேன்.. ;-) ஆற அமற உக்காந்து பதில் போட முடியாது... பட் சுருக்கமா சொல்றேன்..
ReplyDeleteகமல் ஈயடிச்சாங்காப்பி அடித்தது சரின்னு பல உதாரணங்கள் சொல்லிருக்கீங்க .. அது எதுவுமே லாஜிகலா ஒத்துக்கவே முடியாதவை.. Example - ஹோட்டல் உணவு, கட்டிடக்கலை இத்யாதி இத்யாதி.. Plagiarism is a crime. Whereever it has been done - இதுதான் என்னோட வாதம்.
உங்க ப்ளாக்கில் இருக்கும் விஷயங்கள் சமீபத்துல பாக்யால வந்துச்சுன்றதை நீங்க எவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டீங்கன்றது எல்லாருக்குமே தெரியுமே ;-) .. நீங்க ஏன் அதை ‘ஒரு ஹோட்டலின் உணவைத்தானே அவரு அங்க குடுத்துருக்காரு.. பரவாயில்லை’ன்னு விடலை ?? அவர் மேல் பாய்ஞ்சி புடிச்சீங்களா இல்லையா? நானுமே அதைத்தான் செஞ்சிருப்பேன்..
ஸோ, உங்க விஷயத்துல காப்பி அடிச்சது தப்பு. ஆனா அதைய ‘ஒலக நாயகன்’ செஞ்சா அது சரி ! இது எந்த ரீதியில் அமைந்த வாதம் என்று தெரியவில்லை ;-)
கமல் செய்தது சரின்னா, உங்க ப்ளாக்கில் இருந்து ஒருவர் எடுத்து பத்திரிக்கையில் எழுதியதும் சரியே !
அவ்வளவுதான். சிம்பிள் !
//உங்க ப்ளாக்கில் இருக்கும் விஷயங்கள் சமீபத்துல பாக்யால வந்துச்சுன்றதை நீங்க எவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டீங்கன்றது எல்லாருக்குமே தெரியுமே ;-)
ReplyDeletehow can you compare a article theft with a film inspiration?
தலைவா கமல் என்ன ஹாலிவுட் படத்த கள்ளதனமா பிரிண்ட் போட்டு டுப்பிங் மட்டும் இவர் பேசி , டைட்டில் கார்டுல a film by கமல்நா போடுறாரு ...
நீங்க சொன்ன படங்களில் எல்லாம் கதை களம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம் ஆனால் முழுக்க முழுக்க திரை கதையில் மாற்றம் செய்துதான் இருப்பார் .... ஏதாவது ஒரு காட்சியை இரு படங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்... சரி விடுங்க இப்ப கமல் இந்தியன் அவ்வை சண்முகி என்று இரண்டு படங்களை எடுக்கா விட்டால் அந்த மேக் அப் தொழில் நுட்பம் நமக்கெல்லாம் தெரியாமலே போய் இருந்திருக்குமே... இன்னமும் கதானாயகர்கல்ம் எல்லாம் தலையில் விக்கை மாற்றி மாற்றி வைத்து கொண்டு இதுதான் கெட் அப் என்று நடித்து கொண்டு இருப்பார்கள் ... நாமளும் கை தட்டி ரசித்து கொண்டு இருப்போம் இல்லை என்றால் உங்களை போன்றவர்கள் வெளிநாட்டுகாரன் எப்படி எல்லாம் முன்னேறி விட்டான் இவனுக பாரு இன்னமும் விக்க மட்டும் மாத்தி மாத்தி போட்டு நம்மள ஏமாத்திகிட்டு இருக்கானுக என்று ஒரு பதிவு எழுதி கொண்டு இருப்பீர்கள் .... கமல் என்ற கலைஞன் ஒரு சிறந்த நடிகன் அவன் எந்த விதமான கதாபத்திரங்களையும் சிறப்பாக செய்ய கூடிய திறமை வாய்ந்தவன் ... அவனை சரியாக பயன்படுத்த யாரும் இங்கே இல்லை .... எனவே அவன் தன்னையும் தமிழ் சினிமாவையும் மேம்படுத்த அடுத்த நாட்டு காரனின் போர்முலாவை பயன்படுத்துகிறான் அவ்வளவே ... ஊரே அம்மணமாக திரியும் பொழுது பக்கத்து ஊர் கோவணத்தை பார்த்து ,நம்ம ஊருக்கு ஏற்றது போல கோவணம் தைத்து நமக்கு காட்டியதுதான் கமல் செய்த தவறா?? நீங்கள் அம்மணமாக திரியத்தான் ஆசைபடுகிரீர்களா???
//வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்....//
ReplyDeleteஎந்தக் கலைல ஆராதிக்கிறாங்க ? அட,ஆராதிக்கிறது இருக்கட்டும்.எதுல ஆதரிக்கிறாங்க? எழுத்து,இசை,ஓவியம்....
எதுல ஒத்துக்குறாங்க ? சினிமா மட்டும் என்ன உசத்தி?
ஓவியத்தை எடுங்க.டா வின்சி வரைந்த பல ஓவியங்களின் நகல்கள் இருக்கு.ஆனா அதுக்கு மதிப்பு என்ன?ஒரிஜினல்க்கு மதிப்பு என்ன?
ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவல உங்க பேர்ல பப்ளிஷ் பண்ணிப் பாருங்க...அப்ப தெரியும் உங்க வாதத்தின் அடிநாதம்...
//ஒரு அழகிய கட்டிடம் சிங்கபூரில் ஒரு பில்டர் பார்த்து விட்டு வந்து இருப்பார்.. அதே போல் இங்கு கட்டிடம் கட்டினால் வாவ் சூப்பர் என்போம்...
ஒரு வீட்டின் இண்டீரியர் அல்லது எதாவது ஒட்டலின் இன்டீரியர் பார்த்து விட்டு அது போல நமது அலுவலகத்தில் செய்து வைத்தாள் வாவ் மார்வலஸ்.... என்போம்...
சரவணபவன் சாம்பார் போல வசந்தபவனில் இருந்தால் அற்புதம் என்போம்...//
நீங்க தெரிஞ்சு தான் சொல்றீங்களா,இல்ல புரியாம சொல்றீங்களா? copyright வாங்கி செய்ற விசயத்துக்கும் ,இதுங்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு நிஜமாவே புரியல? உங்க உதாரணமே தப்பு. copyright கொண்ட ஒரு விசயத்தையும்,சாப்பாட்டையும் எப்படி ஒப்பிடுவீங்க? சரி, அப்படிப் பார்த்தா, திருட்டு விசிடிகாரங்கள நாம தூக்கி வச்சு இல்ல கொண்டாடனும்? ரெண்டு பேருமே உழைப்பை திருடறவங்க தான? ஏன் அவங்க மட்டும் கிரிமினல் னு சொல்றீங்க?
// நமது கல்விமுறை என்பது காப்பி அடிக்கும் கல்விமுறைதான்... வரிக்கு வரி புத்தகத்தில் இருப்பது போல் எழுதி வைத்தால் மார்க்...//
அதுக்காக,அது சரின்னு ஆயிடுமா?கல்வி முறையே தப்புன்னு தான பாஸ் இங்க பலர் சொல்றோம்?
//உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை....//
ReplyDeleteஅப்படியா?எல்லோருமே அப்படி தான்னு உங்களால சொல்ல முடியுமா?
//பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க?? என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....//
பல படங்கள்ல நடிச்ச சார்லிங்கற காமெடி நடிகர் என்னோட ஒரு முறை தூத்துக்குடிக்கு பஸ் ல வந்தார்.அவரை யாரும் கண்டுக்கலை..அது ஏன் பாஸ்? இது இப்ப அவர் மார்க்கெட் போன பின்ன இருக்கும் னு நீங்க சொல்லலாம்.இது நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷம் இருக்கும்.cinema will fetch you a curious glance.but in most cases,that's it...
//சரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...இந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா....??//
யாருகிட்டயாவதுனு நீங்க எப்படி உறுதியா சொல்றீங்க? நானு யூஸ் பண்ற லேப்டாப் ல இருக்கிற விஸ்டா நானு காசு கொடுத்து வாங்கினது தான்.
//ஆனால் கமல் அப்படி எடுத்த கதைகளை வரிக்கு வரி காப்பி அடித்து இருக்கின்றார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...மிசஸ்டவுட்பயர் நாட் அவ்வை சண்முகி அவ்வளவுதான்.... ஆனால் கதை வேறு இதில் இருக்கும் கிளைகதைகள் வேறு வேறு....அப்படித்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லா படங்களும்....//
அண்ணே,கொஞ்சம் காபி அடிச்சதுக்கு தான் இவ்ளோ பேச்சும்....
மொத்தமா காபி அடிச்சு இருந்து இருந்தா அவரு படம் எடுக்கவே லாயக்கு இல்லன்னு சினிமாவ விட்டே பத்தி இருப்பாங்க..
//இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா? சீனாவுல போக கூடாதா? என்று கேட்டேன்.. பதில் இல்லை.....//
ஆமாமா,எல்லா இடத்துலயும் தான் திருடுறாங்க... (நான் சினிமா பத்தி ஒண்ணும் சொல்லல...)
//அங்க எல்லாரும் காப்பி அடிப்பாங்களாம்....லுஸ்ல விடு என்று போய் விடுவார்கள்....//
அண்ணே,உங்களுக்கு ஒரு சின்ன தகவல்...
ஓல்ட் பாய் னு ஒரு படம்,பெரிய ஹிட்..
வழக்கம்போல இந்தியா ல,ஹிந்தில அட்டுக் காபி அடிச்சு படம் எடுக்கப் பார்த்து,சேதி கேட்டு கேஸ் போடுவோம்னு மிரட்டி,பெரிய பிரச்சனை ஆச்சு...
எல்லோரும் தானதுக்கா படம் எடுக்குறாங்க? நீங்க எடுப்பீங்களா?
// நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை...//
இது சரியான பதில் இல்ல நண்பரே...
// நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...//
இந்த இழவு தாண்ணே எனக்கு புரியவே மாட்டுது.அவரு மாத்தலன்னா நீங்க மாறியே இருக்க மாட்டீங்க?வெளிநாட்டுப் படங்கள் பார்க்க பத்து வருசத்துக்கு முந்தி வீடியோ கேசட்,அப்புறம் சிடி,டிவிடி,நெட் னு பல விஷயங்கள் எப்பவும் இருக்கு..
நானு எல்லாம் கமல் படம் பார்த்து மாறல..இது தான் உண்மை.உடனே எத்தனை பேரு உங்களை மாதிரி னு கேப்பீங்க. அது எல்லாம் relevant கிடையாது இங்க.கமல் காபி அடிக்குறது தான் இங்க டாபிக்...அவரு என்ன 'சேவை' செய்தார்ங்கறது அனாவசியம்...
அப்புறம்,"உலகப்படம் பார்க்க வாய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்."
அப்டின்னு சொல்றவங்களுக்கு,'அண்ணே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே! நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் 'நல்ல' படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க.உங்களுக்கு இஷ்டம் இல்லாம இருக்கலாம்.அதுக்காக அவரை ஞாயப்படுத்தாதீங்க.'
அட,அதை எல்லாம் விடுங்க. அது என்ன நல்ல படங்களை அவர் மூலம் தான் தெரிந்து கொண்டேன்ங்கற மாதிரியான ஒரு பேச்சு? அப்ப அதுக்கு முந்தி நீங்க எந்த படமும் நல்ல படமா பார்க்கல?பாலச்சந்தர்,மகேந்திரன்?அவங்களை விடுங்க,பாலச்சந்தர் கூட சில படங்கள் காபி அடிச்சதா தான் சொல்றாங்க.ஏதோ ஒரு நல்ல படம்?
lastly,கமல் நல்ல நடிகன்.அவரை ஒரு நடிகனா எனக்கு பிடிக்கும்.but, that's it...
அவரு ஒரு genius, கலை உலகின் விடிவெள்ளி போன்ற விஷயங்கள்ல எனக்கு உடன்பாடு இல்ல. அவரு பல வித்தியாசங்களை செய்து இருக்கலாம்.அதன் மூலம் அவரை தேடல் உள்ள மனிதன்னு வேணும்னா சொல்லுவேன். கண்டிப்பா genius னு இல்ல...
// அப்புறம்,"உலகப்படம் பார்க்க வாய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்."
ReplyDeleteஅப்டின்னு சொல்றவங்களுக்கு,'அண்ணே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே! நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் 'நல்ல' படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க
தல எனக்கு விரும்பாண்டியை போல நம் மண்மணத்துடன் கூடிய ஒரு ஒலக படம் எடுத்து கொடுங்க .... இல்ல தேவர் மகன் போல நம்ம சாதி வெறிய காட்டுற ஒரு உலக படம் காட்டுங்க ... நான் மேல சொன்ன இரண்டு படங்களின் கதை கருவை கொண்டு படம் வந்திருக்கலாம் வேறு எங்காவது ... ஆனால் அதையே நம் கலாச்சாரத்துக்கு ஏற்றார்போல மாற்றி நம் மக்களுக்கு புரிவதை போல படம் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? ராஜபார்வை என்ற படம் உட்ட்டர் பலாப் ஆனதற்கும் விரும்பாண்டி படம் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியதற்கும் இடைப்பட்ட காலத்தில் நம் ரசிகனின் ரசனையில் ஒரு முன்னேற்றம் வந்திருக்கிறது ... நீங்கள் வேண்டுமானால் இன்டர்நெட் பயன்படுத்தி இல்லை ஒலக படங்களை யில் பார்த்து உங்கள் ரசனையை முன்னேற்றி இருக்கலாம் .. இந்த வாய்ப்பே இல்லாத கடைநிலை தமிழனின் ரசனையும் கொஞ்சம் முன்னேறி இருப்பதில் கமலின் பங்கு கண்டிப்பாக பெரியது.... அந்த வகையில் அரைத்த மாவையே அரைத்து ரசிகனையும் பணத்தையும் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும் அந்த தவறை செய்யாமல் வேறு பாதையில் சினிமாவை திருப்பிய ஒரு காரணத்திற்காகவே அவரை பாராட்டலாம் ...
// தாக்கம் + பிரதி என்கிற இரு சொற்களுக்கு நிறையவேறுபாடுகள் இருக்கிறது. பாலுமேகந்திராவும்..மகேந்திரனும்..சத்யஜித் ரேயின் தாக்கத்திலும்...சத்யஜித்ரே...இத்தாலிய நியோ ரியலிச மற்றும் வில்லியம் வைலர் தாக்கத்திலும் உருவானவர்கள்....கமல் எடுப்பது ஒரு மேட்டிமையான பிரதி.. அதுவும் அறிவின் கவனத்தில் எடுக்கபட்ட கற்பனைச்சுரண்டல்...அவரால் ஒரு காலமும்.. காதல்..பசங்க..முந்தானைமுடிச்சு,அவள்அப்படித்தான்,
ReplyDeleteகிழக்குசீமையிலே,என் ராசவின் மனசிலே,போன்ற தமிழ் அடையாளம் சார்ந்த படங்களை ஒரு பொழுதும் எடுத்துவிடமுடியாது..
நீங்கள் நிணைப்பது போல் அவருக்கு ஒருபொழுதும் தமிழ்சினிமாவில் நல்ல சினிமா என்கிற ஆர்வம் என்கின்ற மண்ணாங்கட்டிலாம் ஒண்ணும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் இன்னும் கோடிகளை வாங்கிபோட்டுக்கொண்டு,..கிரண்,ஜோதிகா,த்ரிஷா,போன்ற இளம் நடிகைகளோடு ஜோடிபோட்டுகஆடிகொண்டிருக்கமாட்டார்.
அவர் ஒரு அப்பட்டமான போலி அறிவுஜீவி.
நிஜமாகவே நல்ல சினிமா அக்கறை இவரைவிட மிக சிறப்பாக நடிக்கும்..அமீர்கான்,மோகன் லால்,மம்முட்டி போன்ற நடிகர்கள்தான் //
நெத்தியடி....
அப்படியே ஆமோதிக்கிறேன்.
நண்பர் ராஜா சொன்ன மாதிரி, கமல் மற்றும் அமீர் கான் ரெண்டு பேரையும் ஒப்பிட்டுப் பாருங்க.யாருக்கு உண்மையிலே சினிமா மேல காதல் இருக்குன்னு தெரியும்.
mm follow up
ReplyDeleteஆதாம் ஏவாள் காப்பி அடிக்கபட்டதால்தான் இன்று உலகமே இயங்குகிறது.
ReplyDeleteஇட்லி தோசை ரெசிபி காப்பி அடிக்கபடவில்லை என்றால் அமேரிக்காவுல இட்லி கிடக்குமா?
எங்கோ படித்தது - புதுமை என்று ஒன்று இல்லை... பழமையின் புதிய பரிணாமமே புதுமை என்று அழைக்கப்படுகிறது... அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் நாகரீகத்தின் வளர்ச்சி இருக்கிறது...
ReplyDeleteஜாக்கி அண்ணா ..
ReplyDeleteபதிவு மிகவும் அருமை.
நான் தங்களின் பல கருத்துகளுக்கு உடன்படுகிறேன் ...
" கமல்மட்டும் பாரின் படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகவில்லை என்றால் உலகின் மிக சிறந்த படங்களை நம் நேட்டிவிட்டியில் பார்த்து ரசித்து இருக்கவே முடியாது....குணா, மகாநதி,அன்பேசிவம்...அப்படி புதிய முதல் முயற்சியை யாரும் தமிழில் பண்ண வாய்ப்பே இல்லை... "
" கமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல..... "
இங்கு கமலுக்கு ( காப்பிக்கு ) எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் இதுவரை தங்கள் வாழ்கையில் காப்பி அடிக்கதவர்களே..
-நட்புடன்
ஜெய்செல்வம் ராம்குமார்
Inspiration, Copy என விவாதம் போவதால் நாம் பேசும் மொழி வார்தைகள் உட்பட எல்லாமே copy தானே, குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையர் சொல்வதை திருப்பி சொல்லி தானே பேச பழகுகிறோம்? நாம் புதிதாக ஒன்றும் மொழி கண்டுபிடித்தி பேசவில்லையே? ஏதாவது ஒர் தாக்கத்தை வைத்து தானே ந்மது சொல்லும் செயலும் இயங்குகிறது? Action இருந்தால் தானே Reaction இருக்கும். Inspiration தவரே அல்ல ஈயடிச்சான் காப்பி கூட to an extent தவறில்ல என்பதே என் கருத்து.
ReplyDeleteகமல் பணம் பெயராத தன்னோட பரீட்சார்த்த முயற்சிகளையெல்லாம் அடுத்தவன் பேனர்லயும், நல்ல இலாபம் வரக்கூடிய கமர்ஷியல் மசாலா படங்களை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனர்லயும் எடுப்பது வழக்கம் (மக்களே, உடனே ரிவர்ஸ் உதாரணங்கள் தராதீங்க. ஏதோ ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு)
ReplyDeletenatch-nu oru nethiyadi
ReplyDeletesimply super
kamal vimarsagangaluku apparpattavar
nadippal uyarndhavar avar
copy adithu alla
- arasu
உங்கள் போன்ற பட்டறிவு மிக்க ஒருவரை ரசிகராக பெற்ற கமல் ரொம்ப அதிர்ஷ்டகட்டை,வேறென்ன சொல்ல.
ReplyDeleteஇனிமேல் புதுபடத்துக்கு ப்ரெஸ்ஸை கூட்டி கமல் இந்த படம் வெற்றியடையாட்டி சகலகலாவல்லவன் மாதிரி 10 படம் எடுப்பேன்னு சொன்னா.வாயால சிரிக்கமாட்டாண்ணே.
தவிர வெறும் பத்து கோடியிலும் மிக அருமையாக உலகை திரும்பி பார்க்கவைக்க முடியும் என்று பீப்லி லைவ் போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதில் ஓம்கார் தாஸ் மானிக்புரியிடம் மேக்கப் டெஸ்டில் தோற்றதால் அமிர்கான் நடிக்காமல், ஓம்கார் தாஸையே நடிக்க வைத்து அழகுபார்த்தார்.
அதுபோல ஆட்களைப்பற்றியும் நீங்கள் இதுபோல எழுதவேண்டும்.
தவிர டிசைனில் நீங்கள் சொன்னது போல இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொள்வோம்,ஆனால் பொருந்தாத இடத்தில் பொருந்தாதவற்றை டிசைனர்கள் பொருத்திப்பார்க்கமாடார்கள்.தவிர நம் தேசம் ஸ்டார் ஹோட்டல்களை ஃபாரின் டிசைனர்களே டிசைன் செய்கிறார்கள் என்பது எத்தனை பேர் அறிவார்கள்?.
தவிர நம்ம ஊர் மக்கள் ரசனை இன்னும் பலகாத தூரம் போகனும்.வட இந்திய பட உலகில் கமலுக்கு சித்தப்பா,பெரியப்பா எல்லாம் இருக்கின்றனர்.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை போலதான் நம்மூருக்கு கமல்.
உங்கள் போன்ற பட்டறிவு மிக்க ஒருவரை ரசிகராக பெற்ற கமல் ரொம்ப அதிர்ஷ்டகட்டை,வேறென்ன சொல்ல.
ReplyDeleteஇனிமேல் புதுபடத்துக்கு ப்ரெஸ்ஸை கூட்டி கமல் இந்த படம் வெற்றியடையாட்டி சகலகலாவல்லவன் மாதிரி 10 படம் எடுப்பேன்னு சொன்னா.வாயால சிரிக்கமாட்டாண்ணே.
தவிர வெறும் பத்து கோடியிலும் மிக அருமையாக உலகை திரும்பி பார்க்கவைக்க முடியும் என்று பீப்லி லைவ் போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதில் ஓம்கார் தாஸ் மானிக்புரியிடம் மேக்கப் டெஸ்டில் தோற்றதால் அமிர்கான் நடிக்காமல், ஓம்கார் தாஸையே நடிக்க வைத்து அழகுபார்த்தார்.
அதுபோல ஆட்களைப்பற்றியும் நீங்கள் இதுபோல எழுதவேண்டும்.
தவிர டிசைனில் நீங்கள் சொன்னது போல இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொள்வோம்,ஆனால் பொருந்தாத இடத்தில் பொருந்தாதவற்றை டிசைனர்கள் பொருத்திப்பார்க்கமாடார்கள்.தவிர நம் தேசம் முழுக்க ஸ்டார் ஹோட்டல்களை ஃபாரின் டிசைனர்களே டிசைன் செய்கிறார்கள் என்பது எத்தனை பேர் அறிவார்கள்?.
தவிர நம்ம ஊர் மக்கள் ரசனை இன்னும் பலகாத தூரம் போகனும்.வட இந்திய பட உலகில் கமலுக்கு சித்தப்பா,பெரியப்பா எல்லாம் இருக்கின்றனர்.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை போலதான் நம்மூருக்கு கமல்.
பாஸ், எல்லாரும் காப்பியடிக்கிறாங்க ஒத்துக்கிறேன். மத்தவங்களுக்கு அதை வைத்து வெறும் வசூல் வியாபாரம்தான்! ஆனா கமலுக்கு? பேரும் புகழும், பெரும் படைப்பாளி என்ற பெருமையும் வருகிறதல்லவா? நீங்கள் பட்டியலிட்டிருக்கிறீர்களே விருதுகள், கமல் காப்பி அடித்து சம்பாரித்தவைதானே அவை. இதற்கெல்லாம் கமல் தேவையில்லை, அவர் இல்லையென்றால் இன்னொருவர் அதைச் செய்திருப்பார். கமலிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடி செயற்கைத்தனமான படங்களை கமல் என்ற ஒரு தனிநபருக்காக சகித்துக்கொள்ளப் போகின்றீர்கள். கமல் நடித்த நல்ல படங்கள் இருப்பதைப் போல கமல் நடித்துக் கெடுத்த படங்களும் நிறைய உள்ளன (ஹே ராம், விருமாண்டி, தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, மும்பை எக்ஸ்பிரஸ்). கமலால் ஒருபோதும் அழகி, காதல், வெயில் போன்ற வெகு யதார்த்தப் படங்களைத் தரவே முடியாது. நேத்து வந்த சின்னப் பசங்கள்லாம் பருத்திவீரன் சுப்ரமன்யபுரம், நாடோடிகள், பசங்கன்னு கலக்கிட்டு இருக்கும்போது கமல் இன்னும் செயற்கைத்தனம் நிறைந்த படங்களை, மேலும் தனது செயற்கையான நடிப்பால் வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சிம்ரனோடு நடிக்கவேண்டும் என்பதற்காகவே நடித்த பம்மல் K. சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது.
ReplyDeleteகமலிடம் நாயகன், மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்களை இனி எதிர்பார்க்க இயலாது என்பது வருத்தமே! கமல் தனது முக்கிய கட்டத்தை (Prime time) வீணடித்துவிட்டார். முகமும் முதிர்ந்துவிட்டது, உடலும் இனி ஒத்துழைக்கப் போவதில்லை.
World cinema is not hollywood. Just look at the golden period of Malayalam cinema (during 1980s). How Mohanalal and Mammootty contributed to Malayalam cinema. Most of the films are original and very importantly with lot of nativity.
ReplyDeleteYou never see Mohanlal or Mamootty or Aamir khan never praises (true from heart) Kamal as a great etc. For stage purpose they do.
Kamal himself tagged as high price actor and always tells in Malaylam channels etc that he is not affordable to Malaylam cinema etc.
Just go thro' the list of 2000 - 2010 cinema acted by kamal in particular acted with new breed or talented directors. Its a big ZERO. he wasted a lot in last ten years.
I am a great fan of Kamal but this copying hurt in a big time.
We don't know the original of MANMATHAN AMBU
World cinema is not hollywood. Just look at the golden period of Malayalam cinema (during 1980s). How Mohanalal and Mammootty contributed to Malayalam cinema. Most of the films are original and very importantly with lot of nativity.
ReplyDeleteYou never see Mohanlal or Mamootty or Aamir khan never praises (true from heart) Kamal as a great etc. For stage purpose they do.
Kamal himself tagged as high price actor and always tells in Malaylam channels etc that he is not affordable to Malaylam cinema etc.
Just go thro' the list of 2000 - 2010 cinema acted by kamal in particular acted with new breed or talented directors. Its a big ZERO. he wasted a lot in last ten years.
I am a great fan of Kamal but this copying hurt in a big time.
We don't know the original of MANMATHAN AMBU
கமல் நடிப்பில் மிக திறமையானவர் என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை. ஆனால், திறமை உள்ளவர் திருடினால் தப்பு இல்லை என்பது எந்த விதத்தில் சரி? அறிவு திருட்டு என்பது பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவு - அதன் வெளிப்பாடாகத்தான் இந்த பதிவை பார்கிறேன்.
ReplyDelete@ கருந்தேள்
ReplyDeleteஎப்புடிண்ணே உங்களால இவ்வளவு அருமையா சிந்திக்க முடியுது. ஒரு படத்த பார்த்து அது போல இல்லை உங்க பாணில ’காப்பி’ அடித்து எடுப்பதும் அப்பிடியே ஒரு பதிவ எடுத்துப் போட்டு பெயர் மட்டும் மாற்றி வெளியிடுவதும் ஒன்றா? ரெம்ப கஸ்டம்ணே.
ஜாக்கி அண்ணே சொல்லி இருக்கிற மற்ற விசயங்களையும் கவனிங்க. நீங்க என்னாண்ணே LKG லேருந்து காலேஜ் வரை பரீட்சையில கூட காப்பி அடிச்சிருக்க மாட்டீங்க் போல :)
@ கீதப்பிரியன்
ReplyDelete// உங்கள் போன்ற பட்டறிவு மிக்க ஒருவரை ரசிகராக பெற்ற கமல் ரொம்ப அதிர்ஷ்டகட்டை,வேறென்ன சொல்ல. //
நீங்க என்னாண்ணே ஹார்வர்டு பல்கலைகழகத்துல டிகிரி வாங்குனாதேன் பதிவு போடனுங்குறீகளா? ஜாக்கி எஙக தான் ஒரு பட்டறிவு பெற்றவர்னு போட்டிருக்காரு.
கருத்து சொல்றதுன்னா பதிவுக்கு சம்பந்தமா எதாச்சும் சொல்லுங்க பாஸ்.நாங்க இன்னிக்கும் என்னிக்கும் கமல் ரசிகர்கள்தேன்.அத சொல்றதுல எந்த வெட்கமும் இல்லை.
நெத்தியடி....
ReplyDeleteஅப்படியே ஆமோதிக்கிறேன்.
நண்பர் ராஜா சொன்ன மாதிரி, கமல் மற்றும் அமீர் கான் ரெண்டு பேரையும் ஒப்பிட்டுப் பாருங்க.யாருக்கு உண்மையிலே சினிமா மேல காதல் இருக்குன்னு தெரியும். நன்றி...ILLUMINATI..சமீபமாகத்தான் பீப்ளி லைவ் பார்த்தேன்... ஆமீர்கான் காலைத்தொட்டு கும்பிடனும் தமிழ் சினிமாவுல நடிகன்னு சொல்லிக்கிற அத்தனை பேரும்..இத்தனைக்கும் தன்னோட தயாரிப்புல உள்ள ஒரு படத்துக்கு(பீப்ளி லைவ்) AUDTION ல் பங்கேற்று அவர் நிராகரிக்கபட்டு வேறு சாதாரண நடிக்கவைக்கபடுகிறார்..விக்ரம் நடிக்கவேண்டிய விருமாண்டியில் திரைக்கதையில் தேவையில்லாமல்..(தோல் நிறம் ஒட்டாது என்கிறதுகாக.) கமல் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பாதாக கதையை திசைதிருப்பியிருப்பார். நாக்கில நரம்பு இல்லாம எப்படிங்க இவரபோய் சகலகலாவல்லவன்னு சொல்லுறாங்க... ?
'கட்டிடங்களை வடிவமைக்க அணுகுங்கள்' என்று ஒரு விளம்பரத்தை உங்களது தளத்தில் வைத்துக் கொண்டே, கட்டிட அமைப்புகளை காப்பியடிக்கலாம் என்று துணிச்சலாக கூறுகிறீர்கள்!
ReplyDeleteகட்டிட அமைப்புகளை காப்பியடிப்பது 'டிசைன்ஸ் ஆக்ட்' என்ற சட்டத்தில் தண்டிக்கப்படக்கூடிய குற்றம்.
மும்பையில் முன்னணி ஆர்கிடெக்ட் ஹபீஸ் காண்டிராக்டர். அவரது புகழ்வாய்ந்த கட்டிட வடிவமைப்பை திருடி சென்னையில் கூட சில கட்டிடங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் 'வாவ்' என்று வியந்தாலும்...என்னால் வியக்க முடியாது.
டிசைனை கொடுத்தால், இங்கே மதுரைப்பக்கத்தில் எந்தக் கொத்தனாரும் அதே போல கட்டிவிடுவார்கள். ஆனால் அவர்கள் ஹபீஸ் காண்டிராக்டர் போல கொண்டாடப்படுவதில்லை.
'பிக்காசோவின் எந்த ஓவியத்தையும் அசலைப் போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் பங்கில் ஒரு சதவீதம் கூட உலகம் அளிப்பதில்லை' தமிழ் திரைப்படங்களில் காப்பி பற்றிய எனது பதிவில்http://marchoflaw.blogspot.com/2008/12/blog-post_27.html திரைப்படங்களைப் பற்றி அதிகம் எழுதுபவரும், சமீபத்தில் படைப்புத் திருட்டினால் பாதிப்படைந்தவருமான தங்களிடம் இருந்து காப்பிக்கு சப்பைக்கட்டு கட்டி இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.
ReplyDelete//Inspiration, Copy என விவாதம் போவதால் நாம் பேசும் மொழி வார்தைகள் உட்பட எல்லாமே copy தானே, குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையர் சொல்வதை திருப்பி சொல்லி தானே பேச பழகுகிறோம்? நாம் புதிதாக ஒன்றும் மொழி கண்டுபிடித்தி பேசவில்லையே?// இது ஏற்கத் தக்க வாதமே அல்ல. பேசுவதற்குத்தான் பெற்றோர்களிடமோ, மற்றவர்களிடமிருந்தோ கற்றுக் கொள்கிறோம், அதுக்கப்புறம் கவிதை, கதை, கட்டுரை என்று சொந்தமாகவே எழுத முடியும். [வண்டியை ஓட்டக் கற்றுக் கொண்டபின்பும் அதே மைதானத்திலேவா வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம்? அதுக்கப்புறம் எந்த சாலையில் வேண்டுமானாலும் சொந்தமாக ஓட்ட மாட்டோமா?]
ReplyDeletesaro Sunday, September 12, 2010 2:33:00 சொன்னது நூத்துக்கு நூறு ஒப்புக் கொள்கிறேன்.
இவர்கள் காப்பியடிப்பதை குறை சொல்லவில்லை, ஆனால் எல்லாம் இவர்கள் மூலையில் உதித்தது என்பது போல் பந்தா செய்கிறார்களே, அதுதான் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் கொடுமை, மணிரத்னம் போன்றவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம், இந்தச் செயலில் அவர் பண்ணியது எல்லாமே காப்பியடித்தது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. நாயகன் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பியது கேவலம் அல்லவா? அங்கு அவர்கள் காறித் துப்பினார்களே? கமல் போன்றவர்கள் பொது மேடைகளில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி ஏன் கருத்து கந்தசாமியாக உளற வேண்டும்? திருமணத்தில் இவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் அதை ஏன் எல்லோரும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் பேசித் தொலைக்க வேண்டும்? இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளலாமே?
தொடர் கதை அருமை ! இடையில் விளம்பரங்களும் ரொம்ப அருமையாக இருந்தது !! மிகவும் சுருக்கமாய்!! ஒரு இடத்தில் கூட தடுமாறாமல் !! ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!! எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது !! நல்ல விளம்பரம் !
ReplyDeleteதிரு ஜாக்கி அவர்களுக்கு, உங்கள் எழுத்து அருமை. கமலை கிண்டல் செய்வதின் மூலம் தான் பெரிய அறிவுஜீவி என்று நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி. கமலின் மிகச்சிறந்த படைப்பாக அன்பே சிவத்தை கருதுகிறேன். கமலை பற்றிய என்னுடைய எண்ணங்கள் தங்கள் எழுத்தில் வெளிப்பட்டது. நன்றி. உங்கள் கோபத்தில் ஜெயகாந்தன் தெரிகிறார். நான் ப்ளாகுக்கு புதுசு. உங்கள் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கிறேன். ஏதும் தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteஜெகன்.
Hi jackie Sekar
ReplyDeleteellam sari....Thevai illamal Rajini-i izhuththathu sari illai.
OK if you don't mind.... unkal anumathiyudan unkaludaya peyarilaye intha pathivai matroru blog-l pathivu seiyalama??
வெள்ளை வேட்டியில் சிறிய கறுப்புக்கறை இருந்தால் எம் கண்களை உறுத்துவதென்னவோ அந்த கறுப்புக்கறைதான்.இது மனிதஇயல்பு.அவ்வாறு எமக்கு தோன்றக்காரணம் அந்த சிறிய கறையை சுற்றிலும் வெள்ளையாக இருப்பதுதான்.கமலின் தவறான விமர்சனங்களை வீசுபவர்கள் மீது எனக்கு கோபம் வருவதேயில்லை.மாறாக அவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்.ஏனெனில் நான் கமல் என்ற பைபாளியை உண்மையாக உணர்ந்த ரசிகன்.
ReplyDeleteஜாக்கி!இங்கே ஒரு புத்தகம் படித்த அறிவாளிகள்தான் அதிகம்.தமக்கும் உலக சினிமா தெரியும் என்பதை மற்றவனுக்கு தம்பட்டம் அடிக்கவேண்டும் என்பதற்க்காகவே "காப்பி அடிகிறாங்கங்கள், காப்பி அடிகிறாங்கங்கள்" என்று ஒரு கூட்டம் கத்திகொண்டுதான் இருக்கிறது.இருக்கும்.கமலிடம் குறை கண்டுபிடிக்க கூடும் கூட்டம்.கமல் செய்த நிறைவான காரியங்களை பாராட்டி ஊக்கிவிக்க கூடுவதேயில்லை என்பதுதான் உண்மை.நிழலின் அருமை வெயிலில் தெரியும்.நிழலின் அருமை அந்த அறிவுஜீவிகளுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை,வெயில் மட்டும் வந்துவிடக்கூடாது.
ReplyDelete"அப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்....."
ReplyDeleteஜாக்கி!நான் ஏன் இந்த இடுக்கைக்கு இத்தனை பின்னூட்டங்களை அனுப்புகிறேன்றால் என் தாயை பற்றி வேறொருவன் தவறாக பேசினால் என்ன உணர்வு வருமோ....அந்த உணர்வுதான் வருகிறது கமலைப் பற்றி தவறாகப் பேசுகையில்...ஏனெனில் எமக்கெல்லாம் உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.எம்மை போன்ற நல்ல சினிமாவை உண்மையாக நேசிக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கமல்தான் தாயுமானவர்.தயவு செய்து இவ் இடுகைக்கான எனது எல்லா பின்னூடங்களையும் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறேன்.நீங்களும் கமலுக்கு துரோகம் செய்துவிடாதீர்கள்!
உரிய அனுமதி பெறாமல் அந்நிய நாட்டுப் படங்களின் கதைகளைத் திருடி படமெடுக்கும் தமிழ் திரையுலகினரின் செயல் சரிதான் என்று வக்காலத்து வாங்குபவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருத்தர் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் அந்த தகுதி ஒன்றை வைத்துக் கொண்டே உலகத்தில் எடுக்கும் படங்கள் எல்லாத்தையும் ஈயடிச்சான் காப்பியடிக்கலாம் என்று அர்த்தமல்ல. நடிப்பில் சிறந்தவன் என்ற தகுதி கதையைத் திருட கொடுக்கப் பட்ட உரிமம் அல்ல. கதைக்குச் சொந்தக் காரனிடம் அனுமதி பெற்று அதற்க்கப்புறம் அதை படமாக்கட்டும், வரவேற்கிறோம். நடிகனான பின்புதான் கேள்வி கேட்க வேண்டுமென்பதில்லை. அப்படிப் பார்த்தால் கலெக்டரான பின்புதான் அவரிடம் மனு கொடுக்க முடியும், முதலமைச்சரான பின்புதான் அவர் பண்ணும் அட்டூழியங்களைப் பற்றி யாரும் எழுத முடியும், பிரதமரான பின்புதான் அவரைப் பற்றி விமர்சிக்க முடியும். இதெல்லாம் நடக்காது. திருடனை யார் வேண்டுமானாலும் திருடன், ஜாக்கிரதை என்று சொல்லலாம், தப்பில்லை.
ReplyDeleteEnnathan copy adichalum ennatha parichartha muyarchigal eduthalum sontha kosil edukka vendum. nengal sonna rajini kalal carai niruhtia madhuri ippathan kamal dasavadharam padathel neriya commerical element kuduth edutha appothu negal kanner vittu siruthirkalla enakku thriyathu
ReplyDeleteஜாக்கி .. உங்க blog-அ இப்பதான் படிச்சுட்டு வாரேன்... ரொம்ப எளிமையா இருக்கு...
ReplyDeleteமேல உள்ள தொக்குப்பு ல ஒரு சின்ன கருத்து..
"கமல் கர்வியா... எஸ் கமல் கர்விதான்.." .. "கர்வம்" அப்படின்னு சொல்றத விட 'அறிவுச் செருக்கு" னு சொல்லலாமா .. ;)
சரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...
ReplyDeleteஇந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா....??, அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா??? எல்லாம் காபிதான்... தினமும் எக்ஸ் பி சாப்ட்வேர் ஓப்பன் பண்ணும் போது தேங்ஸ் என்றா சொல்லி கொள்கின்றோம்.............sir romba romba nalla irukku..........
hello aamir loving tamils,what is ur stand on "chathur ramalingam" character in the movie 3idiots where the only idiot is a tamil?! born in uganda,brought up in pondicherry..... that is how the character introduces himself.. and we tamils need to fall at his feet?????ok.we know art sans language, culture , nation etc.,etc.,since when we had the habit of accepting our folk.chetan bhagat who funnied the whole tamil brain industry(in his two states) is celebrated as youth icon in tamil nadu..as my other state friends tell me ,we are best at ditching our own.c'mmon let s fall at amir s feet but before that let him answer what language tamils speak.. his answer would be telugu.. or something else.that s all they know abt us. right now i dont hv access to comment in tamil.will get back in tamizh
ReplyDelete