ஆல்பம்....
இன்று காலை நடிகர் முரளி இறந்து விட்டார்...ஹார்ட் அட்டாக்கில் இன்று காலைஅவர் உயிர் பிரிந்து விட்டது.. முரளி நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது... இதயம் மற்றும் வெற்றிக்கொடிகட்டு.... தனது மகனை ஹீரோவாக பானா காத்தாடி படத்தில் அறிமுகபடுத்தி அந்த நிறைவோடு இறந்து போய் இருக்கின்றார்... இன்னும் காலேஜ் பையன் போல அதே பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார் என்ற பொறாமை சக நடிகர்களுக்கு நிறைய உண்டு...பூந்தோட்டம என்று ஒரு படம் முரளி நல்ல நடிகன் என்று சொல்ல அந்த ஒரு படம் போதும்.... =============
ரஷ்யபடைகள் சுற்றி வளைத்து விட்டன...ஹிட்லரால் சரணடைவதை தவிர வேறு வழியில்லை...சரணடைகின்றது ஜெர்மணி என்று சொல்லிவிட்டு இருந்தால், பல போர் வீரர்கள் சரணடைந்து இருப்பார்கள்...ஹிட்லர் வீம்புக்கு ஏதும் சொல்லாமல் இருந்த காரணத்தால்.. பல வீரர்கள் எந்த உதவியும் இல்லாமல் மரித்து போனார்கள்... அடிபட்ட பல வீரர்கள் உதவி கிடைக்காமல் நரக வேதனை அடைந்தனர்..ஹிட்லரிடம் தளபதிகள் சொல்கின்றார்கள்...எதையாவது செய்யுங்கள்... பல துருப்புக்கள் மரண அடி வாங்கி இறந்து கொண்டு இருக்கின்றார்கள்...அதற்கு ஹிட்லர் சொல்கின்றான்... இறந்து போகட்டும் அதுக்குத்தானே அவர்கள் போர்வீரர்கள் என்று சொல்லுவான்... அது போல இருக்கின்றது நமது பிரதமரின் பேச்சு....வீணாகும் உணவை எழைகளுக்கு தர முடியாது என்று திருவாய் மலர்ந்து இருக்கின்றார்....உச்சநீதி மன்றம் கண்டித்தாலும், ஒரு சின்ன ரியாக்ஷன் கூட கொடுக்காமல் எங்கள் எல்லையில் நீங்கள் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதி மன்றத்தை சொல்லி இருக்கின்றார்....அடுத்த வேலை உணவு இல்லாமல் 33சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாக உலக புள்ளிவிபரம் பசியின் வேதனையோடு கதறி தெரிவிக்கின்றது...ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் இருக்கின்றார்...ச்சே நாமும்தான் சென்னை, மும்பை, கல்கத்தா, பம்பாய் போறோம்.. யாரும் பசியில் இருப்பது போல் தெரியவில்லையே எல்லோரும் சுபிட்சமாகதானே இருக்கின்றார்கள் என்று அவர் நினைத்து இருக்க நிறைய வாய்ப்பு இருக்கின்றது... நமது பிரதமர் பிப்பில் லைவ் பார்த்தார் என்று கேள்விபட்டேன்... மீண்டும் ஷாருக்கான் நடித்த சுவதேஷ் படத்தை ஒரு முறை பார்க்க கேட்ககொள்ளபடுகின்றார்.. நீங்கள் வாசிக்க..இங்கே கிளிக்கவும்
===================
மிக்சர்...
இனிய சந்திப்பு... பதிவுலக நண்பர் ரோஸ்விக் சிங்கபூரில் இருந்து சென்னை வந்து போன் செய்தார்... அவரை நான் கேபிள்,கேஆர்பி செந்தில் மூவரும் சந்தித்தோம் ...நிறைய பேசினோம்... சிங்கபூர் ஓட்காவில் தாகத்தை தனித்தோம்...ரோஸ்விக்...விடைபெறும் போது உடன்பிறந்த தம்பி போல் ஒரு வார்த்தை சொன்னான்.. அண்ணே கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொள்ள சொன்னான்... நான் என்ன மாட்டேன் என்றா சொல்கின்றேன்...என்னை பொறுத்தவரை முன்னைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை...
===========
சென்னை கமலா தியேட்டரில், புகைபிடிக்ககூடாது என்பது விதி.. வரவேற்போம்...டிக்கெட் கிழிக்கும் இடத்தில் பாக்கெட்டில் வைத்து இருக்கும் ஒரு பாக்கெட் சிகரேட்டை பிடிங்கி வைத்துக்கொள்கின்றார்கள்... செய்யனும் யாராவது டாயலட்டில் மறைந்து தம்மு அடித்து விட்டக்கூடாது அல்லவா???... நல்ல விசயம்... ஆனால் படம் முடிந்து வரும் போது என்னுடைய ஒரு பாக்கெட் கிங்ஸ் திருப்பிக்கொடுக்க வேண்டும் அல்லவா? கொடுக்காமல் அபிட் விட்டு விடுகின்றனர் என்று ஒரு நண்பர் புலம்பிக்கொண்டு இருந்தார்...
==========
சிந்துசமவெளி பற்றி படம் எடுத்த இயக்குனர் சாமி கார் தாக்கபட்டு இருக்கின்றது .. இந்திய சென்சார் போர்டு சென்சார் கொடுத்து விட்டது.. பிடிக்கவில்லை என்றால் படத்துக்கு போகாதீர்கள்... அதைவிடுத்து தகராறு செய்வது ஏற்புடையது அல்ல... இது படம் ஓட வைக்க நடத்தும் ஸ்டண்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கின்றது...ரொம்பவும் யோக்கியன் சாமி மீது கல் எறியுங்கள் என்றால் ஒருவரும் கல் எறியபோவதில்லை அதுதான் ...நிதர்சன உண்மை... வீட்டின் வரவேற்பரையில் தொடர்ந்து சீரியலில் யார் யாரை வைத்துகொண்டு இருக்கின்றார்கள் என்று நித்தமும் காண்பித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்... அதற்கு எங்கு போய் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள்..
==========================
இந்த வார நிழற்படம்...
டைம்மெசின்...
===================================
இந்தவார சலனபடம்...
நானும்தான் பெப்சி வாங்கி குடிக்கின்றேன்.. எந்த பய புள்ளையாவது இப்படி கேட்டு இருக்கா? அந்த டயர் விளம்பரம் கூட சூப்பபரோ சூப்பர்... ஆனா எதுக்கு எதை முடிச்சி போடறது...?????அதுதான் கிக்கோ கிக்.... பார்த்து ரசியுங்கள்..
==========
படித்ததில் பிடித்தது.,..
நான் பேரம் பேசும் அளவுக்கு, பெரிய ஆள் இல்லைஆனால் சரத்குமார் வலிமையான சக்தி என்பதை மறந்துவிடக்கூடாது... என்னுடைய சக்தி எத்தகைய ஆற்றல் மிக்கது என்று வெளியில் தெரியாமல் இருக்க.. காரணம் எங்களிடம் பணபலம் இல்லை...இந்த வார குமுதம் ரிப்போர்டரில் சரத்குமார் கொடுத்த பேட்டியில் இருந்து மேலுள்ள வரிகள்..
==============
பார்த்ததில் பிடித்தது...
ஆர்யகவுடா ரோட்டில் ஒரு சின்ன பெண் தன் அப்பாவுடன், பேப்பர் ,பால் வாங்க நடந்து வந்தது... அது அப்பாவிடம் பேசிய அழகே அழகு.. என்னமாதிரி பாடிலாங்வேஜ்... நளினம்... கை ஆட்டி பேசுவதும்.. அப்பா சொன்ன ஏதோ ஒன்றுக்கு சோக ரியாக்ஷன் காட்டியது, என பின்னி பெடலெடுத்துக்கொண்டு இருந்தது... அந்த ரசிப்பை நான் ரசிப்பதை அந்த குந்தையின் அப்பா, பார்த்து விட்டார்... அவருக்கு மகள் பற்றிய பேச்சு பெருமை தாங்கவில்லை அதை கண்களில் நான் பார்த்து விட்டேன்...அதே ரோடு.... மூன்று நாட்களுக்கு முன் சட்டென மழை பெய்தது.... அந்த பெண்ணுக்கு பர்த்டேவாக இருக்கலாம்... புது சாரி உடுத்தி வேலைக்கு போய் இருக்கின்றாள்...அந்த பெண்ணின் அப்பா இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து வரும் போது மழை.. நான் மழைக்கு ஒதுங்கிய கடையில் அவரும் தன் பொண்ணோடு ஒதுங்கினார்... தென்னங்கீற்றில் மழை நின்றதும் தண்ணீர் சொட்டுமே.. அது போல் அந்த பெண்ணின் பின்புறம் 500 கொடுத்து கட் செய்த முடியில் இருந்து மழை நீர் சொட்டு சொட்டாக சொட்ட ,அது அந்த பெண்ணின் வெள்ளை முதுகு பக்கம் வழிய, சட்டென பார்த்தால் அவர் அப்பா என்னை கவனிப்பது தெரிந்து நான் சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்ப... அப்பாக்கள் ஒரே மாதிரி ரசனை கொண்டவர்கள் இல்லை என்பது மட்டும் புரிந்தது..............
நான் எடுத்த புகைபடம்...
பாரிசில் இருக்கும் ஒரு இரவு நேர தள்ளுவண்டி நூடுல்ஸ் கடை... கேமரா ஆட்டோ போக்கஸ்..... சோனி...
===============
பேசியதில் பிடித்தது...
படபிடிப்பின் பிரேக்கில்...ஒரு 6ம் வகுப்பு படிக்கும் பெண்ணோடு பேசிக்கொண்டு இருந்தேன்.. பேச்சு எல்லாபுறமும் நடந்து ஓடி இளைப்பாறி கடைசியாக உனக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்றேன்... எனக்கு சிம்பு என்று அந்த பெண் சொல்லியது...ஏன் என்று கேட்டேன்??? சிலம்பாட்டம் படத்தில் சிம்புவின் டான்ஸ் தனக்கு பிடிக்கும் என்று சொல்லியது...கொஞ்ச நேரம் கழித்து திரும்ப திரும்ப என்னிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தது... எனக்கு ஒன்னு புரிஞ்சி போச்சு.. உனக்கு என்னை பிடிச்சி இருக்கு... அதனாலதான் என்கிட்ட திரும்ப திரும்ப நீ பேசிகிட்டு இருக்கே... என்ற நான் சொன்னதும்..முகத்தில் சிறு அதிர்ச்சியை காட்டிவிட்டு,இல்லவே இல்லை என்று சாதித்ததால்...பொய் சொன்ன எனக்கு பிடிக்காது என்று நான் சொல்ல....சரி ஆமாம்... நீ காமெடியா நல்ல பேசற ? அது எனக்கு பிடிச்சி இருக்கு அதுக்கு இப்ப என்ன? என்று கேள்வி கேட்ட போது... பெண் பிள்ளைகள் ரொம்ப பொல்டாக மாறிவிட்டார்கள்..
=======================
இந்த வார கடிதம்...
hello mr.jakie how are, i hope everything is going well, im wishing here to become a camera men as soon as possible.
im a follower of you for a while, i here by say something about a bollywood movie which called "peepli-live"
produced by AamirKhan. please watch the movie and make your review about it.
with best regards
vinod
வாழ்த்துக்கு மிக்க நன்றி வினோத்... விரைவில் பார்க்கின்றேன்... நமக்கு ஹிந்தி நஹி மாலும்... சப்டைட்டில் டிவிடிக்கு வெயிட்டிங்..... மீண்டும் நன்றி உங்கள் வாழ்த்துக்கு...
=======================
இந்தவார பதிவர்...
வண்ணத்துபூச்சி சூர்யா...
பதிவுலகத்தில் எனக்கு சீனியர்... ஒரு சென்னை உலகபடவிழாவில் சந்தித்துக்கொண்டோம்.. கள்ளமில்லாமல் சிரிப்பதை கண்களில் காட்டிக்கொடுப்பவர்... எனக்கு நல்ல நண்பர்..இவருடைய பல உலக சினிமா கட்டுரைகள் அச்சுஊடகத்தின் மூலம் பலரிடம் சென்று அடைந்து இருக்கின்றது... ஆணி புடுங்கும் வேலை அதிகம் இருக்கும் காரணத்தால் முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை இருப்பினும் ஒரு முறை உலகபடங்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
==================
பிலாசபி பாண்டி...
முள்ளின் திறமையை பாருங்கள்.. காலால் மிதித்தவனை கையால் எடுக்க வைக்கின்றது... அது போல் நாமும் வாழ்வோம்..
======
தினமும் காலண்டர் கிழச்சதும் தூக்கி போடே வேண்டாம்.. அப்படியே சாப்பிடுங்கள்.. தினமும் டேட் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது... சிங்கம் போல ஸ்டென்த் எனக்கு....
நான்வெஜ்...18+
ஜோக்..1இங்கிலிஷ்காரன்,ஜெர்மன்காரன் , இந்தியாக்காரன் எல்லோரும் நீச்சல் குளத்துக்கு மேல உட்கார்ந்து இருந்தாங்க...இங்கிலிஷ்காரன் கைய வச்சிக்கினு சும்மா இருக்காம...சட்டென லுல்லுவை நீச்சல் குளத்து தண்ணியில் வச்சி தண்ணி டெம்பரேச்சர்..38டிகிரி சென்டிகிரேட்னு சொன்னான்.. உடனே ஜெர்மன் காரன்.. அவனும் அதே போல் வச்சி பார்த்துட்டு 90 பாரன்ஹிட்ன்னு சொன்னான்... இந்தியாக்காரன் அதே போல சொல்லுவான்னு எதிர்பார்த்தா பத்து நிமிஷத்துக்கு வாயே திறக்கலை...மேலை 35 டிகிரி...நடுவுல 20 டிகிரி,தரையில 8 டிகிரி... இந்த நீச்சல் குளத்தோட மொத்த ஆழம் 18 அடின்னு சொன்னதும்... மத்த ரெண்டு பேரும் தண்ணியல உடனே குதிச்சிட்டாங்க..
ஜோக்..2
அந்த தாத்தாவுக்கு 85 வயசு அந்த பாட்டிக்கு 80 வயசு ரெண்டு பேரும் தங்கள் கல்யாண நாளை செலிபரேட் பண்ண ஹோட்டலுக்கு போனங்க.... முதலில் சூப் ஆர்டர் பண்ணாங்க இரண்டு பேருக்கு சூப் டெபிளில் வச்சாங்க...ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னோட மார்பு வெது வெது ப்பான சூட்டை உணருதுன்னு பாட்டி கவிதையா பேச.... உடனே தாத்தா.. முதல்ல நீ நிமிர்ந்து உட்கார் என்றார்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
அருமை...முரளியின் மறைவுக்கு அனுதாபங்கள்..நல்ல நடிகர்.
ReplyDeleteநீங்கள் சொன்னவுடன் தான் முரளி மறைந்தது தெரிந்தது. அஞ்சலிகள்.
ReplyDeleteஎன்னங்க சின்ன பொண்ணும், 18 வயசு பொண்ணும் ஒண்ணா ? :)
//சிந்துசமவெளி பற்றி படம் எடுத்த இயக்குனர் சாமி கார் தாக்கபட்டு இருக்கின்றது .. இந்திய சென்சார் போர்டு சென்சார் கொடுத்து விட்டது.. பிடிக்கவில்லை என்றால் படத்துக்கு போகாதீர்கள்... அதைவிடுத்து தகராறு செய்வது ஏற்புடையது அல்ல... இ//
ReplyDeleteஎன்னங்க கொடுமை இது ? பாலச்சந்தர் எடுக்காத இல்லிகல் உறவு கதைகளையா சாமி எடுத்துட்டார்னு சாமி ஆடுறாங்க ?
முரளி மறைவு ரொம்ப வருத்தம். யதார்த்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் இருந்திருக்கிறார். கடவுள் இப்படிதான் சிறந்தவர்களை நெடு நாள் விட்டு வைக்க மாட்டான் போலும்.
ReplyDeleteவலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி..
ஆமா.. வாரம் ஒரு போட்டோதான் எடுப்பியா..?? LOL
முரளியின் மரணம் ஒரு சோகம். அவருக்கு என்ன வயது என்று செய்திகளிலும் சொல்லவில்லை. பார்த்தால் சிறிய வயதில் உயிர் துறந்தார் என்றே தோன்றுகிறது.
ReplyDeleteஅவரின் மரணத்திற்கு என்னுடைய அனுதாபங்கள்...
முரளி - அனுதாபங்கள்.
ReplyDeleteபடம் - நன்று.
all of Super .
ReplyDeleteநடிகர் முரளியின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஏனையவை அருமை.
gud as usual........
ReplyDeleteபாரிஸ் வந்தபோது முன்னாடியே சொல்லி இருந்தா மீட் பண்ணி இருக்கலாமே ? இப்படி சொல்லாம கொள்ளாம வந்துட்டு திரும்பி இருக்கீங்களே ? இது எல்லாம் நியாயமே இல்ல.
ReplyDeleteநம் இதயத்தில் நின்ற முரளிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
ReplyDelete'இதயம்' போகுதே எனையே பிரிந்தே
ReplyDelete//இன்று காலை நடிகர் முரளி இறந்து விட்டார்...ஹார்ட் அட்டாக்கில் இன்று காலைஅவர் உயிர் பிரிந்து விட்டது.. //
ReplyDeleteஉறவை சொல்லி அழுவதினாலே உயிரை மீண்டும் தருவானா?
அருமை.
ReplyDeleteவிளம்பரம் நல்லாயிருக்கு.
முரளியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Thatstamil-ல் முரளிக்கு 47 வயது என்றும், செய்திதாளில் 49 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ReplyDeleteகமலா தியேட்டர் போல, இங்கு பெங்கலுர் PVR-ல்லும் செய்வதுண்டு, ஆனால், போகும் பொது திரும்ப கொடுத்து விடுவார்கள்.