பாஸ் என்கின்ற பாஸ்கரன்...கலக்கலோ கலக்கல்....

சிவா மனசுல சக்தி படத்தை கொஞ்சம் நாள் கழிச்சி பார்த்தப்ப.. அடடா இந்த படத்தை எப்படி நாம மிஸ் பண்ணோம் என்று பீல் பண்ணினேன்... காரணம் ஆரம்பம் முதல் முடிவு வரைக்கு, ஒரு ஊடல் பீலிங் மற்றும் காதலையும் மிக அழகாக எதார்த்தமாக சொல்லி இருந்தார்கள்...எல்லாவற்றையும் விட அந்த படத்தின்  காமெடி ரொம்பவும்  பிடித்து இருந்தது...



மிக முக்கியமாக சந்தானத்துக்கு தெரியாமல் அந்த பெண்ணை ஜீவா பார்க்க வரும் போது தாய்லாந்து பெண் பொம்மைக்கு பக்கத்தில் நின்று கொண்டு தாய் மொழியில் சொல்வது போல மட்டன் குஸ்க்காவா என்று சொல்லி விட்டு சந்தானம்  ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள் ... அந்த சீனை பார்த்தால் எப்படியும் எல்லோரும் சிரித்து விடுவார்கள் அது போலான சிரிப்பு... அந்த டைரக்டரின் மேல் எனக்கு அந்த படத்தில் இருந்து மரியாதை இருந்தது...

 சரி இந்த பாஸ் என்கின்ற பாஸ்கரன் படம்  இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படம் என்பதால்  இந்த படத்துக்கு கூடுதல் கவனம் அளித்தேன்... இந்த படத்தை பார்க்க இன்னோரு காரணம் இந்த பட டிரைலரில் சந்தானம் சொல்லும் ,ஒரு வசனம்.... எல்லோரும் எத்தனையோ பிரண்ட்ஸ் வச்சிக்கினு சந்தோஷமா இருக்காங்க...ஆனா இவன் ஒருத்தனை வச்சிக்கினு நான் படற அவஸ்த்தை ஐய்யய்ய்யோ என்று ஒரு விதமாக புலம்பியது நன்றாக இருந்தது....அதனால் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தேன்...

உங்கள் வீட்டில் பிரச்சனை மனம் ரொம்பவும் தடுமாறுகின்றது... பீச் போலாமா? அல்லது ஒரு கட்டிங் போடலாமா? என்று எல்லாம் யோசித்துக்கொண்டு எல்லாம் இருக்க  வேண்டாம்...இந்த படத்தை உடனே போய் பாருங்கள் மனது லேசாகி விடும்....
பாஸ்  என்கின்ற பாஸ்கரன் படத்தின் கதை என்ன???

டிகிரியில ஆங்கில பாடத்துல  அரியர் வ்ச்சிக்கினு இருக்கும்,  எதிர்காலம் பற்றி கவலைபடாத ,எந்த விஷயத்துக்கும்  சிரியஸ் ஆகாத ஆர்யா( பாஸ்கரன்) அப்பா இல்லாதவன்...அம்மா திருமணம் ஆகாத அண்ணன்,ஒரு தங்கை இதுதான் பாஸ்கரனின் சின்ன பேமலி.... அண்ணன் கால்நடை மருத்துவர்.. இன்னும் திருமணம் ஆகவில்லை...
சவரம் செய்னும்னாலும் அண்ணன் காசுல சவரம் செய்யும் ஒரு கேரக்டர்...அண்ணணுக்கு  கல்யாணம் ஆகுது...அண்ணி (விஜயலட்சுமி)யோட தங்கச்சிதான் நயன்தாரா.. பாஸ்கருக்கு  நயனின்  மீது காதல்... வேலை வெட்டி இல்லாத உனக்கு என் தங்கச்சிய எப்படி  கட்டிக்கொடுப்பது என கேள்வி கேட்க? வெகுண்டு எழுந்து தனது  பார்பர் நண்பன் சந்தானத்தின் உதவியோடு எப்படி முன்னேறி நயனை கைபிடிக்கின்றான் என்பதுதான்  கதை....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

வழக்கமான கதைதான்... அதை சொல்லும் விஷயத்தில் ரொம்பவே தெளிவாகவே சொல்லி இருக்கின்றார்கள்... ஒரு விஷயத்தில் இன்னும் தெளிவு.. அது என்னவென்றால்... ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அந்த காமெடி டெம்போ குறையாமல் பார்த்துக்கொண்டதுதான்... அதனால் இந்த படத்தில் இரண்டாம் பாகம் சொதப்பல் என்று சொல்லவே முடியாது.....


ஆர்யா காமெடி கேரக்டரில் பூந்து விளையாடி இருக்கின்றார்... எப்போதும் கருப்பு கண்ணாடி அணிந்து அவர் அலட்சியமாக பேசும் வசனங்கள் அந்த மடுலேஷன் அற்புதம்..பேருந்தில் பிட் தேடும் அந்த சீன் சூப்பர்...

முதல் பாதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் நாம் வாழ்வது போல் ஒரு பீலிங் வருகின்றது பாருங்கள்... அதுதான் நல்ல சினிமா மேக்கிங்... அந்த பீல் பார்க்கும் பார்வையாளனுக்கு வர வேண்டும்... அது இந்த படத்தில் வந்து இருக்கின்றது...வாழ்த்துக்கள் டைரக்டர்...


ஆர்யாவின் அண்ணன் கேரக்டர்... திருமணமாகத கேரக்டர்...  எழுத்தாளர் பாஸ்கர் சக்தியை நினைவுபடுத்தும் முகம்... நல்ல டைமிங்.. அதே போலான அவரின் குரல்.... கல்யாண பாடல் மாண்டேஜில் ஆர்யா சொதப்ப... இந்த கல்யாணமும் நின்று விடுமோ என்று பயந்து காலில் விழுவது போல ஆக்ஷன் செய்வது செம கலக்கல்...அவருக்கு இயல்பாக நன்றாக நடிக்கவும் வருகின்றது... முக்கியமாக மழையில் ஆர்யாவுக்கு குடை எடுத்து வந்து தரும் காட்சியில் செமை...

பிரண்ட்ஸ் படத்தில் மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் என்று சின்ன இடுப்போடு சூர்யாவோடு ஆடியவர்... இப்போது பெரிய இடுப்போடு இருக்கின்றார்...  ஆர்யாவின் அண்ணி கேரக்டரை அழகாய் செய்து இருக்கின்றார்....

நயன்தாரா.... நேரில் பார்த்ததில் இருந்து எனக்கு நயன்தாரா ஜுரம் பிடித்து ஆட்டுகின்றது...இந்த படத்தில் முதல் பாதியில் சாரியில் கலக்குகின்றார்... அந்த சின்ன உதட்டு சிரிப்போடு பார்டன் என்று கேட்கும் காட்சிகளில் நயன் சிக்ச்ர் அடிக்கின்றார்...ஆர்யா நயன் காதல்  ரசிப்பது போல் இருக்கின்றது... டுடோரியல் காலேஜில்  சந்தானத்துடன் பேசுவது போல் ஆர்யாவுடன் பேசுவது என கலக்கல் காக்டெயில்.....

என்ன....?? ஒரு பாரின் பாடலில் ஆயில் மேக்கப் போட்டு அழகாய் இருக்கும்  நயன் முகத்தை கெடுத்து வைத்து இருக்கின்றார்கள்... எனக்கு பிடிக்கலை ஆனால் அந்த பாடலில்  சக்தி சரவணின் கேமரா லோ ஆங்கிலில் வைத்து லைட்டான  ஒரு பின்புற ஆட்டம் அழகு...


படத்தின் பெரிய பலம் சந்தானம்... இயக்குனருக்கும்  சந்தானத்துக்கும் நல்ல அலைவரிசை.... பல படங்களில் ஒரே டைப்பாக கத்தி நடித்தாலும் இந்த படத்தில் அதையே செய்து இருக்கின்றார்... ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது காரணம் ஷாட் அன்டு சுவீட்... தேவையற்ற பேச்சு இதில் இல்லை வசனங்கள் நீளமாக இல்லை.... இந்த படம் சந்தானத்தின் கேரியரில் குறித்து வைத்தக்கொள்ள வேண்டிய ஒன்று....

பெரிய டொக்கோமோ கம்பெனி ஒனர்...என்று கலாய்க்கும் இடத்திலும்...ஷாகிலாவை ஏன்டா இங்க கூட்டுக்குனு வந்தே என ஆர்யா கேட்டு அதுக்கு  சந்தானம்  கொடுக்கும் ரியாக்ஷன்.... சூப்பர்...

செல்போன் டவர் வேலை வாங்கி கொடுத்து.. அது ரொம்ப உயரம் என்று ஆர்யா சொல்ல கல்யாணம் ஆகி அந்த வேலைக்கு மட்டும் சிம்லா, ஊட்டி கொடைக்கானல்னு உயரமான எடத்துக்கு போறிங்க என்று சொல்லும்  லாஜிக் டயலாக்கிற்க்கு தியேட்டர் கல கல....

என்ன அந்த அடியாள் பையன் டுடோரியல் என் கதை ஆரம்பிக்கம் போது... கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் நெளிய வைக்க.. அந்த கண் தெரியாத டீச்சர் படம் நடத்தும் போது படம் சுறு சுறுப்பாக மாறிவிடுகின்றது....

சக்திசரவணின் கேமரா அவசரமாக படம் பிடித்து இருக்கின்றது...

யுவனின் இசை பெரிதாய் முனு முனுக்கவைக்கவில்லை....

கடைசியில் ஜீவாவோடு  கலக்கல் கிளைமாக்ஸ்....

தமிழ்படம் போல இந்த படம் காமெடியை  மட்டும்  எடுத்துக்கொள்ளாமல் லாஜிக்காக கதையோடு பயணித்து தமிழ்படங்களின் கிளிஷேக்களை கிழிக்கின்றது....


படத்தின் டிரைலர்..



மாயாஜல் ஸ்கிரின்..10 தியேட்டர்  டிஸ்க்கி...

வேறு ஒரு வேலைக்கு வெயிட் செய்து கொண்டு இருந்தேன்... அந்த வேலை கேன்சல் ஆக.. நண்பர் நித்யாவுக்கு போய் அடித்தேன்...பாஸ் படத்துக்கு ஒரு டிக்கெட் தெலுங்கு கொமர புலி படத்துக்கு ஒரு டிக்கெட் என்று இரணடு டிக்கெட்  எடுக்க சொன்னேன்.... சோ நேற்று  மதியம் ஒரு மணிக்கு மாயாஜாலில் நுழைந்து இரவு எட்டுமணிக்குதான் வெளியே வந்தேன்...

மாயாஜலில் நல்ல புரஜக்ஷன்... அதேபோல் சொன்ன நேரத்துக்கு திரையில் படம் ஓடுகின்றது.. எந்த விளம்பரமும் இல்லை ...

இன்டர்வெல்லில் ஒன்னுக்கு இருந்து ஜிப்போட்டு கைகழுவி துடைத்து , நல்ல பிகர்  ஒன்று கிராஸ் ஆக அதை பார்க்க திரும்புவதற்க்குள் படத்தை போட்டு விடுகின்றார்கள்...

அது என்னமோ தெரியலை.. நயன் கூட நின்னு போட்டோ எடுக்க நினைத்தால் இந்த புளு டிஷர்ட் வந்து விடுகின்றது....


இந்த படத்துல நான் ஒர்க் பண்ணவே இல்லை.. ஆனாலும் நம்ம பேரை போட்டு இருக்காங்க....(மேலே படத்தை பாருங்க.....சும்மா விளையாட்டுக்கு அந்த ஜாக்கி... ஆர் ட் டைரக்டர் என்று நினைக்கின்றேன்...)
வெளியில விக்கும்  எழு ரூபாய் முட்டை பப்ஸ் உள்ளே 35ரூபாய்..

தியேட்டரில் ஓர சீட்டுகளை ஜோடிகள் வழக்கம் போல் ஆக்கிரைமித்து கொண்டு இருந்தார்கள்...

நானும், பதிவர் நித்யாவும் படம் பார்த்து சிரித்து வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது...இருமலும் அதிகம் ஆகிவிட்டது....அந்த அளவுக்கு என்ஜாய் செய்தோம்...

இந்த படம் பார்க்க வேண்டியபடம்தான்... சந்தேகம் இல்லை...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

18 comments:

  1. தலைவரே... சந்தானம் சொல்ற "அய்யோய்யோய்யோய்யோ" டயலாக் ரெண்டு நாளா இன்பாக்ஸூல ரொம்பி வழியுது.. அந்த அளவு ஹிட்டு...

    ReplyDelete
  2. ரசி(ரி)த்து எழுதி இருக்கீர்கள், பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. Sir,

    Enna sir telugu movie review ........?

    ReplyDelete
  4. அண்ணே
    மிக்க மகிழ்ச்சி,ஆர்யா பெர்ஃபார்மன்ஸ் ஆட்டோ ஓரம்போலயே பிடிக்கும்,காமெடி அசத்தலா செய்வார்.நிச்சயம் பாத்துடுறேன்.

    ReplyDelete
  5. // நயன்தாரா.... நேரில் பார்த்ததில் இருந்து எனக்கு நயன்தாரா ஜுரம் பிடித்து ஆட்டுகின்றது... //

    நேரில் பார்த்துமா தோழர் ... நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரத்தில் பார்த்து புகைப்படமும் சேர்ந்து எடுத்துக் கொண்டேன் ... அப்படி ஒன்னும் தோணல சார் .... நம்மளையும் மதிச்சு இயல்பா பேசினாங்கங்கிரத தவிர வேற ஒன்னும் தோணல சார் ...

    ReplyDelete
  6. அன்பின் சேகர்,
    கொஞ்சம் அங்கங்கே எழுத்து பிழைகள்,
    நீங்கள் கொடுக்கும் சுவாரஸ்யத்தை தடுக்கிறது . . . குறை அல்ல சிறு உரிமை . . . மற்றபடி 'கடலோரக் குருவிகள்' நினைவிருக்கிறதா ?

    ReplyDelete
  7. ஒட்டு மொத்தமா எல்லாரும் பாக்கலாம்னு சொல்றாங்க... கண்டிப்பா பாக்கிறோம்!!!

    ReplyDelete
  8. ஜாக்கி ஜி நயன் கூட எடுத்து பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ கலக்கல்...:)) காதுலேருந்து புகை வருது....:)

    ReplyDelete
  9. Ha Ha Ha...
    Padam Paaththa Kandippa Sirippennu Theriyum Sir,,
    Nan SMS Paththppa Konja Neram kuda nan Sirikkama ierunthathuilla...

    But Unga review Padichathum Yetho Somthing, Yenakku Adakka Mudiyatha Sirippu, Athu Yennu Theriyala...


    Ungal Yeluthugal Thodara Yen Valthugal.....

    ReplyDelete
  10. SMS padathai marakka mudiyadu
    punch vasanam 10vvadu madiel iruntu fight podum herokkal intha madiri padangal partu iyalpai nadikkanum

    ReplyDelete
  11. படத்துல லாஜிக்கா..?? அப்படி ஒண்ணு இருக்கா..? ஆனாலும் குடும்பத்துடன் பார்க்கலாம். Santhanam Rocks... நண்பேன்டா...........

    ReplyDelete
  12. Dear Mr. Jackie....

    Thanks for your review... Its superb.. Inga ippo than Naan Mahan Alla Movie release pannirukanga... May be inum oru 10 days kalichi intha padam release pannuvanga.

    Kadhal Solla Vanthen movie inum neenga parkaliya? I m expecting your review on this movie.... Bcoz of Songs... Yuvan kalaki irukar...

    Apuram unga talent ungaluku theriyathu..... I think your understand this line.... (Others only know about your talent, intha comment naa podavendiya post la podala.. so am posting it here)

    All the Best....

    Regards,
    Vijay,
    Muscat.

    ReplyDelete
  13. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய்யோ....!

    ஜாக்கி 2000-த்த வெட்டுங்கப்பு. ஏன்னா நானும் ஒரு ஓட்டு போட்டிருக்கேன் அப்பு.

    (சரி ஜிப் போடறதக் கூடவா சாமீ எழுதி தொலைக்கனும். நீ உருப்படவே மாட்டே.)

    ReplyDelete
  14. நான் படங்களை மிகவும் தேர்ந்து எடுத்து தான் பார்ப்பேன், எங்காவது அலுப்பு தட்டினால் அங்கேயே நிறுத்தி விடுவேன், அப்படி பட்ட எனக்கு உங்கள் விமர்சனம் இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது !! மிகவும் அழகஹாக விமர்சித்துளிர்கள்!! அருமை!!

    ReplyDelete
  15. நண்பேண்டா! நண்பேண்டா!இயக்குனர் ராஜேஷ்,சந்தானம்கூட்டணி தாம் வெற்றி கூட்டணி என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. SMSல்ல ஆர்யா கெஸ்ட் ரோல் பண்ணி இருந்தார்.அந்த நன்றிகடனுக்காக இந்த படத்தில ஜீவா கெஸ்ட் ரோல் பண்ணி இருக்காரு.வரவேற்க்கத்தக்க விஷயம்.விமர்சனம் வழமைபோல் சூப்பர்.ஜாக்கி!நீங்க நயன்தாரா கூட எடுத்த ஒரு போட்டோவ வச்சே காலத்த ஓட்டிடுவீங்க போல......

    ReplyDelete
  16. very good review. படம் இன்னும் பார்க்கலை..பாத்துட வேண்டியதுதான். நன்றி சேகர்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner