ஒரு ரியல் டென்சன் ஜோக்....

முதலில் கொஞ்சம் பேசுவோம்... அப்புறம் ஜோக் படிப்போம்.....



நிறைய ஆணி புடுங்கும் வேலை இருக்கின்றது...  அதனால் என்னால் முன்பு போல் பின்னுட்டத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை...பதிவு எழுதவே நேரம் சரியாக இருக்கின்றது...மன்னிக்கவும்... வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கவும்.. காலையில் எழுந்து வேலைக்கு செல்லவும் நேரம் சரியாக இருக்கின்றது...பின்னுட்டம் மற்றும் ஓட்டு போடும் அத்துனை நண்பர்களுக்கும் என்  ஒட்டு மொத்த நன்றிகள்.. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நான் எப்போதும்  நுனி புல் மேய்வதில்லை...

மெரினாவில் சந்தித்த உதவி இயக்குனர் ரமேஷ்... அண்ணே டெய்லி பதிவு போடறிங்களே...இதனால ஏதாவது வருமானம் வருதா?... அப்படி எல்லாம் எதுவும் இல்லை...

ஆனா எனக்காக ஒரு ஒன்றரை மணி நேரம் இந்த மெரினாவுல தனியா நான் வரும் வரை வெயிட் பண்ணி பார்த்துட்டு போவேன் நின்ன பாரு... அந்த அன்பை  நிறைய பேர்கிட்ட சம்பாதித்து இருக்கின்றேன்.. என்று சொன்னேன்...

இந்த ஒரே காரணத்துக்காகதான் நான்  ரொம்ப டயர்டா இருந்தாலும், தூக்கம் கண்ணை  பதம் பார்த்தாலும் நேரம் ஒதுக்கி பதிவு போடுகின்றேன்....

ஒரு நல்ல படத்தை இரண்டு வரியில் எழுதி விட்டு செல்ல, என் மனம் ஏனோ இடம் அளிக்கவில்லை...அதற்கு இன்னும் நிறைய   நேரம் செலவிட வேண்டும் என்பதால்... சினிமா சில நாட்களுக்கு குறைவாகதான் எழுதுவேன்...  நேரமின்மை மிக முக்கிய காரணம்.. பார்த்த படமாக இருந்தாலும் எழுதும் முன் ஒரு முறை பார்த்து விட்டு எழுதும் பழக்கம் இருப்பதால்,தற்போது நேரம் இல்லை..

சில டுவிட் மற்றும் சில பதிவுகள் படிக்கும் போது... எல்லோரும் என் மீது பொறாமையில் இருப்பதை  உணர முடிகின்றது...நண்ப்ர் ஒருவர் ஒரு மெயில் அனுப்பி இருந்தார்..நான் எழுதிய சில வரிகளை எடுத்துக்கொண்டு டுவிட்டி இருந்தார்கள்...மிக்க நன்றி நண்பர்களை என்னையும் ஒரு ஆளா மதிச்சு டுவிட்டி இருக்கிங்க பாருங்க அதுக்கு நன்றி...  குரு படத்தில் ஒரு டயலாக் வரும்... உன்னை பத்தி யாராவது புறம் பேசினா நீ வளர ஆரம்பிச்சிட்டேன்னு அர்த்தம்னு.....நன்றி நண்பர்களே...


சரி என்ன விஷயம்னு கன்வே பண்ணியாச்சு.... எனக்கும் தூக்கம் வருது.. ஒரு சின்ன ஜோக் சொல்லிட்டு அபிட் ஆகின்றேன்..

ரியல் டென்சன் ஜோக்...

நிறைய டென்ஷன் நம்மகிட்ட இருக்கு... ஆனா ரியல் டென்ஷன்னா என்ன தெரியுமா?

  பாண்டி ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு தன் மனைவி  பிள்ளைகளை பார்க்க அவசரமா டென்சனாபோய்கிட்டு இருந்தான்.. ஒரு அழகான பொண்ணு லிப்ட் கேட்டதனால.. அவன் அதிகமா டென்சன் ஆகி  நிறுத்தி அவளை ஏத்திக்கிட்டான்....

கொஞ்ச தூரம் போகும் போது அவள் அழகு மேல் இருந்த ஆசையில் சடன் பிரேக் போட.... எல்லாம் அழுத்தி கசங்கியது... பாண்டி டென்ஷனோ டென்ஷன் ஆயிட்டார்... அடுத்த பிரேக் போடும் போது.. சட்டென அவ  வண்டியில் போகும் போதே மயக்கம் போட்டு கீழே விழுந்துவிடுகின்றாள்......

 பாண்டி செம டென்சன் ஆகின்றான்... அவன் தலையில் கல் பட்டு ரத்தம் வர டென்சனா பக்கத்தில் இருந்த ஆஸ்பிட்டலுக்கு போய்... அவளை சேர்க்கின்றான்...டாக்டர் அந்த பெண்ணை சோதித்து விட்டு.. வாழ்த்துக்கள்.. நீங்க அப்பாவாக போறிங்க....இதை கேட்டு பாண்டி பயங்கர டென்சன் ஆயிடறான்...

அந்த  பொண்ணு மயக்கம் தெளிஞ்சதும்.. தன் கர்பத்துக்கு காரணம் இந்த பாண்டிதான் சொல்லி அழுவும் போது.. பாண்டி செம டென்சன் ஆவுறான்....அந்த பொண்ணு கர்பத்துக்கு தான் காரணம் இல்லைன்னு காளியாத்தா மேல சத்தியம்  செய்யறான்....
டாக்டர் போலிஸ்கிட்ட விஷயத்தை சொல்ல

போலிஸ் வருது அவனை மருத்துவ  பரிசோதனை செய்ய சொல்ல.. பரிசோதனை ரிப்போர்ட் வர.. அதில் பாண்டி எப்போதும் அப்பாவாக வாய்ப்பேஇல்லை என்று ரிசல்ட் வர, பாண்டி செம டென்சன் ஆகின்றான்...


இருந்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டோமே.. என்று கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு வர.... அப்பா என்று குழுந்தைகள் ஓடி வர... இது யாருக்கு பொறந்த புள்ளைங்க??? என்று ஒரு டென்சன் வருமே... அதுக்கு பேருதான் ரியல் டென்சன்.....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

15 comments:

  1. boss,
    vote pottachu.
    sema tenshionana joke thalivare.

    ReplyDelete
  2. //இது யாருக்கு பொறந்த புள்ளைங்க??? என்று ஒரு டென்சன் வருமே...//

    ஆவ்வ்வ் தலைவா ஏ.இ.கொ.வெ??


    சந்தேகம் வந்தே தீரும்..

    ReplyDelete
  3. ஜாக்கி, நீங்க‌ சொன்ன‌ ஜோக் அப்ப‌டியே அச்சு அச‌லா "Chaos Theory" ப‌ட‌த்தோட‌ க‌தை. ரொம்ப‌ ந‌ல்லா ப‌ண்ணியிருப்பாங்க‌. முடிஞ்சா பாத்துட்டு விம‌ர்ச‌ன‌ம் எழுதுங்க‌.

    ReplyDelete
  4. MY ரியல் டென்சன். Poyé Pochu.
    Freddy, Pondy

    ReplyDelete
  5. Dear Friend,

    You are really thinking a lot to entertain your viewers. You always make your readers happy. your articles are very interesting.

    sheik mujibur rahman.

    ReplyDelete
  6. அது சரி... அவன் அவன் டென்ஷன் அவன் அவனுக்கு... வோட்டாச்சு( வோட்டு போட்டாச்சோட சுருக்கம்... ஹி ஹி ஹி...)

    ReplyDelete
  7. //இது யாருக்கு பொறந்த புள்ளைங்க??? என்று ஒரு டென்சன் வருமே...//
    check your mail i sent one paper cutting and publish about the new in your blog

    ReplyDelete
  8. தல...டென்சன் சூப்பர்.

    ReplyDelete
  9. வேலையில டென்சன் அதிகமோ...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  10. yes this is the story of the english film "Chaos Theory"

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner