சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)

ஆல்பம்..

நல்ல வேலை பாலம் காமன்வெல்த் போட்டி நடக்கும் போது இடிந்து விழவில்லை... விழுந்து இருந்தால் சர்வதேச அளவில் நம்ம மானம் கப்பலேறி இருக்கும்.. அந்தளவுக்கு ஊழல் மிதமிஞ்சி போய் இருக்கு என்பது நன்றாக தெரிகின்றது....
==========================

இன்னொரு கலவரத்துக்கு நாடு தயாராக இருக்கின்றது...கலவரத்தை அடக்க ..ரூ 72 கோடிக்கு லத்தி மட்டும் அரசு  வாங்கி இருக்கின்றது... இது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை...நாளை மறுநாள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு....  கொடுமையே...அதை இடிச்சி என்னத்தை சாதிச்சிங்க??? 72 கோடி வேஸ்ட் அவ்வளவுதான்..
===============
திரும்பவும் திமுகவில் அண்ணன் தம்பி சண்டை ஆரம்பித்துவிட்டது… எந்த சண்டை நடந்தாலும் எதிர் அணிக்கு ரொம்பவே கொண்டாட்டம்….பெரிய சண்டைக்காக எதிர் அணியில் எல்லோரும் வெயிட்டிங்….ரெடி ஸ்டார்ட்….
==============
எந்திரன் பாடல் வெளியீட்டு விழா மறு ஓளிபரப்பை சன்டிவியில் பார்த்தேன்…ரகுமானின் ரத்தின சுருக்கமான பேச்சை ரசித்தேன்..காதல்அணுக்கள் பாடல் மிக அற்புதம்…விவேக் கொடுத்த காசுக்கு அதிகமாக விவேக் பேசினாலும் வேறு வழியில்லை survival of fittest என்பது இதுதானோ….???? நிகழ்ச்சியின் தொடங்கத்தில் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட படத்தில் இருந்து பாடலுக்கு நடனம் ஆடினார்கள்…படுபயங்கர கவர்ச்சி உடையில் அந்த பெண் ஆடிய ஆட்டத்தில் எனக்கு  ஜுரமே வந்துவிட்டது… குலுக்கி குலுக்கி ஆடும் போது அந்த சின்ன மார்பு கச்சை கயிறு எப்போது வேண்டுமானாலும் அவுத்துக்கொள்ளும் போல இருந்தது.... அதே போல கலாநிதிமாறன் பேச்சு… எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் எதிரில் பேசும் போது அந்த கை நடுங்கும் பதட்டத்தை மைக் பிடித்ததில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம்.. எனக்கு தெரிந்து கலாநிதியின் முதல் மேடை பேச்சு என்று நினைக்கின்றேன்….செம நடுக்கம் செம டென்ஷன்… சன் ஊரீயர்கள் எம்டியின்  பதட்டத்தை பார்த்து விட்டு அன்று இரவு ரெண்டு பெக் போட்டு விட்டு யாராவது நடித்து காட்டி நக்கல் விட்டு இருக்கலாம்…..
விழா தொடக்கத்தின் போது ரஜினியும் கலாநிதிமாறன் இருவரும் ஒரே நேரத்தில் கண்ணாடி போடும் அந்த காட்சி ஸ்லோமோஷனில் வரும் போது அந்த ஷாட்டை ரசித்தேன்….
=============

மிக்சர்..

என்னோட கசின் சொன்னான்...  விண்னைதான்டி வருவாயா? படத்துல திரிஷாவை சிம்பு ஓட்டலுக்கு அழைத்து போகும்  நாட்களில் எல்லாம் அவள் சந்தோஷதாக இருப்பது போலவும்... அழைத்து போகாத நாட்களில்ர எல்லாம் சண்டை அதிகம் நடப்பதாகவும் சொன்னான்... எதையெல்லாம் நோட் பண்ணறாங்கப்பா...???

==============
அம்மாவுக்கு  எழுதிய கடிதத்துக்கு  நிறைய பாராடுக்கள் நெகிழ்ச்சியான பின்னுட்டங்கள்….. வாழ்த்துக்கள் என்று என்னை வந்தடையும் போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றேன்…. பதிவை படித்து விட்டு செல்லில் வாழ்த்து சொன்ன பதிவர் லக்கிலுக்… மற்றும் விருதாசலத்தை  சேர்ந்த பெண்மணி சிகப்பி… ஆஸ்திரேலியாவில் இருந்து  அண்ணன்  பாஸ்கர்… என்னை விட 5 வயது பெரியவர்… என்னை எம்பில் செய்ய ஆசிர்வாதம் செய்தவர்… வழக்கம் போல் பிரான்ஸ் நண்பர் லிங்கம்…. லிங்கத்துக்கு வயது 50 அவரது தயாருக்கு 72 வயது ஆனாலும் லிங்கத்தின் நண்பருக்கு போன் செயது என் மகன் வெகுளி.. யார் எதை சொன்னாலும் நம்பிவிடுவான்  அவனை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவும் என்று லிங்கத்தின் தயார் சொன்னதை அவர் ஆச்சர்யபட்டு சொன்னார்... எந்த வயதானாலும் எத்தனை பிள்ளை பெற்றாலும் தாய்க்கு அவள் மகன் எப்போதும் குழந்தைதான்….. இன்னும் எழுதலாம்.. இதை பற்றி கூட நக்கல் விட்டு நாளை  ஒரு பதிவு வரலாம்…ஏனெனில் என்னை நக்கல் விட்டு எழுதினால் படிக்க ஒரு பெரும் கூட்டமே இருப்பதை அறிகின்றேன்…. சரி போனி ஆகனுமில்லை….இன்னும் நிறைய கடிதங்கள் இருக்கின்றது...அது எல்லாம் வந்து கொண்டே இருக்கும்...வயிறு எறியட்டும்... அதே போல் அம்மா கடிதத்தை மிக அழகாக பிழைதிருத்தம் செய்து கொடுத்த பதிவர் உண்மை தமிழனுக்கு என் நன்றியும் அன்பும்….
=================
மாம்பலத்தில் இருந்து எனது சொந்த வீட்டுக்கு வந்து விட்டேன்… திரும்புவும் சிபி நெட் கனெக்ஷன் போய், டென்ஷன் ஆகி, நல்ல நேரத்தில் நெட் ஸ்லோவாக போய், என் கீ போர்ட் உடைபடுவதை இந்த கஷ்ட்ட நேரத்தில்  நான்  விரும்பவில்லை… அதனால் பிஎஸ்என்எல் 3ஜி பென்டிரைவ் வாங்கினேன்… டெமோ  காட்டிய போது ஒரு முறை நன்றாக வந்தது… அதை நம்பி வாங்கினேன்… ஆனால் அதன் பிறகு நெட் வரவில்லை… அம்மா பதிவையே உண்மைதமிழன் வீட்டில் போய்  போஸ்ட் செய்தேன்… 5ஆயிரம் ரூபாய்… செம டென்சன்.. இரண்டு நாளாக  எதிலும் மனம் லயிக்கவில்லை… இருந்தாலும் பி எஸ்  என் எல் நண்பரும்  பதிவருமான பத்ரியிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் டவரில் அலைவரிசை இன்கிரிஸ் செய்வது வரை பேசினார்கள், அவரது நண்பர் இளங்கோ நம்பிக்கை கொடுத்தார்… சரி அதே பென் டிரைவை பின்னால் சொருகி பார்ப்போம் என்று சொருகி பார்த்தேன்… செம பாஸ்ட்…. செம சந்தோஷம்.. முன் பக்க யூஎஸ்பி வீடு மாற்றி வரம் போது வண்டியில் குலுங்கியதில் பிம்பிளிக்கி பியாப்பி ஆகிவிட்டது பிறகு தெரிந்து கொண்டேன்..  என் வீட்டில் இவ்வளவு வேகமாக நெட் ஒர்க் ஆகும் என்று கனவிலும் நினைக்கவில்லை… தேங்ஸ் பிஎஸ்என்எல் மற்றும் நம்பிக்கையும் ,உதவியும் செய்த  நண்பர்கள்….
=================
இந்தவார நிழற்படம்..

நன்றி..... நேஷனல் ஜியாகரிப்பிக்..சேனல்....
================================
இந்தவார சலனபடம்...18+

ஏசி விளம்பரம்தான்... ஆனா யோசிச்சான் பாருங்க... அதுதான் கிரியேட்டிவிட்டி....
====================================
பார்த்ததில் பிடித்தது...
நண்பர் நித்யா குடும்பத்தோடு எம்ஜிஎம் பீச் ரிசார்ட்டுக்கு... போனோம்... நன்றாக சாப்பிட்டோம்....ஒரு ஆளுக்கு 700ரூபாயாம்... பபே... நண்டு, சிக்கன்,மட்டன் பிராயாணி, மீன், என்று நான் வெளுத்துக்கட்டினேன்... கடற்கரையோரம் குடில் அமைத்து வைத்து இருந்தார்கள்... மிக அழகான ரம்யமான இடம்...மனதை கொள்ளை கொள்ளும் கடற்காற்று... இரண்டு வெள்ளைக்கார பெண்கள் தம் அடித்து விட்டு ஆங்கில பாடல்கள் பாடினார்கள்...ஒரு பருத்த வெள்ளைக்கார பெண்மணி பாதி மார்பு வெளியே தெரிவித்த படி பாடிக்கொண்டு இருந்தார்...நிறைய பேர் நேயர் விருப்பம் கேட்டார்கள்...எனக்கு அவர்கள் பாடியதில் ஜெனிபர் லோபஸ் பாடல்தான் எனக்கு  தெரிந்து  இருந்தது...நிறைய பெண்கள் ஜட்டி மாதிரி சின்ன டிராயரில் வந்து வெகு நேரம் பேசி சிரித்து, சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்... ஒரு இளம் தம்பதி வந்த உட்கார்ந்ததும், சண்டை போட்டு உடனே எழுந்து சென்றார்கள்...இரண்டு வயதான தம்பதிகள்...700ரூபாய் கொடுத்து விட்டு தயிர்சாதம் ரசம்சதத்தை தவிர எதையும் அவர்கள் தொடவில்லை....என்று நித்யாவின் மனைவி வருத்தபட்டார்... பில் மொத்தம் 3700 வந்தது.. எனக்கு இது முதல் அனுபவம்... எற்கனவே நித்யா குடும்பத்தோடு வந்து இருக்கின்றார்...வருடத்தில் ஒருமுறையாவது இது போலான ஹோட்டலில் ஒருநாள் இரவு உணவை வைத்து கொள்ளும் அளவுக்கு வளரவேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டேன்..

===========================
இந்தவார பதிவர்...
கனவுகளின் காதலன்...
இதுவும் சினிமா தளம்தான்... சினிமா பற்றி மட்டும் பகிர்ந்து கொள்ளும் தளம்... இவர் எழுதும் பல படங்கள்... பலர் கேள்விபடாதவை... நிறைய திரைபடங்கள் இவர் வலைப்பூ மூலம் அறிமுகபடுத்தி இருக்கின்றார்...சினிமா தவிர்த்து, இவர் காமிக்ஸ்களின் ரசிகன்...இவர் தளத்தை வாசிக்க....இங்கே கிளிக்கவும்
=======================
இந்தவார கடிதம்..

ருமை ஜாக்கி அண்ணன் அவர்களுக்கு
முன்னூறு பதிவுகளை அற்புதமாக கடந்துவிட்டீர்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஊருக்கு வரும் போது உங்களை பார்த்து
சுமார் நானூறு ஆங்கிலப்படங்கள் கொடுக்க
ஆசைப்படுக்கிறேன்.எல்லாவிதமான
படங்களும் இருக்கும்
குறைந.த பட்சம் 500 gb ஹார்ட்டிஸ்கை மட்டும் உஷார் பண்ணி வைக்கவும்.
உங்களுக்கு செலவு வைக்கிறேன் என்று அண்ணி கோபிக்க போகிறார்கள்...
உங்கள் திரைப்பட ஆர்வம் எங்களை மலைக்க வைக்கிறது.
சிறு விண்ணப்பம்.
எழுத்து பிழைகளை திருத்தி பதிவுகளை
வெளியிட வேண்டுகிறேன்.
யாரும் மனதுக்குள்ளும் கூட எதுவும் நினைத்துவிடக்கூடாது.

வலையுலகில் மனதில் உதித்ததை வெளியிடும் உங்களைபோல வெள்ளை உள்ளங்கள் காண்பது அரிது.
வளர்க உங்கள் எங்கள் எழுத்துப்பணி.
வீட்டில் எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்
karthikeyan
sharjah
http://geethappriyan.blogspot.com 
===============
அன்பின் கார்த்தி... கொசுவத்தி சுத்துவதும், கடந்து போனதை  நினைத்து பார்ப்பதும்  ஒரு சுகம்தான்.... நன்றி தம்பி என்மீதான பாசத்துக்கு... ஒருவருடம் கடந்து போய் விட்டாலும் மீண்டும் அனுப்பிய கடித்தத்தை படிக்கும் போது ஒரு சந்தோஷம் வரத்தான் செய்கின்றது....
==============================

நன்றியும் வாழ்த்தும்....
முதலில்  நன்றி பதிவர் அதிஷாவிக்கு....  எனது அம்மா பற்றிய பதிவு டிவிட்டரில் லிங்க்கொடுத்து, எழுத்தாளர் உமாசக்தி என்பர் நெகிழ்ந்து பின்னுட்டம் இட்டு இருக்கின்றார்....அதிஷாவுக்கு நன்றிகள்...
============
வாழ்த்துக்கள்...
அகநாழிகை பொன்வாசுக்கு...  இன்று முதல் வக்கிலாக அவதாரம் எடுக்க இருக்கின்றார்... அவருக்கு எனது வாழ்த்துக்கள்...அவருக்காக ஸ்பெஷல் நான்வெஜ் ஜோக் கீழே...
==================
பிலாசபி பாண்டி
பாம்பு உயிரோட இருக்கும்போது எறும்பை  சாப்பிடும்...
பாம்பு செத்ததும் எறும்பு பாம்பை  சாப்பிடும்...
எல்லாருக்கும் கண்டிப்பா ஒரு நேரம் வரும் அதுவரை பொறுக்க வேண்டும்...
=============

நான்வெஜ் 18+
ஜோக்..1
டிராகுலா.. வேம்பயர் எது வேண்டுமானலும் மனதில் உருவகபடுத்திக்கொள்ளுங்கள்... அது கடவுளிடம் ஒரு வேண்டுதல் வைத்தது... இந்த ஜென்மத்தில் ரத்தம் குடிக்க ரொம்ப சிரம படுகின்றேன்.... சமயத்தில் ஆள் கிடைக்காமல் பசியில் தவித்து போகின்றேன்..அடுத்த ஜென்மத்தில் ரத்தம் குடிக்க என்னை இவ்வளவு கஷ்டபடுத்தாதே... எனக்கு ஆடுத்த ஜென்மத்தில்.... இரண்டு இறக்கை இருக்கும் வெள்ளைதேவதை போல் மாறி, ரத்தம் குடிக்கும் வரத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டது....
கடவுள் உடனே வரத்தை வழங்கினார்....
டிராகுலா பேஜார் ஆகி போனது.... ஏன்னா
அடுத்த ஜென்மத்தில் டிராகுலா.... விஸ்பர் அல்ட்ராவாக மாறி போனது...
==============
ஜோக்..2

பத்து வயசு பையனை ரேப் கேஸ்ல அரெஸ்ட் பண்ணி  கோர்ட்டுல நிக்க வச்சாங்க...பிஞ்சிலே பழுத்த சமாச்சாரம் என்பதால் யாரும் அந்த பையனுக்கு வாதாடவரலை... அந்தபையனின் பிஞ்சு முகத்தை பார்த்துட்டு ஒரு லேடி வக்கில் அவனுக்காக வாதாட வந்தாங்க....
யுவர் ஆனர் குற்றம்  சாட்டபட்ட இந்த சிறுவனின் முகத்தை பாருங்கள்... பால் வடியும் முகம் ... இவன் இந்த படுபாதக செயலை செய்து இருப்பான் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? கற்பழிப்புக்கு மிக முக்கியம் இந்த பையனின் லுல்லு.. என்று சொல்லி விட்டு அவன் டிராயரை கழட்டி விட்டு பாருங்கள் இந்த சின்ன சமாச்சாரம் எப்படி கற்பழிக்க பயண்பட்டு இருக்கும்??? என்று சொல்லிவிட்டு,வக்கில் அதனை கையால் பிடித்து கொண்டு உணர்ச்சி வேகத்தில் வாதாடிக்கொண்டே, லேசாக அசைவை கொடுக்க....
இவ்வளவு சின்ன லுல்லுவை வைத்தக்கொண்டு எப்படி ரேப் செய்யமுடியும் என்று ஜட்ஜை பார்த்து  கேட்க...
இதுவரை ஒரு வார்த்தை  பேசாத அந்த பையன்..ஒரு வாக்கியத்தை வாய்திறந்து சொன்னான்... அது கீழ இருக்கு படிச்சிக்கோங்க..


ரொம்ப ஷேக் பண்ணாதிங்க.. கேஸ்ல தோத்துடபோறோம்.....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

28 comments:

  1. பொன்வாசுவுக்கு முதல் நான்வெஜ் ஜோக்கே ஆட்டுறதை பத்தி எழுதி சமர்ப்பணம் பண்ணி இருக்கீங்க... கடைசீல அவர் சரியா வாதாடாம இருந்திடப்போறார் (இதிலும் ஆடுதல் வருதே)...

    ReplyDelete
  2. தமிழ்நாட்டுல பிஎஸ்என்எல் நல்லா வேலை செய்யுது... ஆனா தோட்ட நகரத்தில அல்லாட வேண்டி இருக்கு... அதனால ஊருக்கு போகும்போது மட்டும் தான் இப்போதெல்லாம் ரீசார்ஜ் செய்கிறேன்...

    ReplyDelete
  3. //நல்ல வேலை பாலம் காமன்வெல்த் போட்டி நடக்கும் போது இடிந்து விழவில்லை... விழுந்து இருந்தால் சர்வதேச அளவில் நம்ம மானம் கப்பலேறி இருக்கும்.. //

    இப்ப எல்லா ஊர் பத்திரிக்கைகாரனும் இதத்தான் எழுதுறாங்க....

    உங்கள் அம்மா பதிவை படித்து நெகிழ்ந்தேன்.. என் அலுவலகத்தில் மட்டும் 20 பேரை படிக்கவைத்தேன்...

    ReplyDelete
  4. சாண்ட்வெஜ்ஜெ நான்வெஜ் மாதிரிதான் இருக்குங்க,மற்றபடி நல்லாயிருக்குங்க,

    ReplyDelete
  5. ஜாக்கி சார்,

    இவ்வளவு மேட்டர் எப்டி கட கடன்னு எழுதி டெய்லி டெய்லி ஒரு போஸ்ட் ? பெண்டு கழண்டுடும் போல இருக்கே...

    வெகு சுவாரஸ்யமாக எழுதுவதுதான் வெகு சிறப்பு.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  6. Thanks Jackie for your kind wrings about BSNL and my friends. We always at your service
    Badrinath

    ReplyDelete
  7. அன்புள்ள ஜாக்கி அண்ணன், நேற்றே உங்கள் அம்மா பதிவுக்கு பின்னூட்டம் போடவேண்டும் என்று நினைத்தேன்,அந்த மனநிலையில் கமெண்ட் போட மனசு வரவில்லை. உங்கள் பதிவுகளை எப்பொழுது படிச்சாலும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும், ஆனால் நேற்று :( சொல்ல வார்த்தைகள் இல்லை.

    அன்புடன்
    குசும்பன்

    ReplyDelete
  8. //லயிக்கவில்லை… இருந்தாலும் பி எஸ் என் எல் நண்பரும் பதிவருமான பத்ரியிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் டவரில் அலைவரிசை இன்கிரிஸ் செய்வது வரை பேசினார்கள்//

    அண்ணே பத்ரி கிழக்குபதிப்பகம் தானே வைத்திருக்கிறார், BSNLலும் வேலை செய்கிறாரா? அவர் உங்கள் நண்பர் தானே அவரிடம் பேசி உங்கள் உலகசினிமா விமர்சனங்களை அச்சில் கொண்டுவரமுடியுமா என்று பாருங்கள்.

    ReplyDelete
  9. அண்ணே
    கலக்கிட்டீங்க சாண்ட்விச்
    குசும்பன் சொன்னாமாதிரி கேட்டுபாருங்கண்ணே!!!

    ReplyDelete
  10. அப்போ காமன்வெல்த் நஹியா?
    அண்ணே இதுக்கு ஒரு தனி பதிவே போடலாமே?
    தேசிய அவமானம்,இது 6 வருஷமா நடந்த வேலை அண்ணே,எத்தனை யமுனை நதிக்கரை சேரிகளை காலிசெய்தார்கள் நிலம் கையகப்படுத்த?எத்தனை பேரின் உழைப்பு?இப்படி திடீரென விளையாட்டு ரத்து என்றால் அத்தனை பேரின் கனவும் மண்ணா?நினைத்து பாருங்கள்,ஒரு ஹாக்கி வீரன் பாதிக்கப்பட்டால் கூட அவனுக்கு எதிர்காலம் போச்சு.

    ReplyDelete
  11. அண்ணா நானும் பி எஸ் என் எல் 3g தான் யூஸ் பண்றேன். நல்லா இருக்கு. லேப்டாப் ல மாட்டி, எங்க இருந்தாலும் நெட் கனெக்ட் பண்ணலாம்.

    ReplyDelete
  12. """"அருமையான பதிவு """
    பாபர் மசூதியும்

    நாங்களும் ஒன்றுதான்!

    இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!

    கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!

    -முதிர்கன்னிகள்

    ReplyDelete
  13. நன்றி சங்கவி..

    நன்றி வித்யாசமான கடவுள்...

    நன்றி இரவுவானம்...

    நன்றி நித்யா...


    நன்றி சே குமார்..

    நன்றி சைவ கொத்தபரோட்டா...

    ReplyDelete
  14. நன்றி பத்ரிசார் நீங்க ஆரம்பத்துல இருந்தே... எனக்கு 3ஜி ஐடியாதான் கொடுத்திங்க... ஆனா ரேட் மனசுல வச்சிக்கினுதான் நான் ரொம்ப யோசிச்சேன்..

    மிக்க நன்றி...

    ReplyDelete
  15. நன்றி தம்பி குசும்பன்..

    தம்பி குசும்பனுக்கு என் வளர்ச்சி மீது அளவுகடந்த அன்பு வைத்து இருக்கும் உனக்கு என் நன்றிகள்...

    இது பிஎஸ்என்எல் பத்ரி... நீ போட்ட பின்னுட்டத்துக்கு மேலே அவர் பின்னுட்டமும் இருக்கின்றது...

    நன்றி புத்தக ஐடியாவுக்கு...

    நன்றி தம்பி கார்த்தி....
    உலக அளவில் இந்தியமானம் கப்பலேறி போய்விட்டது... என்ன செய்ய.. இதை மாற்ற கடுமையான சட்டங்கள் தேவை.. அப்போதுதான் திருந்தும்...

    ReplyDelete
  16. ...வருடத்தில் ஒருமுறையாவது இது போலான ஹோட்டலில் ஒருநாள் இரவு உணவை வைத்து கொள்ளும் அளவுக்கு வளரவேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டேன்..

    >>>>கண்டிப்பாக நடக்கும் வாழ்த்துகள்!<<<<

    ReplyDelete
  17. அருமை அண்னா சூப்பர் இந்த வார மினி சாண்ட்விஜ்

    ReplyDelete
  18. பாபர் மசூதியும்

    நாங்களும் ஒன்றுதான்!
    இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!
    கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!

    -முதிர்கன்னிகள்

    நேரம் பார்த்து கவிதை போட்டிருக்கீங்க போல?? நல்லா இருக்கு..

    www.narumugai.com

    ReplyDelete
  19. அண்ணே இந்த வீக் என்ட் சந்திப்போம்.. இம்முறை தலைவலி வராத சரக்கு அடிப்போம் ...

    ReplyDelete
  20. ///நாளை மறுநாள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு.... கொடுமையே...அதை இடிச்சி என்னத்தை சாதிச்சிங்க??? ///
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
    இதற்க்கான வழக்கில்தான் தீர்ப்பு..

    ReplyDelete
  21. thank u jackie for writing good things about BSNL.

    ReplyDelete
  22. enga brtr intha maathiri 18+ joke ellam pudikkireenga...

    unmaiyile unga pathivu paducha romba happy ya feel pandren brtr...

    thanks brtr...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner