சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)

ஆல்பம்..
சென்னையில்,தலைமைசெயலகம், பெரிய  நூலகம், பெரிய  பாலங்கள்  எல்லாம் மாயாபஜார் ரங்காராவ் கை அசைப்பில் உருவானது போல, சடுதியில் கட்டி  முடிக்கபட்டு விடுகின்றன... ஆனால் பல லட்ச மக்கள் பயண்படுத்தும் மீன்சுருட்டி அருகே இருக்கும் அணைக்கரை பாலம் இன்னும் கட்டவே ஆரம்பிக்க வில்லை.. ஆய்வு நிலையில் அப்படியே உள்ளது... பல லட்சம் மக்கள் சுற்றிக்கொன்டு செல்கின்றார்கள்..  பணவிரயம் பயணநேரம் எல்லாம் கோவிந்தா......


வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வந்தால் எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிய போகின்றன... இந்த இரண்டு வருடங்களாக கடலூர் திருப்பாதிரிபூலியூரில் இருந்து திருவந்திபுரம் போகும் சாலையில் நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் பாதள  சாக்டைக்கு நோன்டி போட்டு  இரண்டு வருடத்துக்கு மேல் ஆகின்றது...இன்னும் சரி செய்தபாடில்லை...நிறைய போராட்டங்கள் செய்தாகிவிட்டது... மழையில் சாலை குண்டும் குழியுமாக ஆகி, கொழ கொழவென ஆகி பள்ளிக்கு போகும் பிள்ளைகள் மற்றும் பொது மக்கள் சொல்லன்னா துயரம் அடைகின்றனர்.. அந்த வழியாகதான் நான் திருமணம் செய்து கொண்ட திருமண மண்டபத்துக்கு வரவேண்டும்... இரண்டு வருடத்துக்கு முன் என் கல்யாணத்துக்கு வந்து சாலையில் உள்ள பள்ளத்தில் பேருந்து சிக்கி ஒரு மணி நேரம் டிராப்பிக்கில் மாட்டி ““ இது ஊராடா“என்று என் முகத்தில் காரி துப்பிவிட்டு போன  நண்பர்களின் எச்சிலின் ஈரம் இன்னும் என் முகத்தில்  என்னால் உணரமுடிகின்றது.... சென்னையில் மட்டும் எல்லோரும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடவில்லை... செங்கல்பட்டுக்கு அந்த பக்கமும் சோற்றில் உப்பு போட்டு எல்லோரும் சாப்பிடுகின்றார்கள் என்பதை..... அமைச்சர்கள், அதிகாரிகள்,முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் உணரவேண்டும்...
 ===========================
இரண்டு தமிழ் வலைப்பூக்கள் அதை நடத்தும் நண்பர்களால் டேலிட் செய்யபட்டு இருக்கின்றன... ஒன்று... வடகரைவேலன்... இரண்டாவது ஹாலிவுட் பாலா...இரண்டு பேருமே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி நீர்குமிழி போல ஒரு நாளில் உடைத்து விட்டு இருக்கின்றார்கள்... நீங்கள் பிளாக்கில் ஏதும் எழுத வேண்டாம்... ஆனால் எழுதியவற்றை வைத்து  இருக்கலாம்... அதையும் டெலிட் செய்தால் என்ன செய்வது...?? அது உங்கள் விருப்பமாக இருந்தாலும்... அறிவித்து விட்டு செய்து இருக்கலாம்...
 என்பது என் தனிப்பட்ட கருத்து..
================
எந்திரன்...  டிரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாநிதிமாறன் வீட்டுக்கு போவதிற்குள்  அவருக்கு ஜலதோஷம் பிடித்து இருக்க வேண்டும்... அந்த அளவுக்கு புகழ்ச்சி...இருக்கலாம் ஆசியாவின் பெரிய வியாபார காந்தம்...கலாநிதி மற்றும் தயாநிதி இருவரின் சிரிப்பும் எனக்கு பிடிக்கும்... ஓ இதுவும் புகழ்ச்சி போல இருக்கின்றதா? லுஸ்ல விடுங்க....  பெரிய ஆச்சர்யம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கருணாஸ்தான்... அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ...
===================


மிக்சர்...

கமல் பற்றி எதிர்வினை பதிவுக்கு ஈ அடிச்சான் காப்பி நிறைய உதாரனம் சொல்லிவிட்டேன்...இரண்டு தளங்கள் நான் எழுதிய கமல் பற்றிய பதிவை.. அப்படியே கண்ட்ரோல் சி மற்றும்  கண்ரோல் வி அடித்து போட்டு இருக்கின்றார்கள்... அவர்கள் செய்தது பெரிய வேலை இல்லை காப்பி பேஸ்ட் மட்டும்தான் செய்து இருக்கின்றார்கள்...மிசஸ்டவுட்பயரும்  அவ்வை சண்முகியும் அப்படி அல்ல என்று மீன்டும் சொல்லிக்கொள்கின்றேன்...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4706

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75286

அந்த இரண்டு தளங்களின் முகவரியை எனக்கு கொடுத்த  யாழ்பான நண்பர் மாயாவுக்கு என் நன்றிகள்...

==================
எந்திரன் கதை எனக்கு தெரிந்த வகையில் ரோபோ ரஜினி எப்படியும் ஐஸ் அழகில் மயங்கி வெறித்தனமா காதலிக்கும்னு நினைக்கின்றேன்... பாப்போம்..... எப்பப்ப படத்தை ரிலிஸ் பண்ணுவிங்க.. டென்சன் எகிரி போய் கிடக்குது..


============
ஒரு உதவி....
ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் எனது நண்பி ஒரு பைலட்.. பிலிபைன்சில் பைலட் டிரைனிங் கோர்ஸ் முடித்தவள்... பம்பாயில் வேலைசெய்து கொண்டே பைலட் வேலைக்கு இண்டர்வியூ அட்டன் செய்து கொண்டு இருக்கின்றாள்... வேலை வேண்டும்...ஜடி துறையாக இருந்தால் வேலை எங்கு ஓப்பனிங் இருக்கின்றது என்று சொல்லி விடலாம்...பைலட் அந்த தளமே வேறு...  லோன் போட்டு வேறு படித்த காரணத்தால்... வேலைக்கு போகாமல் வட்டிக்கு குட்டியையும் சேர்த்து கட்டிக்கொண்டு இருக்கின்றாள்... யாருக்காவது, எந்த ஏர்லைன்சில் ஆவது ஓப்பனிங் தெரிந்தால் எனது எண்ணுக்கோ அல்லது எனது மெயிலுக்கோ விபரங்களை தட்டிவிட உதவி கேட்கின்றேன்...நாளிதழில் பார்த்தாலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கின்றேன்...
நன்றி...

====================

இந்தவார புகைபடம்...
 நம்ம சேர நாடுதான்..
================================
இந்தவார சலனபடம்..
இப்படியும் கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் உடைத்து குடிக்க யாரும் முயற்ச்சி செய்யாதீர்கள்... இது போல ஒரு கெட்ட ஜோக் எனக்கு தெரியும் ஆனால் அதை சொன்னால் உதைக்க வருவீர்கள்..



=================================

படித்ததில் பிடித்தது...
 உலகம் ஒரு வட்டம் மச்சான்... எப்படி சொல்லற...?? விஜய் நகையை வாங்க சொல்லறார்.... விக்ரம் நகையை வைக்க சொல்லறார்...

(போனவார விகடனில்)
========================================
நான் எடுத்த புகைபடம்...


=====================================
பார்த்ததில் ரசித்தது...

(பிளாக் பிரபலம் ஆக நிகழ்வுகளை எழுத வேண்டும் என்று ஒரு நண்பர் புதிய பதிவர்களுக்கு டிப்ஸ் கொடுத்தார்...சென்னையில் அதிக வாய்ப்பு என்றும் மற்ற ஊர்களில் அதிக வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி இருந்தார்.... என்னை பொறுத்தவரை கண்ணை திறந்து வைத்து  பார்த்தால் எந்த ஊரில் இருந்தாலும் எழுதலாம் என்பது என் கருத்து... அதை விட முக்கியம் கொஞ்சம் சுவரஸ்யமாக எழுதுவது ... நான் அப்படி எழுதுகின்றேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது... நான் ஏற்கனவே  நிகழ்வுகளை அது போல எழுதினாலும், என்னால் ஒரு எழுத்தாளர் போல எழுத முடியாது என்பதுதான் உண்மை...  இருப்பினும் தொடர்ந்து  முயற்ச்சிக்கின்றேன்... டிப்ஸ்க்கு நன்றி நண்பா)

கோயம்பேடு போய் கொண்டு இருக்ன்றேன்... ஒரு 14 வயது பெண்  ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்து இருந்தாள்...  அவனை வைத்து ஓட்டிய நண்பர் பயங்கர வேகத்தில் ஓட்டினார்... ஆனாலும் இந்த பழாய் போன சென்னை சிகனல்களால் அவரின் வேகபயனம் அடிக்கடி தடைபட, நான் ஒவ்வோரு சிக்னலிலும் அவரின் பக்கத்தில் போய் நிற்க்க வேண்டியதாக இருந்தது... அந்த பெண் அவ்வப்போது குனிந்து குனிந்து பார்த்துக்கொண்டே அந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது.... எனக்கு ஆச்சர்யம் திரும்ப அந்த பெண்ணின் உடையை பார்தேன்.. லோ நெக் டிஷர்ட் எல்லாம் இல்லை... அதில்  எதாவது குறைபாடு இருக்கினறதா என்று பார்த்தேன் இல்லை.. அப்புறம் ஏன் அந்த பெண் அப்படி குனிந்து குனிந்து பார்த்தாள் என்ற  கேள்விக்கு அடுத்த சிக்னலில் பூனைகுட்டிவெளிசந்த விட்டது.. சாரி நாய்குட்டி.. ஆம் அவள் கையில் பிறந்த ஒரு மாதம் ஆன நாய்குட்டி கைகளில் மறைத்து  மடியில் வைத்து இருந்ததாள்....

========================

இந்தவாரா கடிதம்...

hi sekar, i do have no words to praise u.I feel really very happy and proud after i read ur 300th. also i cherish the comments of ur unknown friends. Wow really superb job u hv done. u r a gifted son to ur parents truely.I am not able to give an email to u on a particular article. for if  i  start to read one  and try to send  a mail on that article .the next one impresses  me more the the previous one. there will be time come someone will do a ph.d. on ur work , iam sure.Recently i watch kramervs kramer.  This i did as i have to, after  i read u. i am intrested  only a family type stories.The article about balakumaran(i like him too) , comparison of vairamuthu , articles about kamalahasan and many more, i really enjoyed reading. even making a story ( appa  short story)out of what u heard was touching. the way u  say that u  are not good at english, make myself really feel humble as iam not good with a wide knowledge in various things like u . i really want to type on the spot comment as soon as i read urs ,  but iam not able to do now.. i hope  i may join that list soon. i had been coming to ur blog thru blog corner. last few days i dont see that in vikatan.com. dont know why. later i found that i could reach u  without vikatan.com but thru ur own blog. . how ignorant iam . i still wonder how it is possible for u to write an article a day (in august).  it is 11.40p.m. in ohio here. Oldies like me it is possible to sit and do late night reading.  but i wonder how u manage time, to do ur job as well as writing. i am sure i do not convey the matters in the order i thought to. Anyhow  i am sure  u will get me. keep going. may god bless all ur efforts. convey my love to sudha sekar  . bye for now. fernando.

 =========================
கடிதங்கள் பற்றி ஒரு சிறு விளக்கம்...

அவரே எழுதியதா? இவரே எழுதியதா? என்று கேள்விகள் வருகின்றன.. மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை போடுவது எனது பாலிசி அல்ல..  வலைஉலகத்துக்கு வந்த இரண்டு வருடத்தில் என்னோடு நட்பு பாராட்டிய நண்பர்கள், என்னோடு எனக்காக நேரம் ஒத்துக்கி கடிதம்மூலம் கருத்தை வெளிபடுத்தியதை என் தளத்தில் போட்டு, உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்...அவ்வளவே....

==============

இந்தவார பதிவர்....

பிச்சைபாத்திரம் சுரேஷ்கண்ணன்...

வெகுஜனமக்களுக்கு தெரிந்த இலக்கிய எழுத்தாளர்கள் உலக சினிமாவை ரசிப்பதும் உலக சினிமாக்கள் எழுதவதும் நமக்கு தெரிந்தது என்றாலும்....இணையத்தில இலக்கிய சுவையோடு எழுதும் இவரின் சினிமா விமர்சனங்களுக்கு நான் ரசிகன்...ஆனால் அவரின் பல கருத்துக்களுக்கு நான் முரண்பாடு உடையவன்... இணையத்தில் எழுதும்  சினிமா விமர்சனம் எல்லாம் ஒரு விமர்சனமா என்று  எழுத்தாளர் ஜெயமொகன் பொங்கி எழுந்த போது... அதில் தனியாக சுரேஷ்கண்ணனை மட்டும் பாராட்டியவர்... அதே  போல் அந்த பாராட்டை தன் தளத்தில் அவர் வெளிபடுத்திய விதத்தை நான் ரசித்தவன்...  நிறைய நியாயமான கருத்துக்களை நடுநிலையோடு எழுதுபவர் இவரின் தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
குறிப்பு...
எனக்கு பிடித்தவர்களை வரிசைபடி எழுதி வருகின்றேன்.. பிளாக் காப்பி பற்றி எழுதியதால் இவரின் தளத்தின் இணைப்பை  தருகின்றேன் என்று  நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல....
=====================

பிலாசபி பாண்டி...

ஒன்றாம்வகுப்பு பசங்க பேசிகிட்டு இருக்கும் போது ஒட்டு கேட்டது...
மச்சியாருட அது திருவள்ளுவர்...
மாமா அவரு ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாம்...
1330 குரலும் அவருக்கு அதுப்படியாம்...
===================
அப்பா தன் மகன் கிட்ட...
தினமும் ஒரு குறள் படி...புத்திக்கு நல்லது...
அப்பா தினமும் ஒர குரலை கேட்டா தப்பா????
அது எப்படிடா முடியும் மொவனே???
ம், ஹா.. ஸ், ஸ்ப்பா , முடியலை இப்படி தினமும் எதிர் விட்டு ஆண்ட்டி வீட்ல இருந்து தினமும் வித விதமா கொரல் வந்துகிட்டே இருக்கு...
=============
காபி ஷாப்புக்கும் ஒயின் ஷாப்புக்கும் என்ன வேறுபாடு...??
காபி ஷாப்... லவ்வோட ஸ்டார்ட்டிங் பாயின்ட்..
ஒயின்ஷாப்...லவ்வோட என்டிங் பாயின்ட்...
================
லவ்வை  சொல்ல ஐ லவ்யூன்னு சொல்லி  தெரிவிக்கின்றோம்... அதே போல ஒரு  நட்பை எப்படி சொல்லி புரியவைக்கின்றது...
யோசிங்க..????
நண்பேன்டான்னு  சொல்லிதான்....
=============
வேலைகாரர்கள் புட்பால் விளையாடுவாங்க...
மேனேஜர்கள் டென்னிஸ் விளையாடுவாங்க...
பாஸ் ஸ்னுக்கர் விளையாடுவாங்க...
சீஇஓ கோல்ப் விளையாடுவங்க..
 இதுல இருந்து என்ன தெரியுது பெரிய பொசிஷன் போக போக பால் சின்னதா ஆயிடும்.. நீயம் ரொம்ப கான்சன்டிரேஷன் பண்ணனும்..
பிரிஞ்சவன்தான் பிஸ்தா மாமே......
=================

காதலிச்ச பொண்ணுங்க எல்லாம் கழட்டி  விட்ட காதலனை எப்படி சொல்லுவாங்க தெரியுமா?
அவன் பொறுக்கி, லுஸ்,பைத்தியம், உருப்படாத சனியன்னு, பொறம்போக்கு,ன்னு தான் நல்லவள்னு சொல்ல  இப்டித்தான் சொல்லுவாங்க.... ஆனா பையன்க எமாத்திட்டு போன  பொண்ணாயிருந்தாலும்...
மச்சி அது என் அஞ்சலைடா என்பார்கள்..
======================

நான்வெஜ் 18+
ஜோக்,,1

இரண்டு  நண்பர்கள் சரக்கு அடிச்சிகிட்டு இருந்தாங்க..
மச்சி ஒரு குவாட்டா சொல்லேன் என்றான் ஒருத்தன்... அதுக்கு ஏன்டான்னு கேட்க...??
 என் அண்ணன் ஒரு கே ன்னு நேத்துதான் எனக்கு தெரிஞ்சது...
மறுநாள் அதே பார்...
இப்ப ரெண்டு குவாட்டர் சொல்ல சொன்னான்..
நண்பன் திரும்பவும் கேட்க??
மச்சி என் சின்ன தம்பியும் ஒரு கே டான்னு சொன்னான்...
நண்பன் வெறுத்து போய்.. ஏன் மச்சான் உன் வூட்ல பொம்பளைங்களை  லைக் பண்ணறவங்க யாருமே  இல்லையான்னு கோபமா கேட்க...?? அதுக்கு அவன் ரிலாக்சா சொன்னான்...
ம் என் மனைவி....
=====================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

23 comments:

  1. //வடகரைவேலன்... நீங்கள் பிளாக்கில் ஏதும் எழுத வேண்டாம்... ஆனால் எழுதியவற்றை வைத்து இருக்கலாம்... அதையும் டெலிட் செய்தால் என்ன செய்வது...?? //

    http://vadakaraivelan.wordpress.com/ இந்த தளத்தை காணலாம்...

    ReplyDelete
  2. நீயும் ரெளடியா ...??

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. //பல லட்ச மக்கள் பயண்படுத்தும் மீன்சுருட்டி அருகே இருக்கும் அணைக்கரை பாலம் இன்னும் கட்டவே ஆரம்பிக்க வில்லை.. ஆய்வு நிலையில் அப்படியே உள்ளது... பல லட்சம் மக்கள் சுற்றிக்கொன்டு செல்கின்றார்கள்.. //

    ஆமாம் ஜாக்கி அது பல வருடங்களாக நிலுவையில் உள்ளது... தலைவரின் சொந்தங்கள் யாரவது அங்கு இருந்திருந்தால் அது எப்போதே கட்டபட்டிருக்கும்...

    ReplyDelete
  4. // http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4706

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=75286

    அந்த இரண்டு தளங்களின் முகவரியை எனக்கு கொடுத்த யாழ்பான நண்பர் மாயாவுக்கு என் நன்றிகள்...//

    உங்கள் வலைப்பதிவு ஆக்கத்தைப் போட்டு என் பார்வைக்குப் பட்ட தளங்களே அவை!... இன்னும் எத்தனை இணையத்தளங்களில் உங்கள் ஆக்கம் இருக்குதோ தெரியேல்ல....

    ReplyDelete
  5. //உலகம் ஒரு வட்டம் மச்சான்... எப்படி சொல்லற...?? விஜய் நகையை வாங்க சொல்லறார்.... விக்ரம் நகையை வைக்க சொல்லறார்.../
    இதை எழுதினதும் இளா அப்படிங்கிற பதிவர்தாங்க

    ReplyDelete
  6. ஹாலிவுட் பாலாவின் தளம் "maintenance"ல் உள்ளது... விரைவில் புதுப்பிக்கப்படும் என்று ஒரு வலைப்பூவில் படித்தேன்! வழக்கம் போல் கலக்கல் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்!

    ReplyDelete
  7. dear jackie,
    don't publish my previous comment about hollywood bala.if u have his mail id give me.

    ReplyDelete
  8. நன்றி பின்னுட்டம் இட்டட அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் இளா...சாரி பெயரை பார்க்கவில்லை..

    நானும் ரவுடிதான் அது தெரியாதா உனக்கு....நன்றி சூர்யா

    ReplyDelete
  10. Dear Jsackie, All Your writings are generally fine. But your review on the movie" Bale Pandiya" was not well. After reading your review we watched that movie and disappointed. Thank God we didnt spend for that movie. What did you see well in that movie. It started differently and ended so clumsy.

    Lakshmi Ramkumar from Moscow

    ReplyDelete
  11. Where do you get these kind of jokes jackie sir? nice. write more.
    Lakshmi Ramkumar from Moscow

    ReplyDelete
  12. I will be pleased to receive your reply. thanks jackie

    ReplyDelete
  13. nice jokes jackie where do u pick up these jokes?
    keep it up.
    Lakshmi Ramkumar from Moscow, Russia

    ReplyDelete
  14. Dear jacky

    Pls check the link for your friend regarding jobs.

    http://jobs.cabincrew.com/

    ReplyDelete
  15. லக்ஷ்மி நான் பலோ பாண்டியா விமர்சனம் எழுதவே இல்லை.. பாஸ் என்கின்ற பாஸ்கரனை அப்படி நினைச்சிட்டிங்க்களோ---

    ReplyDelete
  16. வாழ்க. வளர்க ஜாக்கி

    ReplyDelete
  17. sorry I was mistaken. I wanted to write "Boss engira ........." and wrote "Bale Pandiya" . We expected more from Arya and got disappointed. It started well as i mentioned. Santhanam was brilliant.

    Lakshmi from Moscow, Russia

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner