(GOD SPEED) சைக்கோ சகோதரனின் தங்கை நிலை....

சைக்கோ ஆட்கள் நாம் நிறைய பேரை பார்த்து இருக்கலாம்... சில சைக்கோகள் பேசவே மாட்டார்கள்... சிலர் நம்மோடு கலந்து இருப்பவர்களும் உண்டு...எப்போதவதுதான் சிலர் அது போல் நடந்து கொள்வார்கள்... மற்ற நேரத்தில் ரொம்ப அமைதியாக அவர்கள் இருப்பார்கள்...அவர்களுக்கு அப்படி ஒரு நோய் இருப்பது அவர்களுக்கே தெரியாது....

ஒரு சைகோ தன் சக கூட்டாளியிடம் தன் தங்கையை தன் கண் எதிரில் உடலுறவு செய்ய சொன்னாள் எப்படி இருக்கும்? அவன் தயங்கும் போது... அவளின் அங்கத்தை வர்ணித்து அவளை கெடுக்க வற்புறுத்தினாள் என்ன செய்வது அந்த சைகோவை...

GOD SPEED படத்தின் கதை என்ன???

சார்லி என்பவன் கடவுளின் பெயரால் சில பிரேயர்கள் செய்து பலரை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றுகின்றான்...ஒரு நாள் இரவில் சார்லியின் மனைவி மகனை யாரோ முகம் தெரியாதவர்கள் கொலை செய்து விடுகின்றார்கள்...அந்த கொலை நடந்து ஆறுமாதம் கழித்து சாரா என்பவள் தன் சகோதரன் புத்தி பேதலித்து இருப்பதாகவும் அவனை குணபடுத்த வேண்டும் என்று அழைத்து போகின்றாள்..சார்லி தன் மனைவி மகனை கொன்றவனை கண்டுபிடித்தானா? சாரவின் சைக்கோ அண்ணன் என்னவானன்... என்பதை எந்த அவசரமும் இல்லாமல் இந்த படத்தை பார்க்கலாம்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் ஒரு திரில்லர் படம்

ஸ்லோவான திரைக்கதை...

பல விருதுகளை பெற்று இருக்கின்றது... ஒரு வேளை மெத்த படித்தவர்களுக்கு இந்த படம் பிடித்தாலும் பிடிக்கும்...

என்னை பொறுத்தவரை படம் ரொம்பவும் ஸ்லோ..

லொகேஷன்கள் சான்சே இல்லை அவ்வளவு அற்புதம்...

காயம் பட்ட சார்லியை துப்பாக்கியுடன் துரத்தும் இடங்களிலும்....

தன் கூட்டாளியிடம் தன் சொந்த தங்கையை ரேப் செய்ய சொல்லும் காட்சிகளில் கொஞ்சம் நிமிர்ந்து உட்காரலாம்...

சிலருக்கு இந்த படம் பிடிக்கலாம்...அதனால்தான் இந்த படம் டைம்பாஸ் லிஸ்ட் படத்தில் வைத்து இருக்கின்றேன்..

படத்தின் டிரைலர்...




படக்குழுவினர் விபரம்...

* Release Date: 2009
* Runtime: N/A
* Genre: Drama, Thriller
* Starring: Ed Lauter, Jesse Ward, Joseph McKelheer, Cory Knauf ... See all
* Director: Robert Saitzyk



அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)

ஆல்பம்...

தமிழ் செம்மொழி மாநாடு இப்போதுதான் தொடங்கியது...கொடிசியா அரங்கம் என்று ஒரு அரங்கம் காண்பித்தார்கள்.. அந்த பிரமாண்டம் சொல்லியது அந்த செம்மொழி விழா எப்படி நடக்க போகின்றது என்று....1995க்கு பிறகு தமிழ்நாட்டில் என் தாய் மொழிக்காக ஒரு விழா... உலகில் மிகபழமைவாய்ந்த மொழிகள் ஆறு இருக்கின்றன... அதில் ஒன்று தமிழ் எனும் போது பூரிக்காமல் இருக்க முடியவில்லை.... வாழ்த்துக்கள்...
===============
தமிழ்நாட்டில் அப்பாக்கள் தன் மகள்களை சூறையாடுவது தொடர்ந்து கொண்டு இருக்கின்றது...இப்போது மூன்றாவது அப்பாவும் மாட்டி இருக்கின்றார்...மாட்டிக்கொண்ட மூன்றாவது காமுகன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

நான் போதையில் இருந்த காரணத்தால் எனக்கு எனது பெண் என்று தெரியவில்லை என்று... காரணம் சொல்லி இருக்கின்றான்...சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா?... அந்த பொண்ணுமேல என்ன என்ன சொல்ல முடியுமோ? அதை எல்லாம் சொல்லி தப்பிக்க பார்த்து இருக்கான்....

அந்த பிள்ளையை மிரட்டி கெடுத்து கர்பம் ஆனாதும் அதை கலைக்க முடியாமல் அவளை இறந்து போக சொல்ல... அந்த பெண் பூச்சி மருந்து குடித்து இறந்து போய் இருக்கின்றது...கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போன்ற வகையில் தண்டனை கொடுக்கபட வேண்டும்........

இதில் கொடுமை அந்த பெண்ணின் அம்மா போலிசில் உண்மையை மறைத்து இருக்கின்றார்... போலிஸ் மிரட்டியதும் உண்மையை சொல்லி இருக்கின்றார்...
=======================
தமிழ்நாட்டில் பள்ளி கழிவறையில் ஒரு பெண்பிள்ளைகுழந்தை பெற்று இருக்கின்றாள்...கலாச்சாரம் அது இது என்று சொல்லிவருகின்றோம்...இந்த நிகழ்வு நகரத்தில் நடக்கவில்லை கிராமபுற பள்ளியில் நடந்து இருக்கின்றது...எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சியில் எல்லாம் மாறிவிட்டது...எல்லா நாட்டு கலாச்சாரமும் மாறிவிட்டது...நாமும் மாறவேண்டும்...செக்ஸ் கல்வி தற்போது அவசியம் என்பது முக்கியம் என்பதை இந்தநிகழ்வு பறைசாற்றுகின்றது...
=========================
தலைநகர் டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் 5 கவுரவ கொலைகள் நடந்து உள்ளன...2007ல் இருந்து இதுவரை 22 கொலைகள் நடந்து உள்ளன... நல்லா இருங்கடா...21ம் நுற்றாண்டில் இந்தியா தலையெழுத்து... அதுவும் தலைநகரில்...இதில் விஷயம் தெரிந்தவை...22.. இதில் பல கொலைகள் வயிற்றுவலி...,மார்க்குறைவு, போன்ற சல்லிகாரணங்களில் கொலை செய்து தற்கொலையாக மாற்றியது நிறைய நடந்து இருக்கும்....
=============
உலக கோப்பை ஸ்பெஷல் புகைபடம்...

இந்த நாதரியை பால உதைக்க சொன்ன...எதை உதைக்குது பாரு....???

====================
மிக்சர்...

வாழ்த்துக்கள்...
பதிவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் கடந்த சனிக்கிழமை கே கே நகர் டிஸ்கவர் புத்தக நிலையத்தில்... கலைஞர் எனும் கலைஞன் என்ற புத்தகம் வெளியிடபட்டது... அவருக்கு நம்முடைய இதயபூர்வமானவாழ்த்துக்கள்..

========

செம்மொழிமாநாட்டு மைய நோக்கு பாடலில்....ஸ்ருதிஹாசன் பாடிய பிறகு பொய்கால் குதிரையில் ஆடும் அந்த பெண்ணின் வெள்ளை சிரிப்பு எனக்கு ஏனோ ரொம்பவும் பிடித்து போனது....

===========
கோவை செம்மொழி மாநாட்டில் எங்கும் திமுக கொடி இருக்க கூடாது என்று உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி....

===========
நேற்றில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதம் தொடங்கியது... வக்கில்கள் பணிக்கு திரும்பினர்..
================
பிஎஸ்என்எல் 3ஜி போன் விளம்பரத்தில் ஒரு பெண் உடை மாற்றி மாற்றி காதலினடம் காட்டி விட்டு கருப்பு உடை அணிந்து நடந்து வரும் அந்த நடை எனக்கு பிடித்து இருக்கின்றது....
============
ஒரு நிமிஷம் என்று காக்காய் விரட்ட அப்பா சட்டையில் சாயம் பூசி சோளக்காட்டு பொம்மை போல் நிற்க்கும் பையன் பாட்டியை பார்த்து கண்ணடிக்கும் அழகு சோ சுவீட்.... அந்த சர்ப் எக்சல் விளம்பரம்

=========
பம்பாயில் 30 வருஷம் பழமை வாய்ந்த சிங்கிள் பெட்ரூம் பிளாட் விலை..நாலரை கோடியாம்...அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் 37 வீட்டில்20யை வாங்கிவிட்டார்கள்... இன்னும்17 வீட்டை வாங்க பேச்சு வார்த்தை நடக்கின்றது...மொத்தம் 200 கோடியில் அந்த இடத்தை வாங்கி புது அப்பார்ட்மென்ட் கட்டி எத்தனை கோடிக்கு விற்பார்கள் என்று நினைக்கும் போது மயக்கம் வருகின்றது...
==============
மைக்கேல் ஜாக்சனின் முதலாம் ஆண்டு நினைவுதினம்... வரும் 25ம்தேதி வருகின்றது.. எனது ஆல்டைம்பேவரிட் இந்த பாடல்தான்....அவருக்கு என் அஞ்சலிகள்..


=============
இந்தவார சலனபடம்... 18+... எட்டு சின்னபடங்கள்...எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... இதில் சிலது நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கலாம்....



===============

மோஸ்கோவின் காவேரி படத்தின் டிரைலர் தியேட்டரில் பார்த்தேன்...சங்கம் 70 எம் எம்மில் பார்த்த போது மனதை கவர்ந்தது...உங்களுக்கு கவருமா என்று தெரியவில்லை...


=====================

பிலாசிபி பாண்டி...

பியூட்டர்ல என்ஜினியரிங் பசங்க என்ன செய்வாங்க???


ECE&EEE
ரேடியோ சர்விஸ், சவுன்ட் சர்விஸ், சிரியல்செட்டிங் எல்லா பங்ஷனுக்கும்....

MECH
சைக்கிள் பஞ்சர், டிராக்டர் ரிப்பேர்...

CIVIL
சித்தாள், கொத்தனார், மேஸ்த்திரி

AERO
பொம்மை துப்பாக்கி, ரிமோட் பிளேன்,பானாகாத்தாடி..

CSE&IT
சிவகாமி கம்யூட்டா ஜோசியம்....

போற போக்க பாத்த மேல சொன்னது எல்லாம் நடந்துடும் போல இருக்கு....
===================
நான்வெஜ்...18+

ஜோக்..1

பிலாசி பாண்டி போல ஒரு ஆளுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தார்களாம்.. உனக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என்று கேட்க? எனக்கு டீச்ர் வேலை செய்யும் பெண் வேண்டும் என்றானாம்.... ஏன் என்று கேள்வி கேட்ட போது..அவுங்கதான் எது செஞ்சாலும் அது தப்பு,இது தப்பு திரும்ப செய்னு சொல்லுவாங்கன்னு சொன்னானாம்....
======================

ஜோக்2
மூன்று பெண்கள் பிளைட் விபத்தாகபோவறது தெரிஞ்சதும்... முதல் பெண் மேக்கப் போட்டுகிட்டா...அதற்கு அவ சொன்ன காரணம்.. விபத்துல மீட்க வருபவர்கள்.. என் அழகை பார்த்து என்னை அவர்கள் முதலில் என்னை காப்பாற்றுவார்கள்... இரண்டாவது பெண் தனது பிராவை கழட்டினால்... காரணம்...எனது மேலழகு என்னை முதலில் பார்த்ததும் காப்பாற்றும்..மூன்றாவது பெண் தனது ஜட்டியை கழட்டினாள்.. காரணம் விபத்தின் போது முதலில் பிளாக் பாக்சை தேடுவார்கள் என்று அவள் எங்கோ படித்ததுதான்...

================
உயர்நீதி மன்றத்தில் மனம் ஒத்து அந்த தம்பதிகள்விவாகரத்து மனு தாக்கல் செய்தனர் .. ஒரு வருடத்தில் மனம் ஒத்து பிரிவதால் விவாகரத்து வழங்கியது நீதி மன்றம்.... இருக்கும் ஒரு குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்ற போட்டி இருவருக்கும் உருவானது போட்டி....இருவருமே குழந்தையை வளர்க்க பிரியபட்டனர்....குழந்தையை தாய்தான் வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சொன்னார்...

கணவன் நீதிபதியை பார்த்து கேட்டான்... என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்ட குழந்தையை அவள் வளர்பதா? அல்லது நான் வளர்பதா எனறு தீர்ப்பு கூறுங்கள் என்று சொன்னான்...நீதிபதி ஒப்புக்கொண்டார்...

நீதிபதி அவர்களே...

ஒரு ஆட்டேமேட்டிக் பெப்சி மிஷினில் நீங்கள் காசு போடுகின்றீர்கள்... பேப்சி கேன் வெளிவந்து உங்கள் கைகளில் விழுகின்றது... பெப்சி கேன்... மெஷினுக்கு சொந்தமா? அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா? என்று கணவன் கேள்வி கேட்க...

நீதிபதி எதிரில் இருந்த தண்ணீரை லபக்கென குடித்து விட்டு.. தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்....
=================
அன்புடன்
ஜாக்கிசேகர்

ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

பெண் சுதந்திரம்... 2010(கவிதை)


உணவகம் நில்லா
விரைவு பேருந்து
பொட்டல் வெளியில்
வேகம் குறைத்து நின்றது...

ஓட்டுனரும்,நடத்துனரும்
அவசரமாய் இறங்க...
(குறி)யீட்டை
புரிந்து கொண்டு

சில ஆண்களும் இறங்கினர்...
எனை ஏதும் கேட்காமலே
என் கணவரும் இறங்கினார்...


பெண்கள் ஒருவரும் இறங்கவில்லை
சிலர் புடவை தலைப்பு
கலைந்து தூங்கினர்
சில பெண்கள்
இறங்கிய ஆண்களை
வெறித்து பார்த்தனர்...

பேருந்தின் பின்புறத்தை
கட்டணமில்லா கழிவறையாக்கினர்..
இறங்கிய ஆண்கள்...


ஒரு சில ஆண்கள்
முகத்தில் தீர்வு கண்ட
பரவசத்துடன்
பேண்டில் சிந்திய
சிறுநீரைதட்டியபடி
பேருந்து
படிகளில் ஏறினர்...

ஒரு மணிநேரத்துக்கு மேலாக...
உள்பாவாடை
நனையும் பயத்தில்

சிறுநீரை
அடக்கி கொண்டு
பயணிப்பது
யாருக்கு தெரியபோகின்றது...


பேருந்து
மேடு
பள்ளங்களில்
பயணிக்கும் போது

சிறுநீர் வந்து விடுமோ?என்று
மனம் முழுவதும்

பயத்தோடும்
வேதனையோடும்
பயணிப்பதை
ஆண்வர்க்கம் அறியுமா?


எல்லாவற்றிலும்
சரிபாதியாய்

என்னோடு பயணிக்கும்
என் கணவனுக்கே...
என் நிலை புரியாத போது,
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்
எப்படி புரியும்????

ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க முடியாது என
பொது இடத்தில்
பேசும் தைரியம்..
.


எந்த இடத்திலும்
ஜிப்பை அவுத்துக்கொள்ளும்
சுதந்திரம் உள்ளவர்களுக்கு
எப்போதுதான் புரிய போகின்றது...

நாங்களும்
ரத்தமும் சதையுமான
கழிவுஉறுப்புகளை கொண்ட
மனிதபிறவிகள் என்று....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம் அமைச்சரே...

ஹவுஸ்கீப்பிங் கிரிஜா (சிறுகதை)

முதலில் இந்த கதையை படிக்கும் போது கொஞ்சம் அல்லது அதிகமாக அருவருப்பு வர நேரலாம்...உண்மையை இப்படித்தான் விரிவாய் எனக்கு சொல்ல வருகின்றது....



சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அந்த 15 அடுக்குமாடி கொண்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தின் ஏழாம் தளத்தில் உள்ள, அந்த பெண்கள் கழிவறையின், மூன்றாவது அறைக்கதவை,கிரிஜா திறந்த போது நாற்றம் குடலை புரட்டிக்கொண்டு வந்தது....

சிறுநீரும் மலமும் மேற்கொண்டு போக வரியில்லாமல் அகதி போல் திக்கற்று, வெஸ்டன் டாய்லட்டின் மேல் புறம் வழியாக, தண்ணீர் தன் இயல்பு நிறம் மாறிவழிந்து கொண்டு இருந்தது...கிரிஜாவுக்கு பார்த்ததும் தெரிந்து விட்டது... ஏதோ ஒரு படித்த எருமை... சானிட்டரி நாப்கினை டாய்லட்டில் போட்டுவிட்டு போய் விட்டது...அதனால் ஏற்பட்ட அடைப்பு இது என்று புரிந்து போனது...

ஒரு வேலைக்கு இரு வேலை... இதை எவ்வளவு கிண்டினாலும் நோன்டினாலும் எதுவும் ஆக போவதில்லை...கையை விட்டுதான் எடுக்க வேண்டும்...இந்த தொழிலுக்கு வந்த புதுதில் இரண்டு நாட்களுக்கு எந்த சாப்பாடும் இறங்கவில்லை...

சாப்பாட்டில் கை வைத்தாலே அடைப்பால் மிந்தது கொண்டு இருக்கும் அந்த கருமங்கள் அவள் நினைவுக்கு வந்து தொலைக்கும்...வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில், மூன்று முறைக்கு மேல் வாந்தி எடுத்தாள்...சாப்பிடும் போது அந்த நினைவு வந்து விட்டாள்... அதற்கு மேல் ஆசையாய்ஒரு பிடி சாப்பிட பிடிக்காது....எல்லாவற்றையும் தன் ஒரே மகள் ஈஸ்வரிக்காக பொறுத்துக்கொண்டாள்......


முதல் முறையாக இது போல் டாய்லட்டில் அடைப்பு ஏற்பட்டு இருந்த போது சகித்துக்கொண்டு , கையை விட்டு எடுத்த போதுகிரிஜாவின் ஜாக்கெட் இரண்டு இன்ச் நனைந்து போய்விட்டது.. என்னதான் பினாயிலும், டெட்டால் போட்டும்... வீடு போகும் வரை அந்த நாத்தம் அவளை விட்டு போகவில்லை..

வீட்டுக்கு போனதும் அவளது பத்தாம் வகுப்ப படிக்கும் பெண் ஈஸ்வரி என்ன உன் மேல பீ நாத்தம் அடிக்குது? என்று கேட்டு விட்டு பத்தடி பின்னால் நகர்ந்தால்....அது கிரிஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை... ஏனென்னறால் கிரிஜா தன் ஒரே மகள் ஈஸ்வரி மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தாள்...

அவளுக்கு அவள்தான் வாழ்க்கை...உலகில் அவள் எல்லாவற்றையும் பொறுத்துகொண்டு வாழ்வது தன் ஒரே மகளுக்காகத்தான்...இப்போது கூட வீட்டில் அவள் செக்யூரிட்டி வேலை செய்வதாகத்தான் சொல்லி இருக்கின்றாள்... ஹவுஸ்கீப்பிங் வேலை செய்கின்றேன் என்று வீட்டில் மூச்சுக்கூட விட்டதில்லை




காலையில் வேலைக்கு வந்ததுமே இது போலான வேலை என்றால் எரிச்சல்தான் வரும்...கைநிறைய சம்பாதிக்கும் திமிர் இருப்பதால் அடுத்தவன் கஷ்டம் இந்த ஐடிபெண்களுக்கு புரிவதில்லை...

சுப்ரவைசர்களிடம் சொல்லி...ஆபிசில் ஆர்டர் போல் போடாமல்... ஒரு வாய்வழி அறிக்கையாக கூட சொல்லியாகி விட்டது... ஆனாலும் இந்த சானடரி நாப்கின் வெஸ்டர்ன் டாய்லட்டின் உள்ளே போட்டு, பிளஷ் செய்யும் படலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது...


நாப்கினை எடுத்து பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் போடமுடியாத சோம்பேறிதனம்...சட்டென மூடியை திறந்து போட்டு விட்டு....வெளியே போய்விட்டால்... அடுத்து நானா உபயோகபடுத்தபோகின்றேன்... என்ற இந்தியாவின் தேசிய அலட்சியம்.... அப்படியும் மனசாட்சி கேள்வி கேட்டால் ? அதை கிளின் பண்ணதான் ஹவுஸ்கீப்பிங் இருக்காங்க இல்லை என்ற பதில் வந்து நிற்க்கும்....


கிளின் பண்ணதான் நாங்க இருக்கோம் ஆனாலும் ,நாங்களும் மனுசங்க இல்லையா? என்ற கேள்வி கிரிஜாவின் மனதில் ஓடாத நாள் இல்லை...பத்து நிமிசத்துக்கு முன்னதான் கிளின் பண்ணிட்டு வந்து சூடு ஆறிப்போறதுக்குள்ள அந்த டீயை வாயில வைக்கறப்பவே...ஹவுஸ் கீப்பிங்னு கத்தி ஊரை கூட்டுவாங்க...


யாரோ டாய்லட் போயிட்டு பிளஷ் பண்ணலைன்னா நாங்க என்ன பண்ணறது???? மொத்தம் பதினைஞ்சு புளோர்... புளோருக்கு ஒரு டாய்லட் மொத்தம் பதினைஞ்சு.. நாலு புளோருக்கு இரண்டு பேர்னு போட்டு வச்சி இருக்காங்க.



கிரிஜா டயாய்லட் கதவை தாள் போட்டாள்...பினாயில் அரைவாளி உள்ள பக்கெட்டையும், மாப்பையும் ஓரமாக சாத்தி வைத்தாள்...கைவிட்டு சுத்தபடுத்தும் போது ஜாக்கெட் நனைந்து விடுவதால்...ஜாக்கெட்டை கழற்றினாள் பிளஷ் டேங் மேல் வைத்தாள்..

உள் பாடியுடன்...கையை அந்த நாத்தம் பிடித்த டாய்லெட்டில்கையை விட்டாள்.... குடல் புரட்டும் நேரத்தில் ஏதோ ஒரு சினிமா பாடலை நினைவுக்கு கொண்டு வந்தாள்....அவள் சுத்தம் செய்யும் இந்த நேரத்தில் நாம் கிரிஜாவின் பர்சனலை பற்றி சின்னதாக தெரிந்து கொள்வோம்...


கிரிஜாவுக்கு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூர் கிராமம்தான் சொந்த ஊர்...கிரிஜா கருப்பாக இருந்தாலும் பார்க்க பாந்தமாக இருப்பாள்...குடும்ப வறுமைகாரணமாக 5ம் வகுப்பிக்கு மேல் படிக்கவில்லை....


கிரிஜாவுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை...கிரிஜா வாழ்க்கையை இப்படியும் சிம்பிளாக சொல்லலாம்...உப்பு விக்க போன மழை பெய்யும்... மாவு விக்க போன காற்று அடிக்கும்...சிறுவயதில் இருந்தே இதுதான் அவளது வாழ்க்கை ...


திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் அவளது பெற்றோர் அவளைவிட்டு அடுத்து அடுத்து மரித்து போனார்கள்...கணவன் மாரி கிரிஜாவை சந்தோஷமாகத்தான் வைத்து இருந்தான்...

மாரிக்கு மண்ணடியில் மூட்டை தூக்கும் வேலை....திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் ஈஸ்வரி பிறந்தாள்... 5வருட வாழ்க்கை என்பது கிரிஜாவுக்கு வசந்த காலம்....அதன் பிறகு ஒரு குழந்தையை பற்றி அவள் யோசிக்கும் போது.....


அசதிக்கு சாப்பிடுகின்றேன் என்று சொல்லிவிட்டு எப்போதாவது சாப்பிடும் சீமை சரக்கு பழக்கம் மெல்ல அவளது கணவனை ஆட்கொண்டு விட்டது...


போதை மறு வாழ்வு அது இது என்று எல்லா கட்டிடத்தையும், அதற்கு போகும் பஸ் ரூட்டையும்..
பார்த்தாயிற்று,சலித்தாயிற்று...எல்லவற்றையும் தின்றாகி விட்டது பித்தம் தெளிய வாய்பில்லை என்று அவளுக்கு புரிந்து போனது...


அவள் பெண் ஈஸ்வரி அவள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அரசினர் உயிர்நிலைபள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் போது பழைய மகாபலிபுரம் சாலை திடிரென மாற்றம் அடைய ஆரம்பித்து...

விளைந்த விளைநிலங்களில் கான்கிரிட் காடுகள் ஆக்கிரமித்துகொண்டன...களை எடுக்க போன கைகளுக்கு வேலை கிடைக்கவில்லை...இன்னும் இரண்டு கிராமம் தள்ளி வயலில் களை எடுக்கும் வேலை கிடைத்தது...இருந்தாலும் போய்வருவதற்க்கு பஸ்சுக்கே அந்த காசு சரியாக போய்விடும்...அதனால் ஊரில் கிடைத்த வேலையை செய்து கொண்டு இருந்தாள்..

அவள் பெண் ஈஸ்வரி படிப்பில் சுட்டி...நிறைய கட்டுரை,கவிதை போட்டிகளில் கலந்து கொண்டு சர்டிபிகேட் வாங்கி வரும் போது ரொம்பவும் சந்தோஷம் கொண்டாள்....ஒரு சுப நாளில் மகள் வயதுக்கு வந்தாள்... வீட்டில் சிம்பிளாக சடங்கு செய்தாள்...சடங்குக்கு வந்தவர்களை கிரிஜாவின் கணவன் மாரி தள்ளாடியபடி வரவேற்றான்...

எல்லா கதைகளிலும் வருவது போல் குடித்து விட்டு சத்தம் போடும் கேரக்டர் அல்ல மாரி... ரொம்பவும் சாது...சரக்கு அதிகமானால் தள்ளாட்டம் மட்டும் அதிகமாக இருக்கும்.. சாப்பிட்டு விட்டு சாதுவாக படுத்து விடுவான்... பெண் வயதுக்கு வந்து சரியாக இரண்டாவது மாதத்தின் ஒரு ஞாயிறு அன்று....

மதிய வெயிலில் நன்றாக குடித்து விட்டு வந்து சாதுவாக படுத்தவன்.. ஒரு விக்கலில் சவமாகி போனான்...குடும்பம் பொறுப்பு முழுமையாக கிரிஜாவுக்கு தோளில் இறங்கியது....

அப்போதுதான் பக்கத்து தெரு பெண்கள் திருத்தமாக உடை அணிந்து கொண்டு சிலர் லிப்ஸ்டிக்கும் ,பேகும்மாக வேலைக்கு போவதை பார்த்த போது...அவர்களிடம் தனக்கு ஏதாவது வேலை இருந்தால் சொல்ல சொல்லி இருந்தாள்....இரண்டு நாளில் வேலை கிடைத்தது.... முதலில் ஐடி அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்தாள்...பெண்களின் ஹெண்ட் பேக்,பெண்டிரைவ்,கேமரா செல்போன் போன்றவற்றை செக் செய்து ஆபிசுக்குள் அனுப்பும் வேலை...

ஒரு மதிய சாப்பாட்டின் போது அவளின் அண்ணன் போல் எல்லா கதையும் கேட்ட செக்யூரிட்டி சீப் ஆபிசர்... அத்தானாக அணைக்க ஆசைப்பட....செருப்பாள் அடித்து அந்த வேலையை உதறினாள்....அதன் பிறகுதான் இந்த ஹவுஸ் கீப்பிங் வேலை கிடைத்தது...

முதலில் உவ்வே வாக இருந்தது...இரண்டு மணி நேரத்தில் ஓடி விடலாமா? என நினைத்தாள்.... தன் மகளை படிக்க வைக்க இந்த வேலையை அவள் பெரிதும நம்பினாள்... காரணம் நிலையான வருமானம்...இந்த வேலையில் ஆண் ஹவுஸ்கிப்பிங் ஆட்கள் இருந்தாலும்... அவர்கள் டாய்லட் கிளின் செய்வது போன்ற உவ்வே வேலைகளை அவர்கள் செய்வதே இல்லை...

அங்கும் வீட்டு பெண்களை மிரட்டவது போல்...கிரிஜா எழாவது புளோர் டாய்லட்ல அடப்பாம்.. நீ போய் பாரு...செங்கேணி நீ கார்பாங்கிங்ல ஒரு பேமானி வாந்தி எடுத்து வச்சி இருக்கானாம்... அதை சுத்தம் செய் என்று விரட்டிக்கொண்டு இருந்தார்கள்...அவர்கள் பெண்கள் கேட் வாக் போகும் ஹால் மற்றும் அலுவலக அறைகளில் சைட் அடித்தபடி மாப் போட்டு சுத்தம் செய்வதோடு சரி...

முதலில் கிரிஜாவுக்கு இவர்கள் யார் நம்மை விரட்ட என்று கேள்வி வந்தது...ஆனால் ஹவுஸ் கீப்பிங் சூப்பரவைசருக்கு அவர்கள் தினமும் தாக சாந்தி செய்து விடுவதால் ஹவுஸ்கீப்பிங் ஆண்களை எந்த கேள்வியும் சூப்ரவைசர் கேட்பதில்லை... அப்படியே முறைத்துகொண்டாலும்...ஏதாவது சின்ன தவறு இருந்தாலும்...போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்பதால் எந்த கேள்வியும் கேட்காமல் இயந்திரமாய் எல்லா வேலையும் செய்ய பழகிக்கொண்டாள்...

கிரிஜா உள் பாடியுடன் கையைவிட்டு துழாவ அது கைக்கு அகபட்டது... அதை முகம் சுளிக்காம்ல் எடுத்து போட்டு விட்டு பிளஷ் செய்ய இப்போது தண்ணீர் போக அரம்பித்து... பினாயில் தண்ணீர் தெளித்து அந்த இடத்தை ஐஎஸ்ஓ 9001/2008 ஆக மாற்ற நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்துக்கொண்டு இருந்தாள்...


எப்படி வேலை செய்தாலும் இது நொட்டை அது நொள்ளை என்று குற்றம் கண்டுபிடிக்கும் சூப்பரவைசர்ஆணின் அதட்டல் குரூரம் எப்படியும் எட்டி பார்க்கும் என்று தெரிந்தாலும், அலட்சியமாக செய்யாமல் வேலையை ரசித்து செய்தாள்...


ஏன் இப்படி இந்த பெண்கள் இருக்கின்றார்கள்...? படித்தால் புத்தி கழண்டு விடுமா? பணம் கையில் வந்து விட்டால் எல்லாம் மறந்து போய்விடுமா? இதை எப்படியும் ஒரு மனிதன் சுத்தபடுத்துவான் என்று தெரிந்தும் எப்படி இப்படி இருக்கின்றார்கள்?


இது கூட பரவாயில்லை... பிளஷ் டெங்கில் சானிடரி நாப்கினை போட்டுவிட்டு போன கதைகள் எல்லாம் நடந்து இருக்கின்றது...வேலைக்கு வந்த புதுதில் ஒரு குறிப்பிட்ட டாய்லட்டை எவ்வளவு கிளின் செய்தாலும் பினாயில் போட்டாலும் அந்த தூரக் கவுல் மட்டும் போக மறுக்க .... தண்ணிரும் சரியாய்வர மறுத்தது...ராஜி அண்ணனை அழைத்து பார்க்க சொன்ன போது...


டாய்லட்டின் பிளஷ்டாங்கை திறந்து பார்த்தால் அதில் இரண்டு சானிட்டரி நாப்கின்கள் ஊறி கிடந்தது...சட்டென் கையால் எடுத்து போட்டு விட்டு தேவிடியா நாரக்....ங்க என்று சொல்லிவிட்டு சென்றது நினைவுக்கு வந்தது... பிளஷ் டெங்கின் மேல் மூடியை திற்ககலாம் என்பதே அவளுக்கு அப்போதுதான் தெரியும்.....



ஆனால் தன் மகள் அப்படி அல்ல சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்...வீட்டுக்கு விலக்கான நேரங்களில் கீற்று அடைத்த குளியில் அறைக்கு போனால் வர எப்படியும் அரைமணிநேரம் ஆகும் தண்ணிரை அப்படி செலவு செய்வாள்...எப்படி இருந்தாலும் தன் மகளின் சுத்தம் அவளுக்கு பிடித்த ஒன்று....மற்றவர்ககஷ்டங்கள் உணர்ந்து அதற்கு மதிப்பு கொடுப்பவள்....

அம்மா கஷ்டபட்டு குடுப்த்தினை காப்பாற்றுவது தெரிந்து எந்த வெட்டி செலவையும்,ஈஸ்வரி செய்தது இல்லை...ஒரு கடலை மீட்டாய் வாங்க கூட யோசித்து வாங்குவாள்...பணம் எப்போதும் பற்றக்குறை உள்ள குடும்பம் என்பதால் தன் வயதுக்கு கிடைக்கவேண்டிய நியாமான ஆசைகளை ஈஸ்வரி புறத் தள்ளி வளர்ந்தாள்.

அவளின் நேர்மை, படிப்பில் அவள் காட்டிய அக்கறை போன்றவற்றை பார்த்து கிரிஜா சந்தோஷபடாத நாளே இல்லை... அதனாலே பள்ளியில் லீடராய் இருந்தாள்...தன் மகள் பெரிய படிப்பு படிக்க வைத்து, நடந்து போகும் போது நாலு பேர் மதிக்கும் அளவுக்கு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று கடவுளிடம் அனுதினமும் கிரிஜா வேண்டிக்கொண்டாள்...

இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு இத்தனை அவமானங்கள் சகித்துக்கொண்டு வாழ்வது எல்லாம் தன் ஒரே மகளுக்காகதான்...ஐடி கம்பெனி என்பதால் இரண்டு நாள் லீவ்... திங்கள் கிழமை தனது மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு வந்தாள்...

வெள்ளிக்கிழமை பிளஷ் சரியயாக செய்த காரணத்தால் காய்ந்து போன மலத்தை கழுவ ஹேர்பிக் போட்டு, பத்து நிமிடம் காத்து இருந்தாள்...பிரஷ் எடுத்து நன்றாக கழுவினாள்.... அவளோடு வேலை செய்த இரண்டு பெண்கள் வேலைக்கு வராத காரணத்தால் அவளுக்கு அன்று பெண்டு நிமிரும் வேலை இருந்தது....

மதியம் சாப்பாட்டுக்கு மூன்று மணிக்கு உட்கார்ந்தாள்... முன் தினம் வைத்த மீன் குழம்பை ஊற்றி சாதத்தை கிளறி வாயில் வைக்கும் போது ஹவுஸ்கிப்பிங் அறையின் இன்டர்காம் ஒலித்தது...

கிரிஜா உடனே ஆபிஸ் ரூமுக்கு வா.. உங்க பொண்ணு படிக்கற ஸ்கூலில் இருந்து ஆட்கள் வந்து இருப்பதாக சொல்ல... ஆபிஸ் ருமுக்கு போகும் போது...ஈஸ்வரியின் பள்ளி ஆசிரியர் பதட்டத்துடன் இருப்பது தெரிந்து...கண்களில் நீருடன் ஈஸ்வரி மதியம் இரண்டு மணிக்கு தூக்கில் தொங்கி இறந்து விட்டதாக சொல்லபட்டது...கிரிஜா மூச்சு பேச்சு இல்லமல் கீழே விழுந்தாள்...

டூருக்கு போவதற்காக பிள்ளைகளிடம் வாங்கிய ரூபாய்களை ஈஸ்வரியிடம் கொடுக்க சொல்லி இருந்தாள் அவள் வகுப்பு ஆசிரியை...இரண்டு நாட்களில் சேர்த்த ரூபாய்1500ஐ இன்டர்வெல்லலில் யாரோ ஒரு மாணவன் மொத்த பணத்தையும் திருடி விட..சாப்பாட்டின் போது பணம் திருடு போன விஷயம் தெரிந்து... டீச்சர் ஈஸ்வரியை சத்தம் போட...

அவளின் நேர்மை அவள் மனசாட்சியை அரிக்க, அம்மாவின் கஷ்டம் நினைவுக்கு வந்து தொலைக்க...சில நாட்களுக்கு முன் டிவி சீரியலில் இக்கட்டான நேரத்தில் ஒரு பெண் தூக்கில் தொங்கும் காட்சி நினைவுக்கு வர...ஒரு மணி நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்து தன் தாவணியால் பெண்கள் கழிவரையில் தூக்கில் தொங்கினாள் ஹவுஸ்கீப்பிங் கிரிஜாவின் வாழ்வின் ஒரே நம்பிக்கை பெண் ஈஸ்வரி...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம் அமைச்சரே...


குறிப்பு...

எல்லோரும் அலட்சியமாக பார்க்கும் இது போலான விளிம்புநிலைமனிதர்களிடத்தில் நான் எப்போதுமே என் அன்பை அதிக அளவில் வெளிபடுத்துவேன்... நானும் விளிம்புநிலை மனிதனாக இருந்தவன் என்பதால்....அவர்கள் எப்போது என்னை பார்த்தாலும் என்னை கொண்டாடுவார்கள்...நலம் வீசாரிப்பார்கள்...

மாத கடைசியில் பெண்ணின் படிப்புக்கு கடனாய் என்னிடத்தில் 100,200 வாங்குவது உண்டு... மாதம் பிறந்ததும் அந்த பணம் நேர்மையாய் எனக்கு கிடைத்துவிடும்... நாளும் கிழமைகளில் நான் பணம் கொடுத்து இருக்கின்றேன்...

கிரிஜாவின் மகள் சாவுக்கு போனேன்.. பணத்தை ஈஸ்வரியின் மாலை போட்ட படத்துக்கு கீழே வைத்த போது....ஐயோ ஐயா.. என் பொண்ணு கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து ஆசி சொல்லி பணம் ஓதுவிங்கன்னு நினைச்சனே... இப்படி அநியாயமாக அவசரபட்டுவிட்டாளே.... என்று பெருங்குரல் எடுத்து மார்பில் அடித்துக்கொண்ட சத்தம் என் காதில் இன்னமும் கேட்டுக்கொண்டு இருக்கின்றது....


உண்மையில் கிரிஜாவுக்கு இன்னொரு பெண் குழந்தை இருக்கின்றது... அதே வேலை... ஈஸ்வரி மேல் வைத்த நம்பிக்கையை இரண்டாவது பெண் மேல் வைத்து காலம் தள்ளுகின்றாள்..

இந்த கதையை படித்த ஏதாவது ஒரு பெண் அல்லது ஆண் டாய்லட்டில் குப்பை போடாமல் இருந்தால்... அல்லது போடும் போது இந்த கதை நினைவுக்கு வந்தால் பல கிரிஜாக்களின் வேலைபளு நிச்சயம் குறையும்....அவர்களும் மனிதர்கள்தான்...

ராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்


மணிரத்னம் சார் பெரிய டைரக்டர் அவருக்கு கண்டனத்தை முதலிலேயே சொல்லிவிடுவது அவ்வளவு நல்லது இல்லை கடைசியில சொல்லறேன்...நீங்களும் உடனே கிழ போய் படிக்காம நிதானமா படிச்சிட்டு அப்புறம் கீழ போய் பாருங்க......

==================

ராவணன் பெரிய ஏதிர்பார்பை ஏற்படுத்திய படம்.. விண்ணைதாண்டிவருவாயாவுக்கு பிறகு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து டிக்கெட் வாங்கி முதல் நாளில் பார்க்க அலையும் ஏ சென்டர் மக்கள்...இரண்டு நாட்களுக்கு முன்பே மிட் நைட் 12மணியிலிருந்து ஒரு மணிக்குள்...மூன்று நாட்களுக்கு டிக்கெட் ஹவுஸ்புல் ஏன்று இன்டர்நெட்புக்கிங்கில் காட்டியபடம்.... ஒரு பெண்ணின் அளுமை என்பது என்ன? ஒரு பெண்ணை எதற்கு பிடிக்கும்? அழகா?அல்லது அந்த பெண்ணின் ஆளுமையா? அறிவா? தைரியமா? ஒரு ஆணுக்கு இது போலான ஏதோ ஒரு விஷயத்தில் ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது.. ஒரு பெண் மிக தைரியமாக இருப்பது ஆணுக்கு மிகப்பெரிய கலக்கம் என்றாலும் அது போலான பெண்களைதான் ஆணுக்கு பிடிக்கும்...தசரத சக்ரவர்த்தி போரில் இருக்கின்றார்..தேரின் கடையானி கழண்டு விடுகின்றது... தேர் குடை சாய்தால் அவர் போரில் தோற்றுவிடுவார்...கைகேயி அங்கு இருக்கின்றாள்...கடையானி கழண்டு விடுவதை பார்த்து விடுகின்றாள்... எதை பற்றியும் யோச்சிக்கவில்லை.. சட்டென தன் கையை கடையானிக்கு பதில் நுழைத்து தேர் குடை சாயமல் காத்து போரில் தசரதன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கின்றாள்.... உடனே தசரதனும் நெகிழ்ந்து எந்த வரம் வேண்டுமானாலும் கேள் ? என்று வாக்கு கொடுக்க மிக முக்கிய காரரணம் கைகேயின் தைரியம்... 17mபேருந்தில் சில்மிஷம் செய்தவனை எதைபற்றியும் கவலைபடாமல் செருப்பால் அடித்த அந்த முகவரி தெரியாத பெண்... காவல்துறை உயர் அதிகாரி லத்திகாசரன்... இப்படி தைரியமான பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்.... அடிதட்டு மக்களுக்காக எதையும் செய்யும் ஒருவன்... ஒரு பெண்ணை கொலை செய்ய... துப்பாக்கியை நெற்றி நோக்கி நீட்டும் போது, கெஞ்சாமல் அவனிடம் வீரமாக பேசும் பெண்ணை.. அதுவும் பயமே இல்லாமல் இருக்கும் பெண்ணை ஒரு அணுக்கு பிடித்து போவது இயல்பான விஷயம்...அதுமட்டும இல்லாமல் மலை அருவியில் இருந்து கொஞ்சமும் யோசிக்காமல் குதித்து வைத்தால்...அந்த பெண்ணின் தைரியத்தின் மீது கொஞ்சம் மதிப்பு வரும் அதுவே அந்த பெண் பேரழகு என்றால்....அவளுக்கா எதையும் மணம் செய்யதுணியும் அல்லவா...? அப்படிபட்ட ஒருநாட்டுபுரத்தானின் கதை...

ராவணன் படத்தின் கதை என்ன?


மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடும் விரா (விக்ரம்) உரிமைக்காக போரடுவது என்பது அதிகாரவர்கத்தின் நெற்றியில் துப்பாக்கி வைத்து கேள்வி கேக்கும் விஷயம்...எப்போதுமே அதிகாரவர்கம் உரிமையை கொடுக்காமல்.... எப்படி துப்பாக்கி தூக்கலாம்? என்று கேள்வி மட்டும கேட்கும்... அதிகாரவர்கத்தின் ஆளாய் வீராவின் கொட்டத்தை அடக்க வரும் தேவ் (பிருத்திவிராஜ் ) ஆண்டு ஆண்டுகாலமாய் அதிகாரவர்கத்தினர் செய்யும் அதே காரியத்தை அதாவது வீராவை பிடிக்க அவளது தங்கை வெண்ணிலா(பிரியாமணி) காவல்துறையினரால் வன்புனர்ச்சி செய்யபடுகின்றாள்... அதற்கு காரணமான பிருதிவிராஜின் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்) கடத்தி அவளை கொலை செய்து இழப்பின் வலியை உணர்த்த நினைக்க... ராகினி அழகு விராவை இம்சை அடைய செய்கின்றது...கடத்திய மனைவியை மீட்க போராடம் கணவன்... கடத்திய பெண்ணின் மீது காதல் கொண்ட வீரா?முடிவு என்னவானது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..இப்படியும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதலாம்... அல்லது கீழே இருப்பது போலவும் எழுதலாம்... ராவணன் படத்தின் கதை என்ன? இராமாயனம் கதை எல்லோருக்கு தெரிந்த காரணத்தால்... பிருத்திவிராஜ்...ராமன் விக்ரம்..................ராவணன் பிரபு.......................ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் கார்திக்..................அனுமன் பிரியாமணி .......சூர்பனகை என்று சொல்லமுடியாது...நவீன ராவணனின் நல்ல தங்கை....இந்த அடிப்படை ஒன் லைனை வைத்துக்கொண்டு ராமயணத்தின் கதையை நவீன படுத்தி நாட்டு நடப்புகளை சேர்த்து எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் மணிரத்னத்தின் ராவணன்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில... விக்ரம் இந்த படத்தில் வீராவாக வாழ்ந்து இருக்கின்றார்... ஆனால் நிறைய படங்களில் கத்தி பேசி நடித்து இருப்பதால் இனி வரும் படங்களில் கவனம் தேவை...கோடு போட்டா பாடலில் ஆடும் ஆட்டம் அற்புதம்...அதே போல் அருவியில் சறுக்கிய படி விழுவது... காரணம் விக்ரமுக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விபத்தில் காலில் ஆப்ரெஷன் செய்யபட்ட கால் அவருடையது... அந்த காலோடு வழுக்கு பாறையில் வழுக்குவது விக்ரமின் அற்பணிப்பு... பிருத்திவிராஜ் போலிஸ் உடையும் அந்த கணீர் குரலும்... செம மேன்லிநஸ்...ஐஸவர்யாவோடு படுக்கையில் புரண்டு நெஞ்சில் கை வைத்து படம் பார்க்கும் எல்லோருக்கும் வியிற்று எரிச்சலை இலவசமாக கொடுக்கின்றார்(எதற்கும் ஈனோ வாங்கி கொண்டு போங்கள்) பிரபு பல வருடங்களுக்கு பிறகு திரையை ஆக்ரமிப்பு செய்து இருக்கின்றார்...விக்ரமின் சகோதரர் பாத்திரம்..இவருக்கு மனைவி ரஞ்சிதா.. கொடுத்த பாத்திரத்தை இருவரும் நன்றாக செய்து இருக்கின்றார்... ரஞ்சிதாவுக்கு ஒரு டயலாக் கூட இல்லை... அது போலான சூழ்நிலை என்று நினைக்கின்றேன்...... கார்திக் சில காட்சிகளில் சோபித்தாலும் பல காட்சிகள் மனதில் நிற்க்க மறுக்கின்றார்.. இருந்தாலும் இந்த ரீ என்ட்ரியை வரவேற்கலாம். ஐஸ்வர்யாராய்... இந்த படத்தின் பெரும் பலம்...மனுஷி சொன்ன இடத்தில் எல்லாம் வெற்று பேப்பரில் கையெழுத்து போடுவது போல் என் எதற்கு என்று கேட்காமல் காடு லோக்கேஷன்களில் நடித்து கொடுத்து இருக்கின்றார்...ஜசுக்கு இந்த படம் ஒரு மைல்கல்.. எந்திரனை விட இந்த படத்தின் உழைப்பை எப்போதும் ஐஸ் பெருமையபக சொல்லி கொள்ளலாம்...எல்லா காட்சிகளிலும் மார்பு தெரிகின்றது... கண்கள் பேசுகின்றது.. உடம்பு வில்லாக வலைகின்றது... குருநாதர் படம் என்ற டெடிகேஷன் தெரிகின்றது....வயது முதிர்ச்சி சில காட்சிகளில் தெரிகின்றது... மிக முக்கியமாக தண்ணீரில் ஐசு படுத்து இருக்கும் போது எதிரில் கல்லில் நிற்க்கும்... விக்ரமின் கல்லை தட்டிவிட்டதும் விக்ரம் ஐஸ்மேல் பேலன்ஸ் தவறி நெடுஞ்சான் கிடையாக விழும் போது விக்ரமின் மீது படாமல் மேல்ல மேலே எழும் போது ஐஸ் கொடுக்கும் ரியாக்ஷன் சான்சே இல்லை.... படத்தின் ஒயிப்பதிவாளர்கள் மணிகண்டன் மற்றும் சந்தோஷ்சிவன் உழைப்பு எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...கூடுமானவரை டாப் லைட்டில் ஷுட் செய்வதை தவிர்த்து இருக்கின்றார்கள்... அப்போதுதான் காட்டின் அந்த ஈரப்பதத்தை பார்வையாளன் உணர முடியும் என்பதால் ஹார்ஷ் லைட் ஒரு 30 ஷாட்டுகளில் மட்டுமே வரும்....


டுவலைட் ஷாட்டுகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள்...எல்லா காட்சியிலும் சாரலும் பனியும் வியாபிக்கின்றது..காலை ஐந்தரையில் இருந்து ஒன்பது மணிக்குள்ளும் மாலை 4மணியில் இருந்து ஆறு மணிவரையும் பெரும்பாலான காடு சம்பந்தபட்ட காட்சிகள் ஷுட் செய்து இருக்க வேண்டும்...
இந்த படத்துக்கு ஸ்பெஷல் மைக்கேரா லென்ஸ் யூஸ் செய்து இருக்கின்றார்கள்.... படத்தின் பிரேமிங்குகள் காடுகளையும் மனிதர்களையும் அழகாக காட்டி இருக்கின்றார்கள்.... முக்கியமாக ஐஸ்வர்யா பிருத்திவிராஜ் இன்டோர் சீன் விளம்பர படம் போல் எடுக்கபட்டு இருக்கின்றது... இந்த படம் மிகப்பெரிய ஆர்டிஸ்ட்டுகளை வைத்துக்கொண்டு மூன்று மொழிகளில் எடுக்கபட்ட படம்...பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படம் பிடிக்கபட்டு உள்ளன.... அதுவும் செட்டுகள் அற்புதம் குறிப்பாக ஆற்றில் இருக்கும் சாமி சிலையும்.. கோடு போட்டா சாங்குக்கு ஆற்றில் நடுவில் போட்டு இருக்கும் செட் அற்புதம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யபட்டு இருக்கின்றது... ராஜ்டிவி இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை 5 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கோடம்பாக்கம் பட்சி சொல்கின்றது.... உலகமே அறிந்த ஒரு இதிகாச கதையை கையில் வைத்துக்கொண்டு...

அதில் தற்கால நாட்டு நடப்புகளை சேர்த்து கதையை சற்றே விறுவிறுப்பாககவும்.. கொஞ்சம் அயர்ச்சியாகவும் சொல்லி இருக்கின்றார்.... எல்லோருக்கும் இந்த கதை தெரிந்த விஷயம் என்பது படத்தின் பெரிய பலவீனம்...
ஜேம்ஸ் கேமரோன் டைட்டானிக் என்று முன்பே எடுத்த படத்தையும் எல்லோருக்கும் தெரிந்த டைட்டானிக்கின் முடிவையும் வைத்துக்கொண்டு...மிக சுவாரஸ்யமாக திரும்பவும் எடுத்து வெற்றி பெற்றார் காரணம் அந்த படத்தில் அடிப்படையில் இருந்த அந்த காதல் பார்வையாளனை கட்டி போட்டது.... அதுவும் இல்லாமல் ரொம்பவும் டிடெய்லாக சொல்லபட்ட திரைக்கதை... இந்த படத்தில் அது போலான நெஞ்சை நெகழவைக்கும் எந்த விசயமும் இல்லை... இந்த படத்தை ஐஸ்வர்யாராயின் அழகுக்காக நிச்சயம் பார்க்கலாம்...


ஆனால் கிளைமாக்சில் உருக்கமாக பேசும் வசனத்தின் போது முக்கால் வாசி மார்பு தெரியும் போது அந்த காட்சியின் கணத்தை பார்வையானன் உணராமல் வேறு கணத்தை பார்வையாளன் அளப்பது அந்த சீனுக்கான சறுக்கல்...
பிரியாமணி தன் கற்பிழந்த கதையை அழுதவாறு சொல்ல அதற்கு மேல் அதனைகேட்க பிடிக்காமல் விக்ரம் வாய் முடுவது அழகு....



படத்தின் வசனங்கள் சுகாசினி மணிரத்னம் சில இடங்களில் கைதட்டல்களை அள்ளினாலும்... ஐஸ் சாமியிடம் வேண்டும் போது கெட்டவங்களை கெட்டவங்களாகவே கட்டவேண்டும் என்ற வசனம் பெரிய அபத்தம்.....கெட்டவன் அவன்தரப்பு நியாங்களை சொல்லவே கூடாதா?...முதலில் அவர்களை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ராகினி பாத்திரம்...அதன் பிறகு விக்ரமை சூட்டுக்கொள்வதை தடுப்பது போலத்தான் மேட்டுக்குடியினரின் வாழ்க்கை மற்றும் பார்வை...



எல்லாரையும் நல்லவர்களாக காட்ட முயற்ச்சித்து இருப்பது எவர் மீதும் பார்வையாளன் ஒட்டாமல் இருப்பது மிகபெரிய குறை... இந்தி மார்ககெட்டை மனதில் நிறுத்தி எடுத்த காரணத்தால் எல்லா இடத்திலும் நேட்டிவிட்டி மிஸ்சிங் அதிகம்....

ஐஸ் பசியில் இருக்க... பிரபு வந்து சாப்பாடு வைத்து விட்டு போக.. சாப்பாட்டை வாரி எடுத்து தின்னாமல் நளினமாக சாப்பிடுவது உச்சகட்ட கமெடி

பாடல்கள், பின்னனி இசை அற்புதம் ... படம் முடியும் போது ரகுமான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒரு பாடல் பாடி இருக்கின்றார்...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்....


Directed by Mani Ratnam
Produced by Mani Ratnam Sharada Trilok Written by Mani Ratnam Suhasini Maniratnam Starring Vikram Aishwarya Rai Prithviraj Karthik Prabhu Priyamani Music by A. R. Rahman Cinematography V. Manikandan Santosh Sivan Editing by A. Sreekar Prasad Studio Madras Talkies Distributed by BIG Pictures Sony Pictures Release date(s) 18 June 2010 Running time 127 mins Country India Language Tamil Budget INR 120 crores


மாயாஜல் தியேட்டர் கலட்டா....

நான் நேற்று சங்கம் தியேட்டரில் 3 மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்து இருந்தேன் .. காலையிலேயே மணிஜி போன் மாயாஜலில்ல டிக்கெட் இருப்பதாக சொல்ல. நான் வண்டியில் மனைவியை அழைத்து போய் ஆபிசில் விட்டு விட்டு ஓஎம் ஆர் ரோட்டில் அவசரமாக போய் கொண்டு இருக்கும் போது....200சீசீ பைக்கில் சிறு கட்டம் போட்ட பனியனை போட்டுக்கொண்டு வாயில் பிரஷ்வுடன் பெண்கள் போய் கொண்டு இருக்கும் வண்டிக்கு பக்கத்தில் போய் கர்ணகொடுரமான ஹாரன் அடித்தபடி அந்த எருமை சென்று கொண்டு இருந்தது...



மாயாஜல் தியேட்டருக்கு காலை பத்துமணிக்கெல்லாம் சைதாபேட்டை கோர்ட்டுக்கு அழைத்து போவது போல் முகத்தை மூடியபடி பல பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் வந்து இருந்தார்கள்...
தியேட்டரில் எந்த கமெண்டும் இல்லாமல் படம் பார்த்தார்கள்...

ரஞ்சிதா திரையில் வரும் போது மட்டும் சத்தம் போட்டார்கள்....
எவ்வளவு சீக்கிரமாக போயிம் 15 நிமிட படத்தை தவறவிட்டேன்... இருந்தாலும் அங்கிருந்து நேராக சங்கம் போனேன்.... ========================

சங்கம் தியேட்டர் கலாட்டா....

சங்கம் தியேட்டரில் வண்டி டோக்கன் பத்து ரூபாய்க்கு கொடுத்தார்கள்...
காதலுக்கு இப்போதுதான் எண்ட்ரி ஆகி இருக்கும் ஜோடி போல் தெரிகின்றது... அந்த பையனும் அந்த பெண்ணும் ரொம்பவே பயந்து போய் இருந்தார்கள்... அவன் தைரியதான இருந்தாலும் இவள் பயந்து அவனையும் பயமுறித்திக்கொண்டு இருந்தாள்... அந்த பெண் கிராமம் என்று நினைக்கின்றேன் பரபரப்பாய் வண்டிக்கு டோக்கன் போடுவதை ரொம்பம் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தது... கல்லூரியில் இருந்து கட்டு அடித்து விட்டு வந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது.. வந்த பெண்களில் எல்லோரும் சென்னையிர் பன்றிகாய்சல் வந்தது போல் கர்சிப்பால் முகத்தை முடியபடி தங்கள் அடையாளத்தை தொலைக்க முயற்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள்..


தியேட்டரில் செம்மொழி பாடல் பேடும் போது அதுக்கு பயங்கர விசில் அடித்து தங்கள் வரவேற்ப்பை கொடுத்தனர்... முக்கியமாக ரகுமான் வந்த போதும் சுருதிஹாசன் வந்த போதும் தியேட்டரில் ஒரே விசில் சத்தம்...


நிறைய கல்லூரி பெண்கள் வந்து இருந்த காரணத்தால் நிறைய எக்சாக்ட்லி,வாவ்,ஃபன்னி,ரெடிகுலஸ் போன்றவை வலுக்காட்டாயமாக பேச பயண்படுத்தபட்டன....


ரஞ்சிதா வரும் காட்சிகளில்... சுவாமி என்ன பன்றார்? எப்படி இருக்கார் போன்ற ரஞ்சிதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் திரையை பார்த்து கேட்கபட்டன...



முதல் காட்சியில் ஒரு பெண் பச்சை ரவிக்கையில் பெருத்த மார்புடன் வர.. ஒரு 30 செகண்டுக்கு என்ன பேசினார்கள் என்பதே தெரியவில்லை...
ஐஸ்வர்யா மார்பு தெரியும் காட்சிகளில் பயங்கர விசில் சத்தம்...

பிரியாமணி தன்னை கெடுத்ததாக சொல்லும் காட்சியில்...முத்தழுகு உன்னை ஏன் எல்லா படத்துலயும் பொரட்டி பொரட்டி எடுக்கறாங்க...என்ற குரலுக்கு தியேட்டரில் குபீர் சத்தம்..


மாஸ்க்கோவின் காவேரி டிரைலர் போட்டர்கள் அவசியம் அந்த படத்தை பார்க்க வேண்டும் அவ்வளவு அற்தமாக டிரைலர் கட் செய்து இருந்தார்கள்...

படம் முடிந்து போகும் போது யாரும் எதுவும் பேசவில்லை... =======================

ராவணன் ...தெரிந்த கதை என்றாலும் அந்த உழைப்புக்காக ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்...


================

டைரக்டருக்கு கண்டனம்...


ஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா?
முக்கியமா அந்த பள்ளத்துல இருக்கும் ஜஸ் தப்பிக்கவிழுதை பிடித்துக்கொண்டு மேலே ஏற முயற்ச்சிக்க... விழுது அறுத்துக்கொண்டதும் அதில் அப்படியே தொபக்கடீர்னு விழுந்து விட்டு.... பாறை பிடிப்புகளை மட்டும் பிடித்து தனியாக ஏறும் அந்த காட்சியில் நான் அப்படியே பதறிபோயிட்டேன்...ஏதோ நம்ம வாலிப பசங்க டயர்டா தூங்க அந்த புள்ளயும் ஒரு காரணம் அப்படின்றதை மறந்துடாதிங்க..... நீங்க எல்லாம் கண்டனம்னு ஏதேதோ நினைச்சிகிட்டு வந்தா நானா பொறுப்பு......


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேர் படிக்க ஓட்டு போடுவது முக்கியம் அமைச்சரே....

குறிப்பு...
நேற்று காலையே படம் பார்த்து விட்டேன்... எழுதி இன்னும் கொஞ்சம் முடிச்சிடலாம்னு நினைச்சு... இன்னைக்கு காலை ஏங்க ஏரியாவில கரண்ட் கட்...அதான் இவ்வளவு லேட்.. இது கூட நண்பரின் வீட்டில் இருந்து வலையேற்றுகின்றேன்....பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க...

ரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்தும் கார் ஓட்டிகள்...(பகுதி/3)

1990களில் இருந்த வாகன பெருக்கத்துக்கும்...2010ம் ஆண்டில் உள்ள வாகன பெருக்கத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியச்த்தை காணலாம்.. காரணம் ரொம்ப சிம்பிள்... பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால்,படித்தவர்களின் தனிநபர் வருமானம் உயரத்தொடங்கியது....

இதனால் இந்தியாவில் கார் சந்தை மற்றும் இரண்டு சக்கர வாகன சந்தை ஆக்கிரமித்தது...லோன் ஈசியாக கிடைப்பதாலும்...நடுத்தர வகுப்பினர் இப்போது கார் வைத்து இருப்பது இரு சக்கர வாகனம் வைத்து இருப்பது போல் ரொம்ப சாதாரணவிஷயமாகிவிட்டது....நடுத்தர வகுப்பினர் கார் வாங்குவதும் அதனை பயன்படுத்துவதும் இங்கு வயிற்று எரிச்சல் கொடுக்கும் விஷயமாக அதை சொல்லவில்லை.....

நம்மதமிழ்நாடு அதுவும் சென்னை வெயிலின் கொடுமை இந்த முறைஅதிகமாகவே இருந்தது...எப்போதும் பரபரப்பாய் இருக்கும் சென்னை அண்ணாசாலை மதியம் இரண்டு மணிக்கு வெறிச்சோடி இருந்ததே இதற்கு சாட்சி...அதுவும் சிக்னலில் நின்றுவிட்டால் கேட்கவே வேண்டாம்... நரகத்தின் எண்ணெய் சட்டியில் விழுந்து எழுந்தது போல் இருக்கும் ... அதில் டுவீலர்காரர்கள் பாடு படுதிண்டாட்டம்தான்...அதில் ஹெல்மெட்வேறு....தலை அப்படியே அவிந்து விடும் அளவுக்கு புழுக்கம் இருக்கும்....அப்படி அவஸ்தையில் இருக்கும் இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கு பெரிய டார்சர் புதிதாய் கார் வாங்கிசெலபோனில் பேசிய படி கார் ஒட்டும் நம்மவர்கள்...

சென்னையில் பெரும்பாலான வாகன போக்குவரத்தின் பெரிய பிரச்சனை என்னவென்றால்.. அதில் ஆட்டோவும் காரும் பிரதான பங்கு வகிக்கும்... கார் ஓட்ட தெரியாமல் பயத்துடன் புது காரில் 30க்கு மேல் போகாத பல கார்களை சென்னையில் ஹெவியான டிராபிக்கில் நீங்கள் பார்க்கலாம்....ரோடு நன்றாக பிரியாகவே இருக்கும்....

ஒரு சாலையில் வாகனங்கள் தேவையில்லாமல் வேகம் குறைந்து செல்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. எப்படியோ கட் அடித்து சைடில் புகுந்து முன்புறம் போய் பார்த்தால் சாலை ரொம்பவும் பிரியாக இருக்கும்.. பட் அந்த கார் அந்த இடத்தில் போதுமான வேகம் இல்லாமல் போய்கொண்டு இருக்கும் ...

அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால்... புல்லாக ஏசி போட்டு கருப்பு கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு பின்புறம் வரும் வாகனத்தின் ஹாரனை காதில் போட்டுக்கொள்ளாமல்... ரொம்ப ஸ்டைலாக சுவரஸ்யமாக செல்போனில் பேசியபடி காரை ஒட்டிக்கொண்டு இருப்பதை நீங்கள் அந்த காரை கடக்கும் போது பார்க்கலாம்...

இந்த பதிவை படித்த பிறகு சென்னையில் டிராபிக் ஆகும் இடங்களில் நீங்கள் இதை கவனிக்கலாம்...நிச்சயம் கார் டிரைவர் செல்போனில் பேசிபடி செல்வது ஒரு காரணமாகும்.....அவர்களை பொறுத்தவரை காரில் கண்ணாடி ஏற்றி ஏசி போட்டுவிட்டால் அவர்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை.. அவர்கள் அவர்கள் செல்போன் பேச்சு...

புதுகார்வாங்குபவர்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகம் என்பதால்... அவர்களுக்கு கார் இப்போதுதான் புதியது... அது ஏற்படுத்தும் பிரச்சனைகள் அவர்கள் அறிய வாய்ப்பு இல்லை...

இரு சக்கர வாகனத்தில் கார் கதவின் பக்கம் போகும் போது... எப்போது வேண்டுமானாலும் அது திறக்கும் அபாயம் இருக்கும்....ஒரு கார் டிரைவருக்கு பல வருடத்து அனுபவம் இருக்கும்... கார் நிறுத்தியதும் ரிவர்வீயூ மிரர் மற்றும் சென்டர் மிரரில் பின்புறம் ஏதாவது வாகனம் வருகின்றதா? என்று பார்த்துவிட்டு கதவு திறப்பார்கள்....

ஆனால் புதிதாய் கார் வாங்கி கார்ஓட்டுபவர்களுக்கு அது சாத்தியமில்லை..60கிலோமீட்டர் வேகத்தில் வரும் நீங்கள் கதவு திறந்ததும் அதில் இடித்து சில்லரை வாங்க போவது நீங்கள்தான்... உங்கள் கைவிரல் நன்றாக அடிபட வாய்ப்பு இருக்கின்றது... சட்டென சாரி சொல்லி முகத்தில் ஒரு அக்மார்க் புன்னகையை வைத்துக்கொள்வார்கள்...முக்கியமாக அது போல் தெரியாமல் கதவி திறக்க முக்கிய காரணம் அனுபவமின்மை மற்றும் செல்போனில் பேசியடி சுவாரஸ்யத்தில் பின்புறம் வரும் வாகனத்தை கவனிக்காமல் கதவை திறப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்...

அதே போல் இன்னனொரு விஷயத்தை நீங்கள் கவனித்தால் தெரியும்... இதே போல் ஒரு கார் ரோட்டில் வழக்கத்துக்கு மாறான வேகம் இல்லாமல் ரொம்பவும் ஸ்லோவாக ஒரு கார் சென்னை தெருக்களில் போய்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் டூவிலரில் சைடில் போய் யார் என்று ஆர்வத்தில் பார்த்தால்...

ஒன்று பத்மசேஷத்திரியில் குழந்தையை அழைத்து போக வேலைக்கார பெண்ணை துணைக்கு அழைத்துக்கொண்டு கார் எடுத்து வந்து இருக்கும் பயந்த ஆண்டியாக இருப்பார்கள்... அல்லது ரொம்பவும் வயது முதிர்ந்த ஆணாகவும் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம்....

முக்கியமாக பெண்களாக இருப்பார்கள்...அப்படி என்றால் டிராபிக்கு பெண்கள் கார் ஓட்டுவதுதான் காரணம் என்று கேள்வி கேட்காதீர்கள்... ஈசிஆரில் வந்து வெள்ளி இரவு பாருங்கள்... அந்த பெண்கள் ஓட்டும் வேகம் நரேன் கார்த்திகேயன் கூட அப்படி ஒட்டி இருக்க வாய்ப்பு இல்லை...

இந்த பிராது முழுக்க முழுக்க சரிவர டிராபிக் ரூல்சை மதிக்காத கார் ஓட்டிகளுக்கு மட்டும்... நன்றாக கார் ஓட்டுபவர்கள்.. கார் கதவை கவனமாக திறப்பவர்கள் யாரும் பொங்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்...

டிராபிக்கு ஏற்பட கார்ஓட்டிகள் மட்டுமே பொறுப்பு என்று சொல்லவில்லை சில இடங்க்ளில்... சில நேரங்களில் அவர்களும் ஒரு காரணம் என்று சொல்கின்றோம்..


குறிப்பு...

ராம்ஜி யாஹு.. உங்களுக்காக ராவணன் படத்தின் முதல் நாளில் டிக்கெட் புக் செய்து இருக்கின்றேன்...நாளை மதியம் 3 மணி காட்சி சங்கத்தில் பார்த்து விட்டு முடிந்தால் நாளை மாலை பதிவிடுகின்றேன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம்...

பூர்ணகும்ப, முதல்மரியாதை கேட்கவில்லை...

3 நாட்களுக்கு முன் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரண்டாயிரம் பேருடன் விபத்தில் இருந்து தப்பியது.. அந்த விபத்து ஏற்படாமல் தப்பியதற்க்கு மிக முக்கிய காரணம்....

தகவல் தெரிவித்த கார்டு ராஜசேகரன்

ரயில் டிரைவர்கள் கோபிநாத்,ராஜ்குமார்
முண்டியம்பாக்கம் ரயல் நிலைய அதிகாரி தூக்காரம் ஆகியோர் தங்கள் கடமைகளை திறம் படசெய்தார்கள்... அவர்களுக்கு அரசு ஐந்தாயிரம் வழங்கியது...

கடமை செய்யாத நாட்டில் கடமை செய்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.. அதே போல் இவ்வளவுதான் தொகை கொடுக்க வேண்டும் என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை...

ஐந்தாயிரம் கொடுப்பதற்க்கு பதில் இருக்கவே இருக்கின்றது ஒரு சால்லைவயும் சர்டிபிகேட்டும் என்று எழுதி இருந்தேன்...

ஜாக்கி ஏதோ ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் எழுதி இருப்பதாக... எனக்கு அந்த கட்டுரைக்கு வந்த எதிர் விமர்சனங்கள் சொல்லியது..

அந்த கட்டுரை எல்லா சாதக பாதகங்களையும் அலசியது...நான் அவர்களுக்கு அதை கொடு இதை கொடு என்று சொல்லவில்லை அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றேன்....

பாராட்டுவிழாவுக்கு தமிழ்நாட்டில் சொல்லியா கொடுக்க வேண்டும்..? அது நமது முதல்வரை கேட்டாலே அழகாக சொல்லிவிடுவார்...பெண்சிங்கம் படத்துக்கு பிரியூவிற்க்கு நேரம் செலவிடும் முதல்வர்...மத்திய அரசு கட்டுபாட்டில் இரயில்வே துறையில் அவர்கள் இருந்தாலும்... அந்த விபத்து நிகழ்ந்து இருந்தால் மாநில அரசுக்கு மிக பெரிய தலைவலியை உண்டாக்கி இருக்கும்...அதில் பயணபட்டவர்கள் அனைவரும் நமது மாநிலத்தவர்கள்...

விபத்து தவிர்க்க காரணமாக இருந்த அந்த நால்வரின் குடும்பத்தையும் அழைத்து ஒரு இரவு தேநீர் விருந்து அளித்து இருக்கலாம்... முதல்வரால் முடியவில்லை என்றால் துணை முதல்வர் இருக்கவே இருக்கின்றார்... அந்த குடுமபம் எவ்வளவு சந்தோஷபடும்....

அந்த அங்கீரத்தைதான் நானும் டாக்டர் புருனோவும் தொடர்ந்து கேட்டு வருகின்றோம் ...


எல்லா நாட்டிலும் ஊக்கதொகை என்பது காலம் காலமாக இருக்கும் விஷயம்தான்.. ஆனால் 5000 என்பது மிக குறைந்து தொகை...சிலரின் வாதம் அதை கொடுத்து கொடுத்துதான் அவர்களை கெடுத்து விடுகின்றோம்....அவர்கள் குட்டிசுவராகபோய் வடுவார்களாம்.. இப்ப மட்டும் நாட்டில் பாலாறும் தேனாறுமா? ஓடிக்கொண்டு இருக்கின்றது...

எல்லோரும் படிக்கின்றார்கள்...அப்புறம் எதுக்கு அவர்களுக்குள் ஏகிரேடு பிகிரேடு என்று பிரிக்க வேண்டும்...அப்படி பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு... தினத்தந்தி தூக்க முடியாமல் தூக்கி பத்தாயிரம் ஏன் கொடுக்க வேண்டும்....


சரி கேள்வி கேட்ட அத்தனை புண்ணியவான்களுக்கும் ஒரு கேள்வி...நீங்கள் ஒரு வேலையில் சேர்கின்றீர்கள்... மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்...உங்கள் கடமைக்கு அந்த சம்பளம் என்றால் அடுத்த வருடம் எதற்கு புரோமோஷன் இன்கிரிமேன்ட் எதிர்பார்க்க வேண்டும்... நீங்கள்தான் கடமையை மட்டும் செய்பவர்கள் ஆயிற்றே...பத்தாயிரத்தை பல வருடங்களுக்கு வாங்க வேண்டியதுதானே... எனக்கு அங்கீகாரம் இல்லை என்று ஏன் கம்பெனி மாற வேண்டும்....

பொட்டிதட்டும் உங்களுகே அப்படி என்றால் பலவிலை மதிக்கமுடியாத உயிரை காப்பாற்றியவர்களுக்கான அங்கீகாரம் குறைவு என்பதுதான் என்வாதம்...அவர்கள் நாலவருக்கும்.. ரேட்கார்பெட் வரவேற்ப்பு கொடுத்து, தாரை தப்பட்டை, பொய்கால் குதிரை ஆட்டம்,மாண் ஆட்டம்,மயிலாட்டம், எல்லாம் கேட்கவில்லை

just one cup of coffee with prime minister or chief minister... அதுதான் தட்டிக்கொடுத்தல்...ஆனால் பிரைம்மினிஸ்டர் இந்த பிரேமில் வர வாய்ப்பில்லை... அவரை பொறுத்தவரை தமிழ்நாடு தனி நாடு போலான மனநிலையை கொண்டவர்... இதுவே வடமாநிலத்தில் இந்த சம்பவம் நடந்து இருந்தால் மீடியாக்கள் ஈரை பேனாக்கி,பேனை பெரியவர் ஆக்கி இருப்பார்கள்...ஆனால் தமிழ் நாட்டில் பொதுவாக இது போலான அங்கீகாரம் என்பது குறைவுதான்...

கிரிக்கெட் விளையாடி விட்டு தாயகம் திரும்பினால் கால் கடுக்க ஏர்போர்ட் வாசலில் நின்று வாழ்த்து சொல்வார்கள்...

இரண்டு ஆஸ்கார் வாங்கி வந்தால் கொண்டடுவார்கள்...

மத்திய மந்திரி கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளிநாடு போய்விட்டு வந்தால் ஏர்போர்ட் அல்லலோபடும்...

நடிகரின் புதுபடத்துக்கு முதல்நாளில் இரவில் இருந்து... கொடிகட்டிவிட்டு மறுநாள் பால் அபிஷேகம் எல்லாம் செய்வோம்...கையில் கற்புரம் ஏற்றி திரைக்கு காட்டுவோம்...


முதல்வர் கோபலபுரத்தில் இருந்து கிண்டிக்கு போனாலே அதை வரவேற்க்கவும் அதனை வாழ்த்தவும் எத்தனை மாவட்டமும்,வட்டமும் பாடுபடும்....

முன்னாள் முதல்வர் அவர் கட்சி ஆபிசுக்கு போனாலே அது திருநாள்தான்....

ஆனால் சமயோஜிதமாக செயல்பட்டு பல உயிரை காப்பாற்றியவர்களுக்கு..????? ...


நமதுநாடும் நாட்டு மக்களும் அப்படிபட்டவர்கள்தான்....

நேற்று நண்பர் பாஸ்டன் ஸ்ரீராமோடு பேசிக்கொண்டு இருக்கும் போது இந்த விஷயத்தை பற்றிய பேச்சு வந்தது...

போனவருடம் விமானத்தில் கோளறு ஏற்பட்டு விமானி சாதுர்யமாக அந்த ராட்சத போயிங் விமானத்தை ஆற்றில் இறக்கி எல்லோர் உயிரையும் காப்பாற்றிய விமானியை ஒயிட் ஹவுசுக்கு அவரையும் அவர்குடும்பத்தையும் வர வழித்து.. அவருடன் ஒரு பியருடன் இரவு உணவை எடுத்துக்கொண்டு இருக்கின்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.....

ஒயிட் ஹவுஸ் பக்கம் போவதே பெரியவிஷயம்... அதுவும் அதில் உள்ளே போய் நாட்டின் அதிபருடன் சரிநிகராக உட்கார்ந்து பியர் சாப்பிடுவது என்பது எவ்வளவு புல்லாரிப்பான, மகிழ்வான விஷயம்... அந்த விமானிக்கும் அந்த குடும்பத்துக்கு எவ்வளவு சந்தோஷத்தை அது கொடுக்கும்....அதைதான் நான் இந்த நால்வருக்கும் கேட்கின்றேன்..

ஒரே ஒரு உயிர் ஆழ்கிணற்றில் மாட்டிக்கொண்டாலே... அதனை மீட்க இரவுபகல்பாராமல் ஆண்டவனை வேண்டி அந்த உயிர் காப்பாற்றபட வேண்டும் என்று தொலைகாட்சி முன் காத்து இருக்கின்றோம்.. ஆனால் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு...வெறும் ஐந்தாயிரம் பேஷ் பேஷ் நன்னாருக்கு...இது

எவ்வளவோ அரசுசார அமைப்புகள் இந்தியாவில் இருக்கின்றன...அவைகள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்...


இந்த அங்கீகாரத்தைதான் நான் அந்த நால்வருக்கும் எதிர்பார்க்கின்றேன்...நடக்குமா?

அந்த கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக்கவும்...


அந்த கட்டுரையில் ஒரு 30 பேர் கமென்ட் போட்டு இருக்கின்றார்கள் என்று வைத்துகொள்வோம்....அதில் 3 பேர் மட்டும் உணர்ச்சிவசபடாமல் பின்னுட்டம் இட்டு இருக்கின்றார்கள்...

மற்ற 27 பேரும்... என்னையும் சேர்த்து பார்த்தால்.. நாங்கள் எல்லாம் உணர்ச்சிவசபட்டு இருக்கின்றோம்...

நல்லது இருந்துவிட்டு போகின்றோம்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம்...



சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்18+(15•06•2010)

ஆல்பம்...

எந்த ஒரு விபத்தும் ஒரு பாடம் அதிலிருந்து என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்... எனது பைலட் நண்பி அடிக்கடி சொல்லுவாள்...கோடிக்கணக்கான பொருள் இழப்பை ஏற்படுத்தும் விமான விபத்துகள் ஒவ்வொன்றும் ஒரு படம் என்பாள்... அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அந்த தகவல் எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கபடுமாம்... அது போல ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் எவர் பாதையில் அதிர்வுகளை உணர்ந்தாலும் அலட்சியபடுத்தாமல் எல்லா ரயில் கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்ல வேண்டூம் என்பதை ஒரு அறிக்கையாக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்....
===============
மங்களுர் விமான விபத்தின் கருப்பு பெட்டி துணைவிமானி இறக்க வேண்டாம் என்று சொல்லியும் அந்த செச்சன்யா நாட்டு விமானி இறக்கியது பெரிய தவறு என்று கருப்பு பெட்டி ரிசல்ட் இப்போது சொல்கின்றது... இந்தியாவில் திறமை வாய்ந்த பைலட்டுகள் இல்லவே இல்லையா? வெளிநாட்டு விமானிகள் குடும்பத்தினரை பினைகைதியாக பிடித்து வைத்துக்கொண்டு 9/11ல் நடந்தது போல் இந்தியாவில் எந்த ஆபத்தான கட்டிடத்தின் மீதும் மோத சொன்னால் என்ன செய்ய முடியும்???
====================
மிக்சர்...
வாழ்த்துக்கள்...
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட கேபிளின் சினிமா வியாபாரம் புததகத்துக்கு...
============
ஏஆர் ரகுமான் ஜெய் ஹோ இசைநிகழ்ச்சிக்காக அமெரிக்க ஜரோப்பிப்பிய மண்ணில் கலக்கி வருவதற்க்காக...
=======
நன்றி
தமிழர்கள் எதிர்ப்பை புரிந்து கொண்டு இலங்கையில் நடந்த இந்திய படவிழாவை புறக்கணித்த இந்திய திரைக்கலைஞர்களுக்கு...
=========
இந்தவார சலனபடவிளம்பரம்...
எதுக்கெல்லாம் எப்படி எல்லாம் விளம்பர படுத்தறாங்கன்னு பார்த்திங்களா?



================
இந்த விளம்பர பாடல் டிவியில் வந்தால் இதனுடன் நானும் சத்தமாக பாட ஆரம்பித்துவிடுவேன்... அந்த பிள்ளைகள் உற்சாகம் என்னையும் வந்து தொற்றிக்கொள்ளும்..


=====================
நெகிழவைத்த ஒருமடல்..

Hello Jackie Sekar

How are you and family ? my name is Hari Rajagopalan living with my family in San Francisco, i am really proud to read your blog, especially world movie reviews are great and i have seen all most all movies,keep it up, Also touching writing about road side people life in madras.

If you need any thing from here please let us know , we are planing to visit to India Jan 2010 if time permits like to meet you with my my family.

when you have a time watch and review following great (my favorites) movies.

The pursuit of happiness - Will smith
Jakob the liar - Robin Willimans
Sevan Pounds - Will smith
Ladder 49 - Joaquin Phoenix, John Travolta
Domestic Violence -John Travolta
Panic Room - Judy Foster
Flight Plan - Judy Foster
Life is beautiful
A Beautiful Mind - Russell Crowe
Valkyrie - Tom Cruise
Million dollar baby
Phone Booth
Cellular
Signs

I don't know how to write email in tamil sorry -:)

Take care

Best Regards
Hari Rajagopalan

========================
சூப்பர் போட்டோ....
==============
நான்வெஜ்...

ஜோக்...1


திருமணமாகி பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் தம்பதிகள் அன்று இரவு மனம் விட்டு பேசினார்கள்...

கணவன் என்க்காக என்னவெல்லாம் இதுவரையில் தியாகம் செய்து இருக்கின்றாய்...அதையும் தயங்காமல் சொல்... என்றான்...

அதற்கு மனைவி நீங்கள் எழு வருடத்துக்கு முன் கார் லோன் வாங்கி விட்டு... அடைக்க முடியாமல் தினறிய போது.. வீட்டுக்கு வந்து வங்கியில் இருந்து ஆபாசாமாக கத்தினார்களே... அதற்கு பிறகு அவர்கள் கத்தவும் இல்லை... கார் லோன் பற்றி கேட்கவும் இல்லை... காரணம் என்ன தெரியுமா?

நான் வங்கி அதிகாரியுடன் ஜலபுல ஜங்ஸ் ஆனேன் அதனால்தான்.... அந்த பிரச்சனை சால்வ் ஆனது என்று சொன்ன போது கணவன் நெகிழ்ந்து.. எனக்கா எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்கின்றாய்...? என்று சொல்லிவிட்டு கணவன் கண்ணில் நீர் வைத்துக்கொண்டான்...


அப்புறம்இரண்டு வருசத்துக்கு முன்ன மேனேஜர் போஸ்ட்டுக்கு 5 பேர் முட்டி மோதிய போது...கடைசியாக இருந்த உனக்கு அந்த மேனேஜர் போஸ்ட் எப்படி கிடைத்து? என்று ஒரு நாளவது யோசித்து பார்த்து இருக்கின்றாயா?

உங்கள் எம்டியிடன் நான் ஜலபுல ஜங்ஸ் என்று சொல்லும் போது அப்படியே நெகிழ்ந்து... சமுகத்தில் ஆபிசிலும் எனக்கான மரியாதைக்காக இதை செய்து இருக்கின்றாய் என்று சொல்லிவிட்டு அழுத கண்களுடன். அவள் கைகளை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டான்....


ஒரு மாசத்துக்கு முன்ன கூட நீங்க ஜலோரோக்டரி கிளப் தலைவருக்கு போட்டி போட்டிங்க...28 ஓட்டு இருந்தா நீங்க ஜெயிப்பிங்கன்னு வீட்டுல வந்து பொலம்பனிங்க..... இப்ப இரண்டு நாளாதான் நானே பிரியா இருக்கேன்... என்று சொன்ன போது... அவனுக்கு தலை சுத்திக்கொண்டு இருந்தது....சரி அப்படியே மெயின்டெயின் பண்ணிடலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்த போது அவன் இதயம் வெடிக்கும் அளவுக்கு அவன் மனைவி ஒரு ஆசையை சொன்னாள்....

ஆமாம் இப்ப சட்டசபை எலக்ஷன் வருதே அதுல நீங்க எனக்கா நீங்க நிக்கறிங்களா?

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம்...

என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா...

நேற்றைய செய்திகளில் அதிகம் அடிப்பட்ட விஷயம்...விழுப்பரம் அருகே நடந்த ரயில் பாதை குண்டு வெடிப்பு சம்பவம்...எல்லா சேனல்களும் காட்டியதை திரும்ப திரும்ப காட்டி உயிரை எடுத்துக்கொண்டு இருந்தன..


சேதம் அடைந்த இரயில் தண்டவாளத்தையும் இரண்டு மூன்று பயணிகளின், திக்கி தினறிய பேட்டிகளை எல்லா சேனல்களும் சொல்லி வைத்தது போல் மாற்றி மாற்றி ஒளிபரப்பிக்கொண்டு இருந்தன... என்டா ஒரு விஷயத்தை கொஞ்சம் கூட மாத்தியோசிக்க முடியாதா?


ஆனால் 2000 ஆயிரம் பயணிகள் உயிருடன் இருக்கவும்... இந்த விபத்து தவிர்க்கபட்ட விஷயத்துக்கு இன்னும் கண்ணுக்கு தெரியாத நல்ல உள்ளங்கள் உள்ளன.. அவர்களின் பேட்டியோ? அல்லது அவர்களுக்கான அங்கீகாரமோ இங்கு இல்லைஎன்பதே உண்மை... அவர்கள் யார்....

நைட்டு ஒரு மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு போன ரயில் விழுப்புரத்தை கடக்கும் போது அந்த ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த கார்டுக்கு ராஜசேகரனுக்கு தண்டவளத்தில் வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு அந்த அதிர்வு உணரபட்டது...

உடனே எந்த அலட்சியமும் இல்லாமல் அதனை வாக்கி டாக்கி மூலம் பேரணி ரயில் நிலையத்துக்கு அந்த தகவல் தெரிவிக்கபட,உடனே அந்த தகவல் ரயில் கட்டுபாட்டு அறைக்கும், பக்கத்தில் இருக்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தெரிவிக்கபடுகின்றது...



தகவல் கிடைத்த முண்டியம்பாக்கம் ஸ்டேசன் மாஸ்டர் மலைக்கோட்டை ரயிலை நிறுத்தி அதன் டிரைவரிடம் தண்டவாளத்தில் பெரிய அதிர்வு இருந்தததாக தகவல் கிடைத்து இருப்பதால்.... டிரைவரிடம் 10 கீலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க கேட்டுகெகொண்டு தொடர்ந்து செல்ல அனுமதித்தார்...

மலைகோட்டை ரயில் டிரைவர் கோபிநாத் ராவ் பிரச்சனையை புரிந்து கொண்டு, ரயிலை பத்துகிலோமீட்டர் வேகத்தில் இயக்கிகொண்டு...பாதையை உண்ணிப்பாக கவனித்து வந்த போது ஒரு இடத்தில் 3 அடி தண்டவாளம் இல்லாமல் இருப்பதை பார்த்து உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தி, பெரிய உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் தடுத்து நிறுத்தினார்...

இதெல்லாம் தெரிந்தும் செய்திசேனல்கள்... அவர்களை ஒரு பேட்டி கூட எடுத்து ஒளிபரப்பவில்லை... அதை செய்து இருக்கலாம் என்பதுதான் என் எண்ணம்... இது நமது கோபம் அல்ல....அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்..

இந்த அசம்பாவிதம் நடந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் தெரியுமா?

2000ஆயிரம் பேர் பயணம் செய்ததில் குறைந்தது ஒரு150 பேராவது பலியாகி இருப்பார்கள்...

நடுஇரவில் நடந்து இருக்க கூடிய விபரீதம் ஆகையால் தூக்கத்திலேயே பலர் உயிரை விட்டு இருப்பார்கள்...

நிறைய பயணிகளின் உடல் உறுப்புகள் சிதைந்து நடைபினமாக ஆகி இருப்பார்கள்...

திருமணத்துக்கு தயரான வயது பெண்கள் ரயிலில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்தால்..... சிறு வடு முகத்தில் இருந்தாலே திருமணத்துக்கு ஒதுக்கும் சமுகத்தில் கால் போய், கை போய், கட்டை விரல் போனால் அந்த பெண்கள் நடை பினம்தான்...

நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் சிதைக்கபட்டு இருக்கும்..

இந்த விபத்து நடந்து இருந்தால் மீட்பு பணிக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இருப்பார்கள்...

மலைக்கொட்டை ரயில்.... விபத்தில் உருகுலைந்து ஒரு கோடிக்கு மேலான பொருள் சேதத்தை அரசுக்கு ஏற்படுத்தி இருக்கும்...

மேலே உள்ளபடத்தை கிளிக்கி படித்தால் என் கோபத்துக்கான விஷயம் உங்களுக்கு விளங்கி இருக்கும்.... மதிப்புள்ள உயிர்களையும்.. பல கோடி ரூபாய் சொத்துக்களை காப்பற்றிய அந்த நால்வருக்கும் தலா 5 ஆயிரம் பரிசு பணம் தென்னக ரயில்வே வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது....

எந்த தென்னக ரெயில்வே லவடாவவாதுஅல்லது கருத்து சொல்லும் லவடாக்கள் சொல்லலாம்...

தகவல் தெரிவித்த கார்டு ராஜசேகரன்
ரயில் டிரைவர்கள் கோபிநாத்,ராஜ்குமார்
முண்டியம்பாக்கம் ரயல் நிலைய அதிகாரி தூக்காரம் ஆகியோர் தங்கள் கடமைகளை செய்தார்கள்... அதற்கு ஐந்தாயிரமே அதிகம் என்று.....

நண்பர்களே... இந்தியாவில் யாரும் தங்கள் கடமையை சரியாக செய்வதில்லை... அப்படி செய்து இருந்தால் ஒரே ஒரு தேசாய் எனும் தனிமனிதன் 1500 கோடியும் ஒன்றரை கிலோ தங்கத்தையும் லஞ்சமாக பெற்று சிறுக சிறுக சேர்த்து இருக்க முடியாது.... அதற்கு எத்தனை பேர் கடமையை மீறி இருக்க வேண்டும்?????

இன்றைக்கு தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்தியை படித்து பாருங்கள்... லஞ்சம் வாங்கும் போது கைது செய்யபட்ட அரசு ஊழியர்கள் பட்டியல் கடந்த மாதத்தில் எத்தனை பேர் என்று பட்டியல் இட்டால் மாதாந்திர மளிகை லிஸ்ட் விட பெரிய பட்டியல் கிடைக்கும்...

ஒரு போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு போனால் பத்தில் இருந்து 15 லட்சம் வரை ஜஸ்ட் லைக்தட்டாக கிடக்கின்றது...

ஒரு தலுக்கா ஆபிசில் ரெய்டு போனால் கணக்கில் வராத பணம்20 லட்சத்துக்கு மேல் பிடிபடுகின்றது... அப்படி எல்லோரும் கடமையை செய்து இருந்தால் நம் நாட்டில் லஞ்சம் தலைவிரித்து ஆடி இருக்காது..

இதேல்லாம் விட்டு தள்ளுங்கள் முதியோர் உதவிபணம் வழங்க அதில் கூட லஞ்சம் வாங்கிதான் கொடுக்கபடுகின்றது...

இப்படி கடமையை செய்பவர்கள் அரிதான என் தாய்திருநாட்டில்... அதிலும் அத்தி பூத்தது போல்... எந்த அலட்சியமும் இன்றி... அவர்கள் நால்வரும் கடமை ஆற்றி பெரும் விபத்து தவிர்க்க பட்டு இருக்கின்றது....
அந்த சேலம் ரயிலில் பயணித்த கார்டு ராஜசேகரன்...சற்று கண் அயர்ந்து இருந்தாலோ? அல்லது தனது பர்சனல் விஷயத்தை செல்போனில் பேசும் போது பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த தண்டவாள அதிர்வை புறம் தள்ளி இருந்தாலோ.. இன்று பல பேர் வீட்டில் பாலு ஊற்றி இருப்பார்கள்.,..

அதே போல் அந்த மலைகோட்டை டிரைவர்களிடம் தகவல் தெரிவித்த ஸ்டேசன் மாஸ்டருக்கு சீன் ஆப் கிரைம் என்ன வென்றே தெரியாது.. இருந்தாலும் 10 கீலோமீட்டர் வேகத்தில் இயக்க சொன்ன புத்திசாலிதனம்..

எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று ரயிலை அலட்சியமாக அந்த இரண்டு டிரைவர்களும் ஓட்டி இருந்தாலும் எல்லா குட்டி சுவராக போய் இருக்கும்....

எந்த விஷயத்தை அலட்சியபடுத்தாமல் அவர்கள் கடமையை அதுவும் இந்த காலத்தில் எந்த அலட்சியமும் இல்லாமல் சரியாக செய்த காரணத்தால் அவர்களுக்கு வெறும் 5 ஆயிரம் பரிசு கொடுக்க இருக்கின்றது.. தென்னக ரயில்வே....

கடமையை நொடிக்கு நொடி மீறும் நாட்டில் கடமையை ஒழுங்கா செய்த அந்த நால்வருக்கும் வெறும் இருபதாயிரத்தில் பரிசு கொடுக்க போகின்றது... அந்த 5 ஆயிரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் குடும்பம் நாக்கை கூட வழிக்க முடியாது.. .. அதை கொடுப்பதற்க்கு பதில் இருக்கவே இருக்கு ஒரு சால்வையும்... சர்டிபிகேட்டும்.....

சதாரண சுற்றுலா பேருந்து டிரைவருக்கே சுற்றுலா முடிந்து வீடு வந்து சேரும் நன்றாக விபத்து இல்லாமல் ஒட்டியதற்க்கு ஆளுக்கு 50 போட்டு 50 பேர் மொத்தம் 2500 கொடுப்போம்... ஆனால் இங்கு இரண்டாயிரம் பேர் ...

நல்ல விஷயங்களை தொடர்ந்து உற்சாகபடுத்தினால் இன்னும் நல்லது நடக்கும் என்பது என் சித்தாந்தம்....

மீண்டும் கடமையை ஓழுங்கா செய்தாலும், நேர்மையாக செய்தாலும் அது இந்தியாவை பொறுத்தமட்டில் அது தகுதி இழப்பாக மட்டுமே கருதபடும் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்க பட்டு உள்ளது....அவர்களுக்கு ஏதாவது செய்யனும் பாஸ்..அரசு செவிசாய்க்குமா? அல்லது ரயிலில் பயணம் செய்த இருக்கபட்டவர்கள் அந்த நால்வருக்கும் ஏதாவது செய்வார்களா?
என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா...

புகைபடங்கள் தந்தி பேப்பரில் இருந்து நான் எடுத்தது..
நன்றி தினத்தந்தி

குறிப்பு....
இந்த விஷம செயலை செய்தது யார் என்று இன்னும் தெரியவில்லை...அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... உங்கள் எதிர்பை தெரிவிக்க அரசுடன் மோதுங்கள்...ஆனால் அப்பாவி மக்களின் உயிருடன் ஒரு போதும் விளையாடாதீர்கள்..

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner