நிறைய விளம்பர படங்களில் முன்பு அதிகம் ஒர்க் செய்து இருந்தாலும்... இப்போது எல்லலாம் அப்படி இல்லை....எப்போதாவதுதான் அந்த பாக்கியம் நடக்கின்றது....
எனக்கு சினிமாவை விட விளம்பர படங்கள் மீதான காதல் அதிகம்... காரணம் ஒரு நாள் பரபரப்பான வேலை அது...ஒரே ஒரு ஷாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்...
(விளம்பரத்தின் முதல் ஷாட்)
மொத்தம்10ஷாட்டுகளில் இருந்து 100ஷாட்டுகள் வரை வரும்... விளம்பரங்க்ளில பல வகை இருக்கின்றன...ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் 30 செகன்ட்45 செகன்ட் 60 செகன்ட் என பிரித்து தொரைலகாட்சிக்கு பிரைம் டைம் ரேட்டுக்கு ஏற்றது போல் ஒளிபரப்புவார்கள்...
(பாவாடை தாவாணியில் மாடல் வாணி)
10 செகன்ட் அந்த விளம்பரத்தை கட் பண்ணினாலும் அல்லது 60 செகன்டுக்கு எடிட் பண்ணினாலும் அது அந்த கதையை சொல்ல வேண்டும்.. அதுதான் அந்த விளம்பரத்தின் தலை எழுத்து....
(விளம்பரத்தை இயக்கும் மணி...)
இரண்டு நாட்களுக்கு முன் பதிவர் மணிஜீயோடு பேசிக்கொண்டு இருக்கும் போது... நாளைக்க ஆட் ஷுட்டிங் இருக்கு வரியா? என்றார்.. (ஷாட் பற்றி தனது நண்பருடன் விளக்கி சொல்கின்றார்...)
சரி வருகின்றேன் என்று சொல்லிவிட்டு நைட்டு போன் செய்து எனது கேமராவை எடுத்து வரலாமா? என்று கேட்பதற்குள்... ஜாக்கி நாளைக்கு மற்க்காம உனது கேமராவை எடுத்து வா என்று சொன்னார்...
(ஒரு லாங்ஷாட்)
மொழி படம் எடுத்த மாசிலமணி ஹவுஸ்....சோழிங்கநல்லூர் ஈசிஆர் அருகில் இருக்கின்றது...அங்குதான் விளம்பர ஷுட்டிங்...
விளம்பரம் காஞ்சிபுரம் பச்யைப்பாஸ் சில்க் சாரிஸ் விளம்பரம்...
கேமராமேன் ஒளிப்பதிவாளர்.. ராம்ஜி அசிஸ்டென்ட பிரமோத்...(கேமராமேன் பிரமோத்)
பஞ்சாமிர்தம் என்ற படம் பண்ணியவர்... பசங்க படத்து வாய்ப்பை மயிர் இழையில் தவற விட்டவர்..இயக்கம் மணிஜீ....
பைனான்ஸ்களை எனது மாணவியும் மணிஜீ மகளுமான மூன் கவனித்துக்கொண்டார்..
(மணிரத்னம் போல் மணிஜீ)
பொதுவாக விளம்பரபடங்கள் ரொம்பவும் சைலன்டாக நடக்கும்.. சில கேமராமேன்கள்தான்... தன் காட்சி சரியாக வர வேண்டும் என்று வேலை பார்க்கும் போது....அதில் சில லைட் மேன்கள் வேலை கொஞ்சம் அலட்சிய படும் போது கத்துவார்கள்....இங்கு அப்படி இல்லை ரொம்ப இயல்பாகவே படபிடிப்பு போனது...
(ஒரு டச்ஆங்கிள் ஷாட்)
சட்டென பாவேந்தர் பாரதிதாசன் போல் அப்பா வேடம் போட்டு அருகில் வந்தவரை பார்த்து ஆடி போனேன்... (காலங்கடந்து கிடைத்த சில மணிநேர புது துணையுடன் நம்ம டிவிஆர்)
அவர் தமிழா தமிழா பதிவும் எழுதும் நம்ம டிவிஆர்...தாத்தா வேடத்தில் தன் திறமைகாட்ட வந்து இருப்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது...சரி நம்மளுக்கு ஏதாவது வேஷம் இருக்கான்னு கேட்கலாம்னு பார்த்தா.... நம்ம லுக்குக்குஅடியாள் வேஷம்தான் கிடைக்கும் என்பதால் அமைதியாகிவிட்டேன்...
(போட்டோ ஷுட்டின் போது கிளைன்டுடன்... )
ஷாட்டு இடைவெளிகளில் நானும் டிவி ஆரும் நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்...மனைவியோடு பெசன்ட்நகர் பீச்சுக்கு வரும் போது அவசியம் விட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.. அந்த அன்பு அழைப்பை ஏற்றுக்கொண்டேன்...
(சபிதா ஆனந்... மற்றும் மாடலுடன் ஆண்ணி கேரக்டர் பண்ணியவர்... அவரின் சிரிப்புக்கு நான் ரசிகன்..)
பிரதான மாடல் நடுவில் நிற்பவர் பேர் வாணியாம்... கிங்பிஷர் ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கின்றாராம்.... முக்கியமாக கவனித்து சொல்ல வேண்டிய விஷயம்... சுத்தமாக தமிழில் பேசினார்...தமிழ் மாடல்கள் மறந்தும் கூட தமிழில் பேச மாட்டார்கள்...
(ஷாட் ஓக்கே சொல்ல மானிட்டருடன் மணி... இது வேற மானிட்டர்)
அங்கேயே போட்டோ ஷுட் நடத்தினார்கள்... ஒரு 600 கல்யாணத்துக்கு மேல் போட்டோ எடுத்து இருப்பேன்... ஒரு சிரிப்பு... ஒரு நாணம் இதை எல்லாம் புதுப்பெண்ணுக்கு வர வைத்து போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்...காரணம் அவர்கள் ஒன்றும் புரபஷனல் அல்ல....
(நளினமாய் வில்லாய்....வாணி)
ஆனால் மாடலுக்கு புடவை கட்டி விட்டதும் ஒரு தூணை பிடித்துகொண்டு வில்லாய் நானி, கோனி, வளைந்து, நெளிந்து.... அந்த பெண் கொடுத்த போஸ்கள் இருக்கின்றதே...சான்சே இல்லை...நல்ல டேடிகேஷன் அந்த பெண்...
ஒரு குண்டு பையன்... கேமரா வலம் இருந்து இடமாக கேமரா நகரும் போது, ஓடிவந்து ஒரு பெண்ணின் கையை தட்டிவிட்டு ஓட வேண்டும் ஆனால் அந்த பையன் பயங்கரமாக சொதப்ப... ஒரு நாலுமணிநேரம் வேஸ்ட் ஆனது....அவர்கள் குழந்தைகள் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது....
(குண்டு பையனுக்கும், சின்ன பெண்ணுக்கும் காட்சி விளக்கி நிறைய ஒன்மோர் எடுத்த டாவு கிழிந்த ஷாட்க்கு போராடும் இயக்குனர்மணிஜீ)
காலை ஒன்பதில் இருந்து இரவு ஒன்பது வரை கால்ஷீட் ஆனால் விளம்பரம் நள்ளிரவை தாண்டியது... சரி மறுநாள் எடுத்துக்கொள்ளலாம் என்றால் மணிஜீ தலையில் துண்டைதான் போட்டுகொள்ளவேண்டும்...
(ஒரு குடும்பசீன்...)
இந்த விளம்பரத்தை நான் என் கேமராவில் முதல் முறையாக படம் எடுத்தேன்...இந்த புகைபடங்கள் எல்லாம் வித் அவுட் பிளாஷ் இல்லாமல் ஸ்டேன்ட் இல்லாமல் எடுக்கபட்டவை....
(நான் எடுத்ததில் பிடித்த படம்)
இந்த புகைபடங்க்ளை இன்னும் அழகு படுத்தலாம் ... எனக்கு போட்டோ சாப் இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை... இது அசிங்கம்தான் என்ன செய்வது? யாராவது குழந்தைக்கு சொல்லி தருவது போல் சொல்லிதர ரெடியானால் நான் ரெடி...(புடவை கட்டி சரி செய்யும் கலைஞர்கள்)
மொத்தம் பதினாறே ஷாட் ஆனால் அது எடுத்து முடிக்கும் முன் வாயில் நுரைதள்ளி விட்டது... சினிமாவோ விளம்பரபடமோ தனி நபர் திறமை அல்ல...அது ஒரு கூட்டு முயற்சி... ஆனால் ஒரு திரைப்படம் படம் சரியில்லை என்று எழுதுவது உங்கள் எண்ணம்... ஆனால் ஒரு கலைஞனை விமர்சனம் செய்கின்றேன் என்று சொல்லி குத்தி கிழிப்பது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.....
இரவு வந்து வீட்டில் படுத்தேன் ஏதோ ஒரு வெளிநாட்டு படப்பிடிப்பு பாஸ்போர்ட் மற்றும் ஜெர்கின் பொட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிபிளைட் பிடிக்கின்றேன்....
(டச்சப் செய்யும் போதுஒரு குளோசப்)
பிளைட்டில் உட்கார்ந்ததும்தான் எனக்கு தெரிகின்றது அது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்று... உள்ளே போய் உட்கார்ந்தால் காலில் கருப்பு காலுரை போட்டுக்கொண்டு சின்ன சிவப்பு ஸ்கர்ட் மற்றும் வெள்ளை சட்டை அதில் சிவப்பு கலர் டை கட்டியபடி.... சார் உங்களுக்கு என்ன வேனும்? என்று ஆங்கிலத்தில் கேட்டது மணிஜீ விளம்பரபடத்தின் மாடல் வாணி...
கிங்பிஷர் ஏர்ஹோஸ்டல் உடையில்.....சிவா மனசுல சக்தி ஜீவா போல் மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்று சொன்னேன் அந்த பெண் வெளிறினாள்.. (போட்டோ ஷுட் எடுக்கும் போது நான் இந்த பக்கம் போகஸ் செய்ய சட்டென என் கேமராவுக்கு கொடுத்த போஸ்.. நல்லா இருக்கா?)
எனக்கு தூக்கம் கலைந்தது... கழுவி கழுவி ஊத்தினாலும் கவுச்ச நாத்தம் போகாதுன்னு சொல்லுவாங்கேளே அது இதுதானா? என்று நினைத்துகொண்டேன்...
வழக்கம் போல் படங்களை கிளிக்கி பார்க்கவும்....
அன்புடன்
ஜாக்கிசேகர்
பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்
அட நம்ம டிவிஆர் மாறுபட்ட கெட்டப்புல இருக்கிறார்.
ReplyDelete:)
பதிவும் படங்களும் அருமை.
ReplyDeleteநீங்கள் எடுத்த படம் அழகாக இருக்கின்றது கமேராக் கவிஞரே
நல்ல விவரனை!
ReplyDeleteவிளம்பரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அண்ணா
ReplyDeleteநம்ம டி வீ ஆருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி. மணிஜி இயக்குநர் 'கெத்தோடு' இருக்கிறார். :) நீங்கள் எடுத்த புகைப்படங்களும் புரொபஷனலாக இருக்கின்றன. பத்து விநாடிகளில் நம்மைக் கடந்து செல்லும் ஒரு விஷயத்தின் பின்னணி உழைப்பை பொதுவில் இட்டதற்கு நன்றி.
ReplyDelete/// எனக்கு சினிமாவை விட விளம்பர படங்கள் மீதான காதல் அதிகம்... ((காரணம் ஒரு நாள் பரபரப்பான வேலை அது...ஒரே ஒரு ஷாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்...)) ///
ReplyDeleteஉண்மையான உழைப்புக்கு நிச்சயம் பலன் இருக்கு... இருக்கும்...
படங்கள் அனைத்தும் அருமை ஜாக்கி அண்ணா. மணிஜீக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி பகிர்தலுக்கு உங்கள் புகைப்படங்கள் எல்லாம் அருமை. இவற்றை ஏன் photo shop ல edit பண்ணனும்?
ReplyDelete'ரியல் இஸ் தி பெஸ்ட்' :)
என்ன ஒரு வர்ணனை.... சூப்பர்..
ReplyDeleteஅப்புறம் இது வேற மானிட்டர் ( ஜி இப்பவும் அதே பிரண்டா?)
நன்றி ஜாக்கி
ReplyDeleteகடைசி புகைப்படம் அவ்ளோ அழகு. அம்மணி உங்க கனவுல வராம இருந்திருந்தாத்தான் ஆச்சரியம் :-))
ReplyDeleteஜாக்கி, மணிஜி, செப்ட்டம்பரில் பயணம். சென்னை-மதுரை டொமஸ்டிக், கிங்பிஷர் ஏர்லைன்- ன்னா வசதியா இருக்கும். :-)
ReplyDeleteடி.வி.ஆர் சார், கலக்கல்.
பகிர்தலுக்கு நன்றி ஜாக்கி. பிளைட்லயும் போய் குவாட்டர்தான் கேக்கனுமா. நல்லா பாரின் சரக்கா ஒரு லார்ஜ் கேக்க வேண்டியதுதானே.
ReplyDelete//எனக்கு போட்டோ சாப் இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை... இது அசிங்கம்தான் என்ன செய்வது? யாராவது குழந்தைக்கு சொல்லி தருவது போல் சொல்லிதர ரெடியானால் நான் ரெடி...//
ReplyDeletevelang.blogspot.com
I have sent a Movie Details to your mail ID Sir, When you have time Please See the Movie And Write review
ReplyDelete//கேமராமேன் ஒளிப்பதிவாளர்.. ராம்ஜி அசிஸ்டென்ட பிரமோத்...//
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை.
நண்பர்கள் மணிஜீ, T.V.ராதாகிருஷ்ணன், ஜாக்கி ஆகியோரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅடுத்த முறை ஷூட்டிங் இருந்தா என்னையும் அழைத்து செல்லவும்.
ReplyDeletehi my name is ulab unaga pathivu romba arumai na ungal visiri .........................
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDelete//மொத்தம் பதினாறே ஷாட் ஆனால் அது எடுத்து முடிக்கும் முன் வாயில் நுரைதள்ளி விட்டது... சினிமாவோ விளம்பரபடமோ தனி நபர் திறமை அல்ல...அது ஒரு கூட்டு முயற்சி... ஆனால் ஒரு திரைப்படம் படம் சரியில்லை என்று எழுதுவது உங்கள் எண்ணம்... ஆனால் ஒரு கலைஞனை விமர்சனம் செய்கின்றேன் என்று சொல்லி குத்தி கிழிப்பது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.....//
இதை முழுவதும் ஆமோதிக்கிறேன்.
Side profile pose of Ms. Vani in orange thaavani is rocking!
ReplyDeletea. End of the day, what consumer care is whether the product is worth the buck.
ReplyDelete//சினிமாவோ விளம்பரபடமோ தனி நபர் திறமை அல்ல...அது ஒரு கூட்டு முயற்சி... ஆனால் ஒரு திரைப்படம் படம் சரியில்லை என்று எழுதுவது உங்கள் எண்ணம்... ஆனால் ஒரு கலைஞனை விமர்சனம் செய்கின்றேன் என்று சொல்லி குத்தி கிழிப்பது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.....
//
b. Often sky-high hype could also cause monumental dissapointment resulting in such harsh criticism.
Those who knowingly oversell their product should be ready face such indignation.
Unga blogla highlightana vishayangal ithuthaan. excellentaana commentary. yetho naan antha shootinga pakkaththulenthu paartha feeling.. aanulum avinga.. athaanga vaani konjam romba azhagu thaan.. he he.. control panna mudiyala bossh.. sooper.. nijama kalakkureeenga.. mudinja , eppavavathu time kedacha '1408' intha padam paarthutu , unga review eluthungalen.. nalla irukku padam..
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteJackie,
ReplyDeleteVery nice pictures. Awesome job.
What type of camera do you normally use for this type of photo-shoot.
Just curious to know.
Sorry, i have not learned how to use Tamil fonts yet.
Thanks
ARul
தாவணியில் மாடல் வாணியை பார்த்து ஒரு வினாடி மிரண்டு விட்டேன். செரீனா (கஞ்சா சசிகலா நடராசன்) போலவே இருந்தார்.
ReplyDeleteஅப்படியே நான் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி உணர்வு. தேங்க்ஸ்
ReplyDeleteஅண்ணே,
ReplyDeleteவிளம்பரம் செம ஹிட்டாக வாழ்த்துக்கள்.
இந்த வீடு எங்க பழைய ஆர்கிடெக்ட் ஆஃபீஸில் [நடராஜ் அண்ட் வெங்கட் அஸீசியேட்] செய்தது.ரொம்ப அழகா போட்டோக்கள் எடுத்துள்ளீர்கள் அண்ணே.சூப்பர்.
ஜாக்கி & மணி அண்ணே.. அசத்துங்க.. விளம்பரபடம் டாப்பு.. வெற்றிதான். நம்ம டிவிஆர் அய்யா கெட்டப் அசத்துறார். வாழ்த்துகள் டிவிஆர் சார். வாழ்த்துகள் மணி அண்ணே..
ReplyDeleteநல்ல பகிர்வு. ஒரு நிமிடப் படத்துக்குப் பின் எத்தனை உழைப்பு என்பதைக் காட்டியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநீங்கள் எடுத்த படங்களும் அருமை. நீங்களே சொன்னமாதிரி:), கொஞ்சம் PP செய்யக் கற்றுக் கொண்டால் இன்னும் சிறப்புதான்.
ReplyDeleteஅழகான ஃபிரேமுக்குள் அழகான இளம் பெண்... நடுங்காத கைகள்... காமிரா அநுபவத்தை சொல்கிறது.. சரி... Photoshop கற்றுக்கொடுக்க நான் ரெடி... நீங்க ரெடியா?...
ReplyDeleteஅழகான ஃபிரேமுக்குள் அழகான இளம் பெண்... நடுங்காத கைகள்... காமிரா அநுபவத்தை சொல்கிறது.. சரி... Photoshop கற்றுக்கொடுக்க நான் ரெடி... நீங்க ரெடியா?...
ReplyDeleteNice one manijee!
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteநீங்க எடுத்த புகைப்படங்கள் அருமை..
விவரணை நேரே இருப்பது போல் உணர்வு.
அட.நம்ம அண்ணாத்தே , மணிஜீ, டென்சன் பார்ட்டியாச்சே , திட்டி தீர்த்துர்வாரே, அவ்வளவு அமைதியா எடுத்தாரா?
ஆச்சரியம் தான்
நல்ல பதிவு ஜாக்கி, நீங்கள் பார்த்த சந்தித்த நிகழ்வுகளை உங்கள் பார்வையில் ரசிக்கும்படி பதிவு செய்திருகிறீர்கள் நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மேருகேரிகொண்டு இருக்கிறது ,பாராட்டுக்கள் , போட்டோ ஷாப் பற்றி நண்பர் வேலன் அவர்கள் மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் தொடர் பதிவிட்டுரிகிறார் நேரமிருந்தால் பாருங்கள் இதோ இணைப்பு http://velang.blogspot.com/2009/03/1.html
ReplyDeleteஅருமையான வர்ணனை ஜாக்கி..
ReplyDeleteடி வி யார் சார்.. கலக்குறீங்க
இயக்குனர் மணிஜிக்கு அன்பும் வாழ்த்துக்களும் .
இதுல இவ்வளவு உழைப்பு இருக்கா?
ReplyDeleteகலைஞர்களை வியக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் அண்ணாச்சி...நான் ஐம்பதுக்கும் அதிகமான திருமணங்களுக்கு வீடியோ கிராபரா இருந்துருக்கேன்.பிராமின் திருமணங்களைப் படம்பிடித்ததுதான் இவற்றில் அதிகம். இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அவர்கள் திருமணம் என்றால் இரண்டு நாள் முழுவதும் படம்பிடிக்க வேண்டியிருக்கும். ஸ்பாட் மிக்சிங் இல்லாத ஒரு கேமரா பதிவின் போது எல்லாம் ரொம்ப அசதியாகிவிடும். ஆனாலும் சினிமா மீதான விருப்பத்தால் இந்த பணியை மகிழ்வுடன் ஏற்றேன். சில சிறுகதைகளை எழுதிய அனுபவமும் வீடியோ கிராபர் அனுபவமும் எனக்கு குறும்படம் ஒன்றில் உதவி இயக்குனராகும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. தங்கர் பச்சானிடம் உதவி இயக்குனராக இருந்தவரின் குறும் படத்தில் இயக்குனரின் தம்பி மூலமாக எனக்கு வாய்ப்பு வந்தது.மூன்று நாட்கள் பலவித போராட்டத்துடன்தான் அந்த படத்தை எடுத்தோம்.
ReplyDeleteபத்து நொடி விளம்பரப் படமாக இருந்தாலும் பத்து நிமிட குறும்படமாக இருந்தாலும், இரண்டரை மணிநேர படமாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் பணம் காலம் ஆகியவை மட்டுமே வேறுபடும். ஆனால் படைப்புத்திறன் மிக அதிகமாகவே தேவை. ஒவ்வொருவருடைய உழைப்பு மட்டும் கடுமையாக இருந்து புண்ணியமில்லை. அவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்தி படமாக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்தான் வெற்றியையோ தோல்வியையோ நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
விமர்சனம் என்ற பெயரில் குத்திக் கிழிக்கிறார்கள் என்ற உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் என்னுடைய கண்ணோட்டம் வேறு.
ஒரு மாலுமி எத்தனை புயலை சந்தித்தான் என்ற கதையை அவன் கப்பலை பத்திரமாக கரை சேர்த்த பிறகு சொன்னால்தான் கேட்பார்கள் என்று ஒரு வாக்கியம் உண்டு. பட விஷயத்திலும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=oOOu6T8KaY8
எல்லா போட்டோக்களும் மிக அருமையாக எடுத்திருக்கீங்க.
ReplyDeleteடிவிஆர் சார் கெட்டப் சூப்பர்!