சென்னையில் ஒரு சில இடங்களில் நடக்கும் பல விஷயங்கள்... தமிழ்நாட்டின் பல இடங்களில் நடக்ககூடியதுதான்...என்ன வித்யாசம் என்றால் வட்டார மொழியும்...வாழ்க்கை முறையும் சற்று மாறபாடு கொண்டு இருக்கும்.. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் என்பது பொதுவான ஒன்றுதான்..
சில விஷயங்கள் இந்தியா முழுமையும் கூட இது போலான நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.... இது போலான நிகழ்வுகள் எல்லாவற்றையும் இந்த பகுதியில் பேச போகின்றோம்...நாம் தினசரி வாழ்வில் சகித்துக்கொண்டு வாழ பழகி கொண்ட பல விஷயங்களை இந்த பகுதியில் சொல்ல போகின்றேன்...
சிலதுக்கு தீர்வை நானும்... சிலதுக்கு தீர்வை நீங்களும் முன் வைக்கலாம்...சரி எதுபற்றியான விஷயங்கள் இதில் பேசப்போகின்றோம்... எல்லாவற்றையும் பேச போகின்றோம்....நம் வீட்டுக்கு, அக்கத்து பக்கத்து வீடுகளில் ,தெருக்களில் மாவட்டங்களில், நடப்பதை உங்களோடு பகிர இருக்கின்றேன்....
பிரதானமாக நான் வசிக்கும் சென்னையில் நடக்கும் பலவிஷயங்கள்தான் இதில் அதிக அளவு இடம் பிடிக்கும்...அது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அந்த நிகழ்வு... அல்லது அந்த செயல் ஏதாவது ஒரு இடத்தில் பொருந்தி போகும்...
இப்போது நான் பகிரும் பலவிஷயங்களில்....
நானே அந்த தவறை செய்து இருக்கின்றேன்...நானே சிலதை மீறி இருக்கின்றேன்... இந்த சமுகத்தில் நானும் ஒரு அங்கம்... சில விஷயத்தை நான் செய்யும் போது எனக்கு மனது உறுத்தும்...ஆனால் அந்த உறுத்தல் ஏதும் இல்லாமல் சிலர் செய்வதுதான் கொடுமை... அதை தவறு என்று கூட பலர் உணர்வதில்லை...
இது ஒரு விழிப்புனர்வாக கூட இருக்கலாம்... நானும் இதே குட்டையில் ஊறிய மட்டை என்பதால் இது பற்றி எனக்கு கொஞ்சம் தெரிவதை உங்களோடு வரும் வாரங்களில் நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கின்றேன்...
ஒரு வழிபாதை...
சென்னை தெருக்களில் வாகன எண்ணிக்கை மக்கள் தொகை வளர்ச்சியை கருத்தில் கொண்டு.. சென்னையில் பல சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றபட்டன... உதாரணத்துக்கு பனகல் மாளிகையில் இருந்து நேராக கிண்டி போக வேண்டும் என்றால் சின்ன மலை ,ஸ்பிக் வழியாக பேருந்து கிண்டி போய்விடும்.. ஆனால் இப்போது சைதாபேட்டை கோர்ட் வழியாக கவர்னர் மாளிகை வழியாக சுற்றி.... ரேஸ் கோர்ஸ் வழியாக உள்ளே சென்று முடுவாங்கரை பாலம் வழியாக கிண்டி வரும்... இது ஒரு உதாரணத்துக்குதான்...
ஆனால் அது போல் உங்கள் ஊரில் உள்ள ஒருவழிபாதையை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்...
ஒருவழிபாதை என்பது அதில் அனுமதிக்கபட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்.. எதிரில் வாகனங்கள் வர அனுமதி இல்லை ஆனால் அது தமிர் நாட்டில் அனுதினமும் மீறபடும் விஷயம்...
நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊராக இருக்கட்டும்... ஒரு வழிபாதையில் எதிரே வாகனம் வராது என்று பெரிய பருப்பு போல் தமிழ்நாட்டில் வாகனம் ஓட்டினால்... நீங்கள் மடையன் என்று அர்த்தம்... எப்போது வேண்டுமானலும் எதாவது ஒரு வாகனம் எதிரில் வந்து உங்களை இடித்து குடும்பத்துடன் உங்களை குப்புற தள்ளலாம்....
ஒரு வழிபாதையில் நம்ம ஊரில் வாகன்ம் வருவது சகஜம் ஆனால்.. தற்போது 200சீசீ பைக்குகன் வந்த பிறகு... ஒரு வழிபாதையில் சில டீன் ஏஜ் அளைஞர்கள் கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்துவது வேதனையை கொடுக்கின்றது...
சரியான பாதையில் போய் கொண்டு இருப்பவர்... நம்மதான் தப்பா வந்துட்டுமோ? என்று நீங்களே யோசிக்கும் அளவுக்கு அந்த செயல் இருக்கும்...
யோவ் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு அப்படித்தான் இருக்கும்...ராங்ரூட்டில் ஆதாவது ஒன்வேயில் வருவதே தப்பு.. ஆனால் நம்ம ஆள் அதிலும் 70 கீலோமீட்டர் வேகத்தில் ஹாரன் கூட அடிக்காமல் கட் அடித்து கட் அடித்து ஓட்டி வருபவனை என்ன என்று சொல்வது...
சில நேரங்களில் அவசரத்துக்கு அது போலான தவறை நானே செய்து இருக்கின்றேன்.... ஆனால் ஹாரன் அடித்து நான் வருகின்றேன் என்று எதிராளிக்கு தெரியவைத்து... வேகம் குறைத்து அந்த இடத்தை கடந்து சென்று இருக்கின்றேன்...
ஆகவே சென்னையிலோ அல்லது தமிழ்நாட்டிலோ ஒரு வழிப்பாதையில் தானே போகின்றோம்.. எதிரில் எந்த வாகனமும் வராது என்று அலட்சியமாக செல்லதீர்... மிக முக்கியமாக ஒன்வேதானே என்று நினைத்து பின் புறத்தில் வாககனம் ஏதாவது வருகின்றதா? என்று பார்க்க ஒரு செகன்ட் திரும்பி விட்டு சட்டென எதிரில் பார்த்தால் ஒரு வண்டி எதிரில் வேகமாக வந்து கொண்டு இருக்கும்... அதுதான் சென்னை தமிழ்நாடு....
ஹைவேஸ் இல் தினம் நடக்கும் பல விபத்துக்ளுக்கு காரணம்...ஒன்வேயில் வருவதுதான்... இந்த இடத்தில் வளைந்துதான் மதுராந்தகம் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தால் ஒஒன்வேயில் போய் நேரத்தை மிச்சம் செய்கின்றேன் பேர்வழி என்று விபத்தில் சிக்கி கொள்கின்றார்கள்...
பெங்களுர் போகும் போதும் அல்லது திருச்சி போகும் போதும் தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரிகளும்.. ஷேர் ஆட்டோக்களும் சர்வசாதாரணமாய் ராங் ரூட்டில் போவதை பார்த்து இருப்பீர்கள்...சரியான ரூட்டில் போவது போல் வெகமக போவதுதான் கொடுமை.....
ஆகவே தமிழ்நாட்டின், சென்னையின், ஒன்வேயில் ஜாக்கிரதை...
உங்களுக்கு எற்பட்ட அனுபவங்களை இங்கே பின்னுட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்....
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா
//ஒரு வழிபாதையில் நம்ம ஊரில் வாகனம் வருவது சகஜம் ஆனால்.. தற்போது 200சீசீ பைக்குகன் வந்த பிறகு... ஒரு வழிபாதையில் சில டீன் ஏஜ் இளைஞர்கள் கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்துவது வேதனையை கொடுக்கின்றது...//
ReplyDeleteஇது எங்கள் பிறப்புரிமை, அதில் தலையிட நீங்கள் யார்? இந்த மனப்பான்மைதான் இன்று இளைஞர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் நினைக்கும் காலம் இது. ஒரு தடவை என் நண்பர் இதுபோல் ராங்க் சைடில் வந்தவரை "ஏன் இப்படி வருகறாய்" என்று கேட்டதற்கு அவன் சொன்னது- நான்தான் ராங்க் சைடில் வருகிறேன் என்று தெரியுதில்ல, நீ பாத்துப்போக வேண்டியதுதானே-இதற்கு என்ன பதில் கூறமுடியும்?
கந்தசாமிசார் முன்பெல்லாம் ஒரு பயம் இருந்தது... அது போல் ஒன்வேயில் வருபவர்கள்.. சிறுதாக இடித்தால்கூட சாரி சார்..கொஞ்சம் அவசரம் என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கெஞ்சுவார்கள்... இப்போது அப்படி எல்லாம் இல்லை....ரைட்ராயலாக சண்டைக்கு வருகின்றார்கள்...என்ன செய்ய... அது தப்பு என்று சொல்லதான் இந்த பதிவு...
ReplyDeleteநன்றி டாக்டர் கந்தசாமிசார்..
சீக்கிரம் சொல்லி குடுங்க கத்துகிட்டு அங்க குப்ப பொட்ட முடியுமானு பாப்போம் :-)))))
ReplyDeleteசமீபத்தில் தென்காசியிலிருந்து சென்னைக்கு அவசரமாக குடும்பத்துடன் வரவேண்டியிருந்தது. இரவு நேர பயணம். செல்ஃப் டிரைவிங் வேறு. ஆம்னி பஸ்களால்தான் எனக்கு தொல்லை. இந்த ஆம்னி பஸ் ஓட்டுனர்களின் வேகத்துக்கு நாம் சாலையை விட்டு விலகி இடம் கொடுக்கவேண்டியுள்ளது. சென்னைக்குள் நீங்க சொன்ன மாதிரி 150 சிசி வண்டிகளால்தான் தொல்லை.
ReplyDeleteநேத்து ஒருத்தன் ஸ்டேட் ஹைவேல, பிசியான நேரத்துல வீலிங் பண்ணிகிட்டு இருக்கான்... திருந்தாத கூட்டங்க அது..
ReplyDeleteநான் வேறெதுவும் சொல்லி உன் வயத்தெரிச்சலை இன்னும் கொட்டிக்க விரும்பவில்லை...
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஜாக்கி,
ReplyDeleteசமூகத்துக்கு மிக மிக அவசியமான பதிவு.
அதிலும், எடுத்த முதல் விஷயமே அசத்தலான ஆரம்பம்.
இந்தப் பதிவின் மூலம் ஒரு நூறு பேர் மாறினாலும் அது மிகப்பெரிய வெற்றி.
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை. இதை அடுத்து நடைபாதை - கொடுமைகளைப் பற்றியும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
பெரும்பாலான இடங்களில் பாதசாரிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதை பதைப்போடு, சாலையில் நடந்து செல்லும் அவலம் மிக அதிகம்.
கந்தசாமி சார் சொல்வதுபோல் "நீ ஒழுங்கா போ" என்பதாகவே தவறு செய்பவர்களின் போக்கு இருக்கிறது.
வெறும் சினிமா, பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் , சமூக அக்கறையுடன், நீங்கள் எழுதும் பதிவுகள், மிகவும் அருமை.
பாராட்டுக்கள்!
நன்றி !
-திரு
Apologies for writing this comment in English. I still need a practice to type in tamil.
ReplyDeleteIt is really a good thought.
Technology can help us a lot to stop this kind of activities. But the real change can be brought by changing people's mentality.
In our country, it will take sometime to change our people's mind. It would always be better to change ourselves first than expecting others to change.
கோவை நகருக்குள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் தான் ஓட்டுகிரார்கள் என்றாலும் புற நகரில் விதி மீரல் அதிகம் தான் குறிப்பாக பீளமேடு, சுந்தராபுரம் பகுதிகளில் ஒன்வேயில் ஓட்டுபவர்கள் அதிகம். மற்ற பகுதிகளில் இரவு நேரங்களில் ஒன்வே பயணம் அதிகம். இங்கு பல்சர் ஓட்டுபவர்கள் அடிக்கடி எமனை சந்திக்கச் செல்வர். அதுவும் யாரும் இடிக்காமலே அவர்களாகவே விழுந்து சென்று சந்திப்பர்.
ReplyDeleteஇங்கு ரோட்டை கடக்கும் பெண்களின் துணிச்சல் அசாதாரணம். எவ்வளவு வாகன போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் ரோடே காலியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு கடப்பது அவர்கள் ஷ்டைல். வண்டியில் ப்ரேக் ஷூ தேய்வதற்கு முக்கிய காரணம் அசால்ட்டாக ரோட்டை கடக்கும் பெண்களே.
ஹ்ம்ம்ம்.... இதையெல்லாம் தட்டிக்கேக்க வேண்டிய காவல் துறையினர் கையில் ஒரு ஐம்பது ரூபாயை கொடுத்தா, நீ போ ராசான்னு வழி அனுப்பி வைக்கும்போது நாம தான் நம்ம உயிரை காப்பாத்திக்க கொஞ்சம் சூதானமா வண்டி ஓட்டிப்போக வேண்டும்...
ReplyDelete// நானே அந்த தவறை செய்து இருக்கின்றேன்...நானே சிலதை மீறி இருக்கின்றேன்... //
ReplyDeleteநானும்தான் அண்ணா
என்ன செய்ய அந்த அவசரமான நேரத்துல சீக்கிரம் போகனும்னுதான் தோனுதே தவிர சரியா தப்பான்னு தோனாது
நான் சரியான ரூட்டுல போகும் போது எதிரே வருபவர் ராங்கா வரும் போதுதான் என் தவறு தெரிகிறது...
ஹிஹி..ஹி..
நான் வண்டி ஓட்டும் போதும் ரொம்ப கவனமா ஓட்டுவேன்,பைக்கிலேயே 2 மிரரும் பார்த்து ஓட்டுவேன்,ஏன்னா குறை மாசத்தில் பிறந்த நிறைய பருப்புகள் வந்து நீட்டா சொருக பாக்கும்,நைட்டு நேரத்தில் சொல்லவே வேண்டாம்,பாதி பேர் குடிச்சிட்டு தான் வண்டியை த்ரில்லிங்கோட ஓட்டுராய்ங்க.
ReplyDeleteJUST SEE THE LINK.
ReplyDeleteINDIA IS UNITED IN THIS ASPECT.
http://www.youtube.com/watch?v=4R-gzhqjZl0&NR=1
http://www.youtube.com/watch?v=4R-gzhqjZl0&NR=1
ReplyDeleteசீக்கிரம் சொல்லி குடுங்க கத்துகிட்டு அங்க குப்ப பொட்ட முடியுமானு பாப்போம் :-)))))-//
ReplyDeleteசில வாரங்கள் பொறுத்து இருக்கவும்..
இரவு நேர பயணம். செல்ஃப் டிரைவிங் வேறு. ஆம்னி பஸ்களால்தான் எனக்கு தொல்லை. இந்த ஆம்னி பஸ் ஓட்டுனர்களின் வேகத்துக்கு நாம் சாலையை விட்டு விலகி இடம் கொடுக்கவேண்டியுள்ளது//
ReplyDeleteஆமாம் பொன்சந்தர்..
நமக்கு இடம் கொடுக்காமல் சாலை முழுதுடும ஏறி வருவார்கள்.. டிலட் டிம் பிரைட் பண்ணி கூட போடுவது இல்லை..
நேத்து ஒருத்தன் ஸ்டேட் ஹைவேல, பிசியான நேரத்துல வீலிங் பண்ணிகிட்டு இருக்கான்... திருந்தாத கூட்டங்க அது..//
ReplyDeleteஆமாங்ம ஜெய் அது வியாதியா போயிடுச்சி.. அவனுங்களுக்கு சரியான சில்லரை கிடைக்கும் வரை திருந்த மாட்டனுங்க..
நான் வேறெதுவும் சொல்லி உன் வயத்தெரிச்சலை இன்னும் கொட்டிக்க விரும்பவில்லை...
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
உண்மைதான் உங்க ஊரு விசயத்தை எதையும் அவுத்து உடாதே..
வெறும் சினிமா, பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் , சமூக அக்கறையுடன், நீங்கள் எழுதும் பதிவுகள், மிகவும் அருமை.
ReplyDeleteபாராட்டுக்கள்!
நன்றி !
-திரு//
நன்றி திரு மிக்க நன்றி..
It would always be better to change ourselves first than expecting others to change.//
ReplyDeleteஉண்மைதான் குரு கூடுமானவரை நாம் முதலில் திருந்த வேண்டும்..
வண்டியில் ப்ரேக் ஷூ தேய்வதற்கு முக்கிய காரணம் அசால்ட்டாக ரோட்டை கடக்கும் பெண்களே.//
ReplyDeleteகுளிர் நிலா இது பற்றி தனி பதிவே போடலாம்.. நிச்சயம் எழுதுகின்றன்...
கையில் ஒரு ஐம்பது ரூபாயை கொடுத்தா, நீ போ ராசான்னு வழி அனுப்பி வைக்கும்போது நாம தான் நம்ம உயிரை காப்பாத்திக்க கொஞ்சம் சூதானமா வண்டி ஓட்டிப்போக வேண்டும்...//
ReplyDeleteஇது போலான தவறுக்கு லஞ்சமும் ஒருகாரணம்..
நானும்தான் அண்ணா
ReplyDeleteஎன்ன செய்ய அந்த அவசரமான நேரத்துல சீக்கிரம் போகனும்னுதான் தோனுதே தவிர சரியா தப்பான்னு தோனாது//
சில நேரத்துலு அந்த தவறை செஞ்சி இருக்கேன்.. அப்பநான் அப்படியே பம்மி பம்மி போவேன்..
ஏன்னா குறை மாசத்தில் பிறந்த நிறைய பருப்புகள் வந்து நீட்டா சொருக பாக்கும்,நைட்டு நேரத்தில் சொல்லவே வேண்டாம்,பாதி பேர் குடிச்சிட்டு தான் வண்டியை த்ரில்லிங்கோட ஓட்டுராய்ங்க.//
ReplyDeleteகார்த்தி உண்மைதான்.. அதுல வேற பயப்படும் படி ஒரு ஹாரன்வேற அடிச்சிக்கினு போவானுங்க..
நன்றி மோருரன்..
ReplyDeleteஇது சென்னை மட்டுமல்ல... பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் இருக்கும் ஒரு தொல்லை தான்... எனக்கும் ஒரு அனுபவம் உண்டு... ஒரு முறை நண்பரை பின்னால் வைத்து வண்டியை செலுத்திக்கொண்டிருந்தேன்... நான் போகும் பாதையில் நிறைய வேகத்தடைகள் உண்டு. ஒரு இடத்தில் வேகத்தடையை தாண்டியவுடன் U - திருப்பமும் உண்டு. அன்றென பார்த்து நல்ல மழை வேறு... சாலையெல்லாம் சறுக்கு விளையாட்டுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தது... அன்று நான் இந்த வேகத்தடையை கடக்கும் போது U - திருப்பத்தில் ஒரு சிற்றுந்து (car) திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தது... நானும், சரியாக சென்று கொண்டிருக்க, அந்த காரின் பின்னிருந்து ஒரு இரு சக்கர ஓட்டி திடீரென அந்த திருப்பத்தில் வந்து உடனடியாக இடது பக்கம் சென்று அதிரடியாக மீண்டும் வலது பக்கம் வண்டியை திருப்ப, அப்போது தான் கியர் மாற்றி இவரது இடது பக்க சாகசத்தைக் கண்டு சற்றே வலது பக்கம் திரும்ப, அவரும் வலது பக்கம் வர, நானும் பிரேக் பிடிக்க, டமார்... நல்ல வேளை அங்கிருந்த சென்ட்டர் மீடியனின் மீது மோத வில்லை... மோதி இருந்திருந்தால்... இதில் அந்த கோமாளி வண்டியை நிறுத்தி விட்டு வந்து மெதுவாக வர வேண்டியது தானே என்று எனக்கு அறிவுரை வேறு... (வேகத்தடையில் ஏறி இறங்கியவன் எப்படி அய்யா 20 கி.மீ.க்கு மேல் வர முடியும்?) அந்த கோமாளி, நம்ம ஊரு பக்கத்தான்... அந்த இடத்தில் நிறுத்தி சண்டி பிடிக்க ஆரம்பித்தால், டிராபிக் ஜாம் ஆகும் என்று ஒன்றும் சொல்லாமல் நீ பாத்து போடன்னு மட்டும் சொல்லி விட்டு வந்து விட்டோம்... அதுக்கப்புறம், அந்த நண்பர் என்னுடன் பின்னால் அமர்ந்து வருவதே இல்லை...
ReplyDeleteannan jackie pathivu super
ReplyDeleteஅட என்னங்க நீங்க இது ஒரு பிரச்சனையா? அப்போ உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியலைனு அர்த்தம். எங்க திருப்பூருக்கு வாங்க, என்ன அழகா வண்டி ஓட்ட சொல்லி தருவாங்க தெரியுமா? எங்க திருப்பூர்ல வண்டி ஓட்டி பழகிட்டா அப்புறம் உலகத்தில எங்க வேணும்னாலும் நீங்க வண்டி ஓட்டலாம்.
ReplyDeleteதிடீர்னு ஒருத்தன் குறுக்குல வருவான். அப்படியே லெப்ட் இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்டுல திருப்புவான். அதே மாதிரி ரைட்-ல போட்டு லெப்டுல திரும்பி-னு உங்களுக்கு சரியான பயிற்சி குடுப்பாங்க. அப்படியே நீங்க நல்லா போறதா நினச்சி எவன் பின்னாடியாவது போவீங்க அவன் எந்த சிக்னலும் காட்டாம சடார்னு ஏதோ ஒரு பக்கம் திருப்புவான் பாருங்க - அப்பப்பா அந்த அருமையான பயிற்சி வேற எங்க கிடைக்கும்.
அப்புறம் எதிர்ல வர்ரது - அது ஒரு மேட்டரே இல்ல - காரணம் எதிர்ல வார்ரவனுது தான் ரோடு. நாம அழகா பொட்டாட்டம் ஒதுங்கி வழி விட்டே ஆகணும். வழி இல்லையா கீழ எறங்கி வண்டிய தள்ளிகிட்டாவது போகணும்.
ஹெலிகாப்டர், ஏரோப்பிளேன் ஓட்டுன பைலட்டை எல்லாம் கொறஞ்ச வெலைக்கி பஸ், லாரி, ஆட்டோ டிரைவரா வேலைக்கு கிடைக்கிறதால மொதலாளிகளுக்கு பிரச்சன இல்ல. அதோட கம்பெனி வண்டி ஓட்டுற டிரைவருங்க பீலிங் இருக்கே அது எது கூடயும் கம்பேர் பண்ண முடியாது. காரணம் கம்பெனி மொதலாளி 'பார்த்துக்குவார்'.
அதோட ரோட்ட கிராஸ் பண்ணுறவங்க - அடேங்கப்பா, நடு ரோட்டுல நின்னுட்டு எங்க போவாங்கன்னு நமக்கும் தெரியாம அவங்களுக்கும் புரியாம ஆக மொத்தம் இத்தன பேரு சேர்ந்து உங்களுக்கு குடுக்குற டிரைனிங்ல எப்படி நீங்க மோசமா வண்டி ஓட்ட முடியும்? அதனால புலம்புறவங்க எல்லாம் திருப்பூர் வாங்க - உலக தரத்தில வண்டி ஓட்டி பழகினா அப்புறம் உங்களுக்கு எங்க வேணும்னாலும் வண்டி ஓட்ட தைரியம் வரும்.
இப்போ கொஞ்சம் நடுவில டிவைடர் வச்சிருக்காங்க. ஆனாலும் அது முடியுற எடத்துல - அதுவரை குறுக்கு குறுக்கா போக முடியாத ஆத்திரதில ஓட்டுவங்க பாருங்க - அப்படியே டேக் ஆப் ஆகுற பிளைட்டு தான்.
நீங்கள் ஒரு முறை திருப்பூர் வந்து டூவீலர் ஓட்டவும்... எங்கள் ஊருக்கு புதிதாக வந்து வாகனம் ஓட்டும் நபர்களிடம் நாங்கள் சொல்லுவது இதுதான் “திருப்பூர்ல டூவீலர் ஒரு 50 கிலோமீட்டர் டூவீலர் ஓட்டிவிட்டால் உலகில் எங்குவேண்டுமானாலும் நீ லைசன்ஸ் டெஸ்ட் பாஸ் பண்ணிடலாம்”
ReplyDeleteபதிவிற்க்கு நன்றி
இன்னும் கொஞ்சம் நான் சொல்லிக்கிறேனே பிளீஸ்.
ReplyDeleteடிரைனிங் குடுக்குற மேட்டர்ல சில விஷயங்கள் விட்டு போச்சு.
தனி நபர் ரோட்டில குடுக்குற ட்ரைனிங் பத்தாதுன்னு பொது மக்கள் அவங்க லெவலுக்கு குடுக்குற ட்ரைனிங்-க பத்தி கொஞ்சம் பாருங்க.
1. எந்த ரோட்டுலயாவது குடியிருக்குறவங்க வீட்டுல எதுவும் ஆகிபோச்சுன்னா - உடனடியா ரோட்ட மறிச்சு ஷாமியானா கட்டி - டேக் டைவர்ஷன் போட்டிருவாங்க - அப்புறம் என்ன குண்டும் குழியுமா இருக்குற சுத்து ரோட்ட கண்டுபிடிச்சு மெயின் ரோட்டுக்கு வரணும்.
2. ரோட்டொரம் வீடு கட்டுறவங்க பண்ணுற உதவிய யாரும் மறக்க முடியாது. மணல் விக்கிற வெல வாசில மணல அப்படியே அனாதயா ரோட்டொரமா கொட்டி அது அப்படியே வழிஞ்சு வழிஞ்சு அந்த ரோட்டையே மறச்சிருக்கும். அதுல டூ-வீலர் ஓட்டுறவுனுக்கெல்லாம் 'ஒரு மாதிரி' ட்ரைனிங் குடுப்பாங்க பாருங்க....
3. அப்புறமா கொடி கட்டுறது. எந்த தலைவர் வந்தாலும், சென்ட்டர் மீடியனுக்கு கொஞசம் தள்ளி ஹை-வேஸ்ல டூ-வீலர்க்கு வழி விட்ட மாதிரி ஒரே கோடா கொடி கட்டி - வண்டி ஓட்டுறவங்களுக்கு ஸ்டெடியா எப்படி வண்டி ஓட்டுறது-னு சொல்லி குடுப்பாங்க.
இதெல்லாம் பத்தாதுன்னு - ரோட்ட அகல படுத்துறதா சொல்லி - அகலப்படுத்தி - (இயற்கையா / செயற்கையா) அதுமேல மண்ணும் மணலும் மூடி இப்போ ரோடே இல்லாம இருக்குற கதய எல்லோரும் நேரில வந்து பார்த்தாதான் புரியும்.
ஆக எங்க ஊர்ல இலவச ஓட்டுனர் பயிற்சி குடுக்குறாங்க - ஆகவே நண்பர்களே வாங்க பழகலாம் - புடிச்சிருந்தா கண்டினியூ பண்ணலாம் - இல்லைனா இப்படியே பிரண்ஸா இருந்திடுவோம்.
என்ன சொல்றீங்க ?