ஹவுஸ்கீப்பிங் கிரிஜா (சிறுகதை)

முதலில் இந்த கதையை படிக்கும் போது கொஞ்சம் அல்லது அதிகமாக அருவருப்பு வர நேரலாம்...உண்மையை இப்படித்தான் விரிவாய் எனக்கு சொல்ல வருகின்றது....



சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அந்த 15 அடுக்குமாடி கொண்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தின் ஏழாம் தளத்தில் உள்ள, அந்த பெண்கள் கழிவறையின், மூன்றாவது அறைக்கதவை,கிரிஜா திறந்த போது நாற்றம் குடலை புரட்டிக்கொண்டு வந்தது....

சிறுநீரும் மலமும் மேற்கொண்டு போக வரியில்லாமல் அகதி போல் திக்கற்று, வெஸ்டன் டாய்லட்டின் மேல் புறம் வழியாக, தண்ணீர் தன் இயல்பு நிறம் மாறிவழிந்து கொண்டு இருந்தது...கிரிஜாவுக்கு பார்த்ததும் தெரிந்து விட்டது... ஏதோ ஒரு படித்த எருமை... சானிட்டரி நாப்கினை டாய்லட்டில் போட்டுவிட்டு போய் விட்டது...அதனால் ஏற்பட்ட அடைப்பு இது என்று புரிந்து போனது...

ஒரு வேலைக்கு இரு வேலை... இதை எவ்வளவு கிண்டினாலும் நோன்டினாலும் எதுவும் ஆக போவதில்லை...கையை விட்டுதான் எடுக்க வேண்டும்...இந்த தொழிலுக்கு வந்த புதுதில் இரண்டு நாட்களுக்கு எந்த சாப்பாடும் இறங்கவில்லை...

சாப்பாட்டில் கை வைத்தாலே அடைப்பால் மிந்தது கொண்டு இருக்கும் அந்த கருமங்கள் அவள் நினைவுக்கு வந்து தொலைக்கும்...வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில், மூன்று முறைக்கு மேல் வாந்தி எடுத்தாள்...சாப்பிடும் போது அந்த நினைவு வந்து விட்டாள்... அதற்கு மேல் ஆசையாய்ஒரு பிடி சாப்பிட பிடிக்காது....எல்லாவற்றையும் தன் ஒரே மகள் ஈஸ்வரிக்காக பொறுத்துக்கொண்டாள்......


முதல் முறையாக இது போல் டாய்லட்டில் அடைப்பு ஏற்பட்டு இருந்த போது சகித்துக்கொண்டு , கையை விட்டு எடுத்த போதுகிரிஜாவின் ஜாக்கெட் இரண்டு இன்ச் நனைந்து போய்விட்டது.. என்னதான் பினாயிலும், டெட்டால் போட்டும்... வீடு போகும் வரை அந்த நாத்தம் அவளை விட்டு போகவில்லை..

வீட்டுக்கு போனதும் அவளது பத்தாம் வகுப்ப படிக்கும் பெண் ஈஸ்வரி என்ன உன் மேல பீ நாத்தம் அடிக்குது? என்று கேட்டு விட்டு பத்தடி பின்னால் நகர்ந்தால்....அது கிரிஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை... ஏனென்னறால் கிரிஜா தன் ஒரே மகள் ஈஸ்வரி மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தாள்...

அவளுக்கு அவள்தான் வாழ்க்கை...உலகில் அவள் எல்லாவற்றையும் பொறுத்துகொண்டு வாழ்வது தன் ஒரே மகளுக்காகத்தான்...இப்போது கூட வீட்டில் அவள் செக்யூரிட்டி வேலை செய்வதாகத்தான் சொல்லி இருக்கின்றாள்... ஹவுஸ்கீப்பிங் வேலை செய்கின்றேன் என்று வீட்டில் மூச்சுக்கூட விட்டதில்லை




காலையில் வேலைக்கு வந்ததுமே இது போலான வேலை என்றால் எரிச்சல்தான் வரும்...கைநிறைய சம்பாதிக்கும் திமிர் இருப்பதால் அடுத்தவன் கஷ்டம் இந்த ஐடிபெண்களுக்கு புரிவதில்லை...

சுப்ரவைசர்களிடம் சொல்லி...ஆபிசில் ஆர்டர் போல் போடாமல்... ஒரு வாய்வழி அறிக்கையாக கூட சொல்லியாகி விட்டது... ஆனாலும் இந்த சானடரி நாப்கின் வெஸ்டர்ன் டாய்லட்டின் உள்ளே போட்டு, பிளஷ் செய்யும் படலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது...


நாப்கினை எடுத்து பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் போடமுடியாத சோம்பேறிதனம்...சட்டென மூடியை திறந்து போட்டு விட்டு....வெளியே போய்விட்டால்... அடுத்து நானா உபயோகபடுத்தபோகின்றேன்... என்ற இந்தியாவின் தேசிய அலட்சியம்.... அப்படியும் மனசாட்சி கேள்வி கேட்டால் ? அதை கிளின் பண்ணதான் ஹவுஸ்கீப்பிங் இருக்காங்க இல்லை என்ற பதில் வந்து நிற்க்கும்....


கிளின் பண்ணதான் நாங்க இருக்கோம் ஆனாலும் ,நாங்களும் மனுசங்க இல்லையா? என்ற கேள்வி கிரிஜாவின் மனதில் ஓடாத நாள் இல்லை...பத்து நிமிசத்துக்கு முன்னதான் கிளின் பண்ணிட்டு வந்து சூடு ஆறிப்போறதுக்குள்ள அந்த டீயை வாயில வைக்கறப்பவே...ஹவுஸ் கீப்பிங்னு கத்தி ஊரை கூட்டுவாங்க...


யாரோ டாய்லட் போயிட்டு பிளஷ் பண்ணலைன்னா நாங்க என்ன பண்ணறது???? மொத்தம் பதினைஞ்சு புளோர்... புளோருக்கு ஒரு டாய்லட் மொத்தம் பதினைஞ்சு.. நாலு புளோருக்கு இரண்டு பேர்னு போட்டு வச்சி இருக்காங்க.



கிரிஜா டயாய்லட் கதவை தாள் போட்டாள்...பினாயில் அரைவாளி உள்ள பக்கெட்டையும், மாப்பையும் ஓரமாக சாத்தி வைத்தாள்...கைவிட்டு சுத்தபடுத்தும் போது ஜாக்கெட் நனைந்து விடுவதால்...ஜாக்கெட்டை கழற்றினாள் பிளஷ் டேங் மேல் வைத்தாள்..

உள் பாடியுடன்...கையை அந்த நாத்தம் பிடித்த டாய்லெட்டில்கையை விட்டாள்.... குடல் புரட்டும் நேரத்தில் ஏதோ ஒரு சினிமா பாடலை நினைவுக்கு கொண்டு வந்தாள்....அவள் சுத்தம் செய்யும் இந்த நேரத்தில் நாம் கிரிஜாவின் பர்சனலை பற்றி சின்னதாக தெரிந்து கொள்வோம்...


கிரிஜாவுக்கு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூர் கிராமம்தான் சொந்த ஊர்...கிரிஜா கருப்பாக இருந்தாலும் பார்க்க பாந்தமாக இருப்பாள்...குடும்ப வறுமைகாரணமாக 5ம் வகுப்பிக்கு மேல் படிக்கவில்லை....


கிரிஜாவுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை...கிரிஜா வாழ்க்கையை இப்படியும் சிம்பிளாக சொல்லலாம்...உப்பு விக்க போன மழை பெய்யும்... மாவு விக்க போன காற்று அடிக்கும்...சிறுவயதில் இருந்தே இதுதான் அவளது வாழ்க்கை ...


திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் அவளது பெற்றோர் அவளைவிட்டு அடுத்து அடுத்து மரித்து போனார்கள்...கணவன் மாரி கிரிஜாவை சந்தோஷமாகத்தான் வைத்து இருந்தான்...

மாரிக்கு மண்ணடியில் மூட்டை தூக்கும் வேலை....திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் ஈஸ்வரி பிறந்தாள்... 5வருட வாழ்க்கை என்பது கிரிஜாவுக்கு வசந்த காலம்....அதன் பிறகு ஒரு குழந்தையை பற்றி அவள் யோசிக்கும் போது.....


அசதிக்கு சாப்பிடுகின்றேன் என்று சொல்லிவிட்டு எப்போதாவது சாப்பிடும் சீமை சரக்கு பழக்கம் மெல்ல அவளது கணவனை ஆட்கொண்டு விட்டது...


போதை மறு வாழ்வு அது இது என்று எல்லா கட்டிடத்தையும், அதற்கு போகும் பஸ் ரூட்டையும்..
பார்த்தாயிற்று,சலித்தாயிற்று...எல்லவற்றையும் தின்றாகி விட்டது பித்தம் தெளிய வாய்பில்லை என்று அவளுக்கு புரிந்து போனது...


அவள் பெண் ஈஸ்வரி அவள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அரசினர் உயிர்நிலைபள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் போது பழைய மகாபலிபுரம் சாலை திடிரென மாற்றம் அடைய ஆரம்பித்து...

விளைந்த விளைநிலங்களில் கான்கிரிட் காடுகள் ஆக்கிரமித்துகொண்டன...களை எடுக்க போன கைகளுக்கு வேலை கிடைக்கவில்லை...இன்னும் இரண்டு கிராமம் தள்ளி வயலில் களை எடுக்கும் வேலை கிடைத்தது...இருந்தாலும் போய்வருவதற்க்கு பஸ்சுக்கே அந்த காசு சரியாக போய்விடும்...அதனால் ஊரில் கிடைத்த வேலையை செய்து கொண்டு இருந்தாள்..

அவள் பெண் ஈஸ்வரி படிப்பில் சுட்டி...நிறைய கட்டுரை,கவிதை போட்டிகளில் கலந்து கொண்டு சர்டிபிகேட் வாங்கி வரும் போது ரொம்பவும் சந்தோஷம் கொண்டாள்....ஒரு சுப நாளில் மகள் வயதுக்கு வந்தாள்... வீட்டில் சிம்பிளாக சடங்கு செய்தாள்...சடங்குக்கு வந்தவர்களை கிரிஜாவின் கணவன் மாரி தள்ளாடியபடி வரவேற்றான்...

எல்லா கதைகளிலும் வருவது போல் குடித்து விட்டு சத்தம் போடும் கேரக்டர் அல்ல மாரி... ரொம்பவும் சாது...சரக்கு அதிகமானால் தள்ளாட்டம் மட்டும் அதிகமாக இருக்கும்.. சாப்பிட்டு விட்டு சாதுவாக படுத்து விடுவான்... பெண் வயதுக்கு வந்து சரியாக இரண்டாவது மாதத்தின் ஒரு ஞாயிறு அன்று....

மதிய வெயிலில் நன்றாக குடித்து விட்டு வந்து சாதுவாக படுத்தவன்.. ஒரு விக்கலில் சவமாகி போனான்...குடும்பம் பொறுப்பு முழுமையாக கிரிஜாவுக்கு தோளில் இறங்கியது....

அப்போதுதான் பக்கத்து தெரு பெண்கள் திருத்தமாக உடை அணிந்து கொண்டு சிலர் லிப்ஸ்டிக்கும் ,பேகும்மாக வேலைக்கு போவதை பார்த்த போது...அவர்களிடம் தனக்கு ஏதாவது வேலை இருந்தால் சொல்ல சொல்லி இருந்தாள்....இரண்டு நாளில் வேலை கிடைத்தது.... முதலில் ஐடி அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்தாள்...பெண்களின் ஹெண்ட் பேக்,பெண்டிரைவ்,கேமரா செல்போன் போன்றவற்றை செக் செய்து ஆபிசுக்குள் அனுப்பும் வேலை...

ஒரு மதிய சாப்பாட்டின் போது அவளின் அண்ணன் போல் எல்லா கதையும் கேட்ட செக்யூரிட்டி சீப் ஆபிசர்... அத்தானாக அணைக்க ஆசைப்பட....செருப்பாள் அடித்து அந்த வேலையை உதறினாள்....அதன் பிறகுதான் இந்த ஹவுஸ் கீப்பிங் வேலை கிடைத்தது...

முதலில் உவ்வே வாக இருந்தது...இரண்டு மணி நேரத்தில் ஓடி விடலாமா? என நினைத்தாள்.... தன் மகளை படிக்க வைக்க இந்த வேலையை அவள் பெரிதும நம்பினாள்... காரணம் நிலையான வருமானம்...இந்த வேலையில் ஆண் ஹவுஸ்கிப்பிங் ஆட்கள் இருந்தாலும்... அவர்கள் டாய்லட் கிளின் செய்வது போன்ற உவ்வே வேலைகளை அவர்கள் செய்வதே இல்லை...

அங்கும் வீட்டு பெண்களை மிரட்டவது போல்...கிரிஜா எழாவது புளோர் டாய்லட்ல அடப்பாம்.. நீ போய் பாரு...செங்கேணி நீ கார்பாங்கிங்ல ஒரு பேமானி வாந்தி எடுத்து வச்சி இருக்கானாம்... அதை சுத்தம் செய் என்று விரட்டிக்கொண்டு இருந்தார்கள்...அவர்கள் பெண்கள் கேட் வாக் போகும் ஹால் மற்றும் அலுவலக அறைகளில் சைட் அடித்தபடி மாப் போட்டு சுத்தம் செய்வதோடு சரி...

முதலில் கிரிஜாவுக்கு இவர்கள் யார் நம்மை விரட்ட என்று கேள்வி வந்தது...ஆனால் ஹவுஸ் கீப்பிங் சூப்பரவைசருக்கு அவர்கள் தினமும் தாக சாந்தி செய்து விடுவதால் ஹவுஸ்கீப்பிங் ஆண்களை எந்த கேள்வியும் சூப்ரவைசர் கேட்பதில்லை... அப்படியே முறைத்துகொண்டாலும்...ஏதாவது சின்ன தவறு இருந்தாலும்...போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்பதால் எந்த கேள்வியும் கேட்காமல் இயந்திரமாய் எல்லா வேலையும் செய்ய பழகிக்கொண்டாள்...

கிரிஜா உள் பாடியுடன் கையைவிட்டு துழாவ அது கைக்கு அகபட்டது... அதை முகம் சுளிக்காம்ல் எடுத்து போட்டு விட்டு பிளஷ் செய்ய இப்போது தண்ணீர் போக அரம்பித்து... பினாயில் தண்ணீர் தெளித்து அந்த இடத்தை ஐஎஸ்ஓ 9001/2008 ஆக மாற்ற நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்துக்கொண்டு இருந்தாள்...


எப்படி வேலை செய்தாலும் இது நொட்டை அது நொள்ளை என்று குற்றம் கண்டுபிடிக்கும் சூப்பரவைசர்ஆணின் அதட்டல் குரூரம் எப்படியும் எட்டி பார்க்கும் என்று தெரிந்தாலும், அலட்சியமாக செய்யாமல் வேலையை ரசித்து செய்தாள்...


ஏன் இப்படி இந்த பெண்கள் இருக்கின்றார்கள்...? படித்தால் புத்தி கழண்டு விடுமா? பணம் கையில் வந்து விட்டால் எல்லாம் மறந்து போய்விடுமா? இதை எப்படியும் ஒரு மனிதன் சுத்தபடுத்துவான் என்று தெரிந்தும் எப்படி இப்படி இருக்கின்றார்கள்?


இது கூட பரவாயில்லை... பிளஷ் டெங்கில் சானிடரி நாப்கினை போட்டுவிட்டு போன கதைகள் எல்லாம் நடந்து இருக்கின்றது...வேலைக்கு வந்த புதுதில் ஒரு குறிப்பிட்ட டாய்லட்டை எவ்வளவு கிளின் செய்தாலும் பினாயில் போட்டாலும் அந்த தூரக் கவுல் மட்டும் போக மறுக்க .... தண்ணிரும் சரியாய்வர மறுத்தது...ராஜி அண்ணனை அழைத்து பார்க்க சொன்ன போது...


டாய்லட்டின் பிளஷ்டாங்கை திறந்து பார்த்தால் அதில் இரண்டு சானிட்டரி நாப்கின்கள் ஊறி கிடந்தது...சட்டென் கையால் எடுத்து போட்டு விட்டு தேவிடியா நாரக்....ங்க என்று சொல்லிவிட்டு சென்றது நினைவுக்கு வந்தது... பிளஷ் டெங்கின் மேல் மூடியை திற்ககலாம் என்பதே அவளுக்கு அப்போதுதான் தெரியும்.....



ஆனால் தன் மகள் அப்படி அல்ல சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்...வீட்டுக்கு விலக்கான நேரங்களில் கீற்று அடைத்த குளியில் அறைக்கு போனால் வர எப்படியும் அரைமணிநேரம் ஆகும் தண்ணிரை அப்படி செலவு செய்வாள்...எப்படி இருந்தாலும் தன் மகளின் சுத்தம் அவளுக்கு பிடித்த ஒன்று....மற்றவர்ககஷ்டங்கள் உணர்ந்து அதற்கு மதிப்பு கொடுப்பவள்....

அம்மா கஷ்டபட்டு குடுப்த்தினை காப்பாற்றுவது தெரிந்து எந்த வெட்டி செலவையும்,ஈஸ்வரி செய்தது இல்லை...ஒரு கடலை மீட்டாய் வாங்க கூட யோசித்து வாங்குவாள்...பணம் எப்போதும் பற்றக்குறை உள்ள குடும்பம் என்பதால் தன் வயதுக்கு கிடைக்கவேண்டிய நியாமான ஆசைகளை ஈஸ்வரி புறத் தள்ளி வளர்ந்தாள்.

அவளின் நேர்மை, படிப்பில் அவள் காட்டிய அக்கறை போன்றவற்றை பார்த்து கிரிஜா சந்தோஷபடாத நாளே இல்லை... அதனாலே பள்ளியில் லீடராய் இருந்தாள்...தன் மகள் பெரிய படிப்பு படிக்க வைத்து, நடந்து போகும் போது நாலு பேர் மதிக்கும் அளவுக்கு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று கடவுளிடம் அனுதினமும் கிரிஜா வேண்டிக்கொண்டாள்...

இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு இத்தனை அவமானங்கள் சகித்துக்கொண்டு வாழ்வது எல்லாம் தன் ஒரே மகளுக்காகதான்...ஐடி கம்பெனி என்பதால் இரண்டு நாள் லீவ்... திங்கள் கிழமை தனது மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு வந்தாள்...

வெள்ளிக்கிழமை பிளஷ் சரியயாக செய்த காரணத்தால் காய்ந்து போன மலத்தை கழுவ ஹேர்பிக் போட்டு, பத்து நிமிடம் காத்து இருந்தாள்...பிரஷ் எடுத்து நன்றாக கழுவினாள்.... அவளோடு வேலை செய்த இரண்டு பெண்கள் வேலைக்கு வராத காரணத்தால் அவளுக்கு அன்று பெண்டு நிமிரும் வேலை இருந்தது....

மதியம் சாப்பாட்டுக்கு மூன்று மணிக்கு உட்கார்ந்தாள்... முன் தினம் வைத்த மீன் குழம்பை ஊற்றி சாதத்தை கிளறி வாயில் வைக்கும் போது ஹவுஸ்கிப்பிங் அறையின் இன்டர்காம் ஒலித்தது...

கிரிஜா உடனே ஆபிஸ் ரூமுக்கு வா.. உங்க பொண்ணு படிக்கற ஸ்கூலில் இருந்து ஆட்கள் வந்து இருப்பதாக சொல்ல... ஆபிஸ் ருமுக்கு போகும் போது...ஈஸ்வரியின் பள்ளி ஆசிரியர் பதட்டத்துடன் இருப்பது தெரிந்து...கண்களில் நீருடன் ஈஸ்வரி மதியம் இரண்டு மணிக்கு தூக்கில் தொங்கி இறந்து விட்டதாக சொல்லபட்டது...கிரிஜா மூச்சு பேச்சு இல்லமல் கீழே விழுந்தாள்...

டூருக்கு போவதற்காக பிள்ளைகளிடம் வாங்கிய ரூபாய்களை ஈஸ்வரியிடம் கொடுக்க சொல்லி இருந்தாள் அவள் வகுப்பு ஆசிரியை...இரண்டு நாட்களில் சேர்த்த ரூபாய்1500ஐ இன்டர்வெல்லலில் யாரோ ஒரு மாணவன் மொத்த பணத்தையும் திருடி விட..சாப்பாட்டின் போது பணம் திருடு போன விஷயம் தெரிந்து... டீச்சர் ஈஸ்வரியை சத்தம் போட...

அவளின் நேர்மை அவள் மனசாட்சியை அரிக்க, அம்மாவின் கஷ்டம் நினைவுக்கு வந்து தொலைக்க...சில நாட்களுக்கு முன் டிவி சீரியலில் இக்கட்டான நேரத்தில் ஒரு பெண் தூக்கில் தொங்கும் காட்சி நினைவுக்கு வர...ஒரு மணி நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்து தன் தாவணியால் பெண்கள் கழிவரையில் தூக்கில் தொங்கினாள் ஹவுஸ்கீப்பிங் கிரிஜாவின் வாழ்வின் ஒரே நம்பிக்கை பெண் ஈஸ்வரி...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம் அமைச்சரே...


குறிப்பு...

எல்லோரும் அலட்சியமாக பார்க்கும் இது போலான விளிம்புநிலைமனிதர்களிடத்தில் நான் எப்போதுமே என் அன்பை அதிக அளவில் வெளிபடுத்துவேன்... நானும் விளிம்புநிலை மனிதனாக இருந்தவன் என்பதால்....அவர்கள் எப்போது என்னை பார்த்தாலும் என்னை கொண்டாடுவார்கள்...நலம் வீசாரிப்பார்கள்...

மாத கடைசியில் பெண்ணின் படிப்புக்கு கடனாய் என்னிடத்தில் 100,200 வாங்குவது உண்டு... மாதம் பிறந்ததும் அந்த பணம் நேர்மையாய் எனக்கு கிடைத்துவிடும்... நாளும் கிழமைகளில் நான் பணம் கொடுத்து இருக்கின்றேன்...

கிரிஜாவின் மகள் சாவுக்கு போனேன்.. பணத்தை ஈஸ்வரியின் மாலை போட்ட படத்துக்கு கீழே வைத்த போது....ஐயோ ஐயா.. என் பொண்ணு கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து ஆசி சொல்லி பணம் ஓதுவிங்கன்னு நினைச்சனே... இப்படி அநியாயமாக அவசரபட்டுவிட்டாளே.... என்று பெருங்குரல் எடுத்து மார்பில் அடித்துக்கொண்ட சத்தம் என் காதில் இன்னமும் கேட்டுக்கொண்டு இருக்கின்றது....


உண்மையில் கிரிஜாவுக்கு இன்னொரு பெண் குழந்தை இருக்கின்றது... அதே வேலை... ஈஸ்வரி மேல் வைத்த நம்பிக்கையை இரண்டாவது பெண் மேல் வைத்து காலம் தள்ளுகின்றாள்..

இந்த கதையை படித்த ஏதாவது ஒரு பெண் அல்லது ஆண் டாய்லட்டில் குப்பை போடாமல் இருந்தால்... அல்லது போடும் போது இந்த கதை நினைவுக்கு வந்தால் பல கிரிஜாக்களின் வேலைபளு நிச்சயம் குறையும்....அவர்களும் மனிதர்கள்தான்...

21 comments:

  1. காலையில் கலங்க வைத்து விட்டீர்கள். இது எல்லா அலுவலகத்திலும் நடக்கும் ஒரு நிகழ்வு. இதை பார்த்து திருந்துவார்களா

    ReplyDelete
  2. ஜாக்கி,

    என்ன சொல்றதுன்னே தெரியலை. நம்ம மக்கள் ஏன்தான் இப்படி இருக்காங்கன்னு தெரியலை. இதுலே படிச்சதுக்கும் படிக்காததுக்கும் அவ்வளவா வித்தியாசம் ஒன்னும் இல்லை.

    சின்னக் கொசுவத்தி.

    பலவருசங்களுக்கு முன் அடுத்த ஊரில் இருந்துவந்த ஒரு இந்தியப் பெண்ணை ரெண்டு நாட்கள் நம்ம வீட்டில் தங்கவைக்க வேண்டியதாப் போச்சு. மகளுடைய பள்ளிக்கூடத்துலே பாட்டுப்போட்டியில் பங்கேற்க வந்த பெண்.

    அந்தப்பெண் கிளம்புனவுடன் இதே ப்ராப்ளம்தான். ட்ரெய்ன் க்ளீனர்ஸ்க்கு ஃபோன் போட்டு ஒரு பையன் வந்தான். வேலைக்குப் பயிற்சி எடுக்கவரும் அப்ரெண்டீஸ்களுக்கு இதெல்லாம் தான் முதல் வேலை.

    ஆனாலும் ரொம்பச் சின்னப்பையன். என் மகளைவிட ஒன்னுரெண்டு வயசு அதிகம் இருக்கலாம். எனக்கு மனசுக்குச் சங்கடமாப் போச்சு.

    நல்ல சுத்தமான உடுப்பு, மேலே ஓவர் ஆல். கையில் சின்னதா ஒரு மெஷீன்.

    அஞ்சே நிமிசம். எல்லாம் படு சுத்தம்.

    எங்கூரில் டிப்ஸ் கொடுக்கும் வாங்கும் வழக்கமில்லை. கொடுத்தால் அது அவர்களை அவமதிப்பதாக அர்த்தம்.

    அதனால் ஒரு நூறு தேங்க்யூ சொல்லி அனுப்பினேன்.

    அப்புறம் பில் வந்தது. 100 டாலர்.

    ReplyDelete
  3. என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...
    கண்ணீரை கட்டுபடுத்தவே முடியவில்லை ...

    ReplyDelete
  4. காலையில் கலங்க வைத்து விட்டீர்கள். இது எல்லா அலுவலகத்திலும் நடக்கும் ஒரு நிகழ்வு. இதை பார்த்து திருந்துவார்களா--

    நன்றி எல்கே... மிக்க நன்றி திருந்திவேண்டும் அல்லது மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  5. அதனால் ஒரு நூறு தேங்க்யூ சொல்லி அனுப்பினேன்.

    அப்புறம் பில் வந்தது. 100 டாலர்.//

    டீச்சர் இதுவே ஒரு சிறுகதை போல் இருந்தது....

    ReplyDelete
  6. என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...
    கண்ணீரை கட்டுபடுத்தவே முடியவில்லை ...//

    செந்தில் இறந்து போன பெண் கர்பமாகி இறந்து போனாள் என்று ஒரு மாதத்துக்கு பின் கதை கட்டி விட்டு தங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொண்டது தனி கதை...

    ReplyDelete
  7. நாளுக்கு நாள் நடக்கும் கூத்து இது.நல்ல கருத்து. அனைவரும் பின்பற்ற வேண்டியது முக்கியம்.

    கதை நடையில் ஒரு பத்தி மட்டும் இரு முறை வந்திருந்தது, கவனிக்கவும்.

    ReplyDelete
  8. ஜாக்கி,

    விளிம்பு நிலை மனிதர்களின் அவலங்களைப் பதிவு செய்ததற்கு நன்றி. இதைத்தவிர என்ன சொல்வதென்று தெரியவில்லை. தேசிய அலட்சியம் மாற வேண்டும்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  9. Mr. J'sekar,

    Its realy nice to read and people can learn somethings from above story..... I am impressed keep it up all the best....

    ReplyDelete
  10. girija KARUPPAKA irunthaalum panthamaka iruppaal.// karuppendraal ungalukku kevalamaaka therikirathaa?

    ReplyDelete
  11. Dear Jack,

    Really Good. Message is very clear.Please complete this type of stories positively. like Eswari got a job and her mother Girija live peacefully with her.

    Regards
    S.Sakul Hameed

    ReplyDelete
  12. ரொம்ப கஷ்டமாக இருக்குது அண்ணா...
    இவர்கள் என்று இல்லை... மழை காலங்களில் சாக்கடை அடைத்து கொண்டால், உள்ளுக்குள் இறங்கி தூர் வாரும் பணியாளர்கள் என எவ்வளவோ மக்கள் சுத்தம் பணியில் இருக்கிறார்கள்.... அதை அள்ளும் போது அவர்களுக்கு என்ன நோய்கள் வரும் என்பது கூட தெரியாது.. என்ன செய்வது, எவ்வளவோ செலவு செய்யும் நம் அரசுகள், அவர்களுக்கு நல்ல உடைகள், பாதுகாப்பான உபகரணங்கள் வழங்கலாம்...

    // முதலில் இந்த கதையை படிக்கும் போது கொஞ்சம் அல்லது அதிகமாக அருவருப்பு வர நேரலாம்...உண்மையை இப்படித்தான் விரிவாய் எனக்கு சொல்ல வருகின்றது....//
    கழிப்பறைக்கு சென்று விட்டு, தன் வேலை முடிந்தது என்று... ஒழுங்காக toilet-கு தண்ணி ஊற்றாமல் வரும் மனிதர்கள்தான் அருவருக்க வேண்டும்... இந்த பதிவில் அருவருப்பு இல்லை அண்ணா... கோபந்தான் வருகிறது...

    எனது கவிதை ஒன்று; http://ippadikkuelango.blogspot.com/2009/09/blog-post.html
    நன்றி

    ReplyDelete
  13. எனக்கும் டீச்சர் மாதிரியே என்ன சொல்றதுன்னு தெரியல ஜாக்கி..
    இந்த மாதிரி மனிதர்களை நினைக்கையில் கோபமும், புலம்புவதைத் தவிர எதுவும் செய்யாத நம்மை (நான், நீ ++++) நினைக்கும் போது அதீத கோபமும் வருது...

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  14. இதை பற்றி ஏற்கனவே பல பெண்கள் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் கஷ்டத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்துள்ளீர்கள். நானும் எனது blog-ல் இக்கதையை இணைக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி வேண்டும்...

    ReplyDelete
  15. //செந்தில் இறந்து போன பெண் கர்பமாகி இறந்து போனாள் என்று ஒரு மாதத்துக்கு பின் கதை கட்டி விட்டு தங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொண்டது தனி கதை...//

    :((( கொடுமை

    ReplyDelete
  16. jackie anna,

    some bastards will spit the chewing gums in the washbasin........ and also in the toilets above we can see notice like dont spit the chewings gums here.......


    At that time i will tell my colleague to urine that guy mouth who spitted there.....

    ReplyDelete
  17. super nga idhukku mela solla vaarthai illanga sir......

    ReplyDelete
  18. கண்கள் குளமாகிவிட்டன ... நண்பரே ...

    ReplyDelete
  19. தூக்கம் வரவில்லை.....சரி அப்டியே உங்க பழைய பதிவுகளை படிக்கலாம்னு உக்காந்தேன்.....
    ரொம்ப மனசுக்கு கஷ்டமா போச்சு ஜாக்கி.....
    ஒரே ஆறுதல்....நானும் உங்கள மாதிரித்தான்....விளிம்புநிலை மனிதர்கள் மேல எனக்கு மரியாதையும் அன்பும் எப்போதும் உண்டு...
    ஹைதராபாத்திலும் சரி இப்பொழுது சென்னையிலும் சரி பணியிடத்தில் உள்ள விளிம்புநிலை மனிதர்களிடம் அதே நேசம் தான்...
    எப்பொழுது பார்த்தாலும் ஒரு புன்னகையுடன் வணக்கம் வைத்து சாப்டாச்சா வீட்டுக்கு கிளம்ப்ரீங்க்ளா என்று கேட்டு விட்டே தங்களின் வேலையே தொடருவார்கள்....
    அவர்களை வெளியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஒரு டி மற்றும் சிகரட் பகிர்ந்து கொள்வேன்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner