தம்பி திருமணம் முடிந்து நேற்றுதான் கடலூரில் இருந்து வந்தேன்...நடந்தைவைகளை படித்து பார்த்தேன்.....இப்போது
பதிவுலகில் நடந்து கொண்டு இருக்கும் லைலாபுயல் போன வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்னும் தீர்வு எட்டமுடியாமல்...திண்டாடிகொண்டு இருக்கின்றது...
அதை ஏன் கேட்கவில்லை? இதை ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்விகள் வருகின்றன... எதை கேட்பது எதை கண்டிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்....நீ ஏன் தனியாக கண்டிக்கவில்லை என்று கேள்வி கேட்கபட்டது...எங்க வீட்ல கல்யாணம்.. அந்த வேலை எனக்கு தலைக்குமேல இருக்கு... நான் எங்க தனியா பதிவு போடறது..
எல்லாதளத்திலியும் போய் கண்டனம் தெரிவிச்சிக்கினு இருக்க முடியாது...வேற வேலை இல்லையா...நர்சிம் எழுதியதை எப்போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிட்டாலே... அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றுதானே அர்த்தம்...இதுக்கு மேல் இந்த விசயம் பற்றி எழுதி திரும்பவும் புயல் கிளப்ப விரும்பவில்லை....
சிலர் என்னை ஒரு ஆணாதிக்கவாதியாகவும்.. ஜாதிக்கு கொடி பிடிப்பதாகவும் எழுதி இருக்கின்றார்கள்... அதே போல்.... பொது பிரச்சனைக்கு நான் குரல் கொடுத்ததே இல்லையாம்...நானெல்லாம் மொக்கை பதிவராம்...சந்தோஷம்.....இருந்துவிட்டுபோகின்றேன்...என்னை பற்றி என்னை வாசிப்பவர்களுக்கு தெரியும்... என்னை வாழ்த்தி வரும் பலருடைய கடிதங்கள் எனக்கு போதுமானது... மற்றவர்கள் பற்றி நான் என்ன சொல்ல??? சிலதுக்கு பதில் சொல்வதை விட பறக்கனிப்பு நல்லவிசயம் என்பேன்...
=======================
பதிவர் மங்களுர் சிவா காட்டுக்கத்தல் கத்திக்கொண்டு இருக்கின்றார்... இந்த பதிவுலக சர்ச்சைபுயலில் மங்களுர் சிவாவும் கத்தியது எடுபடாமல் போய்விட்டது...யாராவது அவருக்கு பதில் சொல்லுங்க...அவர் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லுங்க....அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலை தீர்த்து வைங்க..
===================
வீட்ல சிபி கனெக்ஷன் எடுத்து இருக்கேன்... எதாவது எழுதலாம்னு உட்கார்ந்தா எப்படித்தான் மூக்கு வேர்க்கும் என்று தெரியவில்லை .. நெட் கனெக்ஷன் கட் ஆகிடும்... சரி யூஎஸ்பி பார்மேட்டில் கனெக்ஷன் எடுக்க நம்ம பட்ஜெட் ஒத்துக்க மாட்டுது...சரி பிஎஸ் என் எல் எடுக்கலாம்னா.. என் வீட்டுக்கு பக்கத்தில் எல்லோரும் அதுதான் யூஸ் செய்கின்றார்கள்... ஆனால் என் வீட்டுக்கு ரோடு கிராஸ் செய்து வராதாம்...ஏர்டெல்,டாடாஇன்டிகாம் இங்க சர்விஸ் இல்லை...யாராவது வெயிட்டா பிஎஸ் என் எல்லில் இருந்தால் என் வீட்டுக்கு நெட் உடனடி சாத்தியம்...
===========================
போனவாரம் இரண்டு கிருஸ்துவ பாதிரியார்கள் மனதை அடகு வைத்துவிட்டு குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க துனை புரிந்து இருப்பதாக டிகது செய்யபட்டார்கள்...அதை சன்நியூஸ் செய்தி வெளியிட்டது.... எவ்வளவு கேவலம்...மனசாட்சியே இல்லாத மாபாவிகள்....
========================
பெரிமா பையன் சித்தி பெண் அண்ணன் தங்கை உறவில் தெரிந்தோ தெரியாமலோ காதல் தீ பற்றிக்கொள்ள காதலர்கள் ஓட்டம் பிடித்தனர்...கேரளாவுக்கு போய்விட்டார்கள்.. தேடிபிடித்து இருவரையும் கொன்றுவிட்டார்கள்.. போலிசில்.. தங்கள் பிள்ளைகள் கானோம் என உறவுகள் புகார் கொடுக்க... போலிஸ் விசாரிக்கும் போது இந்த உண்மை தெரிய வந்து இருக்கின்றது...
================
மிக்சர்...
குஷ்பூ திமுகவில் சேர்ந்து விட்டார்... இனி எந்த கருத்தையும் அவர் தைரியமாக சொல்லலாம்...
===========
பொதுவா நான் சீரியல் பார்பதில்லை...நாதஸ்வரம் சிரியல் பல ஷாட்டுக்ள் கட் ஷாட்டா இல்லாம லைவ்வா எடுத்து இருக்கங்க.......
=============
விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறு வயதில் இருந்தே ராகம் கத்துக்கொண்ட கூட்டத்துக்கு நடுவில்...பகட்டு உடை இல்லாமல் ஒரு கிராமத்து சிறுவன் ஒருவன்.. விஷ்னுசரன் வெறும் கேள்வி ஞானத்தை வைத்து பாடுவது சிறப்பு.. அடுத்து எனக்கு அந்த டான்ஸ் அடிக்கொண்டே பாடும் நித்யஸ்ரீ என்று நினைக்கின்றேன் அந்த பெண்ணை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..
==============
செம்மொழி பாடல்.. சலனபடம்...
மிக அழகாய் அற்புதமாய் காட்சிபடுத்தபட்டடுள்ளது.... ஆனால் கவுதம் ஒரு மலையாளி என்பதால் அவருக்கு ஏன் இதனை இயக்க வாய்ப்பு கொடுத்தார்கள் என்று ஒரு சாரர் லாபி செயதனர்...திறமையனவர் எவர் இயக்கினால் என்ன?
எனது கேள்வி எல்லாம் ஓக்கே....
இதில் என் மண்ணின் மனம் என்பது கொஞ்சம் குறைச்சலாக இருப்பதாகவே எனக்கு படுகின்றது... மேட்டுக்குடியின் வாழ்க்கை மட்டுமே இடம் பெற்று இருப்பதாக என் எண்ணம்.... இன்னும் தமிழக கிராமத்தின் வெள்ளைமனித சிரிப்புகளை,அவர்கள் வாழ்க்கை முறையை சரிபாதியாக பதிவுசெய்யபடவில்லை என்பது என் கருத்து...... மற்றபடி பாடலும் படமாக்கியவிதமும் அருமை...
ஒரு காமெடி கமர்சியல்... சலனபடம்
============
ஒரு நெகிழ வைத்த கடிதம்...
Mr Jackisekar,
i just read your article,
http://jackiesekar.blogspot.
i am just proud off you, and your life should be higlighted to many people,
you have opened so many eyes on me, thanks for that,
sicne i don't know how to type tamil. i am writting in english,
and i will be happy if i get your phone no, and i would like to speak to you,
by the way i am also from cuddalore Dist, pennadam is my native place , and right now working and living in Trivandrum,
thanks and regards,
S.Vivekanandan.
படித்ததில் பிடித்தது..
குஷ்பூவின் ஜாக்பாட் நிகழ்ச்சி ஜெயாடிவியில் இருந்து தூக்கிட்டாங்களே?..
உண்மைய சொல்லுங்க நீங்க ஜாக்பாட் போனதுக்கு கவலைபடுகின்றீர்களா?... அல்லது ஜாக்கெட் போனதுக்கா...??
இந்த வார குமுதம் அரசுபதில்..
=================
நித்யானந்தாவை
நித்தமும் பழிக்கும்
என் மனைவிக்கு
இன்று வரை தெரியாது
முத்துக்குமார் என்றொருவன்
மரித்துபோனது...
என்றாவது ஒரு நாள்
என் நாட்குறிப்பிலுள்ள
அவன் புகைபடத்தை காட்டி கேட்பாள்
அப்போது சொல்லிக்கொள்ளலாம்
நம்மையெல்லாம் ஏமாற்றினானே
ஒரு நித்யானந்தா
அவனை போல்
நம் எல்லோராலும் ஏமாற்றபட்டவன்தான்
இந்த முத்துக்குமாரென்று...
முத்து ரூபா.. இந்தவார விகடன்
=========================
பிலாசபி பாண்டி..
நீ ஜெயித்தால் முன்னேற்றம் அடைவாய்...
தோற்றால் வழி நடத்துவாய்...
===========
மனிதனுக்கு கையில் விரல்களில் கேப் இருப்பது எதற்கு தெரியுமா? வாழ்க்கை துணை அந்த விரல்களின் இடைவெளி நிரப்பி அவள்கை கோர்த்துக்கொள்ள....
==============
நான்வெஜ்..
=========
வலியை தாங்க தாங்கதான் சந்தோஷம் கிடைக்கும்... இதை வேறு மாதிரியும் எடுத்துக்கொள்ளலாம்.. அல்லது அறிவுரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்...
==============
கேர்ள்பிரண்ட்...நான் பிரக்னன்டா இருக்கேன்...
பாய்பிரண்ட்....நிச்சயமா தெரியுமா? நான்தான்னு...
கேர்ள்பிரண்ட்.. சினுங்கிய படி இப்படி எல்லாரும் சொன்னா... நான் எனனனதான் செய்யறது...
=================
அந்த பீச்சில் எல்லோரும் துணி இல்லாமல் இருந்தார்கள்...அதற்க்கு நியூட் பீச் என்று பெயர்....அதில் ஒருவன் ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டு அவளிடம் போய் சொன்னான்.....நீங்க ரொம்ப அழகாவும் செக்சியாவும் இருக்கிங்க... உங்கள பார்க்கும் போதே ஜொள்ளுவிடலாம்னு இருக்கு...அது எனக்கு நல்லாவே தெரியும் என்றாள்... எப்படி என்றான்...உங்க இடுப்புக்கு கீழ பார்த்தாலே தெரியுது...
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...
அண்ணே எனக்கும் நடக்கும் பதிவுலக சச்சரவுகள் குறித்து வருத்த்மே என்றாலும்,மேலும் சொந்தமாய் பதிவு போட்டு புண்ணை சொரிய முடியாது,இப்போது எல்லார் சாதியும் எல்லோருக்கு தெரிந்துவிட்டது,:)
ReplyDeleteநல்ல பதில் சொன்னீர்கள்.
===
ஜாக்பாட்டில் இனி நதியா:)
இனி ஜன்னல் வச்ச ஜாக்கெட் இல்ல
nice post,
ReplyDeleteSifi connection will be too bad.
ஒரு காமெடி கமர்சியல் நல்ல இருந்தது
ReplyDeleteசிலதுக்கு பதில் சொல்வதை விட பறக்கனிப்பு நல்லவிசயம் என்பேன்...]]
ReplyDeleteமிக மிக
மிக்ஸர், சாண்ட்விச்-ஐ விட உங்க பதிவுல நிறைய விஷயங்கள் இருக்கு ஜாக்கி அண்ணே.. கலக்குங்க..
ReplyDeleteமிக்ஸர், சாண்ட்விச்-ஐ விட உங்க பதிவுல நிறைய விஷயங்கள் இருக்கு ஜாக்கி அண்ணே.. கலக்குங்க..
ReplyDeleteமிக்ஸர், சாண்ட்விச்-ஐ விட உங்க பதிவுல நிறைய விஷயங்கள் இருக்கு ஜாக்கி அண்ணே.. கலக்குங்க..
ReplyDeleteநதியா கொண்டை ரிட்டன்ஸ்...
ReplyDeleteசெம்மொழி சலன்ப்படத்தில் நேட்டிவிட்டி குறைவு என்பது உண்மைதான். மதுரை கோவில், புஷ்பவனம் குப்புசாமியின் பாடல் போன்ற சில விசயங்களை சேர்திருக்கலாம்
இம்மாம் விசயம் ஜாக்கிக்கு தெரிஞ்சிகினு நம்ம வூட்டாண்ட வந்து
ReplyDelete"இன்னாயா இத்து "
அப்டீன்னு கேள்வி கேட்டுகினா நல்லாக்கீதா தொர?
நீயி அங்க பாத்துகினது இன்னான்ற?
"படா படா பிரபலமான பதிவருங்கோ "
(அட ஒன்னிய இல்லப்பா,நீயி தான் ஆருன்னு நமக்கு
தெர்ராதா? )
அவனுங்கோ அல்லான் சண்ட இட்டுகினு சண்ட இட்டுகினு
அப்டி நசுங்கி, ஒடஞ்சி ,கிளிஞ்சி பூட்டானுங்கோ அதத்தான்
அப்டி எல்லாத்தையும் ஒன்னா இட்டு வெச்சிகினு கூவிகினு கீரன்
வாஜாரே! இன்னா பிரீல ? ஒன்னக்கா பிரியாது ?!
சில விஷயங்களை கடந்து தான் போக வேண்டியிருக்கிறது. கண்டனம் எப்படி தெரிவிக்கப்பட்டாலும், போதாது சட்டையைப்பிடித்து அடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தால் எப்படி?
ReplyDeleteஇவர்கள் சொல்வது போல் அநியாயத்தை தட்டி கேட்கவேண்டும் என்றால் என் வீட்டிற்கு எதிராக நிறைய அநியாயம் நடந்துள்ளது. தட்டி கேட்க யார் வருவார்? இதை விட நாட்டில் எதுவும் அநியாயமே நடக்கவில்லையா?
இந்த பிரச்சனை குறித்து பதிவிட்டு மேலும் புண்ணாக்கியவர்கள் தான் அதிகம். வருத்தம் தான்.
ஜாக்கி சார்
ReplyDeleteஉங்க வலை பூவை தேடி படிக்க காரணமே இதான். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி தரீங்க.... ஒவ்வொரு வாரமும் நீங்க சொல்ற படத்த தான் பாக்றேன்....
நன்றி சார்......
அண்ணாச்சி மொக்கைப் பதிவு எழுதக்கூட ஒரு திறமை வேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜம் என விட்டுவிடவேண்டியதுதான்
ReplyDeleteநித்யஸ்ரீயை விட அல்காவிற்க்கு நடுவர்கள் சப்போர்ட் செய்வதுபோல் தெரிகின்றது.
செம்மொழிப் பாடல் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் மேற்கத்திய இசையில் வந்திருக்கின்றது. இனி ஒன்றும் செய்யமுடியாது. மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர், சசிகுமார் எனப் பல தமிழர்கள் இருக்க கெளதம் வாசுதேவ மேனன் இயக்கியது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. இவர் கெளதமாக இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் வாசுதேவ மேனனாகி தன்னுடைய ஹைடெக் கலாச்சாரம் அல்லது நீங்கள் கூறியது மேட்டுக்குடி மக்களைக் குறிவைத்து இயக்கி இருக்கின்றார். முதல்வர் இவற்றை ஏன் கண்டுக்கவில்லை என்பது புரியாத புதிர்.
வழக்கம் போல் அருமையான சாண்ட்வெஜ்
அண்ணே, டாடா வேண்டாம். இப்ப ரொம்ப மோசமா இருக்கு,
ReplyDeleteசலனபடம் சூப்பர்,ரொம்ப நேரம் நினைச்சு நினைச்சு சிரிச்சேன்
ReplyDeleteசிலதுக்கு பதில் சொல்வதை விட பறக்கனிப்பு நல்லவிசயம் என்பேன்...
ReplyDeletePlease correct this
ஏதோ அவசரத்தில் எழுதிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எழுது பிழைகள் சற்று தென்படுகின்றன திருத்திக்கொள்ளவும் நண்பர் ஜாக்கி அவர்களே.இது ஒரு அன்பனின் வேண்டுகோள் மட்டுமே .
ReplyDelete//ஆனால் கவுதம் ஒரு மலையாளி என்பதால் அவருக்கு ஏன் இதனை இயக்க வாய்ப்பு கொடுத்தார்கள் என்று ஒரு சாரர் லாபி செயதனர்
ReplyDeleteஅப்படி பார்த்தால், பாடியவர்களில் எத்தைனை பேர் தமிழர்கள்? சரி தானே? :-)
//திறமையனவர் எவர் இயக்கினால் என்ன? எனது கேள்வி எல்லாம் ஓக்கே...
200% ஓகே. தமிழ் வாழ ஒரு அமெரிக்கன் கூட உதவலாம்.
//ஒரு நெகிழ வைத்த கடிதம்...
உங்களை நேரில் சந்திக்க விருப்பம்.
ஏ ஜோக்கு சூப்பர் பாஸ். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteசென்னை பதிவர் சந்திப்பு –தொகுப்பு,புகைப்படங்கள்
ReplyDeletehttp://kaveriganesh.blogspot.com/
நன்றி கார்த்தி....உண்மைதான் எல்லோருக்கும் தெரிந்து விட்டது... என்ன சாதின்னு..
ReplyDeleteநனற் ராம்ஜி.. வேறு கனெக்ஷன் மாறனும்..
நன்றி சங்கர்..
நன்றி ஜமால் எப்படி இருக்க..
நன்றி ஜெய்...
நாஞ்சில் பிரதாப்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.
நன்றி கக்கு மாணிக்கம்.. நீ இவ்வளவு அறிவாளியா?
ரோஸ்விக்.. அதனால்தான் நான் அமைதி காத்தேன்..
நன்றி வந்தி...நிறைய பாயிண்ட் சொல்லி இருக்கின்றீர்கள்... நன்றி விரிவான பின்னுட்டத்துக்கு...
நன்றி மாயாவி.. நீங்கள் என் மீது கொண்ட மதிப்புக்கு...
நன்றி எல்கே.. அதையும் கொஞ்சநாள் வைத்து இருந்தேன்..
நன்றிலியோ
நன்றி அரண்.. அவசரம்தான்
நன்றி ரமேஷ்
நன்றி காவேரி
Gautham’s father is a malaylai and mother is Tamil (Vellalar – now u know the reason for chimbu caste in VTV). How come we call him simply malayali. He is half mallu –half tamil. Since he is affectionate with father after his death he added his full name.
ReplyDelete//விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறு வயதில் இருந்தே ராகம் கத்துக்கொண்ட கூட்டத்துக்கு நடுவில்...பகட்டு உடை இல்லாமல் ஒரு கிராமத்து சிறுவன் ஒருவன்.. விஷ்னுசரன் வெறும் கேள்வி ஞானத்தை வைத்து பாடுவது சிறப்பு..//
ReplyDeleteyes ttue.. really e sings gud..
How was the exams jackie..?
ReplyDelete//இதில் என் மண்ணின் மனம் என்பது கொஞ்சம் குறைச்சலாக இருப்பதாகவே எனக்கு படுகின்றது... மேட்டுக்குடியின் வாழ்க்கை மட்டுமே இடம் பெற்று இருப்பதாக என் எண்ணம்.... இன்னும் தமிழக கிராமத்தின் வெள்ளைமனித சிரிப்புகளை,அவர்கள் வாழ்க்கை முறையை சரிபாதியாக பதிவுசெய்யபடவில்லை என்பது என் கருத்து...... மற்றபடி பாடலும் படமாக்கியவிதமும் அருமை...//
ReplyDeleteகௌதம் வாசுதேவ மேனன் செம்மொழி பாடலையும் தனது திரைப்படங்களை போலவே A சென்டர் ரசனைக்கு இயக்கி இருக்கிறார்... செம்மொழி பாட்டு A, B, C ன்னு எல்லா சென்டர்க்கும் சேர்த்து இயக்கம் இருக்கணும்னு யாருமே அவருக்கு சொல்லவில்லையாம் பாவம் அவர் என்ன செய்வாரு?
ok write poolam veedu .
ReplyDeleteEvery articales , good.