(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....


இந்த உலகில் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.... நம்மோடு பழகியவ்ர்களே ஆப்படிக்கும் காலம் இது...பணம் என்ற ஒரு விஷயம் பிரதானமாக இருக்கும் போது எல்லாம் சாத்தியமாகும்....

சரி உங்களோடு ஒருவன் வலிய வந்து பழகுகின்றான் என்றால் என்ன அர்த்தம்... ஏதோ ஒரு விஷயத்துக்கு அவன் உங்களிடம் ஆட்டையை போட போகின்றான் என்று அர்த்தம்...

அதே போல் நம்ம ஊர்ல தடுக்கி விழுந்தா திருவிழாதான்... ஆனா வெள்ளைகாரனுக்கு ஒரே திருவிழா கிருஸ்மஸ்தான்... அதுக்காக ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே அந்த விழாவுக்காக ஆயுத்தம் ஆயிடுவாங்க...அந்த கிருஸ்மஸ்க்கு முன்ன சாண்டா கிளாஸ் வேஷம் போட்டுகிட்டு மனிதர்கள் மக்களை மகிழ்விப்பாங்க...ஆனா அதை வேஷத்தை போட்டுகிட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொள்ளை அடிக்க போறாங்க... அது என்னன்னு இப்ப பார்ப்போமா?

REINDEER GAMES படத்தின் கதை என்ன??ருடி(Ben Affleck)நிக்கி (James Frain ) இரண்டு பேரும் வேவ்வேறு குற்ற பின்னனியோட ஜெயிலுக்கு வந்தவங்க... இரண்டு பேரும் ஜெயிலில் ஒரே ரூம்.. அதனால் இரண்டு பேருடைய பர்சனலும் அத்துபடி நிக்கிக்கு ஒரு லவ்வர் இருக்கா....

ஆஷ்லி(Charlize Theron) அவ வாரத்துக்கு ஒரு லட்டர் போடுவா... தன் காதலியோட லட்டரை அப்படியே ருடிக்கிட்ட நிக்கி படிச்சி காமிப்பான்... இதுவரை ரெண்டு பேரும் பார்த்துகிட்டது இல்லை....

இரண்டு நாளில் இரண்டு பேருமே விடுதலையாக வேண்டிய தருணத்தில் சிறையில் நடக்கும் ஒரு திடிர் மோதலில்...ரூடியை கொலை செய்ய ஒரு ரவுடி வர அவனை காப்பாத்த நிக்கி தன் நண்பன் ரூடிக்காக உயிரை கொடுக்கின்றான்....

இரண்டு நாளில் ரூடி சிறையில் இருந்து வெளியே வர நிக்கியோட் காதலி அவன் இறந்து போனது தெரியாம.. அவனுக்கா சிறைக்கு வெளியே காத்து இருக்கா... அதை ரூடி பார்த்துட்டு மனசு கேட்காம.. நான்தான் நிக்கி என்று பொய் சொல்ல ... இருவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்....

சரி கதையில ஒரு டுவிஸ்ட் வேண்டாமா???

ஆஷ்லி யோட அண்ணன்... கேப்ரியல்(Gary Sinise ) தனது அடியாட்களுடன்.....இரண்டு நாளுக்கு அப்புறம் இரண்டு பேரையும் கத்தி முனையில மிரட்டி...நிக்கி ஏற்கனவே வேலை செய்த காசினோவை கொள்ளை அடிக்கும் வழியை சொல்ல சொல்ல...

அப்போதுதான் தான் நிக்கி இல்லை ரூடி என்று உண்மையை சொல்ல.... காதலியும் அவள் அண்ணனும் நம்ப மறுக்க.... அப்பதான் ரூடிக்கு ஆப்பை நாமலே தேடிபோய் உட்கார்ந்து கிட்டது தெரிய வருது...

ரூடிக்கு காசினோ பத்தி ஏதுவும் தெரியாது... இருந்தாலும் மிரட்டலில் உயிர் பயத்தில் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள... உயிர் பிழைக்கின்றான்...

தான் நிக்கி இல்லை என்று நிருபித்தானா? அல்லது காசினோ பற்றி ஏதும் தெரியாமல் காசினோ கொள்ளைக்கு உதவி செய்தானா?... ஆஷ்லி உண்மையாலும் ரூடியை லவ் செய்தாளா? போன்றவற்றை திரையில் பார்த்து மகிழுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்கள்....

படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே... சாண்டா கிளாஸ்கள் இரத்த வெள்ளத்தில் பினியில் இறந்து போய் இருப்பது போல் காட்டும் போதே படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வந்து விடுவது உண்மை.,.

ஆனால் இந்த படத்தை விமர்சகர்கள் குத்தி கிழித்தார்கள்...இந்த படம் சரியில்லை என்று.... இருப்பினும்.. இந்த படத்தை பார்க்கலாம்..

இயக்குனர் John Frankenheimer இயக்கியஇந்த படம் பல டுவிஸ்ட்டுகள் உள்ளடக்கிய படம்....

நல்ல திரில்லர்..இப்படித்தான் கதை பயணிக்க போகின்றது என்று நினைத்தால்... தம்பி அது அப்படி கிடையாது என்பதாய் இந்த கதை பயணகிக்கும்...

நல்ல பனி காலத்தில் முழு படபிடிப்பையும் நடத்தி இருக்கின்றார்கள்....

என்னவோ தெரியவில்லை தொடர்ந்து நான் பாக்கும் நான்கு படங்களில் Charlize Theron சர்வ நிச்சயமாய் தன் மேலழகை காட்டி விடுகின்றார்... இந்த படத்திலும் அப்படியே....

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு போனதும் ஆஷ்லியும் ரூடியும் இடையே நடக்கும் வெறித்தனமான காமத்தை மிக அழகாக படம் பிடித்து இருப்பார்கள்...

இரண்டு பேரும் பனி எரியில் தண்ணீரில் சிக்கி கொள்ளும் அந்த காட்சி.. அதில் இருந்து தப்பிப்பதும் ரொம்ப அற்புதம்....

நான் நிக்கி இல்லை ரூடி என்றும் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் போதே பொளுக் என்று மூகத்தில் குத்தி முகத்தில்ரத்தம் வர வைக்கும் அந்த காட்சி அற்புதம்.....

படத்தின் காட்சி முன்னோட்டம்...படக்குழுவினர்விபரம்....

Directed by John Frankenheimer
Produced by Marty Katz
Chris Moore
Bob Weinstein
Written by Ehren Kruger
Starring Ben Affleck
Gary Sinise
Charlize Theron
Music by Alan Silvestri
Cinematography Alan Caso
Editing by Antony Gibbs
Michael Kahn
Distributed by Dimension Films
Release date(s) February 25, 2000
Running time 104 minutes
Language English
Budget $36 million USD

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

10 comments:

 1. டவுன்லோடு போட்டாச்சு ஜாக்கி. படம் பாத்துட்டு சொல்றேன்.

  ReplyDelete
 2. ட்விஸ்ட் படமா ? கண்டிப்பாக பார்க்க வேண்டும்

  ReplyDelete
 3. 500 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜாக்கி சார்! என்னிக்குமே கமெண்ட் ஓட்டு இதையெல்லாம் வெச்சு உங்க எழுத்தை ஜட்ஜ் பண்ணிடாதீங்க, என்னை மாதிரி சைலண்ட் சைத்தான் (சைக்கு சைன்னா இப்படி வந்துடுச்சு..) நிறைய பேரு இருக்கோம்னு அவசியம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! :)

  ReplyDelete
 4. நீங்க சொல்லியாச்சு இல்ல டவுன்லோட் போட்டுர்றேன்
  நன்றி

  ReplyDelete
 5. thanks for review


  இராமசாமி கண்ணண் ,

  டவுன்லோடு link pls ?

  ReplyDelete
 6. நீங்களே ஒரு படத்த டைரக்ட் பண்ணலாம் போல...

  ReplyDelete
 7. நன்றி இரமசாமி கண்ணன்....பார்த்துட்டு சொல்லுங்க...

  ReplyDelete
 8. நன்றி இரமசாமி கண்ணன்....பார்த்துட்டு சொல்லுங்க...

  நன்றி பின்னோக்கி.... நிச்சயம் பாருங்க.. இந்த படம் ஏமாத்தாது...

  மிக்க நன்றி பொற்கொடி உங்கள் தொடர் வாசிப்புக்கு...

  நன்றி யாழி பாபா போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றிகள்..

  ReplyDelete
 9. நன்ற அசோர்ட்ஸ்

  நன்றி குரு..

  இராமசாமி அவர்களுக்கு லிங்க கொடுத்து உதவுங்க...

  நன்றி அனைவருக்கும்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner