பதிவுலகில் கற்றதும் பெற்றதும்(508வது பதிவு..பாகம்/1)


பதிவுலகில் கற்றது....

பதிவுலகம் வந்து இன்றோடு இரண்டு வருடங்களும் 2மாதங்களும் ஆகிகின்றன...500க்கு மேற்பட்ட பதிவுகள்... தமிழ் டைப்பிங் தெரியாமல், கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு இல்லமால் இந்த பதிவுலகத்துக்கு வந்தேன்...இப்போதும் அப்படியே....

ஒரு சின்ன பிளாஷ் பேக்கில் கொஞ்சம் பார்க்கலாம்... தொடரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை... தொடரவிருப்பம் உள்ளவர் மேலே தொடரவும்....

தமிழகத்தின் நடுநாடு என்று சொல்லபடுகின்ற கடலூர்காரன்... கடலூர் நகராட்சி எல்லையில் இருக்கும் கூத்தப்பாக்கம்தான் என் சொந்த ஊர்...கோபம்தான் எங்கள் ஊரின் குல சொத்து... முதலில் அடி அப்புறம்தான் பேச்சு இப்படித்தான் என் சிறுவயதில் நான் பார்த்து வளர்ந்த வாழ்க்கை...என் அடுத்த ஊரான பேட்டையில் எங்கள் ஊர் ஆளை அடித்து விட்டு ஒருவன் ஸ்கூட்டரில் வருவதாக தகவல் கிடைக்க....

என் ஊரில் சீத்தாபதி என்பர்
வேகமாக ஸ்கூட்டரில் வருபவன் மேல் ஒரு ஆளில்லாத சைக்கிளை மோதி அவனை கீழே விழவைத்து அப்புறம் அவனுக்கு ராஜமரியதை நடந்தது... நான் விபரம் தெரிந்து பார்த்த முதல் வன்முறை....என் அம்மாவுக்கு அந்த ஊர் பிடிக்கவில்லை..ஒரேபிள்ளை கெட்டுவிடும் என்று பயம்....

அதே போல் என் அப்பா எப்போதும் ஒரு வார்த்தை சொல்லுவார்... அப்பனை கைத்தடியாக உபயோகிக்க கூடாது என்று...அதாவது வடமலை பையன் நான் என்று எந்த இடத்திலும் சொல்லி நான் முன்னேறகூடாது...சுயமாக சொந்தகாலில் முன்னேற வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை... அதனால் என் அப்பாவின் பேரை உபயோகிக்காமல் நான் முன்னேற வேண்டும் என்றால், என் சொந்த ஊரில் நான் யார் மகன் என்று தெரிந்து விடும் என்பதால் சென்னைக்குகிளம்பினேன் சென்னையில் முதன் முதலில் செக்யூரிட்டி வேலைக்கு வந்து பிளாட்பாரத்தில் படுத்து, ஹோட்டலில் வேலை செய்து என பல இடங்கள் தாவி இப்போது இந்த நிலை... என் அப்பா ஆசை பட்டது போல் அவரின் பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகபடுத்தவில்லை.....அப்பன் பெயர் தெரியாதவன் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்க்காக அப்ளிகேஷனில் அவர் பெயர் நிரப்புகின்றேன்....


5 வருடங்களுக்கு முன் கல்லூரியில் வேலை பார்க்கும் போதுதான் எனக்கு முதன் முதலில் கம்ப்யூட்டர் அறிமுகம்... அதற்கு முன் நான் ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்த்து இருக்கின்ற வஸ்த்து அது....அங்குதான் முதல் பரிச்சயம்...



நான் ஒரு போட்டோகிராபர் என்பதால் பிலிம்மில் இருந்து டிஜிட்டலாக போட்டோகிராபி துறை மாறியதால்... கேமராவில் எடுத்த போட்டோக்களை ஒவ்வொரு முறையும் லேபில் இருக்கும் கம்யூட்டரில் காபி செய்து அதனை சீடியாக மாற்றி அதிலும் காசு பார்த்த போது என் நம் வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்க கூடாது என்று எண்ணி வாங்கியதுதான்.. இப்போது வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்...


அதன் பிறகு... மனைவியுடன் மெயில் மற்றும் சாட்டுக்கும்...குகூளில் பலவிஷயங்களை படிக்கவும் இணைய வசதி வாங்கினேன்... என் மனைவியின் நண்பர் பதிவர் நித்யகுமாரன் வலையுலகில் எழுதுவதையும் அதை படித்து பார்க்கவும் லிக் கொடுக்க...

ஒரு தனிநபர் இப்படி கூட லேஅவுட் செய்து மிக அழகாக தமிழில் எழுதவும், படிக்கவும் முடியுமா, என்ற ஆச்சர்யம்தான் எனக்கு அப்போது எற்பட்டது....

சரி இதனை எப்படி டைப் அடித்து டீடிபி எடுத்து பெரிய விஷயம் இல்லையா ? என்று கேட்ட போது... ரோம்ப சிம்பிள் என்று என் எச்எம் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து நோட் பேடில் தமிழில் என் கம்ப்யூட்டரில் அடித்த போது... ங்கோத்தா செமை சூப்பரா இருக்கு என்று ஆச்சர்யம் கொண்டேன்....

எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாது....நண்பர் நித்யாவுக்கு தெரிந்தது ஓல்டு டைப் ரைட்டர்... அதனை அடிக்க கற்று கொடுத்தார்.... அந்த தமிழ் எழுத்துக்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டேன்... எனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்த போது...அவர் நிச்சயம் நினைத்து இருப்பார்....

இந்த லூசுகிட்ட நாம் எழுதியதை படிக்க சொன்ன இது தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க சொல்லுதே என்று நினைத்து இருக்கலாம்...ஆனாலும் பொறுமையாக ஆரம்பித்து கொடுத்தார்... வலைப்பூவுக்கு என்ன தலைப்பு? என்று கேட்ட போது... எழுத்தாளர் பட்டுக்கோட்டைபிரபாகர் எழுதிய ஏநாவல் டைம்மில் வந்த பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற தலைப்பை வைக்க சொன்னேன்... ஏனோ அந்த தலைப்பு ரொம்பவும் பிடித்து போனது....

பத்தாம் வகுப்பு படிக்கும் போது யாருக்காவது கடிதம் எழுதி கையெழுத்து போடும் போது எனது இயற்பெயரை விட்டு விட்டு ஜாக்கிசேகர் என்று கையெழுத்து போட்டு பார்பேன்...ஜாக்கியின் ஒரு படத்தை30 பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து அதை லட்டர் பேட் போல் உபயோகபடுத்தி அதில் கடிதம் எழுதி தனசேகரன் அலைஸ் ஜாக்கிசேகர் என்று கையெழுத்து இடுவேன்.. அந்த அளவுக்கு நடிகர் ஜாக்கியின் பரம விசிறி....


சரி வலைப்பூவுக்கு ஒரு பெயர் வேண்டும் என்று சொன்ன போது ஜாக்கிசான் நடித்த ஆர்மர் ஆப் காட் படத்தை பார்த்து விட்டு நடுநிசியில் எனக்கு நானே ஜாக்கிசேகர் என்று வைத்துகொண்டு பைத்தியம் போல் எனக்கு நானே கூப்பிட்டடுக்கொண்ட... அந்த பெயரை டைப் அடிக்க சொன்னேன்.... நண்பர் நித்யாவும் அடித்தார்....

வலைப்பூ தொடங்கியாகி விட்டது.... மூன்று போஸ்ட்டுக்கு பிறகு தமிழ்மணத்தில் இணைக்க சொல்லிவிட்டு அவர் வீட்டுக்கு போய் விட்டார்...அதன் பிறகு கண்ட்ரோல் திரி கொடுத்து மெல்ல தமிழ் டைப் செய்து ஒரு படத்தை டவுன்லோட் செய்து அந்த படத்தை போட்டேன்... அந்த 5 வரி பதிவை தப்பும் தவறுமாக அடித்து (இப்போதும் அப்படித்தான்) வியற்வையும் டென்சனுமாக அந்த பதிவை போட்டு முடித்த போது 3 மணி நேரம் ஸ்வாக ஆகியிருந்தது... 14/04/2008ல் நான் ஆர்வகோளாரில் எழுதிய
அந்த முதல்பதிவை பார்க்கவிருப்பம் இருப்பவர்கள் இங்கே கிளிக்கவும்




அப்போது எல்லாம் என்ன எழுதுவது என்று தெரியவில்லை... எதாவது எழுதவேண்டும்.. நான் இந்த உலகத்தில் சுயம்பு இல்லை... நான் எல்லோரிடத்தில் இருந்தும் ஏதாவது ஒன்று கற்றுக்கொண்டு இருக்கின்றேன்... கற்றுக்கொண்டேன் என்பதை விட காப்பியடித்தேன் என்று சொல்வதைற்க்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை... காப்பியடிப்பதைதான் கற்றுக்கொண்டேன் என்று எல்லோரும் டிசன்டாக சொல்லி வருகின்றார்கள்....

இப்போது நான் எழுதும் எழுத்தும்... ஏதோ ஒரு விஷயமும் இதுவரை புத்தகங்களில் படித்தவைகளை வைத்தே எழுதுகின்கறேன்.. என் அம்மா எனக்கு கடல்கிழவன் என்று ஒரு புத்தகத்தை கடலுர் மாவட்ட மொபைல் லைப்ரரியில் இருந்து எடுத்து வாசிக்க கற்றுக்கொடுத்தாள்.... எனது பள்ளிக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் அதிகமான புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன... அங்கு தினத்தந்தியில் வரும் கன்னித்தீவில் இருந்து முத்தாரம், கல்கண்டு, குமுதம் ஆனந்தவிகடன் போன்ற வாராபத்திரிக்கைகளும்... வாசிக்க ஆரம்பித்தேன்...

என் அப்பா வீட்டுக்கு வாங்கி வரும் ஒரே புத்தகம் குமுதம் மட்டுமே...அதன் பிறகு அதிகமான காமீக்ஸ் புத்தகங்கள்... அதிகம் படித்தேன் என் அளவுக்கு அதன்மேல் வெறி உள்ளவர்கள் இருந்து இருக்க முடியாது....

அப்போதுதான் இப்போது எண்ணத்து பூச்சி என்று வலையுலகில் எழுதும் எனது குடும்ப நண்பர் அப்போது முத்தமிழ் வாடகை நூல்நிலையம் என்ற வாடகை நூலகத்தை நான் வசித்த கூத்தபாக்கத்தில் திறந்தார்கள்...ஏற்கனவே இருந்த வாசிப்பு அனுபவத்தோடு வாடகைக்கு புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்தேன்...அப்போதுதான் துப்பறியும் கதைகளில் சக்கர்லால், தமிழ்வாணன் கதைகள் அதிகம் விரும்பி படித்தேன்...அப்போது பாகெட் நாவல், கிரைம்நாவல் ஆரம்பித்த அசோகன் என் நன்றிக்கு உரியவர்..

தினத்தந்தி எப்படி தமிழகத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்ததோ... அது போல நாவல் வாசிக்கும் பழக்கத்தை எழுத்து கூட்டி வாசிக்கும் யாவரும் குறைந்த விலையில் கிரைம்நாவல் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்தவர் பாக்கெட் நாவல் அசோகன் என்றால் அது மிகையாகாது...

தமிழ்வாணன்,சுஜாதா,ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டைபிரபாகர்,சுபா, ராஜேந்திரகுமார்,பாலகுமாரன் இவர்களை மட்டும் வாசித்து இருக்கின்றேன்...இப்போது நான் எழுதும் எழுத்தின் சாயல் இவர்களிடத்தில் இருந்து கற்றுக்கொள்ளபட்டது...அதனால் எனது எழுத்தில் யாருடைய சாயாலாவது நிச்சயம் இருந்தே தீரும்......

வலைப்பூ ஆரம்பித்தாகிவிட்டது.. நமக்கு என்ன நன்றாக தெரியும்... சினிமா... அதில் பாத்த பாடங்களை பகிர்ந்து கொண்டால் என்ன? என்று தோன்ற... சினிமாவை எழுத ஆரம்பித்தேன்... இப்போது எல்லாரும் என் உலக சினிமா அறிமுகத்துக்கு சிலாகித்தாலும்..... என் முதல் சினிமா பதிவு இப்படித்தான் இருந்தது... பார்க்க ஆசை இருப்பின் கிளிக்கவும்...



முதலில் நான் எழுதிய ஒரு பத்து பதிவுகள் சீண்ட ஆட்களே இல்லை...நானும் அதை பற்றி கவலை கொண்டதில்லை...நான் எனக்கு தெரிந்தவற்றை தடவி தடவி டைப் அடித்து எனது பக்கத்தில் பதிந்தேன்... ஒரு பத்து வரி அடிக்க கடுப்பாக இருக்கும்... சேவ் செய்ய தெரியாமல் அடித்தது எல்லாம் காணாமல் போன பாராக்கள் ஏராளம்... ஆனாலும் விடாமல் மனம் சளிக்காமல் தடவி தடவி டைப் அடிக்கின்றேன்.... இப்போது சொல்கின்றார்கள்... எங்க சங்க தலைவர் உண்மைதமிழனுக்கு போட்டியாக நான் பெரிதாக அடிக்கின்றேன் என்று.....


இப்போது கூட சாமி என்ற மதுரை நண்பர்... செல்களில் ஆராய்ச்சி செய்பவர்... மெத்த படித்த ஆராய்ச்சியாளர்... சில தினங்களுக்கு முன் ஜெர்மன் சென்றார்...அதற்கு முன் சென்னையில் என்னையும் வானம்பாடி அவர்களையும் சந்தித்து விட்டு செல்ல மதுரையில் இருந்து சென்னை வந்ததுமே போன் செய்துவிட்டார்...

எனது சமுக பதிவுகளுக்கு அவரும் அவர்கள் நண்பரும் ரசிகர்களாம்... வெந்த புண்ணில் பிரபாகனை பாய்ச்சவேண்டாம் என்ற கட்டுரையை பிரிண்ட் எடுத்து பாரில் தன் நண்பர்களோடு வரிக்கு வரி அண்டர் லைன் செய்து விவாதம் நடத்தியதை சொன்னார்.... மதியம் அவரோடு மதிய உணவை சாப்பிட்டுகொண்டே நிறைய பேசினோம்... போகும் முன் எனக்கு மூன்று புத்தகங்களை பரிசளித்தார்....ஆனால் நான் முதன் முதலில் எழுதிய சமுகத்தை பற்றிய பதிவு இப்படித்தான் இருந்தது....எந்த பின்னுட்டமும் வராது...கிணத்தில் போட்ட கல் போல் இருக்கும்...ஓட்டும் இல்லை ஆனால் வாசிக்க ஆரம்பித்தார்கள்...அந்த முதல் சமுகபதிவு இதுதான் வாசிக்க கிளிக்கவும்....

அதன்பின் மெல்ல மெல்ல படித்தார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தேன்...பதிவுலகில் நண்பர் அதிஷாதான் என் திருமணத்தின் பத்திரிக்கையை அவர் வலையில் போட்டு பதிவுலகம் சார்பில் என் திருமணத்துக்கு நிறைய வாழ்த்துக்கள் வந்தன.. நிறைய பதிவர் சந்திப்பு நடந்தது.. நான் போனதேயில்லை... அதிஷா ஒவ்வோரு முறையும் போனில் அழைப்பார்.....

நான் சென்றது இல்லை... எனக்கு அவ்வைசண்முகி மணிவண்ணன் போல் கூச்சசுபாவம்.... ஆனால் முத்துக்குமரன் இறப்புக்கு பதிவர்களின் கண்ணீர் அஞ்சலியின் போது நான் நேரில் போனேன்... அப்போதுதான் அதிஷா, லக்கி, பஸ்டன் ஸ்ரீராம், கேபிள்,பெங்களுர் அரவிந்தன் என்று பலரையும் நேரில் சந்தித்தேன்...


சிறு குறிப்பு....


ஏன் 500வது பதிவுக்கு எழுதவில்லை.... ஏன் இதற்க்கு இவ்வளவு விளக்கம் தேவையா? இரண்டு வரியில் சொல்லாமே? என்று யாராவது மனதில் நினைத்தால் தாராளமாக... குகூளில் ஒரு பிளாக் பக்கம் ஆரம்பித்து தாராளமாக உங்கள் கருத்தை சொல்லவும்... இங்கு இப்படித்தான்... இது மெத்த படித்தவர்களின் தளம் அல்ல...

இது பதிவு ஆரம்பித்து முதல் முறையாக எழுத ஆரம்பிப்பவர்களுக்கு இந்த பதிவு உத்வேகமாக இருக்கும்....படித்து பிடித்து இருந்தால் ஓட்டுபோடவும் என்று மட்டும் சொல்லி இருக்கின்றேன்...... அப்போது எல்லாம் எனக்கு பெரிய நண்பர்கள் வட்டமோ அல்லது நேசிப்பவர்களின் வட்டமோ அப்போது இல்லை.. நான் சாட்டில் போய் ஓட்டுபோட சொல்லியோ அல்லது எனக்கு நீ போடு நான் உனக்கு போடறேன் என்ற கமிட்மேன்ட் எதும் நான் வைத்துக்கொண்டது இல்லை....

என்னை பொறுத்தவரை 500 என் எண்ணிக்கை பெரிய விஷயம்...எனக்கு பிளாக் எழுதுவது என் முழுநேர தொழில் இல்லை... என்னை நானே திரும்பி பார்க்கவும்... என்னை தட்டிக்கொடுத்த புதிய நண்பர்களுக்கு என்னை பற்றி சொல்லவும்...என்னை இத்தனை நாளாய் வாசிப்பவர்களுக்கு என் நன்றியை சொல்லவும் இந்த பதிவுகள்...

இந்த பதிவு...சிங்கபூரில் பெயர் மறந்து விட்டது...மாதம் 15000 சம்பள்ம் வாங்கி.. வீட்டுக்கும் உறவுகளிடமும் பேசாமல் என்னிடம் செல் போனில்... உங்கள் பதிவு எனக்கு நிரம்ப தன்னம்பிக்கையை கொடுக்கின்றது என்று சொன்ன முகம் தெரியாத நண்பனுக்காகவும்...

மாலத்தீவில் பார் அட்டேன்டராக வெலை செய்து கொண்டு இருக்கும் தருமன்... அண்ணே உங்கள் பதிவுகள் மற்றும் தமிழ்மணம்,தமிளிஷ்தான் இந்த தீவில் என் வெறுமையை போக்கும் சாதனங்கள் என்று சொல்லி போனில் அரைமணிநேரம் பேசியவனுக்காவும்...

கேரளாவில் இருந்து முரளி என்பவர் தன் நேரத்தை ஒதுக்கி கடிதத்துக்கு பதில் டிசைன் செய்து அனுப்பிய அந்த நேசத்துக்காக நான் எழுதுகின்றேன்......

படங்களை கிளிக்கி பார்க்கவும்

தொடரும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

88 comments:

  1. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணே... தொடர்ந்து இதுபோல பல சென்சுரி அடிக்க ஆல் த பெஸ்ட்...

    அட... நானும் முதல் பதிவு எழுதறப்போ, மானசீகமா சுஜாதாவுக்கு வணக்கம் போட்டுதான் எழுதவே ஆரம்பிச்சேன்... அவர் இல்லன்னா, தமிழை பாடபுத்தகத்தை தவிர எங்கேயும் படிச்சு இருக்க மாட்டேன்...

    ReplyDelete
  2. 500 க்கு வாழ்த்துக்கள்.

    எளிமையான, அருகில் நின்று உரையாடுவது போன்ற எழுத்து நடை.

    எதாவது புதிய பதிவு வந்தால், உடனே படிக்கத்தூண்டும் வகையில் இருப்பது உங்களின் வெற்றி.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஜாக்கி. இன்னும் நிரைய எழுத வேனும் நீங்க.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஜக்கி,
    நான் உங்கள் வலை பதிவுக்கு புத்தியவன், மிக தெளிவான/எளிமையான உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான்.

    ரபீக்
    பெங்களூர்

    ReplyDelete
  5. மிக அருமையான நினைவுகள்! 500க்கு என் அன்பான வாழ்த்துக்கள் ஜாக்கி! இன்னும் பல 500 காண என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. Hi Jackie,

    I am a regular reader of your blog. Very nice writing style that you have.
    Keep up the good work.
    (Sorry, i don't have a way to type in Tamil right now).

    Thanks
    Arul

    ReplyDelete
  7. அந்த முகப்பு போட்டோ சூப்பர் ஜக்கி, திருஷ்டி சுத்தி போடுங்க!!

    ReplyDelete
  8. Congrats டா, தொடர்ந்து கலக்கு..

    அப்புறம் - // பதிவுலகில் கற்றதும் பெற்றதும்// - பெற்றதில் மிகப் பெரியது “பாப்பார அடிவருடி” பட்டம் - அதைப் பற்றி எழுத மறந்திடாதே...

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. உங்கள் முதல் பதிவும், முதல் சினிமா பதிவும் படித்தேன்..
    முதல் பதிவில் சில்க் சுமிதா என்ற பெயரில் பின்னூட்டம் ஆச்சர்யமான விசயம்

    முதல் சினிமா பதிவும் DUAL படம்.. அது எனக்கு மிகவும் பிடித்த படம்..

    ஐந்நூறுக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்து உங்கள் மனசில் இருந்து வரும். அது எனக்கு பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பா!!!
    விரைவில் 1000 பதிவுகள் காண வாழ்த்துக்கின்றேன்.

    ReplyDelete
  13. 500வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தல...

    ReplyDelete
  14. கடந்து வந்து பாதைகள்.... பகிர்வுக்கு நன்றி அண்ணே...

    ReplyDelete
  15. வாழ்த்துகள் ஜாக்கி. மென்மேலும் பல உயரங்கள் தொட நல் வாழ்த்துகள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  16. இன்னும் பல்லாயிரம் பதிவுகள் படைத்திட.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் நண்பரே...

    பழைய நினைவுகளை நன்றாக கொடுத்து இருக்கின்றீர்கள்..

    ReplyDelete
  18. வாழ்த்த எனக்கு வயசு இருக்கிற மாதிரி தெரியலை, அதனாலே வணங்குகிறேன்

    ReplyDelete
  19. ஜாக்கி, உனக்கு 100008 வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. வாழ்த்துகள் ஜாக்கி,

    2 ஆண்டுகளில் 500 இடுகைகள் செம ஸ்பீடு.....

    ReplyDelete
  21. அருமையான ஊக்கம் என் போன்ற ஜூனியர் பதிவர்களுக்கு! நன்றி! கூத்தப்பாக்கம் அடிக்கடி வந்திருக்கேன். என்னோட பெரியம்மா இருக்காங்க. அடுத்த முறை வந்தால் சந்திக்கிறேன் கட்டாயமா. முதல் போட்டோ ஊட்டி தானே போன வாரம் தான் போயிட்டு வந்தேன்!

    ReplyDelete
  22. அருமையான ஊக்கம் என் போன்ற ஜூனியர் பதிவர்களுக்கு! நன்றி! கூத்தப்பாக்கம் அடிக்கடி வந்திருக்கேன். என்னோட பெரியம்மா இருக்காங்க. அடுத்த முறை வந்தால் சந்திக்கிறேன் கட்டாயமா. முதல் போட்டோ ஊட்டி தானே போன வாரம் தான் போயிட்டு வந்தேன்!

    ReplyDelete
  23. ஜாக்கி அருமையான அனுபவம் . எளிய நடை. எளிமை எல்லாவிதத்திலும் ... தன்னடக்கம் . பதிவுலகம் உங்களைப்போன்றோரின் வரவால் கொடுத்து வைத்துள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அண்ணா ...

    ReplyDelete
  25. இதுவரைக்கும் நான் யாருக்கும் இந்த மாதிரி எழுதினது இல்லை. நெஞ்சத் தொட்டுட்டீங்க. சத்தியமா இன்னைக்கு தான் உங்க மேல ஒரு மரியாதை வந்திருக்கு, இத்தனை நாள் வருவேன், படிப்பேன், போய்டுவேன்! கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, நெறைய பேர் கிட்ட இல்லாத தைரியம் உங்க கிட்ட இருக்கு. அது, உண்மையச் சொல்றது!

    நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லுவேன், தப்பு பண்ணா அத ஒத்துக்கிற தைரியம் இங்க எவனுக்கும் கிடையாதுன்னு, அதே போல உண்மைய சொல்றதுக்கும் இங்க நெறையா பேருக்கு தைரியம் கிடையாது! உங்களுக்கு இருக்கு.

    நீங்க கலக்குங்க அண்ணே!

    அப்புறம் தங்க தலைவர் jackie chan போட்டோ சூப்பர்!

    ReplyDelete
  26. அருமை ஜாக்கி..

    புதிய பதிவர்களுக்கான ஊக்கம் தொடர் தான் இது..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் ஜாக்கி ஜி!

    ReplyDelete
  28. பல சிறந்த பதிவுகளுடன் மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் அண்ணே ..

    ReplyDelete
  30. rai..rai..rai.. மேலும் ரை..ரை..ரை என்று போக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. நிறைய எழுத வாழ்த்துக்கள். சமூக அக்கறை இல்லாத எழுத்து குப்பைக்கு சமம். உங்கள் சமீக அக்கறை எனக்கு பிடித்த ஒன்று.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் ஜாக்கி.... மேலும் பல நல்ல பதிவுகளோடு தொடருங்கள்....

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் ஜாக்கி. உங்கள் சேவை எங்களூக்கு தேவை.
    அன்பரசு செல்வராசு

    ReplyDelete
  34. நூறு வயசு நல்லாயிரு தம்பி..! இன்னமும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  35. மனதார வாழ்த்துக்கள் ஜாக்கி.உங்கள் வீட்டு புகுமநைவிழாப்பற்றி படித்தேன்.ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடய 'மேதாவித்தனமிலாத' எழுத்து ரொம்பவும் நன்றாக உள்ளது

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  37. இதயபூர்வமான வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  38. பாராட்டுகள் ஜாக்கி சேகர் , கூடிய விரைவில் 1000 வது பதிவிற்கும் வாழ்த்த இப்பொழுதே வார்த்தைகளை தேடிகொண்டிருக்கிறேன். மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கண்டிப்பாக விமரிசனம் செய்வேன் .

    ReplyDelete
  39. அரை ஆயிரத்துக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும் ஜாக்கி.

    முழு ஆயிரமாக விரைவில் ஆக மீண்டும் வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  40. ஜாக்கி அண்ணா உங்க ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்து சொல்ல காத்திருக்கிறேன்.....

    வாழ்த்துக்கள் அண்ணா....... :)

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் ஜக்கி அண்ணா .....

    ReplyDelete
  42. Best wishes. I am a regular reader of ur blogs. I am also in need of help to start a blog and write.Again my wishes for u.

    ReplyDelete
  43. வளர்க!வளர்க!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. Dear friend

    My best wishes. May God bless you and
    you family.

    Anbudan
    Samy N

    ReplyDelete
  45. Dear friend

    My best wishes. May God bless you and
    you family.

    Anbudan
    Samy N

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள்
    ஜாக்கி

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் ஜாக்கி
    சீக்கிரமே ஆயிரம் தொட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. நன்றி... முதல் வாழ்த்துக்கு பிரியமுடன் வசந்த்....

    நன்றி ஜெய் உண்மைதான் சுஜாதா பாலகுமாரன்தான் என் எழுத்துக்கு அடிப்படை....

    நன்றி பின்னோக்கி....

    //எளிமையான, அருகில் நின்று உரையாடுவது போன்ற எழுத்து நடை.

    எதாவது புதிய பதிவு வந்தால், உடனே படிக்கத்தூண்டும் வகையில் இருப்பது உங்களின் வெற்றி.//

    உள்ளத்தில் இருந்து வாழ்த்தியமைக்கு என் நன்றிகள் பின்னோக்கி

    ReplyDelete
  49. வாழ்த்துகள் ஜாக்கி. இன்னும் நிரைய எழுத வேனும் நீங்க.//

    நன்றி இராமசாமி கண்ணன்.. தொடர்ந்து பின்னட்டம் இட்டு ஓட்டு போடுவதற்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள், ஜாக்கி..//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முத்துலட்சுமி மேடம் தலைநகர் எப்படி இருக்கின்றது?

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் ஜக்கி,
    நான் உங்கள் வலை பதிவுக்கு புத்தியவன், மிக தெளிவான/எளிமையான உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான்.

    ரபீக்
    பெங்களூர்//

    நன்றி ரபீக் உங்கள் வெள்ளந்தியான வாழ்த்துக்கு...,

    ReplyDelete
  52. hi sekar anna naanum blogla kathukutti than niraya ezthanumnu than aasaya irukku but guna kamal mathiri vartha varha than varala then Tamil la type panna therila anna neenka solli tharinkala plssssssss

    ReplyDelete
  53. மிக அருமையான நினைவுகள்! 500க்கு என் அன்பான வாழ்த்துக்கள் ஜாக்கி! இன்னும் பல 500 காண என் வாழ்த்துக்கள்!!!==

    நன்றி அபி அப்பா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  54. Hi Jackie,

    I am a regular reader of your blog. Very nice writing style that you have.
    Keep up the good work.
    (Sorry, i don't have a way to type in Tamil right now).

    Thanks
    Arul//

    நன்றி அருள் முகம் தெரியாத உங்களுக்கம் உங்கள் வாழ்த்துக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  55. Hi Jackie,

    I am a regular reader of your blog. Very nice writing style that you have.
    Keep up the good work.
    (Sorry, i don't have a way to type in Tamil right now).

    Thanks
    Arul//

    நன்றி அருள் முகம் தெரியாத உங்களுக்கம் உங்கள் வாழ்த்துக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  56. அந்த முகப்பு போட்டோ சூப்பர் ஜக்கி, திருஷ்டி சுத்தி போடுங்க!!//

    நன்றி ஷர்பு அந்த புகைபடம் எனக்கு பிடித்த ஒன்று..

    ReplyDelete
  57. Congrats டா, தொடர்ந்து கலக்கு..

    அப்புறம் - // பதிவுலகில் கற்றதும் பெற்றதும்// - பெற்றதில் மிகப் பெரியது “பாப்பார அடிவருடி” பட்டம் - அதைப் பற்றி எழுத மறந்திடாதே...

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..//

    மறக்கமாட்டேன் மச்சி...

    ReplyDelete
  58. வாழ்த்துக்கள் நண்பரே...

    வாழ்க வளமுடன்.
    வேலன்.//
    நன்றி மிக்க நன்றி வேலன்சார்...

    ReplyDelete
  59. உங்கள் முதல் பதிவும், முதல் சினிமா பதிவும் படித்தேன்..
    முதல் பதிவில் சில்க் சுமிதா என்ற பெயரில் பின்னூட்டம் ஆச்சர்யமான விசயம்

    முதல் சினிமா பதிவும் DUAL படம்.. அது எனக்கு மிகவும் பிடித்த படம்..

    ஐந்நூறுக்கு வாழ்த்துக்கள் ...//

    நன்றி செந்தில்... உண்மைதான்...

    மிக்க நன்றி செந்தில்..

    ReplyDelete
  60. வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்து உங்கள் மனசில் இருந்து வரும். அது எனக்கு பிடித்திருக்கிறது.//

    நன்றி ஜெயந்தி நீங்கள் எல்லாம் என் தளத்தை படிக்கின்றீர்கள் என்பது இப்போதுதான் எனக்கு தெரிகின்றது...

    ReplyDelete
  61. வாழ்த்துக்கள் நண்பா!!!
    விரைவில் 1000 பதிவுகள் காண வாழ்த்துக்கின்றேன்.//

    500வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தல...//

    கடந்து வந்து பாதைகள்.... பகிர்வுக்கு நன்றி அண்ணே//

    நன்றி வந்தியதேவன்...

    நன்றி யோவாய்ஸ்...

    நன்றி ஜெட்லி... இன்னும் அந்த பயணம் என்னை பொறுத்தவரை பிரமிப்புதான் தம்பி..

    ReplyDelete
  62. வாழ்த்துகள் ஜாக்கி. மென்மேலும் பல உயரங்கள் தொட நல் வாழ்த்துகள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்//
    நன்றி ரவி உங்கள் அன்பான வாழ்த்துக்கு...

    ReplyDelete
  63. நன்றி பிரவின் குமார்...

    நன்ற டிவி ஆர்..

    நன்ற இராகவன் நைஜீரியா-..

    மிக்க நன்றி உங்கள் மூவர் வாழ்த்ததுக்கும்...

    ReplyDelete
  64. வாழ்த்த எனக்கு வயசு இருக்கிற மாதிரி தெரியலை, அதனாலே வணங்குகிறேன்//

    நன்றி நசேரயன்....நண்பராய் பாவித்தாலே போதுமானது...மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  65. ஜாக்கி, உனக்கு 100008 வாழ்த்துகள்..//
    நன்றி சூர்யா எங்க ஆளையே கானோம்..

    ReplyDelete
  66. வாழ்த்துகள் ஜாக்கி,

    2 ஆண்டுகளில் 500 இடுகைகள் செம ஸ்பீடு.....//

    நன்றி கோவி கண்ணன்..

    ReplyDelete
  67. நன்றி ரமேஷ் நல்லவன்

    நன்றி வினையூக்கி...

    உங்கள் இருவர் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  68. அருமையான ஊக்கம் என் போன்ற ஜூனியர் பதிவர்களுக்கு! நன்றி! கூத்தப்பாக்கம் அடிக்கடி வந்திருக்கேன். என்னோட பெரியம்மா இருக்காங்க. அடுத்த முறை வந்தால் சந்திக்கிறேன் கட்டாயமா. முதல் போட்டோ ஊட்டி தானே போன வாரம் தான் போயிட்டு வந்தேன்!//

    ஆம் சாப்ட்வேர்.. அது ஊட்டிதான்..

    நம்ம ஊர்காரா புள்ளய வேற போயிட்டிங்க..

    ReplyDelete
  69. ஜாக்கி அருமையான அனுபவம் . எளிய நடை. எளிமை எல்லாவிதத்திலும் ... தன்னடக்கம் . பதிவுலகம் உங்களைப்போன்றோரின் வரவால் கொடுத்து வைத்துள்ளது. வாழ்த்துக்கள்//

    நன்றி மதுரை சரவணன்.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு...

    ReplyDelete
  70. நன்றி கோலிபையன்

    நன்றி சுரேகா

    நன்றிபிளாக் பாண்டி

    உங்கள் மூவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  71. இதுவரைக்கும் நான் யாருக்கும் இந்த மாதிரி எழுதினது இல்லை. நெஞ்சத் தொட்டுட்டீங்க. சத்தியமா இன்னைக்கு தான் உங்க மேல ஒரு மரியாதை வந்திருக்கு, இத்தனை நாள் வருவேன், படிப்பேன், போய்டுவேன்! கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, நெறைய பேர் கிட்ட இல்லாத தைரியம் உங்க கிட்ட இருக்கு. அது, உண்மையச் சொல்றது!

    நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லுவேன், தப்பு பண்ணா அத ஒத்துக்கிற தைரியம் இங்க எவனுக்கும் கிடையாதுன்னு, அதே போல உண்மைய சொல்றதுக்கும் இங்க நெறையா பேருக்கு தைரியம் கிடையாது! உங்களுக்கு இருக்கு.

    நீங்க கலக்குங்க அண்ணே!

    அப்புறம் தங்க தலைவர் jackie chan போட்டோ சூப்பர்!///

    நன்றி மோகன் என்னிடம் எனக்கு பிடித்தது என்னவென்றால்.. நான் பொதுவாய் எதையும் மறைக்க விரும்பமாட்டேன்.. அதை குறிப்பிட்டமைக்கு விரிவான மடலுக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  72. நன்றி தம்பி ரோமியோ...

    நன்றி கேபிள்...

    நன்றி வழிபோக்கன்...

    நன்றி அன்பரசு... நன்றி அகோரி.. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  73. நன்றி தலைவர் உண்மைதமிழன்..

    நன்றி கனா

    நன்றி திரு...மிக்க நன்றி இந்த வீடு பதிவால் வந்தவை...

    ReplyDelete
  74. நன்றி தலைவர் உண்மைதமிழன்..

    நன்றி கனா

    நன்றி திரு...மிக்க நன்றி இந்த வீடு பதிவால் வந்தவை...

    ReplyDelete
  75. நன்றி மோகன்குமார்

    நன்றி வால்பையன்..

    நன்றி காவேரி கனேஷ்

    நன்றி சுனில்குமார்... செய்யுங்கள்...

    நன்றி துளசி டீச்சர்....வாழ்த்துக்கு நன்றி,...

    நன்றி மயாவி..

    நன்றி அருன் பிரகாஷ்..

    ReplyDelete
  76. நன்றிசாமி...

    நன்றி ராஜநடராஜன்...

    நன்றி வாசு..

    நன்றி தன்

    எல்லோருக்கும் என் நன்றிகள்....

    ReplyDelete
  77. Yethechaiyaaga thaan unga blog sitekku vanthen, 2 maasam munnadi. Appram adikkadi padikiren. Ungal blog, matrum 3 per blog padithu inspire aagi thaan naanum blog ezhuthukiren. 2 post thaan panni irukken ithuvarai. Ungalin 500 sigaram thottamaikku vaazhuthukkal. My blog is at http://ramyamani.wordpress.com/. Innamum thamizhil type seyya katrukolla villai. :)

    ReplyDelete
  78. 500க்கு வாழ்த்துக்கள் ஜாக்கி.

    மொத பதிவில மொத கமெண்ட்டே சில்க் ஸ்மிதாது
    :)))))))))))))

    ReplyDelete
  79. jakie sekar...ungal mananthirantha pathivu arumai. sujatha ezhuthu nadai enakkum mikavum pidikkum.-meerapriyan

    ReplyDelete
  80. உங்கள் எழுத்துக்கள் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் தருகின்றன. பல புதிய பதிவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி என்பதில் சந்தேகமில்லை!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner