களவாணி பார்த்தே தீர வேண்டியபடம்...

களவாணி படத்தை வீட்டு அம்மாவோடு பார்க்க வேண்டும் என்று இருந்தேன்... இருந்தாலும் படத்தை பற்றிய பேச்சு அதிகமாக இருந்த காரணத்தாலும்,விகடன் வேறு 46 மார்க் போட்டு அப்படி என்ன அந்த படத்தில் இருக்கின்றது என்று பார்க்க வைக்கும் ஆர்வம் காரணமாகவும் அந்த படத்தை நான் தனியாக பாத்து தொலைத்து விட்டேன்... படத்துக்கு அழைத்து போகின்றேன் என்று சொல்லிவிட்டு ...அழைத்து போகவில்லை என்றால்....தாகத்துக்கு தண்ணி கேட்டு அது அரைமணி நேரம் கழித்துதான் என் கம்யூட்டர் டேபிளில் லொட் என்று வைக்கபடும் என்று எனக்கு தெரியும்... இருந்தாலும் நான் உங்களுக்காக ரிஸ்க் எடுத்து இருக்கின்றன்...

சரி இந்த படத்தை நான் பாக்கவேண்டும் என்று நினைக்க வைத்த இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் டிரைலர்... கட்டிக்கறேன்னு சொல்லு என்று வண்டி துடைத்துக்கொண்டு இருக்கும் போது... அந்த சின்ன பெண்ணிடம் பேசுவதும்.. ஒரே சின்ன பிள்ளையா பார்த்து ஏமாத்தறான் என்ற சொல்லாடலும் என் கிராமத்து பேச்சாக இருந்தது... என் மக்களை எந்த பகட்டும் இல்லாமல் திரையில் பார்த்தது போன்ற உணர்வு அது...


உங்களுக்கு இந்த திரைபடத்தை பற்றிய கதை உங்களுக்கு இந்நேரம் தெரிந்து இருக்கும் அல்லது படித்து இருப்பீர்கள்...

உண்மையான காதலன் என்பவன் யார் தெரியுமா? தான் காதலிக்கும் பெண்ணுக்கு எந்த நேரத்திலும் பிரச்சனையோ அல்லது அவமானமோ எற்படுத்தாதவன்தான் உண்மையான காதலன்...
அந்த பெண் குடும்பசூழ்நிலையில் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாலும்.. தான் காதலித்த பெண் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவன்தான் உண்மையான காதலன்...

ஆனால் இப்போது பல காதலன்கள் அப்படி இல்லை காதலின் போர்வையில் ஒரு பெண்ணை மயக்கி அந்த பெண்ணை கிரக வைத்து... நம்பிக்கை மொழி பேசி அந்த பெண்ணின் நிர்வாணத்தை கேமரா செல்போனில் பதிவு செய்து.. அதை நண்பர்களுக்கு விருந்தாக்கி...பிறகு அந்த பெண்ணை மிரட்டி விருப்பபட்ட நண்பர்களுக்கு அந்த வீடியோவை காட்டி விருந்து வைத்து...இப்போது கூட ஜுனியர் விகடனில் அண்ணன் தம்பி இருவரும் ஒரு கல்லூரி பெண்ணை ஏமாற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...

இதுவா காதல்...காதலிக்கு எந்த சிறு அவச்சொல்லும் ஏற்படாமல் பாதுகாப்பவனே உண்மையான காதலன்.... அந்த வகையில் இந்த களவாணி கிரேட்....

ஒரு சின்ன சீன்... சொல்லறேன்...

களவாணி விமல்... தெரிந்து அல்லது தெரியாமல் செய்த களவாணித்தனம் அவன் காதலி மகேஷ்வரிக்கு தெரிந்து விடுகின்றது... அதனால் அவனை பார்பபதை தவிர்க்கின்றாள்... அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க அவளை சந்திக்க ஒரு திட்டம் போட்டு....

அவளோடு படிக்கும் பெண் வயதுக்கு வந்து விட்டதாகவும் சடங்கு சுத்த போவதாகவும் ஒரு பத்திரிக்கை அடித்து அவள் வீட்டில் கொடுக்க வைக்கின்றான் களவாணி விமல்...

இதை உண்மை என்று நம்பி மகேஸ்வரி வீட்டை விட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு சைக்கிளில் வர நடுவில் அவளை மீட் பண்ணி மன்னிப்பு கேட்பது களவாணி விமலின் பிளான்....

களவாணி தன் காதலியை பார்க்கின்றான்.... அவளிடன் தன் தரப்பு நியாத்தை சொல்கின்றான்... அவள் ஏற்றுக்கொள்ளவில்லை... உன்னிடம் இனி நான் பேச போவதில்லை என்று சொல்கின்றாள்...

தன் தங்கை பொய் பத்திரிக்கை காட்டி விட்டை விட்டு போனது தெரிந்து போய் தங்கையை கையும் களவுமாக பிடிக்க முரட்டு அண்ணன் தன் பல்சரில் விரைகின்றான்...

களவாணி தன் காதலியிடம் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவள் கோபித்து கொண்டு நடக்க... துரத்தில் அவள் அண்ணன் பல்சரில் வருவதை பார்த்துவிட்டு... காதலியின் அண்ணன் அவனுக்கு தெரிய கூடாது என்பதற்காக பக்கத்தில் கடக்க போகும் மினிபஸ்சில் காதலியை குண்டு கட்டாக தூக்கி ஏற்றி விட்டு, அதே பஸ்சில் ஏறி ஒரு கையால் தன் காதலி வந்த சைக்கிளை பிடித்த்துகொண்டு போக... காதலியின் அண்ணன் அந்த இடத்தை கிராஸ் செய்ததும்...அதுவரை முரண்டு பிடித்த காதலி தன் அண்ணனிடம் இருந்து தன் காதலன் காப்பாற்றியது தெரிந்ததும் அமைதியாவதும் ... அதன் பிறகு எதுவும் பேசாமல் பேருந்து விட்டு இறங்கி களவாணி விமல் நடப்பது கவிதை....

இதை கையினால் பேப்பரில்.... இந்த காட்சியை எழுதிடலாம்... ஆனால் நம்புவது போல் அந்த காட்சியை எடுத்து இருப்பதுதான் சினிமா...அந்த காட்சிக்கு நிச்சயம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்...


பூடகமாக தன் பெயரையும் தன் காதலி பெயரையும் ஊர் முழுவதும் எழுதி வைத்திருக்க.... அதனை களவாணி நண்பன் கோபத்தில் இருவர் பெயரையும் எல்லோருக்கு தெரிவது போல் எழுதி விட்டு வந்து மோட்டர் கொட்டகையில், தன் காதலி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று உட்கார்ந்து இருக்கும் களவாணி விமலிடம் பெருமையோடு அதை சொல்லும் போது...

கயிற்று கட்டிலில் இருந்து கோபத்தோடு வேட்டி நழுவுவது தெரியாமல் தன் நண்பனை அடித்துவிட்டு.... அந்த பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா? அந்த பொண்ணுக்கு எவ்வளவு அசிக்கம்ன்னு கோபப்படறான் பாருங்க.. அதுதான் காதல் அதுதான்படம்....


இந்த படத்தின் சிறப்பே எல்லா வயதினரும் அந்த அந்த கேரக்டர்களை படத்தில் காணலாம்...அவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கின்றார்கள்...

களவாணி படத்தின் கதை இதுதான்....

களவாணி தனம் செய்யும் அறிவழகன்(விமல்).. பக்கத்து ஊரில் அடிதடி விஷயத்தில் கொடி கட்டி பறக்கும் ஒருவனின் தங்கையை மகேஸ்வரி (ஓவியா) காதலிக்கின்றான்...அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான்... கதை..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

1328 முறையாக இந்த கதைகளம் தமிழ் சினிமாவுக்கு இது பழசு...ஆனால் அதனை சுவைபட சொல்லி இருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...

இரண்டாவது வில்லனுக்கு பழைய ஆட்களை தேடாமல் ரொம்ப இயல்பாய் ஒரு பையனை பிடித்து போட்டு இருப்பது இயக்குனரின் திறமைக்கு அவரின் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்..

விமல் வெற்றிக்கு முக்கியகாரணம் அந்த அலட்சியமான டயலாகடெலிவரிதான்.... சும்மாவே ஆடுவேன்... காலில் சலங்கை வேற கட்டிவிட்டா ஆட்டத்துக்கு கேக்கவா வேனும் என்று சொல்லும் அந்த டயலாக் அற்புதம்....

சின்ன சின்ன விஷயங்களில் கவனித்து அறுவடை செய்து இருக்கின்றார்கள்...

உதாரணத்துக்கு டுடோரியலில் வாத்தியார் சிகரேட் கேட்க... பாக்கெட் புல்லாக வைத்துக்கொண்டு ஒண்ணு தான் இருக்கு சார் என்று சொல்லி விட்டு முழு பாக்கெட்டையும் வீசிவிட்டு... அதன் பிறகு அதை எடுப்பது என்று நிறைய விஷயம் புதிதாய் சொல்லி இருக்கின்றார்கள்...

இளவரசு மற்றும் சரண்யா வாழ்ந்து இருக்கின்றார்கள்... எங்க அப்பன் ஆத்தாளை திரையில் பார்பது போல இருக்கு...அதுதான் அந்த இருவரின் வெற்றி


ஊரில் வம்பு பேசுவது அப்படியே டிஷ் வழியா எல்லாருக்கும் போவது போலான அந்த காட்சி அற்புதம்....

விமலோட தங்கச்சி கேரக்டர்... அதுக்காவே டைரக்டரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...ரொம்ப இய்ல்பாக அந்த பெண்ணை நடிக்க வைத்து இருக்கின்றர்கள்...அதே போல் கதாநாயகியின் அப்பாவின் கிராமத்து வாசம் அந்த பேச்சிலும் முகத்திலும்... அற்புதமான தேர்வு

படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்துக்கு பெரிய பலம்...ஊர் திருவிழா,டாஸ்மார்க் இன்டோர் மற்றும் நைட் சீன் எல்லாவற்றிலும் உழைப்பு தெரிகின்றது...

டாப் ஆங்கிளில் வயல்களையும் அதில் கருப்பு ரிப்பன் போலான தார் சாலைகளையும் அப்படியே அழகாய் அள்ளி எடுத்து வந்து இருக்கின்றார்கள்...
துரத்தல் காட்சிகளில் எந்த கன்பியசனும் பார்வையாளனுக்கு இல்லை...

அதே போல் ஒரு பாடல்காட்சியில் கோவில் மேல் நடப்பது போலான அந்த காட்சி நல்ல விஷுவல் டேஸ்ட்.. அதே போல் நண்டு வளைக்குள் கேமரா இருப்பது போலான காட்சிகள் என்று நிறைய மெனகெட்டு இருக்கின்றார்கள்...

டிபிகல் கிராமம் என்றால் இதுதான்.. யமாஹா வைத்து இருக்கின்றார்கள்... டிஷ் வைத்து இருக்கின்றார்கள்...பல்சர் இருக்கின்றது...கோவில் திருவிழாவில் ரீட்டா நடனம் இருக்கின்றது... செல்போன் இருக்கின்றது... பெரியப்பா என்பவர் பேச்சுக்கும், சித்தப்பன் பேச்சுக்கும் சட்டென கட்டுபடுவது...இரட்டை சடையோடு யூனிபார்மில் பள்ளிக்கு போகும் கிராமத்து பெண் பிள்ளைகள்...நைட்டு தற்கொலை செய்து கொள்ளுவாள் என தாவணியை தன் புடைவையோடு படு முடிச்சி போட்டுக்கொண்டு படுப்பது, தண்ணி அடிக்க அலையும் இளைஞர்கள், என டிபிகல் கிராமத்தை கண் முன் நிறுத்துகின்றார் இயக்குனர் சற்குணம்....

வேலை வெட்டி இல்லாத தன் பையனுக்கு காதலால்தான் பயிரை பாதுகாத்தான் என தெரிந்து சட்டென கொதிக்கும் இளவரசுக்கு இந்த படம் அவர் கேரியரில் குறித்து வைத்துகொள்ளகூடிய ஒன்று...

பாடல்களில் டம்ம டும்மா சாங்.. ஒரு நல்லசாங்....

பள்ளி சிருடையில் ஒரு மாதிரி இருக்கும் ஓவியா... மாண்டேஜ் ஷாட்டுகளில் முக்கியமாக விமல் நண்பர்களோடு டீ குடிக்கு அந்த காட்சிகளில் ரொம்ப மெச்சூரிட்டியாக அழகாக தெரிகின்றார்....

ரீட்டா ஆடல் பாடல் காட்சிகளில் கூட தொப்புள் காட்டபடவில்லை... இரத்தம் தொப்புள் என காட்சிகள் வைக்க நிறைய சான்ஸ இருந்தும் ரொம்ப டீசன்டாக படத்தை கொடுத்து இருக்கின்றார் இயக்குனர்...

படம் முடிந்து யாரும் எழுந்து போகாமல் நின்று இளவரசு சரண்யா லுட்டியை பார்த்து விட்டு போவது படத்தின் வெற்றி....


படத்தின் டிரைலர்





சென்னை அண்ணா தியேட்டர் டிஸ்க்கி....


சென்னை அண்ணா தியேட்டரில்தான் டிக்கெட் கிடைத்து...நிறைய காதலர்கள் நிழலுக்கு ஒதுங்க படத்துக்கு வந்து இருந்தார்கள்...

தியேட்டரில் யாராவது நின்னாலே ஸ்கிரின் மறைத்தது....

என் ரோவில் கடைசி சீட்டுக்கு போகும் காதலர்களில் காதலி இருட்டில் தடுக்கி என் மடியில் விழுவது போல் உட்கார்ந்து சட்டென தாங்கி பிடித்து கடைசி சீட்டுக்கு அனுப்பி வைக்க இன்டர்வெல்லில் அந்த பெண் என்னை பார்த்தும் வெட்கத்தில் குனிந்து கொண்டது...

நடு சீட் நம்பர் டிக்கெட் எடுத்து விட்டு ஒரு ஜோடி ஓர சீட்டில் உட்கார பெருமுயற்சி எடுக்க.... ஒழிந்து போங்கள் என தியேட்டர் சிப்பந்தி விட்டார்...

தியேட்டர் முழுவதும் படத்தை உற்சாகமாக பார்த்தார்கள்.... என்ன யாராவது நடந்து போனால் திரை தெரிய மறுக்கின்றது....

=================

நீங்க வேன பாருங்க ஆனி போய் ஆவடி முடிஞ்சிதுன்னா அவன் டாப்பா வருவான் என்று சொல்லும் சரண்யா... அப்போது கொஞ்சமும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்... இந்த படமும் டாப்பாக ரசிக்கபடும் என்று...

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

சாண்டவெஜ் அண்டு நான்வெஜ்(18+சனி/3•07•10)

ஆல்பம்...

கற்றதும் பெற்றதும் பதிவுக்கு நிறைய நெகிழிச்சியான கடிதங்கள் போன்கால்கள் என்று வந்தது மிக்க மகிழ்ச்சி...நான்கு கடிதங்களில் திட்டி வந்த கடிதத்துக்கும் ஆறுதலாய் பலர் பேசினார்கள்... நான் இதுபற்றியெங்லலாம் கவலைபட்டதில்லை...தலை என்ற நண்பர் என் பதிவுக்கு மைனஸ் ஓட்டு குத்துவதில் முனைப்பாக இருக்கின்றார்... எனக்காக நேரம் ஒதுக்கி மைனஸ் ஓட்டு குத்தும் அவரது இடைவிடாத இந்த பணி மிகவும் மெச்சதக்கது...இதில் பலர் ஆதரவாய் கைபேசியில் பேசினார்கள்... முக்கியமாக கார்த்தி(அறிவுதேடல்) மிக ஆதரவாய் பின்னுட்டம் எழுதினான்...

பதிவுலகில் பெற்றதும் நிறைவு பகுதியில் நான் எழுத மறந்த விஷயம் ஒன்று உண்டு...அதற்கு ஒரு நண்பர் வருத்தபட்டு இருந்தார்...கையில் நோட்பேட் வைத்துக்கொண்டு எழுதி டிக் அடிக்கும் ரகம் நான் அல்ல... மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே எழுதிவிடுவேன்....எழுத நினைத்து மறந்து போன விசயங்கள் அதிகம்... இதில் அந்த நண்பர் வருத்தபடும் வரை அது என் நினைவில் வரவில்லை...

பதிவுலகில் பெற்றதில் எழுதாமல் விடுபட்டது... பார்பான அடிவருடி பட்டம்... அந்த பட்டத்தை எனக்கு சிலர் கொடுத்து இருந்தார்கள்... அது பதிவுலகில் வந்து எனக்கு கிடைத்த பட்டம்....

நான் தீவிரமான பார்பபான எதிர்பாளன் என்று சொன்னால் யாரும் நம்ப போவதில்லை...ஆனால் எல்லாவிஷயத்துக்கும் அவர்களை எதிர்பதில்லை....பல விஷயங்களில் அவர்களை எதிர்த்து இருக்கின்றேன்......குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்றைய ஈழ பிரச்சனையும்.. தமிழ் உணர்வு குறைந்தமைக்கும் அவர்கள்தான் காரணம் என்பது என் வாதம்.....
============

தமிழ் செம்மொழி மாநாடு பற்றி முதலில் எனக்கு பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லை... அதில் நிறைய மைனஸ் இருந்தது....காரணம் முள்வேலி மனித மீறல் படுகொலைகள்..ஆனால் மாநாட்டில் தமிழ் பற்றிய புகழ் கலைஞர் பற்றிய புகச்சியை மீறி ஒளிக்கத்தான் செய்தது.. ஓகே பை பை என்று என் அக்கா வீட்டில் சொல்ல நீ என்ன இங்லிஷ்காரனா என்ற கேள்வி எழுப்பபட்டதில் எனக்கு மகிழ்ச்சியே...பல குடும்பங்கள் கூடுமானவரை தமிழில் பேச முயற்ச்சித்தன...அதற்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டலாம்... திரைபடத்துக்கு தமிழில் பெயர்வைத்தால் விரிவிலக்கு என்று சொல்வதற்கு இது எவ்வளவோ பராவாயில்லை......ஆனாலும் ஈழத்து பிரச்சனையை சபையில் வழைப்ழத்தில் ஊசி சொருகுவது போல் பேசிய திருமாவளவனுக்கு நன்றிகள்...
==============

இரண்டு நாளில் சென்னையை சுற்றி உள்ளஇன்ஜினியரிங் கல்லூரியில் படித்த மாணவர்கள் 5 பேருக்கு மேல் பல்வேறு காரணங்களால் மர்மமாய் இறந்து போய் இருக்கின்றார்கள்...உண்மை கண்டிப்பாக வெளிவரவாய்ப்பு இல்லை பணம் எல்லாத்தையும் மறைத்து விடும்...
==============

மிக்சர்...

தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கபட்ட பின் ஏனோ வேண்டா வெறுப்பாக பெயர்பலகை மாற்றினார்கள்.. சிலர் சின்ன பிள்ளைகள் போல் டிஜிட்டலில் இன்ஸ்டன்ட் பெயரை அடித்து ஆங்கில போர்டுகளில் தமிழ் கடை பெயர்களை ஒட்டினார்கள்... சென்னையில் பல வருடங்களாக தமிழ் போர்டு பார்க்க முடியவில்லை... (சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் சோனிமையம் தமிழ் எழுத்துக்களில்)

நான் ஆங்கிலத்துக்கு எதிரி அல்ல... ஆனால் தமிழ் உதாசினபடுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது...இதுவே கர்நாடகவாக இருந்தால் அப்படி நடக்க வாய்பில்லை...சென்னை அண்ணா அறிவாலயம் பக்கத்தில் டிஎம்எஸ் அலுவலகத்தின் எதிரில் உள்ள பெயர்மாற்றபட்ட ஓட்டலில் எந்த இடத்திலும் தமிழ் இல்லை.... சென்னை டிராபிக் போலிஸ் அறிவிப்புகள் எல்லா ஆங்கிலத்துக்குதான் முதலிட்ம்... முதலில் இதனை மாற்றுவோம்....அப்புறம் அடுத்தமாநாடு நடத்துவோம்.....
==============


ஒரு போஸ்டர் என்னை வியக்க வைத்தது...
படத்தை கிளிக்கி வாசித்தாள் நீங்களும் வியப்பீர்கள்... போர்டு இருக்கும் இடம் மனப்பாக்கம் போகும் வழியில்....
================

இந்தவார ஆனந்தவிகடனில் ஒரு கார்ட்டுன் வெளியாகி உள்ளது... என்னதான் இந்தியா என்றாலும்.... கூடங்குளமும் கல்பாக்கமும் இடம் மாறிதானே இருக்கின்றது...
================



இனிமேல் கலாநிதிமாறன்,கிளைவுட் நைன்,ரெட்ஜெயன்ட் போன்றவர்களிடம் விற்கும் படங்களுக்குதான் பெரிய வியம்பரம் கிடைக்கும் போல் தெரிகின்றது....இனி சின்ன பட்ஜெட்படங்களின் விளம்பரத்தை மக்களிடம் சேர்பதற்குள் முழி பிதுங்கிவிடும்...

=======
இந்த வார புகைபடம்...
எதை சீக்கரமா ஓப்பன் பண்ண போறாங்கன்னு தெரியலை...தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா...
================

இந்தவார சலனபடம்...

ராஜா,ரகுமான் எல்லாம் இனி யோசிக்கனும்.....அவசியம் பாருங்கள்... மொத்தம் 8 நிமிட வீடியோ...3வது நிமிஷத்தில் உங்கள் உதட்டில் புன்னகை வரவைக்கும்....5 வது நிமிடத்தில் உங்கள் புன்னகை சிரிப்பாக மாறும்... அப்படி சிரிக்கவில்லை என்றால் அவசியம் டாக்டரை பார்க்கவும்...வீடியோ முடிவில் எல்லோரும் இந்த வீடியோவை பார்க்க சொல்லி பரிந்துரை செய்வீர்கள்...


===================

படித்ததில் படித்தது...

நீதிபதி..
ஏன் உங்க கணவரை விஷம் வச்சி கொல்ல பார்த்திங்க...
மனைவி..
எனக்கு பயமா இருந்தது யுவர் ஆனர்....

க. கலைவாணன்
==============
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்கில்கள் சென்னை தமிழில் கூட வழக்காடலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்..

பாமக என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது...?
கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

சிக்ஸமுகம்.
இந்த வார ஆவியில்
============================

பிலாசிபிபாண்டி....

உலக்த்தோட பொதுவான விஷயம் என்ன தெரியுமா, ஒருத்தன் கார் கதவை பொண்டாட்டிக்கு திறந்து விட்ட... காரோ அல்லது பொண்டாட்டியோ புதுசுன்னு அர்த்தம்...
============

பெருமாள் செஞ்சா பெருமை
சிவன் செஞ்சா திருவிளையாடல்
கிருஷ்ணன் செஞ்சா லீலை...
அப்ப பசங்க செஞ்சா மட்டும் ஈவ் டீசிங்னு சொல்லறது எந்த விதத்துல நியாயம்..
==================
நான்வெஜ்...18+
ஜோக்..1

டாகடர் கிட்ட ஒருத்தன் போனான்... டாக்டர் நைட் ஆனா ஒரு குறிப்பிட்ட பாருக்கு போய் என் பொண்டாட்டி தண்ணி அடிச்சிட்டு பயங்கறமா அளப்பறை பன்னறா....அது மட்டும் இல்லை தண்ணி அடிச்சிட்ட யாருகிட்ட வேனா செக்ஸ் வச்சிக்கிறா.... உடனே டாக்டர் ரிலாக்ஸ்மேன்,டேக் வாட்டர், டேக் பிரித் , காம்டவுன், மனசை இறகுமாதிரி வச்சிக்கிங்க... இப்ப சொல்லுங்க உங்க மனைவி எந்த பாருக்கு போறாங்க....

=============

அந்த பெண் தன் காதலினிடம் தன் அப்பா வர லேட் அகும் உடனே வீட்டுக்கு வந்தால் உடனே உடலுறவு கொள்ளலாம் என்று சொல்ல.. வாயல் ஜொள்ளோடு காதலி வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பார்மசியில் நிரோத் வாங்கி அதை எப்படி யூஸ் செய்ய வேண்டும் என்று கடைகாரரிடம் கேட்டு விட்டு பக்கத்து பொட்டிக்கடையில் பதட்டத்தை தணிக்க ஒரு தம் போட்டு விட்டு அவள் வீட்டுக்கு போனால்... அவள் பெற்றோர் இருந்தனர்...அதிர்ச்சி.. காதலி உள்ளேவா இவ்வளவு கூச்சத்தை உன்கிட்ட நான் பார்த்து இல்லையே? என்று சொல்ல... உங்க அப்பாதான் பக்கத்து தெருவுல மருந்து கடை வச்சி இருக்காருன்னு எனக்கு தெரியாதே என்றான்..
=============
ஒருத்தன் ரெயிலில்அழும் 3 குந்தைகளை வச்சிகிட்டு தவிக்க.. பக்கத்துல இருந்த பொம்பளை கேட்டாலாம்.. இது உங்க குழந்தைங்களா? இல்லை நான் ஒரு காண்டம் சேல்ஸ்மேன்... இந்த குந்தைங்க கஸ்டமர் கம்ளெய்ன்ட்...
=====================
அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

பதிவுலகில் பெற்றது (பாகம் /3) நிறைவுபகுதி...மலரும நினைவு புகைபடங்களுடன்..


பதிவுலகில் பெற்றவைகள்...

பதிவுலகில் கற்றது இரண்டு பாகமாக எழுத ஆரம்பித்து அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவும்.. நெகிழ்ச்சியான கடிதங்களுக்கு என் நன்றிகள்...4கடிதங்கள் திட்டி வந்தது அவர்களுக்கும் என் நன்றிகள்...

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் நான் பதிவுலகில் கற்றதை விட பெற்றதே அதிகம்...

நான் எல்லோரிடமும் நான் பேசும் ரகம் அல்ல... சினிமாவில் கூட எல்லோருடைய நம்பரையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்...நான் அப்படி அல்ல...பூனைக்கு பிடித்து இருந்தால் மட்டுமே அது மற்றவரிடம் நட்பு பாராட்டுமாம் அது போலவே என் கேரக்டர்....ஊரிலும் சென்னையிலும் நண்பர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்...

ஆனால் பதிவுலகம் வந்த பிறகு உலகம் முழுவதும் நண்பர்கள் வட்டத்தை கொடுத்தது இந்த பதிவுலகம்தான்...உலகம் முழுவதும் என்னை வாசிக்கின்றார்கள் என்பது என் மனைவி வெளிநாடு போனபோது என்க்கு தெரிந்தது... அப்போது எழுதிய பதிவுக்கு வந்த ஆறுதல்கள் இருக்கின்றது பாருங்கள்...அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்வை போல எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்கள்.... அந்த பதிவுக்கு....கிளிக்கவும்


நெகிழ்ந்து போய் இருந்தேன்... இந்தியாவென்றால் எந்த உதவியும் கோரலாம்.. ஆனால் அயர்லாந்து என்பது சாத்தியமில்லை.... எல்லாவற்றையும் கம்பெனி பார்த்துகொள்ளும் ஆனால் ஒரு தமிழ் தெரிந்த நம்ம ஊர்காரர் இருந்தால் இன்னும் கொஞ்சம் தைரியத்தை கொடுக்குமே என்பதால்
//அயர்லாந்தில் தமிழ் பதிவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள்...அல்லது அயர்லாந்து டூப்ளின் நகரத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் ஓகே....கடல் கடந்து எதாவது உதவி என்றால் நாம் எப்படி செய்ய முடியும்...விருப்பம் இருப்பின் சொல்லுங்கள்... அல்லது சென்னையில் இருந்து அயர்லாந்து சென்றாலும் சொல்லுங்கள்.....//

என்று எழுதி போஸ்ட் போட்டு இரண்டு நாளில் பதில் கலப்பாக்கத்தில் இருந்து இப்போது அயர்லாந்தில் வசிக்கும் மேஷக் என்பவர் எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்...அவர் எந்த உதவியும் தயங்காமல் கேட்கவும் என்று சொன்ன பதிவுக்கு கிளிக்கவும்... அந்த நேரத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....கடவுளுக்கு நன்றி..பதிவுலகத்தின் பயனை அன்றுதான் அடைந்தேன்... நண்பர் மேஷக்... என் மனைவி மற்றும் அவர் நண்பர்களுக்கு எல்லா உதவியும் அயர்லாந்தில் செய்தார்....வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு அது... அதன்பிறகு சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடிகுடியிருப்பு கட்ட போவதாக சொல்ல... அந்த நேரத்தில் பொருள் உதவி செய்தது இந்த பதிவுலகம்தான்....அந்த நெகிழ்ச்சியை வாசிக்க கிளிக்கவும் என் பரம்பரையில் சொந்த வீட்டில் வாஷ்பேஷனில் கை கழுவி ஷவரில் குளித்த முதல் ஆள்நான்தான்... அதை சாத்தியமாக்கியது பதிவுலகம்....நான் வீடு வாங்க உதவி செய்தவர்களில் பதிவுலக நண்பர்களும் இருக்கின்றார்கள்... இதே சென்னையில் ஒரு காலத்தில் விலாசமற்று இருந்தவர்களில் நானும் ஒருவன்....விலாசம் கொடுத்தது இந்த பதிவுலகம்தான்...கிரஹபிரவேசத்தின் போது உரிமையாய் போன் செய்து உதவிய ராஜ் எனும் நண்பனை கொடுத்ததும் இந்த பதிவுலகம்தான்....

பதிவர் மணிஜிக்கு பத்திரிக்கை வைத்து விட்டு சைதாபேட்டை பேருந்து நிலயத்தில் ஒரு தம்மை பத்தவைத்துகொண்டு ரொம்ப சிரியசாக ஒரு தம் இழுத்து விட்டு ஜாக்கி நான் வீடு வாங்கும் போது இது போல பதிவுலகம் என்று ஒன்று இருந்து இருந்தால் கொஞ்சம் பெரிசா விடு வாங்கி இருப்பேன் என்று கமெடியாக சொன்னார்....
சென்னையில் எதாவது ஒரு விழா நடக்கின்றது...அதில் கலந்து கொள்ளும் போது பதவிர் அல்லாத முக பரிட்சயம் இல்லாத நபர் நீங்க ஜாக்கிதானே என்று அடையாள படுத்திக்கொண்டு.. கைகுலுக்கி மிகிழ்ச்சியாக பேசும் போது வரும் சந்தோஷம்... கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது....


ஹேலோ ஜாக்கிசாரருங்களா? புதுக்கோட்டையில் இருந்து குமார் பேசறேன்... என் தங்கை இன்டர்வியூவுக்கு வந்து இருக்கா... சென்னைக்கு அவ புதுசு... உங்க நம்பர் கொடுத்து இருக்கேன்.. எதாவது பஸ் ரூட் தெரியலைன்னா சொல்லிக்கொடுங்க சார்.. நிச்சயமா...

ஹலோ ஜாக்கி அண்ணாங்களா... சொல்லும்மா...வடபழனியில இருக்கேன்...தேனாம்பேட்டை போவனும்.. எந்த பஸ் பிடிக்கனும்...12பி பஸ் பிடிச்சிக்கோம்மா...சப்போஸ் எதாவது ஆட்டோ பிடிச்சி போனா எனக்கு அந்த ஆட்டோ நம்பரை எஸ்எம் எஸ் அனுப்பு என்று சொல்ல...அது போலவே அந்த பெண்ணும் செய்தது..... இது போலான சின்ன உதவிகள்தான் நான் செய்து இருக்கின்றேன்... பின்னுட்டத்தில் வந்த கடிதங்கள் போல பர்சனலாக நிறைய வருகின்றது... அதனை சாண்ட்வெஜ் பகுதியில் போட்ட போது.. ஒரு பிபரபல எழுத்தாளர்.. அவரே பாராட்டுக்கடிதம் எழுதி வலையேற்றுவார் என்று பலருக்கு தெரியும்... அது போல இதை நினைத்துக்கொள்ள போகின்றார்கள் என்று சொன்னார்...அவர் எப்படி இருந்தால் என்ன---??அப்படி ஒரு நாளும் நான் எழுத போவதில்லை... என்னோடு பகிர்பவர்களுக்கு பதிவில் போடுவது ஒரு அங்கீகாரம் அது அவ்வளவே...... மும்பையில் என் நண்பி வேலை இல்லாமல் தவித்துகொண்டு இருந்த போது மும்பை வாசக நண்பர் திபக்கிடம் சொல்ல இரண்டு நாளில் வேலை வாங்கி கொடுத்தார்....ஒரு பெண் மும்பையில் அவள் சொந்தகாலில் நிக்க உதவியது இந்த பதிவுலகம்தான்... முகம் பார்க்காத பல சொந்தங்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினாராக பாவிப்பதும் இந்த பதிவுலகம்தான்... ஜாக்கிசார், ஜாக்கி அண்ணே,யோவாய்ஸ் போன்ற இலங்கை நண்பர்கள் “தல” என்றே விளிக்கின்றனர்..வந்தியதேவன் எப்போதும் அண்ணாச்சி என்றே அழைப்பார்...

வரி எழுத வேண்டும் என்று இதை எழுதவில்லை எனக்காக என் பதிவு படித்து பிடித்து இருந்தால் உங்கள் நேரத்தை ஒதுக்கி எனக்கு தமிளிஷ் தமிழ்மணத்தில் ஓட்டு போடுகின்றீர்கள் பார் அதற்கு என் கோடி வந்தனங்கள்..

ஒன்னும் இல்லை போன பதிவில் போட்டோஷாப் எனக்கு தெரியாது என்று சொல்ல அதை சொல்லிதரவும் வழிகாட்டவும் எத்தனை பேர்.. அந்த பரிதவிப்பும் அந்த அன்பும் கிடைக்க நான் என்ன செய்தேன்... நேரம் ஒதுக்கி பதிவு எழுதுவதை தவிர...

ஷுட்டிங் முடிய மணி இரவு பத்தாகியிருக்கும்.. வந்து அடித்து போட்டது போல் ஒரு வலி காலில் இருக்கும் இருந்தும்.. ஒரு பதிவை எழுதி இரவு 12 மணி க்கு போஸ்ட் செய்து விடியலில் 5 மணிக்கு எழுந்து ஷுட்டிங்க்கு போய் இருக்கின்றேன்...

ஆரம்பத்தில் தடவி தடவி அடித்த போது பிழையோடுதான் தமிழ் எழுதுதினேன்... இப்போது கூடுமானவரை திருத்தி போஸ்ட் போடுகின்றேன்... எனக்கு தெரியும்... நன்றாக சுவைத்து கடடில சாப்பிடும் போது ஒரு சொத்தைக்கடலை கடித்தால் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது...நேரமின்மை காரணமாக ஷுட்டிங்கின் போது எந்த திருத்தமும் இல்லாத அப்படியே வலையேற்றிவிட்டு போய் இருக்கின்றேன்... அதை பொறுத்து படிக்கும் உங்கள் பொறுமைக்கு என் நன்றிகள்..

கம்யூட்டரில் எதாவது பிரச்சனை என்றால் அதற்கு பயபட்ட காலங்கள் என்று ஒன்று உண்டு...ஆனால் பதிவுலகம் வந்த பிறகு அப்படி ஒரு கவலை எனக்கு வந்தது இல்லை... நண்பர் வடிவேலன் எந்த நேரத்தில் போன் செய்தாலும் பொறுமையாக நேரில் வந்து செய்து கொடுத்து விட்டு செல்லும் நபர்... அதே போல் இருதயராஜ்ம் அப்படியே.......இதுவும் பதிவுலகத்தால்தான் கிடைத்துதான்...

ஒரு படத்துக்கு போக வேண்டும் என்றால் முன்பெல்லாம் தனியாக பார்த்து இருக்கின்றேன்... இப்போது யாராவது பிரியாக இருந்தால் வரச்சொல்லுகின்றார்கள்...

விஜய் ஆம்ஸ்ட்ராங் போன்ற ஒளிப்பதிவாளர்கள்.. நட்பு கிடைத்தது எல்லாம் இந்த வலையுலகத்தால்தான்.... இப்போதும் அவர் சொல்லுவார் ஜாக்கி உங்கள் ரீச் பவர் அதிகம்... இன்னமும் என்னை நிறையபேர் அடையாளபடுத்திக்கொள்கின்றார்கள் என்று....

சின்ன உதவியாக இருந்தாலும் பெரிய உதவியாக இருந்தாலும்....உதவி செய்ததை ஒரு காலும் நான் மறக்கமாட்டேன்....அதனால்தான் எல்லா இடத்திலும் இதனை குறிப்பிட்டு வருகின்றேன்...

சென்னையில் இருப்பதால் மட்டுமே வேலை பளுவுக்கு மத்தியில் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைபடம் எடுத்து இருக்கின்றேன்..இது சென்னையில் இருப்பதால்... மற்ற ஊப் பதிவர்கள் மேலும் எனக்கு அன்பு அதிகமே... என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...

5விரலும் ஒன்றாக இருப்பதில்லை எல்லாம் இணைந்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம்...இங்கு வெளியிட்ட புகைபடங்கள் எல்லாம் இரண்டு வருடங்களில் சென்னையில் நடைபெற்ற நிகழுவுகளில் எடுக்கபட்ட புகைபடங்கள்.. இன்று எதிரும் புதிருமாய் இருக்கும் நண்பர்கள் கூட எல்லோரும் ஒன்றாய் இருந்த காலங்கள் அது...அன்று காட்டிய அன்பும் நேசமும்.. நிஜம்... நடுவில் நிறைய மாற்றங்கள்...கருத்து மோதல்கள்... இருப்பினும் ஒரு நாள் அந்த கோபங்கள் கடந்து போகலாம்...அப்படி திரும்ப ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே என் ஆசை...

மேலுள்ள படங்களில் உள்ள பல படங்களில் உள்ள பதிவர்களின் பாதி பேரின் பேர் எனக்கு தெரியாது....அதனால் பெயர் போட முடியவில்லை மன்னிக்கவும்..

புகைபடங்களை சேகரிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது...இன்னும் பலது விடுபட்டுவிட்டன.. நேரமின்மையேகாரணம்....

பிளாக் எழுதி என்ன கிழித்து விட்டேன் என்று நான் எப்போதும் சொல்லபோவதில்லை...நான் அடக்கத்துடன் சொல்லிக்கொள்கின்றேன்..ஏதோ கொஞ்சம் கிழித்து இருப்பதாகவே மனதுக்கு படுகின்றது...

படங்களை கிளிக்கி பார்க்கவும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்



Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner