1990ல் நாங்கள் ஒரு நடிகனுக்கு அடிமைபட்டுகிடந்தோம்... அவனின் எல்லா செய்ல்களையும் ரசித்தோம்..அவனின் வேகம் எங்களுக்கு பிடித்து இருந்தது...அந்த வேகமும், அந்த நகைச்சுவை உணர்வும் எங்களை அந்த நடிகனிடம் கட்டி போட்டடது... இதற்கு முன் இது போல் எந்த நடிகனிடமும் நாங்கள் மனதை பறி கொடுத்தது இல்லை..
யாருக்கும் பாலபிஷேகம் செய்ததில்லை... முதல்நாள், முதல்ஷோ இருக்கும் வேலையை விட்டு விட்டு டிக்கெட் கவுண்டரில் கால் கடுக்க நின்றதில்லை..தேங்காய் உடைந்தது இல்லை... கற்புரம் காட்டியது இல்லை, லாட்ரி டிக்கெட் சேகரித்து சின்ன அட்டை பாக்சில் போட்டு திரை அருகில் போய் விசிறி எறிந்தது இல்லை....
ஆனால் அந்த நடிகனிடம் ஒரு உண்மை இருந்தது... அந்த நடிகனின் சிரிப்பில் ஒரு கவர்ச்சியுடன் கூடிய குழந்தை தனம் அதிகம் இருந்தது...சிறுவயதில் இருந்து படி படியாக கஷ்டபட்டு மேலே வந்த அந்த கட்ஸ் எனக்கு பிடித்து இருந்தது....
தான் சிகரேட் பிடித்தால் தன் ரசிகர்களும் சிகரேட் பிடித்து உடல்நலத்தை கெடுத்துக்கொள்வார்கள் என்று ஒரு படத்தை தவிர அவர் எந்த படத்திலும் புகைக்கும் காட்சியில் நடித்தது இல்லை....
அபிஷேகம் ஆராதனை ஏதும் இல்லாமல் அந்த நடிகனின் முதல் நாள் முதல் ஷோவுக்கு படம் பார்க்க மனம் பதபதைத்து... அது போல பார்த்து வந்தேன்...
அந்த நடிகரின் பேர் ஜாக்கிசான்... பிறந்தது ஹாங்காங்
நான் ஜாக்கி நடித்த ...தி யங் மாஸ்டர் படத்தை எத்தனைமுறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை...திஆர்மர் ஆப்காட் இரண்டு பகுதிகள்... புராஜக்ட் ஏ இரண்டு பகுதிகள்
ரஷ்ஹவர் படம் முதல் பாகம் வரை முதல்நாள் முதல் ஷோ பார்த்து இருக்கின்றேன்..1980 களில் வெளிவந்த தியங் மாஸ்டர் படத்தில் ஜாக்கிக்கு ஒருவர் குங்பூ கலையை கற்று தருவார் மிகச்சரியாக 30 வருடங்கள் கழித்து அமெரிக்க பையனுக்கு இந்த படத்தில் பிரமோஷன் பெற்று குங்பூ கலையை கற்று தருகின்றார்.....
THE KARATE KID-2010 படத்தின் கதை இதுதான்...
மலைக்கும் மடுவுக்குமான கதை...அமெரிக்காவில் இருக்கும் Parker (Jaden Smith) 12வயது பையன்...அவனது அம்மாவுக்கு சைனாவில் வேலை கிடைக்கின்றது.. அதன் பொருட்டு குடும்பத்துடன் சைனாவுக்கு போகும் சூழ்நிலை...
எல்லாமும் மாறுகின்றது.. சூழ்நிலை பழக்க வழக்கம்.... எல்லாவற்றையும் அந்த 12 வயது பையன் எப்படி எதிர்கொள்கின்றான் என்பதும்....சைனாவில் இருக்கும் லோக்கல் பசங்களுக்கும் இவனுக்கும் வேறு ஆகவில்லை...அதுவும் ஒரு சண்டையில் கராத்தே அடியில் அவனை போட்டு துவைக்கின்றனர்...இதனால் பார்கருக்கு கராத்தே கற்றுக்கொள்ள ஆசை வருகின்றது... பார்கரை லோக்கல் பசங்கள் துவைக்கும் போது...அவர்கள் இருக்கும் அப்பார்ட்மென்டின் மெயின்டெயினன்ஸ் ஆள்Mr. Han (Jackie Chan) தடுக்க....
அந்த பசங்க அவரையும் சேர்த்து தாக்க... ஜாக்கி அவர்களை பின்னி பெடல் எடுக்கின்றார்... அதனால் அவர்களுக்குள் மோதல் அதுலொக்கல் பசங்களுக்கு கராத்தே சொல்லி தரும் குருவுக்கு கோபம் வருகின்றது..ஜாக்கியிடமும், பார்கரிடமும் சண்டைக்குவர....வரும் கராத்தே டோர்னமென்டில் உங்கள்மாணவர்களுடன் இந்த பையனும் மோதுவான்... அவர்களுடன் மோதி ஜெயிப்பதாக பந்தயம் கட்டிவிட்டு ஜாக்கி வந்து விடுகின்றார்.....
பார்கருக்கு கராத்தே கற்றுக்கொள்ளவெண்டும் என்று ஆசை...அவனுக்கு ஜாக்கி கராத்தே கற்ற கொடுத்து, கராத்தே டோர்னமென்டில் கட்டிய பந்தியத்தில் இருவரும் ஜெயிக்கின்றார்களா? என்பதை சுவாரஸ்யமான மீதி கதை...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
பர்சூட் ஆப் ஹாப்பினஸ் படத்தில் வில்ஸிமித் பையனாக நடித்த ஜேர்டன் ஸிமித் தான் அந்த பண்ணிரண்டு வயது பையன்.. இந்த படத்துக்கு ஒன் அப்த புரொட்யூசர்.. வில்ஸ்மித் அவுங்க மனைவியும்..இவுங்களுக்கு ரெண்டு புள்ளைங்க... அதில் பெரியவன்தான் இந்த படத்துல நடிச்சி இருக்காங்க.. இவுங்க ஒரு வளர்ப்பு புள்ளையையும் வளர்த்து வராங்க..படத்தில் முதல் ஒரு சில காட்சிகளிலேயே... இரு நாட்டின் சமுக பொருளாதார .. பழமைவாத பிரச்சனைகளை போகின்ற போக்கில் அலசுகின்றது இந்த படம்....
முக்கியமாக சைனாவின்.. பழமை கலந்த புதுமையை இரண்டு மூன்று காட்சிகளில் வெளிபடுத்திய விதம் அருமை...
ஜாக்கி முதல் இரண்டு மூன்று காட்சிகளில் ரொம்பவும் சாதாரண ஆளாக காண்பித்துவிட்டு... அதன் பிறகு வேகம் எடுக்கும் அந்த காட்சிகள் அருமை...
ஜாக்கி ஒரு சின்ன குறுந்தாடியுடன் கிழ சிங்கமாக காட்சி அளிக்கின்றார்...அந்த பழைய கர்ஜனை அப்படியே இருக்கின்றது...
சீன பெருஞ்சுவரும்.. மலை மேல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்களும் மனதை அள்ளும் வகையில் படம் ஆக்கபட்டன...
இந்த படம் சிறுவர்களுக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையும் கற்றுதரும்..
ஜாக்கி வரும் காட்சிகளில் எல்லாம் விசில் கைதட்டல் பெரிதாய் வந்தது...எனக்கு மகிவும் ஆச்சர்யமாக இருந்தது...அந்த பசங்களுடன் போடும் தடுப்பாட்ட சண்டை அற்புதம்...
பையனுக்கு கராட்டே கற்று கொடுக்க சினபெருஞ்சுவரில் கற்று கொடுக்கும் போது அந்த ஹெலிகாப்டர் ஷாட் அற்புதம்...
கராத்தே டோர்னமென்ட் அப்டிபயே பிளட் ஸ்போர்ட் படம் பார்த்து போல் இருந்தது...
கடைசியில் போட்டியில் தான் கற்றக்கொடுக்காத விஷயத்தை பைனலில் பண்ணும் போது நாமும் நிமிர்ந்து உட்காருகின்றோம்..
பெய்ஜிங்கின் புறநகர் பகுதிகளும்... ஜாக்கியின் அப்பா அழைத்து போன இடத்துக்கு இந்த பையனும் அழைத்து செல்லும் அந்த காட்சிகளும் லோக்கேஷ்ன்களும் நெஞ்சை கொள்ளை கொள்பவை..
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை மீண்டும் ஜாக்கி நிருபித்து இருக்கின்றார்....
அவசியம் பார்க்கவேண்டிய படம்...
படத்தின் டிரைலர்...
தியேட்டர் டிஸ்க்கி...
இந்த படத்தை மோட்சம் தியேட்டரில் பார்த்தேன்....
என் பட்ஜெட்டுக்கு ஹாலிவுட் தமிழ்வெர்சன் பார்க்க இந்த தியேட்டருக்குதான் போவேன்....
70 எம் எம் ஸ்கிரின்... ஏசி...டிடிஎஸ், கியூப் சினிமா, எல்லாம் இருந்தும்...டிக்கெட் கட்டணம் பால்கனி 50 ரூபாய்... கீழே 40 ரூபாய்... என்ன நம்ம பக்கத்துல ஏதாவது ஒரு போதை பார்ட்டி உட்காராம இருக்க கடவுளை வேண்டிக்கனும்....அவ்வளவுதான்
இந்த தியேட்டர் வட சென்னை வாசிகள் பலர் வந்து ரசிக்கும் இடம் என்பதால் லாபியில் ,ங்கோத்தா, ங்கொம்மா ரொம்ப சரளமாக செம்மொழி பேசினார்கள்..... எனக்கும் அடிக்கடி வரும் ஆனால் இவ்வளவு புலோவாக வராது...
எனக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த 14 பேர் படத்தை விட அதிகம் பேசிக்கொண்டு இருந்தனர்.. சீட் மாறி உட்கார்ந்து விட்டு தியேட்டர் சிப்பந்தியிடம் தகாராறு செய்தனர்...
அவர்களுக்கு படத்தில் பையனுக்கு அம்மாவாக நடித்த பெண்ணை பிடிக்கவில்லை போலும் இன்னும் அழகான அம்மாவை எதிர்பார்த்து இருக்கலாம்...அந்த பெண் ஸ்கிரினில் வந்தாலே... இந்த சனியன் வேற அப்ப வந்து உயிரை எடுக்குது என்று புலம்புனார்கள்...
மோட்சம் தியேட்டரில் இருந்த இன்னொரு தியேட்டரில் துரோகம் நடந்துது என்ன தமிழ் படம் ஓடிக்கொண்டு இருந்தது.... டிக்கெட் எடுக்கும் இடத்தில் ஒரு பெண்ணின் இடுப்பில் முத்தமிடும் காட்சி போஸ்டடி பார்த்துவிட்டு ஒரு சின்ன பசங்க அடிச்ச கமென்ட்டை இங்க பகிர முடியாது ஆனாலும் சிரிப்பை வரவழித்தார்கள்..
ஜாக்கி கராத்தே கற்றக்கொடுக்கும் போது அந்த பையனுக்கு ஜாக்கெட்டை கழட்டு போடு திரும்பவும் மாட்டு என்பது போலான பயிற்சி கொடுக்கும் போது பார்வையாளர் பக்கத்தில் இருந்து... இந்த பையன் சொன்ன பேச்சு கேட்குது ... ஜாக்கெட் அவுக்குது... மேல ஓடற தியேட்டர்ல அந்த பொண்ணு கடைசி வரை அவுக்கவே இல்லை என்று கத்த தியேட்டர் கொள்...
தியேட்டர் முழுதும் சேவல் பண்ணையாக காட்சி அளித்தது... மருந்துக்கு கூட எங்கும் பெண்களை பார்க்க முடியவில்லை....
படத்தில் ஒரு காட்சியில் உங்க பேர் என்ன என்று ஒரு டயலாக் வரும்...என் பேர் தேவிடியா என்று... என் பின் சீட்டு நபர் கத்த... நல்ல ஜோக் அந்த பையன் அடித்து விட்டதாக அவர் நண்பர்கள் வட்டம் ஆரவாரம் செய்தது...
படக்குழுவினர் விபரம்...
Directed by Harald Zwart
Produced by Jerry Cockboy
Will Smith
Jada Pinkett Smith
James Lassiter
Ken Stovitz
Jacob Irvine
Written by Screenplay:
Christopher Murphey
Story:
Robert Mark Kamen
Starring Jackie Chan
Jaden Smith
Taraji P. Henson
Music by James Horner
Cinematography Roger Pratt
Editing by Kevin Stermer
Studio Overbrook Entertainment
JW Productions
China Film Group
Distributed by Columbia Pictures
Release date(s) June 11, 2010 (2010-06-11)
Running time 140 minutes
Country United States
China
Language English
Budget $35 million
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...
// இந்த படம் சிறுவர்களுக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையும் கற்றுதரும்..//
ReplyDeleteஎன்னை போன்ற குழந்தைகளுக்கும் நிச்சயம் கற்றுதரும்..
ஜாக்கியை இப்படி பார்க்கையில் ஒரு மாதிரியாத்தான் இருக்கு
ReplyDeleteவில்ஸ்மித்தின் மகனை பார்க்கையில் ரொம்ப உற்சாகமா இருக்கு
அவசியம் இந்த படம் பார்க்கனும்.
டிவிடி இருந்தா எடுத்து வைங்க சென்னை வருகையில் வாங்கிக்கிறேன்.
வணக்கம், ஜாக்கி நீண்ட நாட்களாகி விட்டது உங்கள் பக்கம் வந்து, வேலை பளு அதிகம் காரணமாக சிறிது இடைவெளி. நன்றாக இருக்கிறீர்களா? தேர்வு நல்ல முறையில் எழுதினீர்களா? வீடு நல்ல முறையில் செட்டாகி விட்டதா? விமர்சனம் படித்தேன். ஜாக்கி சானை எனக்கும் மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் பொது பார்க்க வேண்டும். நன்றி!
ReplyDeleteJACKIE IS ALLTIME FAVOURITE HERO ME TOO....
ReplyDeleteNICE REVIEW
(TAMIL FONT SOFTWARE DIDNT WORK. THATS WHY)
MANO
படம் அற்புதம் ஜாக்கி. நேற்றுதார் பார்த்தேன். பையனின் நடிப்பும் பாடி லாங்குவேஜும் சூப்பர். பின்னர் ஜாக்கியை பற்றி சொல்லும் அளவுக்கு நமக்கு பக்குவம் பத்தாது.
ReplyDeleteInnikku parthuttu appale comment poduren thala..
ReplyDeletevottu podurathu intha murai waste, kaaranam tamilmanam. so aduththa murai thalaivare.,
ReplyDelete:)
உங்கள் பேரிலே தெரிகிறது உங்களுக்கு எவ்வளவு ஜாக்கியை பிடிக்கும் என்று,..அப்பறம் எதற்கு இவ்வளவு intro...
ReplyDeleteசரி அந்த சின்ன பசங்க சொன்ன comedy என்னனு சொல்லவே இல்லயே.. இதுக்கு நீங்க அந்த para வ சொல்லாமலே இருந்திருக்கலாம்...
" இந்த படம் சிறுவர்களுக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையும் கற்றுதரும்.. "
ReplyDeleteஅப்போ நான் கண்டிப்பா பாக்கணும் ...
"சிறுவயதில் இருந்து படி படியாக கஷ்டபட்டு மேலே வந்த அந்த கட்ஸ் எனக்கு பிடித்து இருந்தது.... "
அவர் சென்னை வந்த விழாவுக்கு போயிருந்தீங்களா ..?
"கடைசியில் போட்டியில் தான் கற்றக்கொடுக்காத விஷயத்தை பைனலில் பண்ணும் போது நாமும் நிமிர்ந்து உட்காருகின்றோம்.."
நாளை மறுநாள் போய் பார்க்கிறேன் ...
bye jack!
ஜாக்கிக்கு வயசாயிடுச்சா ?. சிலருக்கு வயசு ஆகக்கூடாது :(.
ReplyDeleteசுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.
அப்புறம்.. நீங்க இந்த படம் பார்த்தீங்களா ? இல்லை.. அடுத்த தியேட்டர்ல ஓடுனதுக்கு போனீங்களா ? :). பரவாயில்லை சொல்லுங்க :
வணக்கம், என்னுடைய முதல் பதிவு போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
ReplyDeletehttp://kaniporikanavugal.blogspot.com/
உங்கள் விமர்சனமும் படத்தின் ட்ரையிலரும் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன ஜாக்கி சான் சீடரே.
ReplyDeleteThalaivar padathai vimarsanam seidhadharku nandri, Jackie. Kandippaga parka vendum. Jackie Chan unmaiyilume oru role model thaan.
ReplyDeleteஅன்பின் ஜாக்கி சேகர்
ReplyDeleteநல்லதொரு விமர்சனம் - வீட்டிற்கருகில் இதுவும் சிங்கமும் ஓடுகின்றன - சிங்கத்திற்கு அலை மோதும் கூட்டம் இதற்கு மோத வில்லையே
ம்ம்ம்ம் இன்று பார்க்க முயல்கிறேன்
நல்வாழ்த்துகள் ஜாக்கி சேகர்
நட்புடன் சீனா
கிழ ஜாக்கிசான் என்று கூறியதை வன்மையாக ஆட்சேபிக்கிறேன். ரஜினிக்கு கூட தான் 60 வயது ஆகி விட்டது, அதற்காக அவரை கிழவர் என்போமா? அது போல் தான் ஜாக்கியும்...
ReplyDeleteஎனக்கு ஜாக்கீ சான் ரொம்ப பபிடிக்கும்.இப்போத்ன் சீன பெருந்சுவர் பார்த்தேன்.தெரியாமல் போயிசே.இன்னும் கொஞம் நல்லா பார்த்திருப்பேன்.
ReplyDeleteஅவரைப்பற்ற்றி னீங்கள் சொன்ன எல்லா காரணஙளுக்க்உம் அவரை பிடிக்கும்.
நானுன் இந்த படம் பாத்துட்டேன். படம் டாப்பூ... அப்புறம் அந்த சின்ன பசங்க என்ன கமெண்ட் பன்னாங்க என்பதை நீங்கள் சொல்லியே ஆகனும்...
ReplyDeleteஜாக்கி ஒரு அற்புதமான நடிகர். அப்புடியே இந்த படத்தை தமிழில் நம்ம டாக்டரையும் அவரோட பைய்யனையும் நடிக்க சொல்லுங்க... படம் கண்டிப்பாக 200 நாள் ஓடும்...
ReplyDeleteஇன்னும் படம் பார்க்கலைங்க ஜாக்கி... கண்டிப்பா பார்க்கணும்...
ReplyDeleteசேகர் நான் படத்த பாத்துட்டேன்.. ஓகே ஆனா நம்ம 36 சேம்பர் ஆப் சாவேலின் படத்தில இருந்த பெப் இல்ல ன்னு நென்கிகறேன்...
ReplyDeleteபத்ரிநாத்
Nan Karathey Kid Padathai Parthen... Jackiechan Thanudaiya thiramaiyai meendum nerupithu vitar.
ReplyDelete