ரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்தும் கார் ஓட்டிகள்...(பகுதி/3)

1990களில் இருந்த வாகன பெருக்கத்துக்கும்...2010ம் ஆண்டில் உள்ள வாகன பெருக்கத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியச்த்தை காணலாம்.. காரணம் ரொம்ப சிம்பிள்... பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால்,படித்தவர்களின் தனிநபர் வருமானம் உயரத்தொடங்கியது....

இதனால் இந்தியாவில் கார் சந்தை மற்றும் இரண்டு சக்கர வாகன சந்தை ஆக்கிரமித்தது...லோன் ஈசியாக கிடைப்பதாலும்...நடுத்தர வகுப்பினர் இப்போது கார் வைத்து இருப்பது இரு சக்கர வாகனம் வைத்து இருப்பது போல் ரொம்ப சாதாரணவிஷயமாகிவிட்டது....நடுத்தர வகுப்பினர் கார் வாங்குவதும் அதனை பயன்படுத்துவதும் இங்கு வயிற்று எரிச்சல் கொடுக்கும் விஷயமாக அதை சொல்லவில்லை.....

நம்மதமிழ்நாடு அதுவும் சென்னை வெயிலின் கொடுமை இந்த முறைஅதிகமாகவே இருந்தது...எப்போதும் பரபரப்பாய் இருக்கும் சென்னை அண்ணாசாலை மதியம் இரண்டு மணிக்கு வெறிச்சோடி இருந்ததே இதற்கு சாட்சி...அதுவும் சிக்னலில் நின்றுவிட்டால் கேட்கவே வேண்டாம்... நரகத்தின் எண்ணெய் சட்டியில் விழுந்து எழுந்தது போல் இருக்கும் ... அதில் டுவீலர்காரர்கள் பாடு படுதிண்டாட்டம்தான்...அதில் ஹெல்மெட்வேறு....தலை அப்படியே அவிந்து விடும் அளவுக்கு புழுக்கம் இருக்கும்....அப்படி அவஸ்தையில் இருக்கும் இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கு பெரிய டார்சர் புதிதாய் கார் வாங்கிசெலபோனில் பேசிய படி கார் ஒட்டும் நம்மவர்கள்...

சென்னையில் பெரும்பாலான வாகன போக்குவரத்தின் பெரிய பிரச்சனை என்னவென்றால்.. அதில் ஆட்டோவும் காரும் பிரதான பங்கு வகிக்கும்... கார் ஓட்ட தெரியாமல் பயத்துடன் புது காரில் 30க்கு மேல் போகாத பல கார்களை சென்னையில் ஹெவியான டிராபிக்கில் நீங்கள் பார்க்கலாம்....ரோடு நன்றாக பிரியாகவே இருக்கும்....

ஒரு சாலையில் வாகனங்கள் தேவையில்லாமல் வேகம் குறைந்து செல்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. எப்படியோ கட் அடித்து சைடில் புகுந்து முன்புறம் போய் பார்த்தால் சாலை ரொம்பவும் பிரியாக இருக்கும்.. பட் அந்த கார் அந்த இடத்தில் போதுமான வேகம் இல்லாமல் போய்கொண்டு இருக்கும் ...

அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால்... புல்லாக ஏசி போட்டு கருப்பு கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு பின்புறம் வரும் வாகனத்தின் ஹாரனை காதில் போட்டுக்கொள்ளாமல்... ரொம்ப ஸ்டைலாக சுவரஸ்யமாக செல்போனில் பேசியபடி காரை ஒட்டிக்கொண்டு இருப்பதை நீங்கள் அந்த காரை கடக்கும் போது பார்க்கலாம்...

இந்த பதிவை படித்த பிறகு சென்னையில் டிராபிக் ஆகும் இடங்களில் நீங்கள் இதை கவனிக்கலாம்...நிச்சயம் கார் டிரைவர் செல்போனில் பேசிபடி செல்வது ஒரு காரணமாகும்.....அவர்களை பொறுத்தவரை காரில் கண்ணாடி ஏற்றி ஏசி போட்டுவிட்டால் அவர்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை.. அவர்கள் அவர்கள் செல்போன் பேச்சு...

புதுகார்வாங்குபவர்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகம் என்பதால்... அவர்களுக்கு கார் இப்போதுதான் புதியது... அது ஏற்படுத்தும் பிரச்சனைகள் அவர்கள் அறிய வாய்ப்பு இல்லை...

இரு சக்கர வாகனத்தில் கார் கதவின் பக்கம் போகும் போது... எப்போது வேண்டுமானாலும் அது திறக்கும் அபாயம் இருக்கும்....ஒரு கார் டிரைவருக்கு பல வருடத்து அனுபவம் இருக்கும்... கார் நிறுத்தியதும் ரிவர்வீயூ மிரர் மற்றும் சென்டர் மிரரில் பின்புறம் ஏதாவது வாகனம் வருகின்றதா? என்று பார்த்துவிட்டு கதவு திறப்பார்கள்....

ஆனால் புதிதாய் கார் வாங்கி கார்ஓட்டுபவர்களுக்கு அது சாத்தியமில்லை..60கிலோமீட்டர் வேகத்தில் வரும் நீங்கள் கதவு திறந்ததும் அதில் இடித்து சில்லரை வாங்க போவது நீங்கள்தான்... உங்கள் கைவிரல் நன்றாக அடிபட வாய்ப்பு இருக்கின்றது... சட்டென சாரி சொல்லி முகத்தில் ஒரு அக்மார்க் புன்னகையை வைத்துக்கொள்வார்கள்...முக்கியமாக அது போல் தெரியாமல் கதவி திறக்க முக்கிய காரணம் அனுபவமின்மை மற்றும் செல்போனில் பேசியடி சுவாரஸ்யத்தில் பின்புறம் வரும் வாகனத்தை கவனிக்காமல் கதவை திறப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்...

அதே போல் இன்னனொரு விஷயத்தை நீங்கள் கவனித்தால் தெரியும்... இதே போல் ஒரு கார் ரோட்டில் வழக்கத்துக்கு மாறான வேகம் இல்லாமல் ரொம்பவும் ஸ்லோவாக ஒரு கார் சென்னை தெருக்களில் போய்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் டூவிலரில் சைடில் போய் யார் என்று ஆர்வத்தில் பார்த்தால்...

ஒன்று பத்மசேஷத்திரியில் குழந்தையை அழைத்து போக வேலைக்கார பெண்ணை துணைக்கு அழைத்துக்கொண்டு கார் எடுத்து வந்து இருக்கும் பயந்த ஆண்டியாக இருப்பார்கள்... அல்லது ரொம்பவும் வயது முதிர்ந்த ஆணாகவும் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம்....

முக்கியமாக பெண்களாக இருப்பார்கள்...அப்படி என்றால் டிராபிக்கு பெண்கள் கார் ஓட்டுவதுதான் காரணம் என்று கேள்வி கேட்காதீர்கள்... ஈசிஆரில் வந்து வெள்ளி இரவு பாருங்கள்... அந்த பெண்கள் ஓட்டும் வேகம் நரேன் கார்த்திகேயன் கூட அப்படி ஒட்டி இருக்க வாய்ப்பு இல்லை...

இந்த பிராது முழுக்க முழுக்க சரிவர டிராபிக் ரூல்சை மதிக்காத கார் ஓட்டிகளுக்கு மட்டும்... நன்றாக கார் ஓட்டுபவர்கள்.. கார் கதவை கவனமாக திறப்பவர்கள் யாரும் பொங்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்...

டிராபிக்கு ஏற்பட கார்ஓட்டிகள் மட்டுமே பொறுப்பு என்று சொல்லவில்லை சில இடங்க்ளில்... சில நேரங்களில் அவர்களும் ஒரு காரணம் என்று சொல்கின்றோம்..


குறிப்பு...

ராம்ஜி யாஹு.. உங்களுக்காக ராவணன் படத்தின் முதல் நாளில் டிக்கெட் புக் செய்து இருக்கின்றேன்...நாளை மதியம் 3 மணி காட்சி சங்கத்தில் பார்த்து விட்டு முடிந்தால் நாளை மாலை பதிவிடுகின்றேன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம்...

17 comments:

  1. என்னதான் கவனமா செல்போன் பேசிகிட்டே கார் ஓட்டினாலும் அதனால நாலு பேருக்கு சேர்த்துதான் ஆப்பு.

    ReplyDelete
  2. பாஸ்...அப்பிடியே மொபைலுல பேசிட்டே ரோடு/தண்டவாளத்த கிராஸ் பண்றவங்கள பத்தியும் எழுதுங்க... வண்டி ஓட்டிட்டு வரும் போது திடீர்ன்னு குறுக்க வந்துட்டு இவங்க பண்ணுற அழிச்சாட்டியம் இருக்கே...அவங்க உயிரை பத்தியும் கவலை இல்ல அடுத்தவன் உயிரை பத்தியும் கவலை இல்ல.... அதுலயும் சின்ன பொண்ணுங்க!?!?!?!?! இப்போ புதுசா ரோட்டுக்கு நடுவுல செடில்லாம் வேற வச்சிருக்காங்களா, அதுக்குள்ளேர்ந்து திடீர்னு ரோட கவனிக்காம செல்போனோட குதிச்சி சர்கஸ்லாம் காட்றாங்க..

    ReplyDelete
  3. இந்த கொடுமை இந்தியாவிலோ அல்லது சென்னையிலோ மட்டும் இல்லை சார்! அமெரிக்காவிலும் இதே கொடுமை தான்...
    40 மைல் வேகத்திலே போகக்கூடிய ரோட்டில் 30 மைல்-க்கும் குறைவாக ஒட்டிகொண்டு போகிறவர்கள் நிறைய உண்டு... அப்படி போகும் காரின் ஓட்டுனர் யாரென்று பார்த்தீர்களானால்...

    1. வயதானவராக இருக்கும் (இங்கெல்லாம் 63 வயது தான் பணியிலிருந்து ஒய்வு பெரும் வயது அதும் கட்டாயமில்லை...)

    2. பெண்களாக இருக்கும்!(இன்னொரு கொடுமை என்னன்னா சிக்னலில் நிற்கும்போது முகத்திற்கு மேக்-அப் போட்டுகொண்டு இருப்பார்கள் சிக்னல் விழுந்தது கூட தெரியாமல்...என்ன கொடுமை சார் இது?)

    3. செல் போனில் பேசிக்கொண்டு ஓட்டுபவராக இருக்கும்(அட இங்கு இதுக்கெல்லாம் போலீஸ் மாமா பின்னாடி வந்து லைட் போட்டு டிக்கெட் கொடுத்துடுவாங்க... அப்படி இருந்தும் இந்த கொடுமைக்கு ஒரு முடிவு இல்லே... டெக்னாலஜி எவ்வளோவோ முன்னேறினாலும் ஒரு ஹெட் போன் அல்லது ப்ளுடூத் உபயோகித்தால் கூட பரவாயில்லை ஒரு கையில் ஸ்டீரிங் மறு கையில் செல் போன் இருக்கும்.)

    4. புதிதாக கார் வாங்கியவராகவோ அல்லது புதிதாக கார் ஓட்டுபவராகவோ இருக்கலாம்...

    இங்கு நடக்கும் சாலை விபத்துக்கள் பெரும்பாலும் (அல்லது நான் பார்த்த/ கேள்விப்பட்ட வரையில்) பெண்களால் தான். நீங்கள் சொன்னது போல அதிவேகமாக காரோட்டும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்!

    மொத்தத்தில் இது ஒரு global பிரச்சனை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது...

    ReplyDelete
  4. பொதுவாக நம்மவர்களுக்கு வண்டி ஓட்டும்போது கவனம் மற்றும் பொறுப்பு கொஞ்சம் குறைவு. அதனால் தான் அரசாங்கம் செல்போன் பேசிட்டு வண்டி ஓட்டாதே என்கிறது. லைசென்சு வாங்குவதை கடுமை ஆக்கினால் கண்டிப்பாக தவறுகள் குறையும்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.....நானும் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன்....

    ReplyDelete
  6. உங்களின் ராவணன் விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  7. 2020ல் இந்தியாதான் சாலியோர விபத்துக்கள் மூலம் உடல் பாதிக்கப்பட்டவர்கள் உலகிலே அதிகமாக வாழும் இடமாக இருக்கும் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.எதிலும் லஞ்சம் என்றூ இருக்கும் நாம் எப்போஒ திருந்துவோம்?மேலை நாட்டில் அரசாங்கம் இப்ப்படி பாதிக்காப்பட்டவர்களை கவனிக்கவெஎண்ட்டீருப்பாதால் செலவு அதிகம் அல்லாவா?ஆகையால் சாலை விதிகளை மேறுபவர்களுக்கு மிகவும் கடினம்மான தண்டனை.விடுமுறை சமயங்கல்இல் தொலைக்காட்ட்ச்சியில் அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பார்கள். குடித்துக்கொண்டு ஓட்டினால் லைசென்ஸ் ரத்து என்று. இப்படி head injury ஆனால் எப்படி இருக்கும் என்று பெங்கள்ளூர் நிம்ஹான்ஸ் சென்று பார்த்தால் தெரியும்

    ReplyDelete
  8. என்னதான் கவனமா செல்போன் பேசிகிட்டே கார் ஓட்டினாலும் அதனால நாலு பேருக்கு சேர்த்துதான் ஆப்பு.

    நன்றி சரண் அந்த வரியை நீக்கிட்டேன்...

    ReplyDelete
  9. இப்போ புதுசா ரோட்டுக்கு நடுவுல செடில்லாம் வேற வச்சிருக்காங்களா, அதுக்குள்ளேர்ந்து திடீர்னு ரோட கவனிக்காம செல்போனோட குதிச்சி சர்கஸ்லாம் காட்றாங்க.//

    உண்மைதான் இப்போ மத்தியகைலாஷ் டூ டைட்டில் பார்க் போற ரோட்டுல இது போல திடிர்னு பொதர்ல இருந்து குதிக்கிறாங்க..

    ReplyDelete
  10. இங்கு நடக்கும் சாலை விபத்துக்கள் பெரும்பாலும் (அல்லது நான் பார்த்த/ கேள்விப்பட்ட வரையில்) பெண்களால் தான்.//

    தெய்வமகன் சார் விரிவான பின்னுட்டத்துக்கு என் நன்றிகள்...

    எங்களுக்குமட்டும்தான் இது போலான கொடுமைன்னு பார்த்தா எல்லா இடத்துலயும் இந்த கொடுமை இருக்கா...

    படிச்சமா போனாமான்னு இல்லாம இது போலான பிரச்சனையை சுட்டிக்ட்டும் போது என்னால் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது....

    காரில் சிக்னலில் மேக்கப் போடுவது எல்லாம் 5மச்..

    ReplyDelete
  11. நல்ல பதிவு.....நானும் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன்....//
    நன்றி ஜெட்லி...

    ராவணன் எந்த தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணி இருக்க??

    ReplyDelete
  12. பொதுவாக நம்மவர்களுக்கு வண்டி ஓட்டும்போது கவனம் மற்றும் பொறுப்பு கொஞ்சம் குறைவு. அதனால் தான் அரசாங்கம் செல்போன் பேசிட்டு வண்டி ஓட்டாதே என்கிறது. லைசென்சு வாங்குவதை கடுமை ஆக்கினால் கண்டிப்பாக தவறுகள் குறையும்.//

    நன்றி குரு..

    ReplyDelete
  13. மேலை நாட்டில் அரசாங்கம் இப்ப்படி பாதிக்காப்பட்டவர்களை கவனிக்கவெஎண்ட்டீருப்பாதால் செலவு அதிகம் அல்லாவா?ஆகையால் சாலை விதிகளை மேறுபவர்களுக்கு மிகவும் கடினம்மான தண்டனை.விடுமுறை சமயங்கல்இல் தொலைக்காட்ட்ச்சியில் அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பார்கள். //

    உண்மைதான் சீதா ஆனால் இங்கே அரசியல் வாதிகள் நான் நங்னறான இருந்தால் போதும் மற்றவன் எக்கேடு கெட்டு போனால் என்ககென்ன என்ற மனோபாவம் இருக்கின்றது... அதுதான் முக்கிய காரணம்...

    ReplyDelete
  14. ஹா ஹா ஹா .....ரொம்ப நாள் கார் வச்சிருக்கிரவன்கிட்ட கேளுங்க பைக்கும் ஆட்டோவும் தான் ப்ரோப்ளேம்ன்னு சொல்லுவாங்க. உண்மை தான் சார். கட் அடிச்சி ஒட்டி அவன் சீன போடுறதுக்கு நம்ம வண்டி தான் கிடைக்கும், கோடு போட்டு போய்டுவான். ஆட்டோ எப்போ எங்கிருந்து வருவான்னு யாருக்குமே தெரியாது. சென்னைல கார் வச்சு மைண்டைன் பண்றது அப்புறம் கோடு போடாம ஓட்டுறது ஒரு கலை சார். என்னைக் கேட்டா பிர்ஸ்ட் ப்ரோப்லம் ஆட்டோ அடுத்து பைக். உங்க கார்ல கோடு விழுந்த ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கும் சார். சென்னை கார்ஸ் எல்லாம் பாருங்க, கோடு போடாம, டொக்கு விழாத வண்டி ரொம்ப கம்மி. எங்க கஷ்டம் எங்களுக்கு, உங்க கஷ்டம் உங்களுக்கு.

    அப்புறம், ஸ்பீட்! சென்னைல இங்க இருக்கிற அந்த மூணு track system இல்லை இருந்தாலும் அத மதிக்க மாட்டோம் அதான் பிரச்சனை. மெதுவா போறவன் கடைசி track ல போன, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, பொளந்து கிட்டு நடுவுல போனா அது தப்பு.

    எனக்கு தெரிஞ்சு நான் சொல்றேன், சென்னை இல்ல உலகம் முழுங்க எங்க வேணும்னாலும் சரி, பெண்கள், வயதானவர்கள் ஓட்டுகிற காரோ, பைக்கோ பின்னாடி போகாதீங்க. அப்புறம் இப்டித்தான் பொளம்பனும். உலகம் முழுக்க அப்டித்தான் இருக்காங்க. என்ன பன்ன?

    ReplyDelete
  15. HI FRIEND :)

    VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

    ReplyDelete
  16. I accept that this is one of the reason for chennai traffic. But this is not the only reason.

    Now let me share my view, the only reason is no of two wheelers in chennai. No indian city is having these many two wheelaer ( If you want to verify, you can verify this). These two wheelers are the issue for the traffic. No one is following the rules. They all want to go their places in a shortest time no care about others.

    We need to have the "SOCIAL RESPONSIBLITY".

    Please write about social responsiblity in ur blog.

    Note: During my visit to singapore, i have seen a vision statement in a school saying that raising social responsible human beings in the society.

    Warm Regards
    Edwin Ratchaganathan

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner