நேற்றைய செய்திகளில் அதிகம் அடிப்பட்ட விஷயம்...விழுப்பரம் அருகே நடந்த ரயில் பாதை குண்டு வெடிப்பு சம்பவம்...எல்லா சேனல்களும் காட்டியதை திரும்ப திரும்ப காட்டி உயிரை எடுத்துக்கொண்டு இருந்தன..
சேதம் அடைந்த இரயில் தண்டவாளத்தையும் இரண்டு மூன்று பயணிகளின், திக்கி தினறிய பேட்டிகளை எல்லா சேனல்களும் சொல்லி வைத்தது போல் மாற்றி மாற்றி ஒளிபரப்பிக்கொண்டு இருந்தன... என்டா ஒரு விஷயத்தை கொஞ்சம் கூட மாத்தியோசிக்க முடியாதா?
ஆனால் 2000 ஆயிரம் பயணிகள் உயிருடன் இருக்கவும்... இந்த விபத்து தவிர்க்கபட்ட விஷயத்துக்கு இன்னும் கண்ணுக்கு தெரியாத நல்ல உள்ளங்கள் உள்ளன.. அவர்களின் பேட்டியோ? அல்லது அவர்களுக்கான அங்கீகாரமோ இங்கு இல்லைஎன்பதே உண்மை... அவர்கள் யார்....
நைட்டு ஒரு மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு போன ரயில் விழுப்புரத்தை கடக்கும் போது அந்த ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த கார்டுக்கு ராஜசேகரனுக்கு தண்டவளத்தில் வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு அந்த அதிர்வு உணரபட்டது...
உடனே எந்த அலட்சியமும் இல்லாமல் அதனை வாக்கி டாக்கி மூலம் பேரணி ரயில் நிலையத்துக்கு அந்த தகவல் தெரிவிக்கபட,உடனே அந்த தகவல் ரயில் கட்டுபாட்டு அறைக்கும், பக்கத்தில் இருக்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தெரிவிக்கபடுகின்றது...
தகவல் கிடைத்த முண்டியம்பாக்கம் ஸ்டேசன் மாஸ்டர் மலைக்கோட்டை ரயிலை நிறுத்தி அதன் டிரைவரிடம் தண்டவாளத்தில் பெரிய அதிர்வு இருந்தததாக தகவல் கிடைத்து இருப்பதால்.... டிரைவரிடம் 10 கீலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க கேட்டுகெகொண்டு தொடர்ந்து செல்ல அனுமதித்தார்...
மலைகோட்டை ரயில் டிரைவர் கோபிநாத் ராவ் பிரச்சனையை புரிந்து கொண்டு, ரயிலை பத்துகிலோமீட்டர் வேகத்தில் இயக்கிகொண்டு...பாதையை உண்ணிப்பாக கவனித்து வந்த போது ஒரு இடத்தில் 3 அடி தண்டவாளம் இல்லாமல் இருப்பதை பார்த்து உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தி, பெரிய உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் தடுத்து நிறுத்தினார்...
இதெல்லாம் தெரிந்தும் செய்திசேனல்கள்... அவர்களை ஒரு பேட்டி கூட எடுத்து ஒளிபரப்பவில்லை... அதை செய்து இருக்கலாம் என்பதுதான் என் எண்ணம்... இது நமது கோபம் அல்ல....அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்..
இந்த அசம்பாவிதம் நடந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் தெரியுமா?
2000ஆயிரம் பேர் பயணம் செய்ததில் குறைந்தது ஒரு150 பேராவது பலியாகி இருப்பார்கள்...
நடுஇரவில் நடந்து இருக்க கூடிய விபரீதம் ஆகையால் தூக்கத்திலேயே பலர் உயிரை விட்டு இருப்பார்கள்...
நிறைய பயணிகளின் உடல் உறுப்புகள் சிதைந்து நடைபினமாக ஆகி இருப்பார்கள்...
திருமணத்துக்கு தயரான வயது பெண்கள் ரயிலில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்தால்..... சிறு வடு முகத்தில் இருந்தாலே திருமணத்துக்கு ஒதுக்கும் சமுகத்தில் கால் போய், கை போய், கட்டை விரல் போனால் அந்த பெண்கள் நடை பினம்தான்...
நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் சிதைக்கபட்டு இருக்கும்..
இந்த விபத்து நடந்து இருந்தால் மீட்பு பணிக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இருப்பார்கள்...
மலைக்கொட்டை ரயில்.... விபத்தில் உருகுலைந்து ஒரு கோடிக்கு மேலான பொருள் சேதத்தை அரசுக்கு ஏற்படுத்தி இருக்கும்...
மேலே உள்ளபடத்தை கிளிக்கி படித்தால் என் கோபத்துக்கான விஷயம் உங்களுக்கு விளங்கி இருக்கும்.... மதிப்புள்ள உயிர்களையும்.. பல கோடி ரூபாய் சொத்துக்களை காப்பற்றிய அந்த நால்வருக்கும் தலா 5 ஆயிரம் பரிசு பணம் தென்னக ரயில்வே வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது....
எந்த தென்னக ரெயில்வே லவடாவவாதுஅல்லது கருத்து சொல்லும் லவடாக்கள் சொல்லலாம்...
தகவல் தெரிவித்த கார்டு ராஜசேகரன்
ரயில் டிரைவர்கள் கோபிநாத்,ராஜ்குமார்
முண்டியம்பாக்கம் ரயல் நிலைய அதிகாரி தூக்காரம் ஆகியோர் தங்கள் கடமைகளை செய்தார்கள்... அதற்கு ஐந்தாயிரமே அதிகம் என்று.....
நண்பர்களே... இந்தியாவில் யாரும் தங்கள் கடமையை சரியாக செய்வதில்லை... அப்படி செய்து இருந்தால் ஒரே ஒரு தேசாய் எனும் தனிமனிதன் 1500 கோடியும் ஒன்றரை கிலோ தங்கத்தையும் லஞ்சமாக பெற்று சிறுக சிறுக சேர்த்து இருக்க முடியாது.... அதற்கு எத்தனை பேர் கடமையை மீறி இருக்க வேண்டும்?????
இன்றைக்கு தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்தியை படித்து பாருங்கள்... லஞ்சம் வாங்கும் போது கைது செய்யபட்ட அரசு ஊழியர்கள் பட்டியல் கடந்த மாதத்தில் எத்தனை பேர் என்று பட்டியல் இட்டால் மாதாந்திர மளிகை லிஸ்ட் விட பெரிய பட்டியல் கிடைக்கும்...
ஒரு போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு போனால் பத்தில் இருந்து 15 லட்சம் வரை ஜஸ்ட் லைக்தட்டாக கிடக்கின்றது...
ஒரு தலுக்கா ஆபிசில் ரெய்டு போனால் கணக்கில் வராத பணம்20 லட்சத்துக்கு மேல் பிடிபடுகின்றது... அப்படி எல்லோரும் கடமையை செய்து இருந்தால் நம் நாட்டில் லஞ்சம் தலைவிரித்து ஆடி இருக்காது..
இதேல்லாம் விட்டு தள்ளுங்கள் முதியோர் உதவிபணம் வழங்க அதில் கூட லஞ்சம் வாங்கிதான் கொடுக்கபடுகின்றது...
இப்படி கடமையை செய்பவர்கள் அரிதான என் தாய்திருநாட்டில்... அதிலும் அத்தி பூத்தது போல்... எந்த அலட்சியமும் இன்றி... அவர்கள் நால்வரும் கடமை ஆற்றி பெரும் விபத்து தவிர்க்க பட்டு இருக்கின்றது....
அந்த சேலம் ரயிலில் பயணித்த கார்டு ராஜசேகரன்...சற்று கண் அயர்ந்து இருந்தாலோ? அல்லது தனது பர்சனல் விஷயத்தை செல்போனில் பேசும் போது பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த தண்டவாள அதிர்வை புறம் தள்ளி இருந்தாலோ.. இன்று பல பேர் வீட்டில் பாலு ஊற்றி இருப்பார்கள்.,..
அதே போல் அந்த மலைகோட்டை டிரைவர்களிடம் தகவல் தெரிவித்த ஸ்டேசன் மாஸ்டருக்கு சீன் ஆப் கிரைம் என்ன வென்றே தெரியாது.. இருந்தாலும் 10 கீலோமீட்டர் வேகத்தில் இயக்க சொன்ன புத்திசாலிதனம்..
எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று ரயிலை அலட்சியமாக அந்த இரண்டு டிரைவர்களும் ஓட்டி இருந்தாலும் எல்லா குட்டி சுவராக போய் இருக்கும்....
எந்த விஷயத்தை அலட்சியபடுத்தாமல் அவர்கள் கடமையை அதுவும் இந்த காலத்தில் எந்த அலட்சியமும் இல்லாமல் சரியாக செய்த காரணத்தால் அவர்களுக்கு வெறும் 5 ஆயிரம் பரிசு கொடுக்க இருக்கின்றது.. தென்னக ரயில்வே....
கடமையை நொடிக்கு நொடி மீறும் நாட்டில் கடமையை ஒழுங்கா செய்த அந்த நால்வருக்கும் வெறும் இருபதாயிரத்தில் பரிசு கொடுக்க போகின்றது... அந்த 5 ஆயிரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் குடும்பம் நாக்கை கூட வழிக்க முடியாது.. .. அதை கொடுப்பதற்க்கு பதில் இருக்கவே இருக்கு ஒரு சால்வையும்... சர்டிபிகேட்டும்.....
சதாரண சுற்றுலா பேருந்து டிரைவருக்கே சுற்றுலா முடிந்து வீடு வந்து சேரும் நன்றாக விபத்து இல்லாமல் ஒட்டியதற்க்கு ஆளுக்கு 50 போட்டு 50 பேர் மொத்தம் 2500 கொடுப்போம்... ஆனால் இங்கு இரண்டாயிரம் பேர் ...
நல்ல விஷயங்களை தொடர்ந்து உற்சாகபடுத்தினால் இன்னும் நல்லது நடக்கும் என்பது என் சித்தாந்தம்....
மீண்டும் கடமையை ஓழுங்கா செய்தாலும், நேர்மையாக செய்தாலும் அது இந்தியாவை பொறுத்தமட்டில் அது தகுதி இழப்பாக மட்டுமே கருதபடும் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்க பட்டு உள்ளது....அவர்களுக்கு ஏதாவது செய்யனும் பாஸ்..அரசு செவிசாய்க்குமா? அல்லது ரயிலில் பயணம் செய்த இருக்கபட்டவர்கள் அந்த நால்வருக்கும் ஏதாவது செய்வார்களா?
என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா...
புகைபடங்கள் தந்தி பேப்பரில் இருந்து நான் எடுத்தது..
நன்றி தினத்தந்தி
குறிப்பு....
இந்த விஷம செயலை செய்தது யார் என்று இன்னும் தெரியவில்லை...அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... உங்கள் எதிர்பை தெரிவிக்க அரசுடன் மோதுங்கள்...ஆனால் அப்பாவி மக்களின் உயிருடன் ஒரு போதும் விளையாடாதீர்கள்..
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...
நியாயமான கோபம் ஜாக்கி. நிச்சயமாக ரயில் டிரைவர் பாராட்டப்பட வேண்டியவர். (அவரது பேட்டியெல்லாம் மீடியாக்களுக்கு சுவாரஸ்யம் தராது. TRP க்கும் உதவாது!)
ReplyDeleteஸ்ரீ....
சமூக அக்கறையுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteCriticizing media is not enough: You be the media என்று ஒரு நண்பர் எனக்கு சில தினம் முன்பு அறிவுரை கூறினார்.
ReplyDeleteஅதை எப்படி செய்வது என்று உணர்த்தி இருக்கிறீர்கள்.
பாராட்டுகள். நன்றி.
பாராட்டப்பட வேண்டியவர்களை விட்டுவிட்டு மீடியாக்கள் வேறு எதுக்கோ அலைபாய்கின்றன. அரசுத்துறைகள் அலட்சியம் காட்டினாலும், NGO-க்கள், செல்வந்தர்கள் தாராளாமாக பரிசளிக்கலாம், விழ எதுவும் நடத்தி கவுரவிக்கலாம், நம்நாட்டில்தான் எதுக்கெடுத்தாலும் அரசை நம்பியே காலத்தை ஓட்டுகிறோம், வளர்ந்த நாடுகளில் இருப்பது போல NGO-க்கள், செல்வந்தர்கள் சமூகப் பொறுப்போடு செயல்படவேண்டும்!
ReplyDeleteபதிவிற்கு நன்றி பாஸ்!
good article.. i appreciate.. but i dont have login to vote.. therefore leaving this comment
ReplyDeleteநல்ல அக்கறையுடன் எழுதி உள்ளீர்கள். ஊடகங்கள் கெட்டு நாளாச்சு. இந்த நாலு பேரும் உயிர் காத்த தெய்வங்கள் என்று விபத்தில் தப்பி யாரவது சொன்னார்களா என்று தெரியாது. அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஅக்கறையுடன் எழுதி உள்ளீர்கள்.நன்றி
ReplyDeleteஅவரது பேட்டியெல்லாம் மீடியாக்களுக்கு சுவாரஸ்யம் தராது. TRP க்கும் உதவாது!
ReplyDeleteAGREEEEEED
In the morning news (kalaignar Tv & Sun TV, Podigai) they started appreciating that guard name, mundiyambakkam station staff, even the rockfort train driver.
ReplyDeleteBut this violence activity is to be deeply condemned.
அண்ணே உங்க கோபம் நியாயமானதே
ReplyDeleteநன்றி தலைவரே
ReplyDeleteஇது குறித்து நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்
நேற்று (குறைந்தது) 200 குடும்பங்கள் வழக்கம் போல் உறங்கினார்கள் என்றால் அதற்கு இந்த நால்வரும் விழிப்புடன் இருந்தது தான் காரணம்
அவர்களுக்கு தலைவணங்குகுறேன்
--
அது தவிர
அந்த காலை நேரத்திலும்
முன்னறிவிப்பின்றி மலைக்கோட்டை உட்பட வழியில் நிறுத்தப்பட்ட பிற தொடர்வண்டி பிரயாணிகளுக்கும் காலை உணவு
ஏற்பாடு செய்த விழுப்புரம் நிலைய ஊழியர்களும்
பாராட்டுக்குரியவர்களே
5 மணி நேரத்திற்குள் மீண்டும் போக்குவரத்தை ஆரம்பிக்க உதவிய அனைவருக்கும் (பொது மேலாளரில் இருந்து கடைநிலை கலாசி, கேங்மேன் வரை) பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டியது நமது கடமை
உங்கள் கருத்துக்களுடன் உடன் படாதவன் மனிதனே அல்ல சேகர், 5000 ரூபாய் பாரட்டு பற்றி சொல்லி இருந்தீர்கள், வின் தொலைக்கட்சியில் “செய்தியும் கோனமும்” என்ற ஒரு செய்திகள் அலசல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, அதில் சொல்லப்பட்ட ஒர் கருத்து:- ”5000 ரூபாய் பாராட்டு என்பது அறிவித்த அந்த அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக் இருக்கலாம், மேற்கொண்டு தமிழக அரசோ அல்லது தலமை அமைச்சரோ, குடியரசு தலைவியோ ஏதாவது செய்ய வேண்டும்”. சரி தானே? ஆனால் செய்வார்களா?
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுடன் உடன் படாதவன் மனிதனே அல்ல சேகர், 5000 ரூபாய் பாரட்டு பற்றி சொல்லி இருந்தீர்கள், வின் தொலைக்கட்சியில் “செய்தியும் கோனமும்” என்ற ஒரு செய்திகள் அலசல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, அதில் சொல்லப்பட்ட ஒர் கருத்து:- ”5000 ரூபாய் பாராட்டு என்பது அறிவித்த அந்த அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக் இருக்கலாம், மேற்கொண்டு தமிழக அரசோ அல்லது தலமை அமைச்சரோ, குடியரசு தலைவியோ ஏதாவது செய்ய வேண்டும்”. சரி தானே? ஆனால் செய்வார்களா?
ReplyDeleteAnne,
ReplyDeletearasu enthiram aache manasu ,mana satchilam ethirpaakalama? News &paper pathu ithe than ninaichen.
Delhi metro rail construction appo accident aachu ,traffic jam aagi romba neram ninuttu irunthom ,north vida southla romba kavanama iruppanga ithu pola accidentlam nadakka vida mattanganu anga velai paarkiravar sonnar, athu 100% unmainu kattuthu.
நல்ல பகிர்வு, உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteஒருவேளை விமான விபத்தை தடுத்தால் மட்டும் பெரிசா தருவாங்களா!
Nice post Jackie Sekar.
ReplyDeleteஅன்பின் சேகர்
ReplyDeleteஆதங்கம் - கோபம் - இடுகை நன்று - இரயில்வேத் துறையினர் தக்க சன்மானம் அளித்திருக்கலாம். இருப்பினும் கடமையைச் செய்வதற்கு அரசுத் துறைகளில் சன்மானம் அளிப்பதற்கு விதி முறைகள் அனுமதிக்காது. என்ன செய்வது......
நல்வாழ்த்துகள் சேகர்
நட்புடன் சீனா
கோபம் கொபளிக்கும் நச் பதிவு.
ReplyDeleteஅந்த நல்லவங்க நாலு பெரும் ஊக்குவிக்கப் படவேண்டியவர்கள்.
சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
ReplyDeletehttp://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!
விபத்து நடந்த பிறகு, அதிகாரிகளைத் திட்டும் நம்மவர்கள், விபத்தை தவிர்க்க உதவி செய்த அதிகாரிகளை பாராட்ட வேண்டும். இதில் 3 பேரும் தன் கடமையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள். ஒருவர் தவறியிருந்தாலும், பெரிய விபத்து நேர்ந்திருக்கும்.
ReplyDeleteபரிசுத்தொகை, 5000. சே... வருந்ததக்கது.
டி.விக்கு பேட்டிக்கொடுப்பதில், அந்த அதிகாரிகளுக்கு, சில வேலை நிமித்தமான, தடைகள் இருக்கலாம். அது அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கே உள்ள கட்டுப்பாடு.
சமூக அக்கறையுள்ள நல்ல இடுகை.
ReplyDeleteநண்பனே
ReplyDeleteமறக்கப்பட்ட மனிதனின் கடமை. சமூகம்பற்றிய அக்றையின்மை என சுயநலம் சார்ந்த வாழ்க்கை முறைக்குள் சிக்கிப்போன சமூகத்தில் குறைந்தபட்சம் தமது கடமையை செய்பவர்களே இன்று தியாகிகள். உங்களின் பார்வை மறைக்கப்பட்ட மறுபக்கத்தின் மீதான ஒளிவீச்சாக இருந்தாலும்' மனிதசமூகத்தையே அழிக்கும் நோக்கில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட மனிதவிரோத தாக்குதலை கண்டிக்கும் குறிப்புக்களை உள்கள் கட்டுரையில் காணமுடியாதது கண்டிக்கப்பட வேண்டியது.
இலங்கையில் அரசினாலும். விடுதலையின் பெயரால் தமிழ் விடுதலை அமைப்புக்களாலும் ஈழதமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட கோர கொலைகளும் சித்திரை வதைகளும் தமிழ் இனத்தையே சிதைத்து சொந்த நாட்டில் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். ஈழதமிழ்மக்களின் அவலங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பாடமாக அமையவேண்டும். பொதுமக்கள் மீது நடத்தப்படும் சகலவிதமான தக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டியதுடன் தடுக்கப்பட வேண்டும்.
மக்களை இன மொழி ரீதியாக வெறியேற்றி உணர்சிகளை தூண்டும் வீர பேச்சுக்களால் இளம் சமுதாயத்தின் உணர்வுகளை தவறான அரசியலை நேக்கிதள்ளும் அமைப்புக்கள் இனம்காணப்பட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும் .இதற்கான செயல்பாடுகளில் சமூகஅக்கறை கொண்ட அனைவரும் ஈடுபட வேண்டும்
"சதாரண சுற்றுலா பேருந்து டிரைவருக்கே சுற்றுலா முடிந்து வீடு வந்து சேரும் நன்றாக விபத்து இல்லாமல் ஒட்டியதற்க்கு ஆளுக்கு 50 போட்டு 50 பேர் மொத்தம் 2500 கொடுப்போம்..."
ReplyDeleteநாட்டில் லஞ்சம் பெருக காரணமே இது போன்ற அபத்தங்களால் தான். கடமையை ஒழுங்காக செய்யும் ஒருவரை ஊக்க படுதுகிறோம் பேர்வழி என்று இது போன்று செய்வதால் தான் ஒவ்வொரு முறையும் கடமையை செய்வதற்கு இது போல ஊக்க பணம் கிடைக்காதா என்று மனம் ஏங்க தொடங்குகிறது நாளடைவில் தானாகவே வலிய போய்... என்ன சார் ஒன்னும் கெடையாதா? ...........எதாவது பாத்து போட்டு குடுங்க? ....... கூலிக்கு மேல இவல்லோ குடுத்தா தான் ஆச்சு என்று சீரழிய காரணம் . எல்ல துறையிலும் இது போல எவனோ ஒருவன் கொடுத்து பழக்க படுத்தி ஆரம்பித்து வைத்தது தான் இன்று நாடு முழுக்க புரைஒடி போய் நாரி கிடக்கிறது. ஒழுங்கா வேலை செய்தவனை கெடுத்தது யார் ?
குற்ற்றவாளி யார்? கொடுத்தவனா? , வாங்கியவனா?
"கருத்து சொல்லும் லவடாக்கள் சொல்லலாம்... "
தெளிவாக சிந்திப்பவன் லவடா என்றால்,நான் மாபெரும் லாவடாவாக இருந்து விட்டு போகிறேன்
"என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா.."
இது உங்க பதிவின் தலைப்பு , இது எல்லாரயும் விட உங்களுக்கு தான் மிக பொருத்தமாக
இருக்கும்
"சதாரண சுற்றுலா பேருந்து டிரைவருக்கே சுற்றுலா முடிந்து வீடு வந்து சேரும் நன்றாக விபத்து இல்லாமல் ஒட்டியதற்க்கு ஆளுக்கு 50 போட்டு 50 பேர் மொத்தம் 2500 கொடுப்போம்..."
ReplyDeleteநாட்டில் லஞ்சம் பெருக காரணமே இது போன்ற அபத்தங்களால் தான். கடமையை ஒழுங்காக செய்யும் ஒருவரை ஊக்க படுதுகிறோம் பேர்வழி என்று இது போன்று செய்வதால் தான் ஒவ்வொரு முறையும் கடமையை செய்வதற்கு இது போல ஊக்க பணம் கிடைக்காதா என்று மனம் ஏங்க தொடங்குகிறது நாளடைவில் தானாகவே வலிய போய்... என்ன சார் ஒன்னும் கெடையாதா? ...........எதாவது பாத்து போட்டு குடுங்க? ....... கூலிக்கு மேல இவல்லோ குடுத்தா தான் ஆச்சு என்று சீரழிய காரணம் . எல்ல துறையிலும் இது போல எவனோ ஒருவன் கொடுத்து பழக்க படுத்தி ஆரம்பித்து வைத்தது தான் இன்று நாடு முழுக்க புரைஒடி போய் நாரி கிடக்கிறது. ஒழுங்கா வேலை செய்தவனை கெடுத்தது யார் ?
குற்ற்றவாளி யார்? கொடுத்தவனா? , வாங்கியவனா?
"கருத்து சொல்லும் லவடாக்கள் சொல்லலாம்... "
தெளிவாக சிந்திப்பவன் லவடா என்றால்,நான் மாபெரும் லாவடாவாக இருந்து விட்டு போகிறேன்
"என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா.."
இது உங்க பதிவின் தலைப்பு , இது எல்லாரயும் விட உங்களுக்கு தான் மிக பொருத்தமாக
இருக்கும்
Welldone my friend, pls write more, keep it up, Salute this post! nice! :)
ReplyDeleteThough I am reading you blog for months, voted first time for this post.
ReplyDeleteஅவர்கள் முகவரி கிடைத்தால் அவர்களுக்கு நாம் அனைவரும் பாராட்டு கடிதங்கள் எழுதலாம்.முகவரி கிடைக்குமா?.
ReplyDeleteமுதலில் மைனஸ் ஓட்டு குத்திய நண்பருக்கு நன்றி..
ReplyDeleteநன்றி ஸ்ரீ.. நீங்கள் சொல்வது உண்மைதான்...
நன்றி மதுரை சரவணன்..
நன்றி வக்கில் சார்..
நன்றி பன்னிகுட்டி ராமசாமி...இப்படி எல்லாம் ஊக்கபடுத்த கூடாதுன்னு சனில் குமார்னு ஒரு நண்பர் கீழ விலாவரியாசொல்லி இருக்கார் பாருங்க..
...
நன்றி கார்த்திக்...
ReplyDeleteநன்றிகார்த்திக் சிதம்பரம்
நன்றி டிவி ராதாகிருஷ்ணன் சார்..
நன்றி ஷர்புதின் ஹைதரபாத் சௌக்கியமா?
நன்றி ராம்ஜி யாஹு
நன்றி அத்திரி...
அந்த காலை நேரத்திலும்
ReplyDeleteமுன்னறிவிப்பின்றி மலைக்கோட்டை உட்பட வழியில் நிறுத்தப்பட்ட பிற தொடர்வண்டி பிரயாணிகளுக்கும் காலை உணவு
ஏற்பாடு செய்த விழுப்புரம் நிலைய ஊழியர்களும்
பாராட்டுக்குரியவர்களே
5 மணி நேரத்திற்குள் மீண்டும் போக்குவரத்தை ஆரம்பிக்க உதவிய அனைவருக்கும் (பொது மேலாளரில் இருந்து கடைநிலை கலாசி, கேங்மேன் வரை) பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டியது நமது கடமை//
நன்றி புருனோ... அந்த நேரத்தில் அத்தனை பேருக்கும் உணவு ஏற்பாடு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல... அவர்களுக்கு எனது நன்றிகள்..
செய்தி சொன்ன டாக்டருக்கும் என் நன்றிகள்..
தமிழக அரசோ அல்லது தலமை அமைச்சரோ, குடியரசு தலைவியோ ஏதாவது செய்ய வேண்டும்”. சரி தானே? ஆனால் செய்வார்களா?//
ReplyDeleteஅதுதான் எனது கேள்வியும் கிருபா?
நன்றி தாமஸ் ரூபன் .. நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்...
ReplyDeleteநன்றி வவ்வவால் நீங்கள் சொல்வதும் உண்மைதான்..
நன்றி செந்தில் வேலன்..
நன்றி சீனா சார்
நன்றி கலாநேசன்..
நன்றி சாப்ட்வேர் என்ஜீனியர்... கண்டிப்பா வருகின்றேன்..
நன்றி பின்னொக்கி
நன்றி நல்ல தந்தி..
நன்றி சுகீ கடைசி குறிப்பை நீங்கள் வாசிக்கவில்லை என்பது என்னால் உணர முடிகின்றது...
ReplyDeleteஎன்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா.."
ReplyDeleteஇது உங்க பதிவின் தலைப்பு , இது எல்லாரயும் விட உங்களுக்கு தான் மிக பொருத்தமாக
இருக்கும்//
நன்றி சுனில் குமார் உங்கள் கருத்துக்கு...
நன்றி மணிபாக்கம்
ReplyDeleteநன்றி ஸ்ரீராகவ்
நன்றி லக்ஷன் குமார் தெரிந்தால் சொலுங்கள்.. வாழ்த்தலாம்.,...
அண்ணே மிக நல்ல இடுகை,பாராட்டுக்களும் ,தண்டவாளத்தில் குண்டு வைத்த டாபர்கள் நேரே போய் அரசுடன் மோத வேண்டியது தானே? புறம்போக்குகள். எத்தனை கர்ப்பிணிப் பெண்கள்,புது மணமக்கள் ,வேலைக்கு இண்டர்வ்யூ செல்பவர்,கல்லூரிக்கு சேர போபவர்கள் , வயதானோர்,போயிருப்பர்?கொஞ்சமாவது நினைத்து பார்த்தார்களா?ஒரு வகையில் இயற்கை மூலம் சீரழிவு,மறுபுறம் இது போல விஷமிகள் மூலம் பேரழிவு. காப்பாற்றிய புண்யவான்களுக்கு பெரிய கும்பிடு .
ReplyDeleteஒருவேளை உங்கள் ஆதங்கப்படி ஆளுக்கு தலா ஒரு லட்சமோ அல்லது இருபத்தைந்து லட்சமோ அரசால் வெகுமதி வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதன்பிறகு, இதேபோல "மயிரிழையில் தடுக்கப்பட்ட அசம்பாவிதங்கள்" பல ஆங்காங்கே அவ்வப்போது நடக்க ஆரம்பித்துவிடுமே...? சில ஆயிரம் செலவழித்து குண்டுவைத்து 'சீன்காட்டினால்' பல லட்சங்களை அள்ளலாம் என்றால்..!?! ஓட்டுப்போடவே கூலி கேட்பவர்கலாயிற்றே சார் நாம்? விட்டுவிடுவோமா இந்த ச்சான்சை?
ReplyDeleteஇதுபோல, கடமை உணர்ச்சியுடன் வேலை பார்ப்பதற்கே எல்லாரும் எல்லாத்துறையிலும் சம்பளம் பெறுகிறார்கள். பெரும்பாலும் தங்கள் கடமையிலிருந்து தவறும் ஊழியரிடையே... மனசாட்சிக்கோ இறைவனுக்கோ பயந்து தங்கள் கடமையில் செவ்வனே பணியாற்றிய அந்த மனித குல மாணிக்கங்களுக்கு என் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு அவர்கள் முன்னுதாரணங்கள்.
வெறும் இருபதாயிரம் கொடுத்ததெல்லாம் ஆயிரம் பயணிகளின் உயிரை கொச்சைபடுத்துவது கொஞ்சமும் அழகாக இல்லை. அதேபோல இந்த ஊழியர்களின் கடமையுனர்சியின் மதிப்பும் வெறும் ஐயாயிரம் அல்ல. நாளை வேறு ஒரு பயங்கரவாதி, "நான் ஐம்பதாயிரம் தருகிறேன், விஷயத்தை வெளியே சொல்லாதே" என்றால் என்ன செய்வது? பணத்தாசையால் கடமையாற்றிட முன்வர வேண்டாம் யாரும். மனிதநேயத்துடன் கடமையாற்ற அனைவரும் முன்வருக.
மேலும், இதுபோல மக்கள்விரோத பயங்கரவாதத்தில் ஈடுபடும் தீயவர்களை விரைந்துபிடித்து, விரைந்து விசாரித்து, விரைந்து நீதிவழங்கி, விரைந்து அவர்களை மக்கள் முன் தூக்கிலிட வேண்டும். இதுதான் இப்பிரச்சினைக்கு உரிய சரியான தீர்ப்பு.
முகவரி
ReplyDeleteஅவர்களின் பெயர் / அலுவலக பதவி ஆகியவற்றை குறிப்பிட்டு தென்னக தொடர்வண்டி நிலைய பொது மேலாளருக்கு (அலுவலகம் சென்னை செண்ட்ரல் நிலையம் அருகில் உள்ளது) அனுப்பினால் மேலனுப்புவார்கள்
இது பொதுவாக அனைத்து அலுவலகங்களிலும் இருக்கும் நடைமுறைதான்
--
அதே போல் இன்று இந்த நபர்களுக்கு குவியும் பாராட்டுக்களால் பிற ஊழியர்களும் உந்தப்படுவார்கள்
--
ஒருவருக்கு ஒரு தபாலட்டை (போஸ்ட் கார்டு) என்றால் 4 பேருக்கு நான்கு அட்டை தான்
--
அனைவரும் அனுப்பலாமே
//இந்த மாதிரி சின்ன சன்மானம் கொடுக்கும் ரயில்வே பொது மேலாளர் விவேக் சகாய் போன்றவர்களை திருத்த முடியாது என்பது எனது கருத்து . மற்றும் விவேக் சகாய் அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் .//
ReplyDeleteஒரு வேளை சனிக்கிழமை அன்று மேலதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் வழங்க்பபடக்கூடிய அதிக பட்ச தொகை அது தானோ என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்
--
சனிக்கிழமை அன்றே சன்மானம் வழங்கியதற்கு பாராட்டுக்கள்
--
5000 ரூபாய் குறித்து விமர்சிக்கும் நாம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து / பாராட்டி ஒரு தபாலட்டை எழுதி போட வேண்டும் என்ற கருத்தை முன்மொழிகிறேன்
இன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ReplyDeleteதங்களின் ஆதங்கம் அர்த்தமுள்ளது.
ReplyDeleteரயில்வேதுறை சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பணி உயர்விர்க்கு பரிந்துரைக்க வேண்டும்.
///இந்த விஷம செயலை செய்தது யார் என்று இன்னும் தெரியவில்லை...அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... உங்கள் எதிர்பை தெரிவிக்க அரசுடன் மோதுங்கள்...ஆனால் அப்பாவி மக்களின் உயிருடன் ஒரு போதும் விளையாடாதீர்கள்..///
ReplyDeleteஅடபோப்பா, இதை சொன்னால் நீ காங்கிரஸ், தமிழின துரோகி என்றெல்லாம் பட்டம் கொடுத்து விடுவார்கள்...
ஜாக்கி உங்கள் கோவம் நியாயமானதே!
ReplyDelete@ மரு.ப்ரூனோ கூறியதுபோல உணவு வழங்கியது மற்றும் விரைந்து பாதை செப்பனிட்டது ஆகியவற்றிற்கு நிச்சயம் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுவோம்.
UFO அவர்கள் கேட்டதும் Valid Point.
உங்கள் கோபம் நியாயமானது.
ReplyDeleteமனோ
அந்த நால்வர் மற்றும் பராமரிப்பு பணகளை அந்நேரத்திலும் சிறப்புடன் செய்திட்ட ஏனைய ஊழியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.. அவர்களுக்கு எனது வணக்கங்கள்...
ReplyDelete//முதலில் மைனஸ் ஓட்டு குத்திய நண்பருக்கு நன்றி..//
ReplyDeleteஅடப்பாவிகளா.. இதுக்கும் மைனஸ் வோட்டா !! என்ன கொடும சார் இது !!
உண்மைய சொல்லப்போனா, இந்த அஞ்சாயிரம் பரிசு, அவங்கள அவமானப்படுத்துறமாதிரிதான் . .
நம்ம அரசாங்கம், எண்ணிக்கி மக்களுக்கு நல்லது பண்ணிருக்கு.,.. மக்கள கூண்டோட கொல்றதுதானே நம்ம அரசுக்குப் புடிச்ச விஷயம்...
தொடர்ந்து எழுதுங்க .. அப்பவாவது திருந்துறானுங்களா பார்ப்போம் !
அட, நம்ம ஊருல இதெல்லாம் தினசரி நடக்குறதுதானே, நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க?. அப்புறம், அந்த தேசாய் கிட்ட இருந்தது 1.5 TON தங்கம் என்று நினைக்கிறேன், இப்படி அவருடைய சாதனையை குறைத்து மதிப்பிட்டு அவரை அவமானப் படுத்தலாமா?
ReplyDeleteஇந்த அரசைப் பற்றி சொல்லிக் கொண்டே செல்லலாம்... கஷ்டப்பட்டு உழைக்கும் தொழில்கள் பல இருக்க, கேளிக்கையூட்டும் சினிமாத்துறைக்கு அரசு செலவில் பெரிய பெரிய விருதுகள்.. அதில் கொட்டப் படும் லட்சங்கள்... அனால், இந்த பெரிய விஷயத்தைக் செய்தவர்களுக்கு ஐந்தாயிரம்... என்னைய்யா அநியாயம் இது..? அனால ஒன்று மட்டும் உறுதி... நாட்டில் யாருக்கும் நல்லெண்ணமே இல்லை..
ReplyDeleteஎக்கேடோ கெட்டு போகட்டும்..
அரசு மதிக்காவிட்டால் என்ன..? கோடானு கோடி மக்களின் சார்பாகவும், வலையில் வாழும் நல்லுள்ளங்களின் சார்பாகவும் நாங்கள் உங்களை மனமார வாழ்த்துகிறோம்.. உங்கள் குழந்தை குட்டிகள், பேரன் பேத்திகள் என்று அனைவருக்கும் இந்த வரம் போய்ச சேரும்.. நன்றி...
ReplyDeleteநியாயமான வருத்தம்..ராயல் சல்யூட் அந்த நால்வருக்கும்..அவர்கள் வேலையினை அவர்கள் செவ்வனே செய்து உள்ளார்கள்...
ReplyDelete"ஒருவேளை உங்கள் ஆதங்கப்படி ஆளுக்கு தலா ஒரு லட்சமோ அல்லது இருபத்தைந்து லட்சமோ அரசால் வெகுமதி வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதன்பிறகு, இதேபோல "மயிரிழையில் தடுக்கப்பட்ட அசம்பாவிதங்கள்" பல ஆங்காங்கே அவ்வப்போது நடக்க ஆரம்பித்துவிடுமே...? சில ஆயிரம் செலவழித்து குண்டுவைத்து 'சீன்காட்டினால்' பல லட்சங்களை அள்ளலாம் என்றால்..!?! ஓட்டுப்போடவே கூலி கேட்பவர்கலாயிற்றே சார் நாம்? விட்டுவிடுவோமா இந்த ச்சான்சை?
ReplyDeleteஇதுபோல, கடமை உணர்ச்சியுடன் வேலை பார்ப்பதற்கே எல்லாரும் எல்லாத்துறையிலும் சம்பளம் பெறுகிறார்கள். பெரும்பாலும் தங்கள் கடமையிலிருந்து தவறும் ஊழியரிடையே... மனசாட்சிக்கோ இறைவனுக்கோ பயந்து தங்கள் கடமையில் செவ்வனே பணியாற்றிய அந்த மனித குல மாணிக்கங்களுக்கு என் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு அவர்கள் முன்னுதாரணங்கள். "
"நாட்டில் லஞ்சம் பெருக காரணமே இது போன்ற அபத்தங்களால் தான். கடமையை ஒழுங்காக செய்யும் ஒருவரை ஊக்க படுதுகிறோம் பேர்வழி என்று இது போன்று செய்வதால் தான் ஒவ்வொரு முறையும் கடமையை செய்வதற்கு இது போல ஊக்க பணம் கிடைக்காதா என்று மனம் ஏங்க தொடங்குகிறது நாளடைவில் தானாகவே வலிய போய்... என்ன சார் ஒன்னும் கெடையாதா? ...........எதாவது பாத்து போட்டு குடுங்க? ....... கூலிக்கு மேல இவல்லோ குடுத்தா தான் ஆச்சு என்று சீரழிய காரணம் . எல்ல துறையிலும் இது போல எவனோ ஒருவன் கொடுத்து பழக்க படுத்தி ஆரம்பித்து வைத்தது தான் இன்று நாடு முழுக்க புரைஒடி போய் நாரி கிடக்கிறது. ஒழுங்கா வேலை செய்தவனை கெடுத்தது யார் ?
குற்ற்றவாளி யார்? கொடுத்தவனா? , வாங்கியவனா? "
திரு sunilkumar & திரு ufo அவர்களின் கருத்துகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன் . இங்கு கருது தெரிவித்துள்ள அனைவரும் ஜாக்கிசேகர் உட்பட ,உணர்ச்சிவசப்பட்டு தான் கருத்து தெரிவிதுள்ள்ர்களே தவிர உருப்படுவதற்கு அல்ல. இப்பொழுதே சம்பந்த பட்ட ரயில்வே ஊழியர்களின் மன நிலை எவ்வாறு மாறியுள்ளது என்பதை கீழ்கண்ட இணைப்பில் உள்ள செய்தியை படித்தாலே விளங்கும் http://thatstamil.oneindia.in/news/2010/06/15/villupuram-track-blast-railway-staffs.html
I like your view in this issue and the way you expressed it..
ReplyDeleteGod alone can save India.
//சதாரண சுற்றுலா பேருந்து டிரைவருக்கே சுற்றுலா முடிந்து வீடு வந்து சேரும் நன்றாக விபத்து இல்லாமல் ஒட்டியதற்க்கு ஆளுக்கு 50 போட்டு 50 பேர் மொத்தம் 2500 கொடுப்போம்... //
ReplyDeleteஒருவர் கடமையை சரியாக செய்தால் அதற்க்கு வாடிக்கையாளர் கூடுதல் பணம் தர வேண்டும் என்பது ஒரு வகையான லஞ்சம். இதில் உடன்பாடு இல்லை.
ஆனாலும் கடமையை சரியாக செய்த அவர்கள் நமது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். இது அவர்களது பணிக்கு நிச்சயம் உதவ வேண்டும். (this points should help them in their apprisals )
வால்பையன்
ReplyDeleteபணம் அளிக்க வேண்டாம்
பாராட்டவாது செய்யலாமே
நீங்கள் ஒரு தபாலட்டையாது எழுதி போட்டீர்களா
பண அன்பளிப்பை விட பாராட்டு recognition அவசியம்.
ReplyDeleteExcellent Record Mr Jackie.
ReplyDeleteHeartly apprieciating your thoughts..
Continue your service.
I have really impressed and become a fan of you.
Regards
Edwin R