ச்சீ, தூ, பேமானிங்களா....

நம் மக்களுக்கு இருப்பது போல மறதி வியாதி மற்ற நாட்டு மக்களுக்கு உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை... எவன் வீட்ல எழவு விழுந்தா எனக்கென்ன என் வீட்ல டிவி சிரியல் ஒழுங்காதெரிஞ்சா போறும் என்று நினைப்பதுதான்... இந்தியா முழுதுமான மக்களின் தற்போதைய மனநிலை என்பேன்...

இந்தியாவின் மிகப்பெரிய சோகம் 1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான நச்சுபுகை... 5லட்சத்து 75 ஆயிரம் பேரை கண் பார்வை போய்...முச்சுதினறலில் பலர் சுவாசபாதிப்புக்குள்ளாக்கி மரித்து போக செய்தது.....

20,000 மக்களின் கனவுகள் சிதைக்கபட்டன....சுதந்திர இந்தியாவில் அமெரிக்க ஓநாய்கள் நம் மக்களை செல்லாகாசாக நினைத்ததன் விளைவு... 20,000ம் மக்கள் இறந்து போனார்கள்.... அது ஒரு தொழிற்சாலை விபத்து என்று சப்பை கட்டு கட்டியது அரசாங்கம்...இரண்டாம் தலைமுறை குழந்தை பிறப்பின் போது கூட குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர்.... இது எல்லாருக்கும் தெரிந்த சேதிதான்...


26 வருடங்களுக்கு பிறகு கொடுத்த தீர்ப்பில் இரண்டு வருட தண்டனை கொடுத்து விட்டு.. தண்டனை பெற்றவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வந்து இருக்கின்றார்கள்... அது அமெரிக்க கம்பெனி என்பது ஒரு காரணம்... பொதுவா பணம் இருக்கறவனுக்கு மட்டுமே இந்த உலகத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்...இந்த சாபக்கேடு இந்தியாவில்மட்டும் அல்ல உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் பொருந்தும்...சிபிஜ விசாரனை சரியில்லை என்று எல்லோரும் குறைபட்டுக்கொண்டு இருக்கும் போது... இங்கு நமது பிரதமரே சரியில்லை எனும் போது எதையும் குற்றம் சொல்ல முடியாது...

அமெரிக்கா அதிபருக்கு ஆய் போவதில் ஏதாவது சிக்கல் என்றால் நமது பிரதமர் பயந்து போய்...இங்கிருந்து மருந்துகளை அனுப்பி... என்ன போயிடிச்சா? போயிடிச்சா? என்று ஆர்வம் காட்டுகின்றார்...

நம்ம பக்கத்துல இருக்கற சின்ன நாடு இலங்கை... நம்ம இந்திய மீனவன் கச்சை தீவு கிட்ட இலங்கை கடற்படையால் தினமும் செம மாத்து வாங்குறான்... அதை கேட்க துப்பில்லை, ஏன்டா அவனங்களை அடிக்கிறிங்கன்னு இந்திய கடற்படை இதுவரை கண்டித்ததாக சரித்திரம் இல்லை... சின்ன நாட்டையே கண்டிக்க துப்பில்லை...

அமெரிக்கா அதுவும் எவ்வளவு பெரிய நாடு அது என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்....அதிபருக்கும் துடைக்க பேப்பர் இல்லை தண்ணி இல்லை என்ற சின்ன வருத்தம் அவர் நாட்டில் விசனபட்டாலும் இவர் பொங்கி இரண்டு பிளைட்டில் பேப்பரும் சொம்பும் அனுப்பி வைக்கின்றார்....அவர்கள் சொல்வதே வேதவாக்காய் செயல் படுகின்றார்....

சரி இந்த தீர்ப்பு சொல்லும் சேசதி என்ன?

இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...
===========
20 ஆயிரம் பேர் சாவுக்கு காரணமானவனுங்களுக்கு 2வருட சிறை தண்டனை உடனே ஜாமீன்...

ராஜீவ் காந்தியும் கூட சிலர் இறந்து போனதுக்கு ஆயுட்கால சிறை.... ஆட்டோ சங்கர் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டான்? வீரப்பன் அப்படி என்ன தப்பு செஞ்சான்...எதுக்கு அவனுங்களுக்கு தண்டனை? இரண்டு வருட சிறையும் 25 ஆயிரம் அபராதம் கொடுத்து விட வேண்டியதுததானே...???
================
நிறுத்துக்கொட்டை தாண்டி வண்டி நிறுத்தினால் சாமானியனுக்கு ஸ்பாட் பைன்.....ஹெல்மெட் போடவில்லை என்றால்.. சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கு....

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, ஆட்சிக்கு வந்து, அரசு நிலத்தை வாங்கிய முதல்வருக்கு உச்சநீதி மன்றம் ஒரு கண்டனத்தை மட்டும தெரிவிக்கின்றது....
=================
சோ இந்தியாவில் திங் பிக்...குற்றத்திலும் .....

சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பண்ணாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் ஷல்பா தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை...
==========

அரசியல்வாதிங்க ஒரு விஷயத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு ஒரு சீன் போட்டானுங்க பாருங்க.. அது செம காமெடி..

பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சுட்ட போது...ஐயோ இந்திய இறையான்னைமக்கு பெரிய வெட்கம் அது இது என்று பதறியது... எனக்கு தெரிந்து உள்ளே போய் நாளு பேரை போட்டு தள்ளி இருக்கனும்... அதுக்கு உடைந்தையானவங்களுக்கு தூக்கு.......

ஆனா 20 ஆயிரம் பேர் செத்ததுக்கு 2வருட தண்டனை....அதே போல் இந்தனை பேர் இறந்த வழக்கு விசாரனை சாதாரன ஒரு நீதி மன்றத்தில் நடக்கின்றது...


ரோட்டில் போகும் போது நடக்கும் சாமானிய மனிதருக்குள் நடக்கு சண்டையில் கூட ஒரு நியாயம் இருக்கின்றது..ஆனால் நீதி மன்றம் போய் கேட்க நினைக்கும் நியாங்கள்... கோர்ட்டில் பிரிட்டிஷ்காரன் போட்டு விட்டு போன பழைய பேனிலேயே தூக்கு போட்டு தொங்கிவிடுகின்றன...இப்போதெல்லாம் நீதி.... நீதி மன்றங்களில் கதறகதற வன்புனர்ச்சி செய்து அனு அனுவாக கொலை செய்கின்றார்கள்..

ங்கோத்தா உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களாடா? அங்க இரண்டு தலைமுறையா அப்படிதான் இருக்கு....
=========
பல கோடி வழக்குகள் இந்தியாவில் தேங்கி கிடக்கின்றன.. சாமனிய மக்கள் தீர்பை எதிர்பார்த்து காத்து இருக்க....
எல்லாத்துக்கும் நீதி சொல்லும் நீதிபதிகள்.. வெள்ளைகாரன் காலத்தில் நீதி மன்றத்துக்கு கோடை விடுமுறை விட்டது போல் இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம்.. அது பற்றி 2008ம் வருடத்தில் நான் அப்போது எழுதி யாராலும் படிக்காமல் போய் விட்ட
பதிவு இங்கே..கிளிக்கவும்
========
இது போலான நீதிகள் இந்தியாவில் கிடைக்கபெற்றால்... மா துஜே சலாம்.... என்று பாடும் போதும் ஜனகனமன பாடும் போது என் உடலில் ரோமங்கள் சிலிர்க்கும்...அது போல பல இந்திய குடிமகன்களுக்கும் சிலிர்க்கும்...அந்த சிலிர்ப்பை இது போலான தீர்ப்புகள் கொடுத்து சிலிர்க்காமல் செய்து விடுவார்கள் போல......
========
இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

62 comments:

 1. உண்மையான உண்மை

  ReplyDelete
 2. இவ்வளவு காலம் இழுத்துகொண்டிருக்கும் நீதி.. இந்திய நீதித்துறைக்கே அவமானம்..

  ReplyDelete
 3. உங்கள் கோபம் நியாயமானதுதான்.
  மக்களிடம் விழிப்புணர்வு இன்மையும் சுயநலமும் மிகுந்திருப்பதால் தவறான தலைவர்களை தேர்ந்தெடுக்கின்ற்றனர்.

  ReplyDelete
 4. //சரி இந்த தீர்ப்பு சொல்லும் சேதி என்ன?

  இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...//

  நல்ல செருப்படி!

  ReplyDelete
 5. நல்ல பதிவு ஜாக்கி.

  கோபத்தை ஞாயமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். ஆனால் நம்மில் அனைவரது நிஅலையும், சிறுது நேரம் புலம்பி விட்டு, துப்ப முடிந்தால் துப்பிவிட்டு அப்புறம் அடுத்த வேலையை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.

  ஒரு சிறிய வேண்டுகோள்: பதிவு எழுதிய பின் பலமுறை அதை வாசித்துப் பாருங்கள். நிறைய எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம். குற்றம் கண்டு பிடிக்கிறேன் என நினைக்காதீர்கள். பதிவிலேற்று முன் அவைகளை சரி செய்தால் பதிவு இன்னும் மெருகு பெறும்.

  ReplyDelete
 6. கோபம் வரவைக்கும் ஒரு உண்மைப் பதிவு

  ReplyDelete
 7. உண்மை ஜக்கி நேற்று இதை பற்றி தான் நான் கூட பதிவு போட்டேன் http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_07.html

  ReplyDelete
 8. Jackie Anna,

  You are very correct.

  As an analogy, US Government went behind British Petroleum (of UK), and got 69M US$ for the Gulf of Mexico oil spill.

  Double standards of US is always known. They will kill thousands and thousands of innocent civilians in Iraq and Afghanistan.
  If 1 US citizen is killed, it's a great sad story for them.

  Infact, in Iraq, recently the 1000th marine (of US Army) got killed and Obama gave a great speech on this 1000th marine death.

  Well, let's keep US aside.

  In India, what you have mentioned is very correct. Every politician worries about making money, in every possible way. Nothing else matters to them..

  I fully blame the past and current Congress governments in Centre, for these kind of sad stories.

  As per media reports, Mr. Lall of CBI (who investigated the Bhopal gas tragedy in 1994-95 period) has told that CBI received a letter from Ministry of Foreign Affairs - not to pressure the extradition of Mr. Warren Anderson from US. This Warren Anderson was the CEO of UCL.

  When Mr. Lall did not accept, he was transferred.

  It's a common thing - without some political heavyweight in picture, such a letter would have never come.. And Mr. Arjun Singh is blamed for this letter.

  As such, this matter will also be running in media for sometime.. When the next big story comes up (like Satyam, Reliance fights, IPL dramas, 2G scam) people forget and just jump to next.

  Come on, recently our PM was questioned on 2G scam. PM has told " I checked with Mr. Raja and everything is in order, nothing wrong has happened."

  If you notice, in TN also such sensational news make waves..
  Kanchi Sankaracharya murder case, Nithyananda case, Bhuvaneswari prostitution case, expired food products, expired medicines - no end.

  Afsal guru, Kasab - enjoy chicken and mutton biriyani somewhere in India. But crores of Indian children suffer due to malnutrition.

  Honestly, I feel that the Congress Government at the Center needs to be blamed for all this circus.

  It's a great shame for all Indians, to see the US atrocities on Indian soil but keep quiet.

  I take part in your social thinking and feelings.

  Sudharsan

  ReplyDelete
 9. ஜாக்கி .. பதிவைப் படித்தேன் . . முழுக்க முழுக்க வழிமொழிகிறேன் . .

  //இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...
  //

  இப்படி நடந்துவிட்டால், அன்றுதான் இந்தியா உருப்படும்..

  மற்றபடி, நேற்று நான் எழுதிய பதிவு - என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்

  அதே போல், நண்பர் கார்த்திகேயனின் பதிவு - நீதியரசர்களா?நிதியரசர்களா?

  ReplyDelete
 10. எல்லோருக்கும் இது போன்ற நியாயமான கோபமும் ஆத்திரமும் மேலும் மேலும் வரந்து வரும் சூழல்கள்தாம் தினமும் நம் நாட்டில் நடந்து கொண்டிடுகின்றன.
  ஒம்று நிச்சயம், ஜனநாயகத்திற்கும் நமக்கும் கொஞ்சமும் லாயக்கில்லை.சொல்லிப்பாருங்கள்..?!
  "ஆஹா... ஐயோ ...ஜனநாயக விரோதி .....என்று எல்லா கட்சிகளும் , மீடியகளும் ..............................".

  ReplyDelete
 11. நம்ம கடலூரும் அடுத்த போபாலா இருக்க தயாராகிக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 12. ஜாக்கி,

  ithai padicha piragu indian-a irrukirathai ninachu romba varutha paduren...makkal yen appdi porupu illama irrukangannu ninakum pothu varuthama irruku..ungaloda intha pathivu en moolama en friends-ku anuppi intha msg-a spread panna poren...keep write...love ur words...jackie...

  ReplyDelete
 13. ஜாக்கி அண்ணே! நம்மை போன்ற சாமானிய மக்களின் உயிர்கள் பற்றி இந்த அரசியல்வாதிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஹிட்லருக்கும் இவர்களுக்கும் ஒன்றும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. போபால் விபத்தைவிட பல நூறு மடங்கு ஆபத்தை விளைவிக்கும் அனு உலைகள் விடயத்தில் இவர்கள் கொண்டுவந்துள்ள மசோதாவே இதற்குச்சான்று.

  சமிபத்தில் மன்மோகன் சிங் அரசுஅணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்துள்ளது. அதுவும் எந்த விவாதமும் இன்றி புறக்கடை வழியாக. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இது பற்றி தெரியுமா என்று தெரியவில்லை.(தெரிந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை எனபது வேறு)இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​ உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​அதைவிடக் கொடுமை அவ்வாறு ஒரு விபத்து நேரிட்டால் வழங்கப்படும் இழப்பீடுக்கு உச்ச வரம்பு வெறும் 2300 கோடி மட்டுமே. போபால் விழ வாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களே முப்பதாயிரத்திற்கும் மேல். விழ வாயுக்கே இப்படி என்றால் ஒரு அனு உலை வெடித்தால் எத்தனை பேர் பாதிக்கப்ப்டுவார்கள் என்று நினைத்துப்பாருங்கள். இதன் மூலம் ஒரு உயிரிழப்புக்கு ஒரு லட்சம் கூட கிடைக்காத நிலையே ஏற்படும்.

  ஆனால் வளர்ந்த நாடுகளில் இத்தகைய விபத்துகளுக்கு உச்சவரம்பே கிடையாது அல்லது நமது நாட்டில் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தொகையை விட பல நூறு மடங்கு அதிகம்.

  நீங்கள் நடந்து முடிந்த சோகத்தைப்பற்றி கவலைப்படுகிறீர்கள். வரப்போகும் ஆபத்துக்கு என்ன செய்வது??!!!

  ReplyDelete
 14. சார் இந்தியாவில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை வாங்கப்படுகின்றது என் இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 15. ஒருதந்தைக்கு பிறந்த எந்த ஒரு மனிதனும் இது போன்று கேவலமான தீர்ப்பெனும் கோமாளி தனத்தை வெளியிட மாட்டார்கள்.

  மீடியாக்கள் எல்லாம் விலைக்கு வாங்கப்பட்டு வெகு காலங்கள் ஆகின்றன.

  ஆகவே, இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் பரபரப்பாகத் தான் இருக்கும் அப்புறம் இருக்கவே இருக்கு செம்மொழி மாநாடு. அதுக்கு சொம்பு தூக்கவே நேரம் சரியாக இருக்கும். அப்புறம் ஏது போபால் - எல்லோரையும் 'போப்பா' என விரட்டி விடுவார்கள்.

  ReplyDelete
 16. உங்கள் கோபம்....உண்மையான கோபம்...

  ReplyDelete
 17. நெத்தி அடி, இந்த தீர்ப்பை இந்திய மக்கள் எல்லோரும் எதிர்க்கவில்லையா,

  சரியான தலைப்பு,

  ReplyDelete
 18. இன்னும் கூட கெட்ட வார்த்தையில் திட்டலாம்.... தப்பு இல்லை!!!!

  ReplyDelete
 19. //மா துஜே சலாம்.... என்று பாடும் போதும் ஜனகனமன பாடும் போது என் உடலில் ரோமங்கள் சிலிர்க்கும்...அது போல பல இந்திய குடிமகன்களுக்கும் சிலிர்க்கும்...அந்த சிலிர்ப்பை இது போலான தீர்ப்புகள் கொடுத்து சிலிர்க்காமல் செய்து விடுவார்கள் போல......//
  எனக்கு அந்த சிலிர்ப்பு போய் ஒரு வருடத்துக்கு மேலாச்சு.

  ReplyDelete
 20. ஹவாய் தீவினில் ஹாய்யாக ஒய்வெடுத்து கொண்டு இருக்கிறான் ஆண்டர்சன் அவன பிடிச்சு நீதிமன்றத்தில் நிறுத்த துப்பில்லாத அரசு :(

  ReplyDelete
 21. Jackie.. what you said is 200% correct...
  Atleast people should aware of these things...many of us dont know what happening in india and around the world itself..
  we just want to move the day to day life.And not caring about others at any cost..
  And using this,politicians make use of it and fool everyone..
  If it continues, Future India will be a GREAT QUESTION MARK !!!!

  ReplyDelete
 22. //எனக்கு தெரிந்து உள்ளே போய் நாளு பேரை போட்டு தள்ளி இருக்கனும்//

  - 400 பேரையும் போட்டிருக்கணும், எவ்வளவோ நல்ல இருந்திருக்கும்.
  //
  "ங்கோத்தா" உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களாடா? //
  சபாஷ் !!

  //
  இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...//
  மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம்,பீகார்,சத்தீஸ்கர்,மகாராஷ்டிரா என இதனை மாநிலங்களில் நக்சல் ஆதரவுக்கு காரணம் இப்போ தெரியுதா ?

  From Wikepedia
  - As of 2009, Naxalites were active across approximately 220 districts in twenty states of India accounting for about 40 percent of India's geographical area

  அருமையான பதிவு !!

  -திரு

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. "சோ இந்தியாவில் திங் பிக்...குற்றத்திலும் .. "

  இனிமேல் இதுவே எங்கும். அருமையான, சரியான பதிவு .

  அன்பரசு செல்வராசு

  ReplyDelete
 25. கசாப் குற்றவாளின்னு எல்லோருக்கும் தெரியும். உடனே போட்டு தள்ள வேண்டியதுதான. அவனுக்கு மேல் முறையீடு. அவனுக்கு வாதாட ரெண்டு வக்கீல்கள்(இவங்க எதுக்கு வக்கீலுக்கு படிக்கணும்)

  ReplyDelete
 26. நான் வழக்கமாகச் சொல்லும் 50 வருஷ மேட்டர் கண்டிப்பா நடக்கும்னு சொல்றா மாதிரி இருக்கு இந்த இடுகை

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 27. \\ங்கோத்தா உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களாடா? அங்க இரண்டு தலைமுறையா அப்படிதான் இருக்கு..\\

  தே... பசங்க..இந்தியாவ வெளிநாட்டு கண்டாரேஒ....நாய்களுக்கு விக்காம விடமாட்டானுங்க..

  ReplyDelete
 28. அருமையான பதிவு! படிக்கையில என்ன தோனுதுன்னா.... இந்த அரசியல் வியாபாரிக நம் எல்லோரையும் பார்த்து “ டேய் இவ்வளவு பெரிய தமிழ்நாட்டுக்கே ஒரு முத்துகுமாரும் இன்னும் சிலர்தானடா! அவனுகளும் போய்ட்டானுக, உங்கனால என்ன புடுங்கமுடியும்னு” நினச்சிகிட்டு இருக்கானுகளோ? முதல் சுதந்திரப்போரும் இப்போதுள்ள மாவோயிஸ்டுகளைப்போல தீவிரவாதிகள் முத்திரைதான் குத்தினாங்க. முடிவு என்ன ஆச்சு? அடுத்த போர், அதுவும் நம் காலத்தில், பிரமாதம்....சும்மா போற உயிர் மக்களுக்காக போகட்டும்! தயாராக வேண்டியதுதான்!!

  ReplyDelete
 29. நண்பரே,


  மிக அருமையாண பதிவு. இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது இந்தியாவில் எதை செய்தாலும் பெருசா செய்யனும்.

  ”பெண் சிங்கம்” திரைவிமர்சனம் எதிர்பார்க்கின்றேன் ஆவலுடன்.

  ReplyDelete
 30. பேமானிங்க கிட்ட நாடு மாட்டிகீச்சு ஜாக்கி

  ''இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை.''

  சரியாக கணிச்சு இருக்கீங்க ஜாக்கி

  ReplyDelete
 31. என்னது நீதி,நேர்மையா?
  எங்க மக்களுக்கு பணம்,இலவசம்,வோட்டுக்கு காசு,மானாட மாராட.....
  அவ்ளோதான் தெரியும்.
  இந்த நீதி, நேர்மை எல்லாம் அடுத்த election ல கொடுப்பாங்களா என்ன?

  ReplyDelete
 32. தேவையான கோபம் ஜாக்கி. வரிக்கு வரி வழிமொழிகிறேன் அதே கோபத்தோடு.

  ReplyDelete
 33. இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...

  India is a country where we will never get justice, hence எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.

  idu tirutu Thév pasanga rule pannura naadu. So this will never change.

  ReplyDelete
 34. Mugathil araiyum nijam endralum enakkenna enpathu pol oru kathil vangi maru kathu vazhiyaga vidum suranaiyatra jenmangal irukkum varai, ithu pol niraya theerpukkalai ethirparkalam.


  Arputhamana pathivu Thozha.. Thodarattum..

  ReplyDelete
 35. அண்ணே மிக அவசியமான பதிவு,எழுதியமைக்கு மிக்க நன்றி.நேற்று எல்லாம் மனசே சரியில்லை.இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து.

  ReplyDelete
 36. தமிழ்நாட்டுல இருக்கும் ரசாயன ஃபேக்டரில ஒண்ணு இப்படி ஆனா இன்றைய தேதிக்கு என்ன ஆகும்னு?கல்பாக்கம் அனுமின் நிலையம் சுத்தி உள்ளவர்களுக்கே இப்போ நிறைய குறைகள் இருப்பதாய் படிக்கிறேன்.ஆகவேவிழிப்புணர்வு நிச்சயம் வேண்டும்.அரசியல்வியாதிகளை நம்பி பலனில்லை,கேடுவிளைவிக்கும் தொழிற்சாலைகள் பல நாம் அறியாமலே கையெழுத்தாகியிருக்கக்கூடும்,எண்ணூரில் போன வருடம் ஒரு ஃபேகடரியின் உலை வெடித்து சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு, மக்களுக்கு மயக்கம் வாந்தி பேதி வந்தது நினைவிருக்கும்.

  ReplyDelete
 37. இந்த நிலை நிச்சயம் அவனுங்க குடும்பத்தும் வரனும்
  இது நான் ஆவலா எதிர்பார்த்த தீர்ப்பு,என் அம்மா தீர்ப்பை எதிர்பார்த்தவர்கள் அது வரும் முன்பே போய் சேர்ந்து விட்டார்கள்,

  50களில் இருக்கும் யாருக்கும் இது ஒரு அழியாக் கோலம்,தாமதமாய் வரும் நீதி மறுக்கப்பட்ட நீதி.

  26 வயசு ஒருவன் பிறந்து ப்ரொஃபெஷனல் படித்து,வேலையில் செட்டிலாகி திருமணம் செய்யும் வயசு
  எத்தனை பிஞ்சுகள் அப்படி சாதிக்காமல் செத்தது?
  ====
  கொடுமை,
  இறந்தது 22000-25000பேராம்,இதில் என்ன ஒரு துயரம் என்றால்?மருத்துவமனைகளில் இறப்பு சான்றிதழ் தராததாலும் அரசு அவசர அவசரமாக அனாதை பிணங்களை ஒன்றாக கொட்டி சவ அடக்கம் செய்ததாலும் 10000 பேர்களுக்கும் மேலான இறந்தோர் பெயர்கள் கணக்கிலேயே வரவில்லை என்பது வருத்தமான உண்மை.

  இந்த நாலனா தீர்ப்பை வைத்து இதை வைத்து போன உயிரை திரும்பப் பெறமுடியுமா? இழந்த பார்வை கிடைக்குமா? செயழிழந்த உடல் அங்கங்கள் செயல் பெறுமா ? புற்று நோயால் பீடிக்கப்பட்டவர் ,குணமடைவரா? 20 வயதிலும் பூப்பெய்தாமல் போன இளம் பெண்கள் பூப்பெய்துவரா? கருப்பை கோளாறுகளை பிறப்பிலேயே கொண்ட 20 களிலுள்ள பெண்கள் தாய்மை அடைவரா? இழந்த சுகாதாரம், நல்ல சுற்றுச்சுழல் திரும்பவருமா? நிச்சயம் வரவே வராது.

  இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கப்படும் தருணங்களில் இதுவும் ஒன்று

  ReplyDelete
 38. நமது நாட்டில் நடப்பது ஆட்சி குடியாட்சி,எத்தனை எதிர்கட்சிகள்?,எத்தனை ஆட்சி மாற்றம் ? 26 வருடத்தில் வந்து போனது , காங்ரஸ் துவங்கி அத்துனை கட்சிகளும் இந்த இழிசெயலுக்கு துணை நின்று மவுனமாய் தாமதிக்கவிட்டு வந்துள்ளனர். சிம்பிளா சொல்லப்போனா எலக்‌ஷன் செலவுக்கு பணம் எடுக்கும்- இந்த இண்டெர்நேஷனல் ஏடிஎம் மெஷின்களுக்கு,பாதுகாப்பாய் இருந்துள்ளனர்.வெட்கக்கேடு,நான் என் நாட்டை வெறுக்கவில்லை, அழுக்கு படிந்த சட்டத்தை தான் வெறுக்கிறேன்.

  ReplyDelete
 39. அருமையான வார்த்தைகள் எனக்கும் எழுத ஆசை தான்,அதை எல்லோரும் செய்தால் அழகல்ல,சூப்பர் பதிவு.குள்ர்ந்துபோச்சு.

  ReplyDelete
 40. உங்கள் கோபம் நியாயமானதே.. என்ன பண்றது.. நம் மக்களை கடவுள் தான் காப்பாத்தணும் இந்த தொல்லைகாட்சியிலிருந்து... தடிமனும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்..

  ReplyDelete
 41. சரியான சாட்டையடி பதிவு நண்பரே...படித்து முடித்த போது எனக்கு கண்கள் கலங்கி விட்டன.நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம்?

  ReplyDelete
 42. ப்தூ இது ஒரு சட்டம் மாணங்கெட்டவனுங்க

  ReplyDelete
 43. உங்கள் பதிவிலிருக்கும் கோபம், மீடியவுல(visual@printed) சரியா வெளிப்படுல சார். இதெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நம்ம நாட்ல நடக்க போகுதுன்னு தெரியல.

  ReplyDelete
 44. நியாயமான கோபம். இவங்களை யார்தான் தண்டிப்பது.

  ReplyDelete
 45. நம் மக்களுக்கு ஊழலின் அளவு கோடிகளில் இருந்தால் தான் அதன் தீவிரம் புரிகிறது... போபர்ஸ் தொடங்கி ஸ்பெக்ட்ரம் வரை.

  கோத்ரா ரயில் எரிப்பு... போபால் விஷ வாயு கசிவு என்று கொல்லப்பட்ட உயிர்களின் எண்ணிக்கைக்கு இங்கு மதிப்பே இல்லை... பணம்... பணம்... பணம்... எங்கு பார்த்தாலும் பணத்திற்கு தான் மதிப்பு... ஊழலில் கூட...!

  அரசியல் கட்சிகள் கூட ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போபால் வழக்கின் தீர்ப்புக்கு கொடுத்ததாக தெரியவில்லை... அவ்வளவு தான் அப்பாவி இந்திய மக்களின் உயிருக்கு மதிப்பு!

  ReplyDelete
 46. எவரை குற்றம் சொல்ல?

  வாக்களித்தவர்களையா! இல்லை வாக்கு பெற்றவர்களையா!! மனசாட்சி படி நடந்தாலே நீதி நியாயத்தை நிலைநாட்ட முடியும். இங்கு அதற்கே வழியில்லையே

  ReplyDelete
 47. Ellaraiyum nikka vachu sudanum boss!

  //இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து..//
  nachunu irukunga.

  ReplyDelete
 48. //// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
  நமது நாட்டில் நடப்பது ஆட்சி குடியாட்சி,எத்தனை எதிர்கட்சிகள்?,எத்தனை ஆட்சி மாற்றம் ? 26 வருடத்தில் வந்து போனது , காங்ரஸ் துவங்கி அத்துனை கட்சிகளும் இந்த இழிசெயலுக்கு துணை நின்று மவுனமாய் தாமதிக்கவிட்டு வந்துள்ளனர். சிம்பிளா சொல்லப்போனா எலக்‌ஷன் செலவுக்கு பணம் எடுக்கும்- இந்த இண்டெர்நேஷனல் ஏடிஎம் மெஷின்களுக்கு,பாதுகாப்பாய் இருந்துள்ளனர்.வெட்கக்கேடு,நான் என் நாட்டை வெறுக்கவில்லை, அழுக்கு படிந்த சட்டத்தை தான் வெறுக்கிறேன்.////

  குடிகாரனின் ஆட்சி..

  பட்டம் படித்தவனுக்கு பட்ட சாராயம் விற்கும் பதவியா ?? காய்ச்சியதா அல்லது கலந்ததா என்பதை யானறியேன்.

  ReplyDelete
 49. /// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
  தமிழ்நாட்டுல இருக்கும் ரசாயன ஃபேக்டரில ஒண்ணு இப்படி ஆனா இன்றைய தேதிக்கு என்ன ஆகும்னு? ///

  எதிர்கட்சிகளின் சதி என்போம்.

  அனுதாப கூட்டம் நடத்தி , அண்ணாவின் ஆவியிடம் அனுதாபம் தெரிவிம்போம்.

  முடிந்தால் பக்கத்து நாட்டிலும் பரவ செய்வோம் அங்கும் தமிழன் இருக்கிறான் அல்லவா....

  கூடுதலாக பிரதான் மந்திரி பதவியினை மகளுக்கும் கேட்டு பேறுவோம்.

  ReplyDelete
 50. 55 பின்னுட்டங்களில் உங்கள் வெறுப்பை ஆள்பவருக்கு எதிராக உமிழ்ந்து இருக்கின்றிர்கள்.. எனக்கு ஒரு தளம் இருக்கின்றது கத்தி விட்டேன்.. அப்படி இல்லாத நண்பர்களும் அவர்கள் அறச்சீற்றத்தை வெளிபடுத்தியதில் மகிழ்ச்சி...

  வெண்ணிறஇரவுகள், கருந்தேள் கண்ணாயிரம்,கார்த்திகேயன் எல்லோரும் அவர் அவர் தளங்களில் இந்த பிரச்சனையை சாடி இருக்கின்றார்கள்...

  ஒருமுறை நண்பர் ராஜ்குமார் இந்த பிரச்சனை பற்றி எழுத சொன்னார்...சில விஷயங்கள் எனக்கு தெரியாது அதனால் எழுதவில்லை.. இப்போது அப்படி இல்லை...அதனால் எழுதி விட்டேன்...


  அடுத்து எங்கள் ஊர் கடலூர் கூட அடுத்த போபாலாக மாறிக்கொண்டு இருக்கின்றது... அது பற்றி செய்தி சேகரித்து இன்னும் விரிவாய் வெறு ஒரு பதிவில் எழுதி கொண்டு இருக்கின்றேன்...

  இதையெல்லாம் எழுதி துப்பி விட்டு சென்று விடுகின்றோம் என்று நண்பர் தராசு சொன்னார்...

  அப்படி இல்லை இன்னும் இந்த விசயம் பற்றி அலட்டி கொள்ளாமல்
  இருக்கும் படித்தவர் எத்தனை பேர் இருப்பார்கள்...அவர்களுக்கு தெரிவிப்பதற்க்காக...அவர்கள் படித்து பார்த்தால் நாம் எந்த மாதிரியான நாட்டில் வாழ்ந்து வருகின்றொம் என்று தெரிந்து கொள்ள......

  நாளை நண்பர்கள் வட்டத்தில் பேசி இது மற்ற நண்பருக்கு அறிவுறுத்த இப்படித்தான் பல செய்திகள் மக்களுக்கு போகும் நண்பா....
  இருப்பினும் அனைவரின் அனைத்து கோபமும் வெளிபடுதிய விதமும் எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது...

  அன்புடன்
  ஜாக்கிசேகர்

  ReplyDelete
 51. அன்பு தோழர் ஜாக்கி !

  தங்கள் பதிவின் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் !

  தேசிய கீதத்துக்கெல்லாம் எழாமல் உட்கார்ந்து கொண்டிருந்தது போய், கழிவறைக்குள் அமரும் மனநிலை தற்போது எனக்கு ....

  நக்ஸ்சல்கள் யாரேனும் என்னை சற்று மூளை சலவை பண்ணினாலே போதும் ... மனித வெடி குண்டாக மாறவும் தயங்க மாட்டேன் ....

  தேசத்தின் அமைப்புகளின் மீது நம்பிக்கை கொள்ளும் தருணங்கள் மிக அருகிக் கொண்டே வருகின்றன ....

  உங்களை போன்ற புரட்சி பதிவர்களை வாசிக்கும் போது தான் நெஞ்சில் சிறு ஆறுதல் ...

  நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள் தோழர் !

  ReplyDelete
 52. ஜாக்கி

  நல்லதொரு பதிவு.

  ReplyDelete
 53. ஜாக்கி அண்ணே புரட்சி தலைவர் சொன்னமாதிரி
  வலிமை உள்ளவன் வச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பி. பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி

  இது நடக்குமா !!!!!

  ReplyDelete
 54. ரௌத்திரம் பழகு.
  தலைவிதி..
  உங்களுக்கும் எங்களுக்கும்

  ReplyDelete
 55. உங்களுடைய பதிவு நன்றாக உள்ளது.
  கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
  Link:www.seconden.com/tamil/whatis jaiku?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner