சென்னை பதிவர் சந்திப்பு...(05•06•2010) ஒரு பார்வை...


என்னைக்கும் இல்லாத திருநாளா.. நான் இந்த முறை கொஞ்சம் முன்னதாகவே போய்விட்டேன்...யாருமே காணவில்லை...வழக்கத்திற்க்கு மாறாக இப்போதெல்லாம் சென்னை மெரினாவில் வட இந்தியர்களின் முகங்கள் அதிகம் தென்படுகின்றன...

சென்னையில் தகவல் தொழில்நுட்பதுறை காரணமாக இந்த மாற்றம் என்று என்னால் சொல்ல முடியும்...எல்லா இடத்திலும் வட இந்திய முகங்கள்...டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... இது போலான ஆட்களை சென்னையில் மெலோடி தியேட்டரில் அம் ஆப்கேஹெயின் கோன் போன்ற இந்தி படங்களின் ரிலிசின் போது பார்க்கலாம்...ஆனால் இப்போது இவர்கள் மெரினாவில் அதிகம் தென்படுகின்றார்கள்..

நான் கடலூர்காரன்.. எனக்கு சிறு வயதில் இருந்தே கடல் என்பது ஆச்ர்யமான விஷயம்தான் இருந்தாலும்..அதை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்... அதனால் எனக்கு அது பெரிய ஈர்பானது இல்லை..

ஆனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட என் நண்பியோட தங்கையின் சொந்த ஊர்..தருமபுரி சிறு வயதில் இருந்தே கடல் பார்க்கவில்லை சென்னை வந்து இருக்கின்றாள்... அவளை அழைத்து போய் காட்ட சொல்ல கட்டளை... நானும் அவளை அழைத்து போய் கடல் அருகில் நிறுத்திய போது... பனிமலையை பார்த்து ரோஜா படத்து மதுபாலா விழி விரியுமே அது போல விழி விரிந்து தண்ணீரில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தாள்...எனக்கு ரொம் ஆச்சர்யம்...ஒரு டிகிரி முடித்த பெண் சிறு குழந்தை போல் கடலில் உடை நனைய போட்ட ஆட்டம் ஆயுசுக்கும் மறக்காது......

சென்னை செய்திதாள்களில் நீங்கள் ஒன்றை பார்த்து இருக்கலாம் வட நாட்டு மாணவர்கள்... கடலில் மூழ்கி பலி என்று.... காரணம் ஒன்றும் இல்லை... சிறுவயதில் இருந்தே மத்தியபிரதேசத்தில் வாழ்ந்த பையன் கடல் எப்படி இருக்கும்? என்பதை தொலைகாட்சி மூலம் அறிந்தவன்...

அந்த பையன்மேற்படிப்பு பொறியியல் படிக்க சென்னை தனியார்கல்லூரிக்கு வந்து, கடலை நேரில் பார்க்கும் போது உற்சாகத்தில்.... கடலில் குளிக்க... அந்த பசங்கள் கடல் பற்றி,அலை பற்றி ,சூழல் பற்றி தெரியாமல் கும்மாளம் போட ...ராட்சத அலை வந்து இழுத்து சென்றுவிடுகின்றது...நிறைய உயிர் இழப்புகளுக்கு அதுதான் காரணம்....


பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு, சொத சொத ஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்...

நேரம் சென்று கொண்டு இருந்தது...பொழுது போக பலதை கவனித்துக்கொண்டு இருந்தேன்...இரண்டு பிள்ளைகள் தரை சறுக்கு விளையாட்டு விளையாட காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஆயுத்தமாகி கொண்ட இருந்தார்கள்.....அங்கு உட்கார்ந்து இருப்பவர்கள் எல்லோரும் அவர்களை பார்க்கின்றார்கள் என்று தெரிந்ததும் அவர்கள் மேலும் அலட்ட ஆரம்பித்தார்கள்...

சிரில் அலெக்ஸ்,ரவிசங்கர், புருனோ,டிவிராதகிருஷ்ணன்,தண்டோரா,காவேரிகணேஷ்,செந்தில்,டோண்டு, பலாபட்டறை சங்கர்,ஜெட்லி,சங்கர்,ஸ்ரீ,சிரிப்பு போலிஸ்,பேநா மூடி ,விந்தை மனிதன், அப்துல்லா,லக்கி, அதிஷா,பாலாபாரதி,ஜியரோம்சுந்தர்,சுகுமார் அன்பு,தமிழ்குரல்,தளபதி,என்று பல பதிவர்கள் வருகைக்கு பின் களை கட்ட ஆரம்பித்தது....

முன் பெஞ்சு, பின் பெஞ்சு பிரச்சனை இல்லாத காரணத்தால் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்று பகடி செய்து கொண்டு இருந்தோம்... பலபடங்களில போலிசாக நடித்து இப்போது வடிவலுடன் வில்லனாக நடிக்கு நண்பர் மெரினாவில் வாங்கிங் வர தண்டோரா அவரை உளவுதுறையில் இருந்து வருவதாக சொல்ல எல்லோரும் சிரித்து வைத்தனர்...

டோண்டு வழக்கம் போல் நோட்டில் வந்தவர்களிட்ம் பேர் எழுதி வாங்க... நான் அவுங்க அவுங்களும் அவங்க பேர் மட்டும் எழுதுங்க... ஒரு வாரம் வலையுலகில் அடிபடும் பெயரை பழக்க தோஷத்தில் எழுதி வைக்க வேண்டாம் என்று சொல்ல எல்லோரும் சிரித்து வைத்தனர்...

போன முறையே போலிஸ் நாங்கள் ரெகுலராக அமரும் இடத்தை காலி செய்ய சொன்னதால் இந்த முறை நாங்கள் பீச் மணலுக்கு போய் ஒரு சிறு வட்டம் அமைத்து உட்கார்ந்து கொண்டு தங்களை அறிமுகபடுத்திக்கொள்ள...சுக்கு காப்பியும்,சுண்டலையும் வாங்கி கொள்ள சொல்லி நொச்சிக்குப்பம் பசங்கள் பலமுறை நச்சரித்தார்கள்....

பாலாபாரதியும்,லக்கியும் செம்மொழி மாநாட்டில்கலந்து கொள்ள ஆர்வம் உள்ளபதிவர்கள் தொடர்பு கொள்ள சொன்னார்கள்...வலைபதிலை பற்றி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ள சொன்னார்கள்...அதே போல் என்னிடம் இருக்கும் தமிழ் கீ போர்டு ஸ்டிக்கர்களை இலவசமாக செம்மொழி மாநாட்டில் தமிழ் வலைபதிவர் ஸ்டாலில் இலவசமாக பெற்ற்றுக்கொள்ளவும்....அதனை பாலாபாரதியிடம் கொடுத்து விடுவதாக சொன்னேன்...

கேபிள் லேட்டாக வர அவரையும் யார் என்று பதிவர்களுக்கு அறிமுகபடுத்த சொல்ல.. அவர் சற்றே தயங்க... நான் கேபிள் உன்னை யாராவது கும்மனும்னு இந்த சந்திப்புக்கு வந்து.... அவர் வேறு யாரு மேலையும் கைய வைக்க கூடாது இல்லையா?.. அதனால் நீங்க அறிமுகபடுத்திக்கோங்க என்று சொல்ல சபையில் சிரிப்பு....

ஒரு ஹெலிகாப்டர் ரொம்ப தாழ பறந்து சொல்ல பதிவர்களை கண்காணிக்க இவ்வளவு தூரம் கூட அரசாங்கம் கைகாசை செலவழிக்குமா? என்று பிட்டை போட்டு வைதேன்...

இந்த முறை பெரிய காரசார விவாதம் இருக்க வேண்டும் என்று பல புதிய பதிவர்கள் வந்து கலந்து கொண்டார்கள்...செம்மொழி மற்றும் பெட்ரோல் விலை உயர்வு...ஆகியவற்றை பற்றி பேசினோம்...பல புதிய பதிவர்கள் நினைப்பில் மண்... வழக்கத்தை விடஇந்த முறை ஒரு 15 பேர் எக்ஸ்ட்ராவாக வந்து இருந்தனர்....

எப்போதும் போல் இந்த மெரினா பதிவர் சந்திப்பும் சேவல் பண்ணை கூட்டமாகவே இருந்தது....

வழக்கம் போல் எல்லோரும் மெரினா கலங்கரை விளக்க டீ கடையை நோக்கி நடக்க.. வழியில் எனது எம்கேயூ சேலம் நண்பி ஆஷாவை பார்த்து ஷாக்காகி நின்றேன்...ஆஷாவோடு பேசிக்கொண்டு இருக்கும் போது.. நண்பர் ஸ்ரீதரும் வந்து கலந்து கொண்டார்... அவர்களுடன் விடைபெற்று டீகடைக்கு போனோம்...


பல காரசார விவாதங்கள் நடைபெரும் இடமே இந்த டீகடைதான்.... குழு அரசியல் என்று இதனை கண்டிப்பாக சொல்லலாம்...சின்ன குழுவாக வட்டமாக நின்றபடி சத்தமாக சுவரஸ்யமக பேசுவார்கள்...எந்த டாபிக் புடிக்குதோ அதில் கலந்து கொள்ளலாம்.... நிறைய டாபிக் ஓடும்..அனல்ல பறக்கும் விவாதம் நடக்கும்...நண்பர்களுக்குள் நடக்கும் பேச்சு...உதாரணத்துக்கு கலைஞர் தாணம் கொடுத்த வீட்டை கூட இங்கு பல் பிடித்து பார்த்து பேசினார்கள்.....பலது சொல்லலாம்...சிலது சொல்லவே கூடாது...எல்லாம் ஆப்த ரெக்கார்ட்....சாதாரண நாட்களில் கூட சொல்லலாம்.....ஆனால் இப்போது அது பற்றி இங்கு எழுதவும் சொல்லவும் முடியாது...சொல்லவும் கூடாது...

நான், தமிழ்குரல், கேபிள், ஸ்ரீ,விந்தைமனிதன்,செந்தில் என எல்லோரும் சபை கலைந்து செல்லும் போது இரவு 9மணி... நான்... ஸ்ரீயை என் வாகனத்தில் டிராப் செய்தேன்...ஸ்ரீ ஒரு சின்ன உதவி கேட்க என்னால் செய்ய முடியாத சூழல் சாரி ஸ்ரீ...

இரவு சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வண்டி எடுத்து வீட்டுக்கு போக ஒரு போலிஸ்காரர் என் வாகனத்தையும் என் கால் பகுதியையும் வித்யாசமாக பார்பதாக என் மனதுக்கு பட்டது...கொஞ்ச நேரம் என்னவென்று யோசித்து வாகனம் ஓட்டியபடி கீழே பார்த்தால்.... என் வண்டியின் சைடு ஸ்டேன்டு எடுக்கவில்லை...யோவ் போலிஸ் வாயில பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையா வாயில வச்சிக்கினு இருந்த...சொல்ல வேண்டியதுதானே... எல்லாம் ஈகோ...காக்கிசட்டை ஈகோ...

இந்த முறை கேமரா எடுத்து போகவில்லை....
புகைபடஉதவி...பதிவர் காவேரி கணேஷ்... மிக்க நன்றி...அவர் பதிவர் சந்திப்பு பதிவையும் வாசிக்க கிளிக்கவும்


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

29 comments:

 1. thanks Jackie sekar.

  Nice writing, thanks for sharing

  ReplyDelete
 2. //ஒரு ஹெலிகாப்டர் ரொம்ப தாழ பறந்து சொல்ல பதிவர்களை கண்காணிக்க இவ்வளவு தூரம் கூட அரசாங்கம் கைகாசை செலவழிக்குமா? என்று பிட்டை போட்டு வைதேன்...//

  இது வேறையா. நாம ரொம்ப பிரபலம் ஆயிட்டமோ?

  ReplyDelete
 3. வணக்கம் அண்ணே சுவாரஸ்யமான ஆரம்பம், தகவல்களுடன் பதிவர் சந்திப்பு பற்றியும் எழுதியது அருமை ..

  ReplyDelete
 4. .டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்...

  ஆணாதிக்க வெறி...

  நல்ல தொகுப்பு ஜாக்கி, நிறைய ஞாபகம் வைத்து தொகுத்துள்ளீர்கள்..

  ReplyDelete
 5. இந்த பதிவர் சந்திப்பு ஜாலி கலக்கலாக இருந்தது

  ReplyDelete
 6. ஜாக்கி,

  ட்ராப்புக்கு நன்றி. சாதாரண விஷயத்துக்கெல்லாமா Sorry ? ஏன்? சந்திப்பு குறித்த தெளிவான இடுகை.

  ஸ்ரீ....

  ReplyDelete
 7. அடப்பாவி போலீஸு!!!

  அண்ணன் தான் மறந்துட்டாரு நீங்களாவது சொல்லக்கூடாதா?

  வண்டி எடுக்கும்போது கவனமா இருங்கண்ணே.. பதிவர் சந்திப்பெல்லாம் அப்புறம் Safety First.

  ReplyDelete
 8. நன்றி ராம்ஜி

  நன்றிரமேஷ்...ரொம்ப பிரபலம் அப்படி எல்லாம் இல்லை மொக்கைய ஆயிட்டோம்..

  நன்றி காவேரி...ஆணாதிக்கம்...வெறி...

  நன்றி துளசி டீச்சர்

  நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 9. சாக்கி.,
  கலைஞர் விட்டை என்று...இருக்குய்யா உமக்கு...
  :))

  ReplyDelete
 10. //டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்...// அடப்பாவி மக்கா... யாராவது காட்டிவிட்டியளா? நான் கவனிக்கவே இல்லயே!

  ReplyDelete
 11. சரவணன் சொன்ன மாதிரி சேஃப்டி ரொம்ப முக்கியம்.

  பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. // பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு, சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்...//
  ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.

  ReplyDelete
 13. // பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு, சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்...//
  ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.

  ReplyDelete
 14. // பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு, சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்...//
  ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.

  ReplyDelete
 15. // பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு, சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்...//
  ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.

  ReplyDelete
 16. காத்தாடி விட்டு வேவு பார்த்ததை சொல்லலையா....??

  ReplyDelete
 17. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.... சுவையான அனுபவ தொகுப்பு
  (பதிவர் சந்திப்பின் எனது புகைப்படங்கள்
  http://valaimanai.blogspot.com/2010/06/blog-post.html)

  ReplyDelete
 18. ஒரு வாரமா பதிவர் உலகத்துல நடந்த வெட்டுகுத்துக்கு நான் கூட எதிர்பார்த்தேன் இந்த தடவ பதிவர் சந்திப்புல தகர டப்பா உருளும்னு ,
  ஆனா சப்புன்னு போய்டுச்சு.

  ReplyDelete
 19. நம் பதிவர் சந்திப்பில் உளவு பார்த்தவர்கள்.

  1,பெண் காவல்துறை இன்ஸ்பெக்டர் தன் ஜீப்பில் வந்து , நம் கூட்டத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கி கிளம்பினார்.

  2, காற்றாடிகள் நிறைய பறந்தன, அதில் காமெரா இருக்கும் என்று நம்பப்படுகிறது.

  3.ஹெலிகாப்டர் ஒன்று தாழ பறந்தது.

  4,மிக முக்கியமாக வடிவேலு நடித்த படத்தில் ,வடிவேலு தான் தீவிரவாதி என பின்லேடன் ரேஞ்க்கு பேசுவார், எதிரே பேசி கொண்டிருப்பது உளவுதுறை ஜ.ஜி என தெரியாமல்.

  அந்த ஜ.ஜியாக நடித்தவர் நம் பதிவர் சந்திப்பின் அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் , நம்மையும் பார்த்து கொண்டிருந்தார்.

  ஆக, உளவுதுறை பதிவர்களை உற்று நோக்கி கொண்டிருக்கிறது..

  ReplyDelete
 20. //எப்போதும் போல் இந்த மெரினா பதிவர் சந்திப்பும் சேவல் பண்ணை கூட்டமாகவே இருந்தது..//
  :)

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பு தகவல் படங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 22. அண்ணே கலக்கள் பதிவு,நான் வரும் போதும் இப்படி கூட்டி போங்கண்னே

  ReplyDelete
 23. பதிவர்களின் சந்திப்பை மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் மிகவும் அருமை . பகிவுக்கு நன்றி

  ReplyDelete
 24. கலக்கலான சந்திப்பு; படங்கள் அருமை. சாலையில் செல்லும்போது கவனமாக இருங்கள் ஜாக்கி.

  உங்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 25. ம்ம்.. கடற்கரை சுண்டலுடன் நடந்த சுவாரசியமான வலை பதிவர் சந்திப்பின் விளக்கம் அருமை! அடுத்த முறை நானும் உங்களோடு கலந்துக்கொண்டால் கண்டுக் கொள்வீர்களா மிஸ்டர் ஜாக்கி அண்ணா? சுண்டலும் வாங்கி தரனும் சரியா?

  ReplyDelete
 26. வினவு குழுவை சேர்ந்த ‘தளபதி’ என்ற தோழரும் பதிவர் சந்திப்பிற்க்கு வந்திருந்தார். ஆனால் தான் ஒரு வாசகன் என்று மட்டும்தான் என்று தெரிவித்தார். அவர் வினவு குழுவை சேர்ந்தவர் என்பது, டீக்கடையில் அவருடன் சூடான விவாதம் செய்த போதுதான் தெரிந்தது. சில ஆண்டுகள் முன்பு இளம் கவிஞர் சங்கர ராமசுப்பிரமண்யன் எழுதிய ஒரு (ஈராக் போர் பற்றிய) கவிதையின் ‘அரசியல்’ பற்றி ‘விளக்கம்’ கேட்க அவருடைய வீட்டினுள் அத்திமீறி நுழைந்து, அவரை மிரட்டி ம.க.இ.க அலுவலகத்திற்க்கு ‘அழைத்து’ சென்ற விவகாரம் குறித்து சூடான விவாதம். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும் கலந்து கொண்டார். தோழர் தளபதி அந்த அத்துமிறலை நியாயப்படுத்தினார். புதிய ஜனனாயகம் இதழில் திருமாவின் பொறுக்கி அரசியல் என்று எழுதியதற்க்காக, ’அறச்சீற்றம்’ அடைந்த வி.சிறுத்தைகள் சிலர் ம.க.இ.க அலுவலகத்தில் நுழைந்து ‘விளக்கம்’ கேட்டதை ஒப்பிட்டேன். அது தவறு என்றால், இவர்கள் ச.ர.சுப்பிரமண்யன் விசியத்தில் செய்ததும் தவறுதான். அல்லது இரண்டும் சரிதான். ஒன்றை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்றேன். இல்லை என்றார்.

  மேலும் அ.மார்க்ஸின் செய்ல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அறிவுஜீவிகளின் ‘வெறுப்பை’ பற்றி பேசினார். செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். கவனிக்கவும். தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. கமிட்டி முடிவு செய்யும் என்றார். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு.

  சுகுணா திவாகர் உங்களின் உண்மையான ’தோழர்’. அவரை போய் இப்படி தாக்குதவது மூடத்தனம் என்றேன். மிக முக்கியமாக, அவர் வேலை செய்யும் பத்திர்க்கையின் பெயர் மற்றும் சுகுணாவின் இயற்பெயரை வேண்டுமென்றே உங்கள் பதிவில் சுட்டிக்காட்டி அவருக்கு வீண் பிரச்சனை செய்ய முயல்கிறீர்கள். இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றேன். பைத்தியாரன் வேலை செய்யும் துறை பற்றி அவருக்கு ஒரு முறை பின்னூட்டம் இட்ட போது, வேண்டாம் என்று அவர் என்னை தடுத்தார். ஆனால் சுகுணாவிற்க்கு மட்டும்….

  கிட்டதட்ட இரண்டு மணி நேரம் விவாதம். நேரமாகிவிட்டதால் விடை பெற்றேன்.
  வினவு குழு ‘தோழர்’ ஒருவரை முதன் முறையாக நேரில் சந்தித்த ’பாக்கியம்’.
  இவர் என்ன ’பெயரில்’ அங்கு ’பின்னூட்டம்’ இடுகிறவர் என்று யோசித்தபடியே வீடு திரும்பினேன்.

  ReplyDelete
 27. intha pathivar santhippu enga eppa nadakuthunu soneengana oru naal vara vasathiya irukum

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner