பூர்ணகும்ப, முதல்மரியாதை கேட்கவில்லை...

3 நாட்களுக்கு முன் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரண்டாயிரம் பேருடன் விபத்தில் இருந்து தப்பியது.. அந்த விபத்து ஏற்படாமல் தப்பியதற்க்கு மிக முக்கிய காரணம்....

தகவல் தெரிவித்த கார்டு ராஜசேகரன்

ரயில் டிரைவர்கள் கோபிநாத்,ராஜ்குமார்
முண்டியம்பாக்கம் ரயல் நிலைய அதிகாரி தூக்காரம் ஆகியோர் தங்கள் கடமைகளை திறம் படசெய்தார்கள்... அவர்களுக்கு அரசு ஐந்தாயிரம் வழங்கியது...

கடமை செய்யாத நாட்டில் கடமை செய்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.. அதே போல் இவ்வளவுதான் தொகை கொடுக்க வேண்டும் என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை...

ஐந்தாயிரம் கொடுப்பதற்க்கு பதில் இருக்கவே இருக்கின்றது ஒரு சால்லைவயும் சர்டிபிகேட்டும் என்று எழுதி இருந்தேன்...

ஜாக்கி ஏதோ ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் எழுதி இருப்பதாக... எனக்கு அந்த கட்டுரைக்கு வந்த எதிர் விமர்சனங்கள் சொல்லியது..

அந்த கட்டுரை எல்லா சாதக பாதகங்களையும் அலசியது...நான் அவர்களுக்கு அதை கொடு இதை கொடு என்று சொல்லவில்லை அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றேன்....

பாராட்டுவிழாவுக்கு தமிழ்நாட்டில் சொல்லியா கொடுக்க வேண்டும்..? அது நமது முதல்வரை கேட்டாலே அழகாக சொல்லிவிடுவார்...பெண்சிங்கம் படத்துக்கு பிரியூவிற்க்கு நேரம் செலவிடும் முதல்வர்...மத்திய அரசு கட்டுபாட்டில் இரயில்வே துறையில் அவர்கள் இருந்தாலும்... அந்த விபத்து நிகழ்ந்து இருந்தால் மாநில அரசுக்கு மிக பெரிய தலைவலியை உண்டாக்கி இருக்கும்...அதில் பயணபட்டவர்கள் அனைவரும் நமது மாநிலத்தவர்கள்...

விபத்து தவிர்க்க காரணமாக இருந்த அந்த நால்வரின் குடும்பத்தையும் அழைத்து ஒரு இரவு தேநீர் விருந்து அளித்து இருக்கலாம்... முதல்வரால் முடியவில்லை என்றால் துணை முதல்வர் இருக்கவே இருக்கின்றார்... அந்த குடுமபம் எவ்வளவு சந்தோஷபடும்....

அந்த அங்கீரத்தைதான் நானும் டாக்டர் புருனோவும் தொடர்ந்து கேட்டு வருகின்றோம் ...


எல்லா நாட்டிலும் ஊக்கதொகை என்பது காலம் காலமாக இருக்கும் விஷயம்தான்.. ஆனால் 5000 என்பது மிக குறைந்து தொகை...சிலரின் வாதம் அதை கொடுத்து கொடுத்துதான் அவர்களை கெடுத்து விடுகின்றோம்....அவர்கள் குட்டிசுவராகபோய் வடுவார்களாம்.. இப்ப மட்டும் நாட்டில் பாலாறும் தேனாறுமா? ஓடிக்கொண்டு இருக்கின்றது...

எல்லோரும் படிக்கின்றார்கள்...அப்புறம் எதுக்கு அவர்களுக்குள் ஏகிரேடு பிகிரேடு என்று பிரிக்க வேண்டும்...அப்படி பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு... தினத்தந்தி தூக்க முடியாமல் தூக்கி பத்தாயிரம் ஏன் கொடுக்க வேண்டும்....


சரி கேள்வி கேட்ட அத்தனை புண்ணியவான்களுக்கும் ஒரு கேள்வி...நீங்கள் ஒரு வேலையில் சேர்கின்றீர்கள்... மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்...உங்கள் கடமைக்கு அந்த சம்பளம் என்றால் அடுத்த வருடம் எதற்கு புரோமோஷன் இன்கிரிமேன்ட் எதிர்பார்க்க வேண்டும்... நீங்கள்தான் கடமையை மட்டும் செய்பவர்கள் ஆயிற்றே...பத்தாயிரத்தை பல வருடங்களுக்கு வாங்க வேண்டியதுதானே... எனக்கு அங்கீகாரம் இல்லை என்று ஏன் கம்பெனி மாற வேண்டும்....

பொட்டிதட்டும் உங்களுகே அப்படி என்றால் பலவிலை மதிக்கமுடியாத உயிரை காப்பாற்றியவர்களுக்கான அங்கீகாரம் குறைவு என்பதுதான் என்வாதம்...அவர்கள் நாலவருக்கும்.. ரேட்கார்பெட் வரவேற்ப்பு கொடுத்து, தாரை தப்பட்டை, பொய்கால் குதிரை ஆட்டம்,மாண் ஆட்டம்,மயிலாட்டம், எல்லாம் கேட்கவில்லை

just one cup of coffee with prime minister or chief minister... அதுதான் தட்டிக்கொடுத்தல்...ஆனால் பிரைம்மினிஸ்டர் இந்த பிரேமில் வர வாய்ப்பில்லை... அவரை பொறுத்தவரை தமிழ்நாடு தனி நாடு போலான மனநிலையை கொண்டவர்... இதுவே வடமாநிலத்தில் இந்த சம்பவம் நடந்து இருந்தால் மீடியாக்கள் ஈரை பேனாக்கி,பேனை பெரியவர் ஆக்கி இருப்பார்கள்...ஆனால் தமிழ் நாட்டில் பொதுவாக இது போலான அங்கீகாரம் என்பது குறைவுதான்...

கிரிக்கெட் விளையாடி விட்டு தாயகம் திரும்பினால் கால் கடுக்க ஏர்போர்ட் வாசலில் நின்று வாழ்த்து சொல்வார்கள்...

இரண்டு ஆஸ்கார் வாங்கி வந்தால் கொண்டடுவார்கள்...

மத்திய மந்திரி கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளிநாடு போய்விட்டு வந்தால் ஏர்போர்ட் அல்லலோபடும்...

நடிகரின் புதுபடத்துக்கு முதல்நாளில் இரவில் இருந்து... கொடிகட்டிவிட்டு மறுநாள் பால் அபிஷேகம் எல்லாம் செய்வோம்...கையில் கற்புரம் ஏற்றி திரைக்கு காட்டுவோம்...


முதல்வர் கோபலபுரத்தில் இருந்து கிண்டிக்கு போனாலே அதை வரவேற்க்கவும் அதனை வாழ்த்தவும் எத்தனை மாவட்டமும்,வட்டமும் பாடுபடும்....

முன்னாள் முதல்வர் அவர் கட்சி ஆபிசுக்கு போனாலே அது திருநாள்தான்....

ஆனால் சமயோஜிதமாக செயல்பட்டு பல உயிரை காப்பாற்றியவர்களுக்கு..????? ...


நமதுநாடும் நாட்டு மக்களும் அப்படிபட்டவர்கள்தான்....

நேற்று நண்பர் பாஸ்டன் ஸ்ரீராமோடு பேசிக்கொண்டு இருக்கும் போது இந்த விஷயத்தை பற்றிய பேச்சு வந்தது...

போனவருடம் விமானத்தில் கோளறு ஏற்பட்டு விமானி சாதுர்யமாக அந்த ராட்சத போயிங் விமானத்தை ஆற்றில் இறக்கி எல்லோர் உயிரையும் காப்பாற்றிய விமானியை ஒயிட் ஹவுசுக்கு அவரையும் அவர்குடும்பத்தையும் வர வழித்து.. அவருடன் ஒரு பியருடன் இரவு உணவை எடுத்துக்கொண்டு இருக்கின்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.....

ஒயிட் ஹவுஸ் பக்கம் போவதே பெரியவிஷயம்... அதுவும் அதில் உள்ளே போய் நாட்டின் அதிபருடன் சரிநிகராக உட்கார்ந்து பியர் சாப்பிடுவது என்பது எவ்வளவு புல்லாரிப்பான, மகிழ்வான விஷயம்... அந்த விமானிக்கும் அந்த குடும்பத்துக்கு எவ்வளவு சந்தோஷத்தை அது கொடுக்கும்....அதைதான் நான் இந்த நால்வருக்கும் கேட்கின்றேன்..

ஒரே ஒரு உயிர் ஆழ்கிணற்றில் மாட்டிக்கொண்டாலே... அதனை மீட்க இரவுபகல்பாராமல் ஆண்டவனை வேண்டி அந்த உயிர் காப்பாற்றபட வேண்டும் என்று தொலைகாட்சி முன் காத்து இருக்கின்றோம்.. ஆனால் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு...வெறும் ஐந்தாயிரம் பேஷ் பேஷ் நன்னாருக்கு...இது

எவ்வளவோ அரசுசார அமைப்புகள் இந்தியாவில் இருக்கின்றன...அவைகள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்...


இந்த அங்கீகாரத்தைதான் நான் அந்த நால்வருக்கும் எதிர்பார்க்கின்றேன்...நடக்குமா?

அந்த கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக்கவும்...


அந்த கட்டுரையில் ஒரு 30 பேர் கமென்ட் போட்டு இருக்கின்றார்கள் என்று வைத்துகொள்வோம்....அதில் 3 பேர் மட்டும் உணர்ச்சிவசபடாமல் பின்னுட்டம் இட்டு இருக்கின்றார்கள்...

மற்ற 27 பேரும்... என்னையும் சேர்த்து பார்த்தால்.. நாங்கள் எல்லாம் உணர்ச்சிவசபட்டு இருக்கின்றோம்...

நல்லது இருந்துவிட்டு போகின்றோம்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம்...41 comments:

 1. கடமையைச் செய்தவர்களுக்கு வெகுமதி என்றால் செய்யாமல் விடுபவர்களுக்கு தூக்குன்னு கோரிக்கை வராதா ?
  :)

  இப்படித்தான் வீரப்பனைச் சுட்டார்கள் என்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து பாராட்டுவிழாவும், நிலபட்டா உட்பட கொடுக்கப்பட்டது, அனைத்தும் பொதுமக்கள் சொத்து, வீரப்பன் வேட்டை என்று பிடித்துச் செல்லப்பட்டு சித்திரைவதைக் குள்ளாக்கப்பட்டவர்களுக்கு ஒண்ணும் பெயறவில்லை.

  *****
  வெடிகுண்டு வெடித்தது என்ற தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் ரயிலை ஏன் மெதுவாக இயக்கி குண்டு வெடித்த இடம் வரைக்குச் சென்றார்கள் ? - நான் கேட்கவில்லை சீமான் கேட்கிறார்.

  ReplyDelete
 2. உணர்ச்சி வசப்படாம இருக்கனுமுன்னா இயல்பை மீறனும் - அதுவும் ஒரு உணர்ச்சி வசப்படல் தான்

  ----------

  நிச்சியமாய் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

  ReplyDelete
 3. kutham solravanga ethavthu sollitu than irupanga jackie....leave it...

  unga karuthuku enoda 100% aatharavu kandipa undu!!!

  ReplyDelete
 4. //விபத்து தவிர்க்க காரணமாக இருந்த அந்த நால்வரின் குடும்பத்தையும் அழைத்து ஒரு இரவு தேநீர் விருந்து அளித்து இருக்கலாம்... முதல்வரால் முடியவில்லை என்றால் துணை முதல்வர் இருக்கவே இருக்கின்றார்... அந்த குடுமபம் எவ்வளவு சந்தோஷபடும்...//
  Correct Jackie..

  ReplyDelete
 5. Are you saying we must reward a driver who stops the train in a signal !!!! Because he save thousand of passenger by stopping the train in a signal !!

  ReplyDelete
 6. Are you saying we must reward a driver who stops the train in a signal !!!! Because he save thousand of passenger by stopping the train in a signal !!

  ReplyDelete
 7. நண்பர் கோவிக்கு விரப்பன் மேட்டர் வேறு.. இந்த மேட்டர் வேறு...

  வெடிகுண்டு வெடித்ததாள் சொல்லவில்லை... டிராக்கில் அதிர்வூ ஏற்பட்டது உணர்ந்ததாக சொல்லபட்டது... (எனக்கு தெரிந்த வரை..)

  ReplyDelete
 8. ஏன் ஜாக்கி,ஒரு வேளை இந்த விபத்துக்கு (?!)ரூ 5000 போதும் என்று நினைத்திருப்பார்களோ.?

  ReplyDelete
 9. உணர்ச்சி வசப்படாம இருக்கனுமுன்னா இயல்பை மீறனும் - அதுவும் ஒரு உணர்ச்சி வசப்படல் தான்

  ----------

  நிச்சியமாய் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.//

  உண்மைதான் ஜமால் நீங்கள் சொல்வது..

  ReplyDelete
 10. நன்றி விஜய் ஆனந்..

  ReplyDelete
 11. அதெப்படி ஜாக்கி வீரப்பன் மேட்டரும் இதுவும் வேறாகும்.?

  கடமையை செய்தற்கே அள்ளி கொடுத்தவங்க,எந்த தவறும் செய்யாமல் 8 வருடங்களுக்கு மேல் மைசூர் சிறையிலும்,தமிழகத்தின் இன்னபிற சிறைகளிலும் வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு கொடுக்க மறுப்பதேன்.?

  அதைத்தான் கோவியார் கேட்கிறார். க்டமை செய்தவனுக்கு அள்ளி கொடுப்பதை தவறென்று சொல்லவரவில்லை.ஆதே நேரத்தில் பாதிக்கப்பட்டவனுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொன்னால் எப்படி அது வேறு இது வேறு சொல்லமுடிகிறது உங்களால்.?

  ReplyDelete
 12. நன்றி 23சீ

  நன்றி பன்னிகுட்டி ராமசாமி..

  நன்றி அரவிந்தன்..

  ReplyDelete
 13. வீரப்பன் வேட்டை என்று பிடித்துச் செல்லப்பட்டு சித்திரைவதைக் குள்ளாக்கப்பட்டவர்களுக்கு ஒண்ணும் பெயறவில்லை.//

  உண்மைதான் அரவிந்... நான் அந்த பதத்தில் சொல்லவில்லை..

  ReplyDelete
 14. அரவிந்... போபால் தீர்ப்பு ஒன்ன போதும் நம்மை இவர்கள் அடிமைகளை போல் நடத்துகின்றார்கள்,
  என்பதற்ககு

  ReplyDelete
 15. Jackie,

  Ithukellam namma ooral ankikaram kedaikumaa...

  Pen singam padam pakka poi irunthanganna oru kilo thangam illana oru car-vathu keadaichi irukkum...

  ReplyDelete
 16. ரொம்ப கோவமாய் இருக்கீங்க போல....

  ReplyDelete
 17. நியாயமான ஆதங்கம் ஜாக்கி. 5000 மிகக் குறைவான அன்பளிப்பு. பாராட்டு விழாவெல்லாம் கூட வேண்டாம். பாராட்டினாலே போதும்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 18. ஏங்க ஜாக்கி,

  இதெல்லாம் கிடைக்குமுன்னு நெஜமாவே நம்புறீங்களா?

  இந்தியாவில் விலை மதிப்புன்னு ஒன்னுமே இல்லாதது உயிர்கள்தான்:(

  ப்ச்.....என்னவோ போங்க....

  ReplyDelete
 19. I support your point Jackie and as well as Kovi's point. The people who avoided an accident and saved people has to be rewarded.

  ReplyDelete
 20. ஒவ்வொரு வரியும் ஐவரி.

  உதவி கலைஞர்

  ReplyDelete
 21. Hai Mr Sekar...
  Wat ever u r saying is 100% rite.. i too your party.. keep rocking na.. yevan yenna seivannu pakkalam. ivanuka antha trian la irundiruntha teriyum valiyum vethanaiyum.

  ReplyDelete
 22. Hai Mr Sekar...
  Wat ever u r saying is 100% rite.. i too your party.. keep rocking na.. yevan yenna seivannu pakkalam. ivanuka antha trian la irundiruntha teriyum valiyum vethanaiyum.

  ReplyDelete
 23. ஜாக்கி அண்ணா,
  தட்டி கொடுத்தல் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் முன்னேற தூண்டு கோலாக இருக்கும். அதனாலதான் பரிசு கொடுக்கறாங்க. பணம் தவிர நாலு நல்ல வார்த்தைகளும், ஒரு கிளாஸ் டீயும் கூட அவர்களுக்கு தூண்டுதலாக இருக்கும். என் நண்பன் ஒருவன் திரு.அப்துல் கலாம் அவர்களுடன் எடுத்த போட்டோவை பார்க்கும் போதெல்லாம் அடையும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நமது தலைவர்கள் இவர்களையும் கொஞ்சம் சந்தித்து பேசலாம். அவர்கள் தங்கள் வேலையை இன்னும் சிறப்பாக செய்வார்கள்.

  கடமையை செய்தவர்களுக்கு வெகுமதி அளிப்பது பற்றி இங்கு பேசவில்லை. தங்கள் கடமையில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் எப்படி அதை சமாளித்து, பொது மக்களின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறார்கள். எல்லா தனியார் அலுவலகங்களிலும் முக்கியமான பிரச்சினைகள் வரும்பொழுது அதை சமாளிக்கும் அலுவலர்க்கு தனியாக பரிசுகள் அளிக்கப்படும், இன்க்ரிமென்ட் கூட அதை பொறுத்துதான்.

  உயிர் காத்த அவர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும்.
  நன்றி

  ReplyDelete
 24. முந்தைய பதிவிற்கான எதிர்வினைகளுக்கான பதிலாக உங்கள் வாதம் வலு ஊட்டுகிறது.

  ஆனால் தேநீர் குடிக்க வாங்கன்னு கூப்பிடுவதில் யதார்த்தமில்லை.

  லாப கணக்கு பற்றி சொல்லுங்க அப்புறம் டீ கடைய பற்றி யோசிக்கலாம்.

  ReplyDelete
 25. protocol னு ஒரு இழவு இருக்கு ஜாக்கி. அது படுத்தற பாடு இருக்கே. அதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு வேளை இவர்களிடம் நீங்கள் நேரடியாக உங்கள் ஆதங்கத்தைச் சொல்ல வாய்ப்பிருக்குமாயின் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா ஜாக்கி. “சார்! உங்களுக்கு புண்ணியமா போகும். எங்களுக்கு பாராட்டும் வேணாம் ஒன்னும் வேணாம். ஆள விடுங்க சாமி என்பது”. லைஃபு டார்ச்சராயிரும் அவிங்களுக்கு:))

  ReplyDelete
 26. // இப்ப மட்டும் நாட்டில் பாலாறும் தேனாறுமா? ஓடிக்கொண்டு இருக்கின்றது... //

  நியாயமான கேள்வி.. 5000 வெகுமதி அதிகம் என்றோ, தேவையில்லை என்றோ நினைப்பவர்களுக்கு, பதில் சொன்னாலும் புரியாதுன்னுதான் நினைக்கிறேன்..

  ReplyDelete
 27. //வெடிகுண்டு வெடித்தது என்ற தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் ரயிலை ஏன் மெதுவாக இயக்கி குண்டு வெடித்த இடம் வரைக்குச் சென்றார்கள் ? - நான் கேட்கவில்லை சீமான் கேட்கிறார்//

  இந்த சம்பவமே ஒரு மத்திய உளவுத்துறையால் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்று பல ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்புகின்றன. அவர்களின் ஊகங்களும் நியாயமாகவே படுகிறது.

  இப்போது காங். பிரமுகரும் ராஜபக்‌ஷே ந்ண்பருமான அசன் அலிக்கும் இதில் தொடர்பு உண்டு என்றும் செய்திகள் வருகின்றது.

  ReplyDelete
 28. //Are you saying we must reward a driver who stops the train in a signal !!!! Because he save thousand of passenger by stopping the train in a signal !!//

  அவர் அப்படி சொல்லவில்லை
  அவர் என்ன சொல்ல வருகிறார் என்று உங்களுக்கு இப்பொழுது கூட புரியவில்லை என்றால் இதற்கும் மேலும் உங்களுக்கு புரியவைக்க முடியாது என்றே நினைக்கிறேன்

  ReplyDelete
 29. //Are you saying we must reward a driver who stops the train in a signal !!!! Because he save thousand of passenger by stopping the train in a signal !!

  //

  சிக்னலில் நிற்பாட்டுவது கடமையை செய்வது

  இங்கு தொடர்வண்டி நின்ற இடத்தில் சிக்னல் எதுவும் இல்லை அல்லவா

  அதற்குத்தான் பாராட்டு

  புரிகிறதா

  ReplyDelete
 30. இந்த செயலுக்கு ஐந்தாயிரம் மிக குறைந்த தொகை.
  ஒரு பேச்சுக்கு விபத்து நடந்திருந்தால், நஷ்ட ஈடாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து எத்தனை கோடிகள் போயிருக்கும் ?
  அதை தடுத்ததற்க்காகவாவது இவர்களை பாராட்டி கூடுதல் தொகை கொடுத்திருக்கலாம்.

  இந்த செயலுக்கு ஐந்தாயிரம் மிக குறைந்த தொகை.
  ஒரு பேச்சுக்கு விபத்து நடந்திருந்தால், நஷ்ட ஈடாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து எத்தனை கோடிகள் போயிருக்கும் ?
  அதை தடுத்ததற்க்காகவாவது இவர்களை பாராட்டி கூடுதல் தொகை கொடுத்திருக்கலாம்.

  நம்ம அரசியலே இப்படிதாண்ணே...

  ReplyDelete
 31. they will be recognized well soon, dont worry boss.

  when r you going to write Raavanan film review.

  ReplyDelete
 32. உடன் படுகிறேன் ஜாக்கி..
  அவங்களுக்கு பணம் கொடுப்பது / கொடுக்காமலிருப்பது - ரூல்ஸ் படி நடக்கட்டும்.

  அவர்களை முதல்வரோ துணை முதல்வரோ வீட்டுக்கு அழைத்து ஒரு தேநீர் விருந்து அளித்து விசயம் பேப்பரில் வந்தால் - அவர்களுக்கு கௌரவம் மற்றும் அங்கீகாரம். மற்றவர்களுக்கும் நாமும் இது போன்று செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும்.

  ரெண்டு நிமிசம் குப்பையை சுத்தப் படுத்திவிட்டோ அல்லது ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு ஒரு பையனின் கல்விக்கு உதவி செய்துவிட்டோ பெரிசா பேப்பர்ல போட்டுக்குற அமைப்புகள்ல ஒண்ணு இவங்களுக்கு ஒரு பாராட்டு விழா வச்சு பேப்பர்ல போட்டா கொறஞ்சா போயிடுவாங்க??

  உயிரை பணயம் வச்சி மும்பையை காப்பாத்தின கமேண்டோக்களுக்கே விழா எடுக்காதவங்க நாம.. இதுக்கெல்லாம் போயி......

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 33. நீங்கள் சொன்னது நிஜம் ஜாக்கி அண்ணா. பணமாக கொடுக்காவிட்டாலும் கவுரவத்தை கொடுக்கலாம்.

  ReplyDelete
 34. உணர்ச்சி வேகத்தில் எழுதியதாக தெரியவில்லை.
  ஆதங்கத்தில் எழுதியதாக தெரிகிறது.
  அழுத்தமான பதிவு. ஆழமான கருத்துக்கள்.

  ReplyDelete
 35. நீர் சொன்ன எல்லாம் சரி ஒத்துக்கொள்கிறேன் ஜாக்கியண்ணே. அது என்ன ஒரு வார்த்தை
  //பொட்டிதட்டும் உங்களுகே அப்படி என்றால் //

  பொட்டிதட்டுறது என்ன அவ்வளவு ஈஸியான வேலையா. எவ்ளோ கஷ்டம், எவ்வளவு மன் அழுத்தம் தரும் வேலை தெரியுமா??
  எண்ணத்தை மாத்திக்குங்க. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறோம். நன்றி

  ReplyDelete
 36. இரண்டு பதிவும் இப்போதுதான் படித்தேன்.


  /
  அவர்களை முதல்வரோ துணை முதல்வரோ வீட்டுக்கு அழைத்து ஒரு தேநீர் விருந்து அளித்து விசயம் பேப்பரில் வந்தால் - அவர்களுக்கு கௌரவம் மற்றும் அங்கீகாரம். மற்றவர்களுக்கும் நாமும் இது போன்று செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும்.
  /

  மிகவும் சரி

  ReplyDelete
 37. நியாயமான எதிர்பார்ப்புகள்

  ReplyDelete
 38. நண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம். முதல் தடவை என் கருத்தை பதிகிறேன். உங்கள் எல்லா பதிவுகளிலும் சாமானியனின் கோவம் இருக்கும். போபால் விஷ வாயு கேஸ் பற்றிய பதிப்பில் உங்கள் ஆதங்கமும் அந்த சம்பவத்தை பற்றிய ஆழ்ந்த புரிதலும் கண்டேன். ஆனால் இந்த சம்பவம் பற்றி வெறும் மேலோட்டமாக நீங்கள் எழுதி உள்ளது போல் தோன்றுகிறது.வேறொரு கண்ணோட்டத்தில் இந்த (திட்டமிட்ட) சம்பவத்தை பதிவிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
 39. திரு ஜாக்கி அவர்களுக்கு ,உங்களுடைய முந்தைய பதிவில் சம்பந்த பட்ட ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு பணம் குறைவு இன்னும் அதிகமாக கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் . அவ்வாறு அதிகமாக பணம் கொடுப்பது தவறு என்று தான் கூறி இருந்தேனே தவிர சம்பந்தப்பட்டவர்களை பாராட்டவோ , கெள்ரவிக்கவோ கூடாது என்று கூறவில்லை. குவாட்டர் பிரியானிகெல்லாம் வோட்டை விற்பவர்கள், உயிர் காக்கும் மருந்தில் கூட கலப்படம் செய்து பணம் பண்ணுபவர்கள் நாம் . அறிய வாய்ப்பை நழுவ விடுவோமா? இது போன்று பணம் கொடுக்க ஆரம்பித்தால் இதற்காகவே பல குண்டு வெடிப்பு தடுப்பு சம்பவங்கள் அரங்கேறாதா? முந்தைய பதிவில் உணர்சிவசபட்டதை விட மிக அதிகமாகவே உணர்ச்சி வசப்பட்டு தான் இந்த பதிவையும் எழுதி உள்ளீர்கள் . சற்று நிதானமான மனநிலையில் உங்களது இந்த இரு பதிவுகளையும் , இதற்க்கு வந்த அந்த மூன்று எதிர்மறையான விமரிசனங்களையும் படித்து பாருங்கள். உண்மை புரியும்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner