பெண் சுதந்திரம்... 2010(கவிதை)


உணவகம் நில்லா
விரைவு பேருந்து
பொட்டல் வெளியில்
வேகம் குறைத்து நின்றது...

ஓட்டுனரும்,நடத்துனரும்
அவசரமாய் இறங்க...
(குறி)யீட்டை
புரிந்து கொண்டு

சில ஆண்களும் இறங்கினர்...
எனை ஏதும் கேட்காமலே
என் கணவரும் இறங்கினார்...


பெண்கள் ஒருவரும் இறங்கவில்லை
சிலர் புடவை தலைப்பு
கலைந்து தூங்கினர்
சில பெண்கள்
இறங்கிய ஆண்களை
வெறித்து பார்த்தனர்...

பேருந்தின் பின்புறத்தை
கட்டணமில்லா கழிவறையாக்கினர்..
இறங்கிய ஆண்கள்...


ஒரு சில ஆண்கள்
முகத்தில் தீர்வு கண்ட
பரவசத்துடன்
பேண்டில் சிந்திய
சிறுநீரைதட்டியபடி
பேருந்து
படிகளில் ஏறினர்...

ஒரு மணிநேரத்துக்கு மேலாக...
உள்பாவாடை
நனையும் பயத்தில்

சிறுநீரை
அடக்கி கொண்டு
பயணிப்பது
யாருக்கு தெரியபோகின்றது...


பேருந்து
மேடு
பள்ளங்களில்
பயணிக்கும் போது

சிறுநீர் வந்து விடுமோ?என்று
மனம் முழுவதும்

பயத்தோடும்
வேதனையோடும்
பயணிப்பதை
ஆண்வர்க்கம் அறியுமா?


எல்லாவற்றிலும்
சரிபாதியாய்

என்னோடு பயணிக்கும்
என் கணவனுக்கே...
என் நிலை புரியாத போது,
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்
எப்படி புரியும்????

ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க முடியாது என
பொது இடத்தில்
பேசும் தைரியம்..
.


எந்த இடத்திலும்
ஜிப்பை அவுத்துக்கொள்ளும்
சுதந்திரம் உள்ளவர்களுக்கு
எப்போதுதான் புரிய போகின்றது...

நாங்களும்
ரத்தமும் சதையுமான
கழிவுஉறுப்புகளை கொண்ட
மனிதபிறவிகள் என்று....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம் அமைச்சரே...

45 comments:

 1. அருமையான கவிதை பதிவு...

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

  ReplyDelete
 2. நிறைய எழுத்துப்பிழைகள்... கொஞ்சம் சரி பண்ணுங்க...

  ReplyDelete
 3. கஸ்டம்தான் நண்பரே....கவிதை நல்லா இருக்கு...

  ReplyDelete
 4. Jackie sir,....

  Kavithai nalla irrukku.....

  ReplyDelete
 5. சரிதான் நண்பரே...
  நல்லா வாழ்த்துக்கள் தொடருங்கள்...

  ReplyDelete
 6. நல்லா இருக்கு அண்ணே

  ReplyDelete
 7. the way you presented is really good. keep doing such nice work....

  ReplyDelete
 8. Females can go in a distant place and urinate.

  Nothing wrong or shame in that.

  ReplyDelete
 9. அருமையான கவிதை பதிவு.

  நன்றி குரு..

  ReplyDelete
 10. நன்றி இளங்கோவன் சரி பண்ணிட்டேன்

  ReplyDelete
 11. jackie anna,

  Super ......//

  நன்றி வைத்தியா..

  ReplyDelete
 12. நன்றி ரோமியோ

  நன்றி மங்களுர் சிவா,

  ReplyDelete
 13. the way you presented is really good. keep doing such nice work....

  நன்றி கனவு

  ReplyDelete
 14. ரொம்ப ரொம்ப சரி. எங்க அம்மா ஒரு தடவ பட்ட கஷ்டத்துல கண்ணுல தண்ணீயே வந்திடுச்சி

  ReplyDelete
 15. nice post, i think u must try this website to increase traffic. have a nice day !!!

  ReplyDelete
 16. You are wrong.... Now days wherever they stop the bus, there is a toilet.
  If girls do not want to piss, why do we pissed off ?

  ReplyDelete
 17. //சரி அம்மாவோட் பேருந்துல போறிங்க அவிங்க சுகர் பேஷன்டா இருந்தா? நீங்க சொல்லற வாதம் பொறுந்துமா?//


  என்ன செய்யலாம் என்கிறீர்கள் ஜாக்கி.

  1) பெண்களின் சுதந்திரம் அவர்களின் குறியின் வடிவமைப்பில் கட்டுண்டு போய்விட்டதென்கிறீர்களா?

  2) இல்லை அதையும் புரிந்துகொள்ளவேண்டும் இந்த ஆண் வர்க்கம் என்கிறீர்களா?

  முதலாவது எனில் என் கண்டனங்கள்
  இரண்டாவதெனில் என் கேள்வி இது தான் "என்ன செய்யலாம்?"

  ஆண்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதையே நாம் வெறுக்கும் இத்தருணத்தில் ஆண்களுக்கு அது ஒரு சுதந்திரம் எனவும் பெண்களுக்கு அது இல்லை என்பது போலவும் வடிவமைத்திருக்கும் இக்கவிதையில் நான் எதை எடுத்துக்கொள்வது.

  ReplyDelete
 18. //சரி அம்மாவோட் பேருந்துல போறிங்க அவிங்க சுகர் பேஷன்டா இருந்தா? நீங்க சொல்லற வாதம் பொறுந்துமா?//

  please go in train. this should be the solution jockey.

  ReplyDelete
 19. ஒருவன் முட்டாளாக, இருப்பதற்கு யார் காரணம்? முதல் காரணம் அவன் தான்...

  பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறினால்... அந்த முட்டாள்தணத்துக்கு யார் காரணம்? அவள்தான்...

  முட்டாளாகவே பிறந்து, முட்டாளாகவே வளர்ந்து, முட்டாளாகவே சாகும் இந்த அர்ப்ப ஜென்மத்துக்கு, நான் ஏன் கவலைப்படனும்?

  அடிமைகள் இங்கே தேவையில்லை...

  நீங்கள் எழுதியதை கவிதை என்று கூறாதீர்கள்...

  கவிதைக்கென மரபு உண்டு.

  அதை இது போண்ற வார்த்தைகளால் நாறடிக்காதீர்கள்...

  இவன், மு.இரா (என்ன? என்னை மறந்துவிட்டீர்களா?)

  ReplyDelete
 20. என்னுடைய பின்னூட்டம் ஏற்றுகொள்ள படுமா? ஜாக்கி உங்களுக்கு பாராட்டினால்தானே.... பிடிக்கும்... ஓட்டும் போட வேணும் இல்லையா!!!?

  ReplyDelete
 21. நடு இரவு 12மணிக்கு..

  நான் நைட்டை பத்தி சொல்லலை..நைட்ல கொஞ்சம் தூரம் நடந்து போன எந்த லேடியும் சமாளிசிடலாம்... எந்தபிரச்சனையும் இல்லை...

  உதாரணத்துக்கு 4 மணிநேர பகல் பிரயானம் கடலூர்னு வச்சிங்ககிங்க..அது மாமன்டுர்ல 5நிமிஷம் நின்னு போறதுல எந்த பிரச்சனையும் இல்லை...

  சரி அப்படியே நிக்காம நேரா எங்கயும் நிக்காம கடலூர் போயிட்டாலும் யாரும் எந்த கேள்வியும் கேட்க போவதில்லை.. எந்த பிரச்சனையும் இல்லை...

  திண்டிவணத்துக்கு முன்னாடி இருக்கற டோல் கிட்ட ஒரு3நிமிஷம் அம்பளைங்க மட்டும் நின்னு ஒன்னுக்கு போக நிக்கும்...

  உங்களுக்கு அது போல் அனுபவம் வாய்த்து இருக்காது...//

  திரு என்பவர் தன் அம்மாவுக்கு நேர்ததை எழுதி இருந்தார் பாருங்கள்...

  ரொம்ப ரொம்ப சரி. எங்க அம்மா ஒரு தடவ பட்ட கஷ்டத்துல கண்ணுல தண்ணீயே வந்திடுச்சி//

  அது போலான சம்பவத்துக்குதான் இதை சுட்டி காட்டவே இது..

  ReplyDelete
 22. என்னுடைய பின்னூட்டம் ஏற்றுகொள்ள படுமா? ஜாக்கி உங்களுக்கு பாராட்டினால்தானே.... பிடிக்கும்... ஓட்டும் போட வேணும் இல்லையா!!!? ///

  இலக்கியதரம் இல்லாமல் பக்க லோக்கலாக எழுதுபவன் நான்... உங்களை போன்ற மெத்த படித்த ....படிப்பறிவும் கூட இல்லாதவன் நான்...

  நீங்கள் என்னை பாராட்டவும் வேண்டாம்... ஓட்டும் போட வேண்டாம்...

  ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்று மிரட்டியது போல் சொல்கின்றீர்கள்...

  நான் யாரையும் மிரட்டியதும் இல்லை.. யார் யார் ஓட்டு போடுகின்றார்கள் என்று கூட பார்பதில்லை....

  எனக்கு தெரிந்த வரிகளில் எழுதி அதை கவிதை என்று சொல்லி இருக்கின்றேன்...

  நீங்கள் அதிகம் தெரிந்தவர் நீங்கள் நல்ல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்...


  நீங்கள் என் பக்கத்தில் செலவிடும் நேரத்துக்கு வேறு ஏதாவது இலக்கியதரமான பக்கத்தில் நேரம் செலவிட வேண்டுகின்றேன்..

  எந்த பின்னுட்டமும் நியாயமாக இருந்தால் அது நிச்சயம் வெளியிடபடும்....  நீங்கள் விரும்பியதால் இந்த பின்னுட்டம் மட்டும.... இங்கே வெளியிடுகின்றேன்...


  உங்ளுக்கான பதிலும் இதுவே கடைசி..

  நன்றி...மு இரா

  ReplyDelete
 23. இரண்டாவதெனில் என் கேள்வி இது தான் "என்ன செய்யலாம்?"//

  இரண்டாவதுதான்...

  இரண்டு பேரும் யூஸ் பண்ணுவது போல் டாயலட் இருக்கும் ஹோட்டலில் பகல் நேரத்தில் நிறுத்த வேண்டும் என்று சொல்வதுதான் பொருள்...

  விசா...

  எனக்கு இது போலான பல அனுபவங்கள் எனக்கு இருக்கின்றது...

  ReplyDelete
 24. Females can go in a distant place and urinate.

  Nothing wrong or shame in that.
  வண்டி முதல்ல பொட்டல் வெளியில நிறுத்தி இஐருக்கறதை சொல்லிட்டேன்...


  மாமண்டூர்லயும்..டாய்லட் இருக்கற ஹோட்டல் மட்டும ஏன் அத்தனை பொம்பளைங்களும் இறங்கி போறாங்க..??

  சரி அம்மாவோட் பேருந்துல போறிங்க அவிங்க சுகர் பேஷன்டா இருந்தா? அதுவும் அது பொட்டல் வெளியா இருந்தா என்ன பண்ணறது...


  நீங்க சொல்லற வாதம் பொறுந்துமா?

  ReplyDelete
 25. //சரி அம்மாவோட் பேருந்துல போறிங்க அவிங்க சுகர் பேஷன்டா இருந்தா? நீங்க சொல்லற வாதம் பொறுந்துமா?//

  please go in train. this should be the solution jockey.//

  நண்பர் கண்ணனுக்கு...

  விரைவாய் ஒன்னுக்கு போக பிளைட்டில் கூட போகலாம்.. அதுகூட சொல்யூஷன்தான்...

  சுகர் பேஷன்ட் என்பது ஒரு பேச்சுக்கு சொன்னது...ஒரு வயது பெண்ணுக்கு ஒன்னுக்கு வந்து விட்டது...

  கூட பயணிக்கும் ஒரு ஆண் தன் உபாதையை வெட்ட வெளியில் பேருந்து நிறுத்துவதால் தீர்த்து கொள்கின்றான்.. அதையே டாயலட் இருக்கும் ஹோட்டலில் நிறுத்தினாள்...அந்த வயதுக்கு பெண்ணும் பயன்பெறுவாள் அல்லவா...

  இரண்டவது... நம் இந்தியாவில் ரயிலோ அல்லது பிளைட்டோ எல்லா இடங்களுக்கும் செல்வது இல்லை...

  ரயிலோ அல்லது பிளைட்டோ போகாத இடத்துக்கு நீங்கள் சென்று இருக்க வாய்பில்லை போல் இருக்கின்றது....

  ReplyDelete
 26. அன்பு ஜாக்கி,

  உங்களுடைய பிரச்சினை என்ன. கழிவறை இருக்கும் மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்த வில்லை என்பதா? அப்படியெனில் இதில் பெண்னுரிமை எங்கு வந்தது ஜாக்கி. எனது ஊர் சாத்தூர் ஜாக்கி. வேலை பார்த்தது சென்னையில். ஊருக்கு பெரும்பாலும் நான் சென்று வந்தது பேருந்தில்தான். நான் உணர்ந்த வரையில் உணவுக்காக பேருந்துகளை நிப்பாட்டும் இடத்தில் கழிவறைகளை பார்த்திருக்கிறேன். இன்னொரு விசயம் ஜாக்கி. அப்படி இல்லாத இடங்கள் இருந்தால் அது எப்படி ஜாக்கி பெணுரிமைக்கு எதிரானதாக் இருக்கும். புரியவில்லை எனக்கு. தெளிவு படுத்துங்கள்.

  ReplyDelete
 27. அன்பின் கண்ணன்....

  பெண் உரிமை பற்றி பேசவில்லை...ஆணுக்கான சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை என்பதுதான்...

  நான் இதுவரை ஆக்சிடென்ட் பார்கவில்லை
  என் எச் ரோட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வது போல் இருக்கின்றது... உங்கள் பதில்,...

  எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..நான் எந்த பிரச்சனையும் அனுபவிக்கவும் இல்லை நான் ஆண் எனபதால்....

  இதே பின்னுட்ட வரிசையில்

  திரு என்பவர் //தனக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றி சொல்லி இருக்கின்றார் பாருங்கள்..


  //thiru said...

  ரொம்ப ரொம்ப சரி. எங்க அம்மா ஒரு தடவ பட்ட கஷ்டத்துல கண்ணுல தண்ணீயே வந்திடுச்சி//

  அது போலான பல பிரச்சனைகளை நான் பார்த்தவன் என்ற முறையில் இதனை எழுதி இருக்கின்றேன்...

  ReplyDelete
 28. கேதார்நாத்,பத்ரிநாத் சில வருடம் முன்னாடி போன போது சம உரிமை தான் கடைபிடித்தோம்.குளிர் வேறு.15 மணிநேர பஸ் பயணம்.மரங்கள் பின்னாடி, புதர்கள் மறைவில் தான்.கடைகளோ மக்கள் நடமாட்டமோ மிகக் குறைவு எனவே சமாளிக்க முடிந்தது.இங்கு தமிழ்நாட்டில். ராம்ஜி சொன்னது சரி தான்.கொஞ்சம் தள்ளி பெண்கள் கூட்டமாய் சேர்ந்து போக வேண்டியது தான்.அப்படி நிறுத்த சொல்லி டிரைவர்களிடம் கேட்டும் உள்ளேன்.வெட்கப் படுவது தான் பெண்களுக்கு பல சங்கடங்களை தருகிறது.முக்கிய கருத்தினை கவிதை நடையில் சொல்லி உள்ளீர்கள்.

  ReplyDelete
 29. கவிதையில் இலக்கணம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் சங்கடங்களை பற்றிய செய்தி இருக்கிறது.
  வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சமூக கண்ணோட்டம்.

  ReplyDelete
 30. திரு மு.ரா,/raj 007,


  ஒருவன் முட்டாளாக, இருப்பதற்கு யார் காரணம்? முதல் காரணம் அவன் தான்...

  பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறினால்... அந்த முட்டாள்தணத்துக்கு யார் காரணம்? அவள்தான்...

  முட்டாளாகவே பிறந்து, முட்டாளாகவே வளர்ந்து, முட்டாளாகவே சாகும் இந்த அர்ப்ப ஜென்மத்துக்கு, நான் ஏன் கவலைப்படனும்?

  அடிமைகள் இங்கே தேவையில்லை...

  உங்கள் அம்மா இதைப்படித்திருப்பார்களாயின் ..பாவம்.

  என் அம்மா ஒன்றும் ஒரேய் வெட்ட்கப்பட்ட்அதின்னால் அல்ல ப்ர்ச்சினை.. கன்டக்தர் எத்தனை கேட்டும் நிறுத்தாமல் இருந்ததே ப்ரச்சினை. மேலும் எல்லாரலும் ,சிக்ககுனியா வந்த பிறகு கீழே உட்கார்ந்து சிறினீகைப்பது என்பது பெண்கள்ளுக்கு வயதானவர்களுக்க்உ மிகவும் ப்ரச்சினை. ..

  ReplyDelete
 31. உங்கள் கவிதைகள் மிக அருமை ...

  ReplyDelete
 32. பெண்களின் பிரச்சனையை பேசியதற்காக உங்களுக்கு என் பாராட்டுகள்... பெண்கள் தன் அத்தியாவசியத் தேவைகளைக் கூட வெளிப்படுத்தாமல் தான் உள்ளனர்....இது பேருந்தில் நீண்ட தூரம் பயணம் கொள்வோர் அனைவரும் உணர்ந்திருப்பர்.... எனக்கும் அனுபவம் உண்டு...

  ReplyDelete
 33. பெண்ணின் முக்கியமான பிரச்சனையை உணர்ந்து எழுதியமைக்கு நன்றி.உணருபவர்கள் மனித நேயம் உள்ளவர்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner