ராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்


மணிரத்னம் சார் பெரிய டைரக்டர் அவருக்கு கண்டனத்தை முதலிலேயே சொல்லிவிடுவது அவ்வளவு நல்லது இல்லை கடைசியில சொல்லறேன்...நீங்களும் உடனே கிழ போய் படிக்காம நிதானமா படிச்சிட்டு அப்புறம் கீழ போய் பாருங்க......

==================

ராவணன் பெரிய ஏதிர்பார்பை ஏற்படுத்திய படம்.. விண்ணைதாண்டிவருவாயாவுக்கு பிறகு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து டிக்கெட் வாங்கி முதல் நாளில் பார்க்க அலையும் ஏ சென்டர் மக்கள்...இரண்டு நாட்களுக்கு முன்பே மிட் நைட் 12மணியிலிருந்து ஒரு மணிக்குள்...மூன்று நாட்களுக்கு டிக்கெட் ஹவுஸ்புல் ஏன்று இன்டர்நெட்புக்கிங்கில் காட்டியபடம்.... ஒரு பெண்ணின் அளுமை என்பது என்ன? ஒரு பெண்ணை எதற்கு பிடிக்கும்? அழகா?அல்லது அந்த பெண்ணின் ஆளுமையா? அறிவா? தைரியமா? ஒரு ஆணுக்கு இது போலான ஏதோ ஒரு விஷயத்தில் ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது.. ஒரு பெண் மிக தைரியமாக இருப்பது ஆணுக்கு மிகப்பெரிய கலக்கம் என்றாலும் அது போலான பெண்களைதான் ஆணுக்கு பிடிக்கும்...தசரத சக்ரவர்த்தி போரில் இருக்கின்றார்..தேரின் கடையானி கழண்டு விடுகின்றது... தேர் குடை சாய்தால் அவர் போரில் தோற்றுவிடுவார்...கைகேயி அங்கு இருக்கின்றாள்...கடையானி கழண்டு விடுவதை பார்த்து விடுகின்றாள்... எதை பற்றியும் யோச்சிக்கவில்லை.. சட்டென தன் கையை கடையானிக்கு பதில் நுழைத்து தேர் குடை சாயமல் காத்து போரில் தசரதன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கின்றாள்.... உடனே தசரதனும் நெகிழ்ந்து எந்த வரம் வேண்டுமானாலும் கேள் ? என்று வாக்கு கொடுக்க மிக முக்கிய காரரணம் கைகேயின் தைரியம்... 17mபேருந்தில் சில்மிஷம் செய்தவனை எதைபற்றியும் கவலைபடாமல் செருப்பால் அடித்த அந்த முகவரி தெரியாத பெண்... காவல்துறை உயர் அதிகாரி லத்திகாசரன்... இப்படி தைரியமான பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்.... அடிதட்டு மக்களுக்காக எதையும் செய்யும் ஒருவன்... ஒரு பெண்ணை கொலை செய்ய... துப்பாக்கியை நெற்றி நோக்கி நீட்டும் போது, கெஞ்சாமல் அவனிடம் வீரமாக பேசும் பெண்ணை.. அதுவும் பயமே இல்லாமல் இருக்கும் பெண்ணை ஒரு அணுக்கு பிடித்து போவது இயல்பான விஷயம்...அதுமட்டும இல்லாமல் மலை அருவியில் இருந்து கொஞ்சமும் யோசிக்காமல் குதித்து வைத்தால்...அந்த பெண்ணின் தைரியத்தின் மீது கொஞ்சம் மதிப்பு வரும் அதுவே அந்த பெண் பேரழகு என்றால்....அவளுக்கா எதையும் மணம் செய்யதுணியும் அல்லவா...? அப்படிபட்ட ஒருநாட்டுபுரத்தானின் கதை...

ராவணன் படத்தின் கதை என்ன?


மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடும் விரா (விக்ரம்) உரிமைக்காக போரடுவது என்பது அதிகாரவர்கத்தின் நெற்றியில் துப்பாக்கி வைத்து கேள்வி கேக்கும் விஷயம்...எப்போதுமே அதிகாரவர்கம் உரிமையை கொடுக்காமல்.... எப்படி துப்பாக்கி தூக்கலாம்? என்று கேள்வி மட்டும கேட்கும்... அதிகாரவர்கத்தின் ஆளாய் வீராவின் கொட்டத்தை அடக்க வரும் தேவ் (பிருத்திவிராஜ் ) ஆண்டு ஆண்டுகாலமாய் அதிகாரவர்கத்தினர் செய்யும் அதே காரியத்தை அதாவது வீராவை பிடிக்க அவளது தங்கை வெண்ணிலா(பிரியாமணி) காவல்துறையினரால் வன்புனர்ச்சி செய்யபடுகின்றாள்... அதற்கு காரணமான பிருதிவிராஜின் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்) கடத்தி அவளை கொலை செய்து இழப்பின் வலியை உணர்த்த நினைக்க... ராகினி அழகு விராவை இம்சை அடைய செய்கின்றது...கடத்திய மனைவியை மீட்க போராடம் கணவன்... கடத்திய பெண்ணின் மீது காதல் கொண்ட வீரா?முடிவு என்னவானது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..இப்படியும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதலாம்... அல்லது கீழே இருப்பது போலவும் எழுதலாம்... ராவணன் படத்தின் கதை என்ன? இராமாயனம் கதை எல்லோருக்கு தெரிந்த காரணத்தால்... பிருத்திவிராஜ்...ராமன் விக்ரம்..................ராவணன் பிரபு.......................ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் கார்திக்..................அனுமன் பிரியாமணி .......சூர்பனகை என்று சொல்லமுடியாது...நவீன ராவணனின் நல்ல தங்கை....இந்த அடிப்படை ஒன் லைனை வைத்துக்கொண்டு ராமயணத்தின் கதையை நவீன படுத்தி நாட்டு நடப்புகளை சேர்த்து எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் மணிரத்னத்தின் ராவணன்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில... விக்ரம் இந்த படத்தில் வீராவாக வாழ்ந்து இருக்கின்றார்... ஆனால் நிறைய படங்களில் கத்தி பேசி நடித்து இருப்பதால் இனி வரும் படங்களில் கவனம் தேவை...கோடு போட்டா பாடலில் ஆடும் ஆட்டம் அற்புதம்...அதே போல் அருவியில் சறுக்கிய படி விழுவது... காரணம் விக்ரமுக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விபத்தில் காலில் ஆப்ரெஷன் செய்யபட்ட கால் அவருடையது... அந்த காலோடு வழுக்கு பாறையில் வழுக்குவது விக்ரமின் அற்பணிப்பு... பிருத்திவிராஜ் போலிஸ் உடையும் அந்த கணீர் குரலும்... செம மேன்லிநஸ்...ஐஸவர்யாவோடு படுக்கையில் புரண்டு நெஞ்சில் கை வைத்து படம் பார்க்கும் எல்லோருக்கும் வியிற்று எரிச்சலை இலவசமாக கொடுக்கின்றார்(எதற்கும் ஈனோ வாங்கி கொண்டு போங்கள்) பிரபு பல வருடங்களுக்கு பிறகு திரையை ஆக்ரமிப்பு செய்து இருக்கின்றார்...விக்ரமின் சகோதரர் பாத்திரம்..இவருக்கு மனைவி ரஞ்சிதா.. கொடுத்த பாத்திரத்தை இருவரும் நன்றாக செய்து இருக்கின்றார்... ரஞ்சிதாவுக்கு ஒரு டயலாக் கூட இல்லை... அது போலான சூழ்நிலை என்று நினைக்கின்றேன்...... கார்திக் சில காட்சிகளில் சோபித்தாலும் பல காட்சிகள் மனதில் நிற்க்க மறுக்கின்றார்.. இருந்தாலும் இந்த ரீ என்ட்ரியை வரவேற்கலாம். ஐஸ்வர்யாராய்... இந்த படத்தின் பெரும் பலம்...மனுஷி சொன்ன இடத்தில் எல்லாம் வெற்று பேப்பரில் கையெழுத்து போடுவது போல் என் எதற்கு என்று கேட்காமல் காடு லோக்கேஷன்களில் நடித்து கொடுத்து இருக்கின்றார்...ஜசுக்கு இந்த படம் ஒரு மைல்கல்.. எந்திரனை விட இந்த படத்தின் உழைப்பை எப்போதும் ஐஸ் பெருமையபக சொல்லி கொள்ளலாம்...எல்லா காட்சிகளிலும் மார்பு தெரிகின்றது... கண்கள் பேசுகின்றது.. உடம்பு வில்லாக வலைகின்றது... குருநாதர் படம் என்ற டெடிகேஷன் தெரிகின்றது....வயது முதிர்ச்சி சில காட்சிகளில் தெரிகின்றது... மிக முக்கியமாக தண்ணீரில் ஐசு படுத்து இருக்கும் போது எதிரில் கல்லில் நிற்க்கும்... விக்ரமின் கல்லை தட்டிவிட்டதும் விக்ரம் ஐஸ்மேல் பேலன்ஸ் தவறி நெடுஞ்சான் கிடையாக விழும் போது விக்ரமின் மீது படாமல் மேல்ல மேலே எழும் போது ஐஸ் கொடுக்கும் ரியாக்ஷன் சான்சே இல்லை.... படத்தின் ஒயிப்பதிவாளர்கள் மணிகண்டன் மற்றும் சந்தோஷ்சிவன் உழைப்பு எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...கூடுமானவரை டாப் லைட்டில் ஷுட் செய்வதை தவிர்த்து இருக்கின்றார்கள்... அப்போதுதான் காட்டின் அந்த ஈரப்பதத்தை பார்வையாளன் உணர முடியும் என்பதால் ஹார்ஷ் லைட் ஒரு 30 ஷாட்டுகளில் மட்டுமே வரும்....


டுவலைட் ஷாட்டுகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள்...எல்லா காட்சியிலும் சாரலும் பனியும் வியாபிக்கின்றது..காலை ஐந்தரையில் இருந்து ஒன்பது மணிக்குள்ளும் மாலை 4மணியில் இருந்து ஆறு மணிவரையும் பெரும்பாலான காடு சம்பந்தபட்ட காட்சிகள் ஷுட் செய்து இருக்க வேண்டும்...
இந்த படத்துக்கு ஸ்பெஷல் மைக்கேரா லென்ஸ் யூஸ் செய்து இருக்கின்றார்கள்.... படத்தின் பிரேமிங்குகள் காடுகளையும் மனிதர்களையும் அழகாக காட்டி இருக்கின்றார்கள்.... முக்கியமாக ஐஸ்வர்யா பிருத்திவிராஜ் இன்டோர் சீன் விளம்பர படம் போல் எடுக்கபட்டு இருக்கின்றது... இந்த படம் மிகப்பெரிய ஆர்டிஸ்ட்டுகளை வைத்துக்கொண்டு மூன்று மொழிகளில் எடுக்கபட்ட படம்...பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படம் பிடிக்கபட்டு உள்ளன.... அதுவும் செட்டுகள் அற்புதம் குறிப்பாக ஆற்றில் இருக்கும் சாமி சிலையும்.. கோடு போட்டா சாங்குக்கு ஆற்றில் நடுவில் போட்டு இருக்கும் செட் அற்புதம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யபட்டு இருக்கின்றது... ராஜ்டிவி இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை 5 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கோடம்பாக்கம் பட்சி சொல்கின்றது.... உலகமே அறிந்த ஒரு இதிகாச கதையை கையில் வைத்துக்கொண்டு...

அதில் தற்கால நாட்டு நடப்புகளை சேர்த்து கதையை சற்றே விறுவிறுப்பாககவும்.. கொஞ்சம் அயர்ச்சியாகவும் சொல்லி இருக்கின்றார்.... எல்லோருக்கும் இந்த கதை தெரிந்த விஷயம் என்பது படத்தின் பெரிய பலவீனம்...
ஜேம்ஸ் கேமரோன் டைட்டானிக் என்று முன்பே எடுத்த படத்தையும் எல்லோருக்கும் தெரிந்த டைட்டானிக்கின் முடிவையும் வைத்துக்கொண்டு...மிக சுவாரஸ்யமாக திரும்பவும் எடுத்து வெற்றி பெற்றார் காரணம் அந்த படத்தில் அடிப்படையில் இருந்த அந்த காதல் பார்வையாளனை கட்டி போட்டது.... அதுவும் இல்லாமல் ரொம்பவும் டிடெய்லாக சொல்லபட்ட திரைக்கதை... இந்த படத்தில் அது போலான நெஞ்சை நெகழவைக்கும் எந்த விசயமும் இல்லை... இந்த படத்தை ஐஸ்வர்யாராயின் அழகுக்காக நிச்சயம் பார்க்கலாம்...


ஆனால் கிளைமாக்சில் உருக்கமாக பேசும் வசனத்தின் போது முக்கால் வாசி மார்பு தெரியும் போது அந்த காட்சியின் கணத்தை பார்வையானன் உணராமல் வேறு கணத்தை பார்வையாளன் அளப்பது அந்த சீனுக்கான சறுக்கல்...
பிரியாமணி தன் கற்பிழந்த கதையை அழுதவாறு சொல்ல அதற்கு மேல் அதனைகேட்க பிடிக்காமல் விக்ரம் வாய் முடுவது அழகு....



படத்தின் வசனங்கள் சுகாசினி மணிரத்னம் சில இடங்களில் கைதட்டல்களை அள்ளினாலும்... ஐஸ் சாமியிடம் வேண்டும் போது கெட்டவங்களை கெட்டவங்களாகவே கட்டவேண்டும் என்ற வசனம் பெரிய அபத்தம்.....கெட்டவன் அவன்தரப்பு நியாங்களை சொல்லவே கூடாதா?...முதலில் அவர்களை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ராகினி பாத்திரம்...அதன் பிறகு விக்ரமை சூட்டுக்கொள்வதை தடுப்பது போலத்தான் மேட்டுக்குடியினரின் வாழ்க்கை மற்றும் பார்வை...



எல்லாரையும் நல்லவர்களாக காட்ட முயற்ச்சித்து இருப்பது எவர் மீதும் பார்வையாளன் ஒட்டாமல் இருப்பது மிகபெரிய குறை... இந்தி மார்ககெட்டை மனதில் நிறுத்தி எடுத்த காரணத்தால் எல்லா இடத்திலும் நேட்டிவிட்டி மிஸ்சிங் அதிகம்....

ஐஸ் பசியில் இருக்க... பிரபு வந்து சாப்பாடு வைத்து விட்டு போக.. சாப்பாட்டை வாரி எடுத்து தின்னாமல் நளினமாக சாப்பிடுவது உச்சகட்ட கமெடி

பாடல்கள், பின்னனி இசை அற்புதம் ... படம் முடியும் போது ரகுமான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒரு பாடல் பாடி இருக்கின்றார்...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்....


Directed by Mani Ratnam
Produced by Mani Ratnam Sharada Trilok Written by Mani Ratnam Suhasini Maniratnam Starring Vikram Aishwarya Rai Prithviraj Karthik Prabhu Priyamani Music by A. R. Rahman Cinematography V. Manikandan Santosh Sivan Editing by A. Sreekar Prasad Studio Madras Talkies Distributed by BIG Pictures Sony Pictures Release date(s) 18 June 2010 Running time 127 mins Country India Language Tamil Budget INR 120 crores


மாயாஜல் தியேட்டர் கலட்டா....

நான் நேற்று சங்கம் தியேட்டரில் 3 மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்து இருந்தேன் .. காலையிலேயே மணிஜி போன் மாயாஜலில்ல டிக்கெட் இருப்பதாக சொல்ல. நான் வண்டியில் மனைவியை அழைத்து போய் ஆபிசில் விட்டு விட்டு ஓஎம் ஆர் ரோட்டில் அவசரமாக போய் கொண்டு இருக்கும் போது....200சீசீ பைக்கில் சிறு கட்டம் போட்ட பனியனை போட்டுக்கொண்டு வாயில் பிரஷ்வுடன் பெண்கள் போய் கொண்டு இருக்கும் வண்டிக்கு பக்கத்தில் போய் கர்ணகொடுரமான ஹாரன் அடித்தபடி அந்த எருமை சென்று கொண்டு இருந்தது...



மாயாஜல் தியேட்டருக்கு காலை பத்துமணிக்கெல்லாம் சைதாபேட்டை கோர்ட்டுக்கு அழைத்து போவது போல் முகத்தை மூடியபடி பல பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் வந்து இருந்தார்கள்...
தியேட்டரில் எந்த கமெண்டும் இல்லாமல் படம் பார்த்தார்கள்...

ரஞ்சிதா திரையில் வரும் போது மட்டும் சத்தம் போட்டார்கள்....
எவ்வளவு சீக்கிரமாக போயிம் 15 நிமிட படத்தை தவறவிட்டேன்... இருந்தாலும் அங்கிருந்து நேராக சங்கம் போனேன்.... ========================

சங்கம் தியேட்டர் கலாட்டா....

சங்கம் தியேட்டரில் வண்டி டோக்கன் பத்து ரூபாய்க்கு கொடுத்தார்கள்...
காதலுக்கு இப்போதுதான் எண்ட்ரி ஆகி இருக்கும் ஜோடி போல் தெரிகின்றது... அந்த பையனும் அந்த பெண்ணும் ரொம்பவே பயந்து போய் இருந்தார்கள்... அவன் தைரியதான இருந்தாலும் இவள் பயந்து அவனையும் பயமுறித்திக்கொண்டு இருந்தாள்... அந்த பெண் கிராமம் என்று நினைக்கின்றேன் பரபரப்பாய் வண்டிக்கு டோக்கன் போடுவதை ரொம்பம் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தது... கல்லூரியில் இருந்து கட்டு அடித்து விட்டு வந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது.. வந்த பெண்களில் எல்லோரும் சென்னையிர் பன்றிகாய்சல் வந்தது போல் கர்சிப்பால் முகத்தை முடியபடி தங்கள் அடையாளத்தை தொலைக்க முயற்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள்..


தியேட்டரில் செம்மொழி பாடல் பேடும் போது அதுக்கு பயங்கர விசில் அடித்து தங்கள் வரவேற்ப்பை கொடுத்தனர்... முக்கியமாக ரகுமான் வந்த போதும் சுருதிஹாசன் வந்த போதும் தியேட்டரில் ஒரே விசில் சத்தம்...


நிறைய கல்லூரி பெண்கள் வந்து இருந்த காரணத்தால் நிறைய எக்சாக்ட்லி,வாவ்,ஃபன்னி,ரெடிகுலஸ் போன்றவை வலுக்காட்டாயமாக பேச பயண்படுத்தபட்டன....


ரஞ்சிதா வரும் காட்சிகளில்... சுவாமி என்ன பன்றார்? எப்படி இருக்கார் போன்ற ரஞ்சிதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் திரையை பார்த்து கேட்கபட்டன...



முதல் காட்சியில் ஒரு பெண் பச்சை ரவிக்கையில் பெருத்த மார்புடன் வர.. ஒரு 30 செகண்டுக்கு என்ன பேசினார்கள் என்பதே தெரியவில்லை...
ஐஸ்வர்யா மார்பு தெரியும் காட்சிகளில் பயங்கர விசில் சத்தம்...

பிரியாமணி தன்னை கெடுத்ததாக சொல்லும் காட்சியில்...முத்தழுகு உன்னை ஏன் எல்லா படத்துலயும் பொரட்டி பொரட்டி எடுக்கறாங்க...என்ற குரலுக்கு தியேட்டரில் குபீர் சத்தம்..


மாஸ்க்கோவின் காவேரி டிரைலர் போட்டர்கள் அவசியம் அந்த படத்தை பார்க்க வேண்டும் அவ்வளவு அற்தமாக டிரைலர் கட் செய்து இருந்தார்கள்...

படம் முடிந்து போகும் போது யாரும் எதுவும் பேசவில்லை... =======================

ராவணன் ...தெரிந்த கதை என்றாலும் அந்த உழைப்புக்காக ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்...


================

டைரக்டருக்கு கண்டனம்...


ஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா?
முக்கியமா அந்த பள்ளத்துல இருக்கும் ஜஸ் தப்பிக்கவிழுதை பிடித்துக்கொண்டு மேலே ஏற முயற்ச்சிக்க... விழுது அறுத்துக்கொண்டதும் அதில் அப்படியே தொபக்கடீர்னு விழுந்து விட்டு.... பாறை பிடிப்புகளை மட்டும் பிடித்து தனியாக ஏறும் அந்த காட்சியில் நான் அப்படியே பதறிபோயிட்டேன்...ஏதோ நம்ம வாலிப பசங்க டயர்டா தூங்க அந்த புள்ளயும் ஒரு காரணம் அப்படின்றதை மறந்துடாதிங்க..... நீங்க எல்லாம் கண்டனம்னு ஏதேதோ நினைச்சிகிட்டு வந்தா நானா பொறுப்பு......


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலு பேர் படிக்க ஓட்டு போடுவது முக்கியம் அமைச்சரே....

குறிப்பு...
நேற்று காலையே படம் பார்த்து விட்டேன்... எழுதி இன்னும் கொஞ்சம் முடிச்சிடலாம்னு நினைச்சு... இன்னைக்கு காலை ஏங்க ஏரியாவில கரண்ட் கட்...அதான் இவ்வளவு லேட்.. இது கூட நண்பரின் வீட்டில் இருந்து வலையேற்றுகின்றேன்....பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க...

50 comments:

  1. //டைரக்டருக்கு கண்டனம்... ஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா?//

    அதான்னே.... இதை சும்மா விடக்கூடாதுண்ணே... போராட்டம் நடத்துவோம்...

    ReplyDelete
  2. திரு ஜாக்கி சேகர் அவர்களுக்கு

    நல்ல விமர்சனம் ...

    டாப் லைட்டில் ஷுட் ... ஹார்ஷ் லைட் ,
    டுவலைட் ஷாட்,

    இந்த மாதிரி சினிமா சம்பந்தமான தொழில் நுட்ப வார்த்தைகள் மற்றும் அப்டின என்ன என்றும் ஒரு தனிப்பதிவாக உதாரணத்துடன் எழுதுநீங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்..
    நாங்களும் தெரிஞ்சுக்குவோம்....

    நன்றியுடன்

    பொன்.சிவா

    ReplyDelete
  3. திரு ஜாக்கி சேகர் அவர்களுக்கு

    நல்ல விமர்சனம் ...

    டாப் லைட்டில் ஷுட் ... ஹார்ஷ் லைட் ,
    டுவலைட் ஷாட்,

    இந்த மாதிரி சினிமா சம்பந்தமான தொழில் நுட்ப வார்த்தைகள் மற்றும் அப்டின என்ன என்றும் ஒரு தனிப்பதிவாக உதாரணத்துடன் எழுதுநீங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்..
    நாங்களும் தெரிஞ்சுக்குவோம்....

    நன்றியுடன்

    பொன்.சிவா

    ReplyDelete
  4. திரு ஜாக்கி சேகர் அவர்களுக்கு

    நல்ல விமர்சனம் ...

    டாப் லைட்டில் ஷுட் ... ஹார்ஷ் லைட் ,
    டுவலைட் ஷாட்,

    இந்த மாதிரி சினிமா சம்பந்தமான தொழில் நுட்ப வார்த்தைகள் மற்றும் அப்டின என்ன என்றும் ஒரு தனிப்பதிவாக உதாரணத்துடன் எழுதுநீங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்..
    நாங்களும் தெரிஞ்சுக்குவோம்....

    நன்றியுடன்

    பொன்.சிவா

    ReplyDelete
  5. நீங்க சங்கத்தில இருக்கும்பொழுது ஒரு நண்பர் எனக்கு போன் பண்ணி விட்டார்.
    ஜாக்கி சங்கத்தில இருக்கார் என சொன்னார்.

    விலாவரியான விமர்சனம்...

    அழகான புகைப்படங்கள்..

    ReplyDelete
  6. எப்படிங்க இவ்வளவு பெரிசா எழுதுறீங்க ., உன்மைதமிழனுக்கு நீங்கதாங்க போட்டி
    :)

    ReplyDelete
  7. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் ஐசுக்காக விரைவில் பார்ப்பேன். ஐசை கஸ்டப்படுத்திய மணிரத்னத்துக்கு என்னுடைய கண்டனங்களையும் தெர்விகின்ன்றேன்.

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம் சேகர் சார் !

    நன் நேற்றில் இருந்தே உங்கள் இராவணன் படம் பற்றின பதிவை எதிர் பார்த்து கொண்டிரிந்தேன் !

    ஓகே நானும் சத்யம் தியேட்டரில் டிக்கெட் கிடைத்தவுடன் பார்கிறேன் .

    நன்றி !

    ReplyDelete
  9. ஜாக்கி,

    உங்கள் விமர்சனம் அநேகமாக 50‍ஐ கடந்ததாக இருக்கலாம்.
    ராத்திரியெல்லாம் தூங்காமல் யோசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் ராவணன் பற்றியே.....
    இந்த போரில் ராமன் தோற்றுப்போயுள்ளார்.

    இன்னும் ஒரு வாரத்தில் உண்மை தெரிந்துவிடும்.இந்த படத்தை
    ராஜ் டிவி 5 கோடிக்கு உரிமை வாங்கியிருக்கிறார்களாம்

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. பதிவு போட்டதும் கருமமே கண்ணாக மைனஸ் ஓட்டு குத்தும் அந்த நண்பருக்கு நன்றிகள்..

    ReplyDelete
  12. அருமையான விமர்சனம்

    ReplyDelete
  13. இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

    அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

    சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

    இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

    ReplyDelete
  14. அப்பவே நினைச்சேன்....நீங்க இப்படி ஏதாவது பீல் பண்ணி எழுதுவீங்கன்னு....இருந்தாலும் உங்கள் விமர்சனம் அருமை....

    ReplyDelete
  15. அப்பவே நினைச்சேன்....நீங்க இப்படி ஏதாவது பீல் பண்ணி எழுதுவீங்கன்னு....இருந்தாலும் உங்கள் விமர்சனம் அருமை....

    ReplyDelete
  16. அப்பவே நினைச்சேன்....நீங்க இப்படி ஏதாவது பீல் பண்ணி எழுதுவீங்கன்னு....இருந்தாலும் உங்கள் விமர்சனம் அருமை....

    ReplyDelete
  17. இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

    அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

    சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

    இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

    ReplyDelete
  18. raavanan review? Enge kaanom, seekiram ezhuthunga!

    ReplyDelete
  19. Nenachen! Kadasiya ethavathu bit poda poringannu! Nalla ezhuthi erukkinga!

    ReplyDelete
  20. //டைரக்டருக்கு கண்டனம்... ஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா?//

    அதான்னே.... இதை சும்மா விடக்கூடாதுண்ணே... போராட்டம் நடத்துவோம்...

    naanum varen

    ReplyDelete
  21. \\\ கோடு போட்டா பாடலில் ஆடும் ஆட்டம் அற்புதம் ///

    கோடு போட்டா கொன்னு போடுவேன் என்று வரும் பாடல் ஈழத் தமிழருக்கு மிரட்டல் விடும் தொணியில் உள்ளது .
    அதற்க்காகவே கண்டிப்பாக டைரக்டருக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்.
    நன்றி மகாராஜா

    ReplyDelete
  22. Super location in movie.aish had be given more importance than the other.aish is so beautiful in the movie. i am new to ur blog.really ur blog is super 'SEKAR SIR'.and dont watch the movie for 120 ...its very too too much ....

    ReplyDelete
  23. Hello Sir, I want details of membership cost of assistant director.. Please send Me Sir.

    ReplyDelete
  24. ஹலோ, ஜாக்கி...
    //அதற்கு காரணமான பிருதிவிராஜின் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்) கடத்தி அவளை கொலை செய்து இழப்பின் வலியை உணர்த்த நினைக்க...//....நீங்க ராவணனின் குதிரைக்கு ஜாக்கியா? இந்த வக்காலத்து வாங்குகிறீர்கள்...! கொலை செய்பவன் எதற்கு கடத்திக்கொண்டுபோய்தான் கொலை செய்ய வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?

    உங்க விமர்சன சப்பைக்கட்டு லாஜிக்குக்கு மணியின் திரைக்கதைகள் எவ்வளவோ பரவாயில்லை...! அவை எப்போதுமே பட்டும்படாமல் பிரச்னையை அலசும். அதேபோல, அவரின் படத்துக்கும் நுனிப்புல் மேய்ந்த விமர்சனம்...!

    வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக நறுக்குன்னு இருக்க வேண்டாமா? உங்க விமர்சனத்தை படித்து எந்த முடிவுக்கும் வர இயலவில்லை...!

    ReplyDelete
  25. நன்றி எல்கே..

    நன்றி நாஞ்சில் .. எப்ப எங்கன்னு சொல்லுங்க..

    நன்றி பொன்சிவா.. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுகின்றேன்..

    நன்றி காவேரி கணேஷ்.. உங்களுக்கும் சொல்லிட்டாங்களா?

    ReplyDelete
  26. நன்றி வந்திய தேவன்.. எனக்கு தெரிஞ்சு இந்த படத்துல எந்த ஆர்ட்டிஸ்ட்டும் கேரவேன்ல உடனே ஏற முடியாது காரணம் அதுக்கு போகனும்னா நிச்சயம் ஒன்னரை கிலோமீட்டர் நடக்கனும்.....


    நன்றி ஷர்பூதின்... உத அண்ணண் ஒரு மாஸ்டர் பீஸ்.. அவருக்கு யாரும் சப்ஸ்டியீட் கிடையாது...

    ReplyDelete
  27. நன்றி சுரேஷ்..

    நன்றி எண்ணத்துபூச்சி எப்படி இருக்கிங்க...

    நன்றி தர்ஷன்...

    நன்றி ஆவுடையப்பன்...ராமாயணம் பற்றி படம் எடுத்தால்தான் நீங்கள் சொன்ன அல்லது கேட்ட கேள்வி பொறுந்தும்...


    நன்றி பாலச்சந்தர்...

    நன்றி வவ்வால் ஓ உங்களுக்குதான் நைட்ல கண்ணு தெரியுமே இப்ப படிங்க...

    ReplyDelete
  28. நன்றி மகேஷ்...

    நன்றி ரமேஷ்...


    நன்றி எம்ராஜா நீங்க சொல்லிதான் கேள்லிபடறேன்..

    நன்றி ராஜ் உண்மைதான்...

    நன்றி யூவா நாளைக்கு சொல்லறேன்..

    ReplyDelete
  29. நன்றி யூஎப்ஓ..எந்த ஒரு படைப்பையும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்ல முடியாது... அப்படி சொல்லறவன் நல்ல விமர்சகனா இருக்க முடியாது...சினிமாவில் திரைக்கதை
    என்பது டைப் அடிப்பது போன்று சாதாரண விஷயம் இல்லை

    ReplyDelete
  30. எல்லோருக்கும் இந்த கதை தெரிந்த விஷயம் என்பது படத்தின் பெரிய பலவீனம்..
    ///பலமும் அதுதான்///

    ReplyDelete
  31. நல்லா எழுதி இருக்கீங்க தல.. படம் தமிழ்ல பொழச்சுக்கும்னுதான் நினைக்கிரேன்..:-)))

    ReplyDelete
  32. கொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா?
    படவா ராஸ்கோலு.!! நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்!
    பயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. !!
    பிரியமுடன் கக்கு - மாணிக்கம்

    ReplyDelete
  33. கொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா?
    படவா ராஸ்கோலு.!! நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்!
    பயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. !!
    பிரியமுடன் கக்கு - மாணிக்கம்

    ReplyDelete
  34. கொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா?
    படவா ராஸ்கோலு.!! நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்!
    பயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. !!
    பிரியமுடன் கக்கு - மாணிக்கம்

    ReplyDelete
  35. கொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா?
    படவா ராஸ்கோலு.!! நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்!
    பயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. !!
    பிரியமுடன் கக்கு - மாணிக்கம்

    ReplyDelete
  36. ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சினிமா விஷயம் தெரிஞ்சவங்க விமர்சனம் படிப்பதே ஒரு கிக்கு தான் ஜாக்கி! நல்லா இருக்கு. ஓக்கே கேபிள், நீங்க, பரிசில், உனா தானா விமர்சனம் படிக்கனும்ன்னு இருந்தேன். ரெண்டு படிச்சாச்சு. உனா தானா முதல் ஷோ பார்த்திருப்பாரு. மொத்த திரைக்கதையையும் அடிக்க 2 நாள் வேண்டாமா? பார்ப்போம் அதையும். பின்ன பரிசல் வேற புது கோணத்திலே இருக்கும், அதையும் படிச்சுட்டா ஜென்மசாபல்யம் ஆகிடும்.

    ReplyDelete
  37. //ஐஸ் சாமியிடம் வேண்டும் போது கெட்டவங்களை கெட்டவங்களாகவே கட்டவேண்டும் என்ற வசனம் பெரிய அபத்தம்//

    jackie, அந்த வசனம் அபத்தமில்லை.. இதுவரை கெட்டவனாகவே பார்த்த விக்ரமின் மீது அதற்கு முந்தின காட்சியில்தான் நெருக்கமாய் சலனப்பட்ட ஐஸ், மனதில் சலனமும், சஞ்சலமும் குழப்பமாய் ஓட, அதிலிருந்து தப்பிக்கத்தான்.. சாமியிடம் வேண்டுகிறாள். எங்கே தன் மனம் அவனை விரும்ப ஆரம்பித்துவிடுமோ என்று.. அவனின் நல்ல குணம் தெரிந்து.
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  38. ஜாக்கி,

    கண்டனம் என்னமோ ஏதோன்னு பார்த்தா, கடைசியில ம்ம்.. (உண்மைத் தமிழனுக்குப் போட்டியாக நெடிய இடுகையிட்ட உங்களுக்கு பதிவுலகின் சார்பாக வன்மையான, மென்மையான கண்டனங்கள்.)யதார்த்தமான விமர்சனம்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  39. "மொக்கை"

    படம் மட்டுமல்ல, விமர்சனமும்தான்..!

    ReplyDelete
  40. I am avoiding this film just becasue of aish. Had it been Tamanna or Mallika shervat I would have watched in theatre on 1st day 1st show.

    Its like you like Dosa I like idli kind.

    ReplyDelete
  41. ஜாக்கி சாருக்கு என் கண்டனம், மேற்கொண்டு விளக்கத்திற்கு நம்ம கடைப் பக்கம் வந்து பாருங்க!

    http://shilppakumar.blogspot.com/2010/06/blog-post_19.html

    ReplyDelete
  42. அய்யா .......உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் ...........
    தயவு செய்து நண்பர் கருந்தேள் கண்ணாயிரத்தின் ராவணன் விமர்சனத்தையும் பார்க்கவும்......
    விமர்சனத்திற்காக அல்ல ...........
    இது போன்ற படங்களையும், இப்படிப்பட்ட டைரேக்டர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடவேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ் மக்களுக்கு உங்களை போன்ற விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் ஒரு மாயை விலகும் என்பது ஏன் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  43. நல்லா எழுதி இருக்கீங்க தல.. படம் தமிழ்ல பொழச்சுக்கும்னுதான் நினைக்கிரேன்..:-)))--//

    லாஸ் இருக்காது கார்த்தி....

    ReplyDelete
  44. கொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா?
    படவா ராஸ்கோலு.!! நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்!
    பயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. !!
    பிரியமுடன் கக்கு - மாணிக்கம்//

    நன்றி கக்கு...

    ReplyDelete
  45. நன்றி அபி அப்பா... விஷயம் தெரிஞ்சவங்க லிஸ்ட்ல என்னை சேர்த்தமைக்கு..

    ReplyDelete
  46. நன்றி கேபிள்

    நன்றி மேனன்..


    நன்றி ஸ்ரீ


    நன்றி வக்கில் சார்....

    நன்றி ராம்ஜி யாஹு

    நன்றி பன்னிகுட்டி ராமசாமி...

    ReplyDelete
  47. அன்பின் ஷாஜகான்...

    எல்லோருக்கும் பார்வை ரசனை வேறுபடும்.. நண்பர்..கருந்தேள் கண்ணாயிரத்தின் பார்வை வேறு... எனது பார்வை வேறு...

    எனக்கு தமிழ் சினிமாவின் எல்லா கலைகளும் பர்பெக்டாக யூஸ் செய்பவர் மணி மட்டுமே...

    ReplyDelete
  48. ஆமா ரிலாக்ஸ்னு சொல்லி ஒரு புள்ளைய புதுசா நிக்க வெச்சிருக்கீங்களே யாரு தல அது

    ReplyDelete
  49. அந்த பொண்ணு பிந்தாஸ்னு ஒரு தெலுங்கு படத்துல நடிச்சது... போதுமா... பெரு தெரியலை அப்பு..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner